ஆச்சுங்க! இன்னும் ஒரு நாள் கூட நம்மால மேனேஜ் பண்ணி இருக்க முடியாது. அவ்வளவு ரெஸ்பான்ஸ். இந்த புதிர் போடும் போது சொன்னேன் சில நண்பர்களிடம் இந்த கேள்விகள் சிலதை ப்ரிவ்யூ காண்பித்ததாக. அதில் பெனாத்தலாரும் ஒருவர். அவர் கேள்விகளைப் பார்த்துட்டு ரொம்ப கஷ்டமா இருக்கு. எல்லாம் கேள்விகளைப் பார்த்துட்டு ஓடிப் போயிடுவாங்க அப்படின்னு கருத்து சொன்னர். நானும் அந்த பயத்தோடதான் போட்டேன். ஆனா இவ்வளவு பேர் இவ்வளவு ஆர்வத்தோட கலந்துப்பாங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை. கிட்டத்தட்ட 40 - 50 பேர் வந்து கலந்துக்கிட்டாங்க. வந்த பின்னூட்டங்களும் அதுக்கு நான் சொன்ன பதிலும் எனப் பார்க்கும் பொழுது கிட்டத்தட்ட 1200 பின்னூட்டங்கள். அதுவும் எல்லா பதில்களையும் படிச்சு, சரி பார்த்து, மார்க் போட்டு, பதில் சொல்லி, அடுத்த பாகத்தை ரெடி பண்ணி என பெண்டு நிமிர்த்து விட்டது.
இனிமேலும் இது தனியாளாகச் செய்ய முடியாது என்பதுதான் உண்மை. இவ்வளவு ஆர்வம் இருக்கிறதுனால இதையும் ஒரு குழுவா சேர்ந்து செய்யலாம் எனப் பார்க்கிறேன். இதுக்காக புதிர்கள் என்ற பெயரில் ஒரு புதிய பதிவு ஒண்ணு தொடங்கி வைத்திருக்கிறேன். இதனைப் பற்றிய விபரங்கள் பின்னர் வெளிவரும். இவ்வளவு ஆர்வமாக நடந்த புதிர் போட்டியின் பொழுது இதனைச் சொல்வதில் மிகவும் பெருமையடைகிறேன்.
மீண்டும் இப்போட்டிக்கே வருவோம். இதுவரை பத்து பேர் எல்லா கேள்விகளுக்கும் சரியான பதில் கூறி 54 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். முதன்முதலாக முழு மதிப்பெண்கள் பெற்றவர் பெனாத்தல் சுரேஷ்தான். உங்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள் பெனாத்தலாரே! வெற்றிக்குப் பரிசு என்ன எனக் கேட்ட உங்களுக்கு எனது பதில் - அடுத்த போட்டியில் நீங்கள் கேள்வி கேட்கலாம், க்விஸ் மாஸ்டராக இருக்கலாம். :)
கேள்விகளைப் பல இடங்களில் தேடித்தான் எடுத்தேன். நமக்குத் தெரியாத விஷயங்களில் கேள்வி கேட்பது எவ்வளவு தப்பான காரியம் எனத் தெரிந்து கொள்ள வைத்தது இப்போட்டிகளில் இரு கேள்விகள். முதலில் வரலாறு 1. ஹிந்தி சினிமா பற்றி அதிகம் தெரியாத நான் இக்கேள்வியைக் கேட்டு இருக்கக் கூடாதுதான். இதில் அமிதாப் மற்றும் இந்திராகாந்தி ஆகியோரை சரியாகச் சொன்ன பலரும் தயாரிப்பாளராக பல பெயர்களை முன்வைத்தனர். அதற்குப் பல ஆதாரங்களையும் தந்தனர். சிலர் நான் எதிர்பார்த்த விடையையும் தந்ததால் அதற்கு மட்டுமே முழு மதிப்பெண்கள் வழங்குவது என முடிவு செய்தேன். இதற்கு நடுவே சரியான விடை எது என நான் கூகிளுகையில் அப்படி ஒரு சிபாரிசு கடிதமே நான் வாங்கவில்லை என அமிதாப் சொன்ன ஒரு செவ்வியும் கிடைத்தது. இந்த முறை க்விஸ் மாஸ்டரின் முடிவே சரியானது என அழுகுணி ஆட்டம் ஆடினாலும் அடுத்த முறை இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
அடுத்த கேள்வி விஞ்ஞானம் 5 - போபியா பற்றிய கேள்வி. நான் எதிர்பார்த்த விடை ஹைட்ரோபோபியா, ஆனால் விக்கி சுட்டியுடன் அனேகம் பேர் போட்டோபோபியாவும் சரியான விடையே எனச் சொன்னதால் அதற்கும் மதிப்பெண் தந்துவிட்டேன். மருத்துவர் இராமநாதனோ இவை எல்லாமே தவறு. சரியான விடை வேறொன்று எனச் சொல்லி அது பற்றி விளக்க முயன்றார். அது பற்றி அவர் விக்கியில் விரிவாக எழுதுவார் என நம்புகிறேன். இத்துறையிலும் நமக்கு அதிகப் பரிச்சியம் இல்லாததால் விளைந்த குழப்பம் இது. அடுத்த முறை இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.
பாகம் 4ல் நான் நன்றி சொன்ன ஆறு பேர் முறையே - டுபுக்கு, ஜீவ்ஸ் என்ற ஐயப்பன், கூகிள், பெனாத்தல் சுரேஷ், என் தங்கமணி,ஆர்வமாய் கலந்து கொண்ட பதிவர்கள். இதில் கடைசிக் கேள்விக்கு விக்கி பசங்க, சற்று முன் குழு, வ.வா. சங்கம் எனப் பல பதில்கள் வந்தது ஆச்சரியம்தான். ஆனாலும் உங்களுக்கு இம்புட்டு தன்னடக்கம் கூடாது!
மீண்டும் ஒரு முறை ஆர்வத்துடன் கலந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள். ஒவ்வொரு கேள்விக்கும் அழகாக அதிக தகவல்களுமாக தந்த பாலராஜன் கீதா அவர்களுக்கும் வந்து பிழை திருத்தங்கள் சொன்ன ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கும் ஒரு ஸ்பெஷல் நன்றி. பாலா, மீதி இருக்கும் கேள்விகளுக்கும் உங்கள் பாணிப் பதில்கள் தேவை.
ஆஹா, இம்புட்டு நேரம் பேசிட்டு விடைகளைச் சொல்ல மறந்துட்டேனே. எல்லாக் கேள்விகளுக்கும் விடைகள் இங்க இருக்கு. இறுதி மதிப்பெண் நிலவரம் இங்க இருக்கு. பார்த்துக்குங்க.
அடுத்த முறை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து நன்றியுடன் விடைபெறுவது
உங்கள்
கொத்ஸ் .... கொத்ஸ்.... கொத்ஸ்....
Sunday, November 04, 2007
குயி...குயி...குயி...குயிஜு! விடை தரும் தருணம்!
Subscribe to:
Post Comments (Atom)
40 comments:
பதிலாக வந்த பின்னூட்டங்கள் இன்னும் சிறிது நேரத்தில் வெளியிடப்படும்.
//ப்ரில்க்ரீமுக்காக பரூக் எஞ்சின//
பாவங்க... அவர் பெயர இப்படி சுருக்கிட்டிங்க... இதுவும் குயி மாஸ்டர் முடிவா? :-))
ஸ்ரீதர்,
சரி பண்ணிட்டேங்க. பதிவை பத்தி ஒண்ணுமே சொல்லலையே...
ரொம்ப நல்லா போச்சுங்க கொத்ஸ இந்த க்விஸ்...எனக்கு நிறைய விஷய்ங்கள் தெரிஞ்சுக்க முடிஞ்சது.இந்த பிம்பெட்காதான் ரொம்ப படுத்தி எடுத்திடுச்சு.......(மத்த தப்பான விடைக்கெல்லம் இவ்வளோ முயற்சி பண்ணல நான்:):))
எங்களயெல்லாம் இவ்வளோ ஆர்வமா பங்கெடுக்க வச்சது உங்க திறமையும்தான்....சிலதெல்லாம் தெரிஞ்ச மாதிரி இருக்கும் ஆனா முழு விவரம் தெரியாது. இந்த க்விஸ் மூலம் நிறைய படிச்சு தெரிஞ்சுகிட்டேன் அதுக்காக உங்களுக்கு ஒரு பெரிய நன்றி:):)
சரி ஒரு சந்தேகம் பெனாத்தலாருக்கு Head Start குடுதீங்களோ :):) (just kidding!!)
கலக்கல் க்விஸ் போட்டி ;))
பல தகவல்கள் தெரிஞ்சிக்கிட்டேன் தல..மிக்க நன்றி ;))
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;)
ஒரு வாரம் எங்களுக்கு அருமையா போச்சு இந்த குயிஜுல பங்கெடுத்து. ரொம்ப நன்றி :)
ஆனா உண்மைய சொல்லனும்னா இந்த 54-ல 6 கேள்விக்கு மட்டும் தான் நான் சுயமா பதில் சொன்னது. மீதி எல்லாமே கூகிளாண்டவர் மற்றும் கூட்டணி மக்களின் துணையோடு பதில் சொன்னது தான் :)
//ரொம்ப நல்லா போச்சுங்க கொத்ஸ இந்த க்விஸ்//
கட்டாயம் வழிமொழிகிறேன். ராஜாமணி கூட இண்டரஸ்டு காமிச்சாருன்னா, அது! போட்டி, அதுவும் குயிஜு என்றால் எனக்கு இனிப்பு சாப்பிடுவது போல்....
//சரி ஒரு சந்தேகம் பெனாத்தலாருக்கு Head Start குடுத்தீங்களோ //
கொஞ்சம் கரெக்ட் செய்தேன் - அதாங்க ஸ்மைலி எடுத்திட்டேன்...?!
உண்மையில், எனக்கு இந்த நடிகர்/தயாரிப்பாளர் பிரச்னையில் (subjective) அதைத் தொடர்ந்து அந்த பகுதியில் பதிலிட சுவை போயிற்று என்பது உண்மை.
ஆனாலும் இத்தனையையும் நடத்தி, பொறுமையும் காத்தமைக்கு மிக்க நன்றி. புதிர்களில் கட்டாயம் கலந்து கொள்வேன், வெல்வேன்;-)
//பதிவை பத்தி ஒண்ணுமே சொல்லலையே...//
முன்னமேயே உங்களிடம் நிறைய்ய்ய்ய சொல்லி விட்டதால் இங்கே மத்தவங்களுக்கும் கொஞ்சம் இடமளிக்கலாம்னு ஒரு நல்லெண்ணம்தான்.
குவிஸ் தயார் பண்ணுவது என்பது எவ்வளவு கடினம் என்று எனக்கு நன்றாக தெரியும். அதையும் ஒரு ப்ளாக்கில் போட்டு, வர்ற விடையை மட்டுறுத்தி, பதில் சொல்லி, போட்டியாளர்களின் வசதிகேற்ப விடைகளை spreadsheet-ஆக பகிர்ந்து... எவ்வளவு கஷ்டபட்டிருப்பீர்கள் என்று தெரிகிறது. மிகவும் திறம்பட செய்திருந்தீர்கள்.
இதில ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் உங்க பாணியில் நகைச்சுவையான பதில் வேறு. மிக அருமை! அருமை!
புதிர்கள் பதிவில் மேலும் பல புதிர்களை எதிர்பார்க்கிறோம்.
கொத்ஸ்,
ஒரு வாரம் சூப்பரா போச்சு.. உங்க கேள்விகள் எல்லாமே அருமை...நிறைய கேள்விகளை கூகிளை கேட்டு தான் பெற வேண்டு இருந்தது..
வாழ்த்துக்கள் மற்றும் நன்றி கொத்ஸ்..
சீக்கிரமா புதிர் ஆரம்பிங்க.. ஆவலுடன் காத்திருக்கிறோம்.. :D :D
கொத்ஸ்,
ஒரு வாரம் மகிழ்ச்சியாக ஓடியது. நல்ல பொழுதுபோக்கு பிளஸ் நிறைய விஷயங்கள் கத்துக்க முடிந்தது. நன்றி உங்களுக்கும், உங்களுக்கு உதவியவர்களுக்கும்.
அரசு
என்ன தவம் செய்தனை......ன்னு பாடிக்கிட்டு இருக்கேன்.
இவ்வளவு திறமை உள்ள மாணவனுக்கு நான் ரீ/டீச்சரான்னு அப்படியே திக்பிரமை புடிச்சுப் புல்லரிச்சு.......(இன்னும் எதாவது சேர்த்துக்கலாமே)
ஆனாலும் ரொம்ப அருமையா இந்தப் போட்டியை நடத்துனதுக்கு
அன்பான வாழ்த்து(க்)கள்.
பரிசு எங்கய்யா...
பிட் அடிச்சு, வாத்தியார மிரட்டி, கூகிள புரட்டினு எம்புட்டு கஷ்டப்பட்டு இருக்கோம்....
முன்னமே சொன்னது தான் ஒரு வாரம் எல்லாரையும் அதிர வச்சுட்டீங்க.. :)
கடந்த வாரம்... சூப்பர் வாரம்! பாராட்டுக்கள்!
போன வாரம் சரியாகத் தூங்கி இருக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். இந்தவாரம் ஒய்வு எடுத்துக்கொண்டு உடல்நலனைப் பார்த்துக்கொள்ளவும்.
புதிர்கள் பதிவை ஆர்வத்துடன் வரவேற்கிறோம்.
//ஒவ்வொரு கேள்விக்கும் அழகாக அதிக தகவல்களுமாக தந்த பாலராஜன் கீதா அவர்களுக்கும் வந்து பிழை திருத்தங்கள் சொன்ன ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கும் ஒரு ஸ்பெஷல் நன்றி. பாலா, மீதி இருக்கும் கேள்விகளுக்கும் உங்கள் பாணிப் பதில்கள் தேவை.//
தனியாகக் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி இலவசம். மற்றபடி எல்லா கேள்விகளுக்கும் மேலதிகத்தகவல்கள் தந்ததாக நினைவில்லை. கூகிள் மற்றும் விக்கிப்பீடியாவில் படித்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைத்ததையே எழுதியுள்ளேன்.
மிகவும் கடினமாக இருந்தது வரலாறு கேள்வி எண் ஒன்று. (12 பேர்தான் சரியான விடை அளித்துள்ளனர்) மிகவும் எளிதான விடை வரலாறு கேள்வி எண் ஆறு. (29 பேர் சரியான விடை அளித்துள்ளனர்)
சரியான விடைகள்
ஆங்கிலம் 131
தமிழ் 113
கணக்கு 110
விஞ்ஞானம் 120
வரலாறு 125
புவியியல் 109
வணிகம் (உங்களுக்குப்பிடித்தது) 101
கணினி (பொட்டி தட்டுபவர்களுக்குப் பிடித்தது) 99
விளையாட்டு (கிரிக்கெட் தவிர வேறு விளையாட்டுகள் உள்ளனவா என்று பலர் கேட்கக்கூடும்) 92.5
கூகிளாண்டவரிடம் எப்படியெல்லாம் வேண்டிக்கொள்ளலாம் என்று பலருக்குத் தெரிந்திருக்கிறது
எக்செல்லில் ஆட்டோஃபில்டர் பயன்படுத்தி ஒவ்வொரு தலைப்பிலும் ஆறு கேள்விகளுக்கும் சரியான விடை அளித்தவர்கள் எத்தனை பேர் என்று உங்களுக்கு ஒரு சிறிய :-) வீட்டுப் பாடம்.
ஒரு வாரம் கலக்கி இருக்கீங்க, வர முடியலை, வயித்தெரிச்சல் என்னன்னா, நன்றி நவின்று யூகிக்கச் சொல்லிக் கேட்டிருந்த அத்தனை பேரையும் சரியா யூகிச்சுட்டேன், ஆனால் பதிவை முன்னாலேயே வந்து பார்க்க முடியலை! :(((( ஹிஹிஹி, அது ஒண்ணு தான் சரியா யூகிச்சது, மத்தது கிட்டேயே நான் போகலையே! :P விடையைப் பார்த்துக்கிறேன். :)))))
போனவாரம் அதிகமா சிந்திக்க வைத்த கொத்ஸ்'க்கு வளரே நன்னி... :)
ஒங்க தங்கமணிக்கும் நன்றி சொன்னேன்னு சொல்லிருங்க... :)
கொத்தனார்,
இந்த ஒரு முறை, என் ஊகம் பொய்யாகப் போனதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.
பசிநோக்காமல், மெய்வருத்தம் பாராமல், கண்துஞ்சாமல் ஒரு வாரம் உழைத்த உங்களுக்கும் உங்களைப் பொறுத்துக்கொண்ட உங்கள் துணைவியாருக்கும் என் வாழ்த்துகள்.
ராதா ஸ்ரீராம், ஒரு ஸ்மைலியைக்கூட விட்டுவைக்காமல் எடிட்டிய கெக்கே பிக்குணி.. மனுசன் அதிலெல்லாம் கெட்டி.. சாம்பிள்னு ரெண்டே கேள்விதான் கண்ணுல காமிச்சாரு.. மெயில்ல கேட்டாலும் க்ளூ கொடுக்கலை :-(( முதல் பாகத்துக்கு புதன் காலை பதில் சொல்ல ஆரம்பிச்ச எனக்கா ஹெட்ஸ்டார்ட்?
மத்தபடி, எல்லாப்புகழும் கூகுளுக்கே!! பாலராஜன் சரியா சொல்லி இருந்தார்.. கூகிளை எப்படி உபயோகப்படுத்தணும்ன்றதுய்க்கு ஒரு பயிற்சி மாதிரி இருந்தது இந்த குயி குயி குயிஜு..
அய்யா பினாத்தலாரே,
//சாம்பிள்னு ரெண்டே கேள்விதான் கண்ணுல காமிச்சாரு// அந்த ரெண்டு கேள்வியும் தான் நான் விட்ட கேள்வி. ராதா கிட்ட இருந்து எடுத்த ஸ்மைலி எல்லாம் இங்க பத்திரமா, அழுத்தம் திருத்தமா :):) (just kidding!!)
//என்ன தவம் செய்தனை......ன்னு பாடிக்கிட்டு இருக்கேன்.
இவ்வளவு திறமை உள்ள மாணவனுக்கு நான் ரீ/டீச்சரான்னு அப்படியே திக்பிரமை புடிச்சுப் புல்லரிச்சு.......(இன்னும் எதாவது சேர்த்துக்கலாமே)//
:-))))
அப்படியே திக்பிரமை
புடிச்சுப்
புல்லரிச்சு
புளகாங்கிதப்பட்டு
விதிர்த்து
விம்மி விம்மி
மெய்மறந்து.....
குத்து குத்து கூர்வடி வேலால்
கொத்து கொத்து கொத்தனாரைக் கொத்து
மொத்து மொத்து மகிழ்ந்தே மொத்து....
என்ன டீச்சர், போறுமா? இன்னும் பாட்டைக் கன்டினியூ பண்ணவா? :-)
கொத்ஸ்
கலக்கிட்டீங்க!
"புதிருக்கு" வாழ்த்துக்கள்!
புதிரா புனிதமாவை, அங்கு ஹைஜாக் செய்து விடட்டுமா? :-)
//ரொம்ப நல்லா போச்சுங்க கொத்ஸ இந்த க்விஸ்...எனக்கு நிறைய விஷய்ங்கள் தெரிஞ்சுக்க முடிஞ்சது.//
ஆமாங்க. இந்த கேள்விகளைத் தேர்ந்தெடுக்கும் போது நானும் நிறையா விஷயங்கள் கத்துக்கிட்டேன்.
//இந்த பிம்பெட்காதான் ரொம்ப படுத்தி எடுத்திடுச்சு.....//
எத்தனையோ புராணங்களும் இன்னும் பல கதைகளும் இருந்தாலும் பாரதத்தில் மனிதர் வாழ்ந்ததிற்கான பழைமையான சான்றுகள் இவைதானாம். அடுத்த முறை முடிந்தால் சென்று பார்க்கலாம் என இருக்கிறேன்.
//சரி ஒரு சந்தேகம் பெனாத்தலாருக்கு Head Start குடுதீங்களோ :):) (just kidding!!)//
ஹெட் ஸ்டார்ட்டா. அவரு குடுத்த ரெண்டு கேள்விகளைப் பார்த்துட்டு நான் ஆட்டத்துக்கே வர மாட்டேன்னு உக்கார்ந்துட்டாரு. அவரை வரவழைக்கப் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்!
போட்டிய அருமையா நடத்தி முடிச்சிட்டீங்க. என்ன....நடிகை ராதா அறிமுகமான படம் என்ன....இளையராஜா இசையில் சீர்காழி பாடிய பாடல் ஒன்று...ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த ரெண்டாவது தமிழ்ப் படம் எதுங்குறமாதிரியெல்லாம் கேள்விகள் இல்லையே தவிர..போட்டி அறிவுப்பூர்வமாக இருந்தது.
போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
//கலக்கல் க்விஸ் போட்டி ;))
பல தகவல்கள் தெரிஞ்சிக்கிட்டேன் தல..மிக்க நன்றி ;))
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;)//
நன்றி கோபி!!
வாங்க G3,
//ஒரு வாரம் எங்களுக்கு அருமையா போச்சு இந்த குயிஜுல பங்கெடுத்து. ரொம்ப நன்றி :)//
ஆர்வமாய் கலந்துக்கிட்டதுக்கு என் நன்றிகளும் கூட.
//ஆனா உண்மைய சொல்லனும்னா இந்த 54-ல 6 கேள்விக்கு மட்டும் தான் நான் சுயமா பதில் சொன்னது. மீதி எல்லாமே கூகிளாண்டவர் மற்றும் கூட்டணி மக்களின் துணையோடு பதில் சொன்னது தான் :)//
இந்த கேள்விகள் எல்லாதுக்கும் விடை தெரியணும் அப்படின்னு எதிர்பார்க்கலை. ஆனா தேடி விபரங்கள் தெரிஞ்சுக்கவும், அப்படித் தேடும் போது வேறு சுவாரசியமான தகவல்கள் தெரிஞ்சுக்கவும் ஒரு சந்தர்ப்பமாதான் நினைச்சேன்.
//கட்டாயம் வழிமொழிகிறேன். ராஜாமணி கூட இண்டரஸ்டு காமிச்சாருன்னா, அது! போட்டி, அதுவும் குயிஜு என்றால் எனக்கு இனிப்பு சாப்பிடுவது போல்....//
நன்றி. கெ.பி.
//கொஞ்சம் கரெக்ட் செய்தேன் - அதாங்க ஸ்மைலி எடுத்திட்டேன்...?!//
அவரு வந்து பதில் சொல்லி இருக்காரு பாருங்க.
//உண்மையில், எனக்கு இந்த நடிகர்/தயாரிப்பாளர் பிரச்னையில் (subjective) அதைத் தொடர்ந்து அந்த பகுதியில் பதிலிட சுவை போயிற்று என்பது உண்மை.//
உண்மைதான். இது போல நடக்காதவாறு பார்த்துக் கொள்கிறேன்.
//புதிர்களில் கட்டாயம் கலந்து கொள்வேன், வெல்வேன்;-)//
அது!!
//புதிர்கள் பதிவில் மேலும் பல புதிர்களை எதிர்பார்க்கிறோம்.//
செய்யலாம். உங்கள் ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள். ஆதரவுக்கு நன்றி ஸ்ரீதர்.
//வாழ்த்துக்கள் மற்றும் நன்றி கொத்ஸ்..//
நன்றி சிங்கமே.
//சீக்கிரமா புதிர் ஆரம்பிங்க.. ஆவலுடன் காத்திருக்கிறோம்.. :D :D//
விரைவில் செய்யலாம்.
//ஒரு வாரம் மகிழ்ச்சியாக ஓடியது. நல்ல பொழுதுபோக்கு பிளஸ் நிறைய விஷயங்கள் கத்துக்க முடிந்தது. நன்றி உங்களுக்கும், உங்களுக்கு உதவியவர்களுக்கும்.//
உங்கள் ஆர்வத்திற்கு நன்றி அரசு. தொடர்ந்து தமிழில் எழுதத் தொடங்கியதற்கும்! :))
//என்ன தவம் செய்தனை......ன்னு பாடிக்கிட்டு இருக்கேன்.//
ரீச்சர், தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் மகிழ்வது போல் நீங்க சான்றோன் எனச் சொல்லி மகிழ்ந்து இருக்கீங்க போல! (உங்களை விட்டா வேற யாரும் சொல்ல மாட்டாங்க. அது வேற விஷயம்!)
//இவ்வளவு திறமை உள்ள மாணவனுக்கு நான் ரீ/டீச்சரான்னு அப்படியே திக்பிரமை புடிச்சுப் புல்லரிச்சு.......(இன்னும் எதாவது சேர்த்துக்கலாமே)//
பின்னால ஒரு ஆள் வந்து கொத்தி வெச்சுட்டுப் போய் இருக்காரு பாருங்க. இப்போ திருப்தியா? :)
//ஆனாலும் ரொம்ப அருமையா இந்தப் போட்டியை நடத்துனதுக்கு
அன்பான வாழ்த்து(க்)கள்.//
நன்றி ரீச்சர். எல்லாப் புகழும் உங்களுக்கே! :))
//பரிசு எங்கய்யா...//
புலி சட்டை பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்துக்கோ. ஆங் அதேதான். அந்த மாதிரி மனசுக்குள்ள எல்லாக் கேள்விக்கு பதில் சொன்ன சந்தோஷம் இருக்கு பாரு. அதான் பரிசு!
வர்ட்டா!! :))
//முன்னமே சொன்னது தான் ஒரு வாரம் எல்லாரையும் அதிர வச்சுட்டீங்க.. :)//
புலி இதேதான் பாபாவும் சொன்னாரு. எல்லாம் முடியற சமயத்தில் நான் மொட்டை அடிச்சுக்கணுமா?
//கடந்த வாரம்... சூப்பர் வாரம்! பாராட்டுக்கள்!//
சேது, நன்றி.
//போன வாரம் சரியாகத் தூங்கி இருக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். இந்தவாரம் ஒய்வு எடுத்துக்கொண்டு உடல்நலனைப் பார்த்துக்கொள்ளவும்.//
பாலா, ஒரு வாரம்தான் லீவா? :))
//புதிர்கள் பதிவை ஆர்வத்துடன் வரவேற்கிறோம்.//
நல்ல விதமாக எதாவது செய்யலாம். கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொண்டு.
//கூகிள் மற்றும் விக்கிப்பீடியாவில் படித்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைத்ததையே எழுதியுள்ளேன்.//
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வலையகம் :))
ரொம்ப டீட்டெயில்டா புள்ளிவிபரம் அடுக்கி இருக்கீங்க. முடிஞ்ச வரை இதெல்லாமே அந்த விடைகள் பக்கத்தில் தந்திருக்கேன். :)
//விளையாட்டு (கிரிக்கெட் தவிர வேறு விளையாட்டுகள் உள்ளனவா என்று பலர் கேட்கக்கூடும்) 92.5//
கிரிக்கெட், டென்னிஸ், புட்பால், சீட்டாடம் என எல்லாம்தானே கவர் பண்ணி இருக்கேன். அப்புறம் ஏன் இப்படி? :))
//கூகிளாண்டவரிடம் எப்படியெல்லாம் வேண்டிக்கொள்ளலாம் என்று பலருக்குத் தெரிந்திருக்கிறது //
ஆமாம். இது பற்றி சில நண்பர்களோட நிறையா விவாதம் நடந்தது.
//ஒரு வாரம் கலக்கி இருக்கீங்க, வர முடியலை, //
பதில் தெரியலைன்னு இப்படி கூட சொல்லலாம் போல!! :))
நன்றி கீதாம்மா.
//போனவாரம் அதிகமா சிந்திக்க வைத்த கொத்ஸ்'க்கு வளரே நன்னி... :)
ஒங்க தங்கமணிக்கும் நன்றி சொன்னேன்னு சொல்லிருங்க... :)//
நிங்கள் ஆசம்சகளுக்கு நம்முட நன்னியா.
//இந்த ஒரு முறை, என் ஊகம் பொய்யாகப் போனதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். //
வாங்க சேம்பியன், எல்லாம் நல்லதுக்குத்தான்.
//பசிநோக்காமல், மெய்வருத்தம் பாராமல், கண்துஞ்சாமல் ஒரு வாரம் உழைத்த உங்களுக்கும் உங்களைப் பொறுத்துக்கொண்ட உங்கள் துணைவியாருக்கும் என் வாழ்த்துகள்.//
கடைசி சில வார்த்தைகளை சேர்த்து ஏன் நீங்கள் Wifeology பாடம் நடத்த லாயக்கு என நிரூபித்து விட்டீர்கள்.
//மத்தபடி, எல்லாப்புகழும் கூகுளுக்கே!//
கேள்வியும் அங்கே பதிலும் அங்கே!
இரண்டு நாட்களாக மிஷின் பக்கம் வரமுடியவில்லை. இந்த பதிவை இப்போது தான் பார்த்தேன். சென்ற வாரம் மிகவும் நன்றாக சென்றது. நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. மிகவும் சிறப்பாக செய்தீர்கள். வாழ்த்துக்கள். புதிர்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
சொல்ல மறந்து விட்டேன். தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
Post a Comment