Thursday, November 01, 2007

என் வால் ஏன் ஆடுது? - க்விஸ் பாகம் 4

என்னடா இவன் போன பதிவிலேயே கேள்விகள் எல்லாம் கேட்டாச்சுன்னு சொன்னானே. இப்போ என்னமோ புதுசா நான்காம் பாகத்தோட வந்திருக்கானேன்னு பார்க்கறீங்களா? இந்த வாரம் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் என நான்கு பதிவுகள் போட்டாச்சு. நல்ல வரவேற்பைப் பெறாம இருந்தா அப்படியே ஓடிப் போய் இருக்கலாம். ஆனா எல்லாரும் ஆர்வத்தோட வந்து கலந்துக்கிட்டதால, வெள்ளிக்கிழமையும் ஒரு பதிவு போட்டா நட்சத்திர வாரத்துக்கு அப்புறம் தினம் ஒரு பதிவு போட்ட வாரம் எனச் சொல்லிக்கலாமே. அதான் இந்தப் பதிவு.

சரி மேட்டருக்கு வருவோம். இந்த வாரம் நல்லா போனதுக்கு சில பேர் காரணமா இருந்திருக்காங்க. அவங்களுக்கு நன்றி சொல்லத்தான் இந்தப் பதிவு. இப்போ தெரியுதா என் வால் ஏன் ஆடுதுன்னு! 'அட நாயே!, இதுக்காடா இம்புட்டு பில்டப்!' அப்படின்னு திட்ட வந்தா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. நிறையா பேருக்கு நன்றி சொல்லணும். இருந்தாலும் நம்ம ஸ்டைல் தலைப்புக்கு ஆறு கேள்வி என்பதால் அவர்களில் ஆறு பேருக்கு இங்க நன்றி சொல்லப் போறேன். அதுவும் அவர்களைப் பற்றிய கேள்விகளாக. அவர்களைக் கண்டுபிடியுங்க பார்க்கலாம்.

நன்றி நவில்தல்

1) இந்த கேள்விகள் தயார் செய்யக் காரணமாக இருந்தது இவர் என்னிடம் வேறு ஒரு இடத்தில் பயன்படுத்த கேள்விகள் தயார் செய்து தருமாறு கேட்டதுதான். இவரின் பதிவைப் பார்த்துத்தான் நானும் பதிவெழுத வந்ததே என்று பல இடங்களில் சொல்லி இருக்கிறேன். எனது பள்ளி ஜூனியரான இவரின் நகைச்சுவை ததும்பும் எழுத்திற்கு ஒரு தனி வாசக வட்டம் உண்டு. இவரின் சீடர் என்றே புனைப்பெயர் வைத்துக் கொண்ட ரசிகர் உட்பட.

2) முதல் பதிவிலேயே சொல்லி இருந்தேன், தமிழில் கேள்விகளைத் தயார் செய்தவர் ஒரு சிறப்பாசிரியர் என்று. இவருக்கு கற்றுத் தருவதில் பெருத்த ஆர்வம். வெண்பாவாகட்டும், புகைப்படமாகட்டும் இவர் கற்றுத்தர முதல் ஆளாக நிற்பார். இரு பெயர்களில் எழுதி வரும் இவரை தொடர்ந்து எழுத வைப்பதுதான் சவாலான வேலை, காடு மலை கடந்து வந்தோம் சாமியேன்னு பாட்டெல்லாம் பாடணும் போல. மூன்றாம் பாகத்தில் இந்தத் தோழர் பணிபுரியும் நிறுவனத்தைப் பற்றிய கேள்வி ஒன்று இருக்கிறது.

3) இவர் பிறந்தது செப்டம்பர் 7, 1998. இந்த ஆறு பேரில் இவர்தான் இளையவர் என்றாலும் இவரின்றி என்னால் ஒரு நாள் கூட இருக்க முடியாது. உங்களில் பலராலும் கூட. இவரின் பெயர் உலகளவில் தெரிந்த ஒன்று என்றாலும் அது வந்தது ஒரு எழுத்துப்பிழையினால் என நம்பப்படுகிறது.

4) இவர் ஒரு தொழில் முறை ஆசிரியர். அதனால் நான்கு ஆண்டுகளாக (சமீபத்தில்தான் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததாகச் சொன்னார்) எழுதிக் கொண்டிருக்கும் தன் வலைப்பூவில் கூட அடிக்கடி ஆசிரியராக மாறிவிடுவார். "நகைச்சுவை என்பதற்காகக் கோமாளித்தனமோ வலிந்த திணிப்புகளோ இல்லாமல் இயல்பு நடையிலேயே எழுத முடிவது" இவரது சாமர்த்தியம் என வேறு ஒரு பதிவரால் பாராட்டப்பட்டவர். இதுக்கு மேல் என்ன சொன்னாலும் கண்டுபிடித்து விடுவீர்கள் என்பதால் ஸ்டாப். இவரில்லாமல் இந்த புதிர்களுக்கு கிடைத்து இருக்கும் 'நல்ல' தலைப்புகள் கிடைத்து இருக்காது.

5) இவரை உங்களில் அனேகம் பேருக்குத் தெரியாது. ஆனால் உங்களில் பலரை இவருக்குத் தெரியும். இவரது முழுநேர வேலைகளில் ஒன்று அலுவலகத்தில் மட்டுமில்லாது வீட்டிலும் மடிக்கணினியை கட்டி மாரடித்துக் கொண்டிருக்கும் ஒரு சாதுவான ஜீவனைப் பராமரிப்பது. கடந்த ஒரு வாரமாக ஒரு வித நோய்வாய்ப்பட்டு கணினி அருகிலேயே கிடக்கும் இந்த ஜீவனுக்கு இருக்கும் இடத்தில் வந்து சாப்பாடு கொடுத்து நல்ல விதமாகக் கவனித்து வரும் ஆத்மா. இவரால் காப்பாற்றப்பட்டு வரும் அந்த 'வாயில்லா ஜீவனை' உங்கள் எல்லாருக்கும் தெரியும்!

6) இது ஒருவரல்ல. ஒரு குழு. இதில் ஒருவரையாவது உங்கள் ஒவ்வொருவருக்கும் கட்டாயம் தெரிந்து இருக்கும். புதிதாகத் தகவல்கள் தெரிந்து கொள்ளும் ஆவல் அதிகம் உள்ளவர்கள் இவர்கள் அனைவருமே. ஒரு போட்டியினு வந்துவிட்டா சிங்கம், சரி, சிங்கம், புலி இன்னும் பலவகை பிராணிகளாய் புறப்படும் இவர்களது பெயர்கள் ஒரு இணையக் கோப்பில் வரிசைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அது கடந்த சில நாட்களில் தமிழ்வலையுலகில் அதிகம் பார்வையிடப்பட்டதாகவும் கேள்வி.

இது தவிர இன்னும் எத்தனையோ பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். சில கேள்விகளைப் பத்தி அதிக தகவல்கள் தந்த, கேள்வி சரியில்லை என விவாதம் செய்த மருத்துவர்கள் எஸ்.கே., ராமநாதன், மேற்பார்வை பார்த்து தனது பொறுப்பை சரியாக செய்து தந்த துளசி ரீச்சர், வெளியில் இருந்து ஆதரவு தந்த பாபா என நன்றி சொல்ல வேண்டிய பட்டியல் நீண்டு கொண்டே போகும். எல்லாருக்கும் என் நன்றிகள்.

முன்பே சொன்னது போல் விடைகள் இந்திய நேரம் திங்கள் காலை வெளியிடப்படும். அப்பொழுது இந்த கேள்விகளுக்கும் விடை சொல்வேன். ஆனால் இது வரை கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்ன நீங்கள் இதற்குச் சொல்லாமலேயா போய் விடுவீர்கள்? :))

121 comments:

said...

இதுக்கு மார்க் ஷீட் எல்லாம் கிடையாது!!

said...

1. ஜீரா ஐ மீன் ஜிரா!(தீபாவளி ஸ்வீட் ஞாபகத்தில் ஜீரான்னு எழுதிட்டேன்!)
2. ஜீவ்ஸ் (வெ.வ.வா)
3. கூகுள்
4. வாத்தியார்னா நம்ம சுப்பையா வாத்தியார் தானே!
5. உங்க தங்கமணி (ஆனா நீங்க வாயில்லா ஜீவன்னா நம்பமுடியலியே ;-))
6. விக்கி பசங்க

said...

சேதுக்கரசி யக்கா,

வாங்க வாங்க. நீங்கதானா போணி!!

2,3,5 - சரி
1,4,6 - வேற பதிவர்கள் இருக்காங்கப்பா இந்த சாயலில்!! :))

said...

1. டுபுக்கு :-)

said...

3. Google
5. ?? Your wife !!!!

said...

சேதுக்கா.

இப்போ 1 சரி!!

said...

ப்ரூனோ

3,5 - சரியான விடைகள்தான்! :))

said...

மூக்குன்னு இருந்தா சளிப்பிடிக்கணும்.
வாலுன்னு இருந்தா ஆடணும்.

அதுதான் மொறை:-)


வாரம் அஞ்சுபதிவு கண்ட வலைஉலகக் கொத்ஸ் வாழ்க,வாழ்கவே, வாழ்கவே......

said...

ரீச்சரே,

இந்தப் பதிவுக்குக் கூட மேற்பார்வைதானா?

வாழ்த்துக்களுக்கு நன்றி மாதாமகியே!!

said...

1. Dubukku

2. Ayyappan - Jeeves

3. September 7, 1998 - Google is founded by Larry Page and Sergey Brin, two students at Stanford University

6. விக்கி பசங்க

said...

G3
1,2,3 - சரிதான்.
6- சரி இல்லை!!

said...

1.Dubbukku

said...

1.dubbukku
2.vaanchinathan
4.penathalaar
5.kothanaar
6.wiki pasanga

said...

வாய்யா தேவு

முதல் பதில் சரிதான். இம்புட்டு நாளா ஆப்ஸெண்ட் ஆனா பதிவுலகத்தைப் பத்தின கிசுகிசுன்ன உடனே ஓடி வந்துட்டீராக்கும்! :))

said...

2,5,6 - தப்பு தேவு, அவசரமா பதிலைச் சொல்லிட்டு ஓடலாமுன்னு ஐடியாவா? கேள்வியை நல்லாப் படியுங்கப்பா!!

said...

orry 2 namma venpaa vaathi Jeevs

said...

தேவு

இப்போ 2 சரி.

said...

//இவரால் காப்பாற்றப்பட்டு வரும் அந்த 'வாயில்லா ஜீவனை' உங்கள் எல்லாருக்கும் தெரியும்!//

வாயில்லா ஜீவன் வந்து கொத்ஸ்ங்கோ.. அப்படின்னா பதில் என்னன்னு கொத்ஸ்க்கே க்விஸ் வைக்கிறோம்ங்க.:-)

5க்கு பதில் சொல்லியாச்சு தலைவா

said...

எனக்கே கேள்வியா, சரிதான். ஆனா மேலிட சிபாரிசோட வந்திருக்கீரு, அதனால 5-ம் கேள்விக்கு முழு மதிப்பெண்கள், அதில் முக்கியமான சொல் இல்லை என்றாலும் கூட!

said...

முதலில் கேள்வி 5-ல் உள்ள தகவல் பிழை பற்றி: "அது" ஒன்றும் நீங்கள் சொல்வது போல் ஒரு சாதுவான பிராணி இல்லை. வேண்டுமானால் அந்தப் 'பிராணி'யின் (நீங்க சொன்னதுதாங்க!) தங்கமணிட்ட கேட்டுப் பாருங்க.

said...

1. டுபுக்கு ?
2. ஜீவ்ஸ் ?
3. மடிக் கணினி
4.
5. இதான் சொல்லியாச்சே... ஆனாலும் பாவம் உங்க தங்க மணி
6. வ.வா.ச.

said...

தருமி

5 கேள்விக்கான பதிலில் நீங்க முக்கியமான சொல்லை பயன்படுத்தி விட்டதால் நீங்க சொன்ன விடை சரி என்றாகி விட்டது.

வாத்தி நீங்களே தேர்வை எல்லாம் கட் அடிக்கலாமா?

said...

தருமி

1- சரி
2- சரி
3- தவறு
5- சரின்னு சொல்லியாச்சே
6- தவறு

said...

Hi Koths,

I am a recent reader to the blog world. I salute you and people who helped you to put up this. I enjoyed it for the past three days (luckily less aani at work also).

For this quiz, I guess, 1st is dubuku, 2nd is GR (?), 3rd one is your laptop, 4th is pinathal Suresh, 5th is yr thangamani and last but not least va.Va.cha members.

Thanks once again for the great week.

-Arasu

said...

அரசு,

நீங்கள் மகிழ்ச்சி அடைந்தது குறித்து நன்றி. ஈ கலப்பை டவுண்லோட் செய்து நீங்களும் தமிழில் தட்டெழுதும் நாளை எதிர்பார்க்கிறேன்.

இந்த புதிரைப் பொறுத்த வரையில்
1, 4, 5 - சரி.

said...

3.Google thaan pathilaa

said...

ஆமாய்யா ஆமாம். இன்னிக்கு அவரில்லாம என்ன செய்ய முடியும்?

தேவு நீரு 5/6 !

said...

// மூக்குன்னு இருந்தா சளிப்பிடிக்கணும்.
வாலுன்னு இருந்தா ஆடணும்.
அதுதான் மொறை//
ஹா...ஹா.....

said...

என்னா ஒரு சிந்தனை..கொத்தனாரே.. கலக்கிட்டீங்க..போங்க..

said...

//ஹா...ஹா.....//

ரசிகரே, ரீச்சரா? கொக்கா? :))

said...

//என்னா ஒரு சிந்தனை..கொத்தனாரே.. கலக்கிட்டீங்க..போங்க..//

என்னையும் சிந்தனையையும் ஒரே வரியில் சொன்னாலே பாவம் அப்படின்னு சொல்லறவங்க நிறையா பேரு வர இடம். ஜாக்கிரதையா இருந்துக்குங்க தல!!

said...

3) இவர் பிறந்தது செப்டம்பர் 7, 1998. இந்த ஆறு பேரில் இவர்தான் இளையவர் என்றாலும் இவரின்றி என்னால் ஒரு நாள் கூட இருக்க முடியாது. உங்களில் பலராலும் கூட. இவரின் பெயர் உலகளவில் தெரிந்த ஒன்று என்றாலும் அது வந்தது ஒரு எழுத்துப்பிழையினால் என நம்பப்படுகிறது.

கூகிள்

said...

5) இவரை உங்களில் அனேகம் பேருக்குத் தெரியாது. ஆனால் உங்களில் பலரை இவருக்குத் தெரியும். இவரது முழுநேர வேலைகளில் ஒன்று அலுவலகத்தில் மட்டுமில்லாது வீட்டிலும் மடிக்கணினியை கட்டி மாரடித்துக் கொண்டிருக்கும் ஒரு சாதுவான ஜீவனைப் பராமரிப்பது. கடந்த ஒரு வாரமாக ஒரு வித நோய்வாய்ப்பட்டு கணினி அருகிலேயே கிடக்கும் இந்த ஜீவனுக்கு இருக்கும் இடத்தில் வந்து சாப்பாடு கொடுத்து நல்ல விதமாகக் கவனித்து வரும் ஆத்மா. இவரால் காப்பாற்றப்பட்டு வரும் அந்த 'வாயில்லா ஜீவனை' உங்கள் எல்லாருக்கும் தெரியும்!

உங்களது வாழ்க்கைத் துணைவியாரா?!!

said...

வினையூக்கி

3,5 சரிதான்!

said...

2) முதல் பதிவிலேயே சொல்லி இருந்தேன், தமிழில் கேள்விகளைத் தயார் செய்தவர் ஒரு சிறப்பாசிரியர் என்று. இவருக்கு கற்றுத் தருவதில் பெருத்த ஆர்வம். வெண்பாவாகட்டும், புகைப்படமாகட்டும் இவர் கற்றுத்தர முதல் ஆளாக நிற்பார். இரு பெயர்களில் எழுதி வரும் இவரை தொடர்ந்து எழுத வைப்பதுதான் சவாலான வேலை, காடு மலை கடந்து வந்தோம் சாமியேன்னு பாட்டெல்லாம் பாடணும் போல. மூன்றாம் பாகத்தில் இந்தத் தோழர் பணிபுரியும் நிறுவனத்தைப் பற்றிய கேள்வி ஒன்று இருக்கிறது.

பதிவர் ஜீவ்ஸ் சரியா?!! :) :)

said...

1. விளையாட்டு வீரர் farokh engineer, ’70s Brylcreem model. (கேள்வி ஞானம் தான்.. ;) )

-----------------------------

1. டுபுக்கு
2. ஜிரா
3. google
4. thulasi teacher
5. உங்க தங்கமணி
6. இது தான் தெரியல.. :):)

said...

6.வருத்தப்படாத வாலிபர் சங்கமா?!!

said...

தல், இந்த ஒரு வாரம் போனதே தெரியல.. என் வாழ்க்கையில், இத்தனை பொது அறிவு விஷயத்தை இப்போ தான் முதல் முறையா ஒரே வாரத்தில் படிக்கறேன்..

3 கேள்வி (விளையாட்டு 1, வரலாறு -1, வணிகம் - 5), நம்மள பாடா படுத்திடுச்சு.. ஆனா இந்த 3 கேள்வியால நிறைய கேள்விக்கு பதில் தெரிஞ்சுது.

மிக்க நன்றி கொத்ஸ்..:D

said...

1. பெனாத்தலாரோ
4.கைப்புள்ள‌
5. வாயில்லாப்பூச்சி நீங்க(நம்பறோம்). அந்த நல்ல ஆத்மா தங்கமணி
6.வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்.

அப்பாடி, ஏதோ சுமாரா இதுக்காவ‌து ப‌தில் தெரிஞ்சுதே.

said...

1. அச்சச்சோ. அது டுபுக்கு. பெனாத்தலார் இல்லை

said...

// நீங்களும் தமிழில் தட்டெழுதும் நாளை எதிர்பார்க்கிறேன். //
நாளை வரை தாமதம் வேண்டாம். இன்றே தொடங்கி விட்டேன் தமிழில் தட்டச்சு எழுத.
2) செந்தில் -யாத்திரீகன்
3) கூகிள்
6) விக்கிபசங்க

-அரசு

said...

1) குருநாயர் டுபுக்கு

2) என் இனிய எதிரி ஜீவ்ஸ் என்ற ஐயப்பன்

3) கூகுளாண்டவர்

4) பினாத்தல் சுரேஷ்

5)

6) ஹி ஹி... :)

said...

1.Dubukku
2.venba vaathi jeeves
3. Google
4. Penathal Suresh
5. உங்க தங்கமணி
6. போட்டியில் கலந்துகிட்ட வாசகர்கள்

said...

இன்னிக்குமா... நேற்றே சில கேள்விக்கு பதில் சொல்லல... எல்லாம் சேர்த்து நாளைக்கு...

வீக் எண்ட்...

said...

வினையூக்கி

2 - சரியான விடைதான்

said...

இருந்தாலும் முதல் கேள்விக்கு

1, டுபுக்கு

5, உம்ம நல்லபாதி தான்.... ஆனா உம்மை சரியா கவனிக்கல என்பது நல்லா தெரியுது... ரொம்ப நல்லவங்களா இருப்பாங்க போல இருக்கு ;)

said...

சிங்கம்,

விளையாட்டு 1 - சரிதான்

இந்தப் பதிவுக்கு 2,4 - சரி இல்லை.
1,3,5 - சரி
6 - நீங்க தெரியாதுன்னு சொல்லி சிரிக்கிறதைப் பார்த்தா தெரியும் எனத்தான் நினைக்கிறேன். :))

said...

வினையூக்கி

6 - இல்லைங்க

said...

சின்ன அம்மிணி,

1 தப்புன்னு சொல்ல வந்தேன் - அதை சரி பண்ணிட்டீங்க. அதனால சரிதான்!
5 சரியா இல்லாம போகுமா? இதுவும் சரிதான்.
4,6 - தப்புங்கோ.

said...

அட சூப்பருங்க அரசு,

இதை கைவசம் வெச்சுக்கிட்டா பீட்டர் விட்டுக்கிட்டு இருந்தீங்க!! தமிழில் எழுதினால்தான் இனி மதிப்பெண்கள்!! :))

இந்தப் பதிவில் நீங்க சொன்னதில் 3 மட்டும்தான் சரி!

said...

ராயலு.

1,2,3,4 - சரி

5,6 - ஹிஹின்னா என்ன அர்த்தம்?

said...

ஸ்ரீதர் வெங்கட்

இதுலேயும் எல்லாக் கேள்விகளும் சரியா பதில் சொல்லிட்டீங்களே!!

வாழ்த்துக்கள்!

said...

புலி,

வாரயிறுதியில் இப்படி உடனுக்குடன் பதில் சொல்ல முடியாது. ஆனா கண்டிப்பா அப்பப்போ வந்து சொல்வேன்,

இருந்தாலும் 1, 5 நீங்க சொன்னது சரிதான். (5-ல் முதல் வரி மட்டுமே!)

said...

//5,6 - ஹிஹின்னா என்ன அர்த்தம்?//

வேற என்ன பதிலை சொல்லுறது???

5) கொத்ஸ்'கிறே பெரிய அறிவாளி

6) சங்கத்து சிங்கங்கள்

said...

யோவ் ராயலு,

5-6 ரெண்டும் தப்புவே!!

said...

---இம்புட்டு நாளா ஆப்ஸெண்ட் ஆனா பதிவுலகத்தைப் பத்தின கிசுகிசுன்ன உடனே ஓடி வந்துட்டீராக்கும்---

எங்க பள்ளிக்கூட இளவட்டத்தைத் தொடர்ந்து நானும் ஆஜர் :D

said...

1. டுபுக்கு
2. ஐயப்பன்
3. உங்க பையன்?
4. பெனாத்தல் சுரேஷ்
5. உங்க மனைவி?
6. வ.வா.ச

said...

---வெளியில் இருந்து ஆதரவு தந்த பாபா---

கேள்விக்கெல்லாம் பதில் தெரியாட்டி வெளியில் நின்றுதான் வேடிக்கை பார்க்கணும் (எங்க தலைவர் சிவபாலன் ஸ்டைலில் ஹாஹாஹா :)

said...

1. டுபுக்கு

said...

வினையூக்கி,

1 - சரியான விடைதான்.

said...

6. விக்கிபசங்க

said...

வினையூக்கி

6 - இல்லைங்க!! :))

said...

4.பெனத்தல் சுரேஷ்

said...

வினையூக்கி

4 - சரிதான்

said...

6.பிலாக் யூனியன் கூட்டு வலைபூவா

http://blog-union-2007.blogspot.com/

said...

4. எஸ்.கே.
6. சற்றுமுன்

said...

வினையூக்கி

6 - இல்லை. அதெல்லாம் எனக்குத் தெரியவே தெரியாது.

இம்புட்டு வெள்ளந்தியா இருக்கீரே!! ;-)

said...

சேதுக்கா

4, 6 - ஊஹூம்!! :)

said...

கொத்ஸ்,
முதல்ல இத்தனை நாள் பதில் சொல்லாத்தற்குக் காரணம், க்விஸ் னா ஓடற சுபாவம்.

இப்போ இந்தப் பதிவில முதல் பதில்
டுபுக்கு?
இன்னோரு பதில் வ.வா.சங்கம்
இன்னோரு பதில் ஜீவ்ஸ்?
1998 லாப் டாப்?
சாரி:)0
வாயில்லாத ஜீவன் கொத்ஸா?
எழுதி வைத்துக் கொண்டு பதில் சொல்வது நமக்குப் பிடிக்காதுப்பா.:000))

said...

பாலா

விளையாட்டு 4 - சரிதான்

said...

வல்லிம்மா

இப்படி நம்பர் எல்லாம் போடாம பதில் சொன்னா நான் எப்படி எது சரி, எது தப்புன்னு சொல்ல? :))

உங்க பாணியில் சொல்லணுமுன்னா

ஒரு பதில் சரி, இன்னொரு பதில் தப்பு, இன்னொரு பதில் சரி, இன்னும் ரெண்டு பதில் தப்பு, கடைசி பதில் நீங்க சொன்னது சரி. ஆனா கேள்விக்கான பதில் அது இல்லையே!! :)))

said...

1. டுபுக்கு
2. ஜீவா
3. கூகிள்
4. பினாத்தல் சுரேஷ்
5. உங்கள் மனைவி
6. இட்லிவடை?

said...

இல்லை இல்லை உங்களோட கமெண்ட் பார்த்துவிட்டு கூகுளோட இந்திக் தமிழ் (உபயம் இட்லிவடை) உபயோகித்து கமெண்ட் பண்ணினேன். தமிழ் மேல உள்ள ஆர்வத்தில்தான் ப்ளோக் எல்லாம் படிக்கிறேன். நிச்சயமா பீட்டர் கிடையாது.
3) கூகிள் inc செப்டம்பர் 7, 1998 . இது பதில் இல்லையா?
6) வருத்தப்படாத வாலிபர் சங்கம்

-அரசு

said...

6. தமிழ்மணம் தேன்கூடு போன்ற திரட்டிகள் ..

said...

2- Jeeves

-அரசு

said...

6. போட்டியில் கலந்து கொண்ட அத்தனை பேரும் ..
இது தான் சரியான விடையா?!!!

said...

வாங்க மஞ்சுளா

1,2,3,4,5 - சரி
6 - கோட்டை விட்டுட்டீங்களே!!

said...

அரசு,

நீங்க தமிழில் எழுதுவது பார்த்து சந்தோஷமாய் இருக்கிறது. இந்த போட்டியினால் உண்டான நன்மைகளில் நீங்கள் தமிழ் தட்டச்சுக்கு மாறியதும் ஒன்று!!

3 - சரி
6 - தவறு

said...

வினையூக்கி

6 - மீண்டும் தவறெனச் சொல்ல வந்தேன். ஆனால் நீங்கள் அடுத்துப் போட்ட பின்னூட்டத்தைப் பார்த்து விட்டேன். கடைசியாக நீங்கள் சொன்னதுதான் சரியான பதில்.

இந்தக் குழுவிற்கு நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும் இல்லையா? :))

said...

அரசு

2 - சரியான விடைதான்.

said...

அப்பாடா!!! இன்றைக்கும் ஃபுல் மார்க்...
"வெளியில் இருந்து ஆதரவு" கொடுத்த பாஸ்டன் பாலாவிற்கும் நன்றி

said...

6. நாங்க தான? அதாவது வலைப்பதிவர்கள்.

said...

அதாவது, இந்த க்விஸில் பங்கெடுத்துக்கொண்டவர்கள்

said...

//அப்பாடா!!! இன்றைக்கும் ஃபுல் மார்க்...
"வெளியில் இருந்து ஆதரவு" கொடுத்த பாஸ்டன் பாலாவிற்கும் நன்றி//

சரியான மூணாவது அணிப்பா இந்த பாபா, உங்களுக்கும் ஆதரவு எனக்கும் ஆதரவு!!

எனிவே வாழ்த்துக்கள் வினையூக்கி. வந்த ஆர்வத்தோட கலந்துக்கிட்டதுக்கு நன்றி. நீங்களும் எஞ்சாய் பண்ணி இருப்பீங்கன்னு நினைக்கிறேன்.

said...

மஞ்சுளா,

6 - இப்போதான் நீங்க சரி!!

//இந்தக் குழுவிற்கு நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும் இல்லையா? :))//

said...

//யோவ் ராயலு,

5-6 ரெண்டும் தப்புவே!!/

அவசரப்பட்டுட்டேன் போலே... :(

5) கொத்ஸ் தங்கமணி

6) நாங்கதான்... கடைசி மூணு நாளா கூகுளாண்டவரிடம் மன்றாடி வரம் வாங்கி இங்க்ன சொல்லுற அதே அறிவாளிகள்... :)

said...

ராயலு

இப்போ 5,6 சரிதாம்வே

said...

6. விக்கி பசங்க‌

said...

2.ஜீவ்ஸ்

said...

சின்ன அம்மிணி

2 -சரி
6 - தப்பு

said...

1. இங்கிலாந்தின் இளைய சிங்கம் தானைத் தலைவன் தாமிரபரணி க/கொண்டான் அம்பைப்புயல் டுபுக்கு அவர்கள். (கூவியது போதுமா ?)

2. யாஹூஊஊஊஊஊஊ.......
சாமியே அய்யப்பா அய்யப்பா சாமியே

3. கூகிளாண்டவர் ரொம்ப நல்லவரு. அவரைத் தேடக்கூட அவரேதான் உதவிக்கு வந்தார்.

4. 54க்கு 54 வாங்கியவர்களில் ஒருவரான பினாத்தலார். (இந்த ஆறில் இன்னும் அவர் நீந்த/தி வரலையா ? )

5. உங்களின் இன்னும் நல்ல பாதி - இலவசக்கொத்தனாரி

6. இதேபோல் இன்னும் கேள்வி மேல் கேட்டால் பதில் மேல் பதில் சொல்லி நாங்களும் விக்கி (அழும்) பசங்களாகிடுவோம்

உங்களுக்காக thanksgiving day யை முன்கூட்டியே இழுத்துவைக்கிறோம்.
நன்றியும் மனம் நிறைந்த வாழ்த்துகளும்.

said...

1) Dubukku

2) Jeeves

4) Penathal Suresh

5) Mrs Koths

said...

நான் கூட செப்டம்பர் 7 ல் தான் பிறந்தேன்( ஏன் பிறந்த்தாய்னு எல்லாம் கேக்கப்படாது) . நான் இல்லாம என்னால மட்டும்தான் இருக்க முடியாதுனு நெனச்சேன். உங்களாலயுமா?
ஆனந்த கண்ணீர்( தெரியுதா?:P )...

said...

3. Google - En kaathali

said...

நாந்தான் குவிஜெல்லாம் புடிக்காதுனு சொல்லிட்டேன்ல.


அதாம் எல்லாரையும் நீங்க குழப்பின மாதிரி உங்களுக்கும் பின்னூட்டம் போட்டுட்டேன்:)))
நமக்குப் பார்த்துக் கேக்கறதுதான் வழக்கம்.
பதில் சொல்ல தெரியாதில்லையா:))))
நன்றி இ.கொ.

said...

//எனிவே வாழ்த்துக்கள் வினையூக்கி. வந்த ஆர்வத்தோட கலந்துக்கிட்டதுக்கு நன்றி. நீங்களும் எஞ்சாய் பண்ணி இருப்பீங்கன்னு நினைக்கிறேன்.
//
நிச்சயமா!!! :) :)

said...

thala.. vanikam 5. computerised machines illana robotnu sonnene.. 54 podunga.. kan kulira pathukaren.. appa vazkaila muthal thadava intha maathiri answer panni irukken.. santhoshathula man alli podareengale.. :)

intha quiz-la 2- iyappan.. 4 - ramachandran usha??

said...

5. உங்க தங்கமணி தானே?

said...

பாலா

முதல் 5 பதில்கள் சரியாச் சொல்லிட்டு ஆறாவதில் கோட்டை விட்டுட்டீங்களே!!

said...

ராதா
1,2,4,5 - சரிதான்

said...

//நான் இல்லாம என்னால மட்டும்தான் இருக்க முடியாதுனு நெனச்சேன்.//

என்னால் மட்டுமா? நம்ம ஆளுங்க எத்தனை பேர் இப்படி பொடியரே!!

said...

பொடியரே

3 - சரியான பதில்தான்.

said...

//அதாம் எல்லாரையும் நீங்க குழப்பின மாதிரி உங்களுக்கும் பின்னூட்டம் போட்டுட்டேன்:)))//

நல்லாப் போட்டீங்க பின்னூட்டம். உங்களை மாதிரி பொம்பளையாளுங்க நார்மலாப் பேசினாலே புரியாது. இதுல குழப்பணுமுன்னே பேசினா.... (ஆஹா நம்ம ஆண் ஈயம் இளிக்குதே!!)

//நமக்குப் பார்த்துக் கேக்கறதுதான் வழக்கம். பதில் சொல்ல தெரியாதில்லையா:))))//

ஆமாம் ஆமாம். இது பத்தி சிங்கம் ஒண்ணு கர்ஜித்துக்கிட்டு இருக்காம்.

said...

சிங்கம்லே

அதுக்கு மார்க் குடுத்தாச்சு.

இங்க 2 - சரி, 4 -தப்பு

said...

G3

5 - சரியான விடைதான். :))

said...

2, Jeeves

3, Google

6, Sangam (??) (or) Wiki pasanga

said...

4, தருமி

said...

4, பினாத்தல் சுரேஷ்

said...

புலி

2,3 சரி

6- ஒத்துக்க மாட்டேன் மாட்டேன் மாட்டேன்

said...

புலி

4 - தப்பு

said...

புலி

4 - இப்போ சரி

said...

6, உங்க புதிர் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு... எனக்கு சேர்த்து ...

ஆனா இது கூட்டத்தோட கோவிந்தா சொல்லிட்டேன்.. :)

said...

புலி

6ஆவது கேள்விக்கும் சரியான விடை. நீங்க கேட்பதை தனியா ஒரு பதிவாப் போட்டு சொல்லறேன். ;-)

said...

//6- ஒத்துக்க மாட்டேன் மாட்டேன் மாட்டேன்//

பொறாமைய்யா பொறாமை

உம்ம புரோபைல் படத்த ஒரு தடவ நல்லா ஒத்து பாத்துட்டு சொல்லுங்க.....

அந்த பெருந்தன்மை எல்லாம் உமக்கு ஏது.... ஆனா ஒன்னுவோய் நம்ம மக்கள் எங்க மேல இருக்க பாசத்த நிருபிச்சுட்டாங்க.. இது போதும் :)

said...

கண்டுபிடிச்சிட்டோமில்ல :))

4. பெனாத்தல் சுரேஷ்
6. ஒரு வாரமா கூகிளும் இந்த வலைத்தளமுமே கதின்னு கடக்கும் நாங்க தான் :)

said...

சற்றுமுன் அல்லது தமிழில் புகைப்படக்கலை - எது சரியோ அதை எடுத்துக்கொள்ளவும்.
:-)

said...

G3,

4,6 - சரிதான்.

நன்றி சொல்ல வேண்டிய ஆளுங்கதானே!!

said...

பாலா,

6 - நான் நினைக்கும் குழுவை நீங்க சொல்லலையே..

said...

அட அட .. இத்தனை பேருக்கு என்னோட பேர் தெரிஞ்சிருக்கே நன்றி மக்களே


கொத்சு.. சூப்பர் ஆ குவிஜி எல்லாம் போட்டீறு வாழ்த்துகள்

said...

கொத்தனாரே..
உங்களுக்கும் ,குடும்பத்தாருக்கும். எனது அன்பு கலந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன் உங்கள் ரசிகன்.

said...

இலவசம், இப்பதானய்யா எல்லா குவீசையும் படித்து முடித்தேன். நெசமாலுமே சில கேள்விகளுக்கு
பதில் தெரிந்து இருந்தது. உதாரணமாய் உம் வீட்டு வாயில்லா ஜீவன் - ஆனா என்ன செய்ய, ரொம்ப லேட்டா வந்துட்டேன்
நட்சத்திர பதிவுகள் போல, உங்கள் உழைப்பும், கலந்துக் கொண்ட சக பதிவாளர்களின் ஆர்வமும் பிரமிக்க
வைக்கின்றன. வாழ்த்துக்கள், தொடருங்கள்.