Monday, November 12, 2007

ஸ்ருதி சேரா சங்கீதம்

இதனை எழுதும் பொழுது பேசாப் பொருளைப் பேச துணிந்த உணர்வு எனக்கு. எழுத வேண்டுமா வேண்டாமா? இதனை நான் எழுதுவதை இசை ஆர்வலர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்? தெரியவில்லை இருந்தாலும் எழுதுகிறேன். கர்நாடக சங்கீதம் ஒரு சிறந்த நுண்கலை, அதிலும் கடந்த பத்து இருபது வருடங்களில் பலருடைய பங்களிப்பால் வெகுவாக வளர்ந்து வரும் கலை. கடந்த சில வருடங்களாக இதில் சாதி மத ரீதியாக இருக்கும் பாகுபாடுகள் பற்றி பலர் பேசியும் எழுதியும் வந்துள்ளனர். இது பொதுவாக சமுதாயத்தில் காணப்பட்ட பாகுபாடுகளின் பிரதிபலிப்புதான். அதே சமயம் சாதி மதங்களைத் தாண்டி சில மிகப் பெரும் இசையாளர்களிடையே குரு சிஷ்ய உறவோ அல்லது பாடுபவர்கள், உடன் வாசிப்பவர்கள் என்ற உறவோ உறுதி பெற்று இருந்ததைப் பற்றிய புரிதலும் நம்மிடையே முழுதாக இல்லை.

ஆனால் இவற்றை எல்லாம் தாண்டி இன்று நம் கண் முன் தென்படும் ஒரு மிகப் பெரும் பாகுபாடு கர்நாடக சங்கீத உலகில் பெண்களுக்கு எதிராக நடத்தப் படும் பாகுபாடுதான். நேரடியாகச் சொல்ல வேண்டுமானால் அன்றும் சரி இன்றும் சரி தாங்கள் ஒரு பெண் பாடகருக்கு உடன் வாசிப்பதையோ அல்லது தனக்கு ஒரு பெண் கலைஞர் உடன் வாசிப்பதையோ மறுக்கும் கலைஞர்கள் அனேகம் பேர். முற்காலத்தில் இருந்த சமுதாய கட்டுப்பாடுகளும், அன்று இருந்த மனத்தடைகளும் பெண்களுக்கு சுதந்திரம் தராத நிலையில் இது போன்ற சூழம் ஏற்பட்டிருக்கிறது. இத்தடைகளை மீறி வந்தவர்கள்தான் இத்துறையில் வெற்றி பெற்ற பெண் கலைஞர்கள். ஆனால் இந்த பாகுபாடும் இன்றைய தலைமுறையினர் மட்டுமல்லாது அடுத்த தலைமுறையிடமும் பரவி வருவதுதான் வேதனை.

இன்று பல ஆண் கலைஞர்கள் தமக்கென ஒரு பெயர் கிடைக்கும் வரை பெண் கலைஞர்களுக்கு உடன் வாசிப்பதில் தயக்கம் காட்டுவதில்லை. இன்னும் பச்சையாக சொல்ல வேண்டுமானால் தன்னை ஆண் கலைஞர்கள் உடன் வாசிக்க அழைக்கும் வரை பெண்களுடன் மேடையை பகிர்ந்து கொள்கிறார்கள். சிலர் தான் இனி பெண்களுக்கு பக்க வாத்தியமாக செல்லப் போவதில்லை என்ற தீர்மானத்தை பெருமையுடனே சொல்லிக் கொள்கின்றனர். இத்தகைய தீர்மானங்களை வரவேற்கும் விதமாகவே இன்றைய சூழ்நிலை இருக்கிறது. இதற்குப் பின்னால் பெரிதாக அரசியல் அல்லது சமுதாயக் காரணங்கள் எல்லாம் இல்லை. தனக்கு வாய்ப்புகள் தேவை என்ற வரையில் பெண்களுடன் வாசிக்கத் தயங்காத இவர்கள் தமக்கென ஒரு பெயர் வந்த பின் பெண் கலைஞர்களைக் கழற்றி விட்டு விடுகின்றனர். இன்று எல்லா இடங்களிலும் இருக்கும் வேலை முடிந்த பின் தூக்கி எறிந்து விடும் (Use and Throw) கோட்பாடுதான் இங்கேயும் கடைபிடிக்கப் படுகிறது.

இதுவே பெண் பக்க வாத்திய கலைஞர்களை எடுத்துக் கொண்டால், ஆண் கலைஞர்களுக்கு இணையான தகுதி இருந்தாலும் தமக்கு ஆண் பாடகர்கள் சரியான வாய்ப்பு தரவில்லை என்பது இவர்கள் குறை. இவர்கள் பெண்கள் என்பதாலே இவர்களுக்கு வாய்ப்பு குறைவது உண்மைதான். ஒரு ஆண் பாடகராக நான் இதற்குச் சொல்லக் கூடிய ஒரே காரணம் - ஆண் ஆதிக்க மனப்பான்மை!

இதுக்கு ஆண் கலைஞர்களின் எதிர்வினை என்னவாக இருக்கும்? அதிக அளவில் கூறப்படக் கூடிய காரணம் - பெண்களின் ஸ்ருதி மிகவும் மேல்ஸ்தாயியாக இருப்பதால் வயலினாகட்டும் மிருதங்கமாகட்டும் அந்த ஸ்ருதியில் நன்றாக ஒலிப்பதில்லை என்பதுதான். மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது ஒரு சரியான காரணமாக இருந்தாலும் கொஞ்சம் யோசித்தால் இதன் அபத்தம் புரியும். இவர்கள் முதலில் பெண்களுக்கு வாசிக்கும் பொழுது இது ஒரு பொருட்டாகத் தெரியவில்லையா? அல்லது ஆண் பாடகர்களில் மேல்ஸ்தாயியில் பாடுபவர்களுக்கும், பல விதமான கருவிகள் வாசிப்பவர்களுக்கும் இவர்கள் வாசிப்பதில்லையா? அப்பொழுது இது ஒரு பிரச்சனையாகத் தெரியவில்லையா? ஆக இந்த காரணம் சரியான ஒன்றாகத் தோன்றவில்லை.

மற்றொரு பிரபலமான காரணம் ஒரு பெண் பாடகரின் கச்சேரி நல்ல விதமாக நடந்தால் அதற்கான பெருமை அந்த பெண் கலைஞருக்கே போய் சேருகிறது என்றும் தான் எவ்வளவு நன்றாக வாசித்தாலும் தமக்கு எந்த விதமான பெருமையும் வருவதில்லை என்பார்கள். இது ஆண் பாடகர்களுடன் வாசிக்கும் பொழுதும் நிகழக்கூடியதுதானே? அப்பொழுது மட்டும் பரவாயில்லையா? பொதுவாக பெண் பாடகர்களுக்கு பக்க வாத்தியம் வாசித்தால் தமக்கு அந்தஸ்து கிடைப்பதில்லை என்றும் மேலும் ஒரு படி சென்று பெண் பாடகர்களுக்கு வாசிக்காவிட்டால்தான் தனக்கு அந்தஸ்து என்றும் கூடச் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்த வரையில் இது ஒரு சரியான அணுகுமுறையே இல்லை. அந்தஸ்து என்பது ஒருவரது திறமையை சக கலைஞர்களும் பொது மக்களும் உணர்ந்து கொள்வதால் வருவதே தவிர யாருக்கு பக்கவாத்தியம் வாசிக்கிறார்கள் என்பதால் இல்லை.

இன்னும் சொல்வார்கள் பெண் கலைஞர்களுக்கு வாசிக்கும் பொழுது சுதந்திரமாக வாசிக்க முடிவதில்லை என்று. இதற்கு என்ன அர்த்தம்? ஒரு குறிப்பிட்ட முறையில் வாசிக்க வேண்டும். அது பெண் பாடகிகளோடு வாசிக்கும் பொழுது முடிவதில்லை. அதனால் என்ன? ஆண் பாடகர்களில் பல விதமாக பாடுபவர்கள் இல்லையா? அதற்கு ஏற்றால் போல் வாசிக்க முடியும் பொழுது இப்படி வாசித்தால் மட்டும் தவறா? பாடகர்கள், அவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, தாங்கள் உடன் வாசிப்பவர்களை உத்தேசித்து தாங்கள் பாடும் விதத்தை சிறிதே மாற்றிக் கொள்வது இல்லையா? இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? இதெல்லாம் இயற்கையான சிறு மாற்றங்கள்தானே?

அடுத்ததாக பெண்கள் ஏன் ஆண்கள் போல் பாட வேண்டும்? ஒரு காலத்தில் பெண் பாடகிகளுக்கு கிடைக்கப் பெற்ற பெரும் பாராட்டு அவர்கள் ஆண்கள் போல் பாடுகிறார்கள் என்பதாகும். என்னளவில் இது ஆண் ஆதிக்கத்தைப் பறைசாற்றும் கடும் சொற்கள் இவை. பெண்களின் இசை ஆண்களின் இசையை விட வித்தியாசமாகத்தான் இருக்கும், இருக்கவும் வேண்டும். நாம் இந்த வித்தியாசத்தைப் போற்ற வேண்டும். ஆகையால் பெண் பாடகர்களுக்கு உடன் வாசிக்கும் பொழுது பக்க வாத்தியக்காரர்களும் வித்தியாசமாகத்தான் வாசிக்க வேண்டும். பெண் பாடகர்களுக்கு ஆண்களை ஒத்த இசை ஞானம் இருப்பதை மறுக்க முடியாது. இதனை எந்த ஆண் பக்க வாத்தியக்காரரும் மறுக்கவும் மாட்டார்கள். இது சரி இல்லை எனச் சொன்னால் ஆண் கலைஞர்கள் பெண் கலைஞர்களை விட அதிக திறமையும் ஞானமும் உடையவர்கள் என ஆகி விடும். இது நம்பக்கூடிய விஷயமா என்ன?

பெண் பாடகர்கள் ஆண் பக்க வாத்தியக்காரர்களை சரி வர நடத்துவதில்லை என்பது என்னிடமே சிலர் சொல்லி இருக்கும் ஒரு குற்றச்சாட்டு. அதையும் பார்க்கலாம். ஒரு பக்கவாத்தியக்காரரிடம் ஒரு ராகத்தை மேலோட்டமாகவோ அல்லது தனியா வாசிக்கும் நேரத்தைக் குறைக்கச் சொன்னாலோ அது தவறுதான். அதைச் செய்தது ஆண் பெண் என்ற பேதமே கிடையாது. ஆனால் இதை ஒரு பெண் செய்தால் அது பெருங்குற்றமாக கருதப்படுகிறது. நான் ஒரு ஆண் பக்கவாத்தியக்காரரிடம் இப்படி ஒரு உதவி கேட்டால் அது கோரிக்கை ஆனால் அதுவே ஒரு பெண் பாடகர் கேட்டால் அது தவறு எனப் பார்ப்பது சரியா? இதையே நான் பாடும் பொழுது என்னுடன் வாசிக்கும் ஒரு பெண் பக்க வாத்தியகாரரிடம் இப்படி நடந்து கொண்டால் அது தப்பு இல்லையா? இது போன்ற தவறுகளை இரு பாலருமே செய்யலாம். அது யார் செய்தாலும் கண்டிக்கப்பட வேண்டியது. இதுதான் நான் சொல்ல வருவது.

ஒரு பெண் பக்கவாத்தியக்காரருக்கு ஆண் பக்கவாத்தியக்காரர்கள் அளவிற்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை. நல்ல திறமையுள்ள பெண் கலைஞர்களை உதாசீனப்படுத்துவதற்கு எந்த விதமான காரணமும் கிடையாது. ஆனால் இன்று பெண்களுக்கு வாசிக்காத ஆண் கலைஞர்களைத்தான் நமக்கு பக்கவாத்தியம் வாசிக்க விரும்புகிறோம். இது ஒரு மடத்தனமான மனோநிலை என்பதைத் தவிர என்ன சொல்ல? நம்மால் திறமையுள்ளவர் என கணிக்கப்பட்ட அனைவரையும் நாம் அரவணைத்துச் செல்ல வேண்டும். ஆண் பெண் என்ற வித்தியாசம் இல்லாமல். இதுதான் என் நிலைப்பாடு.

இவ்வளவு எல்லாம் பேசுகிறானே, இவன் ஒரு பக்கவாத்தியக்காரனா? இவனுக்கு என்ன தெரியும்? என்ற கேள்விகள் வரும். நியாயமான கேள்விதான். அதற்கு நான் சொல்லும் பதில் ஒன்றுதான். சில பெண் பாடகர்கள் பாடிக் கேட்கும் பொழுது இவர்களுக்கு ஒரு நாளாவது நாம் பக்கவாத்தியம் வாசிக்கும் பாக்கியம் கிடைக்காதா என நினைப்பேன் என்பதுதான். அது மட்டுமில்லாமல் எனக்காக எத்தனையோ பெண் பக்கவாத்தியக்காரர்கள் வாசித்து இருக்கின்றனர். அவர்கள் எனக்கு வாசித்த ஆண் பக்கவாத்தியக்காரர்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்பதைச் சொல்வதிலும் எனக்குத் தயக்கம் கிடையாது.

நாம் எடுக்கும் நிலைப்பாடுகள் குறித்து நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் அதற்கான விடைகள் நம்முள்ளேயே கிடைக்கும். இதைப் பற்றிப் பேசப் படுவதே விலக்கப்பட்ட ஒன்றாக இருப்பதற்கான காரணம் என்ன? தான் செய்வதில் தவறொன்றும் இல்லை என்ற நம்பிக்கையினால்தான் இது பற்றி பொது இடங்களில் பேசுவதை ஆண்கள் விரும்புவதில்லையா? படித்த நம்மால் நம் நம்பிக்கைகள் பற்றி தைரியமாக பேச முடியாதா? அதைவிட நாம் செய்வது தவறு என்ற புரிதல் வரும் பொழுது இதுவரை செய்தது தவறென்று ஒத்துக் கொள்ள முடியாதா? இந்த விஷயத்தில் நம் நிலைப்பாடு தவறென்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.

இதெல்லாம் நான் எழுதினது இல்லை. பிரபல கர்நாடக சங்கீதப் பாடகர் திரு டி.எம்.கிருஷ்ணா சமீபத்தில் ஹிந்து நாளிதழில் எழுதிய ஒரு கட்டுரையின் தமிழாக்கம். உங்கள் கருத்தையும் பின்னூட்டத்தில் சொல்லி விடுங்களேன்!

46 comments:

said...

கொஞ்சம் பெரிய கட்டுரை. தமிழாக்கத்தில் எதேனும் தவறு செய்திருந்தால் சுட்டிக் காட்டினால் சரி செய்வேன்.

என் கருத்தினை தனியாகச் சொல்லவும் வேண்டுமா? ;-)

said...

ஒரு + போட்டாச்சு!

said...

ஓஹோ, அப்படியா.. இது எல்லாத்துறைக்கும் பொருத்தம்தானே. நடிகர் பேரு வாங்குற அளவுக்கு இயக்குனர் வாங்குறதில்லையே. அதைப்போலன்னு வெச்சுக்கலாமா?

said...

//சாதி மதங்களைத் தாண்டி சில மிகப் பெரும் இசையாளர்களிடையே குரு சிஷ்ய உறவோ அல்லது பாடுபவர்கள், உடன் வாசிப்பவர்கள் என்ற உறவோ உறுதி பெற்று இருந்ததைப் பற்றிய புரிதலும் நம்மிடையே முழுதாக இல்லை//

சூப்பர்!
முழுக்க முழுக்க உண்மை!

said...

ம்ம்ம்ம்., தடைகளை மீறி "அக்கரை சுப்புலட்சுமி" பல பெரிய பாடகர்களுக்கு வாசித்துப் பார்க்கிறேன். அது போல் பெரிய பெண்பாடகர்களுக்கும், பெரிய பக்கவாத்தியக் காரர்கள் வாசிக்கிறதும் நடக்கத் தான் செய்கிறது. கல்லிடைக்குறிச்சி சிவகுமார், டி.கே.பட்டம்மாளின் குமாரர் சிவகுமார், விட்டல் ராமமூர்த்தி, டாக்டர் நர்மதா, அவங்க ட்ரூப்பின் வாத்திய இசை கேட்கக் கேட்க இன்பம்!!!!!!!

said...

நானும் ஒரு + போட்டுட்டேன்.

கடைசி வரி வரும்வரை ஒரே ஆச்சரியம்தான் போங்கோ :-))))

said...

:(

உங்கள சில நிமிசத்தில் ரொம்ப பெரிசா நினைச்சுட்டேன்....

அவர்கள் அப்படி தான் என்பது போல் நீங்கள் எப்பொழுதும் இப்படி தான் ;)

said...

சி அன்ட் பி டெக்னாலஜியை அருமையாப் பயன்படுத்தி இருக்கீங்க கொத்ஸ் பிடிங்க வாழ்த்துக்களை :-)

said...

ஆஹா.. உமக்கு பிடிச்ச பெண் பாடகர்களை வரிசையாச் சொல்லும்னு பின்னூட்டலாம்னு வந்தேன்.

கடசியில சொந்த சரக்கில்லேன்னு சொன்னதால விட்டுட்டேன்.

மேட்டர் பத்தி என்ன சொல்ல? தல சொல்லிட்டாரு. அப்பீல் ஏது?

said...

நல்ல கட்டுரை. அட... கொத்ஸ் இப்படி ஒரேயடியா சீரியஸா எழுதிட்டிருக்காரேன்னு நினச்சிட்டே வந்தேன் :-)) மொழி பெயர்ப்பு அருமை!

//என் கருத்தினை தனியாகச் சொல்லவும் வேண்டுமா? ;-)//

உங்க கருத்தைதான் ஏற்கெனவே profiling எல்லாம் பண்ணி பார்த்து வகை பிரிச்சு வச்சுட்டாங்கள்ல :-)) இதில தனியா என்ன கேள்வி?

said...

//இன்று நம் கண் முன் தென்படும் ஒரு மிகப் பெரும் பாகுபாடு கர்நாடக சங்கீத உலகில் பெண்களுக்கு எதிராக நடத்தப் படும் பாகுபாடுதான்.//

இதை என்னால் முழுவதும் ஒத்துக் கொள்ள முடியவில்லை.

said...

என்னய்யா நெனச்சிகிட்டு இருக்கீங்க மனசுல.. நான் எதேச்சையா இதை படிச்சிட்டீங்களா? என் லேட்டஸ்ட் போஸ்ட் அப்படீன்னு நேரடியா ஒரு கேள்வி கேட்டா, உடனே அத ஃபாலோ பண்ணி நீங்க எல்லாம் போஸ்டர் ஒட்டிக்கறீங்களே.. இதெல்லாம் நல்லால்ல சொல்லிட்டேன்.

said...

எனக்கும் இந்த வரிசையில் ஒரு சந்தேகம் ரொமப் நாளா இருந்தது. தெருவுக்கு தெரு கர்னாடக சங்கீதம் பெண்கள் தானே கத்துக்கறாங்க அப்போ சபா கச்சேரிகளிலும் அவங்க தானே நிறைய இருக்கனும்ன்னு...பக்கவாத்தியம் மட்டுமில்லாமல் மெயின் பாட்டு விகிதாசாரத்திலும் நம்பர் கூடுதலாக இருக்கோ?

said...

எனக்கு வேறு என்ன என்னவோ பொருள் தருகிறது என்று சொல்லலாம்னு நினைத்தால், தடித்த
எழுத்தில் கீழே இருப்பதை படித்ததும்... :-(

said...

உள்ளேன் ஐஐஐயா

said...

ஐயா இது எல்லருக்கும் பொருந்தாது. மிருதங்க சக்ரவர்ததி பாலக்காடு மணிஐய்யர் டி கே பட்டம்மாளுக்கு கடைசிவரை வாசித்துக்கொண்டுதான் இருந்தார்

said...

நான் சொல்ல வந்தது.

இதனை முழுமையாக ஒத்துக் கொள்ள முடியாது. ஒரு சில சம்பவங்கள் நடந்து இருக்கலாம். அதற்காக ஒட்டு மொத்தமாக குறை கூற முடியாது. பெண் பாடகர்களுக்கு நல்ல ஆண் கலைஞர்கள் பக்க வாத்தியமாக வாசித்து இருக்கிறார்கள். அதனால்தான் முழுமையாக ஒத்துக் கொள்ள முடியாது எனச் சொன்னது.

said...

பெண்களுக்கு அவ்வளவுதான் மரியாதை. ஏன்னா நம்ம பண்பாட்டுல அவங்கள தெய்வமா வெச்சிப் பாராட்டுறோம்ல. அப்படி இருக்குறப்போ தெய்வத்துக்குப் பக்கவாத்தியம் வாசிக்கலாமா? அதுவும் தெய்வத்துக்குச் சரிசமமா உக்காந்து. அதத் தப்பாப் புரிஞ்சிக்கிட்டு நீங்கபாட்டுக்க...சாரி..கிருஷ்ணா பாட்டுக்க இப்பிடிச் சொல்லீட்டாரே.

said...

எழுதுனது கொத்ஸா - சந்தேகப்பட்டுகிட்டே படிச்சிட்டு வந்தேன். இது என்னாது இவ்ளோ சீரியஸ் பதிவுன்னு ஒரே ஆச்சர்யம். கடேசிலே லொம்முன்னு போட்டு ஒடைச்சிட்டீங்க. இருப்பினும் சிரமப்பட்டு இவ்வளவு பெரிய கட்டுரையை பொறுமையாக, அழகாக தமிழாக்கம் - அதுவும் படித்து, முழு ஈடுபாட்டுடன் - செய்தது உண்மையிலேயே பாராட்டத்தக்கது

said...

ஜீவா,

+ போட்டதுக்கு நன்றி.

said...

//நடிகர் பேரு வாங்குற அளவுக்கு இயக்குனர் வாங்குறதில்லையே. அதைப்போலன்னு வெச்சுக்கலாமா?//

இங்க பேசப்பட்டதில் அது ஒரு பகுதிதானே.

said...

//சூப்பர்!
முழுக்க முழுக்க உண்மை!//

ஆமாம் அந்த புரிதல் நம்மிடையே இல்லை. உங்களுக்கு தெரிந்தவர்களைப் பற்றி எழுதுங்களேன் ரவி.

said...

//தடைகளை மீறி "அக்கரை சுப்புலட்சுமி" பல பெரிய பாடகர்களுக்கு வாசித்துப் பார்க்கிறேன்.//

ஆமாம் கீதாம்மா. அது மாதிரி சாதித்தவர்கள் வெகு சிலரே. இல்லையா?

//கல்லிடைக்குறிச்சி சிவகுமார், //

அது எப்பேர்பட்ட ஊரு!! :))

said...

//நானும் ஒரு + போட்டுட்டேன்.//

ரீச்சர், அப்போ நான் பாஸ்தான்!!

//கடைசி வரி வரும்வரை ஒரே ஆச்சரியம்தான் போங்கோ :-))))//

ஹிஹி...

said...

//:(

உங்கள சில நிமிசத்தில் ரொம்ப பெரிசா நினைச்சுட்டேன்....//

இப்போ என்ன நான் பெரிய ஆள் இல்லையா? :))

//அவர்கள் அப்படி தான் என்பது போல் நீங்கள் எப்பொழுதும் இப்படி தான் ;)//

நாம அப்படித்தான் என்பதுதான் ஊரறிஞ்ச ரகசியமாச்சே!

said...

//சி அன்ட் பி டெக்னாலஜியை அருமையாப் பயன்படுத்தி இருக்கீங்க கொத்ஸ் பிடிங்க வாழ்த்துக்களை :-)//

யோவ் தேவு, இதெல்லாம் ரொம்ப நக்கலு. நாங்க ராவெல்லாம் கண்ணு முழிச்சு மொழியாக்கம் செஞ்சு போட்டா நீர் என்ன சிம்பிள் கட் பேஸ்ட்ன்னு சொல்லறீரு. உம்மை.......நற நற....

said...

//ஆஹா.. உமக்கு பிடிச்ச பெண் பாடகர்களை வரிசையாச் சொல்லும்னு பின்னூட்டலாம்னு வந்தேன்.//

நல்ல வேளை, கடைசி வரியை ஒழுங்க படிச்சீரு. இல்லை நம்மளை மாட்டி இல்ல விட்டு இருப்பீரு!!

said...

//நல்ல கட்டுரை. அட... கொத்ஸ் இப்படி ஒரேயடியா சீரியஸா எழுதிட்டிருக்காரேன்னு நினச்சிட்டே வந்தேன் :-)) மொழி பெயர்ப்பு அருமை!//

நன்றி வெங்கட். நம்ம பங்களிப்பு அந்த மொழிபெயர்ப்புதான். அது நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு நன்னி.

//உங்க கருத்தைதான் ஏற்கெனவே profiling எல்லாம் பண்ணி பார்த்து வகை பிரிச்சு வச்சுட்டாங்கள்ல :-)) இதில தனியா என்ன கேள்வி?//

யாரும் கேட்டுடக் கூடாதேன்னு ஒரு முன் ஜாமீன் தான்!!

said...

//இதை என்னால் முழுவதும் ஒத்துக் கொள்ள முடியவில்லை.//

அவங்க எல்லாம் அந்த துறையில் ஊறி இருக்கறவங்க. அவங்க சொன்னா தப்பாவா இருக்கும்?

said...

//உடனே அத ஃபாலோ பண்ணி நீங்க எல்லாம் போஸ்டர் ஒட்டிக்கறீங்களே.. இதெல்லாம் நல்லால்ல சொல்லிட்டேன்.//

தலைவர் எவ்வழியோ தொண்டர்கள் அவ்வழி. எல்லாரும் வரலைனாலும் நான் வந்துட்டேனில்ல!! :))

said...

//எனக்கும் இந்த வரிசையில் ஒரு சந்தேகம் ரொமப் நாளா இருந்தது. தெருவுக்கு தெரு கர்னாடக சங்கீதம் பெண்கள் தானே கத்துக்கறாங்க அப்போ சபா கச்சேரிகளிலும் அவங்க தானே நிறைய இருக்கனும்ன்னு...//

டுபுக்கு - அநியாய உள்குத்தோட பின்னூட்டம் போட்டு இருக்கீரு. இதுக்கு நான் பதில் சொன்னேன்னா புலிக்குட்டி, பூனைக்குட்டி எல்லாம் வெளிய வரும். அதனால நான் எஸ்கேப்பூஊஊஊ...

said...

//எனக்கு வேறு என்ன என்னவோ பொருள் தருகிறது என்று சொல்லலாம்னு நினைத்தால், தடித்த
எழுத்தில் கீழே இருப்பதை படித்ததும்... :-(//

பெண்ணீய வாடை தூக்கலாக அடிக்கும் இப்பின்னூட்டத்தைப் போட்ட அனானி அக்காவிற்கு!!

நல்லா அடிச்சு ஆட வந்தீங்க. கடைசி வரியில் ஒரு குண்டை வெச்சு ஏமாத்திட்டேன் போல!! ஒண்ணும் சொல்ல முடியாம வருத்தமா இருக்கீங்க போல!

said...

//உள்ளேன் ஐஐஐயா//

அட்டெண்டன்ஸ் மார்க்ட் சேதுக்கா. வேற ஒண்ணும் சொல்லாம சைலண்டா இருப்பதற்கான காரணம் புரியுது! :)

said...

//வேற ஒண்ணும் சொல்லாம சைலண்டா இருப்பதற்கான காரணம் புரியுது!//

அப்படி என்ன புரிந்ததோ?! புரிந்தது புரிந்ததா புரியாதது புரிந்ததா இனிமேல் புரியப்போவது புரிந்ததா என்றும் புரியாதது புரிந்ததா புரிவதெல்லாம் புரிந்ததா புரியாததெல்லாம் புரிந்ததா? எது எப்படியோ, இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினீங்கன்னா... போட்ட +ஐ -ஆக்கிடுவேன் சொல்லிட்டேன்.

said...

//ஐயா இது எல்லருக்கும் பொருந்தாது. மிருதங்க சக்ரவர்ததி பாலக்காடு மணிஐய்யர் டி கே பட்டம்மாளுக்கு கடைசிவரை வாசித்துக்கொண்டுதான் இருந்தார//

வாங்க டி.ஆர்.சி ஐயா. எல்லாரும் இப்படித்தான்னு சொல்லலையே. அது மட்டும் இல்லாம மணி ஐயர் இன்னும் எத்தனை பேருக்கு வாசிச்சு இருக்கார். ஏன் கேட்கறேன்னா பட்டமாளைப் பொருத்த வரை இசையைத் தாண்டிய உறவு முறை இருந்தது இல்லையா? :)

said...

//இதனை முழுமையாக ஒத்துக் கொள்ள முடியாது. ஒரு சில சம்பவங்கள் நடந்து இருக்கலாம். அதற்காக ஒட்டு மொத்தமாக குறை கூற முடியாது.//

இரவி, நீங்க ஒரு சில சம்பவங்கள் எனச் சொல்கிறீர்கள். ஆனா இங்க பெரும்பான்மை அப்படின்னு சொல்லறாங்க. அதான் வித்தியாசம்.

said...

//பெண்களுக்கு அவ்வளவுதான் மரியாதை. ஏன்னா நம்ம பண்பாட்டுல அவங்கள தெய்வமா வெச்சிப் பாராட்டுறோம்ல. அப்படி இருக்குறப்போ தெய்வத்துக்குப் பக்கவாத்தியம் வாசிக்கலாமா? அதுவும் தெய்வத்துக்குச் சரிசமமா உக்காந்து. அதத் தப்பாப் புரிஞ்சிக்கிட்டு நீங்கபாட்டுக்க...சாரி..கிருஷ்ணா பாட்டுக்க இப்பிடிச் சொல்லீட்டாரே.//

ஜிரா, தெய்வமே, எப்படி இப்படி?! :)))

அடடா உங்களை தெய்வமேன்னு சொன்னதுனால நீங்க ஒரு ஆம்பிள்ளையா என கேட்கவில்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

said...

//இருப்பினும் சிரமப்பட்டு இவ்வளவு பெரிய கட்டுரையை பொறுமையாக, அழகாக தமிழாக்கம் - அதுவும் படித்து, முழு ஈடுபாட்டுடன் - செய்தது உண்மையிலேயே பாராட்டத்தக்கது//

நன்றி சீனா.

said...

//அப்படி என்ன புரிந்ததோ?! புரிந்தது புரிந்ததா புரியாதது புரிந்ததா இனிமேல் புரியப்போவது புரிந்ததா என்றும் புரியாதது புரிந்ததா புரிவதெல்லாம் புரிந்ததா புரியாததெல்லாம் புரிந்ததா? எது எப்படியோ, இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினீங்கன்னா... போட்ட +ஐ -ஆக்கிடுவேன் சொல்லிட்டேன்.//

ஒண்ணும் சொல்லாம உள்ளேன் ஐயா போட்ட போது எல்லாம் புரிஞ்சது, ஆனா இவ்வளவு விளக்கமா எழுதின போது ஒண்ணுமே புரியலை.

புரியும் என்பார் புரியாது
புரியாதென்பார் புரிந்துவிடும்

உங்க விசு மாமா (அவரு உங்களுக்கு மாமா தானே இல்லை சித்தப்பாவா?) இந்த மாதிரி எல்லாம் பேசினா கண்ணீர் விட்டு அழுவாரு. ஆனா நீங்க நம்மளை அழ வெச்சுட்டீங்களே!!

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!!

said...

இ.கொத்தனார்!
இப்படியும் ஒரு பாகுபாடு உண்டா??
வசந்தகுமாரி அம்மாவுக்கு, பக்தவஸ்தலம் அண்ணா நெடு நாளா வாசித்தார். எம்.எஸ்.அம்மாவுக்கு -ஸ்ரீ ராம்குமார் பல வருடம் வாசித்தரே!
பம்பாய் ஜெயஸ்ரீக்கு -விட்டல் ராமமூர்த்தி,நித்யஸ்ரீ-அவர் தந்தையார்
இப்படி பலர் வாசித்ததைப் பார்த்துள்ளேன்.
நல்ல சரளமான தமிழ்,உங்கள் தமிழ்

said...

உதாரணங்கள் இல்லாமல், இன்னார் என நேரடியாகச் சொல்லாமல் எழுதியிருக்கும் இக்கட்டுரை பைசா கூட பெறாது.
அப்படி என்ன பயம் கட்டுரையாளருக்கு?

ஆதாரம் இல்லாமல் பொதுப்படையாகச் சொல்லும் இதில் உண்மை இல்லை!

எழுதியவர் திரு.கிருஷ்ணாவாக இருந்தாலும் சரி.

said...

//எனக்கு வேறு என்ன என்னவோ பொருள் தருகிறது என்று சொல்லலாம்னு நினைத்தால், தடித்த
எழுத்தில் கீழே இருப்பதை படித்ததும்... :-(//

பெண்ணீய வாடை தூக்கலாக அடிக்கும் இப்பின்னூட்டத்தைப் போட்ட அனானி அக்காவிற்கு!!

நல்லா அடிச்சு ஆட வந்தீங்க. கடைசி வரியில் ஒரு குண்டை வெச்சு ஏமாத்திட்டேன் போல!! ஒண்ணும் சொல்ல முடியாம வருத்தமா இருக்கீங்க போல//

அட பாவி, உடம்பு சரியில்லாமல், மெயில் மட்டும் பார்த்துக் கொண்டு இருப்பவளை, தனிமெயில் அனுப்பி படிபடின்னு உயிர வாங்கினது போதாதா? ஏதோ மருவாதைக்கு ரெண்டு வரி போட்டா, இதுல அனானி அக்கான்னு
எங்கப்பா குதிருக்குள் இல்லேன்னு போட்டா கொடுக்கிறே? இனி நோ பின்னுட்டம்.
இப்படிக்கு,
அதே அனானி அக்கா

said...

கொத்ஸ்! எப்பவுமே தத்து பித்துன்னு உள்ளரும் டி.எம். கிருஷ்ணாஅவர்களின் கருத்தை நான் ஒத்துக்க மாட்டேன்!

காரணம் தி ரா ச சார் சொன் னதுபோல டி கே பட்டம்மாளுக்கு வாசிக்க பலபேர் ரெடி இன்குலூடிங் மதுரை மணி அய்யர்( பேசிக்கலி அவர் மயிலாடுதுறை)

அது போல் அவர் பேத்தி நித்யஸ்ரீக்கு வாசிக்க காரைக்குடி மணி முதல் அணைவரும் ரெடி! அது எனக்கு தெரியும்!!

பழைய ஆட்களிள் மதுரை சோமுக்கு வாசிக்க மாட்டேன் மிருதங்கம் என்ன சொல்லிய திருக்கோகர்ணம் ரெங்கநாயகி அம்மாவையும் தெரியும் எனக்கு!

அது போல வீணை தனத்தம்மா கூட யார் யார் பக்க வாத்தியம் என முடிவு செய்யும் அதிகாரம் அவங்களுக்கு எத்தனை அளவு கொடிகட்டி பறந்ததுன்னு எனக்கு தெரியும்!

அவ்வளவு ஏன்? கே பி சுந்தராம்பாள் பத்தி தெரியுமா? பிச்சை எடுத்தாலும் எடுப்பேனே தவிர சன்னியாசியாக ஆனாலும் ஆவேனே தவிர மத்த ஆண் கூட நடிக்க மாட்டேன் என்னும் வைராகியம் பத்தி தெரியுமா கிருஷ்ணவுக்கு?

இன்னும் எவ்வளவோ சொல்லலாம்!

கிருஷ்ணா கடைசி வரை உளறி கிட்டே இருக்க வேண்டியதுதான்! மாப்பிள்ளை எவனாவது இரூந்தா பத்மஸ்ரீ வாங்கிட்ட்டு வாயையும் டேஷையும் மூடிக்கிட்டு சும்மா இருக்க சொல்லுங்க! ஹிண்டு ரொம்ப நாள் எழுத மாட்டான்!இவர் சொல்லும் புரட்டுகளை!!!

said...

வயலின் கன்யாகுமரி தான் வேணும் இல்லாட்டி எழுந்து போய்டுவேன்ன்னு என் கல்யாண ரிசப்ஷனில் சொன்ன கத்ரி கோபால்நாத்.....பின்ன நானே மாலை கழட்டிட்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு ஓடிய கொடுமை எல்லாம் நடந்திருக்கு இந்த உலகத்திலே!!!

said...

சங்கீதத்தில் ஆண் பெண் என்ற பேதமே தப்பான தாளம்,ஸ்ருதி சேராத ராகம்.இந்த யூஸ் அண் த்ரோ கலாச்சாரம் எல்லா இடத்திலும் "கருவேப்பிலை"யாகத் தழைத்து வளர்ந்திருக்கிறது.இல்லத்தில் பார்த்ததில்லயா? அலுவலகத்தில் பார்த்ததில்லையா ?ஏன், நமக்குள்ளேயே பார்த்ததில்லையா?பேசாமல் செவியை இசைக்கு மட்டும் தந்து விட்டுச் செல்வோம்...

said...

டி.எம்.கே விஷயம் தெரிந்தவர். திரைக்குப் பின் நடக்கும் நாடகங்களைப் பார்ப்பவர்; பங்கும் பெறுபவர். அவர் சொல்லுவது உண்மையாகத்தான் இருக்கும்.
ஆணுலகில் சில பல MCPக்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.