Wednesday, October 31, 2007

ஆடுது பார், கல்லாப் பெட்டி! க்விஸ் பாகம் - 3

மூணு நாள் கூத்து இன்னிக்கு முடியப்போகுது, அதனால கல்லாக் கணக்கு எல்லாம் காண்பிக்க வரான் போலன்னு நினைக்காதீங்க. அதுக்கு இன்னொரு பதிவு போட்டு பதிவுக் கயமைத்தனம் செய்வோமில்ல!

இன்னிக்கு மூணு தலைப்புகளில் கேள்வி கேட்கணும் இல்லையா. இன்றைக்கான தலைப்புகள் வணிகம், கணினி மற்றும் விளையாட்டு. விளையாட்டை ஆடுவோம். கல்லாவை கவனிப்பது வணிகம். பொட்டி தட்டுவதைப் பத்தி தனியா வேற சொல்லணுமா? எல்லாம் சேர்ந்தாத்தான் தலைப்பு. கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு இல்ல! சரி, நேரா கேள்விகளுக்குப் போகலாம்.

வணிகம்

1.நான் கிங்ஸ்டன் அபான் தேம்ஸ் (Kingston upon Thames) என்ற இடத்தில் புதைக்கப்பட்டேன். இன்று இந்த இடம் க்ளாரன்ஸ் தெரு லாயிட்ஸ் வங்கியில் கார்கள் நிறுத்துமிடமாக இருந்தாலும் அங்கு என்னைப் பற்றிய கல்வெட்டு ஒன்று இருக்கிறது. என்னை எனது எஜமானர் வரைந்த ஒரு படத்தினால் நான் உலகெங்கும் புகழ் பெற்றிருக்கிறேன். இத்தனைக்கும் அந்தப் படம் நான் இறந்து மூன்று வருடங்களுக்குப் பிந்தான் வரையப்பட்டது. நான் யார்?

2. 1865ஆம் ஆண்டு ஒரு மர கூழ் தயாரிக்கும் நிறுவனமாக (pulp mill) இது தொடங்கப்பட்டது. பின்னர் அது தொடங்கப்பட்ட ஊரின் பெயரை தன் பெயராக மாற்றிக் கொண்டு செயல் படத் தொடங்கியது. இன்று தன் துறையில் முதன்மையான நிறுவனமாகத் திகழுன் இதன் பெயர் என்ன?


3. ஜெர்மன் தொழிலதிபரான அலெக்ஸாண்டர் ஷாப்மேன் (Alexander Schopmann) தொடங்கியிருக்கும் இந்த விமான நிறுவனம் பல ஆண்டுகளாக மற்ற விமான நிறுவனங்கள் தடை செய்து இருக்கும் ஒன்றினைத் திரும்ப கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறது. அது எந்த வசதி?


4. போர்ட்லேண்ட் மாநில பல்கலைக்கழத்தின் மாணவர் கேரலின் டேவிட்சன் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்நிறுவனத்தின் லோகோவிற்காக அவருக்கு கிடைத்த பணம் 35 டாலர்கள். உலகப் புகழ் பெற்ற இந்த லோகோ எந்த நிறுவனத்துடையது?


5. வெள்ளைக் காலர் தொழிலாளிகள், நீலக் காலர் தொழிலாளிகள் பற்றி நமக்குத் தெரியும் இரும்புக் காலர் தொழிலாளிகள் யார்?

6. பார்பரா மில்லிசெண்ட் ராபர்ட்ஸ் என்பவர் யார்?


கணினி

1. டன் & பிராட்ஸ்ட்ரீட் மற்றும் சத்யம் கம்பியூட்டர்ஸ் நிறுவனமும் இணைந்து தொடங்கிய நிறுவனம் இது. ஆனால் இன்று சத்யம் கம்பியூட்டர் நிறுவனத்தை விட பெரிதாக வளர்ந்து விட்டது. எந்த நிறுவனம் இது?

2. உலகின் முதல் வெப்சர்வர் எங்கு நிறுவப்பட்டது?


3. யாஹூ நிறுவனத்தின் பெயரின் விரிவாக்கம் என்ன?


4. கூகிளாண்டவரிடம் வேண்டும் பொழுது உங்கள் பிரார்த்தனையில் அதிகம் எத்தனை வார்த்தைகள் இருக்கலாம்? சரி சரி. கூகிளில் தேடும் பொழுது, அதில் தேடப்படும் சொற்றொடரில் அதிகபட்சமாக எத்தனை வார்த்தைகள் இருக்கலாம்?


5. விண்டோஸ் 1.0 எப்பொழுது வெளியிடப்பட்டது?


6. 453 அடி நீளத்தில் இருக்கும், உலகின் இரண்டாம் பெரிய உல்லாசக் கப்பலின் சொந்தக்காரர் இந்த சிலிக்கன் பள்ளத்தாக்கு கோடீஸ்வரர். "Money is just a method of keeping score now" எனக் கூறிய இவர் யார்?


விளையாட்டு

1. இன்று எல்லாவிதமான பொருட்களின் விளம்பரத்திற்கும் யாராவது கிரிக்கெட் மட்டையைத் தூக்கிக் கொண்டு வருவதே வழக்கமாகிவிட்டது. ஆனால் இந்தியாவில் முதன்முறையாக எந்த பொருளுக்கு ஒரு கிரிக்கெட்டரால் விளம்பரம் செய்யப்பட்டது? அந்த கிரிக்கெட்டர் யார்?

2. 1989ஆம் ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இறுதியாட்டத்தின் சிறப்பு என்ன?

அ) பெக்கரும் ஸ்டெப்பி கிராப்பும் ஜெயித்ததால் ஆண் மற்றும் பெண் சாம்பியன்கள் ஜெர்மனி நாட்டவரானார்கள்
ஆ) ஆண்கள் இறுதிப் போட்டியில் தோற்ற எட்பெர்க் அதற்கு சுமார் ஒரு மாதத்திற்கு முந்தான் பிரெஞ்ச் ஓப்பன் இறுதிப் போட்டியிலும் தோற்றுப் போனார்
இ) எட்பெர்க் முதல் செட்டை ஆண்கள் போட்டியில் அடிக்கடி நிகழாத ஒரு ஸ்கோரான 6-0 என்ற ஸ்கோரில் தோற்றார்.

ஈ) இது பெக்கரின் கடைசி விம்பிள்டன் பட்டம்

உ) மேற்கூறிய அனைத்தும்


3. 1980களில் அமெரிக்காவில் க்ரேஸி ஜியார்ஜ் ஹெண்டர்சன் என்பவரால் பிரபலப்படுத்தப்பட்டது இது. ராப் வெல்லர் என்பவரால் சியாட்டிலில் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் சொல்லுவார்கள். கால்பந்தாட்டங்களில் 1986ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மிகப்பெரிய நிகழ்வு 2000ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்ஸில் நடந்தது. 2002ல் டேம்ப்ஸ் விக்ஸக் என்பவர் இதன் நிகழ்வுகளின் நகர்படங்களை ஆய்வு செய்து இது பெரும்பாலான சமயங்களில் வலப்புற சுற்றாக (Clockwise) வினாடிக்கு 12 மீட்டர் வேகத்தில் செல்கிறது என கண்டுபிடித்தார். இது என்பது எது?


4. நமக்கு சச்சின் டெண்டுல்கரைத் தெரியும். ஆனால் அவரது மாமனார் ஆனந்த் மெஹ்தா எந்த விளையாட்டில் தேசிய சேம்பியனாக இருந்தார்?


5. சுதீர் நாயக் இந்தியாவிற்காக மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர். 1974ஆம் ஆண்டு இவர் இந்திய அணியோடு இங்கிலாந்து நாட்டிற்கு சென்ற பொழுது இவர் பெயர் கிரிக்கெட் இல்லாத விஷயம் ஒன்றிற்காக செய்தித்தாளில் அடிபட்டது. எதற்காக?


6. 2002ஆம் ஆண்டு கால்பந்து உலகப் போட்டிகளில் ஜெர்மனியின் ஆலிவர் கானை எதிர்த்து கோல் போட்டவர்கள் இரண்டு பேர் மட்டுமே. ஒருவர் ரொனால்டோ. மற்றொருவர் யார்?


அவ்வளவுதாங்க. இதோட இந்த புதிரின் கேள்விகள் முடிந்து விட்டன. வெள்ளிக்கிழமை பதில்கள் வரும் எனச் சொல்லி இருந்தேன். சில நண்பர்கள் வாரயிறுதியில்தான் பதிலளிக்க முடியும் எனச் சொன்னதால் அவர்களுக்காக இந்த வாரயிறுதி வரை பதிலளிக்கும் நேரத்தை நீட்டிக்கிறேன். இந்திய நேரத்தின்படி திங்கள் காலை விடைகள் வெளியிடப்படும்.

தற்போதைய மதிப்பெண் நிலவரம்.

230 comments:

said...

இன்னிக்கு படம் எதுவும் போடலை! :))

said...

வணிகம்

1.MALE fox terrier. How do I know it is a male dog.. "HIS" Master's Voice
2. Nokia - Nokianvirta river.
3. Smoking
4. Nike
5. Slaves - but I think you are expecting something more.
6. Barbie Doll

said...

கணினி
1. Cognizant
2. NeXT computer used by Tim Berners-Lee in 1990. The World Wide Web was created in 1989 by Sir Tim Berners-Lee and Robert Cailliau, working at CERN in Geneva, Switzerland.
3. Yet Another Hierarchical Officious Oracle
4. 32 words
5. November 1985
6. Lawrence Joseph Ellison

said...

//இன்று எல்லாவிதமான பொருட்களின் விளம்பரத்திற்கும் //
Except Condoms and Sanitary napkins :) :) :)

Oops.... Even they promote condoms (in HIV Ad) but not the brand

விளையாட்டு

1.
2. All, but becker was runner up later also. I am not able to decipher பட்டம் - whether that is only winner, or includes runner also
3. "Wave"
4. Bridge
5. Marks and Spencer affair
6. Robbie Keane

said...

1) Nipper
2) Nokia
3) Onboad Cellphone Usage.
4) Nike
5)iron collar workers are nothing but Robots
6) Barbie doll ...
COMPUTER
yet another hierarchical official oracle

said...

கணிணி
2) ஜெனிவா, Switzerland

விளையாட்டு

2)மேற்கூறிய அனைத்தும்

said...

கூகுளாண்டவாய நமஹ:

எப்படிய்யா பிடிக்கறீர் கேள்விகள் எல்லாம்?

வணிகம்

1. Nipper - HMV ட்ரேட்மார்க்கில வரும் நாய்.
2. Nokia
3. விமானத்தில் புகைபிடிக்கும் வசதி
4. Nike
5. அடிமைகள்
6. barbie பொம்மையின் முழுப் பெயர்தான் அது.

கணிணி
1. Cognizant
2. CERN
3. விரிவாக்கம் கிடையாது
4. 32 (?)
5. Nov 1985
6. Larry Ellison

விளையாட்டு
1.
2. ஊ

தூக்கம் கண்ணை சுத்துது. அப்பாலீக்க வர்றேன்

said...

வணிகம்

1. "HMV" dog

2. Nokia

3. His proposed airline called Smoker's International Airline will permit onboard smoking!

4. Nike Inc.

5. Prisoners - forced labors in prison

Iron-collar = The metal ring was placed around the victim's neck and the screw tightened until the metal teeth were placed below the chin. Then the victim was hoisted into the air, usually with the toes just touching the floor, the teeth of the necklace biting into the chin and neck.

6. Barbie doll

said...

இன்னைக்கு நான் தான் முதல் போணியா? எனக்கு பிடிக்காத ஒரே ஆட்டம் கிரிக்கெட். அதைப் பத்தி மூணு கேள்வி. சரி கூகிளாண்டவரை வேண்டி சொல்லுறேன். சரியாப் பாருங்க.

நிப்பர் நாய்
நோகியா
smintair ( smokers international airline சென்னைக்கு விடுவாய்ங்களான்னு தெரியல)
nike swoosh
இரும்பு மனிதர்கள் ( robots )
barbie doll

CTS ( cognizant technology solutions )
geneva
Yet Another Hierarchical Officious Oracle
32 ( இப்ப கூட்டிருக்காங்க )
nov 1985
lawrence joseph ellison ( oracle cheif executive )

nike? ( தொல்லைகாட்சியும் பாக்குறதில்ல, கிரிக்கெட்டும் பாக்குறதில்ல - இதென்ன சோதனை )
அ மட்டுமே சரி
(
ஆ - பிரெஞ்ச்சு ஓபனில் அரை இறுதியிலேயே பெக்கர் எட்பர்கிடம் தோற்றார்
இ - பெக்கர் நேர் செட்களில் வென்றார்.
ஈ - பெக்கர் அதற்கு பிறகு பல ஆண்டுகள் ஆடியுள்ளார்
)
cheerleader
bridge ( நன்றி: கூகிளாண்டவர் )
கடைத்திருட்டு ( நன்றி: கூகிளாண்டவர் )
ronaldo rivaldo

said...

கணிணி
3) Yet Another Hierarchical Officious Oracle

said...

வ்ளையாட்டு
4) Bridge

said...

ஆஜர்.

வழக்கம்போல் கவனிச்சுக்கிட்டு இருக்கேன் ( யாராவது காப்பி அடிக்கிறாங்களான்னு)

said...

1. Cognizant Tech Sol

2. CERN - Computer Emergency Response Network

3. Yet Another Hierarchical Officious Oracle

6. Larry Ellison

said...

கணினி


1. DBSS (Dun & Bradstreet Satyam Software) - now called Cognizant Technologies

2. Info.cern.ch was the address of the world's first-ever web site and web server, running on a NeXT computer at CERN (European Organization for Nuclear Research).

3. Yahoo - Yet Another Hierarchical Officious Oracle

4. 32 words

5. November 20, 1985

6. Lawrence Joseph Ellison ( Larry Ellision )

said...

வந்துட்டோம்ல :)

said...

Computers

1,
2, CERN (European Organization for Nuclear Research)

3, Yahoo - Yet Another Hierarchical Officious Oracle
4,
5, Nov 20, 1985

6, Lawrence Joseph Ellison

said...

Computers

1, CTS

said...

வணிகம்

1. HMV நாய் - நிப்பர்

2. Nokia

3. புகைபிடித்தல்

4. Nike

5. ஓய்வு பெற்றவர்கள் அல்லது அந்த வயதை ஒத்தவர்கள் (சும்மா கெஸ் தான் :()

6. barbie பொம்மை

கணிணி

1. CTS (cognizant technology solutions)

2.European Organization for Nuclear Research

3. Yet Another Hierarchical Officious Oracle

4. 32

5. நவம்பர் 20 1985

6. Larry Ellison of Oracle

விளையாட்டு

1. கபில் தேவ் - பால்மோலிவ் ஷேவிங் க்ரீம்.

2. மேற்கூறிய அனைத்தும்

3. audience wave

4. Bridge

5. mark & spencers-ல் இருந்து சாக்ஸ் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

6. Robert Keane (Ireland)

------------------------

தல், விஞ்ஞானம் 5 பதில் சொல்லியாச்சு.. நீங்க மார்க் போடறேன்னு சொல்லி இன்னும் போடல..

பிம்பெட்கா சரியா தவறான்னு இன்னும் சொல்லயே.. இந்தியாவில் மனிதன் வாழ்ந்த முதல் இடம்..

-------------------------

வரலாறு 1: பிரதமர் - இந்திரா காந்தி??
(இது சரின்னா அந்த சமயத்தில் நடிக்க வந்தவர்கள் லிஸ்ட் தேடனும் :( )

said...

Business

1, Elizabeth

2, Nokia

3, Smoking

4, Nike

5, Slaves

said...

Sports,

2, All the above

4, Bridge

6, Robbie Keane , Ireland

said...

விளையாட்டு
6. 2002ஆம் ஆண்டு கால்பந்து உலகப் போட்டிகளில் ஜெர்மனியின் ஆலிவர் கானை எதிர்த்து கோல் போட்டவர்கள் இரண்டு பேர் மட்டுமே. ஒருவர் ரொனால்டோ. மற்றொருவர் யார்?

Robbie keane அயர்லாந்து அணிக்காக.

2. மேற்கூறிய அனைத்தும்

4. ஆனந்த் மேதா - Bridge

5. SHIPLIFTING CHARGES ARE MADE AGAINST சுதிர்நாயக்

3. ரசிகர்கள் போட்டியின் போது அலைவடிவத்தை எழுந்து உட்கார்ந்து உருவாக்குவது

said...

கணினி
1. DBSS ==== > COGNIZANT

3. YAHOO == > Yet Another Hierarchical Officious Oracle

4. 32 வார்த்தைகள்

5. 1985

said...

Commerce
1) Nipper
2) Nokia
3) Smoker's International Airline will permit onboard smoking!
4) nike
5) mine worker
6) Barnie

Computer
1) Cognizant Technology Solutions (Dun & Bradstreet Satyam Software )
2) in Geneva, Switzerland.
3) rude, unsophisticated, uncouth
4) 10 words
5) November 1985
6) Larry Ellison

Sports
1) Farokh Engineer
2) All of the above
3) Audience wave
4) Bridge player
5) Stealing pair of socks from marks and spencer
6) Robbie Keane

-Arasu

said...

கொத்ஸூ,
நேத்திய தப்புனு சொன்ன ரெண்டுக்குமே பதில் போட்டேனே.. கணக்குல எடுக்கலியா..

அந்த விஞ்ஞானம் 5 வேணா அப்புறம் பாத்துக்கலாம். புவியவியல் என்ன பிரச்சனை? :(

-------------

இன்னியதுக்கு.
வணிகம்
1. Nipper, His Masters Voice Dog
2. Nokia
3. Smoking - Smintair
4. Nike's Swoosh
5. அடிமைகள்
6. Barbie

கணினி
1. Satyam Software (P) Ltd
2. CERN @ Meyrin, Switzerland
3. Yahoo! — The word Yahoo was invented by Jonathan Swift and used in his book Gulliver's Travels. It represents a person who is repulsive in appearance and barely human. Yahoo! founders David Filo and Jerry Yang jokingly considered themselves yahoos. It's also an interjection sometimes associated with United States Southerners' and Westerners' expression of joy, as alluded to in Yahoo.com commercials that end with someone singing the word "yahoo". It is also sometime jokingly referred to by its backronym, Yet Another Hierarchical Officious Oracle.
4. 32
5. November 1985
6. Oracle's Larry Ellison

sport
1.
2. மேற்கூறிய அனைத்தும்
3. the WAVE
4. Bridge
5. shoplifting at harrods
6. ரெண்டாவதும் ரோனால்டோதான் (இதென்ன வாழப்பழ ஜோக்காட்டம் கேள்வி? :))

said...

வணிகம்

1) ......

2) நோக்கியா

3) தம்மடிக்கிறது... :))

4) Nike

5) சுரங்க தொழிலாளிகள்

6) பர்பி பொம்மையோட முழு பேரு

கணினி

1) Cognizant

2) Europe

3) Yet another highly orientated oracle

4)64 characters

5) 1985

6) ஆரக்கிள் ஓனரு லாரன்ஸ் எலிசன்...

விளையாட்டு

1) பூஸ்ட், கவாஸ்கர்

2) அ

3) polyurethane coated ball

4) Bridge

5) சாக்ஸ்'ஐ திருடினதுனாலே?? :))

6) Robbie Keane

said...

வணிகம்,

1)HMV மாடல் நாய்.. :)

said...

வணிகம்

1. Nippie. HMV விளம்பரத்தில வர்ற நாய்.
2. Nokia
3. Smoking
4. Nike
5. Slaves
6. Barbie doll-ல் வரும் பெண்ணின் முழு பெயர்

கணிணி
1. Cognizant Solutions
2. CERN
3. விரிவாக்கம் எதுவும் கிடையாது என்றுதான் நினைத்திருந்தேன். மக்களாக எதோ போட்டுக்கிறாங்க என்று நினைத்திருநதேன். ஆனா அபிஷியலாவே இருக்காமே. Yet Another Hierarchical Officious Oracle.
4. 32 (?)
5. November 1985
6. Larry Ellison

விளையாட்டு

1. பரூக் இஞ்சினியர்
2. உ. இந்த மேட்ச்சை டிவியில் பாத்த ஞாபகம் இருக்கிறது. ஆனால் ஸ்கோரை விக்கிபீடியாவில் பார்த்துதான் உறுதி செய்ய முடிந்தது.
3. Mexican Wave / Audience Wave
4. Bridge
5. shop lifting @ Marks & Spencers
6. Ronaldo :-)

said...

எல்லாரும் மன்னிச்சுக்கோங்க. ரெண்டு நாளா தூங்காதது, நேத்தி ரொம்ப சீக்கிரம் தூங்கிட்டேன். இப்போ ஆட்டத்தை ஆரம்பிக்கலாம்.

said...

ப்ரூனோ.

வணிகம் 1,2,3,4,6 - சரி
5 - தவறுங்க.

said...

ப்ரூனோ,

கணினி எல்லாம் சரி. ரெண்டாவது விடை கொஞ்சம் குழப்பிட்டீங்க. ஆனா நான் கேட்ட கேள்விக்கு பதில் இருந்ததால் ஓக்கே.

said...

விளையாட்டு

1. Kapildev - Boost

2. அ) பெக்கரும் ஸ்டெப்பி கிராப்பும் ஜெயித்ததால் ஆண் மற்றும் பெண் சாம்பியன்கள் ஜெர்மனி நாட்டவரானார்கள்

3. Polyurethane coated ball - It was first used in soccer balls at the World Cup in 1986.

4. Bridge

5. On the 1974 tour to England, Indian opener, Sudhir Naik was accused of stealing a pair of socks from Marks & Spencers.

6. Irish footballer - Robbie Keane

said...

ப்ரூனோ,

பட்டம் வெற்றி பெற்றவருக்கு மட்டும்தான்.

விளையாட்டு 2,3,4,5,6 - எல்லாம் சரி.

said...

வினோ.

வணிகம் 1,2,4,5,6 -சரி
3 -தவறு.
கணினி 3 - சரி. (கொஞ்சம் நம்பர் போடுங்க தல)

said...

ராதா

கணினி 2
விளையாட்டு 2

ரெண்டுமே சரி

said...

ஸ்ரீதர்

வணிகம் - 5 தவிர மீதி எல்லாம் சரி
கணினி - 3 தவிர எல்லாம் சரி (விரிவாக்கம் இருக்கு)
கணினி 2 -ஊர் பேர் சொல்லுவீங்கன்னு நினைச்சேன். பரவாயில்லை.

விளையாட்டு 2- ஊ (அப்படி ஒரு சாய்ஸே இல்லையே தல!) :))

said...

இப்போதான் மெயில் பார்த்தேன்

எப்பவும் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரும் பெனாத்தலார் இன்னிக்கு பர்ஸ்ட் வந்த பாஸ்டஸ்டா ஆகிட்டாரு!!

தல, எல்லா கேள்விங்களுக்கும் சரியான பதில்தான்!! முதலில் ஆல் கரெக்ட் வாங்குனது நீர்தான்.

நமக்குள்ள கொடுக்கல் வாங்கல் என்ன!! (அப்பாடா ஒரு பரிசு மிச்சம்!) :))

said...

G3,

வணிகம் 5 தவிர மீதி எல்லாம் சரி

said...

//இலவசக்கொத்தனார் said...
ஸ்ரீதர்

கணினி 2 -ஊர் பேர் சொல்லுவீங்கன்னு நினைச்சேன். பரவாயில்லை.

//

ஆஹா.. ஊர் பேர் வேற சொல்லனுமா? சரி.. நான் முன்னாடி சொன்ன பதில்ல சொல்லலியே :(

CERN - situated just northwest of Geneva on the border between France and Switzerland.

said...

புயலாரே,

விடுமுறை ஆரம்பமா? நல்லா எஞ்சாய் பண்ணுங்க. அதுக்கு முன்னாடி இங்க விட்ட மேட்டரை சரியா கரெக்ட் பண்ணிப் போடுங்க.

வணிகம் - எல்லாம் சரி
கணினி - எல்லாம் சரி
விளையாட்டு - 4,5 மட்டும்தான் சரி

சினிமா பிடிக்காது, கிரிக்கெட் பிடிக்காது! தமிழனாய்யா நீரு?!! ;-)

said...

வணிகம்:
1. HMV மாடலுக்கான நாய், நிப்பெர்
2. நோக்கியா
3. புகைபிடிக்கும் வசதி
4. நைக்கி - Nike
5. ரோபாட் - Robots
6. பார்பி பொம்மையின் முழு பெயர்

said...

ராதா.

கணினி 3, விளையாட்டு 4 - சரி

said...

ரீச்சர்,

சில பசங்க ரொம்ப எதிர்த்துப் பேசறாங்க. அவங்களை எல்லாம் என்ன பண்ண?
(தன்வினை தன்னைச் சுடும் அப்படின்னு முணுமுணுக்கறீங்களே, அது ஏன்?):))

said...

அனானி, யாரு பெத்த பிள்ளையோ, ஒரு பெயரைப் போடக் கூடாதாப்பா?

கணினி 1236 - சரி

said...

G3,

கணினி ஆறும் சரிதான்

said...

வாங்க புலி.

என்ன விடை எதுவும் காணும்?

said...

பரிசு தராம ஏமாத்தத்தானா கொத்ஸ் இந்த பாசமழை?

என்னை ஏமாத்த நினைச்சீங்கன்னா என் கோடானுகோடி ரசிகர்கள் கொந்தளிச்சு எழுவாங்க, அதைத் தாங்கற சக்தி உமக்கிருக்கா?

முதல் பரிசு மட்டுமல்ல, சீக்கிரப்பறவை பரிசுகளும் வேணும்..

said...

தல

என்ன நம்ம பதில் எதுவும் வரலயா?? நமக்கு ஒரு சேதியும் காணோமே?? :((((

said...

கணினி:
1. காக்னிசன்ட் - CTS
2. Geneva, Switzerland
3. Yet Another Hierarchical Officious Oracle
4. 32
5. November, 1985
6. Lawrence Ellison

said...

புலி

கணினி 2,3,5,6 - சரி

said...

புலி
கணினி 1 சரி

said...

சிங்கம்லே,

வணிகம் - 5 தவிர மற்றவை சரி
கணினி - எல்லாம் சரி (சரியான பொட்டி தட்டும் கூட்டமப்பா!)
விளையாட்டு - 1 தவிர அனைத்தும் சரி.

விஞ்ஞானம் 5, புவியியல் 6 - சரிதான் மதிப்பெண் தரலையா? விட்டுப் போச்சு. இப்போ தரேன்.

வரலாறு 1 உம்ம கெஸ் இது வரை சரிதான்.

said...

புலி
வணிகம் 2,3,4 - சரி
விளையாட்டு 2,4,6 - சரி

said...

வினையூக்கி

சுத்தி சுத்தி அடிச்சு நம்ம தல சுத்துது போங்க
விளையாட்டு 6, 2,4,5,3 - சரி (உங்க ஆர்டரிலேயே)

said...

வினையூக்கி

கணினி 1,3,4,5 - சரி

said...

சேதுக்கா,

வாழ்க்கையில் கூட்டிக் கழிச்சு பாரு கணக்கு சரியா வரும் அப்படின்னு தலைவர் படத்திலேயே சொல்லி இருக்காங்க. இதெல்லாமும் அந்த முறையில் கணக்குத்தாங்க!! :))

said...

அரசு,

வணிகம் - 1,2,3,4 சரி
கணினி - 1, 2, 5, 6 சரி
விளையாட்டு எல்லாம் சரி. ஆனா முதல் கேள்விக்கு அரை மதிப்பெண்தான். அந்த பொருள் என்னான்னும் கேட்டு இருக்கேன் பாருங்க.

said...

கணினி, வணிகம் ஏதாவது தேறினா சொல்லுங்க, விளையாட்டுக்கு போறேன்.

said...

ராம்ஸு

அது ரெண்டும் ஓக்கேதான். மார்க் குடுக்க விட்டுப் போச்சு. இப்போ சரி பண்ணிட்டேன்.

வணிகம் - 5 மட்டும் தப்பு
கணினி - எல்லாம் சரி. மருத்துவர் அப்படின்னு வெளியில் சொல்லிக்கிட்டாலும் இதுதானே உம்ம துறை. இதில் தப்பு பண்ணுவீரா என்ன? :))

விளையாட்டு
2,3,4 - சரி
5- கடை பேர் தப்பு. ஆனாலும் மார்க் தரேன்.
6- யோவ் ரெண்டு பேர் கோல் போட்டாங்கய்யா.

said...

ராயல்
வணிகம் - 5 தவிர மீதி எல்லாம் சரி.
கணினி - 2 ஏன் உலகத்தில் அப்படின்னு சொல்லேன். சரியா இடத்தை சொல்லுமய்யா.
கணினி 4 தெரிஞ்சுதான் சொல்லுதையா?
1,3,5,6 - சரி

விளையாட்டு 4,5,6 - சரி

said...

கணினி
2. உலகின் முதல் வெப்சர்வர் எங்கு நிறுவப்பட்டது?

CERN ஜெனிவா,

said...

ஸ்ரீதர்
வணிகம் 5 - இன்னும் தப்பு
கணினி 3 - இப்போ சரி
விளையாட்டு 1 - எந்த பொருள்? இல்லை அரை மார்க்தான்.
2,3,4,5 - சரி
6 - தவறு

said...

G3
விளையாட்டு 4,5,6 - சரி

said...

மஞ்சுளா
வணிகம் 6 - சரி

said...

மஞ்சுளா
கணினி 6 ம் சரி, இன்னிக்கு புல் பார்மில் இருக்கீங்க போல! :))

said...

வினையூக்கி

கணினி 2 - சரி

said...

விளையாட்டு

2. உ) மேற்கூறிய அனைத்தும்

said...

//தல

என்ன நம்ம பதில் எதுவும் வரலயா?? நமக்கு ஒரு சேதியும் காணோமே?? :((((//

சிங்கம்லே - இது வரை வந்ததுக்கு பதில் சொல்லியாச்சு, மார்க்கும் போட்டாச்சு. ஆனா இன்னிக்கு கொஞ்சம் ஸ்லோ.

வரலைன்னா சொல்லுங்க.

said...

விளையாட்டு

1. Farooque Engineer for BrylCream
6. Robbie Keane of Ireland

said...

//கணினி, வணிகம் ஏதாவது தேறினா சொல்லுங்க, விளையாட்டுக்கு போறேன்.//

மஞ்சுளா, ரெண்டுத்திலும் முழு மதிப்பெண்கள் வாங்கிட்டு இப்படி ஒரு கேள்வியா? இதுக்குப் பேர்தான் தன்னடக்கமா?

இன்னிக்கு இருக்கிற பார்மில் விட்ட எல்லா கேள்விக்கும் தேடி பதிலைப் போடுங்க. :)

said...

ஸ்ரீதர்

இப்போ விளையாட்டு 1,6 சரிதான்.

said...

ஹலோ இலவசம் என்ன இப்படி போட்டு நொம்பழப்பு பண்றீரு.(ஒண்ணும் தெரியலைங்கறதைதான் இப்படி டீசெண்டா சொல்றோம்).

said...

//ஹலோ இலவசம் என்ன இப்படி போட்டு நொம்பழப்பு பண்றீரு.(ஒண்ணும் தெரியலைங்கறதைதான் இப்படி டீசெண்டா சொல்றோம்).//

ஆடுமாடு, கூகிளாண்டவருக்குப் படையல் வெச்சு குறி கேளுங்க. எல்லாம் நடக்கும். :))

said...

1 The Nipper Dog of HMV
2 Nokia
3 In flight smoking
4 Nike logo
5 Mine workers
6 Daughter of Ruth Handler who started

the Barbie Dolls

1 Cognizant
2 Info.cern.ch CERN Geneva
3 Yet Another Hierarchical Officious

Oracle
4 32 words
5 1985
6 Larry Ellison - Oracle CEO


1 Kapil Dev
2 உ) மேற்கூறிய அனைத்தும்
3 Audience wave
4 Bridge
5 accused of stealing socks from Marks

& Spencers
6 Ronaldo, again

said...

//பரிசு தராம ஏமாத்தத்தானா கொத்ஸ் இந்த பாசமழை?//

பெனாத்தல் - தரேன்னு சொல்லித் தரலைன்னாதான் ஏமாத்தறதுன்னு நினைக்கிறேன்.

//என்னை ஏமாத்த நினைச்சீங்கன்னா என் கோடானுகோடி ரசிகர்கள் கொந்தளிச்சு எழுவாங்க, அதைத் தாங்கற சக்தி உமக்கிருக்கா?//

இதைப் பத்தி நாம பப்ளிக்கா பேசணுமா? ஒருத்தர் அமெரிக்காவிலும் இன்னும் ஒருத்தர் ரஷ்யாவிலுமாக கோடிக்கு ஒருத்தர் இருந்தா அதுக்குப் பேரு கோடானுகோடியா?

//முதல் பரிசு மட்டுமல்ல, சீக்கிரப்பறவை பரிசுகளும் வேணும்..//

முதல் இரண்டு ரவுண்டுக்கு நீர் காமிச்ச வேகத்துக்கு ஆமை விருதுதான் தரணும்.அதுக்கு அடுத்த முறை வெளியில் சென்று சாப்பிடும் பொழுது என் பெயரைச் சொல்லி ரெண்டு ஆமவடை சாப்பிடுங்க!

வந்துட்டாங்கப்பா!!

said...

வணிகம்

5. Robots

said...

வாங்க ரவி

வணிகம் 1,2,3,4 - சரி
5- தவறு
6- நீங்க சொன்னவங்க இன்ஸ்பிரேஷன். விடை உங்க பதிலிலேயே இருக்கு.

கணினி - எல்லாம் சரி

விளையாட்டு முதலும் கடைசியும் தப்பு.

said...

ஸ்ரீதர்
வணிகம் 5 - சரி.

எல்லா கேள்விக்கு விடை சொல்லிட்டீங்க.

வாழ்த்துக்கள்.

என் பெயரைச் சொல்லி உங்க முதுகில் நீங்களே தட்டிக்குங்க.

said...

விளையாட்டு

2. உ) மேற்கூறிய அனைத்தும்

இதுவாவது கரெக்டாங்க?

said...

G3,

விளையாட்டு 2- சரி

said...

வணிகம்
1. நிப்பர் - நாய் , RCA Records மாடல்
2. நோக்கியா
3. புகைபிடித்தல்
4 NIKE
5 ஓய்வு பெற்ற பின்னும் பணியாற்றுபவர்கள்
6 பார்பி பொம்மை

said...

கணினி
6. லாரி எல்லிசன்

said...

வினையூக்கி

வணிகம் 5 தவிர மற்றவை சரி
கணினி 6 - சரி

said...

கணினி,

2) ஜெனிவா?

4) 32 words

said...

விளையாட்டு

3. Mexican Wave (Audience Wave)

said...

வணிகம்
5. ரோபோக்கள்
இரும்புக்கு iron என்று தேடிக்கொண்டிருந்தேன். steel என்றும் சொல்லுவார்களே திடிரென தோன்றியது. இது சரியாகத்தான் இருக்கும் என்று நினைக்கின்றேன்

said...

கணினி 2,4 சரிதான் ராயல்

said...

G3
விளையாட்டு 3 - சரி

said...

வினையூக்கி
வணிகம் 5- இப்போ சரிதான்.

நல்ல கேள்வி இல்லையா?! :))

said...

vilayattu 1. Sunil gavaskar??

Varalaru 1. Amitabh / sunil dutt (appadinnu sonnanga.. sariya??)

said...

சிங்கமே,

வரலாறு 1 - அப்படித்தான் சொல்லிக்கிறாங்க. சரிதான்! :))

விளையாட்டு 1 - இல்லைங்க.

said...

iron collar workers are the slave workers who run away, and the masters put iron collars on them to prevent them from running away..

ithellam 1800s la nadanthathaam.. ithu thaan answerna.. matha blog-lam poi padippen :D

said...

சிங்கம்,

மத்த பிளக்குக்கெல்லாம் போக விட மாட்டோமில்ல.

வணிகம் 5 - ஊஹூம்

said...

vilayattu 1 : kapil dev-m thappa??

gavaskarukkum kapilukkum munnadi ad irunthutha?? ada kadavule.. neenga romba periyavar polave :D :D

said...

தமிழ்
3. பேய்ச்சி என அறியப்படுவர் பூதனை என்ற அரக்கி. கம்சனால் குழந்தை கண்ணனைக் கொல்ல ஏவப்பட்டவள்.

மதிப்பெண் கொடுங்க லேட் ஆனாலும் பிளீஸ்

(இதுக்கு எப்படி பதில் கண்டுபிடிச்சேன்னு பாஸ்டன் பாலாவுக்குத் தெரியும்)

said...

விளையாட்டு
1. சுனில் கவாஸ்கர், brylcreem?
2. உ
3. The Wave, a defence cheer
4. Bridge
5. He was accused of stealing a pair of socks from Marks & Spencers
6. மற்றவரும் ரொனால்டோவே

said...

சிங்கமே

விளையாட்டு 1 - இதுவும் தப்புதான்.

விளம்பரம் இருந்ததுன்னு சொன்னேனே தவிர நான் பார்த்திருக்கேன்னா சொன்னேன்? :)

said...

மஞ்சுளா,

விளையாட்டு

1 - பொருள் சரி, ஆள் தப்பு அரை மார்க் காலி.
2,3,4,5 - சரி
6 - இல்லைங்க. வேற ஆள் இருக்காங்க.

said...

விளையாட்டு 5

On the 1974 tour to England, this Indian opener was accused of stealing a pair of socks from Marks & Spencers.

http://cricketquiz.blogspot.com/2007/02/another-mail-from-kuala-lumpur.html

said...

பாலா
விளையாட்டு 5 - சரிதான்

said...

விளையாட்டு
1. Denis Compton?

said...

vilayattu 1. Tiger Pataudi (Jr). (enga thatha avar ad pathirukkaaram).. avar wills cigerrette and dress ad-la varuvaram..

said...

iron collar : iron factories/ores/mines-la work panravangala?? (romba kevalama solrennu theriyuthu.. irunthaalum.. hi hi hi

said...

1. பூஸ்ட், கபில்தேவ்?
2. அ மற்றும் ஈ சரி. (ராத்திரியில சரியா படிக்காம பட்டத்த ஆட்டம்னு படிச்சிட்டேன். )
3. audience wave. ( மறுபடியும் கேள்விய சரியா படிக்கல. அவரு யாருன்னு கேட்டதா நினைச்சிட்டேன்.)
6. keane ( ireland )

said...

விளையாட்டு
1. பரூக் எஞ்சினியர்
ப்ரில்கிரீம்

said...

மஞ்சுளா

விளையாட்டு 1 - அவரு இந்தியனா? :)

said...

1. Farokh Maneksha ?

இதுக்கும் மேல தாங்காது. :(

said...

சிங்கம்

அவரும் இல்லை.!!

said...

சிங்கம்

உமக்குத்தான் இரும்புக் காலர் போடணும்!! :)) அதுவும் இல்லை

said...

புயலாரே

விளையாட்டு 1, 2 இன்னும் சரி இல்லை

3,6 சரி

said...

வினையூக்கி

விளையாட்டு 1 சரி. :))

said...

மஞ்சுளா

அவரு கிரிக்கெட் வீரரா? :))

said...

அப்பாடா 54/54 100% ... ஒரு மியுசிக் போட்டுக்கிறேன்...ஹே டண்டனக்க டனக்கு னக்க...

என்ன பரிசு ??

said...

வினையூக்கி

வாழ்த்துக்கள்

பெனாத்தலார், ஸ்ரீதர் வெங்கட், நீங்க - இது வரை முடித்த மூன்று பேர் நீங்கதான்.

பரிசு - அடுத்த முறை எல்லாரையும் நீங்க நிக்க வெச்சு கேள்வி கேட்கலாம். அதாங்க க்விஸ் மாஸ்டரா ஆகலாம். என்ன சொல்லறீங்க? :))

said...

//
சினிமா பிடிக்காது, கிரிக்கெட் பிடிக்காது! தமிழனாய்யா நீரு?!! ;-)
//

என்னவே பொசுக்குன்னு இப்படி கேட்டுபுட்டீரு? நான் தமிழந்தான்வே. சந்தேகம் இருந்தால் என்னை சோதித்துப் பாருங்களேன் ( உங்களுக்கு திறமை இருக்குன்னு எனக்குத் தெரியும் ).

தமிழ்நாட்டுல பூரா பயலுமா சினிமாவயும் கிரிக்கெட்டையும் பாத்துகிட்டு திரியுதான்?
என்னடா இது தமிழனுக்கு வந்த சோதனை.

said...

நன்றி... நன்றி.. எனக்கெல்லாம் பதில் சொல்லத்தான் தெரியும். (கூகிள் இருக்கையில் என்ன கவலை, ஆண்டவனே கைவிட்டாலும் கூகிள் கைவிடாது, ) உங்க அளவிற்கு நேர்த்தியான கேள்விகள் கேட்க இயலுமா என்று தெரியாது. இருந்தாலும் முயற்சிக்கலாம் சார்.

said...

மன்னாப்பு மன்னாப்பு
2. உ - அனைத்துமே சரி
முதல் கேள்வி தேடிப் பாக்கிறேன்

said...

துண்டு போட்டு உக்காந்துட்டோம்ல :)

said...

//மஞ்சுளா

அவரு கிரிக்கெட் வீரரா? :))
//

இல்லியா பின்ன?

சரி, கிரிக்இன்போல தேடி பாக்கறேன்.

said...

Farokh Maneksha Engineer தாங்க first BrylCreem model. இல்லையா?

said...

வணிகம்
1. எச்.எம்.வி. நிறுவனப் படத்திலுள்ள நாய்க்குட்டி Nipper
2. நோக்கியா (கூகுளில் நோக்கித்தான்)
3. விமானத்தில் புகைபிடிப்பது
4. நைக்கி (ஸ்வூஷ் லோகோ)
5. மைனிங் தொழிலாளிகள்
6. பார்பி பொம்மை

கணினி
1. காக்னிஸன்ட் டெக்னாலஜி ஸொலூஷன்ஸ் (CTS)
2. ஸ்டான்ஃபர்ட் பல்கலைக் கழகம், கலிபோர்னியா
3. Yet Another Hierarchical Officious Oracle
4. 32
5. 1985
6. லாரி எல்லிசன்

said...

மஞ்சுளா,

நீங்க விளையாட்டு 1 - சொன்ன ஆள் சரிதான். முதல் பெயர் நடுப்பெயர் சொல்லிட்டீங்க கடைசிப் பெயரை விட்டுட்டீங்க. நமக்கு நடுப்பெயர் தெரியாது. அதான் கன்பியூஷன்.

இப்போ தேடிப்பார்த்துட்டேன். நீங்க ஓக்கேதான்!!

said...

//என்னவே பொசுக்குன்னு இப்படி கேட்டுபுட்டீரு? நான் தமிழந்தான்வே. //

சும்மா தமாசுங்கண்ணா. தப்பா எடுத்துக்காதீங்க. :))

இப்போ நீங்க சொன்ன விளையாட்டு 2 - சரிதான். அதுக்கு எதுக்கு மன்னாபெல்லாம் கேட்டுக்கிட்டு!! :))

said...

//துண்டு போட்டு உக்காந்துட்டோம்ல//

பொடியா, சாப்பாடா போடுதோம்? நீர் பதிலைச் சொல்லும்வே!!

said...

சேது

வணிகம் - 5 தவிர மற்றவை சரி
கணினி - 2 தவிர மற்றவை சரி

said...

விளையாட்டு 6. Robbie Keane ?

said...

//உமக்குத்தான் இரும்புக் காலர் போடணும்!! :))//

umma kelvi thaan kazutha nerikuthe.. atha vida vera enna collar venum.. :)

aiyoo 2 kelvi-la manda kaaythe..

said...

வணிகம் - 5

The noun iron collar has one meaning : an instrument of execution for execution by strangulation

இரும்புக் காலர் தொழிலாளிகள் - மேலே எழுதியுள்ளபடி உயிரைப் போக்குபவர்கள்.

said...

//
தப்பா எடுத்துக்காதீங்க. :))
//
சேசே நானும் விளையாட்டாத் தான் சொன்னேன்.

முதல் கேள்விக்கு சாய்ஸ் கெடயாதா? ரொம்ப கட்டமா இருக்கே.கூகிளாண்டவர கிரிக்கெட் பத்தி கேட்டா 2000000கு மேல காட்டறாரு. கபில்தேவ் காப்டனா இருந்தாரு. கவாஸ்கர் இம்ரான் கான் மார்ஷல் ரிச்சர்ட்ஸ் இவுங்கள்ளாம் ஆடிக்கிட்டிருந்தாங்க. இவ்ளோ தான் என்னோட கிரிக்கெட் அறிவு :)
நான் கிரிக்கெட் பத்தி செய்தி பாத்தே கொஞ்ச காலம் ஆகுது.

said...

sandeep patil correcta??

said...

மஞ்சுளா.
விளையாட்டு 6 - சரியான விடை

said...

பாலா

வணிகம்5 -இது தவறான விடை

said...

புயலாரே.

நிறையா பேரு விடை சொல்லிட்டாங்க, இப்போ என்ன சாய்ஸ் தரது?

இதுக்கு கிரிக்கெட் தெரியணமுன்னு அவசியம் இல்லையே. இணையத்தில் தேடும் பொறுமை வேணும் அவ்வளவுதானே!

said...

சிங்கமே.

இதுவும் சரி இல்லை!

said...

ஐயா, அந்த வரலாறு முதல் கேள்விக்கு ஏதானும் சொல்லக்கூடாதா? சினிமா ரொம்ப படுத்துதே :(

said...

மஞ்சுளா, ஹீரோ பேரு தெரியுமே, அதோட ஊமைன்னு தேடிப் பாருங்க :))

said...

வணிகம்
2. Nokia
3. Smoking
4. Nike
5.Robots
6. Barbie Doll

கணி்ணி
1. cognizant
3. Yet Another Hierarchical Officious Oracle
4. 32 Words
5. Nov 20, 1985
6. Larry Ellison

விளையாட்டு
4. Bridge
5. Stealing Socks

மற்றவை நாளைக்கு :))

said...

வரலாறு 1. Amit Kumar, Kishore Kumar ?

said...

பொடியரே வாங்க.

வணிகம் - 2,3,4,5,6
கணினி - 1,3,4,5,6
விளையாட்டு - 4,5
எல்லாமே சரி தல!

said...

மஞ்சுளா இல்லைங்க.

ஒரு க்ளு தரேன்

நடிகரின் வாரிசும் நடிகர்
பிரதமரின் வாரிசும் பிரதமர்
நடிகர்/தயாரிப்பாளரின் வாரிசும் நடிகர் (தயாரிப்பாளரா என்பது தெரியாது!)

said...

vanigam
5 Robot?
6 Barbie Dolls

sports
6 Thalaiva, Ronaldo only put 2 goals I guess. 0-2....
Illina Rivaldo?

said...

வணிகம்,

1) HMV நாய்

5) சிறையில் வேலை செய்யும் தொழிலாளி

கணினி,

2) ஜெனீவா

4) 32 characters

விளையாட்டு,

2) இ

3) Mexican wave

said...

சரியா தெரியலை. ஒரு முயற்சி: farokh engineer / brylcream?

said...

ரவி

வணிகம் 5,6 - சரி
விளையாட்டு ஆறு - ஊஹூம்

said...

ராயல்
வணிகம் 1 -சரி
5 -தப்பு

கணினி

2,4 - ஓக்கே. ஒரு சின்ன தப்பு இருக்கு. ஆனா நட்புக்காக ஓக்கே

விளையாட்டு
2 - தவறு
3 - சரி

said...

புயலாரே,

அதுதான் சரியான விடை!! :)

எல்லா கேள்விகளுக்கும் சரியான பதில் சொல்லிட்டீங்க.

வாழ்த்துக்கள்!

said...

varalaaru, 1. amitab bachchan?

said...

மஞ்சுளா

மூணு பேர் வேணும். ஒருத்தரைச் சொல்லிட்டீங்க. அது சரிதான். இப்போ மத்த ரெண்டு பேரையும் கண்டுபிடியுங்க.

said...

பாலா
வரலாறு 6 - சரியான விடைதான்.
வரலாறு 1 - தயாரிப்பாளர் நான் நினைத்த பெயர் இல்லை

said...

வரலாறு:
1. அமிதாப் பச்சன் (படம்: ஸாத் ஹிந்துஸ்தானி), கே.ஏ.அப்பாஸ், இந்திரா காந்தி ???

said...

மஞ்சுளா, நிறையா பேரு இந்த காம்பினேஷந்தான் சொல்லி இருக்காங்க. ஆனா என்னிடம் இருக்கும் விடை வேற. அதையும் நிறையா பேரு சொல்லி இருக்காங்க.

said...

//மஞ்சுளா

மூணு பேர் வேணும். ஒருத்தரைச் சொல்லிட்டீங்க. அது சரிதான். இப்போ மத்த ரெண்டு பேரையும் கண்டுபிடியுங்க.//

சரிதானா? அப்படினா நேத்திக்கே சொல்லியிருப்பேனே.. :(( ஸாத்ஹிந்துஸ்தானில அவருக்கு என்ன ரோல்னு பாக்காம வேற யாராவதா இருக்குமோன்னு தேடினேன்.
அது சரி, //தனது குரலை தனது தனித்துவமாகக் கூறிய அந்நடிகருக்கு// - அப்படியா??!

said...

வரலாறு
1.தயாரிப்பாளர் : Naya Sansar ?

said...

மஞ்சுளா,

இன்னும் இல்லை

said...

போன பதிவுலதான் நம்ம மானத்தைச் சீவிச் சிங்காரிச்சிக் கப்பல்ல ஏத்துனீங்க. ஆனாலும் துணிஞ்சு வந்திருக்கேன்.

மொத்த வடைல ரெண்டு வடை சுட்டிருக்கேன்.

வணிகம்
1. நாய்ங்க அது. ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்னு பாட்டு கேக்குதே...அந்த நாய்தான் இது.

2. நோக்கியா - இது எனக்குத் தெரியாது. கூகிளாண்டவர் உதவினார்

3. புகைப் பிடித்தல் - கூகிளாண்டவராய நம

4. நைக்கீ ஸ்விஷ் அந்த லோகோ - சர்வம் கூகிளார்ப்பணம்

விளையாட்டு
1. கால்ல ஷூ இல்லாம விளையாண்டாருன்னு நெனைக்கிறேன்.

said...

வணிகம் 1

Nipper, the famous "HMV" dog, is buried in Kingston behind Lloyds bank.

http://www.londonelects.org.uk/where_i_live/kingston_upon_thames.aspx

நிப்பர் உட்கார்ந்துகொண்டு :-))) ஒலிபெருக்கி கேட்கும்/பார்க்கும் படம் காண சுட்டுங்கள் http://en.wikipedia.org/wiki/Nipper

said...

வணிகம் 2. நோக்யா

What is known today as Nokia (pronounced /ˈnokiɑ/ in IPA) was established in 1865 as a wood-pulp mill by Knut Fredrik Idestam on the banks of the Tammerkoski rapids in the town of Tampere, in south-western Finland.

said...

வணிகம் 6 பார்பி பொம்மை

said...

வணிகம் 4. நைக் (ஸ்வூஷ்

http://www.nike.com/nikebiz/nikebiz.jhtml?page=5&item=origin

said...

வாங்கய்யா வாங்க. என்ன இருந்தாலும் ஜிரா இல்லாம இனிக்கிறது இல்ல பாருங்க.

வணிகம் 1,2,3,4 - சரி, கூகிளாண்டவர் கருணை உமக்கு நல்லாவே இருக்கு!!

விளையாட்டு - 1ஆவது கேள்விக்கா இந்த பதில்? என்னமோ சரி இல்லையே. இருந்தாலும் தவறுதான்.

said...

பாலா

வணிகம் 1 2 6 -சரி

said...

வணிகம் 3.

His proposed airline called Smoker's International Airline will permit onboard smoking

said...

வணிகம் 5. குதிரைகள் :-)

said...

வரலாறு: 1. BOMBAY TALKIE, producer: Ismail Merchant ??

said...

கணிணீ 3 ம் விளையாட்டு 4 ம் அனுப்பினேனே வந்துதா?

இல்லெனா இதோ
கணிணி 3
Yet Another Hierarchical Officious Oracle

விளையாட்டு

3) The wave....
4) Bridge

said...

sports

1) Farokh Engineer

said...

வணிகம்
5) Robots.....

said...

வரலாறு 1. producer: சசிகபூர் ?

ரொம்ப மண்டை காயுது.

said...

வணிகம்
4)nike

said...

பாலா,

வணிகம் 3,4 - சரி
5 - ஊஹூம்!!

said...

மஞ்சுளா
வரலாறு 1 - இல்லை இல்லை!! (ரெண்டு பதில் சொல்லி இருக்கீங்களே!)

said...

ராதா

கணினி 3- சரி
விளையாட்டு 3, 4 - சரி
விளையாட்டு 1 - ஆள் சரி ஆனா விளம்பரம் எதுக்கு செஞ்சாருன்னு சொல்லலையே
வணிகம் 4, 5 - சரி

said...

பதில் சொல்ல வார-இறுதி வரை நேரம் உண்டு ன்னு சொன்னதால, நான் அதுவரைக்கும் வெயிட்டீஸ். வேலை கொட்டிக் கிடக்கே..:-((( ராஜாமணியும் எவ்வளவு செய்வார் பாவம்.... நானு குயிஜு குயினு (மஞ்சுளா & மற்றவர் மன்னிக்க;-)ங்கோ!

said...

நிதானமா வந்து பதில் சொல்லுங்க. சட், கூட்டிக்கிட்டு வந்து பதில் சொல்லச் சொல்லுங்க! :))

said...

1. ம்ருணாள் சென்?

said...

மஞ்சுளா, எனக்கு என்ன க்ளூ குடுக்கணும் அப்படின்னும் தெரியலை. கொஞ்சம் விட்டுப் பிடியுங்க. அந்த ஹீரோ பெயர், மற்றும் ஊமை என கூகிளிட்டுப் பாருங்களேன். :)

said...

http://imdb.com/title/tt0064915/combined

இதன்படி பாத்தா, கேஏ அப்பாஸ் சரிதானே?

ட்ரிவியா: This was Bollywood superstar Amitabh Bachchan's debut movie.

said...

//மஞ்சுளா, எனக்கு என்ன க்ளூ குடுக்கணும் அப்படின்னும் தெரியலை. கொஞ்சம் விட்டுப் பிடியுங்க. அந்த ஹீரோ பெயர், மற்றும் ஊமை என கூகிளிட்டுப் பாருங்களேன். :)//

:(

said...

Sunil Dutt ?

said...

ரேஷ்மா ஔர் ஷேரா-வா? இந்தப் படமா அவருடைய முதல் படம்? வருடம் மாறி வருகிறதே..

ஸாத் ஹிந்துஸ்தானி இல்லையா?

said...

மஞ்சுளா, அவரேதான்.

விடா முயற்சிதான் போங்க!! :))

said...

மஞ்சுளா.

எல்லா கேள்விக்கும் பதில் சொல்லிட்டீங்க போல!! வாழ்த்துக்கள் மஞ்சுளா!

said...

//மஞ்சுளா.

எல்லா கேள்விக்கும் பதில் சொல்லிட்டீங்க போல!! வாழ்த்துக்கள் மஞ்சுளா!
//

இனிமே நிம்மதியா போய் தூங்கலாம்.:-)

நன்றி நன்றி நன்றி... 3 பாகத்துக்கு 3 நன்றி. நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன். அதுவும் முக்கியமாக, அமிதாப்பின் ஆரம்பகால படங்களைப் பற்றிய விஷயங்களை கரத்துக் குடித்தாகிவிட்டது. ஆனா எதுக்கு உபயோகம்னு தான் தெரியல :(

3 பாகத்தோட முடிச்சுடாதீங்க. க்விஸ்ஸை மேலும் பல பாகங்கள் நீட்டிக்குமாறு கோரிக்கை விடுக்கிறேன். (வீட்டில் டோஸ் கிடைத்தால் நான் பொறுப்பல்ல!)

said...

மஞ்சுளா,

இன்னும் ஒரு பாகம் இன்னிக்கு ரிலீஸ்!! அதையும் மறக்காம வந்து போடுங்க. அப்புறம் நாம இந்த க்விஸ் இல்லாத மேட்டர் எல்லாமும் கூட எழுதுவோம். அதெல்லாமும் வந்து படியுங்க.

said...

வணிகம்
1. Nipper Dog
கணிணி
2. Switzerland
விளையாட்டு
2. அனைத்தும்

said...

பொடியரே

வாரும்
வணிகம் 1
கணினி 2 (நாட்டைச் சொன்னவரு ஊரைச் சொல்லி இருக்கலாம்.)
விளையாட்டு 2

எல்லாமே சரிதான்.

said...

வணிகம்
2) Nokia

3)
On board smoking

6)Barbie doll's full name

said...

வணிகம்

5. Robots - iron collar workers

said...

ராதா
வணிகம் 2,3,5,6 - சரிதான்

said...

கணிணி

1) cognizant

5)1985

விளையாட்டு

1) bryl cream (the rest of the answer)

said...

G3
வணிகம் 5 - சரிதான்
இன்னும் ஓண்ணுதான் மீதி போல. சீக்கிரம் போடுங்க!!

said...

ராதா

கணினி 1, 5
விளையாட்டு 1

சரிதான்

said...

sports
5)
shoplifting socks

said...

ராதா
விளையாட்டு 5 - சரிதான்

said...

sports
6) Robbie Keane of Ireland

said...

ராதா

விளையாட்டு 6 சரி

said...

computers
6) Lawrence Joseph Ellison

said...

ராதா

கணினி 6 - சரி

said...

ஹையா கண்டுபிடிச்சிட்டேன்...

விளையாட்டு.

1. Farokh Engineer

கூகிள் ஆண்டவர் சொன்னதுதான் இதுவும் :)))

//"I was the pioneer in advertising as far as Indian cricket goes," said Farokh Engineer during his recent commercial visit to Mumbai.

"I started with Brylcreem. It was Sunil Gavaskar, who took over from there and now you see all the cricketers modeling."//


உங்க புண்ணியத்துல கூகிள் ஆண்டவருக்கு எப்படி எல்லாம் பெட்டிஷன் போடனும்னு தெரிஞ்சிக்கிட்டேன். நன்றி ஹை :)))

said...

Commerce
5 - Robot
6 - Barbie (last time typo error)

Computer
3 - Yet Another Hierarchical Officious Oracle
4 - 32

Sports
1 - Farokh Engineer -Bryl cream

-Arasu

said...

ஐயா, விளையாட்டுல நான் 1ன்னு சொன்னது 5வது கேள்விக்கான வடை. இப்ப சரியா வெந்திருக்கான்னு பாத்துச் சொல்லுங்க. :)