Monday, October 29, 2007

மொழியறிவும் முழியறிவும் - க்விஸ் பாகம் 1

இன்னிக்கு பார்க்கப் போற மூணு சப்ஜெக்ட்டுகள் - ஆங்கிலம், தமிழ் மற்றும் கணக்கு. முதல் இரண்டும் மொழியறிவு பத்தி, மூணாவது பத்தின கேள்விகளுக்கு நான் எப்பவுமே முழிப்பதுதான் வழக்கம் என்பதால் அதை முழியறிவுன்னு சொல்லியாச்சு. ஒவ்வொரு தலைப்பின் கீழும் ஆறு கேள்விகள். ஆட்டையைப் போடுவோமா?

ஒரு சின்ன டிஸ்கி : இந்த மூன்று நாட்களிலேயே என்னைப் பொறுத்தவரை இன்றுதான் கடினமானக் கேள்விகள். இதனைத் தாண்டிவிட்டால் அப்புறம் சுலபம்தான்.


முதலில் ஆங்கிலம். எங்க பள்ளிக்கூடத்தில் முதல் பீரியட் எப்பவுமே ஆங்கிலம்தான். இதில் மட்டும் கேள்விகள் ஆங்கிலத்திலேயே இருக்கும். மற்ற கேள்விகள் தமிழில்தான்.

1. It was the term used to describe a person of profound mental retardation having a mental age below three years and generally being unable to learn connected speech or guard against common dangers. The term belongs to a classification system no longer in use and is now considered offensive.It is now replaced by "profound mental retardation", which term?

2. What is the name of the capital of Hell in John Miltons ‘Paradise Lost’? This means a state of confusion and uproar.


3. This word means a college or society for special study or training and is after a Greek garden outside Athens where Plato taught Philosophy. What word is this?


4. A Jewish ritual enables transferring a person's sin to a goat which was later set free in the wilderness. What word did this contribute meaning someone who bears the blame for the wrong doing of others?


5. This is a French word meaning 'Word' and is used where prisoners are released on their word of honour?


6. This word means to banish from the company of a group of people and is based on an ancient greek word for a piece of pottery to cast votes to decide if someone was to be exiled. What word is this?


அடுத்தது தமிழ்ப் பாடம். நம்ம சிறப்பாசிரியர் கிட்ட ரவி போடும் புதிரா? புனிதமா? பத்திச் சொன்னேன். அட இப்படி எல்லாம் பதில் சொல்லறாங்களான்னு கொஞ்சம் கஷ்டமாகவே பண்ணிட்டாரு! அவரோட கேள்விகளைப் பாருங்க.

1. முதலில் குறள்.
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.

இதில் வள்ளுவர் கல்லாமா என எதைச் சொல்கிறார்?

2. அடுத்ததா நம்ம சந்தக்கவியார் தந்த திருப்புகழ்.

பத்துத்தலை தத்தக் கணைதொடு

ஒற்றைக் கிரி மத்தைப்பொருதொரு

பட்டப்பகல் வட்டத்திகிரியி லிரவாகா...

இதில் குறிப்பிடப்படும் மூன்று இதிகாச நிகழ்வுகள் யாவை ?


3. நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் இப்படி வருது
தன்மக னாகவன் பேய்ச்சி
தான் முலையுண்ணக் கொடுக்க..

இதில் பேய்ச்சி என அறியப்படுபவர் யார்?


4. இன்னிக்கு புராண இதிகாசங்கள் பத்திப் பேசும் போது ராமாயணம் பத்திப் பேசாம இருக்க முடியுமா? கம்பன் வார்த்தைகளைப்
படியுங்கள்.
தழைத்த தண்துளவினோன் தலைவனல்லன் என்று

அழைத்தவன் அறநெறி அந்தணாளரில்
பிழைத்தவன் பிழைப்பிலா மறையைப் பேணலாது
இழைத்த வன் பொய் எனும் இழுதை நெஞ்சினோன்
நமக்கெல்லாம் கழுதை தெரியும். அது என்னங்க இது இழுதை?

5. மூதுரையில் அவ்வையார் சொல்லறாங்க

மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடற்சிறியர்என இருத்தல் வேண்டா - கடல்பெரிது

மண்ணீரு மாகாது அதன்ருகே சிற்றூறல்

உண்ணீரும் ஆகிவிடும்

அதாவது ஒருவரின் உடல் அளவைக் கொண்டு அவரை மதிப்பிடாதே. ஒரு கடல் பெரிதாக இருந்தாலும் அதன் தண்ணீரைக்
குடிக்க முடியாது. அதனருகே இருக்கும் சின்ன நன்னீர் ஊறும் இடத்திற்குப் பயன் அதிகம். ஆனா முதல் இரண்டு வரியைப் பாருங்க. தாழம்பூ மடலானது மகிழம்பூவை விடப் பெரிது ஆனா மகிழம்பூவுக்கு வாசம் அதிகம் எனச் சொல்கிறார்களே. தாழம்பூவுக்கும்தானே வாசம் அதிகம்.
என்னமோ உதைக்குதே. என்ன மேட்டர்?


6. குறளில் ஆரம்பித்த நாம் குறளிலேயே முடிக்கலாம்.
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

இந்த குறளுக்கு ஒரு சிறப்பம்சம் இருக்கு. அது என்ன?


என்னங்க தமிழ் இலக்கியங்களின் சுவையை பருகிவிட்டீர்களா? அடுத்தது கணிதம்! எண்ணித் துணிக கருமம் அப்படின்னு திருவள்ளுவர் சொல்லி இருக்காரு. அவருக்கும் கணக்குன்னா கண்ணு முழி பிதுங்கும் போல! அதான் இப்படி எண்ணிட வேண்டிய மேட்டரை எல்லாம் கருமமுன்னு திட்டறாரு. அதையும் இன்னிக்கே பார்த்துட்டு தலை முழுகிடலாம். என்ன சொல்லறீங்க?

1. ஒரு இடத்தில் குழந்தைகள் வட்டமாக சமதூர இடைவெளி விட்டு நின்று கொண்டிருக்கின்றனர். இதில் ஏழாவது குழந்தைக்கு எதிராக 18ஆம் குழந்தை நின்றால் மொத்தம் எத்தனை குழந்தைகள் நிற்கின்றனர்?


2. இந்த இரண்டு இலக்க எண்ணின் இலக்கங்கள் மாற்றப்பட்டால் வரும் எண்ணை முதல் எண்ணில் இருந்து குறைத்தால் வரும் மிகுதி 54. இந்த எண்ணில் இடப்பக்க இலக்கத்தை வலப்பக்க இலக்கத்தால் வகுத்தால் வரும் விடை 3. இந்த இரட்டை இலக்க எண் எது?

3. என்னிடம் இரு காயின்கள் உள்ளன. இதில் ஒரு காயினில் 11 என்ற எண்ணும் மற்றொன்றில் 9 என்ற எண்ணும் உள்ளன. இவற்றின் கூட்டுத் தொகை 20. இந்த காயின்களின் மறு புறத்தில் எந்தெந்த எண்கள் இருந்தால் 19, 20, 21, 22 என்ற கூட்டுத் தொகை வர முடியும்? எந்த காயினில் எந்த எண் இருக்க வேண்டும் எனத் தெளிவாகச் சொல்ல வேண்டும். ஒரு எண் ஒரு முறைதான் வரலாம்.
There are two discs that have numbers 11 and 9 printed on one side respectively. So a total of 20 can be arrived at. What numbers would be required on the other side so that we can arrive at totals of 19, 20, 21 and 22? A number should not be repeated. (சிலரின் வேண்டுகோளுக்கிணங்க ஆங்கில வடிவிலும்)


4. ஒரு பேருந்தில் 7 பெண்கள் இருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் ஏழு பைகள் உள்ளன. ஒவ்வொரு பையிலும் 7 பெரிய பூனைகள் உள்ளன. ஒவ்வொரு பெரிய பூனையுடன் 7 குட்டிகள் உள்ளன. ஆக மொத்தம் அப்பேருந்தில் எத்தனை கால்கள் உள்ளன?


5. ஒரு செஸ் போர்டில் வெள்ளையும் கருப்புமாக 64 சதுரங்கள் உள்ளன. ஆனால் சிறிதும் பெரிதுமாக அதில் எத்தனை சதுரங்கள் உள்ளன?

6. ஒரு குடும்பத்தில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் குறைந்த பட்சம் இரு சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் இருந்தால் அக்குடும்பத்தில் மொத்தம் எத்தனை குழந்தைகள்? அதில் எத்தனை ஆணகள்? எத்தனை பெண்கள்?

என்ன, அப்பாடான்னு இருக்கா? இன்னிக்கு அம்புட்டுதான் கேள்வி. இதுக்கு பதில் சொல்ல ஒரு நாள் பூரா நேரம் இருக்கு. நாளைக்கு வரலாறு, புவியியல் மற்றும் விஞ்ஞானம் பற்றின கேள்விகள் வரப் போகுது. தயாரா இருங்க மக்கள்களே!

தற்போதைய மதிப்பெண் நிலவரம்.

399 comments:

said...

கணிதக் கேள்விகள் எளிதாகத்தான் இருக்கு. அப்புறம் பெனாத்தலார் சொன்னா மாதிரி அந்த ஒரு கேள்விக்கு ஒரு பதில் கண்டிஷனைத் தளர்த்திக்கலாமின்னு பார்க்கறேன். என்ன சொல்லறீங்க?

said...

ayya mudiyalai

said...

முதல் ஆங்கிலக்கேள்வி சற்று குழப்பமானது. ஏனெனில்,PMR என்பதே ஒரு தடை செய்யப்பட்ட சொல்லாக அமெரிக்க மனநலக் கழகம் அறிவித்து, அதற்குப் பதிலாக, 'Developmental Disability' என அழைக்கப்படவேண்டும் என அறிவித்து, அதுதான் இப்போது பின்பற்றப் படுகிறது.
Ref:: The term "Mental retardation" has acquired pejorative and shameful connotations over the last few decades and is now used almost exclusively in The United States in technical or scientific contexts.

Developmental disability is preferred by most physicians.
People with mental retardation may be described as having developmental disabilities, global developmental delay, or learning difficulties.

said...

இத்தனை கேள்விகளா?????

அதுசரி கொத்ஸ் வீட்டில் வேலை செய்யறதா வேணாமா?

said...

1. Moron / Imbecile / Idiot - ALl of these were used by variou authors

2. - Pandemonium (from Pandora's Box)

3. Academy - Akademos

4. Yom Kippur - Scapegoat

5. Parole

6. Ostracization

said...

//ayya mudiyalai//

முரளி மனம் தளறாமல் முயற்சி செய்யுங்க. இதுக்கே அரண்டா எப்படி? இன்னும் ரெண்டு பகுதி இருக்கே!! :))

said...

english 4 = Scape goat

said...

//PMR என்பதே ஒரு தடை செய்யப்பட்ட சொல்லாக அமெரிக்க மனநலக் கழகம் அறிவித்து, அதற்குப் பதிலாக, 'Developmental Disability' என அழைக்கப்படவேண்டும்//

இதெல்லாம் நம்மளை மாதிரி அறிவாளிங்களுக்கு எப்படித் தெரியும் அப்படின்னு ஸ்டேட்மெண்ட் விட்டா இந்த கேள்விக்கான விடையைச் சொல்லி இல்ல திட்டுவீங்க. ஆகவே மக்கள்களே, டாக்டர் சொன்னதை கட் பேஸ்ட் பண்ணிக்குங்கப்பா. ஆனா அந்த கேள்விக்கு இந்த பதத்தை மாற்றினாலும் விடை அதேதான். சரியாச் சொல்லுங்க.

டாக்டர், சம்பந்தா சம்பந்தம் இல்லாம இந்த கவுண்டர் செந்தில் சீன் ஞாபகத்துக்கு வருதுங்க!

கவுணடரு ஒரு படத்துல செந்திலுக்கு தமிழ் சொல்லித்தருவாரு.
க: புஷ்பம்
செ: புய்ப்பம்
க: அடே மாங்கா மண்டையா அது புய்ப்பம் இல்லேடா, புஷ்பம்
செ: அண்ணே, பூவா, பூன்னு சொல்லலாம், புய்ப்பம்ன்னு சொல்லலாம், நீங்க சொல்றமாதிரிகூட சொல்லலாம்.
க: அடங்கொக்க மக்கா உனக்கு தமிழ் சொல்லி தர வந்தேன் பாரு...

said...

E6=Ostracism

said...

1. 22 (1-6 and 19-22 on one side and 8 top 17 on other side)

2. 39 (93-39=54)

3. 10 at the back of 11 and 11 at the back of 9

4. 7 பெண்கள். 49 bags. 343 Cats .2401 kittens உள்ளன
2744 (Cats + kittens) = 10976 legs
7 women = 14 legs

Total = 10990 legs

said...

E3= Epicurus' school, called "The Garden,"

said...

5. 1+4+9+16+25+36+49+64 = 204

6. 3 Male + 4 female

said...

//இத்தனை கேள்விகளா?????//

இன்னிக்கு 18, நாளைக்கு 18, நாளை மறுநாள் இன்னும் ஒரு 18. அம்புட்டுதான்.

//அதுசரி கொத்ஸ் வீட்டில் வேலை செய்யறதா வேணாமா?//

எங்க வீட்டில் நீங்க ஏன் வேலை பார்க்கணும்? என்னது உங்க வீட்டில் நான் வேலை பார்க்கணுமா? ஆஹா! உங்க வீட்டில் நீங்க வேலை பார்க்கணுமா? இது எப்பலேர்ந்து? :))

said...

த 1. கல்லாமா =குதிரை

said...

த6. உதடு ஒட்டாது சொல்லக்கூடிய குறள்

said...

ப்ரூனோ

ஆங்கிலத்திற்கான ஆறு விடைகளும் சரி. முதல் கேள்விக்கு மல்டிபிள் சாய்ஸ் எல்லாம் குடுக்கலாமா? :))

said...

எஸ்.கே

ஆங்கிலம் 3, ஆங்கிலம் 6 - சரியான விடை.

said...

த 2.ராமன் ராவணன் 10தலைகளை அறுத்தல்
கூர்மாவதாரத்தில் மந்தர மலையால் பாற்கடலைக் கடைந்தல்,
தன் சக்கரத்தல் பகலை இரவாக்கி அர்ஜுனனைக் கிருஷ்ணன் காத்தல்

said...

ப்ரூனோ,

கணக்கு 1 சரி
கணக்கு 2 நம்பரை மாற்றிக் குடுத்துட்டீங்க. ஆனா விளக்கம் சரியா இருக்கிறதுனால ஓக்கே.

கணக்கு 3 - தவறு
கணக்கு 4 - சரி

said...

த 3 இழுதை= பேய்

said...

எஸ்.கே.

ஆங்கிலம் 3 - தவறான விடை

said...

ப்ரூனோ,

கணக்கு 5,6 - சரி

said...

எனக்குப் பேப்பர் திருத்தும் வேலை இருக்கு.(??)(இருக்குதானே? இல்லையா?)
அதனால் இந்தப் பரிட்சை எழுத நேரம் இல்லை.
அர்ரியர்ஸ் வச்சுக்கவா?

said...

எஸ்.கே.

தமிழ் 1, 6 - சரியான விடை. மன்னாரை கேட்டு இருக்கீங்க போல!

தமிழ் 2 - நீங்க சொல்வது கொஞ்சம் வேற மாதிரி இருக்கு. அதை மட்டும் உறுதி படுத்திக்கறேன்

தமிழ் 3 - சரிதான்.

said...

ரீச்சர், இதெல்லாம் ரூமச்சா தெரியலை? :))

said...

த 3பேய்ச்சி= ஆயர்பாடியில் கண்ணனைக் கொல்ல வந்த ஒரு பெண்ணரக்கி[பேய்] தன் முலைப்பால் கொடுத்து மூச்சு முட்டச் செய்து கொல்ல நினைத்த பூதனா

said...

ப்ரூனோ

கணிதம் 3 - நீங்க சொன்னது சரிதான். ஆனா ஒரு சின்ன மாற்றம். இப்போ கேள்வியைப் பாருங்க. :))

said...

த 5= தாழம்பூவுக்கும்தானே வாசம் அதிகம்.
என்னமோ உதைக்குதே. என்ன மேட்டர்?

தாழம்பூ விரிச்சாத்தான் வாசம் தரும் ஆனால் மகிழப்பூ அப்படியே அதிக மணம் வீசும்

said...

எஸ்.கே.

தமிழ் 3 தமிழ் 4 - நம்பர் மாற்றிப் போட்டாலும் விடை சரிதான் :))

said...

பாபா, அதுக்குள்ள சுட்டி குடுத்தாச்சா? நன்றி. நன்றி.

said...

இப்போதைக்கு சொல்லக் கூடியது(சில பதில்கள் யூகம் தான்), கூகிளைத் தேடாம

ஆங்கிலம்
1. Imbecile
2. Chaos
3. Oracle?
4. Scapegoat
6. Ostracize

said...

ஐயா கொஞ்சம் கருணை காட்டுங்க, எல்லாமே சொந்த முயற்சி...

ஆங்கிலம்
1. Dumb
2. Chaos
4. Scapegoat

தமிழ்
1. குதிரை
6. இரு சொற்கள் இருமுறை வரும் ஒரே குறள்?

கணக்கு
1. 22 குழந்தைகள் (அரை நிமிடத்துள் கண்டுபிடித்தேன்!)
2. 93 (ஒரு நொடியில் கண்டுபிடித்தேன்!)
3. 11-க்குப் பின் 10. 9-க்குப் பின் 1.
4. 10990 கால்கள்
5. 204 சதுரங்கள்
6. 7 குழந்தைகள் (3 ஆண், 4 பெண்)

said...

இதுக்கு மட்டும் கூகுளாண்டவர் துணை ஹிஹி, அதனால தனி பின்னூட்டமா போட்டுடறேன்.

ஆங்கிலம்
3. Academy
5. Parole
6. Outcast

said...

கைப்ஸ்,
ஒரு வழியா வந்து சேர்ந்தீரா? உம்ம பேர் போட்டப் பதிவுக்குக் கூட வரலையே.

முதல் கேள்விக்கு நான் எதிர்பார்த்த சொல் அது இல்லை. ஆனா நட்பின் அடிப்படையில் நீங்க சொன்னதும் ஓக்கேதான். :))

2,3 தவறு

4,5 சரி.

said...

English
1) Moron

said...

கூகிள் புண்ணியத்தில்

ஆங்கிலம்
6. Parole

said...

கைப்ஸ் மன்னிக்கவும்

ஆங்கிலம் 1 - சரி
ஆங்கிலம் 2,3 - தவறு
ஆங்கிலம் 4, 6 - சரி

இதுதான் உங்க தற்போதைய நிலவரம்

said...

ஆங்கிலம்
1. Moron ஐ எதிர்பார்த்தீங்களா?

said...

ஆங்கிலம்
2. Pandemonium

said...

சேதுக்கா, நாங்கதான் ராப்பிசாசுன்னா நீங்க கூடவா?

ஆங்கிலம் 1,2 - தவறு
ஆங்கிலம் 4 - சரி

தமிழ் 1 - சொன்னவரை சரி, ஆனால் அது எந்த மாதிரி நீங்க சொன்னது? இப்போதைக்கு அரை மார்க்தான்.

தமிழ் 6 - தவறு.

கணக்கு 1,2 சரி
3 - தவறு (கேள்வியை சரியாப் படியுங்க)
4,5,6, - சரி
நல்லா கணக்குப் பண்ணறீங்க! :)

said...

//கைப்ஸ்,
ஒரு வழியா வந்து சேர்ந்தீரா? உம்ம பேர் போட்டப் பதிவுக்குக் கூட வரலையே//

ஆணிகள் ரொம்ப ஜாஸ்தி. ஆனா இந்தப் பதிவு too tempting. அதான் ஆணியைத் தூர வச்சிட்டு கோதாவுல குதிச்சிட்டேன். என் பேரைப் போட்டு என்னை தேடுனதுக்கு நன்றி சொல்லிக்கிறேன். நன்னி ஹை.

தமிழ் தான் கை வைக்க முடியலை...ரொம்ப கஷ்டமாயிருக்கு.

said...

சேதுக்கரசி

ஆங்கிலம் 3,5 சரி
6 -தவறு

said...

ஆங்கிலம்
3. Academy

said...

ராதா ஸ்ரீராம்.

ஆங்கிலம் 1 நான் எதிர்பார்த்த விடை இல்லை. ஆனா கைப்ஸுக்குச் சொன்னா மாதிரி நட்பின் அடிப்படையில் இதுவும் ஓக்கே. :)

said...

2,3,5 ஸ்டேட்டஸ் ப்ளீஸ் :)

said...

//ஆனா கைப்ஸுக்குச் சொன்னா மாதிரி நட்பின் அடிப்படையில் இதுவும் ஓக்கே. :)//

கேள்வி 1க்கு இன்னொரு கமெண்ட் போட்டேனே வரலையா?

said...

English
2) Pandemonium
3) Colonus

said...

கைப்ஸ்

கூகிள் புண்ணியத்தில் சொன்ன விடையில் நம்பர் தப்பு. இருந்தாலும் நான் சரி பண்ணிக்கறேன்.

5- சரி (நீங்க 6 அப்படின்னு போட்டு இருந்தீங்க)

அப்புறம் 1க்கு நீங்க இப்போ சொன்ன வார்த்தையும் இல்லை. ஆனா இதுதான் ராதா சொன்னது! :))

said...

ஆங்கிலம் 2 - சரியான விடை கைப்ஸ்.

said...

//5- சரி (நீங்க 6 அப்படின்னு போட்டு இருந்தீங்க)//

சாரி நான் 5னு தான் எழுத நெனச்சேன்.
:)

said...

கைப்ஸ் ஆங்கிலம் 3 - சரிதான்.

said...

//2,3,5 ஸ்டேட்டஸ் ப்ளீஸ் :)//

கைப்ஸ் ஆங்கிலத்தில் எல்லாம் சரியாச் சொல்லியாச்சு போல!

said...

ராதா

ஆங்கிலம் 2 - சரி

ஆங்கிலம் 3 - தவறு

said...

எல்லாம் மூணாப்பு கேள்வியா இருக்கே?

Pandemonium
idiot
akademos / academy
scapegoat
parole
ostracon / ostracism

குதிரை
இராவண வதம், பாற்கடல் கடைந்தது, பாரதத்தில் சூரியனை மறைத்தது
பூதனை
அறிவின்மை
தாழை = தென்னை
நீரோட்டகம்

22
93
8, 13
10990
1S8 n^2
3,4

நீங்க என்ன கொலவெறியோட தேடறதா கேள்வி பட்டேன். கொஞ்சம் பொறுத்துக்குங்க. அடுத்த மாசம் வந்திடறேன்.

said...

//3. நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் இப்படி வருது
தன்மக னாகவன் பேய்ச்சி
தான் முலையுன்னக் கொடுக்க..
இதில் பேய்ச்சி என அறியப்படுபவர்//

கோகுலத்தில் குழந்தை கிருஷ்ணனை கொல்ல வந்த அரக்கி. பேர் தேவையா? அப்படின்னா கூகிளைக் கேட்டுத் தான் சொல்லனும்.
:)

said...

தமிழ்
1. போர்க்களத்தில் நண்பனை விட்டு விட்டு ஓடி விடும் ஒருவனை கல்லாமா அதாவது கல்லாத விலங்கு என வள்ளுவர் விளிக்கிறார்.

said...

தமிழ்
4. இழுதை - பேய்

said...

ஆஹா

காணாமல் போன புயலாரே - வாங்க வாங்க. வெண்பா போட்டா காணும், விக்கியில் போட காணும்.

சரிதான்னு புதிர் போட்டா ஆஜர். உம்மைப் பிடிக்க வழி தெரிஞ்சு போச்சு.

என்னாது மூணாப்பு கேள்விகளா? அது சரி. உமக்குத் தனியாத்தான் தேர்வு வைக்கணும்.

ஆங்கிலம் ஆறும் சரி. ஆர்டர் மாத்தி இருந்தாலும் கூட!

தமிழ் 1 - நீங்க ஒரு விடை சொல்லி இருக்கீங்க. நான் எதிர்பார்ப்பது எந்தமாதிரி (உங்க விடை)!! புரியுதா?
இப்போதைக்கு அரை மார்க்தான்.

தமிழ் 2 - ஒரு சின்ன கன்பியூஷன். அதை சிறப்பாசிரியர் கிட்ட கேட்டுடறேன். அதுவரை வெயிட்டீஸ்.

தமிழ் 3 - சரி.

தமிழ் 4 - தவறு

தமிழ் 5 - சரி

தமிழ் 6 - சரி. டெக்னிக்கல் பேர் சொல்லி அசத்திட்டீங்க!!

கணிதம் 1,2 - சரி
கணிதம் 3 - நான் கேட்டா மாதிரி பதில் சொல்லணும்.
கணிதம் 4 - சரி
கணிதம் 5 - விடையைச் சொல்லணும். சூத்திரம் சொன்னா எல்லாம் போதாது! :)
கணிதம் 6 - சரி.

அப்பா! கலக்கி எடுத்திட்டீங்க. :))

said...

கைப்ஸ்

தமிழ் 3 - பேர் தேவை. நட்புக்காக இதெல்லாம் செய்ய முடியாது :))

said...

english
4) scapegoat

5) Parole

said...

கைப்ஸ் தமிழ் 1 - தவறு

said...

கைப்ஸ் - தமிழ் 4 - சரி. :))

said...

ராதா, ஆங்கிலம் 4, 5 - சரி.

said...

//6. யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் //

இக்குறளைப் படிக்கும் போது உதடுகள் ஒட்டுவதில்லை. சரியா?

said...

கைப்ஸ்

தமிழாறு கரை புரண்டு ஓடுதே!! அதாவது தமிழ் 6 சரின்னு சொல்ல வந்தேன். :))

said...

சரி சேது மற்றும் ப்ளோரைப் புயலார். தமிழ் 1 கேள்விக்கு உங்கள் பதில் போதுமானது என எடுத்துக் கொள்கிறேன். உங்களுக்கு முழு மதிப்பெண் தரப்படுகிறது.

said...

//4. ஒரு பேருந்தில் 7 பெண்கள் இருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் ஏழு பைகள் உள்ளன. ஒவ்வொரு பையிலும் 7 பெரிய பூனைகள் உள்ளன. ஒவ்வொரு பெரிய பூனையுடன் 7 குட்டிகள் உள்ளன. ஆக மொத்தம் அப்பேருந்தில் எத்தனை கால்கள் உள்ளன? //

9618. டிரைவர் கண்டக்டர் க்ளீனர் இவிங்களை எல்லாஞ் சேக்காம :)

said...

போங்கய்யா....

said...

புலி, எங்கிட்டு போவ? நானும் வாரேண்டே....

said...

கைப்ஸ்

கணிதம் 4 - தவறு.

said...

1. கல்லாமா - தன்னை நம்பி போர் புரியும் வீரனைப் போர்க்களத்தில் சாய்த்து விட்டு ஓடும் குதிரையைப் போன்றவன் ஆபத்து சமயத்தில் அம்போவென விட்டு விட்டு ஓடும் தீயவன். (தீய நட்பு).

இதாச்சும் சரியா?

said...

தல, கைப்ஸ்

ஒரு வார்த்தைக்கு மட்டும் மீனிங் கேட்டா முழுக் குறளுக்கும் மீனிங் சொன்னா எப்படி? அந்த சொல்லிற்கான பொருளை தரலாமே.

:))

said...

//
காணாமல் போன புயலாரே - வாங்க வாங்க. வெண்பா போட்டா காணும், விக்கியில் போட காணும்.

சரிதான்னு புதிர் போட்டா ஆஜர். உம்மைப் பிடிக்க வழி தெரிஞ்சு போச்சு.
//

எங்க பெருந்தலைவருக்கு உடம்பு சரியில்லைன்னு இன்னிக்கு சீக்கிரம் கிளம்பிட்டாரு. அதான் ஒரு மணிக்கே வீட்டுக்கு வந்தாச்சு. இன்னும் ரெண்டு வாரத்துல வேலை எல்லாம் முடிஞ்சிடும், அப்பறம் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கலாம்.

//
தமிழ் 1 - நீங்க ஒரு விடை சொல்லி இருக்கீங்க. நான் எதிர்பார்ப்பது எந்தமாதிரி (உங்க விடை)!! புரியுதா?
இப்போதைக்கு அரை மார்க்தான்.
//

போர்களத்துல பாதில விட்டுட்டு போற குதுர மாதிரி இருக்கறவன் கூட பழகறதுக்கு தனியாவே இருக்கலாம்னு சொல்றாரு. இதுல என்ன எதிர்பாக்கறீங்கன்னு புரியல.

//
தமிழ் 4 - தவறு
//
இழுதைக்கு பேய்னு ஒரு பொருள் இருக்கு ஒருவேளை அதுவோ? இராமாயணம் ரொம்ப பெருசுங்கறதால நான் படிச்சதில்லை.

//
கணிதம் 5 - விடையைச் சொல்லணும். சூத்திரம் சொன்னா எல்லாம் போதாது! :)

என்னாது மூணாப்பு கேள்விகளா?
//
இதெல்லாம் மூணாப்பு கணக்கு இல்லயா? சரி சரி - 204.

said...

//தல, கைப்ஸ்

ஒரு வார்த்தைக்கு மட்டும் மீனிங் கேட்டா முழுக் குறளுக்கும் மீனிங் சொன்னா எப்படி? அந்த சொல்லிற்கான பொருளை தரலாமே.

:)//

1. கல்லாமா - குதிரை.

இந்த பதில் ஏற்றுக் கொள்ளக் கூடியதா இருக்கா?

said...

தூக்கமா வருது கொத்ஸ்..நாளைக்கு வரேன்.....:):)

said...

புயலாரே

இப்போ தமிழ் 4 - சரி

கணிதம் 5 - சரி

கணிதம் 3 - கொஞ்சம் விடையை சரியாச் சொன்னா தூங்கப் போகலாமே..

said...

எஸ்.கே. மற்றும் புயலார்.

தமிழ் 2 - உங்க பதில் சரிதான். ஆனா அதில் மூன்றாவது பதில் இன்னும் சரியாச் சொல்லணும். நீங்க சொல்வது எப்போ நிகழ்ந்தது அப்படின்னு. வேற யாருமே அந்நிகழ்வைச் சரியாச் சொல்லலைன்னா உங்களுக்கு முழு மதிப்பெண். ஆனா யாராவது சொல்லிட்டா உங்களுக்கு .33 கட்.

said...

//3. நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் இப்படி வருது
தன்மக னாகவன் பேய்ச்சி
தான் முலையுன்னக் கொடுக்க..
இதில் பேய்ச்சி என அறியப்படுபவர் யார்?//

பேய்ச்சி - பூதகி

said...

கைப்ஸ் - தமிழ் 1 ஓக்கே - பிழைத்துப் போங்க!! :))

said...

கைப்ஸ் தமிழ் 3 ஓக்கே.

said...

//தூக்கமா வருது கொத்ஸ்..நாளைக்கு வரேன்.....:):)//

எனக்கும்தான். நான் இப்போ போகப் போறேன்.

said...

//4. இன்னிக்கு புராண இதிகாசங்கள் பத்திப் பேசும் போது ராமாயணம் பத்திப் பேசாம இருக்க முடியுமா? கம்பன் வார்த்தைகளைப் படியுங்கள்.
தழைத்த தண்துளவினோன் தலைவனல்லன் என்று
அழைத்தவன் அறநெறி அந்தணாளரில்
பிழைத்தவன் பிழைப்பிலா மறையைப் பேணலாது
இழைத்த வன் பொய் எனும் இழுதை நெஞ்சினோன்
நமக்கெல்லாம் கழுதை தெரியும். அது என்னங்க இது இழுதை?//

இழுதை - பேய்.

சரியா தவறா? இன்னும் விளக்கம் தேவையா?

said...

1 குதிரை
2.1 வரி - ராவண வதம்
2 வரி - பாற்கடல் கடைதல்
3 வரி - மாபாரத போர்காட்சி
3 பூதனை (அரக்கி)
4. அறியாமை
5. தாளம்பூவின் கந்தம் இனிதாகாது.(தலை வலிக்க்கும்).
6. சொல் பின் வரு நிலையணி (பொருள் மாறு பட்டதால் சொற்பொருள் பின் வரு நிலையணி அல்ல)

said...

கைப்ஸ் தமிழ் 4 - சரி ஏற்கனவே சொல்லியாச்சே!!

said...

//
கணிதம் 3 - கொஞ்சம் விடையை சரியாச் சொன்னா தூங்கப் போகலாமே..
//
ஒன்னுத்துல எட்டும் ஒன்பதும். இன்னொன்னு பதினொன்னும் பதிமூனும்.

//
ஆனா அதில் மூன்றாவது பதில் இன்னும் சரியாச் சொல்லணும்.
//
பாரதத்துல ஒரு நாள் பகல் முடியறதுகுள்ள சிந்துராசன கொல்ல அருச்சுனன் சபதமிட அவன் ( இப்ப என்ன மாதிரி ) தலைமறவாயிட்டான். அவன வெளில கொண்டுவர தன்னோட சக்கராயுதத்தால சூரியன மறைச்சது தான் இது.

சரி தூக்கம் கண்ண கட்டுது. ரெண்டு வாரம் கழிச்சு வரேன். அது வரைக்கும் ஐ யாம் தி எஸ்கேப்.

said...

வாங்க வேல்பாண்டி

1 சரி
2 மூன்றாவது வரி இன்னும் குறிப்பிட்டு சொல்லவேணும். மத்த ரெண்டும் சரி.
3 சரி
4 தவறு
5 தவறு
6 நான் எதிர்பார்க்கும் பதில் இல்லை.

said...

புயலாரே

இப்போ கணிதம் 3 சரி.

ரெண்டு வாரமா? நாளை நாளை மறுநாள் எல்லாம் கேள்வி இருக்குதய்யா!!

said...

மக்கள்ஸ்,

ப்ளோரிப்புயலார் கேட்ட 18 கேள்விக்கும் சரியா பதில் சொல்லிட்டார். மணி ரெண்டாகப் போகுது. கொஞ்ச நேரம் தூங்கிட்டு வரேன். நாளை காலை பார்க்கலாம்.

அது வரை வரும் விடைகள் சரியாத் தவறா என எழுந்தவுடன் சொல்கிறேன்.

said...

சரி.. பீட்டர் மேட்டர் முதல்ல..

1. imbecile
2. pandemonium (கூ துணை)
3. lyceum (நான் கூட போஸ்ட் போட்டேனே:))
4. scape goat (டோண்டு சாரு மேட்டரு.. மீள்பதிவு வருமா இதுக்கு?)
5. parole(உம்மால இன்னும் ஒரு புது மேட்டர் கத்துக்க முடிஞ்சது)
6. ostracize

said...

//2. அடுத்ததா நம்ம சந்தக்கவியார் தந்த திருப்புகழ்.
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக் கிரி மற்றைப்பொருதொரு
பட்டப்பகல் வட்டத்திகிரியி லிரவாகா...
இதில் குறிப்பிடப்படும் மூன்று இதிகாச நிகழ்வுகள் யாவை ?//

இராமவதாரம், கூர்மாவதாரம், கிருஷ்ணாவதாரம். சரியா? விளக்கம் தரணுமா?

said...

ஆங்கிலம்
1.
2. Pandemonium
3. Academy
4. Scapegoat
5. Parole
6. ostracize

தமிழ்
1. பழகாத குதிரை
2. இராவண வதம், பாற்கடல் கடைந்து அமிர்தம் எடுத்தல், சக்ராயுதத்தால் பகலினை இரவு ஆக்குதல் (மகாபாரதப் போரில் ஜெயத்ரதன் வதம்??)
3.
4. அறிவின்மை / பேய்
5. தாழை - தென்னைஓலை
6. உதடு ஒட்டாத குறள்

கணிதம்:

1. 22
2. 93
3. 1st coin : 11 & 13 2nd coin : 8 & 9
4. 10990 (14 + 1372 + 9604)
5. அனைத்து சதுரங்களும் ஒரே அளவு
6. 3சகோதரர்கள், 4 சகோதரிகள்

said...

"அதையும் இன்னிக்கே பார்த்துட்டு தலை முழுகிடலாம். என்ன சொல்லறீங்க?"

தலை முழுகிட்டு வரேன், இருங்க!

said...

1. கல்லாமா -அறிவற்ற குதிரை?

3. பேய்ச்சி -பூதகி என்னும் அரக்கி

4. இழுதை -இழுப்பு நோய், (ஆஸ்த்மா?)

5.மகிழம்பூ நாள் ஆக ஆக வாசம் அதிகரிக்கும், நெடுநாள் இருக்கும் அதன் வாசம், அதைத் தான் குறிக்குதுனு நினைக்கிறேன்.

6.ம்ம்ம்ம்? அத்வைதமும் இந்தக் குறளின் அர்த்தத்தையே சொல்லுதுனு நினைக்கிறேன்.

பீட்டரெல்லாம் படிச்சுப் புரிஞ்சு பதில் சொல்ல நேரம் இல்லை, கணக்கு அதை விட மோசம் நான்! கோபிநாத், உடனே போங்கனு சொன்னாரேனு வந்தேன், நடத்துங்க, நடத்துங்க, உங்க ரேஞ்சே தனி!!!!!!!!!!!!

said...

hihihi,நீங்க கீழே கொடுத்திருக்கிற லிங்கில் க்ளிக் செய்து பதிலைப் பார்க்கப் போனால் நேரே என்னோட வலைப்பக்கத்துக்குக் கொண்டு விடுதே? இரண்டு முறை முயன்றேன்! :)))))))))

said...

வாங்க இராமநாதன். பீட்டரில் உங்களை அடிச்சுக்க முடியுமா? முதல் சொல் நான் எதிர்பார்த்தது இல்லை இருந்தாலும் நட்புக்க்காக ஓக்கே. மூணாவது தப்பு. அதைச் சரி பண்ணுங்க.

said...

கைப்ஸ்,

தமிழ் 2 - இன்னும் கொஞ்சம் விளக்கம் தேவை.

said...

//தமிழ் 2 - இன்னும் கொஞ்சம் விளக்கம் தேவை//

அட போங்கப்பா! அரசருக்கே வெளங்கி விட்டது. கொஞ்சம் பல்லு வெளக்கிட்டு டீ குடிச்சிட்டு வந்து பாருங்க உங்களுக்கும் வெளங்கிரும்.

ஹ்ம்ம்ம்...மறுபடியும் கூகிள்ல போய் தேடனும்.
:(

said...

1) a)ராமாயணத்தில் ராவண வதம்
b)கண்ணன் மலையை குடையாக கொண்டு கோகுல மக்களை காத்தல்
c) கண்ணன் தன் சக்ரம் கொண்டு பகலவனை மறைத்தது - மகாபாரதம். என்ன சரியா?

3) பூதனை (கண்ணனுக்கு விஷப்பால் கொடுத்தல்)
4) இழுதை - இழிந்த (ப்ளீஸ் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க)

5) இதேல்லாம் டூ மச்சு.

6) முத்ற் சீர் - கடை சீர்னு ஏதாவது, ஹிஹி..

ஆங்கிலமும், கணக்கும் நான் எழுதலை. ரெம்ப கஷ்டமா இருக்கு. மேலும் எங்க கணக்கு கிருஷ்ணமூர்த்தி வாத்தியார் இதேல்லாம் சொல்லி தரலை

said...

அய்யாங்... நான் லேட்டா?

English

1. Idiot - Autism -
2. Pandaemonium
3. Academy
4. Scapegoat
5. Fine (?!)
6. Ostracism

Maths

1. 24
2. 93
3.
4. (7*2)+(343*4)+(2401*4) = 1372 + 9604 +14 = 10990
5. 184
6. 7 - 3 ; 4 ;

தமிழ் கொஞ்சம் டைம் ஆகும் போல இருக்கு. அப்பாலீக்க வர்றேன்... (முடிச்சுட்டீங்க போல)

said...

வாங்க சிங்கம்ல ஏஸ்.

சும்மா சூப்பரா கலக்கி இருக்கீங்க.

ஆங்கிலம் 1 தவிர மீதி 5 சரி

தமிழ் 3 தவிர அனைத்தும் சரி. 4 ஆவதுக்கு ரெண்டு விடை சொல்லி இருக்கீங்க. வழக்கம் போல நட்பு பாராட்டி சரியானதை மட்டும் எடுத்துக்கறேன்.

கணக்கு 5 தவிர அனைத்தும் சரி. நான் கேட்டது மொத்தம் எத்தனை சதுரங்க்கள். அந்த போர்டே ஒரு பெரிய சதுரம் அதுக்குள்ள எத்தனை விதமான சதுரங்கள் வர முடியும்? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.

நல்ல முயற்சி!

said...

கீதாம்மா,

தமிழ் 1, 3 - சரி

மத்தது எல்லாம் மீண்டும் முயற்சி பண்ணுங்க.

said...

அம்பி,

கிருஷ்ணமூர்த்தி சார்வாள் எங்க தெருதான். போய் போட்டுக் குடுக்கறேன். வேண்டாமுன்னா மருவாதியா கணக்குக் கேள்விகளுக்குப் பதில் சொல்லிடுங்க.

தமிழ் 2 (நம்பர் வேற தப்பு. கணக்கில் இம்புட்டு ஸ்ட்ராங்கா நீயி?) முதல் சரி. இரண்டாவது தவறு. மூன்றாவது இன்னும் விளக்கம் வேணும்.
தமிழ் 3 சரி
தமிழ் 4,5,6 - இன்னொரு தபா யோசிச்சுப் பாருங்க.

said...

அடுத்தது ஸ்ரீதர். வாங்க வாங்க.

ஆங்கிலம் - 1,2,3,4,6 சரி 5 - தவறு.
கணக்கு - 1,3,5 தவறு 2,4,6 சரி. ஒத்தபடை எண்கள் ராசி இல்லையோ? :))

said...

அதிக நேரம் இல்லாததால், ஈஸியா தெரிஞ்சதமட்டும் சொல்லிட்டுப் போறேன்

தமிழ்

1) கல்லாமா : கல்லாத மா(விலங்கு)
(போர்க்களத்தின் இடையில் விட்டுவிட்டு ஓடிவிடும், கல்லாத விலங்கு போன்றோரின் நட்பைவிட தனிமையே சிறந்தது )

2) பத்துத்தலை தத்தக் கணைதொடு - இராவணனின் 10 தலைகளும் சிதறிவிழ இராம அவதாரமெடுத்துக் கணை தொடுத்தது

ஒற்றைக் கிரி மற்றைப்பொருதொரு - மந்திரமலையை மத்தாக்கிக் கூர்மாவதாரம் எடுத்துத் திருப்பாற்கடலைக் கடைந்தது

பட்டப்பகல் வட்டத்திகிரியி லிரவாகா - பட்டப்பகல் பொழுது ஒன்றை வட்டமான சக்கராயுதத்தால் இரவு ஆகும்படி செய்தது

கணிதம்

2) 93

6) மொத்தம் 7பேர். 4பெண்கள் & 3 ஆண்கள்

said...

//ஆனா கைப்ஸுக்குச் சொன்னா மாதிரி நட்பின் அடிப்படையில் இதுவும் ஓக்கே//

ஏங்க நாம மட்டும் நட்பில்லியா? அப்படியே என்னுடைய ஆங்கில முதல் விடையையும் ஓகே பண்ணிரவேண்டியது தானே?

said...

English

5. Parole

Maths

1. 23

5. 204

said...

நானும் கல்ந்துக்கலாமா? :))
தமிழ்
1.படிக்காத குதிரை

2. ராமர் ராவணனைக் கொன்றது
திருப்பாற்கடலை கடைந்தது
மஹாபாரத்தில் சூரியனை சக்ரத்தால் மறைத்தது


மத்ததெல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்தில்

said...

தமிழ்

1. கல்லா மா - பழக்கபடாத குதிரை
2. ராவண வதம்; பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்தல்; மகாபாரத யுத்தத்தில் ஒருமுறை கிருஷ்ணர் சூரியனை சக்ராயுதத்தால் மறைப்பது;
3. ஆண்டாள்
4. இழுதை - பேய்
5. தாழம் பூவை கடவுளுக்கு சார்த்த மாட்டார்கள் என்பதினாலோ?
6. உதடுகள் ஒட்டாமல் சொல்லப்படும் குறள்

said...

தமிழ் 3 - பார்வதி
கணக்கு 3 - 3 - 11க்குப் பின் 10, 9க்குப் பின் 11

(சுயமா சிந்திச்சதுங்கோவ்! இதோட கணக்குப் பாடம் எல்லாத்துக்கும் சுயமாவே சரியான விடை சொல்லியிருப்பேன் :-) பின்ன.. மிகப் பிடித்த பாடம் கணக்காச்சே :-))

said...

தமிழ் 3 - பார்வதி
கணக்கு 3 - 11க்குப் பின் 10, 9க்குப் பின் 11

(சுயமா சிந்திச்சதுங்கோவ்! இதோட கணக்குப் பாடம் எல்லாத்துக்கும் சுயமாவே சரியான விடை சொல்லியிருப்பேன் :-) பின்ன.. மிகப் பிடித்த பாடம் கணக்காச்சே :-))

said...

ஆங்கிலம்
1. Idiot
2. Pandemonium
6. Ostracize

தமிழ்
2. இராவணனின் "பத்துத்தலை"களும் தெறிக்குமாறு அம்பெய்தார் (கணைதொடுப்பது = அம்பு எய்வது), மந்தார மலையைக் கொண்டு பாற்கடலைக் கடைந்தார் (கிரி = மலை, மத்து = கடையப் பயன்படுத்துவது), சூரியனைத் தன் சக்கரத்தால் மறைத்துப் "பட்டப்பகலை" "இரவு" ஆக்கினார். இவை தசாவதாரங்களில் மூன்று அவதாரங்களைக் குறிக்கும், முறையே இராமாவதாரம், கூர்மாவதாரம், கிருஷ்ணாவதாரம்.

4. பேய்

5. தாழையை இங்கே தாழம்பூ என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. தாழை என்றால் தென்னை என்றொரு பொருளுண்டு. தென்னை மடல் மிகப் பெரிதாக இருந்தாலும் அதற்கு மணமில்லை. அதைவிட மகிழம்பூ சிறியது :-)

நன்றி: கூகுளாண்டவர்

said...

கதிரவன்.

ரொம்ப நாள் ஆச்சே இந்தப் பக்கம் வந்து.

தமிழ் 1 இன்னும் குறிப்பா சொல்லணும்
தமிழ் 2 கணிதன் 2,6 - சரி

said...

இல்லீங்க சேது. அவங்க சொன்னது இன்னும் கிட்ட இருந்தது. அதான். இப்போ என்ன அடுத்த முயற்சியில் சரியான வார்த்தையை சொல்லிடுங்க. :))

said...

ஸ்ரீதர்,

இப்போ ஆங்கில 5 கணக்கு 5 - சரி

கணக்கு 1 - இன்னும் உதைக்குதே.

said...

டுபுக்கு,

போட்ட ரெண்டும் சரிதான் வாத்யாரே.

தமிழ் 1, 2 - சரி

said...

FOR Qs IN EGNLISH

1. Idiot
2. Pandemonium
3. Academy
4. scapegoat
5. parole
6. Ostacise

said...

ஸ்ரீதர்

அடுத்தது உங்க தமிழ் விடைகள்.

1,2,4,6 - சரி. இதில் இரண்டின் கடைசி விடைக்கு இன்னும் ஸ்பெசிபிக்கா சொல்லுங்களேன்.

3- அடப்பாவி!!

said...

1. Idiot
2. Pandemonium - often used when mentioning in Parliamentary Proceedings by media
3. Academy
4. Scapegoat
5. Parole
6. Ostracon

from Simulation

said...

சேது.

தமிழ் 3 - ஸ்ரீதருக்குச் சொன்ன அதே அடப்பாவி!!

கணக்கு 3 - இந்த விதிமுறையை மிஸ் பண்ணிட்டீங்களே - //ஒரு எண் ஒரு முறைதான் வரலாம்.//

said...

சேது, கூகிளாண்டவர் கருணை உங்களுக்குப் பரிபூரணமா இருக்கு!!

ஆங்கிலம் 1,2,6 - சரி
தமிழ் 2,4,5 - சரி

said...

தருமி,

ஆங்கிலத்தில் ஆறு விடையும் சரி. எழுத்துப் பிழையை மன்னித்தோம் போம்!! :))

said...

சிமுலேஷன்

ஆங்கிலம் முதல் 5 - சரி
6ஆவது மூல வார்த்தையைக் கொடுத்துட்டீங்க. அதில் இருந்து வந்த ஆங்கில வார்த்தை என்ன?

said...

கணக்கு சரியான்னு பாருங்கள் ;)

6. 3 ஆண்கள், 4 பெண்கள்
5. 204 சதுரங்கள் (64 சேர்த்து)
4. 10990 கால்கள்
3. காயின் 9ல் 7, காயின்11ல் 12
காயின் 9ல் 4, காயின்11ல் 16
காயின் 9ல் 2, காயின்11ல் 19
காயின் 9ல் 5, காயின்11ல் 17

2. இரட்டை இலக்க எண் 39

1. மொத்தம் - 21 குழந்தைகள்

இளவரசி

said...

1. idiot
2. pandemonium
3. academy
4. Yom kippur
5. parole
6. ostracise

said...

வாங்க இளவரசி

கணிதம் 1 - தவறு
2 - சரி
3 - சரியா கேள்வியை புரிஞ்சுக்கலை. அந்த காயின்களின் மறுபக்கத்தில் எந்த இரு எண்கள் இருந்தால் கூட்டுத்தொகை தேவைப்ப்பட்ட மாதிரி வர முடியும்?
4,5,6, - சரி

said...

கொத்ஸ்,

மொத நாளே இம்புட்டு கஷ்டமா??? :(

said...

5. பரோல் parole

said...

2. Pandemonium

said...

1. பழக்கப்படுத்தப்படாத குதிரை

2. இராமாவதாரத்தில் இராவணனின் பத்துத் தலைகளையும் பாணத்தால் வீழ்த்தியது
அமுதம் பெறவேண்டி பாற்கடலை மந்திரகிரியை மத்தாகிக் கடைந்தது
மஹாபாரத யத்தைல் ஜயத்ரத வதத்தின் போது சக்கராயுத்தால் சூரியனை மறைத்தது

3. பூதகி

4. இழுதை - அறியாமை அல்லது பேய்

5. தாழம்பூவின் மணம் பாம்புகளையும் அழைக்கக்குடியது. ஆனால் மகிழம்பூவின் மணம் மனதிற்கினியது என்பதால் இருக்கலாம்.

6. உதடுகள் ஒட்டாமல் உச்சரிக்கப்படும் குறள்

said...

5. ostracon,====> ostracism

said...

4. Scapegoat

said...

3. Akademos

said...

கண்டுபுடிச்சேன் கண்டுபுடிச்சேன்...
சுயமா சிந்திச்சுக் கண்டுபுடிச்சேன்!

கணக்கு-3) 11க்குப் பின் 13, 9க்குப் பின் 8

said...

தமிழ்-3க்கு ஏங்க அடப்பாவியெல்லாம் சொல்றீங்க.. அதுக்கு அப்படியொரு பொருளும் இருக்காம். ஆதாரம் வேண்ணா சொல்லுங்க.

said...

கணக்கு
1. மொத்தம் 22
2. 93
3.13, 8

said...

1. 22
2. 93
3. 15 4
12 7
14 6
18 3
4. 1582 (if includinf the driver and conductor 1586)

said...

கணக்கு
4 வது கேள்வி
ஒவ்வொரு பையிலும் 49 பூனை 49*4 = 196 கால்கள்* 49 பைகள் = 9604 பூனைகால்கள் + 14 மனித கால்கள்

said...

கணக்கு
5. செஸ்போர்டு சதுரங்கள் 204

said...

கணக்கு
6. 3+4 3 ஆண்கள் 4 பெண்குழந்தைகள்

said...

கணிதம்
6. 7

4 பெண்
3 ஆண்

said...

ஜெயஸ்ரீ, எங்க ஆளைக் காணுமேன்னு நினைச்சேன்.

ஆங்கிலம் 1,2,3,5,6 - சரி
4 - இதிலிருந்து ஆங்கிலத்திற்கு வந்த சொல் எது?

said...

தமிழ்
6. உதடு ஒட்டாது
5. தாழம்பூ வாசத்திற்கு பாம்பு வரும்.
4. இழுதை = பேய்
1. கல்லா மா - பழகாத குதிரை

said...

ராம், முதல் நாள் மட்டும்தான் இவ்வளவு கஷ்டம். அதிலேயும் மக்கள் பட்டையைக் கழட்டறாங்க பாருங்க. :)

said...

வினையூக்கி,

ஆங்கிலம் 2, 5 - சரி

said...

ஜெயஸ்ரீ,

தமிழ் 1,2,3,4,6 - சரி

5 - தவறு

said...

வினையூக்கி.

ஆங்கிலம் 1,4,6 -சரி
3 - அதனால் வந்த ஆங்கில வார்த்தை என்ன?

said...

சேது,

கணக்கு 3 - சரியான விடை!

தமிழ் 3 - ஆதாரம் இருக்கா? (ரின் விளம்பரம் மாதிரி படிச்சுக்குங்க!) ஆனா நான் நினைத்த விடை அது இல்லை!! :))

said...

வினையூக்கி
கணக்கு 1,2 - சரி
3 - நான் கேட்ட கேள்விக்கு முழு பதில் வரலையே.

said...

தமிழ்
2. ராவணனை வீழ்த்தியமை, பாற்கடலைக் கடைந்தது , பகலை இரவாக்கியமை மகாபாரதத்தில்

3, பேய்ச்சி - அம்மன் தெய்வம்

said...

மூணாவது தவறா...

ஹூம்.. மேட்டர் என்னன்னா நீங்க ப்ளாடோனுட்டீங்க.. நான் அரிஸ்டாடிலுக்கு போயிட்டேனே. தத்துவவாதிகள கரைச்சுக்குடிச்ச மாதிரி ஏன் இந்த சால்ஜாப்பு..

தப்புதான். கரெக்டான ஆன்ஸர். அகாடமி.

said...

தமிழ்-3) சரி.. நீங்க நினைத்த விடை "பேய்". போதுமா? :) பெண்பேய், பேய்பிடித்தவள்.

said...

ஜெயஸ்ரீ,

கணக்கு 1,2 - சரி
3 - தவறு. கேள்வியை சரியா படியுங்க. இரண்டு காயின்களின் பின்புறம் எந்த எண்கள் வந்தால் இந்த கூட்டுத்தொகைகளைத் தர முடியும்? ஒரே ஒரு செட் எண்கள்தான்.
4 - தவறு. ட்ரைவர், கண்டக்டர் எல்லாம் நான் சொல்லவே இல்லையே. :))

said...

English
3. அகாடமி Academy

said...

வினையூக்கி

கணக்கு 4 - தவறு
கணக்கு 5, 6 - சரி

said...

English
5. parole = பரோல்

said...

ஜெயஸ்ரீ,
கணக்கு 6 - சரி

said...

வினையூக்கி
தமிழ் 1,4,6 - சரி
5 - தவறு

said...

வினையூக்கி

தமிழ் 2 - சரி (மூன்றாவதற்கு மேலும் குறிப்பாகச் சொல்லுங்களேன்)
தமிழ் 3 - தவறு

said...

கணக்கு
3. 11 மற்றும் 13 ஒரு காயின்
9 மற்றும் 8 மற்றொரு காயின்

said...

ராம்ஸூ - இப்போ சரி! :))

said...

சேது

தமிழ் 3 - சரி!! :))

said...

வினையூக்கி

ஆங்கிலம் 3,5 - சரி

5 - ஏற்கனவே சொல்லியாச்சே!! :)

said...

வினையூக்கி

கணக்கு 3 - சரி.

said...

தமிழுக்கு வருவோம். ஏதோ வாய்க்கு வந்தது கீபோர்டுக்கும் வந்துருச்சு. கண்டுக்கப்படாது.

1. குதிரையா?

2.i. பத்துத்தலை இராவணனை கொன்ற இராமன்
ii. கூர்மாவதாரம்
iii. கிருஷ்ணாவதாரம்.. கதை தெரியாது.

3. பேய்ச்சி - அந்த பால் கொடுக்க வந்த இராட்சசியா? அவ பேரு என்ன? பூதன தான?

4. இழுதை - அறியாமை (contextuala) :)


5. தாழைனா தாழம்பூவல்ல. தென்னை. பொதுவாவே பழைய புத்தகங்கள படிக்கும்போது பார்த்து பொருள் கொள்ளனும். இல்லேன்னா எழுதினவங்க எல்லாமே முட்டாளாதான் தெரிவாங்க.

6. நான் என்று சொன்னால் ஒட்டாது. நாம் என்று சொன்னால் ஒட்டும். :)

said...

நீங்க ஆங்கில ஐந்திற்கு மதிப்பெண் கொடுக்கவில்லையோ என்று நினைத்து இரண்டாம் முறை விடை அளித்துவிட்டேன் :) :)

said...

ராம்ஸூ

கலக்கறீங்கப்பா

தமிழ் 1 3 5 6 - சரி
2 - மூணாவது இன்னும் குறிப்பா வேணும்
4 - தப்பு.

said...

கணக்கு...

இந்த கருமத்தையெல்லாம் போடக்கூடாதுன்னுதானே இந்த பொழப்பே வேணாமுன்னு இருக்கோம்.. அதுனால நான் டிஸ்குவாலிபை ஆனாலும் பரவாயில்லை. நோ கணக்குஸ்.

அடுத்த பதிவு வந்தோன்ன சொல்லி அனுப்பவும்.

said...

ஒவ்வொருவர் கையிலும் என்று சொல்லி உள்ளீர்கள்

2 * 7 = 14 பைகள்
ஒவ்வொரு பையிலும் 49 * 4 கால்கள்

14 * 49 * 4 = 2744 + 14 மனிதக் கால்கள்
2758

said...

வினையூக்கி
மதிப்பெண் எல்லாம் சரியா தருவோம். தப்பா இருந்தா சொல்லுங்க. சரி பண்ணலாம்.

said...

தமிழ்
5. தாழை என்பது தென்னையையும் குறிக்கும். தென்னை மடல் பெரிதாயிருப்பினும் அதற்குச் சிறிதும் மணமில்லை.

thanks to google

said...

ராம்ஸூ - இது என்ன அக்கிரமம்? ஒழுங்க பதிலைச் சொல்லுங்க. இந்த வயசுல கணக்குப் பண்ண மாட்டேன்னு சொன்னா நல்லாவா இருக்கு?

said...

MATHS
1. 22
2.
3.
4. 1278
5. 72
6.

said...

100% ஆச்சா?!!

said...

வினையூக்கி

கணக்கு 4 - தவறு

ஒவ்வொரு கையிலும் எனச் சொல்ல வில்லை. இருந்தாலும் தவறுதான்.

said...

இருங்க கணக்கு 4 யை முயற்சிக்கிறேன்

said...

வினையூக்கி

தமிழ் 5 - சரி!

said...

பூனைக் கணக்கு ;
ஒவ்வொரு பையிலும் 49 பூனை
49 * 4 196 கால்கள்
மொத்தம் 49 பைகள்
49 * 196 = 9604 கால்கள்
கூட 14 மனிதக் கால்கள் 9618

said...

வினையூக்கி

இன்னும் தமிழ் 3, கணக்கு 4 இருக்கு போல. அந்த மதிப்பெண் நிலவரம் சுட்டியில் பாருங்க.

said...

தருமி
கணக்கு 1 - சரி
4,5 - தவறு!

said...

வினையூக்கி

பூனைக்கணக்கு இன்னும் காலை வாருது போல!!

said...

//பூனைக்கணக்கு இன்னும் காலை வாருது போல//

பேசாம பூனைக்கே கால் போட்டு விசாரிச்சிடலாம்.

said...

எங்கு தொகுத்திருக்கிறீர்கள்? சுட்டி சுட்டதடா (உங்களையல்ல)

said...

இன்னும் தெளிவாவா,
சரி ஆண்டவன் துணையுடனேயே..

அபிமன்யு இறந்த அடுத்த நாள், அர்ஜுனன் ஜெயத்ரதனை துரத்தியபோது தன் சக்ராயுதத்தால் சூரியனை மறைத்து பகலை இரவாக்கினார் கிருஷ்ணர். சரியா?

said...

ராம்ஸ் இப்போ திருப்புகழ் கேள்விக்கு முழுவிடை தந்துட்டீங்க!!

said...

சேதுக்கரசி,

சுட்டி சரி இல்லையா? சொல்லுங்க. சரி பண்ணப் பார்க்கறேன். எனக்கு சரியா தெரியுதே...

said...

1. Illiterate Beast
2. Lord Krishna's leelas namely
Destroying 10 headed Ravanan
Churning of Mandhra Malai
Changing Day into Night by Masking the Sun
3. Boothagi
4. One who is wearing Thulasi Malai
5. Madal Thazahi = Coconut Leave
6. Kural to be sung in the raga "Niroshta"

from Simulation

said...

Maths 5. 204 ( google upayam ;)))

English 1: Idiot?? (forrest gump bookla varum)

Tamil 3: pithu pidithaval??

said...

//pottery to caste votes //

aiyya, athu cast votes illaya..

inga kooda caste-a kondu vanthuteengale :)))))

said...

சிமுலேஷன்

தமிழ் 1 - இன்னும் குறிப்பா சொல்லணுமே. நீங்க ரொம்ப பொதுவா சொல்லிட்டீங்க.

தமிழ் 2,3,5 - சரி

4 - தவறு

6 - நீங்க சொன்னாதான் இந்த விஷயம் எல்லாம் எங்களுக்குத் தெரியும். ஆனா நான் எதிர்பார்பது வேற!

said...

சிங்கமே,

ஆங்கிலம் 1, கணக்கு 5 - சரி

தமிழ் 3 - தவறு

said...

ஆஹா!! மாப்பு ஐயா மாப்பு!!

சரி பண்ணிடறேன்!!

சாதி ஒழித்த பெருந்தலை சிங்கம்லே வாழ்க!!

said...

பூனைக்கணக்கு
ஒவ்வொரு பையிலேயும் 56 பூனை மொத்தம் 56 * 4 = 224

ஒரு ஆளிடம் 7 பை ஆகவே
1568 பூனைக்கால்கள்

மொத்தம் 7 பேர் = 10976 பூனைக்கால்கள் + 14 மனிதக்கால்கள்

said...

thala thamiz 5. Boothanai?? (krishnarai kolla kamsanaal evi vida pattaval).. ithu correctna naan ippave thoonga poyiduven

said...

தமிழ்
3. யசோதை

said...

english 4. scapegoat
math 5. 204 squares

said...

4. 9828

said...

சிங்கம்லே ACE,

//aiyya, athu cast votes illaya//

கொத்தனாருக்கே இங்கிலிபீஸ் உருப்படியாத் தெரியாததுனால தான நம்மளக் கேள்வி கேட்குறாரு :)

said...

வினையூக்கி

நீங்க தூங்கப் போகலாம்! இப்போ பூனைக்கணக்கு விடை சரி! :)

said...

வினையூக்கி இன்னும் ஒண்ணு இருக்கே தமிழ் 3!!

said...

சிங்கம்லே ஏஸ் - நீங்க தூங்கப் போகலாம்!! :))

தமிழ் 3 - சரியான விடை!