Wednesday, October 10, 2007

உங்களுக்கு ராஜ் படேலைத் தெரியுமா?

நம்ம ஸ்கூலில் படிக்கும் பொழுது இப்படி ஒரு ஸ்கூலில் படிக்க மாட்டோமா? நமக்கு இப்படி ஒரு நண்பர்கள் குழாம் அமையாதா? நம்ம கூடவும் இப்படி அழகான பொண்ணுங்க படிக்க மாட்டாங்களான்னு ஏங்க வைத்தது ஆர்ச்சியும் அவனது நண்பர்களும். ரிவர்டேல் என்ற ஊரில் ஆர்ச்சி ஆண்ட்ரூஸ் என்பவனும் அவனது நண்பர்கள் பெட்டி, வெரானிகா, ஜக்ஹெட், ரெக்கி மற்றும் பலர் அடிக்கும் கூத்துக்கள் நம் நினைவை விட்டு அகலாதவை அல்லவா!

இப்பொழுது இந்த நண்பர்கள் குழாமில் புதிதாக அறிமுகம் ஆகி இருக்கும் நபர்தான் ராஜ் படேல். மாறி வரும் அமெரிக்க சமுதாயத்தில் இந்தியர்களின் பங்கினை பறைசாற்றும் விதமாகவே இம்மாற்றம் நிகழ்ந்துள்ளது. ராஜின் தந்தை ஒரு மருத்துவராகவும், அவனது தாயார் ஒரு விஞ்ஞானியாகவும், அவனது தமக்கை நம்மூர் சொல்லாடலில் டபுள் பிரமோஷன் பெறும் அளவு புத்திசாலியாகவும் காண்பிக்கப் படுகிறார்கள். ராஜுக்கு ஸ்கேட்டிங் செய்வதிலும், சினிமா எடுப்பதிலும்தான் ஆசை. எங்கு சென்றாலும் விடியோ காமிராவுடன் அலைவது போன்ற பாத்திரப் படைப்பு!



ராஜ் படேல் தொடர்ந்து வரும் ஒரு பாத்திரமா அல்லது சில இதழ்களுடன் விடைபெற்று விடுவானா என்பது ஆர்ச்சி காமிக்ஸ் ரசிகர்கள் இடையே உலா வரும் கேள்வி. ஹாரி பாட்டர் புத்தகங்களில் கூட பார்வதி, பத்மா என்ற சகோதரிகள் வந்தாலும் அவர்களுக்குப் பெரும் அளவில் பாத்திர படைப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் இந்தியர்கள் எங்கும் வியாபித்து வருவதை காண்பிக்க இப்படி ஒரு பாத்திரத்தை உருவாக்கிய ஆர்ச்சி காமிக்ஸ் நிறுவனத்தாருக்கு நமது பாராட்டுக்கள். மேல் விபரங்களுக்கு இந்தச் சுட்டியைப் பாருங்கள்.

43 comments:

said...

ரொம்ப நாள் ஆச்சே பதிவு போட்டு. மக்கள் எல்லாம் மறக்காம இருக்கணுமுல்ல. அதான் இப்படி!! :))

said...

out-RAJ-ous postuuu:-)

//இப்படி ஒரு பாத்திரத்தை உருவாக்கிய ஆர்ச்சி காமிக்ஸ் நிறுவனத்தாருக்கு நமது பாராட்டுக்கள்//

அதே!
பையன் படமும் நல்லா இருக்கு! :-)

said...

சிம்ப்ஸன்ஸில்(Simpsons) வரும் அப்பு மாதிரி ராஜ் படேலை ஒரு கடையில் உட்கார வைக்காமல் இருந்த ஆர்ச்சி காமிக்ஸுக்கு ஒரு ஓ போடுவோம்

said...

//ரொம்ப நாள் ஆச்சே பதிவு போட்டு. மக்கள் எல்லாம் மறக்காம இருக்கணுமுல்ல. அதான் இப்படி!! :))//

உங்களை மறக்க முடியுமா? நீங்க வேணா பாருங்க...ராஜ் படேல் மாதிரியே இன்னும் கொஞ்ச நாள்ல "Elavasa Kothanar and the Order of Masons"னு நாவல் வந்தாலும் வரும்.
:)

said...

கிட்டத்தட்ட,, நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேல்
எங்கள் வாழ்க்கையில் இணைந்து வரும் காரக்டர் ஆர்ச்சி&ஃப்ரண்ட்ஸ்.
அவர்களை நினைவு படுத்தியதற்கு நன்றி கொத்ஸ்.

பசங்களுக்குள்ள சண்டை வந்தால் முதல்லில் இந்த வாரம் நோ ஆர்ச்சி னு சொன்னாப் போதும். இம்மீடியட் எஃபெக்ட்:)))

இப்போது இந்தியப் பையனும் சேர்ந்துவிட்டானா. மிக்க மகிழ்ச்சியாக இருக்க்றது.

said...

dilbert-லும் அசோக் என்ற ஒரு பாத்திரம் அறிமுகபடுத்த பட்டிருக்கிறது. இவர் IIT-ல் படித்த ஒரு மிக சிறந்த அறிவாளி, ஆனால், அலுவலகங்களில் நடக்கும் அரசியலில் பிழைக்க தெரியாத இ.வா-வாக காண்பிக்க பட்டிருக்கிறார்..

http://en.wikipedia.org/wiki/Asok_%28Dilbert_character%29

said...

இலவசம் சார்,

தமிழ் வழிப்பயிற்ச்சியில் பள்ளிக்கூடம் போனதாலயோ என்னமோ ஆர்ச்சி தான் எளிதில் புரிந்த ஆங்கில காமிக்ஸ் புத்தகம்.எனக்கு ஜக் ஹெட் நினைவு உள்ளது.

நீங்கள் கொடுத்த இணைப்பில் எவ்வளவு தூரம் racism இல்லாமல் raj patelஐ உண்டாக்கியிருக்கிறர்கள் என்று நினைக்கும்போது நான் சமீபத்தில் பார்த்த jyothika &vikram duet காட்சி தான் நினவுக்கு வருது.இருவரும் வெள்ளைகாரர்கள் மாதிரி வேட்டைக்காரன் உடை போட்டு அவர்களை காட்டு வாசிகள், கருப்பாய் இருப்பவர்கள் துரத்துவது போல் பாட்டு.

said...

இது வரைக்கும் தெரியாம இருந்துச்சு இப்ப தெரிஞ்ச்சுகிட்டாச்சு.. ராஜ் படேலை பற்றி....

மறுக்க முடியாத அளவுக்கு அங்கன நம்ம வளர்ச்சி இருக்கு என்பதை தான் காட்டுகிறது இதுவும்.

:)

said...

@ கைப்புள்ள...

ஏன் இப்படி எல்லாம்....

சரி.. நம்ம தல சரித்திரத்தில் வரும் போது அதை கைத்தட்டி வரவேற்பது தானே நம் பண்பு... நான் இப்பவே கைய தட்டுறேன்...

தட் தட் தட்...

said...

////ரொம்ப நாள் ஆச்சே பதிவு போட்டு. மக்கள் எல்லாம் மறக்காம இருக்கணுமுல்ல. அதான் இப்படி!! :))//

உங்களை மறக்க முடியுமா? நீங்க வேணா பாருங்க...ராஜ் படேல் மாதிரியே இன்னும் கொஞ்ச நாள்ல "Elavasa Kothanar and the Order of Masons"னு நாவல் வந்தாலும் வரும்.
:)//


தல சொன்னதை நான் வரிக்கு வரி வழிமொழிகிறேன்.... :))

said...

"Elavasa Kothanar and the Order of Masons"//

செம ..
:)

said...

//out-RAJ-ous postuuu:-)//

பதிவைப் படிச்சீரோ இல்லையோ. படத்தை நல்லாப் பார்த்திருக்கீரு!! :)

said...

அதுக்குதான் அடிச்சுகிட்டேன் மங்களம் பாடி முடிக்காதீங்க திருப்புகழ் பாடி முடிங்கன்னு! இதல்லாம் லேட்டஸ்ட் ட்டிரண்டுங்க..இப்பவும் ஒன்னும் கெட்டு போகலை வினாயகர் துதி பாடி ஒரு திருப்புகழோடு சாத்துங்கப்பா!

(அபி அப்பா தனிமடலில் அனுப்பியது)

said...

பின்னூடமிட நினைத்து நீண்டு போனதால் பதிவே இட்டுட்டேன்.

கொஞ்சம் வந்து படிச்சுட்டு கருத்துசொல்லுங்க.

said...

இ.கொ,

//ராஜின் தந்தை ஒரு மருத்துவராகவும், அவனது தாயார் ஒரு விஞ்ஞானியாகவும், அவனது தமக்கை நம்மூர் சொல்லாடலில் டபுள் பிரமோஷன் பெறும் அளவு புத்திசாலியாகவும் காண்பிக்கப் படுகிறார்கள். ராஜுக்கு ஸ்கேட்டிங் செய்வதிலும், சினிமா எடுப்பதிலும்தான் ஆசை. எங்கு சென்றாலும் விடியோ காமிராவுடன் அலைவது போன்ற பாத்திரப் படைப்பு!
//

இதில் போட்டிருக்கும் பாத்திரப்படைப்பை பார்த்தால் , அது மனோஜ் நைட் ஷ்யாமளன் என்ற இந்திய வம்சாவளி ஹாலிவுட் டைரக்டரை முன்மாதிரியா வைத்து உருவாக்கப்பட்டது போல இருக்கே!

இங்கே கூட ஸ்பைடர் மேனுக்கு வேட்டிக்கட்டி இந்தில காமிக்ஸா போட்டு இருக்காங்களாம்!
http://www.thehindu.com/thehindu/mp/2004/07/22/stories/2004072200850100.htm

said...

கொத்சு

புதரகத்தில் கலசுரல் சென்சிடிவிட்டியை மக்கள் மனதில் வளர்க்கவும்,உலகெங்கும் உள்ள இந்திய டையஸ்போராவின் வாசகரை கவரவும் இந்த பாத்திரபடைப்பு உருவாக்கப்பட்டிருக்கலாம். இதுபோன்ற பாத்திரபடைப்புகள் நிறவெறி நிலவும் மேற்கத்திய நாடுகள் சிலவற்றின் மனோபாவத்தையும் நாள்போக்கில் மாற்ற உதவலாம்.

said...

பின்வரும் கேள்விகளை எதிர்பாருங்கள்:

தலைக்கு கருப்பு கலரு அடிச்சுட்டா இந்தியனா?-இளா கேட்டது.

ஏன் ஆரியனா காட்டுறாங்க? - ஒரு குஞ்சு வந்து கேட்கும்

படேல் ஒரு திராவிட குஞ்சே- ஆரியவம்சம் சொல்லும்.

ராஜ் படேலின் டவுசர் கிழியுது, தாகம் தீருது- பெப்ஸி உமா நின்னுகிட்டே ஷொல்லுவாங்க.

இப்படு நிறைய வரும்னு பார்த்த சும்மா செம பதிவு போட்டுட்டாரு டாக்டரு.. அய்யோ மருத்துவர் அய்யா. தமிழ்ல சொன்ன வரி விலக்கு உண்டாம்ல.

said...

ரொம்ப மகிழ்ச்சியான விஷயம்.

said...

//இப்பொழுது இந்த நண்பர்கள் குழாமில் புதிதாக அறிமுகம் ஆகி இருக்கும் நபர்தான் ராஜ் படேல்.//

"அறிமுக"படுத்தியதற்கு நன்றி, கொத்ஸ்!

said...

//சிம்ப்ஸன்ஸில்(Simpsons) வரும் அப்பு மாதிரி ராஜ் படேலை ஒரு கடையில் உட்கார வைக்காமல் இருந்த ஆர்ச்சி காமிக்ஸுக்கு ஒரு ஓ போடுவோம்//

ஆமாங்க. அப்புவைக் கடையில் உக்கார வெச்சாங்க. படேல் சகோதரிகள் அப்பப்போ காணாமப் போயிடறாங்க. அசோக்கும் அப்பப்போ தலை காண்பிக்கும் படியான ஆள். இந்தப் பையனாவது நல்ல படியா வரணும்.

said...

//இன்னும் கொஞ்ச நாள்ல "Elavasa Kothanar and the Order of Masons"னு நாவல் வந்தாலும் வரும்.//

ஆக மொத்தம் நம்மளைக் கொல்லவும் ஒரு க்ரூப் அலையுதுன்னு கன்பர்ம் பண்ணிட்டீங்க!! யாரு பக்கத்தில் வரும் பொழுது நம்ம விழுப்புண்கள் எல்லாம் சூடாகுதுன்னு பார்க்கலாம்.

said...

கொத்தனார், ராஜ் கிட்டே என் அன்பை தெரிவியுங்கள்.

எதுக்கு இப்போ டாக்டர் இவ்வளவு டென்ஷன் படறாரு இந்த ராஜ் பயபுள்ளயே பாத்து. எதுக்கும் பிபிய செக் பண்ண சொல்லுங்க

said...

//கிட்டத்தட்ட,, நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேல்
எங்கள் வாழ்க்கையில் இணைந்து வரும் காரக்டர் ஆர்ச்சி&ஃப்ரண்ட்ஸ்.
அவர்களை நினைவு படுத்தியதற்கு நன்றி கொத்ஸ்.//

இங்க நிறையா பேரு வாழ்க்கையில் ஒட்டி இருக்கும் பாத்திரங்கள் இவங்க இல்லையா!

//பசங்களுக்குள்ள சண்டை வந்தால் முதல்லில் இந்த வாரம் நோ ஆர்ச்சி னு சொன்னாப் போதும். இம்மீடியட் எஃபெக்ட்:)))//

நல்ல வேளை. இதுவே அவங்க மனோரமா பட ரசிகர்களா இருந்தா நோ ஆச்சின்னு சொல்லி இருக்கணும் இல்லையா!! :))

//இப்போது இந்தியப் பையனும் சேர்ந்துவிட்டானா. மிக்க மகிழ்ச்சியாக இருக்க்றது.//

ஆமாம். ஆனா இந்த இராம்ஸ் சொல்லறதைப் படிச்சீங்களா?

said...

//:)//

சர்வேசன், தெய்வீகச் சிரிப்பு ஐயா உங்கள் சிரிப்பு!!

said...

எங்களுக்கு இ..கொ.வைத்தான் தெரியும்!

அவர் வந்து இதுமாதிரி சொன்னாத்தான் ராஜ் படேலையெல்லாம் தெரியவரும்!

இந்த பேஸிக் ஈக்வேஷன் தெரியாதா உங்களுக்கு?
:))


ராஜுக்கு வாழ்த்துகள்!

said...

//dilbert-லும் அசோக் என்ற ஒரு பாத்திரம் அறிமுகபடுத்த பட்டிருக்கிறது. இவர் IIT-ல் படித்த ஒரு மிக சிறந்த அறிவாளி, ஆனால், அலுவலகங்களில் நடக்கும் அரசியலில் பிழைக்க தெரியாத இ.வா-வாக காண்பிக்க பட்டிருக்கிறார்..//

நம்மாளுங்களுக்கா அரசியல் தெரியாது? இவனுங்க எல்லாம் வெள்ளந்திங்க பாக்குறத உண்மையின்னு நம்புறானுங்க. நம்ம ஆள் ஆடுற ஆட்டமெல்லாம் புரிய நெம்ப நேரம் ஆகுமுல்லா!!

said...

//தமிழ் வழிப்பயிற்ச்சியில் பள்ளிக்கூடம் போனதாலயோ என்னமோ ஆர்ச்சி தான் எளிதில் புரிந்த ஆங்கில காமிக்ஸ் புத்தகம்.எனக்கு ஜக் ஹெட் நினைவு உள்ளது.//

ஆமாங்க. அவர்தான் நம்மாளு! இல்லையா!!

//நீங்கள் கொடுத்த இணைப்பில் எவ்வளவு தூரம் racism இல்லாமல் raj patelஐ உண்டாக்கியிருக்கிறர்கள் என்று நினைக்கும்போது //

ரெண்டு மூணு இதழ்கள் வந்து படிச்சாத்தான் தெரியும். பார்க்கலாம்.

//ான் சமீபத்தில் பார்த்த jyothika &vikram duet காட்சி தான் நினவுக்கு வருது.இருவரும் வெள்ளைகாரர்கள் மாதிரி வேட்டைக்காரன் உடை போட்டு அவர்களை காட்டு வாசிகள், கருப்பாய் இருப்பவர்கள் துரத்துவது போல் பாட்டு.//

கனவுப் பாட்டுக்குக் கருத்து சொல்லி டயத்தை வேஸ்ட் பண்ணாதீங்க! அதுக்குன்னு நிறையா ஆளுங்க இருக்கு!!

said...

/மறுக்க முடியாத அளவுக்கு அங்கன நம்ம வளர்ச்சி இருக்கு என்பதை தான் காட்டுகிறது இதுவும்.//

ஆமாம் புலி. ஆனா நம்ம வளர்ச்சியைப் பார்த்துதான் தங்கமணிக்குப் பொறாமை. எடையைக் குறை, இடையைக் குறைன்னு ஒரே ஆர்ப்பாட்டமா இருக்கு!!

said...

//சரி.. நம்ம தல சரித்திரத்தில் வரும் போது அதை கைத்தட்டி வரவேற்பது தானே நம் பண்பு... நான் இப்பவே கைய தட்டுறேன்...

தட் தட் தட்...//

யோவ் சரித்திரமாவே ஆக்கிட்டீங்களா? பயமா இருக்குடே. அவ்வ்வ்வ்வ்வ்...

said...

//தல சொன்னதை நான் வரிக்கு வரி வழிமொழிகிறேன்.... :))//

ஹாரி பாட்டருக்கு நெத்தியில் ஒரே ஒரு வரிதான். இங்க பாருங்கடா நமக்கு வரி வரியா போடறாங்க!

said...

//செம ..
:)//

தருமி, அம்மாம் பெரிய பதிவு எழுதி இருக்கேன். ஒரு வார்த்தை இல்லை, இந்த பின்னூட்டத்துக்கு மட்டும் பதில் பின்னூட்டமா?

நல்லாயிருங்கைய்யா!

said...

//அதுக்குதான் அடிச்சுகிட்டேன் மங்களம் பாடி முடிக்காதீங்க திருப்புகழ் பாடி முடிங்கன்னு! இதல்லாம் லேட்டஸ்ட் ட்டிரண்டுங்க..இப்பவும் ஒன்னும் கெட்டு போகலை வினாயகர் துதி பாடி ஒரு திருப்புகழோடு சாத்துங்கப்பா!//

அபி அப்பா, நாங்க எல்லாம் நல்லாத்தேன் இருக்கோம். விக்கியில் பதிவு எழுதிக்கிட்டுதானே இருக்கோம். ஆனா நீர் வந்த நேரம்தான் பூங்காவையே நிறுத்திப்புட்டாங்க!! அதுக்கு எதாவது பரிகாரம் தேடும்.

said...

//பின்னூடமிட நினைத்து நீண்டு போனதால் பதிவே இட்டுட்டேன்.

கொஞ்சம் வந்து படிச்சுட்டு கருத்துசொல்லுங்க.//

வந்தாச்சு. இன்னும் கருத்து சொல்லணும். அப்பாலிகா வரேன்.

said...

//இதில் போட்டிருக்கும் பாத்திரப்படைப்பை பார்த்தால் , அது மனோஜ் நைட் ஷ்யாமளன் என்ற இந்திய வம்சாவளி ஹாலிவுட் டைரக்டரை முன்மாதிரியா வைத்து உருவாக்கப்பட்டது போல இருக்கே!//

அப்படித்தான் நானும் நினைச்சேன். சேம் பிஞ்ச்!

//இங்கே கூட ஸ்பைடர் மேனுக்கு வேட்டிக்கட்டி இந்தில காமிக்ஸா போட்டு இருக்காங்களாம்!
http://www.thehindu.com/thehindu/mp/2004/07/22/stories/2004072200850100.htm//

ஸ்பைடர் மேனுக்கு வேட்டியா? பெரிய கட்டடத்தில் ஏறும் போது காற்றில் வேட்டி பறந்து போகாமல் இருந்தால் சரி. ஒரு வேளை சூப்பர்மேன் மாதிரி வேட்டி மேல ஜட்டி போட்டுப்பாரோ? :))

said...

//புதரகத்தில் கலசுரல் சென்சிடிவிட்டியை மக்கள் மனதில் வளர்க்கவும்,உலகெங்கும் உள்ள இந்திய டையஸ்போராவின் வாசகரை கவரவும் இந்த பாத்திரபடைப்பு உருவாக்கப்பட்டிருக்கலாம்.//

அதே அதே!!

//இதுபோன்ற பாத்திரபடைப்புகள் நிறவெறி நிலவும் மேற்கத்திய நாடுகள் சிலவற்றின் மனோபாவத்தையும் நாள்போக்கில் மாற்ற உதவலாம்.//


இந்தப் பாத்திரத்தின் படைப்பு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

said...

//தலைக்கு கருப்பு கலரு அடிச்சுட்டா இந்தியனா?-இளா கேட்டது.

ஏன் ஆரியனா காட்டுறாங்க? - ஒரு குஞ்சு வந்து கேட்கும்

படேல் ஒரு திராவிட குஞ்சே- ஆரியவம்சம் சொல்லும்.//

விவ்ஸ், எப்படியோ நீ கேட்க வேண்டிய கேள்விகளை அவங்க பேரில் கேட்டுட்ட! நல்லா இருடே!!

said...

//ரொம்ப மகிழ்ச்சியான விஷயம்.//

நன்றி இரவி.

said...

//"அறிமுக"படுத்தியதற்கு நன்றி, கொத்ஸ்!//

நன்றி தென்றல்.

said...

//எதுக்கு இப்போ டாக்டர் இவ்வளவு டென்ஷன் படறாரு இந்த ராஜ் பயபுள்ளயே பாத்து. எதுக்கும் பிபிய செக் பண்ண சொல்லுங்க//

நீங்களே சொல்லுங்க அவர் கிட்ட. இப்போ நான் சொன்னா ரொம்பத்தான் ரென்சனாவாரு!

நல்லா இருக்கீங்களா? ரொம்ப நாள் ஆச்சே பேசி...

said...

//அவர் வந்து இதுமாதிரி சொன்னாத்தான் ராஜ் படேலையெல்லாம் தெரியவரும்!

இந்த பேஸிக் ஈக்வேஷன் தெரியாதா உங்களுக்கு?
:))//

இப்போ தெரிஞ்சிடுச்சு இல்ல!! :))

said...

இந்தப் பயதான் ராசுப்பாட்டீலா? நல்லாத்தான் படம் போட்டிருக்காங்க. இது பாராட்டுக்குரியதே. இந்த மாதிரிப் பண்பாட்டுக் கலப்புகளின் அறிமுகங்கள் நல்லதே. ஒற்றுமையை வளர்க்கும் என்று நம்புவோம்.

said...

நெகோஷியேட்டர் கதையில ஹீரோ அவசரமா தப்பிச்சு போகும்போது எதிர்த்தாப்பல உள்ள கடை போன் நம்பர் தருவாரு.. அதுவும் ஒரு பட்டேல்தான். போர்சைத் அண்ணன் கதையில எல்லாத்திலயும் ஒரு இந்திய பாத்திரம் இருக்கும்.. அதுக்கு என்ன இப்ப?

இதே ஆர்ச்சீஸ்ல எத்தனையோ வேற தேசத்தைச் சேர்ந்த பார்ட்டிங்க வருது.. அவங்க எல்லாம் இப்படித்தான் கொண்டாடுறாங்களா (சப்ரினா எந்த ஊர் சாமி?)

டாக்டர் அளவுக்கு எனக்கு கோவம் வரலேன்னாலும், இதிலெல்லாம் என்ன குஷின்னுதான் தோணுது :-)

said...

ஹிஹிஹி,யு.எஸ்ஸில் இருந்தப்போப் பார்த்தேன், படிக்கலை, போட்டிக்கு இருந்த ஆள் எனக்குத் தரலை, படிக்க! :P