Wednesday, October 24, 2007

நீ எல்லாம் ஒரு பொம்பளையா?

மனித இனத்திலும் சரி, வேறு பல வகை மிருகங்களிலும் சரி ஆண்கள்தான் பெண்களை விட வேகமாய் மூப்படைந்து இறந்து போகிறார்கள். நடிகைகள் எல்லாம் சீக்கிரம் அம்மா வேஷம் போட இன்னும் காலேஜ் மாணவனாகவே நடிக்கும் நடிகர்கள் எல்லாம் இந்த லிஸ்டில் சேர்த்தி கிடையாது. ஆராய்ச்சியாளர்கள் இதை, அட அந்த மூப்பு சமாச்சாரத்தை நடிகரை இல்லை, ஆராய்ச்சி செஞ்சு அதுக்குக் காரணம் கண்டுபிடிச்சிருக்காங்க. அதற்குக் காரணம் இனவிருத்திக்கான போட்டிதானாம்!

பார்னகிள் வாத்து, குள்ள கீரிப்பிள்ளை என ஒரே துணையைக் கொண்டு வாழும் இனங்களையும் பல துணைகளுடன் வாழும் சவானா பபூன் குரங்கு, சிகப்பு சிறகுடைய கருப்புப் பறவை (இப்படித்தாங்க பேர் போட்டு இருக்கு) போன்ற இனங்களையும் ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் கிம் க்ளட்டம் ப்ராக் மற்றும் கவிதா ஈஸ்வரன் இந்த உண்மையைக் கண்டுபிடித்துள்ளனர். இங்கிலாந்து பல்கலைக்கழம் சார்ப்பாக நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில் பலதார பழக்கமுடைய இனங்களில் ஆண்கள் விரைவில் வயதோகிகம் அடைந்து மடிந்துவிடுகிறார்கள் எனக் கண்டறியப் பட்டு இருக்கிறது.

ஒவ்வொரு முறை ஒரு ஆண் பெண்ணுடன் இணைய வரும் பொழுது அதற்கான போட்டி அதிகமாவதால் ஒரு ஆணிற்கு இனவிருத்திக்குக் கிடைக்கும் சராசரி நேரம் குறைகிறது. இதனால் அவற்றிக்கு நீண்ட ஆயுள் இல்லாமல் போகிறது. இன்று மனித இனத்திலும் பெண்களை விட ஆண்களே சீக்கிரம் மடிவது கற்காலத்தில் பலதார முறையில் மனித இனம் இருக்கும் பொழுது நம்மில் ஏற்பட்ட விளைவாக இருக்கலாம் என்றும் இந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதையே சாக்காக வைத்து பலதார மணம் புரிவது அல்லது பலருடன் உறவு வைப்பதோ தவறானது. அதனை இந்த ஆராய்ச்சி எந்த விதத்திலும் அங்கீகரிக்கவோ ஆதரவளிக்கவோ இல்லை என்றும் தெளிவாக சொல்லி இருக்கின்றனர்.

பல பெண்களைக் துணையாகக் கொண்டு வாழ்க்கையை நடத்தும் ஆண்களைப் பற்றிய இந்த ஆராய்ச்சி பல ஆண்களுடன் இருக்கும் பெண்கள் இனத்தைப் பற்றியும் ஆராய்ச்சி செய்ததாகத் தெரியவில்லை.

டிஸ்கி : இப்போ இப்படித் தலைப்பு வைப்பது ஒரு ஃபேஷனாக இருப்பதால்தான் இந்தத் தலைப்பு. இதுக்கும் பதிவுக்கும் சம்பந்தமே கிடையாது. நம்ம லக்ஷ்மி அக்கா, மோகந்தாஸ் அண்ணாச்சி எல்லாரும் இந்த தலைப்பில் பதிவு போட்டாங்களேன்னுதான் நானும் போட்டது. ஒரு தொடர்புக்கு வேண்டுமானால் அந்தக் கேள்விக்கு ஆமாம் என்றால் உங்களுக்கு ஆயுசு கெட்டி.

இது தொடர்புடைய சுட்டி.

67 comments:

said...

இதெல்லாம் நீ எழுதற மேட்டரப்பா எனச் சுட்டி மட்டும் தந்துவிட்டு வேடிக்கை பார்க்கும் நண்பருக்கு நன்றி!

said...

யோவ்... அப்படினு வேணாம் விடுங்க...

மோகன் தாஸ்க்கு ஒரு ஸ்மைலி போட்டேன்..

உங்களுக்கு :))

:))

said...

//இதெல்லாம் நீ எழுதற மேட்டரப்பா எனச் சுட்டி மட்டும் தந்துவிட்டு வேடிக்கை பார்க்கும் நண்பருக்கு நன்றி!//

யாரு அந்த புண்ணியவான்... டாக்ஸ்சா இல்ல பெனாத்துஸ்சா...

said...

இது நல்லா இருக்கே....அழகு, வியர்ட்னஸ், 8 - இந்த வரிசைல இந்த தலைப்பும் சேர்ந்துடுச்சா என்ன? ;)

said...

//இதெல்லாம் நீ எழுதற மேட்டரப்பா எனச் சுட்டி மட்டும் தந்துவிட்டு வேடிக்கை பார்க்கும் நண்பருக்கு நன்றி!//

யார் இப்படி சொன்னா?

உங்களுக்கு இதை எழுத எல்லா தகுதியும் இருக்கு...

டிஸ்கி: இது அறிவியல் கட்டுரையாக பார்த்தாலும் சரி இல்லை வெறும் தலைப்பை மட்டும் வைத்து பார்த்தாலும் சரி ;)

said...

பிரசண்ட் சார்.... :)

said...

எதுவுமே எழுதறவங்க எழுதினாத்தான் சுவையாச் சொல்லமுடியும் என்பதற்கு இந்தப் பதிவு நல்ல எடுத்துக்காட்டு, கொத்ஸ்!

//இதையே சாக்காக வைத்து பலதார மணம் புரிவது அல்லது பலருடன் உறவு வைப்பதோ தவறானது.//
எதுக்கு?
சீக்கிரமா செத்துப் போறதுக்கா?
:))

'மேஎடரப்பா' என்பதை "மேட்டராப்பா" எனப் புரிந்துகொண்டு பாலாஜி பண்ணின காமெடி சூப்பர்! :)))))

said...

உமக்கு வேற தலைப்பே கிடைக்கலையா :-(

said...

அப்படியா? ஆஹா.. ஓஹோ..

உள்ளேன் ஐயா

said...

/உமக்கு வேற தலைப்பே கிடைக்கலையா :-(/

இதே வருத்தம் லக்ஷ்மி இந்தத் தலைப்பை உபயோகித்த பொழுது ஏன் வரவில்லை

said...

டோன்ட் (டோண்டு இல்லை) ஃபுல் வோர்ட் ஃப்ரம் மை மவுத்(ஸு)...

said...

//'மேஎடரப்பா' என்பதை "மேட்டராப்பா" எனப் புரிந்துகொண்டு பாலாஜி பண்ணின காமெடி சூப்பர்! :)))))//

ஆஹா.. அவசரத்துல தப்பா புரிஞ்சிக்கிட்டனா...

அதானே எங்க கொத்ஸ கேள்வி கேக்கற தைரியம் யாருக்கு இங்க இருக்கு?

said...

இ.கொ,

//இந்த ஆராய்ச்சியில் பலதார பழக்கமுடைய இனங்களில் ஆண்கள் விரைவில் வயதோகிகம் அடைந்து மடிந்துவிடுகிறார்கள் எனக் கண்டறியப் பட்டு இருக்கிறது.//

//இன்று மனித இனத்திலும் பெண்களை விட ஆண்களே சீக்கிரம் மடிவது கற்காலத்தில் பலதார முறையில் மனித இனம் இருக்கும் பொழுது நம்மில் ஏற்பட்ட விளைவாக இருக்கலாம் என்றும் இந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.//



polygamy- பொதுவாக பல இணைகள்

polygyny-ஒரு ஆண் பலப்பெண்களை மணப்பது.

polyandry-ஒரு பெண் பல ஆண்களை மணப்பது.

பல தாரம் எனில் ஒரு ஆண் பல பெண்களை மணப்பது. ஆனால் மனித இனத்தில் ஆண்கள் பெண்களை விட அதிக ஆயுட்காலம் இருக்கிறார்கள், பெண்கள் சீக்கிரம் இறக்கிறார்கள் என்று சொல்லி அதற்கு பல தாரம் கற்காலத்தில் இருந்தது என்கிறீர்கள், இதன் அர்த்தம் பெண்கள் அக்காலத்தில் பல கணவர்களுடன் வாழ்ந்தார்கள் என்று சொல்கிறீர்களா?

ஆனால் ஆராய்ச்சி நடந்ததோ பல மனைவிகளை வைத்திருக்கும் ஆண் உயிர்களிடம்! அப்படிப்பார்த்தால் பெண்களின் ஆயுட்காலம் குறைவாக இருப்பதற்கு பல தாரம் காரணாமாக இருக்க முடியாது.

ஏன் இந்த குழப்ப வேலை?

மேலும் , கிருத்துவர்களின் ஒரு பிரிவிலும் , இஸ்லாமிலும் சட்டப்படி ஒரு ஆண் ஒரு மனைவிக்கு மேல் வைத்திருக்கலாம், அப்படி எனில் அந்த மதங்களில் ஆண்கள் எல்லாம் அல்பாஅயுசில் சாகிறார்களா ?

மொக்கை பதிவா தான் போட்டேன் இதில் எல்லாம் கேள்விக்கேட்க கூடாது என்று சொன்னால் நான் ஜகா வாங்கிக்கொள்கிறேன்!
(ஆனாலும் மொக்கைக்கு அறிவியல் பேக் கிரவுண்ட் வரும் போது சும்மா இருக்க முடியலை)

said...

/உமக்கு வேற தலைப்பே கிடைக்கலையா :-(/

இதே வருத்தம் லக்ஷ்மி இந்தத் தலைப்பை உபயோகித்த பொழுது ஏன் வரவில்லை//

வேற ஒண்ணுமில்லை, உருப்படியான பதிவுக்கு இப்படி மொக்கை தலைப்பு தேவையான்னு :-)

said...

சீக்கிரம் போக இப்படி ஒரு வழி இருக்கிறதா என நினைக்காமல் இருந்தால் சரி! :))

said...

//உங்களுக்கு :))

:))//

மோகந்தாஸ் அண்ணாச்சி, அடுத்தது நான் என பதிவுகளைப் பார்த்து சிரிப்பான் போடும் உம் ஆண் ஈயத்தனம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துவிட்டதே!! :)

said...

//யாரு அந்த புண்ணியவான்... டாக்ஸ்சா இல்ல பெனாத்துஸ்சா...//

இல்லை புலி. டாக்ஸ்தான் ஆனா நீ நினைக்கும் ஆள் இல்லை!!

(யப்பா டாக்ஸ்களா, நாங்க சொல்றது Docs, நீங்க பாட்டுக்கு Dogs அப்படின்னு நினைச்சு இனவெறி கேஸ் போடப் போறீங்க! )

said...

//இது நல்லா இருக்கே....அழகு, வியர்ட்னஸ், 8 - இந்த வரிசைல இந்த தலைப்பும் சேர்ந்துடுச்சா என்ன? ;)//

அழகு - பெண்கள். சரி.

வியர்ட்னெஸ் - பெண்கள். சரி்!!

8 - இதுக்கு என்ன சம்பந்தம்? புரியலையே...

லக்ஷ்மிக்கா, சும்மா தமாசு. இதுக்கு வேற தனி பதிவு போட்டு நம்மளை பெரிய ஆளா ஆக்கிடாதீங்க! :))

said...

//யார் இப்படி சொன்னா?

உங்களுக்கு இதை எழுத எல்லா தகுதியும் இருக்கு... //

யப்பா ராசா, ஒழுங்கா படி. இது மாதிரி எழுத்ததான் லாயக்கு அப்படின்னுதான் சொல்லறாங்க. :)

said...

//பிரசண்ட் சார்.... :)//

இங்க வந்தாச்சு சரி. போன பதிவில் எங்க ஆளைக் காணும். ஏன் ஆப்ஸெண்ட்?

said...

//மேஎடரப்பா' என்பதை "மேட்டராப்பா" எனப் புரிந்துகொண்டு பாலாஜி பண்ணின காமெடி சூப்பர்! :)))))//

எழுத்துப் பிழை இல்லாம எழுதின போதே பிள்ளை கலங்கிப் போயி இருக்கு. நீங்க வேற.

வெட்டி, அவரு எழுதின முதல் வார்த்தை மேட்டரப்பா. இப்போ புரியுதா? :))

said...

//உமக்கு வேற தலைப்பே கிடைக்கலையா :-(//

எல்லாம் 'உங்களை மாதிரி' ஆளுங்களை வர வைக்கத்தான்! :))

said...

//உள்ளேன் ஐயா//

ஓக்கே பாடத்தை ஒழுங்கா கவனிக்கணும். சரியா!!

said...

//இதே வருத்தம் லக்ஷ்மி இந்தத் தலைப்பை உபயோகித்த பொழுது ஏன் வரவில்லை//

நல்ல தலைப்பா இருக்கே. இதை வெச்சு நல்லா விவாதம் பண்ண வேண்டிய நேரத்தில் இப்படி மொக்கை போட்டுட்டீங்களே அப்படின்னு அவங்க கவலைப் பட்டுட்டாங்க போல!! :))

said...

//டோன்ட் (டோண்டு இல்லை) ஃபுல் வோர்ட் ஃப்ரம் மை மவுத்(ஸு)...//

வெய் நாட் வோய்? சும்மா சொல்ல வந்ததைச் சொல்லும்.

said...

//ஆஹா.. அவசரத்துல தப்பா புரிஞ்சிக்கிட்டனா...//

அதேதான்.

//அதானே எங்க கொத்ஸ கேள்வி கேக்கற தைரியம் யாருக்கு இங்க இருக்கு?//

நீங்க மண் ஒட்டலைன்னு சொல்ல என் பெயர்தானா கிடைச்சுது? :))

said...

வவ்வால், நிதானம் நிதானம்.

//மொக்கை பதிவா தான் போட்டேன் இதில் எல்லாம் கேள்விக்கேட்க கூடாது என்று சொன்னால் நான் ஜகா வாங்கிக்கொள்கிறேன்!
(ஆனாலும் மொக்கைக்கு அறிவியல் பேக் கிரவுண்ட் வரும் போது சும்மா இருக்க முடியலை)//

அறிவியல் பின்னணிதான். தப்பு இருந்தா சரி பண்ணனும். ஆனா தப்பு இருக்கா என்ன தப்புன்னு பார்க்கலாம்.

//ஆனால் மனித இனத்தில் ஆண்கள் பெண்களை விட அதிக ஆயுட்காலம் இருக்கிறார்கள், பெண்கள் சீக்கிரம் இறக்கிறார்கள் என்று சொல்லி அதற்கு பல தாரம் கற்காலத்தில் இருந்தது என்கிறீர்கள்,//

அப்படிச் சொல்லலை. சரியா படியுங்க. நான் சொல்ல வந்தது எல்லாம் - "the more polygynous a species is, the more likely their males were to age faster and die earlier than females."

//ஆனால் ஆராய்ச்சி நடந்ததோ பல மனைவிகளை வைத்திருக்கும் ஆண் உயிர்களிடம்! அப்படிப்பார்த்தால் பெண்களின் ஆயுட்காலம் குறைவாக இருப்பதற்கு பல தாரம் காரணாமாக இருக்க முடியாது.//

இதுவும் நான் சொல்லலை.

//இந்த ஆராய்ச்சியில் பலதார பழக்கமுடைய இனங்களில் ஆண்கள் விரைவில் வயதோகிகம் அடைந்து மடிந்துவிடுகிறார்கள் எனக் கண்டறியப் பட்டு இருக்கிறது.//

இதுதான் நான் சொன்னது.

//மேலும் , கிருத்துவர்களின் ஒரு பிரிவிலும் , இஸ்லாமிலும் சட்டப்படி ஒரு ஆண் ஒரு மனைவிக்கு மேல் வைத்திருக்கலாம், அப்படி எனில் அந்த மதங்களில் ஆண்கள் எல்லாம் அல்பாஅயுசில் சாகிறார்களா ?//

இன்று மனித இனங்களில் ஆண்களை விட பெண்களின் ஆயுட்காலம்தான் அதிகம். இதற்குக் காரணமாக முற்காலத்தில் மனிதன் பலதார பழக்கமுடையவனாக இருந்தது காரணமாக இருக்கலாம் எனச் சொல்கிறார்கள். மற்றபடி இன்று பலதாரம் மணம் புரிவதால் அவர்கள் சொல்லும் பெண்களைக் கவருவதற்கான போட்டி எதுவும் இல்லையே. அதனால் இன்றைய சூழலில் இது எவ்வளவு தூரம் சரியானதென்று தெரியவில்லை.

said...

//வேற ஒண்ணுமில்லை, உருப்படியான பதிவுக்கு இப்படி மொக்கை தலைப்பு தேவையான்னு :-)//

என்ன செய்ய, அப்போதானே உஷாக்கா பதிவுக்குள்ள வராங்க!! :))

said...

//சீக்கிரம் போக இப்படி ஒரு வழி இருக்கிறதா என நினைக்காமல் இருந்தால் சரி! :))//

அதான் அவங்களே அப்படி டிஸ்கி போட்டு இருக்காங்களே ரவி. :)

said...

இதுல இப்பிடியொரு விசயமிருக்கா... இவ்வளவு நாளாத் தெரியாமப் போச்சே. எல்லாம் ஒங்களப் போல அறிஞ்ச தெரிஞ்சவங்க சொன்னாத் தெரிஞ்சிக்கிறோம். அப்ப பெண்களையெல்லாம் நெறைய ஆண்களளக் கல்யாணம் செஞ்சுக்க வெச்சுட்டா....ஆயுசு சமமாயிருமுல்ல. இது நல்ல திட்டமாயிருக்கே!

said...

நல்ல பதிவு, அற்புதமான தலைப்பு!!

ஒரு பொருள் A, B ரெண்டு பேர் கிட்டயும் சம அளவில இருக்கு. இதில A கிட்ட இருக்கறதை B வாங்கறார். இப்ப யார்கிட்ட அதிகம் இருக்கும்? B கிட்டதானே? சிம்பிள் கணக்கு.

உயிரை வாங்கறவங்ககிட்ட அதிகம் ஆயுள் இருக்குமா, கொடுக்கறவங்ககிட்ட இருக்குமா??

said...

//மொக்கை பதிவா தான் போட்டேன் இதில் எல்லாம் கேள்விக்கேட்க கூடாது என்று சொன்னால் நான் ஜகா வாங்கிக்கொள்கிறேன்!
(ஆனாலும் மொக்கைக்கு அறிவியல் பேக் கிரவுண்ட் வரும் போது சும்மா இருக்க முடியலை)//

ஐயா வவ்வால் எந்த மரத்திலே தலைகிழே தொங்குவீங்க'ன்னு கொஞ்சம் சொல்லுங்க..... நாங்கெல்லும் அதேமாதிரி தொங்கி பார்க்கிறோம், தொங்கினாமட்டும் உங்க அளவுக்கு அறிவு வளர்ந்துருமான்னு தெரியலை... :)

எந்த டாபிக்'னாலும் அதுக்கு அட்டகாசமா விளக்கம் சொல்லுறீங்க, சினிமா குவிஸிலே கூட எல்லாத்துக்கும் பதில் சொல்லுறீங்க, சரக்கடிச்சதை கூட சூப்பரா விவரிக்கீறிங்க... :))

said...

//இலவசக்கொத்தனார் said...

//உங்களுக்கு :))

:))//

மோகந்தாஸ் அண்ணாச்சி, அடுத்தது நான் என பதிவுகளைப் பார்த்து சிரிப்பான் போடும் உம் ஆண் ஈயத்தனம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துவிட்டதே!! :)/

கொத்ஸ்,

அது பித்தளை தானே??? எதுக்கு மறுபடியும் அதிலே ஈயம் பூசி பார்க்கிறீங்க... :))

said...

//இலவசக்கொத்தனார் said...

//பிரசண்ட் சார்.... :)//

இங்க வந்தாச்சு சரி. போன பதிவில் எங்க ஆளைக் காணும். ஏன் ஆப்ஸெண்ட்?/

ஆபிஸிலே வேலை பார்க்க சொல்லிகிட்டே இருக்கானுக...... வரவர நம்மை மேலே இருந்த பயமே அவனுகளுக்கு போயிருச்சி... :((

said...

இங்கே ஒரு தாரத்துக்கே தாவுதீர்ந்துபோய் ஓடுதுங்க. இதுலே பலதாரம் வேறயா?

பலதாரத்தில் யாருக்குன்னு ஆடுவான்? அந்த டென்ஷனில்தான் சீக்கிரம் மண்டையைப் போட்டுடறான்.

பினாத்தல் போட்ட கணக்கு ........

said...

இ.கோ,

நீங்கள் ஆண்களிடம் ஆய்வு செய்தது என்று தான் போட்டுள்ளீர்கள், நான் அப்படியானால் பெண்களின் ஆயுட்காலம் குறைய அவர்கள் பல மணம் புரிந்தார்களா என்று கேட்டுள்ளேன்,(கொஞ்சம் முந்திய காலம் வரை ஆண்களே அதிக ஆயுளுடன் இருந்தார்கள்) ஏதேனும் குழப்பம் இருந்தால் இது தான் நான் கேட்க வந்தது.

காரணம் நவீன மருத்துவம் வரும் முன்னர் பெண்களே மிக சீக்கிரம் மரணம் அடைந்தார்கள் , எனப்படித்தது தான்(அக்காலத்தில் பிரசவக்காலத்தில் சரியான மருத்துவ வசதி இல்லாமல் பெரும்பாலான பெண்கள் இறந்து விடுவார்கள், ஷா ஜெஹானின் மனைவி மும்தாஜ் கூட 16 வது பிரசவத்தில் தான் இறந்து போனாள்)

பெண்களின் ஆயுட்காலம் தற்போது தான் அதிகரித்துள்ளது , அதற்கு முன்னர் குறைவாக இருந்தது என நான் படித்த போது இருந்தது! அதை வைத்தே கேட்டேன்!

மேலும் உங்களின் பதிவில் முதலில் படிக்கும் போது இன்னும் குழப்பியது. ஆனால் பெண்களின் ஆயுட்காலம் அக்காலத்தில் குறைவாக இருந்தது எனப்படித்ததின் அடிப்படையில் கேட்டதே இக்கேள்வி.

said...

வவ்வால், இன்னும் குழப்பம் இருக்கா இல்லை தீர்ந்ததா? உங்கள் பின்னூட்டத்தைப் படித்த பின் எனக்கு இன்னும் அந்த குழப்பம் தீரவில்லையே! :))

said...

//அப்ப பெண்களையெல்லாம் நெறைய ஆண்களளக் கல்யாணம் செஞ்சுக்க வெச்சுட்டா....ஆயுசு சமமாயிருமுல்ல. இது நல்ல திட்டமாயிருக்கே!//

யோவ் கள்ளியில் பால், வர வர உம்ம போக்கே சரியில்லைய்யா. எல்லாம் தங்கி இருக்கும் நாடு செய்யும் வேலை. அம்புட்டுதான் சொல்வேன்.

said...

//ஐயா வவ்வால் எந்த மரத்திலே தலைகிழே தொங்குவீங்க'ன்னு கொஞ்சம் சொல்லுங்க..... நாங்கெல்லும் அதேமாதிரி தொங்கி பார்க்கிறோம், தொங்கினாமட்டும் உங்க அளவுக்கு அறிவு வளர்ந்துருமான்னு தெரியலை... :)//

இராம்,

கொஞ்சம் குழப்பமாக கேள்வி கேட்டு விட்டேன் என்று நக்கலா? தலை கீழா தொங்கியதால் குழம்பி போய்ட்டேன் சொல்றாப்போல இருக்கே.

சரக்கடித்து இருந்தால் தெளிவாக கேட்டு இருப்பேன், சரக்கடிக்காமல் கேட்டதால் தான் இந்த கொழப்பமே :-))

said...

//நல்ல பதிவு, அற்புதமான தலைப்பு!!//

தல, எல்லாம் உங்க ட்ரெயினிங்தான் தல!!

//ஒரு பொருள் A, B ரெண்டு பேர் கிட்டயும் சம அளவில இருக்கு. இதில A கிட்ட இருக்கறதை B வாங்கறார். இப்ப யார்கிட்ட அதிகம் இருக்கும்? B கிட்டதானே? சிம்பிள் கணக்கு.//

என்னமோ கணக்குப் போடறீரு. புரிஞ்சவங்க வந்து சொன்னாத் தேவலை!!

//உயிரை வாங்கறவங்ககிட்ட அதிகம் ஆயுள் இருக்குமா, கொடுக்கறவங்ககிட்ட இருக்குமா??//
ஆனாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்திதான். பின்ன தங்கமணி ப்ளாக் படிக்க ஆரம்பிச்சாச்சு. இன்னமும் இப்படி எல்லாம் கமெண்ட் போடறீரே!!

said...

இந்த பதிவை அடுத்த Tabக்கு அனுப்பி வைக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கும் என நம்புகிறேன் ;)

said...

இந்த தலைப்பை வெச்சுட்டு எத்தனை பேரய்யா புகுந்து விளையாடுவீங்க?:-)))

எனக்கென்னவோ இந்த பதிவில் ஆணாதிக்கமும், பெண்ணாதிக்கமும் கலந்து இருப்பதாக தோன்றுகிறது.அகில உலக ரேஞ்சில் ஒரு சதித்திட்டமும் இருக்கலாம்:-)))

said...

இந்த ஆராய்ச்சியின் முடிவு தவறானது என்பதை இச்சமயத்தில் நான் எதற்காக சொல்கிறேன் என்றால் மறைந்த புரட்சி தலைவர் அவர்களுக்கு எத்தனை மனைவிகள், எத்தனை துணைவிகள் இருந்தனர். அவர் என்ன அல்பாயுஸில் போனாரா? இல்லை இன்னாள் முதல்வர் தமிழனத்தின் தானை தலைவர், தமிழ் பண்பாட்டின் படி தன் வாழ்கையை அமைத்துக் கொண்ட டாக்டர் கலைஞர் அவர்களுக்கு இல்லாதா இல்லாள்களா இல்லை அவர் பார்க்கத சித்தாள்களா? அவர் வயது 84 ஆகியும் என்னே இளமையாக இருக்கிறார். இதில் இருந்தே அமெரிக்கர்க்ள் மூடர்கள் என தெரியைல்லையா?

.--------------------------------
ஹி..ஹி... தமிழக அரசியல்வாதி ரேஞ்சுக்கு கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன்

said...

கொத்சு,

நல்லா வைக்கிறீங்கப்பு தலப்பூ..
என்னவோ ஏதோனு பதறி அடிச்சுட்டு உள்ளே வந்தேனய்யா..

said...

//தொங்கினாமட்டும் உங்க அளவுக்கு அறிவு வளர்ந்துருமான்னு தெரியலை... :)//

அதெல்லாம் ரத்தத்தில் வரணும் ராம்.

said...

//கொத்ஸ்,

அது பித்தளை தானே??? எதுக்கு மறுபடியும் அதிலே ஈயம் பூசி பார்க்கிறீங்க....//

கரெக்ட். அது பித்தளைதான். பெண் ஈயம், ஆண் பித்தளை. அப்போதான் இந்த பழமொழி சரியா பொருந்தி வருது - ஈயத்தைப் பார்த்து இளிச்சிதாம் பித்தளை!!

said...

//ஆபிஸிலே வேலை பார்க்க சொல்லிகிட்டே இருக்கானுக...... வரவர நம்மை மேலே இருந்த பயமே அவனுகளுக்கு போயிருச்சி... :((//

பார்த்துய்யா. அறியாப் புள்ளை இம்புட்டு உழைச்சா என்னாத்துக்கு ஆறது?

said...

//இங்கே ஒரு தாரத்துக்கே தாவுதீர்ந்துபோய் ஓடுதுங்க. இதுலே பலதாரம் வேறயா?//

சிலவங்க மட்டும் கணக்குப் பாடத்தில் அரைகுறையா முழிச்சுக்கிட்டு Two negatives make a positive அப்படின்னு ரிஸ்க் எடுக்கறாங்க. என்னாத்த சொல்ல!

//பலதாரத்தில் யாருக்குன்னு ஆடுவான்? அந்த டென்ஷனில்தான் சீக்கிரம் மண்டையைப் போட்டுடறான்.

பினாத்தல் போட்ட கணக்கு ........//

அவர் கணக்கு சரின்னு சொல்லறீங்கள இல்லை தப்புன்னு சொல்ல வறீங்களா? கொஞ்சம் தெளிவாத்தேன் சொல்றது...

said...

//சரக்கடித்து இருந்தால் தெளிவாக கேட்டு இருப்பேன், சரக்கடிக்காமல் கேட்டதால் தான் இந்த கொழப்பமே :-))//

சரக்கடித்து வாழ்வாரே வாழ்பவர் மற்றோர்
தரங்கெட்டுச் செல்வாரே காண்.

இப்படி வெண்பாவாக்கூட சொல்லலாம் இல்லீங்களா வவ்வால்? :))

said...

//இந்த பதிவை அடுத்த Tabக்கு அனுப்பி வைக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கும் என நம்புகிறேன் ;)//

அனுப்பிட்டீரு. இப்போ நிம்மதியாத் தூங்குவீரு இல்ல!

said...

//இந்த தலைப்பை வெச்சுட்டு எத்தனை பேரய்யா புகுந்து விளையாடுவீங்க?:-)))//

செல்வன் அடுத்து உம்ம பதிவைத்தான் எதிர்பார்க்கறோம்! :))

//எனக்கென்னவோ இந்த பதிவில் ஆணாதிக்கமும், பெண்ணாதிக்கமும் கலந்து இருப்பதாக தோன்றுகிறது.அகில உலக ரேஞ்சில் ஒரு சதித்திட்டமும் இருக்கலாம்:-)))//

யோவ் ஆணாத்திக்கமும் பெண் ஆதிக்கமும் கலந்து இருக்க அது என்ன பாலும் டிகாக்ஷனுமாய்யா? அந்த மாதிரி எல்லாம் எதுவும் கிடையாதுங்க!! இவரு பொய் சொல்லறாரு!! :))

said...

//இதில் இருந்தே அமெரிக்கர்க்ள் மூடர்கள் என தெரியைல்லையா?//

சிவாண்ணா, முதலில் ரொம்ப தப்பான பின்னூட்டம் போட்டுடீங்களோன்னு நினைச்சேன்.

ஆனா இந்த ஒரு வரி போட்டு உங்க மார்க்சிச சிந்தனையைக் காண்பித்து தப்பித்து விட்டீர்களே.

பின்ன என்னங்க, இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் நடந்த விஷயத்துக்கு அமெரிக்காவை திட்ட சாதாரண ஜனங்களினாலா முடியும்? அதை வைத்தே உங்க மார்க்சிச பூனைக் குட்டியை வெளியில் கொண்டு வந்துட்டோமில்ல. :))

said...

//நல்லா வைக்கிறீங்கப்பு தலப்பூ..
என்னவோ ஏதோனு பதறி அடிச்சுட்டு உள்ளே வந்தேனய்யா..//

வாங்க தஞ்சாவூரான் உங்களை வர வைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு பார்த்தீங்களா?

இதுல இப்படி ஒரு தலைப்பை ஏன் வெச்சீங்கன்னு கேள்வி வேற! என்னாத்த சொல்ல!!

said...

நல்லா வைக்கிறீங்கய்யா தலைப்பை.
சே!! இது தெரியாம நான் வேற தலைப்பை வச்சுட்டேனே?! ப்ரவாயில்லை. இதே தலைப்புலயும் இன்னொரு பதிவு போட்டுடலாம்.

சாத்தான்குளத்தான்

said...

இது கூட நல்ல ஐடியா... பதிவுல விஷயத்தை எழுதாம... பின்னூட்டதிலேயே எல்லாரையும் வெளுத்துவாங்க வச்சிட்டீங்கப்பா.. நல்லாருங்க...

தலைவி! நீங்க கேக்கமாட்டீங்களா இது எல்லாம்..

said...

//நல்லா வைக்கிறீங்கய்யா தலைப்பை.
சே!! இது தெரியாம நான் வேற தலைப்பை வச்சுட்டேனே?!//

அண்ணாச்சி, இது நானா வெச்ச தலைப்பு இல்லை. எல்லாம் 'அவங்க' எடுத்துக் குடுத்ததுதான். :))

நீங்க ஒலக நடப்பெல்லாம் கவனிக்கறது இல்லை. இந்த தலைப்பில் மூணு பதிவு வந்தாச்சு தெரியலைன்னா எப்படி.

//இதே தலைப்புலயும் இன்னொரு பதிவு போட்டுடலாம்.//
போடுங்க. போடுங்க. போட்டுட்டு சொல்லி விட்டீகன்னா டாண்ணு வந்து படிப்போமில்லவே.

said...

//இது கூட நல்ல ஐடியா... பதிவுல விஷயத்தை எழுதாம... பின்னூட்டதிலேயே எல்லாரையும் வெளுத்துவாங்க வச்சிட்டீங்கப்பா.. நல்லாருங்க...//

வாங்க மங்கை. இதெல்லாம் புது டெக்னிக் ஒண்ணும் இல்லையே. எல்லாம் ஆகி வந்ததுதானே. ஆசீர்வாதத்திற்கு நன்றி.


//தலைவி! நீங்க கேக்கமாட்டீங்களா இது எல்லாம்..//

அய்யய்யோ எந்தத் தலைவின்னு சரியாச் சொல்லுங்க. சண்டை வந்திடப் போகுது!! :))

said...

கொத்தனார் சாரே! இது என்ன அநியாயம், ரெண்டு பேர் என்னமா சண்டை போட்டுக்கராங்க, நாம அதை பார்த்து ஜெயிக்கிறவங்களை வச்சு ஒரு முடிவுக்கு வரலாம்ன்னு பார்த்தா, நீங்க கொஞ்சம் கூட லஜ்ஜையே இல்லாம அதே தலைப்பிலே ஒரு அறிவியல் பதிவை போட்டு அந்த விவாதத்தை நகைச்சுவையா ஆக்கிட்டீங்களே! இது கொஞ்சமும் நல்லா இல்லை. உங்களை கண்டிக்கும் விதமா நானும் அதே தலைப்பில் ஒரு பதிவு போட்டேன் லஜ்ஜை இல்லாமலே, ஹி ஹி...அதுக்கு லேபிள்....

said...

யோவ் அபி அப்பா, அப்படி ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டா யாரு ஜெயிப்பாங்கன்னு சந்தேகமா? முதலில் பெனாத்தலார் க்ளாஸ் அட்டண்ட் பண்ணற வழியைப் பாருங்க!

said...

நச், நச், நச் நச், நச், நச், நச்

நல்லவேளை இதை லேட்டா வந்து படிச்சேன். :P

said...

// //இதையே சாக்காக வைத்து பலதார மணம் புரிவது அல்லது பலருடன் உறவு வைப்பதோ தவறானது.//
எதுக்கு?
சீக்கிரமா செத்துப் போறதுக்கா? //


ஏங்கியே சாகறதுக்கு என்னான்னு பார்த்துட்டு சாகறது வீரமில்லையா மாமு?

said...

//நச், நச், நச் நச், நச், நச், நச்

நல்லவேளை இதை லேட்டா வந்து படிச்சேன். :P//

வந்தீங்க, படிச்சீங்க. ஆனா ஒண்ணுமே சொல்லலையே.... :))

said...

//ஏங்கியே சாகறதுக்கு என்னான்னு பார்த்துட்டு சாகறது வீரமில்லையா மாமு?//

யப்பா ராசா, உமக்கு சரின்னு இருக்கிறது நமக்குத் தப்பா தோணலாம். இல்லையா? அவங்க அவங்க முடிவு பண்ணிக்கிற மேட்டர் அப்பா இதெல்லாம்.

said...

//
அபி அப்பா Said...
கொத்தனார் சாரே! இது என்ன அநியாயம், ரெண்டு பேர் என்னமா சண்டை போட்டுக்கராங்க, நாம அதை பார்த்து ஜெயிக்கிறவங்களை வச்சு ஒரு முடிவுக்கு வரலாம்ன்னு பார்த்தா, நீங்க கொஞ்சம் கூட லஜ்ஜையே இல்லாம அதே தலைப்பிலே ஒரு அறிவியல் பதிவை போட்டு அந்த விவாதத்தை நகைச்சுவையா ஆக்கிட்டீங்களே! இது கொஞ்சமும் நல்லா இல்லை.
//
ரிப்பீட்டேய்

said...

//யோவ் அபி அப்பா, அப்படி ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டா யாரு ஜெயிப்பாங்கன்னு சந்தேகமா? முதலில் பெனாத்தலார் க்ளாஸ் அட்டண்ட் பண்ணற வழியைப் பாருங்க!//

மங்களூர் சிவா, இதுவும் ரிப்பீட்டேய்!! :))

said...

இதென்னங்க இது கொத்ஸு

எங்கே பார்த்தாலும் இந்த தலைப்பாவே இருக்கு. இந்த வாரம் இந்த தலைப்பில எல்லாரும் எழுதணும்னு வேண்டுதலா

said...

//இதென்னங்க இது கொத்ஸு//

அதான் அந்த அழகு விளையாட்டு, ஆறு விளையாட்டு மாதிரி இதுவும் ஒரு விளையாட்டுன்னு நினைச்சிட்டோம் போல!!

மதுக்கா நீங்களும் ஒரு பதிவு இந்த தலைப்பில் போட்டு ஜோதியில் ஐக்கியமாக வேணுமாய் கேட்டுக் கொள்கிறேன்.