Tuesday, October 30, 2007

நடந்ததுக்கு ஆதாரம் எங்கே? - க்விஸ் பாகம் 2

இன்னிக்கு தலைப்பு கொஞ்சம் சர்ச்சையைக் கிளப்பக் கூடிய தலைப்பு. இன்னிக்கு ஹாட் டாபிக் ராமர் பாலத்தையே எடுத்துக்குங்க. அது குறித்து எவ்வளவோ சர்ச்சைகள். இருக்கா இல்லையா, உடைக்கலாமா வேண்டாமா, சரியா தப்பா, என கேள்விகள் கேட்டுக்கிட்டே இருக்கலாம்.

என்னடா இவன் க்விஸ் போட்டி நடத்த போறேன்னு சொல்லிட்டு ராமர் பாலம் மேட்டர் எல்லாம் பேச வந்துட்டானு திட்டாதீங்க. அதைப் பத்தி கேள்வி கேட்டா அது வரலாறு என்ற தலைப்பில் வரலாமா கூடாதா என்ற சர்ச்சை எழுமாதலால் அது மாதிரி கேள்வி எல்லாம் கேட்க மாட்டேன்.

இன்னிக்கு நாம எடுத்துக் கொண்டிருக்கும் தலைப்புகள் - விஞ்ஞானம், வரலாறு, புவியியல். வரலாறு நடந்ததைப் பத்திப் பேசறது. புவியியல் எங்கே என்ற கேள்விக்குப் பதில் சொல்வது. விஞ்ஞானம் ஆதாரத்தை முன் வைப்பது. இந்த மூணு டாபிக்கையும் சேர்த்துதான் தலைப்பு. நேரா கேள்விகளுக்குப் போகலாமா?

வரலாறு

1. நடிகராக ஆசைப்பட்ட ஒரு இளைஞன், அப்போதைய பிரதமரின் அறிமுகக் கடிதத்துடன் பம்பாய் வந்து ஒரு நடிகர் /தயாரிப்பாளரை சந்தித்தார். தனது குரலை தனது தனித்துவமாகக் கூறிய அந்நடிகருக்கு கிடைத்த பாத்திரமோ ஊமையான ஒரு கதாபாத்திரம். இச்சம்பவத்தில் குறிப்பிடப்படும் மூவர் யார்?
இளைஞன், பிரதமர், நடிகர் கம் தயாரிப்பாளர் - இவங்க மூணு பேர் பெயரும் சொன்னாதான் முழு மதிப்பெண்.

2. நான் இறக்கும் பொழுது என்னுடைய வயது 28 - 30ற்குள் இருக்கும். நான் புதைக்கப்பட்ட இடம் ஜீலம் நதிக்கரையில் ஜலால்பூர் ஷாரிப் என்ற இடம். என் பெயர் எருதின் தலை அல்லது எருதின் முகம் எனப் பொருள் படும். நான் யார்?

3. "Allah is its goal, the Prophet its model, the Quran its Constitution, Jihad its path and death for the case of Allah its most sublime belief" ஹராகத் அல்-முக்வாமா அல் இஸ்லமியா என்ற ஒரு ஸ்தாபனத்தின் முழக்கம் இது. இவர்கள் பொதுவாக எப்படி அறியப் படுகின்றனர்?

4. சுமாரான மாணவனான நான் முக்கி முனகிதான் மெட்ரிகுலேஷன் பரீட்ச்சையை பாஸ் செய்தேன். அதற்குப் பின் எனது 13ஆம் வயதில் திருமணம் செய்து கொண்டு வெளிநாடு சென்றுவிட்டேன். எனது 18ஆம் ஆண்டுதான் நான் முதன்முதலாக ஒரு செய்தித்தாளை படித்தேன். மேடையேறி பேச பயம் கொண்ட நான் என் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தால் உலக அளவில் ஒரு தலைவராக மாற நேர்ந்தது. ஐந்து முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டாலும் விதிவசத்தால் என்னால் ஒரு முறை கூட வெல்ல முடியவில்லை. நான் யார்?

5. கையில் ஒரு பைசா கூட இல்லாமல் இருந்த இத்தாலியன் நான். நான்
ஆரம்பித்த நிறுவனம் இன்று அதன் துறையில் ஒரு பெரிய பெயர் பெற்று விளங்கும் நிறுவனமாக இருக்கிறது. எனக்கு வேலை கொடுக்க மறுத்த நிறுவனமே நான் தொடங்கிய நிறுவனத்தில் பங்குதாரராக மாறும் நிலையும் வந்தது. இரண்டாம் உலகப் போர்க்காலங்களில் மாறும் நிலமைகளை சமாளிக்க என் நிறுவனம் டேங்குகள் மற்றும் பல போர்கருவிகளைக் கூட செய்தது. என் பெயரை தன் வணிகப் பெயராகக் கொண்ட என் நிறுவனம் (My last name is the brand name of my company) அந்த துறையில் ஆர்வமும் செல்வாக்கும் வெற்றியும் கொண்ட நிறுவனம். படத்தில் இருக்கும் நான் யார்?

6. லத்தீன் அமெரிக்க புரட்சிக்காரனாகிய நான் பிறந்தது அர்ஜெண்டினாவில், கியூபாவில் புகழ் பெற்று, காங்கோவில் சண்டையிட்டு, பொலிவியாவில் இறந்து போனேன். உலகில் எங்கு புரட்சி நடந்தாலும் அங்கு என் படம் இருப்பதும் என் பெயர் உச்சரிக்கப்படுவதும் கட்டாயம். நான் யார்?


புவியியல்

1. பிரெஞ்ச் இண்டோ சைனா என அறியப்பட்ட நாடு எது?

2. டேரியன் இடைவெளி என்றால் என்ன?


3. உலகிலேயே ஈரம் குறைவான இடம் எது?


4. இந்தோநேசிய நாடு எத்தனை தீவுகளைக் கொண்டது?


5. கோஸோ, கொமினோ என்பவை இந்நாட்டின் மூன்று மனிதர் வாழும் தீவுகளில் இரண்டு. இந்த மெடிட்டரேனியன் நாட்டின் பெயர் என்ன?


6. பிம்பெட்கா. இந்த இடத்தின் சிறப்பு என்ன? நான் எதிர்பார்க்கும் பதிலைச் சரியாகச் சொல்ல வேண்டும்.


விஞ்ஞானம்

1. இந்திய ஏவுகணை தயாரிப்பில் பிரம்மோஸ் என்ற ஏவுகணை எதனால் அப்படிப் பெயரிடப்பட்டது?

2. டான்சானியாவில் பேசப்படும் ஸ்வஹிலி மொழியில் இந்த வார்த்தைக்குப் 'எல்லாம் வளைந்துவிட்ட' எனப் பொருள். இன்று இந்தியாவிலும் பரவலாக பயன்படுத்தப்படும் இவ்வார்த்தை எது?


3. "The Beagle" என்ற கப்பல் எதனால் புகழ் பெற்றது?


4. தியோப்ரோமைன் என்ற இரசாயனப் பொருளை உண்டால் நாய்கள் இறந்து விடும். ஆனால் இது நாம் (அதிலும் முக்கியமாக குழந்தைகள்) சாப்பிடும் பொருள் ஒன்றில் இருக்கும் இரசாயனம் இது. அந்த உணவுப் பண்டம் எது?


5. போபியா (Phobia) என்னும் பயங்களில் ஒன்றைத் தவிர மற்றவை எல்லாம் மனம் சார்ந்தவை. உடல்நிலை சார்ந்த அந்த போபியாவின் பெயர் என்ன?


6. 1893ஆம் ஆண்டு விட்கோம்ப் ஜட்ஸன் என்ற பொறியியளாலரால் காப்புரிமை பெறப்பெற்ற ஐடியா இது. ஆனால் இதனைப் பயன் படுத்தி ஒரு சாதனத்தைக் கண்டுபிடித்தவர் கிடியான் சண்ட்பேக் என்பவர். முதலில் ஷூவில் பயன்படுத்தப்பட்ட இது, (இப்பொழுது அரிதாகவே இப்படி பயன் படுத்தப்படுகிறது) தற்பொழுது மிகப் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு சாதனம். இது என்ன?


நேத்து கேட்ட கேள்விகளைப் பார்க்கும் பொழுது இன்னிக்கு ரொம்பவே எளிதான கேள்விகள்தான். அடிச்சு ஆடுங்க மக்கள்ஸ்!!

தற்போதைய மதிப்பெண் நிலவரம்.

அப்புறம் ஒரு சின்ன டிஸ்கி. இந்த பாடங்கள் எல்லாம் நான் ஆங்கிலத்தில்தான் படிச்சது. ஆனா தமிழில்தான் கேள்வி கேட்க வேண்டும் என மொழிபெயர்த்திருக்கிறேன். அதில் தப்பிருந்தால் அதிகம் வலிக்காமல் குட்டிவிட்டு சுட்டிக் காமியுங்கள். சரி செய்து விடுகிறேன்.

400 comments:

said...

இன்னும் பலர் போன பகுதியின் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருப்பதால் அது மூடப்படவில்லை!

said...

விஞ்ஞானம் 6.
http://www.geocities.com/TheTropics/1926/bits.html
The invention, zipper, I know was invented by Whitcomb L. Judson (from Sweden). My uncle remembers Whitcomb and told me that Whitcomb sold the invention to Col. Lewis Walker a lawyer from PA. I have an old desk pipe stand that dates back to the turn of the century. It says "Talon hookles fastener Co." and "Slide fastener", or the employees would call a new variation the "Hookless #2" this is before they named it the "Zipper".

said...

இன்னும் நிறைய படிக்கவேண்டியிருக்கும்,இதற்கெல்லாம் பதில் சொல்ல.
இப்போதக்கு அப்பீட்.

said...

வரலாறு

2. அலெக்ஸாண்டரின் குதிரை
Bucephalus
4. மஹாத்மா காந்தி

said...

பாலா

விஞ்ஞானம் 6 - சரி

said...

3. ஹமாஸ்
6.. சே குவாரா

said...

ஜெயஸ்ரீ

வரலாறு 2, 4 - சரி. இரண்டு கஷ்டமான கேள்வின்னு இல்ல நினைச்சேன்!

said...

விஞ்ஞானம் 2. chikungunya

said...

ஜெயஸ்ரீ,

வரலாறு 3,6 - சரிதான்!

said...

//இன்னும் நிறைய படிக்கவேண்டியிருக்கும்,இதற்கெல்லாம் பதில் சொல்ல.
இப்போதக்கு அப்பீட்.//

குமார், படிச்சு சொல்லுங்க. நிறையா நேரமிருக்கு! :)

said...

பாலா,

விஞ்ஞானம் 2 - சரிதான். விளக்கம் எல்லாம் இல்லையா? :))

said...

4. chocolate

said...

ஜெயஸ்ரீ,

விஞ்ஞானம் 4 - சரி

(என்ன இருந்தாலும் பெண்களுக்கும் பிடிக்குமாச்சே!!) :))

said...

என்னய்யா இப்படிப் பக்கவா மார்க் ஷீட் எல்லாம் போட்டு வச்சுருக்கீங்க!!!!

அப்ப 'ரீ/டீச்சருங்க வேலைக்கெல்லாம் ஆப்பா?:-))))

said...

//அப்ப 'ரீ/டீச்சருங்க வேலைக்கெல்லாம் ஆப்பா?:-))))//

ரீச்சர், இதெல்லாம் நவீன யுக்திகள். :))

ஆனாப் பாருங்க இதுலயும் தப்புக் கண்டுபிடிச்சி நமக்கும் ஆப்பு வைக்கிறாங்க. :))

said...

வரலாறு 3. ஹமாஸ்

said...

வரலாறு
4. மகாத்மா காந்தி

said...

வரலாறு 4. மகாத்மா காந்தி.

http://en.wikipedia.org/wiki/Mahatma_Gandhi

said...

பாலா,
வரலாறு 3 - சரி!

said...

கைப்ஸ்,
வரலாறு 4 -சரி

said...

வரலாறு
3. ஹமாஸ்

said...

பாலா

வரலாறு 4 - சரி

said...

வரலாறு
6. சே குவேரா - Che Guevara

said...

கைப்ஸ்

வரலாறு 3 - சரியான விடை!

said...

கைப்ஸ்
வரலாறு 6 - சரி

said...

விஞ்ஞானம்
6. ஜிப் (Zipper Fastener)

said...

வரலாறு

1.
2.
3.
4. மகாத்மா மோகந்தாஸ் காந்தி
5. கியோவன்னி அக்நெல்லி (Giovanni Agnelli)
6. சே குவேரா

புவியியல்

1. வியட்நாம்

2. பனாமாவிற்கும் கொலம்பியாவிற்கும் நடுவில் உள்ள சதுப்பு நிலம்

3.

4. 17508

5. மால்டா

6. கல் ஓவியங்கள் (rock paintings) மிக பழமையானவை


விஞ்ஞானம்:

1. பிரம்மபுத்திரா மற்றும் மாஸ்கோவை சேர்த்து பிரம்மோஸ் என பெயரிடப்பட்டது..

2.

3. சார்லஸ் டார்வின் பயணம் செய்த கப்பல்

4. சாக்லேட்

5.

6. ஜிப்பர் (zipper)

மீதி ஆணிகளுக்கு அப்புறம்

said...

விஞ்ஞானம்
1. இந்திய உருசிய கூட்டுத் தயாரிப்பான இவ்வேவுகணை பிரம்மபுத்ரா(BRAHMaputra) மாஸ்க்வா(MOSkva) இவ்விரு நதிகளின் பெயரால் இவ்வாறு அழைக்கப்படுகிறது

said...

கைப்ஸ்
விஞ்ஞானம் 6 - சரி

said...

விஞ்ஞானம் 4
(பிரசாந்த் நடிக்காத) சாக்லேட்.

said...

வரலாறு
2. அலெக்சாண்டரின் குதிரை புசெஃபாலஸ்(Bucephalus)

said...

வாய்யா சிங்கம்

வரலாறு 4,6 - சரி 5 - தப்பு
புவியியல் 1,2,4,5 -சரி
6 - நான் சொல்லி இருக்கேனே. ஒரு குறிப்பான விதயம் எதிர்பார்க்கிறேன். சாரி நீங்க சொல்வதை விட இன்னும் ஸ்பெசிபிக்கா எதிர்பார்க்கிறேன்.

விஞ்ஞானம் 1,3,4,6 - சரி. 3 - இன்னும் விரிவாச் சொல்ல முடியுமா?

said...

புவியியல்
1. வியட்நாம்

said...

கைப்ஸ்
விஞ்ஞானம் 1 - சரி

ஆமாம் நேற்றைய கேள்விகளுக்கும் பதில் சொல்லலாமே!!

said...

1 அமிதாப் பச்சன், இந்திரா காந்தி
2 பகத் சிங்
3 அல் கொய்தா
4 மகாத்மா காந்தி
5 பெராரி
6 சே குவேரா

1 ப்ரம்ம புத்திரா மற்றும் மாஸ்கோ நதிகளின் பெயரை இனைத்து
5 ஹைட்ரோ போபியா

said...

பாலா
விஞ்ஞானம் 4 - சரி.

ஆமாம் நீங்க சொன்ன ஆளு என்னிக்கு நடிச்சி இருக்காரு! :P

said...

//6. பிம்பெட்கா. இந்த இடத்தின் சிறப்பு என்ன? நான் எதிர்பார்க்கும் பதிலைச் சரியாகச் சொல்ல வேண்டும்//

பஞ்சப் பாண்டவர்களில் ஒருவனான பீமனுடன் தொடர்புடையது. World Heritage Site. கற்கால ஓவியங்களுக்கு பெயர் பெற்றது. வேறு எதாவதா?

said...

கைப்ஸ்

சூப்பர்
வரலாறு 2 -சரி

said...

கைப்ஸ்
புவியியல் 1 - சரி

said...

//ஆமாம் நேற்றைய கேள்விகளுக்கும் பதில் சொல்லலாமே!!//

இதையெல்லாம் கூகிள்ல தேடலாம். கணக்குக்கு மூளையை யூஸ் பண்ணனுமே. அதான் ப்ராப்ளம். சாய்ஸ்ல அதனால தான் விட்டுட்டேன்.

said...

வறலாறு
2) bucephalus (Alexander the great's horse)

6) Che guevera

said...

விஞ்ஞானம்
5. Hypochondria

said...

முரளிக் கண்ணன்

வரலாறு 1 - மூணு பேர் கேட்டா ரெண்டுதானே சொல்லி இருக்கீங்க
2,3 - தவறு
4,5,6 - சரி

விஞ்ஞானம் 1,5 - சரி

நல்ல முயற்சி. :)) இந்த கான்பிடன்ஸோட நேத்து கேட்ட கேள்விகளுக்கும் பதில் சொல்லுங்க!

said...

4 சாக்லெட்

said...

கைப்ஸ்
புவியியல் 6 - ஆமாம் வேற ஒண்ணு! அந்த ஒரு வரி இருந்தாத்தான் மார்க்!

said...

'டேரியன்னு'க்கு ஆங்கில ச்பெல்லிங் தர முடியுமா??

said...

//இதையெல்லாம் கூகிள்ல தேடலாம். கணக்குக்கு மூளையை யூஸ் பண்ணனுமே. அதான் ப்ராப்ளம். சாய்ஸ்ல அதனால தான் விட்டுட்டேன்.//

அதுவும் கூகிளில் கிடைக்குதாமே!! :P

said...

ராதா
வரலாறு 2, 6 சரி

said...

கைப்ஸ்

விஞ்ஞானம் 5 - தப்பு.

என்ன காலையிலேயே தூக்கமா? என்ன நினைச்சு என்ன எழுதி இருக்கீரு?! :))

said...

முரளி
விஞ்ஞானம் 4 - ஓக்கே!

said...

புவியியல்
5. இத்தாலி

said...

விஞ்ஞானம் 3.
HMS Beagle was the first ship to sail under the new London Bridge

On the second survey voyage the young naturalist Charles Darwin was on board, and his work would eventually make the Beagle one of the most famous ships in history.

said...

கைப்ஸ்

புவியியல் 5 - தப்பு

said...

/'டேரியன்னு'க்கு ஆங்கில ச்பெல்லிங் தர முடியுமா??//

கூகிள்தானே நாலு தடவை மாத்திப் போட்டுப் பாருங்க. இல்லைன்னா சொல்லுங்க தரேன்.

அடுத்தது சுட்டி கேட்பீங்க போல இருக்கே!! :)) (சும்மா தமாசு, நைட் ஒரு மணிக்கு இப்படி செஞ்சுக்கிட்டு இருக்கேனே.அதனால் கண்டுக்காம சிரிச்சுக்கிட்டு போங்க)

said...

விஞ்ஞானம்
4. சாக்லேட்

said...

பாலா

விஞ்ஞானம் 3 - சரிதான்!
சூப்பர் விளக்கம் :))

said...

விஞ்ஞானம் 1
It is named after two rivers, the Brahmaputra and the Moskva.

said...

கைப்ஸ்
விஞ்ஞானம் 4 - சரி

said...

பாலா
விஞ்ஞானம் 1 - சரி

இந்தப் பகுதியில் 5 மட்டும்தான் இருக்கு போல!

said...

History 6) is Che.

said...

வரலாறு
1. தேவ் ஆனந்த்

said...

history
3 தாலிபான்

said...

வாங்க வினோ

வரலாறு 6 - சரியான விடைதான்.

இன்றைய மீதி கேள்விகள், நேற்றைய கேள்விகள் எல்லாம் கூட முயலுங்கள்.

said...

புவியியல்
5. மால்டா

said...

science
3 டார்வின் ஆராய்ச்சிக்கு உதவியதால்

said...

புவியியல் 6

The Bhimbetka rock shelters compose an archaeological site located in the Indian state of Madhya Pradesh. The shelters exhibit the earliest traces of human life in India; its Stone Age rock paintings are approximately 9,000 years old, making them among the world's oldest.

said...

புவியியல்

1)வியட்னாம்

4)17,508

said...

கைப்ஸ்
வரலாறு 1 - மூணு பேர் சொல்ணும் ஒண்ணே ஒண்ணு சொன்னா எப்படி? அதுவும் தப்பு!

said...

தலைவா.. இன்னிக்கு வெளியில் போற வேலை இருக்கு. கிளம்பிட்டேன். அதனால் இரவு வரேன்.

இன்னிக்கு போட்டியில் நான் இருக்கேன்.

said...

முரளி
வரலாறு 3 - தப்பு

said...

கைப்ஸ்
வரலாறு 5 - சரி

said...

வரலாறு

6, சே குவேரா

1, அமிதாப்பச்சன் என்று நினைக்குறேன்.

மத்த பகுதிக்கு எல்லாம் போகல... இரவு வரேன் டாடா...

said...

முரளி
விஞ்ஞானம் 3 - எப்படின்னு சொல்ல முடியுமா? மார்க் உண்டு! :))

said...

பாலா

புவியியல் 6 - நான் எதிர்பார்த்ததை சொல்லிட்டீங்க!

said...

ராதா
புவியியல் 1, 4 - சரி

said...

//1. நடிகராக ஆசைப்பட்ட ஒரு இளைஞன்//

அப்புறம் மூவர் யார்னு கேக்கறீங்க???

கேள்வியே குழப்பமா இருக்குதே????

said...

புலி
வரலாறு 6 - சரி
1 - மூணு பேர் கேட்டா ஒண்ணு சொன்னா எப்படி?

said...

//கைப்ஸ்
வரலாறு 5 - சரி//


யூ மீன் புவியியல்????

வரலாறு - 5 இப்போ தான் தேடிட்டு இருக்கேன்.

said...

புவியியல் 5. Malta

Only the three largest islands Malta Island (Malta), Gozo (Għawdex), and Comino (Kemmuna) are inhabited. ( visit http://en.wikipedia.org/wiki/Malta )

said...

//1 - மூணு பேர் கேட்டா ஒண்ணு சொன்னா எப்படி?//

உங்க கேள்வி அப்படித் தான் இருக்கு...அதான் எல்லாரும் குழம்பறாங்க. Consider re-phrasing...

said...

வரலாறு

2. Bucephalus (அலெக்ஸாண்டரின் குதிரை)
3. ஹமாஸ் (பாலஸ்தீனம்)
5. Enzo Anselmo Ferrari

புவியியல்

2. அடகாமா பாலைவனம் (ஈரமா ஈரப்பதமா?? dryest or least humid??)

விஞ்ஞானம்

2. சிக்குன்குனியா

3. The voyage of the beagles என்ற புத்தகத்தால்

said...

//அப்புறம் மூவர் யார்னு கேக்கறீங்க???

கேள்வியே குழப்பமா இருக்குதே????//

சரி விளக்கமா சொல்லறேன். இந்த வரியைப் படியுங்க.

//நடிகராக ஆசைப்பட்ட ஒரு இளைஞன், அப்போதைய பிரதமரின் அறிமுகக் கடிதத்துடன் பம்பாய் வந்து ஒரு நடிகர் /தயாரிப்பாளரை சந்தித்தார்.//

இளைஞன், பிரதமர், நடிகர் கம் தயாரிப்பாளர் - இவங்க மூணு பேர் பெயரும் சொன்னாதான் முழு மதிப்பெண்.

said...

//உங்க கேள்வி அப்படித் தான் இருக்கு...அதான் எல்லாரும் குழம்பறாங்க. Consider re-phrasing...//

மாத்திடறேன்.

said...

//யூ மீன் புவியியல்????

வரலாறு - 5 இப்போ தான் தேடிட்டு இருக்கேன்.//

ஆமாம். புவியியல்தான்! ஐயாம் தி எஸ்க்யூஸ் ப்ளீஸ்.

said...

புவியியல் 4

It is an appropriate description of the archipelago as there are estimated to be a total of 17,508 islands, of which only about 6,000 are inhabited, stretching for 5,150 km between the Australian and Asian continental mainlands and dividing the Pacific and Indian Oceans at the Equator.
Five main islands and 30 smaller archipelagoes are home to the majority of the population.

said...

விஞ்ஞானம்
1) As it is a Indo Russia joint venture it is named after two rivers..... Brahmaputra from India and Moskava from Russia

3) She was the first ship to sail under the LOndon bridge

said...

பாலா

புவியியல் 5 - சரி

said...

சிங்கமே

வரலாறு 2,3,5 - சரி
புவியியல் 2 - சரி
விஞ்ஞானம் 2- சரி
விஞ்ஞானம் 3 - நான் எதிர்பார்த்தது இல்லை. நீர் சொன்னது யாரோட கைவண்ணம்?

said...

பாலா
புவியியல் 4 - ஓக்கே

said...

வறலாறு
1) நடிகர் - திலீப்குமார்
ப்ரதம்ர் - நேருஜி
தயாரிப்பாளர் - ராஜ்கபூர்

said...

புவியியல்

6. பீமனுக்கும் ஜனசந்தனுக்கும் யுத்தம் நடைபெற்ற இடம்

said...

ராதா

விஞ்ஞானம் 1 - சரி
3- ரெண்டு மேட்டர் இருக்கு. நீங்க சொன்னது ஒண்ணு. நான் எதிர்ப்பார்ப்பது ஒண்ணு. இன்னும் கொஞ்சம் தேடுங்க!

said...

ராதா
வரலாறு 1 - இல்லைங்க.

said...

சிங்கம்

புவியியல் 6 - நான் எதிர்பார்க்கும் மேட்டர் இது இல்லை!

said...

நீங்க ரொம்ப சொன்னதால இன்னிக்கும் பதில். நாளைக்கப்புறம் ரெண்டு வாரம் விடுப்பு கொடுக்கணும். வீட்டுக்கு வரவே ரெண்டு மணி ஆகிடுது. இதுக்கப்புறம் எங்க யோசிக்கிறது. இன்னிக்கு பாதி பிட்டு தான்.

நான் படம் பார்பதில்லை. எனவே முதல் கேள்விக்கு பதிலில்லை.
எருதின் தலை - புருஷோத்தமனுடன் சண்டையிட்ட புசேபலஸ் ( நன்றி: Alexander the great - Robin lane fox )
hamas ( நன்றி: lexington herald )
காந்தி
enzo ferrari
சே குவேரா

லாவோஸ் கம்பூசியா வியட்னாம்
பனாமாவையும் கொலம்பியாவையும் இணைக்கும் காடுகள்
அடகாமா பாலைவனம் ( நன்றி: extremescience.com )
17508 ( உதவி: கூகிளாண்டவர் )
மால்டா ( உதவி கூகிள் வரைபடம் )
உலகிலேயே பழமையான குகை ஓவியங்கள்.

பிரம்மபுத்திரை மாஸ்கோ
அட நம்ம ஊரையே உலுக்கின சிகுன்குனியா
டார்வின் பயணத்தால்
சாக்லேட்
அகோராபோபியா ( நன்றி: wikipedia )? (போடோபோபியா போனோபோபியா போன்றவை கூட உடல்நிலை சார்ந்தும் இருக்கலாம்.)
zipper ( நன்றி: கூகிளாண்டவர் )

நான் பாஸான்னு சொல்லுங்க.

said...

புவியியல்

1. பிரெஞ்ச் இண்டோ சைனா என அறியப்பட்ட நாடு எது?

தற்போதைய வியட்நாம் , கம்போடியா லாவோஸ் இணைந்த பகுதிகள்

said...

புவியியல் 2.

Is it possible to drive from the US through Mexico then into the continent of South America?

The trickiest part will be *** the border between Colombia and Panama. This is an area called the Darian Gap.***

It is notoriously dangerous. This is an area that should be extensively researched before starting the trip. I have heard that it is possible, taking 'guides' between the villages to ensure safe passage. Even when there was an accord between the Colombian Government and the guerrillas 2 botanists working close to that area disappeared. Think carefully. Other options exist.

https://www.blogger.com/comment.g?blogID=20766087&postID=3108822344896885356

said...

புவியியல்
4. 17508

said...

//நான் எதிர்பார்த்தது இல்லை. நீர் சொன்னது யாரோட கைவண்ணம்?
//

எதாவது ஹிண்ட் தர முடியுமா, நீர் என்ன எதிர்பார்த்தீர்?? இது விக்கிபீடியாவில் சொல்ல பட்டு இருந்தது...

said...

ahaa..... விஞ்ஞானம் 3) charles Darwin sailed in the ship!!

said...

புவியியல்

2. டேரியன் இடைவெளி என்றால் என்ன?
பனாமா கால்வாய்க்க்கும் கொலம்பியாவுக்கும் இடைப்பட்ட காட்டுப்பகுதி

said...

புவியியல் 1

http://en.wikipedia.org/wiki/French_Indochina

French Indochina was formed in October 1887 from Annam, Tonkin, Cochin China (who together form modern Vietnam) and the Kingdom of Cambodia; Laos was added after the Franco-Siamese War of 1893. The federation lasted until 1954. In the four protectorates, the French formally left the local rulers in power, who were the Emperors of Vietnam, Kings of Cambodia, and Kings of Luang Prabang, but in fact gathered all powers in their hands, the local rulers acting only as figureheads.

said...

புவியியல்
3. அடகாமா பாலைவனம்(Atacama)

said...

4. இந்தோநேசிய நாடு எத்தனை தீவுகளைக் கொண்டது?

17508

said...

புயலாரே. வாங்கன்னு சொன்னதை மதிச்சு வந்ததுக்கு நன்னி.

வரலாறு 1 - இதுக்கு படமெல்லாம் பார்க்க வேண்டாம். ஒரு சுவாரசியமான தகவல். அம்புட்டுதான். கூகிளுங்களேன்.

2,3,4,5,6 - சரி

புவியியல் - எல்லாமே சரி.

விஞ்ஞானம் எல்லாமே சரி!!

ஒண்ணே ஒண்ணுதானே. கூகிள் பண்ணிப் போடுங்க.

பாஸா! அந்த ஒரு கேள்விக்குப் பதில் சொன்னா நீர் செண்டம் ஐயா!! :))

அப்புறம் நாளைக்கு கடைசிப் பகுதி. வந்து பதிலை சொல்லிட்டுப் போயிடுங்க.

said...

History
1. Not sure - Amitabh Buchan
2. Bucephalus - Alexander's horse

(Hint for another questions - Chetak (Bajaj Chetak) is the horse of ????)
3. HAMAS - The answer is already in the question
4. Not sure - MK Gandhi
5. Not sure - Marconi
6. Che Querva - TO simple a question for quizzing

Geography
1. Campodia, Laos
2. Near Panama Canal (the land which connect north and south america)
3. ?? Atacama desert ?? Antartica (there also there is no rain )
4. 17500 (largest Archipelago)
5. malta
6. 10000 year old rock painting in India

SCience
1. Brahmaputra and Mosco Rivers of Indian and Russia - coined by Abdul Kalam and Sivathanu Pillai
2. Chikungunya - (Will we ever forget !!!)
3. HMS Beagle - Darwins Ship when he went to Galapagos Island
4. Chocolate - நாய்க்கு தெரியுமா சாக்கலேட் வாசனை
5. Hydrophobia - Rabies. There are few others also, I don't want to give multiple choice... By the way do you know the language from which Rabies ORiginated ...
6. Zip - but it was invented for zipping the dress. A hook will be in the wall and you just fix the zip on that and sit

said...

வினையூக்கி

புவியியல் 1 - சரி

said...

பாலா
புவியியல் 2 -சரி

மேலதிக தகவல்கள் ரொம்பவே சுவாரசியம்.

said...

விஞ்ஞானம்
2. சாய் Chai

said...

விஞ்ஞானம்
2. சாய் Chai

said...

கைப்ஸ்

புவியியல் 4 - ஓக்கே

said...

ராதா
விஞ்ஞானம் 3 - இப்போ சரி! :))

said...

வினையூக்கி

புவியியல் 2 - ஓக்கே

said...

பாலா
புவியியல் 1 - ஓக்கே

said...

கைப்ஸ்
புவியியல் 3- சரி

said...

//ப்ரூனோ

கணிதம் 3 - நீங்க சொன்னது சரிதான். ஆனா ஒரு சின்ன மாற்றம். இப்போ கேள்வியைப் பாருங்க. :))//

8,9 on one coin
11,13 on another coin

8+11=19
9+11=20
8+13=21
9+13=22

I think I deserve a mark for this

said...

வினையூக்கி
புவியியல் 4 -சரி

said...

கோஸோ, கொமினோ என்பவை இந்நாட்டின் மூன்று மனிதர் வாழும் தீவுகளில் இரண்டு. இந்த மெடிட்டரேனியன் நாட்டின் பெயர் என்ன?

கிரீஸ்

said...

புவியிஉயல்
3) சஹாரா பாலைவனம்

விஞ்ஞானம்
4) சாக்கலெட் (நாளைக்கு ஹலோவீனுக்கு வாங்கிடீங்களா??)

அவ்வ்ளதான் இன்னிக்கு தூங்கபோரென்...

said...

6. பிம்பெட்கா. இந்த இடத்தின் சிறப்பு என்ன? நான் எதிர்பார்க்கும் பதிலைச் சரியாகச் சொல்ல வேண்டும்.

குகை ஓவியங்கள்

said...

ப்ரூனோ
வரலாறு 1 - மூணு பேர் வேணும். நீங்க ஒண்ணுதான் சொல்லி இருக்கீங்க.
2,3,4,6 - சரி
5 - தவறு

புவியியல்
1 - முக்கியமானதை விட்டுட்டீங்க. இருந்தாலும் பரவாயில்லை.
2,3 - சரி
4 - இன்னும் துல்லியமா சொல்லணும்
5 - சரி
6- நான் எதிர்பார்க்கும் விடை வேறு.

விஞ்ஞானம் - ஆறும் சரி!

அடுத்த ரவுண்டில் மீதியை போடுங்க. நேத்து கேள்விகள் கொஞ்சம் வேற அரியர்ஸ் இருக்கு! :))

said...

வரலாறு

1. அமிதாபச்சன், இந்திரா காந்தி, கே.ஏ. அப்பாஸ்
2. Bucephalus - அலெக்ஸாண்டரின் குதிரை.
3. Hamas
4. M. K. Gandhi
5.
6. சே குவேரா

புவியியல்

1. vietnam
2.
3. Atacama Desert
4. 53(?)
5.
6. அஜெந்தா எல்லோரா குகை சித்திரங்கள்

Science

1. பிரம்மபுத்ரா மற்றும் மாஸ்கோவை சுருக்கி பிரம்மோஸ் என்று வைத்தார்கள்.
2.
3. அதனுடைய இரண்டாவது பயனத்தில் டார்வின் அதில் பயனித்தார்.
4. சாக்லேட்
5. Aphenphosmphobia - தொடப்படுவோமோ என்ற பயம்.
6. Zip

said...

கைப்ஸ்

விஞ்ஞானம் 2 - தவறு

said...

இலவசம்,

என்னோட முயற்சி + கூகிள் துணை. பதில்ல தப்பு இருந்தா அது கூகிள் மேல.. கரெக்டா இருந்தா என்னோடதுன்னு எடுத்துக்கணும்.
ஏதோ பார்த்து மார்க் போடுங்க:-))

வரலாறு:

1. அமிதாப்
4. மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி
5.ஃபெர்ராரி
6. செகுவேரா

புவியியல்

1. கம்போடியா
2. பனாமா-கொலம்பியாவுக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதி
3. லிபியாவின் அல் அஜீஜியா (லிபிய சகாரா பாலைவனம்)
4. இந்தோனேஷியா 18000 கணக்கெடுக்கப்பட்ட தீவுகளால் ஆனது

5. Malta

6. Bhimbetka மத்தியபிரதேசத்தில் இருக்கும் பாறை -குகை ஓவியங்களுக்கு புகழ்பெற்ற இடம். மகாபாரதத்துடன் (பீமன்) தொடர்புடையது

அறிவியல்

1. பிரம்மபுத்ரா+மாஸ்கோ = பிரம்மோஸ்

3. Beagle- UK's failed mars probe

4. Theobromine என்பது சாக்லெட்களில் பயன்படுத்தப்படும் கோக்கோவில் காணப்படும் இது Caffine-ன் கஸின்!

5. Hydrophobia -வெறிநாய்க்கடி

6. Clasp-Lock என்று அறிமுகப்படுத்தப்பட்டு இன்று பேண்ட், பேக்,என எங்கும் காணப்படும் Zipper

said...

வினையூக்கி
புவியியல் 5 - தவறு

said...

ராதா

புவியியல் 3 - தவறு

விஞ்ஞானம் 4 - சரி

அதெல்லாம் வாங்கி ஒரு வாரத்துக்கு மேல ஆச்சு! :))

said...

வினையூக்கி

புவியியல் 6 - நான் எதிர்பார்ப்பது இதை இல்லை.

said...

பச்சன் இந்திரா க்வாஜா அஹமத் அப்பாஸா? தப்புன்னா நாளைக்கு பாக்கிறேன். தூக்கமா வருது. இன்னும் அஞ்சு மணி நேரத்துல எந்திரிச்சு ஓடணும்.

said...

ஸ்ரீதர்

இன்னமுமா தூங்கலை?

வரலாறு 1 - ரெண்டு சரி, ஒண்ணு தப்பு
2,3,4,6 - சரி

புவியியல் 1, 3 - சரி
4,6 - தவறு

விஞ்ஞானம் - 1,3,4,6 - சரி
5 - தவறு

said...

புவிவியல்

6. இந்தியாவிலேயே பிம்பெட்காவில்தான் முதன் முதலில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. சரியா?

said...

வாங்க ஹரிஹரன், நேத்து ஏன் வரலை. அதையும் பார்த்து பதில் சொல்லுங்க.

வரலாறு 1 - மூணு பேர் வேணும்
4,5,6 - சரிதான்

நீங்க 3 சொல்லலையா? :))

புவியியல் 1 - முக்கியமான இடம் வரலை. போகட்டும். மதிப்பெண் தருகிறேன்.
2,5 - சரி
3,4 - தவறு
6 - நான் எதிர்பார்க்கும் சிறப்பை சொல்லவில்லை.

அறிவியல்
1,4,5,6 - சரி
3- தவறு.

said...

புயலாரே. நாளைக்கு வந்து நிதானமா பதில் சொல்லுங்க. இப்போ போய் தூங்குங்க!

said...

ஸ்ரீதர்,

புவியியல் 6 - இது இது இது இதத்தான் நான் எதிர்பார்த்தேன்!! :))

said...

புயலாரே சொல்ல மறந்துட்டேன். நீங்க சொன்ன மூணில் ரெண்டு சரி!!

said...

விஞ்ஞானம்

5. photophobia

said...

கூகிளாண்டவரை கேட்டதுக்கு சுனில் தத்னு சொன்னாரு படம் ரேஷ்மா அவுர் ஷேரா.

said...

ஸ்ரீதர்
விஞ்ஞானம் 5 - தவறு

said...

புயலாரே

இப்போ நிம்மதியா போய் தூங்குங்க!! இன்னிக்கும் முதலில் முடிச்சது நீங்கதான்!!

நாளை கணினி, வணிகம் மற்றும் விளையாட்டு!!

said...

சரி மக்கள்ஸ்

மணி இரண்டரை ஆவுது. நான் போய் கொஞ்சமே கொஞ்ச நேரம் தூங்கிட்டு காலையில் வரேன்.

அதுவரைக்கும் விடைகளை அனுப்பிக்கிட்டு இருங்க. நான் காலையில் எழுந்த உடனே சரியா தப்பான்னு சொல்லறேன்.

ஹேவ் எ நைஸ் டே / குட் நைட்!

said...

புவியியல்

4. 17508 (I told 17500)
6. That is the cave painting in India named after Bhima...

I think that these are correct... Don't know what you are expecting as the correct answer

said...

//விஞ்ஞானம் 5 - தவற//
அப்படித்தான் wiki-ல போட்டிருக்காங்க பாருங்க, இங்கே

said...

geography
1 வியட்னாம்
4 17508
6 சைக்லோபின் அணை

said...

1 - முக்கியமானதை விட்டுட்டீங்க. இருந்தாலும் பரவாயில்லை.

?? Vietnam... Not sure which I missed ..Loas and Campodia

4 - இன்னும் துல்லியமா சொல்லணும்
17508 (Without seeing any reference, I we can only tell approximate)

6- நான் எதிர்பார்க்கும் விடை வேறு.
I think that they are the earliest known cave paintings... some 10000 to 9000 years old and they are in India....

One request.... Give the COlumn Tally also in the Spread sheet (to know the idea about the easiest and toughest questions)

said...

History:
1. Kishore kumar
2. Alexandar's horse Bucephalus
3. Hamas
4. Mahatma Gandhi
5. Ford
6. Che Guevara

Geography
1.
2.
3.
4. 17508
5.
Science
1.
2.
3.
4. Chocolate
5. Hydrophobia/photophobia
6. zipper

-sathish

said...

5 . Ferrari !!! Oops... I missed on that.... marconi also contributed to worldwar but it was not for tanks

said...

விஞ்ஞானம்
3. பீகிள் எனும் இக்கப்பலில் சார்லஸ் டார்வின் பயணம் மேற்கொண்டதால் சிறப்பு பெறுகிறது

said...

வரலாறு
1. அமிதாப் பச்சன், இந்திரா காந்தி, K.A.அப்பாஸ்

said...

1. ஷாருக்கான், கரன் ஜோஹர்
2. அலெக்ஸாண்டர்
3. ஹமாஸ்
4. மாகாத்மா காந்தி
6. சே குவேரா

நீங்க சொன்னத இங்லிலீஸ்ல ட்ரான்ஸ்லேட் பன்னி கூகிளிட்டால் விடை தெரிந்துவிடும். 2) 3)-ம் இப்படித்தான் கண்டுபிடித்தேன்...

இங்கே பாருங்க...

http://guessworks.blogspot.com/2007/02/love-quiz.html

said...

வரலாறு


1)google பண்ணனும்

2) பகத் சிங்

3) ஹமாஸ்?

4) காந்தி

5) google பண்ணனும்

6) சே குவேரா

said...

புவியியல்

1) வியட்நாம்

2) திரும்ப வாறேன்... :)

3) மின்னோசட்டா

4) 17508 தீவுகள்

5) ஜப்பான்... :)

6) குகை ஓவியம்?

said...

விஞ்ஞானம்

1)

2)

3) பைபிளிலே வந்ததினாலே?

4) சாக்லேட்

5) teeth phobia

6)

said...

வரலாறு
1. நடிகர் அமிதாப் பச்சன் , பிரதமர் இந்திராகாந்தி டைரக்டர் கே.ஏ.அப்பாஸ்

2. அலக்ஸாண்டரின் குதிரை

3. பாலஸ்தீன இயக்கம் ஹமாஸ்

4. மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி

6 செகுவரா

said...

3. உலகிலேயே ஈரம் குறைவான இடம் எது?

தென்னமெரிக்காவலில் உள்ள அடகாமா பாலைவனம்

5. கோஸோ, கொமினோ என்பவை இந்நாட்டின் மூன்று மனிதர் வாழும் தீவுகளில் இரண்டு. இந்த மெடிட்டரேனியன் நாட்டின் பெயர் என்ன?

விடை: மால்ட்டா

6. பிம்பெட்கா : திராவிட சுவடுகளுக்கான ஆதரங்கள் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் முக்கியத்துவம் பெற்ற இடம்

said...

விஞ்ஞானம்

1. இந்திய ஏவுகணை தயாரிப்பில் பிரம்மோஸ் என்ற ஏவுகணை எதனால் அப்படிப் பெயரிடப்பட்டது?

பிரம்மபுத்திரா - மாஸ்கோ இரண்டு ஆறுகளின் பெயரினால்


3. "The Beagle" என்ற கப்பல் எதனால் புகழ் பெற்றது?

சார்லஸ் டார்வின் பயணம் செய்த கப்பல்

4. தியோப்ரோமைன் என்ற இரசாயனப் பொருளை உண்டால் நாய்கள் இறந்து விடும். ஆனால் இது நாம் (அதிலும் முக்கியமாக குழந்தைகள்) சாப்பிடும் பொருள் ஒன்றில் இருக்கும் இரசாயனம் இது. அந்த உணவுப் பண்டம் எது?

சாக்கலேட்


6. 1893ஆம் ஆண்டு விட்கோம்ப் ஜட்ஸன் என்ற பொறியியளாலரால் காப்புரிமை பெறப்பெற்ற ஐடியா இது. ஆனால் இதனைப் பயன் படுத்தி ஒரு சாதனத்தைக் கண்டுபிடித்தவர் கிடியான் சண்ட்பேக் என்பவர். முதலில் ஷூவில் பயன்படுத்தப்பட்ட இது, (இப்பொழுது அரிதாகவே இப்படி பயன்
படுத்தப்படுகிறது) தற்பொழுது மிகப் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு சாதனம். இது என்ன?


ஜிப்

said...

விஞ்ஞானம்
5. Gerascophobia

said...

வரலாறு:
2. அலெக்ஸாண்டர்
3. ஹமாஸ்
4. மகாத்மா காந்தி
5. ஃபியட்
6. சேகுவேரா

said...

ஸ்ரீதர்

புவியியல் 6 - சரியான பதில்.

said...

ப்ரூனோ,

புவியியல் 4 - சரி
புவீயியல் 6 - நான் எதிர்பார்க்கும் பதில் இல்லை.

said...

ஸ்ரீதர்,

விஞ்ஞானம் 4 - நீங்கள் சொல்வது சரி இல்லை என்பது என் எண்ணம். முதலில் வேறு விடையை போட்டு விடுங்கள். விடைகள் வெளியிடப்படும் பொழுது இது பற்றிப் பேசலாம்.

said...

முரளி

புவியியல் 1,4 - சரி
6 - தவறு

said...

ப்ரூனோ

புவியியல் 1 - ஆமாம் இப்போ குடுத்தது சரிதான்.

புவியியல் 4 - இப்போ சரி. (ரெபரன்ஸ் எல்லாம் பார்த்தே சொல்லுங்களேன், என்ன இப்போ)

புவியியல் 6 - நீங்க சொன்னது எல்லாம் உண்மைதான் ஆனா ஒரு முக்கியமான விஷயம் இருக்கு. அதைச் சொல்லணும்.

சரிங்க. அந்த மொத்த எண்ணிக்கையும் தரேன்.

said...

வாங்க சதீஷ்

வரலாறு 1, 5- தவறு
வரலாறு 2,3,4,6 - சரி

புவியியல் 4 - சரி

விஞ்ஞானம் 4,5,6 சரி

said...

புவியியல்:
1. வியட்னாம்?
2. The Darien Gap is a large swath of undeveloped swampland and forest separating Panama and Colombia. (நன்ற்: விக்கிபீடியா!)
3. பிரேசில்
4. 17508
5. மால்டா
6. UNESCO declared world heritage site? cave painting?

said...

ப்ரூனோ

வரலாறு 5 - இப்போ சரி :)

said...

கைப்ஸ்

விஞ்ஞானம் 3 - சரி

said...

கைப்ஸ்,

வரலாறு 1 - மூணில் 1 தப்பு. மூணும் சரியாச் சொன்னாதான் மதிப்பெண்

said...

வாங்க சீனு

வரலாறு
1,2 - தவறு
3,4,6 - சரி

வேண்டுதலை சரியா சொல்ல வேண்டாமா இல்லை சாமி இப்படித்தான் தப்பாத் தரும்!! :))

said...

science
6- ஜிப்

said...

geography
6- sivan temple

said...

ராயல்

கூகிள் பண்ணனும் ஒரு பதிலா? பண்ணி விடையைச் சொல்லுங்கப்பா

வரலாறு
3,4,6 - சரிதான்.
2 - தவறு

said...

ராயல்

புவியியல் 1,4 - சரி
மத்ததெல்லாம் - சரி இல்லை.

said...

ராயல்

விஞ்ஞானம் 4 மட்டுமே சரி.

said...

வினையூக்கி

வரலாறு
1- மூணில் ரெண்டு சரி. ஆனா மூணும் சொன்னாத்தான் மதிப்பெண்.
2- சரியான விடைதான், பெயர் சொல்ல முடியுமா?
3,4,6 - சரி

said...

வினையூக்கி

புவியியல்
3,5 - சரி
6 - நான் ஒரு முக்கியமான பாயிண்டை எதிர்பார்க்கிறேன்.

said...

வினையூக்கி
விஞ்ஞானம்
1,3,4,6 - சரி
5 - நான் எதிர்பார்த்த விடை இல்லை. உங்க விடையைப் பத்தி அப்புறமா பேசலாம்.

said...

வாங்க மஞ்சுளா

வரலாறு - 2,5 - தவறு
3,4,6 - சரி

புவியியல்
1,2,4,5 - சரி
3,6 - தப்பு

said...

/புவியியல் 6 - நீங்க சொன்னது எல்லாம் உண்மைதான் ஆனா ஒரு முக்கியமான விஷயம் இருக்கு. அதைச் சொல்லணும். //
* Bhimbetka rock shelters
* archaeological site
* World Heritage Site
* Madhya Pradesh
* the earliest traces of human life in India
* Stone Age
* rock paintings
* 9,000 years old
* World's oldest Rock Painting.

said...

வரலாறு 1 - மூணு பேர் வேணும்

Amitabh Bachan
Indira Gandhi
Dev Anand

said...

முரளி

விஞ்ஞானம் 6 - சரி

புவியியல் 6 - தவறு

said...

ப்ரூனோ.

இது போங்கு. இவ்வளவு ஆப்ஷன்ஸா குடுப்பாங்க!! :))

புவியியல் 6 - சரியான விடை உங்க லிஸ்டில் இருக்கு!!

said...

ப்ரூனோ

வரலாறு 1 - மூணில் ஒண்ணு தப்பு. மீண்டும் முயற்சி பண்ணுங்க.

said...

History

1.
2. Bucephalus
3. Hamas
4. Mahatma Gandhi
5.
6. Che Guevera

Geography

1. Vietnam
2. The Darién Gap is a large swath of undeveloped swampland and forest separating Panama and Colombia.
3. Atacama desert
4. 17,508 islands officially
5. Maltese Islands
6. The Bhimbetka rock shelters compose an archaeological site and World Heritage Site located in the Indian state of Madhya Pradesh. The Bhimbetka shelters exhibit the earliest traces of human life in India; its Stone Age rock paintings are approximately 9,000 years old, making them among the world's oldest.

said...

math
4 10990

1
2 Alexander horse - Bucephalus thaane?
3 Hamas
4 Mahatma Gandhi
5 Quattrocchi
6 Che Guevara

1 Vietnam/Cambodia
2 Forest swamp between Panama and

Columbia
3 Arica, Chile
4 17,508 islands, about 6,000 of which

are inhabited - ithu ellam overu...google

illina kashtam
5 Malta
6 Rock paintings of Bhimbetka - stone

age & very oldest (Bhima connexn?)

1 Rivers Brahmaputra and Moskva

(Russia)
2 Chai, Chai
3 Charles Dickens travelled in it & later

wrote The Voyage of the Beagle
4 Chocolate
5 Weight phobia
6 Zip ayya Zippu

said...

G3

வரலாறு
2,3,4,6 - சரி

புவியியல் 6ம் சரி

said...

வரலாறு:
1. sanjeev kumar?
2. Bucephalus
5. Gianni Agnelli

said...

புவியியல்

1, வியட்நாம்
2, பனாமா மற்றும் கொலிம்பியா வை பிரிக்கும் பாதை , இன்னும் சொன்னால் தென் அமெரிக்காவையும், மத்திய அமெரிக்காவை பிரிக்கும் இடைவெளி
3, Dead Sea
4, 17508
5, மால்டிஸ் (மால்டா தீவுகள்)
6, 9000 வருடங்கள் பழமை வாய்ந்த பாறை ஒவியங்கள் அங்கு உள்ளது. யூன்ஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டது

said...

கேஆர்எஸ்

கணக்கு 4 - சரி

வரலாறு 2,3,4,6 - சரி
5 - தவறு

புவியியல் 1,2,4,5
3 - இதைவிட மோசமா இருக்குங்க
6 - தப்புன்னு சொல்ல மாட்டேன். ஆனா ஒரு முக்கியமான மேட்டர் இருக்கு. அதைச் சொல்லணும்.

விஞ்ஞானம்
1,3,4,6 - சரி
2- இல்லை
5 - நான் எதிர்பார்த்த விடை இல்லை.

said...

மஞ்சுளா

வரலாறு 1,5 தப்பு
2 சரி

said...

புலி
1,2,4,5 - சரி
3 - தப்பு
6 - நான் எதிர்பார்க்கும் விடை வரலை

said...

விஞ்ஞானம்

1. இந்திய ஏவுகணை தயாரிப்பில் பிரம்மோஸ் என்ற ஏவுகணை எதனால் அப்படிப் பெயரிடப்பட்டது?
பிரம்மபுத்ரா, மாஸ்கோ ஆறுகளின் முதல் எழுத்துக்கள்? (அல்லது, பிரம்மாஸ்திரம் ??)
2. சிக்குன்குன்யா
3. The first ship to sail under the new London Bridge
4. சாக்லேட்
5. Dysmorphophobia
6. ஜிப் - zipper

said...

வரலாறு

1) (a) அமிதாப்

(b) இந்திரா காந்தி

(c) K.A. அப்பாஸ்

5) கூப்பர்...?

said...

புவியியல்: 3. The Atacama Desert

said...

மஞ்சுளா,

விஞ்ஞானம் 1,2,4,6 - சரி
3,5 - இல்லை

said...

வரலாறு
2. அலெக்சாண்டரின் குதிரைப் பெயர் Bucephalus

said...

புவியியல்:
6. பிம்பெட்கா:: Stone Age rock paintings are approximately 9,000 years old, making them among the world's oldest.

said...

யுனெஸ்கோவினால் பிம்பெட்கா உலகபாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது...
இது நீங்கள் எதிர்பார்க்கும் விடையா சார்

said...

ராயல்
வரலாறு 1 - மூணில் 1 தப்பு
5 - தப்பு

said...

மஞ்சுளா
புவியியல் 3 - சரிதான்

said...

வினையூக்கி
வரலாறு 2 - சரிதான் :))

said...

மஞ்சுளா
புவியியல் 6 - இந்தியா சம்பந்தப்பட்ட ஒரு மேட்டர் சொல்லுங்க