1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
முதன் முதலில் என்ன படம் பார்த்தேன் என்பது எல்லாம் சத்தியமாக ஞாபகம் இல்லை. ஆனா சின்ன வயசில் அடிக்கடி சினிமா போய் இருக்கிறேன். வைராவி அண்ணா அப்படின்னு ஒரு டூரிங் டாக்கீஸ் இருக்கு (இருந்தது?). அதில் மீன் கொடி நாட்டிய தேவா அப்படி பாட்டு போட்ட உடனே வீட்டில் இருந்து ஓடினா நியூஸ் ரீல் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி போயிடலாம். மணல், பெஞ்ச், இரும்பு சேர் என்று மூணு க்ளாஸ் உண்டு. அம்மா பெஞ்சுக்குக் காசு குடுத்தால் கூட தரை டிக்கெட் வாங்கிக்கிட்டு மீதி பைசாவில் முறுக்கு வாங்கி தின்பதுதான் நடக்கும். அங்க மண்ணைக் குவிச்சு உட்கார்ந்துக்கலாம். நாய் எல்லாம் வந்து உரசிக்கிட்டுப் போகும். சாயங்கால நேர காத்து சிலு சிலுன்னு அடிக்கும். எம்ஜியார் படங்கள்தான் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
தமிழில் தசாவதாரம்தான் பார்த்தேன்னு நினைக்கிறேன். அது பத்திதான் இங்க ஏற்கனவே பேசியாச்சே!
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
சன் டிவியில் போட்ட ஆயிரம் பொய் என்ற படம்தான் கடைசியில் முழுதாக உட்கார்ந்து பார்த்ததுன்னு நினைக்கிறேன். இல்லை அதற்குப் பின் பார்த்த மைக்கேல் மதன காமராஜனா? சரியா ஞாபகம் இல்லையே. சபாபதி, பெண் ரெண்டும் பதிவு செஞ்சு வெச்சு இருக்கேன். பார்க்கணும். நேரமே இல்லை.
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லீங்களே. நாம அப்படி எல்லாம் உணர்ச்சிபூர்வமா எல்லாம் படம் பார்க்கறதே இல்லை. தேவர் மகன், குணா ரெண்டும் பார்த்தப்போ கொஞ்சம் பிரமிப்பா இருந்தது. அது தாக்கமான்னு எல்லாம் சொல்லத் தெரியலையே. அதிலும் தேவர் மகன் படத்தில் நவீன கமல் மாறி பெரிய மீசை வெச்சுக்கிட்டு கிராமத்துக் கமலாக மாறி வரும் சீன் பார்த்தப்போ ரொம்ப பிரமிப்பா இருந்தது.
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
இது என்ன தாக்கம் தாக்கம் அப்படின்னே கேள்வி கேட்கறீங்க? தமிழ் சினிமா எல்லாம் சும்மா ரெண்டு மணிநேர பொழுது போக்கிற்காக பார்க்கும் ஆசாமிங்க நான். சீரியஸ் படமெல்லாம் பார்க்கக்கூட மாட்டேன். இந்த மாதிரி தாக்கம் எல்லாம் இல்லைன்னுதான் நினைக்கிறேன்.
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
சினிமா பார்த்துட்டு இவ்வளவு தாக்கம் வருமா? தாக்கிய சினிமா, தாக்கிய அரசியல், தாக்கிய தொழில்நுட்பம் அப்படின்னு தாக்கு தாக்குன்னு தாக்கறீங்களே! இந்த மாதிரி எல்லாம் கேள்வி கேட்டா நான் எல்லாம் என்னத்த சொல்ல? சின்ன வயசில் ஜெகன்மோகினி சினிமா பார்த்துட்டு ஜெயமாலினி அடுப்புக்குள்ள காலை விட்ட காட்சியை பத்தி ரொம்ப நாள் பேசிக்கிட்டது உண்டு. இதைச் சொன்னா இந்த கேள்விக்கு விடையா சேர்த்துப்பீங்களா?
6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா
நம்ம வாசிப்பு எல்லாம் லைட்ஸ் ஆன் சுனில் ரேஞ்சுக்குதாங்க. சமீப காலத்தில் சினிமாப் பொன்னையா எழுதறது எல்லாம் கூடப் படிக்கிறது இல்லைன்னாப் பார்த்துக்குங்களேன். :)
7.தமிழ்ச்சினிமா இசை?
இசை கேட்பது என்பது எப்பவுமே உண்டு. முன்னமே சொன்ன மாதிரி தமிழ் சினிமா பாடல்கள், ஆங்கில பாடல்கள் என பல புறம் மேய்ந்து விட்டு இப்பொழுது கர்நாடக சங்கீதம் கேட்டுப் பரவசப்படும் ஒரு காலம். இப்போ வர சினிமாப் பாடல்களில் வெகு சிலவற்றைத் தவிர மற்றவை எல்லாம் வெறும் இரைச்சலாகவே இருப்பதால் அந்தப் பக்கமே போவதில்லை.
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா
நம்ம வாசிப்பு எல்லாம் லைட்ஸ் ஆன் சுனில் ரேஞ்சுக்குதாங்க. சமீப காலத்தில் சினிமாப் பொன்னையா எழுதறது எல்லாம் கூடப் படிக்கிறது இல்லைன்னாப் பார்த்துக்குங்களேன். :)
7.தமிழ்ச்சினிமா இசை?
இசை கேட்பது என்பது எப்பவுமே உண்டு. முன்னமே சொன்ன மாதிரி தமிழ் சினிமா பாடல்கள், ஆங்கில பாடல்கள் என பல புறம் மேய்ந்து விட்டு இப்பொழுது கர்நாடக சங்கீதம் கேட்டுப் பரவசப்படும் ஒரு காலம். இப்போ வர சினிமாப் பாடல்களில் வெகு சிலவற்றைத் தவிர மற்றவை எல்லாம் வெறும் இரைச்சலாகவே இருப்பதால் அந்தப் பக்கமே போவதில்லை.
தமிழ், ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளில் படம் பார்த்தது மிகவும் குறைவுதான். அதுவும் பெரும்பாலும் சிரிப்பு வர வைக்கக்கூடிய படங்கள்தான் பார்ப்பது. ஆங்கிலத்தில் வெளி வரும் வரைசித்திரப் படங்களைப் பார்த்து வியந்து போவது என்பது ஒவ்வொரு முறையும் நிகழும் ஒன்று. ஸ்ரீதர் கிட்ட சொன்ன ப்ரெஞ்ச் படமெல்லாம் நான் பார்த்த ரெண்டு மூணு படங்களில் ஒன்று. அதுவும் நம்மைப் பற்றி தெரிந்த நண்பர்கள் கொண்டு வந்து கொடுத்துப் பார் எனச் சொன்னதுதான். விமானப் பயணங்களில் பொழுது போகாமல் சில வேற்று மொழிப் படங்களைக் கண்டது உண்டு.
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
கல்லூரி காலத்தில் முத்து திரைப்படம் எடுத்த இடத்தில் ரஜினியோடு படம் எடுத்துக்கொண்டதுதான் சினிமா உலகுடனான நேரடி தொடர்பு. என்ன செஞ்சேனா? ரஜினி பக்கத்தில் நின்னேன். அவரு தோளில் கையைப் போட்டுக்கிட்டாரு. படம் எடுத்துக்கிட்டோம். பிடிச்சுதான்னா என்ன? பிடிச்சுதுதான். :) மீண்டுமா? வாய்ப்பு வந்தா செஞ்சுட்டாப் போச்சு. என்னோட சேர்ந்து ரஜினி படம் எடுத்துக்கிட்டதால தமிழ் சினிமா மேம்படுமான்னு கேட்டா என்ன பதில் சொல்ல? ;-)
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இந்த மாதிரி பார்முலாப் படங்கள் என்ற வட்டத்தில் இருந்து வெளி வரும் என்றே நினைக்கிறேன். ஆனால் போக வேண்டிய தூரம் ரொம்ப அதிகம். ஒரே படத்தில் காமெடி சண்டை பாட்டு என்றெல்லாம் இல்லாமல் அந்தந்த வகையில் இருக்கும் படங்கள் வரத் தொடங்கினால் நன்றாக இருக்கும்.
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
இப்பக்கூட நான் ரொம்ப எல்லாம் படிக்கிறது இல்லை. அதனால ரொம்ப பிரச்சனை இருக்காதுன்னுதான் நினைக்கிறேன். ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் இது நடந்தா சினிமா மேல இருக்கும் அப்ஸெஷன் குறையலாம் என நினைக்கிறேன். நடக்குமா?
இன்னும் ஐந்து பேரை சேர்க்கணுமாமே. நமக்கு தெரிஞ்சவங்க எல்லாரையும் சேர்த்தாச்சு போல இருக்கே. இன்னும் யாரைச் சேர்க்க?
நீங்க எல்லாம் நான் ஸ்ரீதரைத் திட்டின மாதிரி திட்டாம நல்லவங்களா எழுதி இந்தத் தொடர் விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துங்கப்பா!
1) இந்த வார நட்சத்திரம் இளா
2)என்றென்றும் நட்சத்திரம் வல்லியம்மா
3) ஆன்மீக சூப்பர்ஸ்டார் குமரன்
4) ரொம்ப நாளா இந்தப் பக்கம் காணாமல் இருக்கும் சின்னவன்
5) பிட் போட்டிக்கு மட்டுமே பதிவு போடும் எங்கள் கைப்புள்ளை
டிஸ்கி: இந்த மாதத்துக் குறுக்கெழுத்துப் புதிர் இன்னும் இரண்டு நாட்களில் வெளி வரும்!
43 comments:
இனிமே தொடர் விளையாட்டுப் போடறவங்களுக்கு ஒரு வேண்டுகோள். இம்புட்டு கேள்விகள் வேண்டாம்பா. பெண்டு நிமிர்ந்து போச்சு! :)
அதேதான். சாய்ஸில கூட விட முடியாது போல இருக்கே.
நன்னிம்மா கொத்ஸ். சினிமா ரொம்பப் பிடிக்கும். பதில்தாஅனெ ரெண்டு நாளாகும். யோசிக்கணுமில்ல:)
//ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் இது நடந்தா சினிமா மேல இருக்கும் அப்ஸெஷன் குறையலாம் என நினைக்கிறேன்.//
அப்போ அடுத்த முதல்வரை எப்ப்படி தேர்ந்தெடுக்கிறதாம்
தல... சங்கிலியை தொடர வைத்ததற்கு நன்றி :)).
//கல்லூரி காலத்தில் முத்து திரைப்படம் எடுத்த இடத்தில் ரஜினியோடு படம் எடுத்துக்கொண்டதுதான் //
இப்படியாகப்பட்ட நுண்ணரசியல் ஜாம்பவான்களோடு எல்லாம் போட்டோ எடுத்துக்கிட்ட ரஜினி இன்னும் அரசியல்னா இப்படி பயப்புடறாரே... :-)
நான் நினைச்சுவச்சுருந்த பல பதில்களைக் காப்பியடித்த மாதிரித் தெரியுது :-))))
இப்ப படிக்க நேரமில்லை. உள்ளேனய்யா மட்டும் போட்டுங்கறேனுங்கோ!
இதெல்லாம் சினிமா பதிவா?
பெல்லினி, பெர்க்மன், புனுவெல்னு நேம்ஸ்ட்ராப்பிங் இல்ல... ஷாட், ஆங்கிள்ஸ், சிஜிஐ, பாலெட் அப்படின்னு ஜார்கன் இல்ல. மாடர்னிசம், சர்ரியலிஸம், நிஹிலிஸம் அப்படி இப்படினு ஒரு வஸ்துகூட இல்ல.
இப்படி ஜகன்மோஹினி அடுப்பில் கால்விட்டதை பற்றி சிலாகிக்கும் உப்புமாவையெல்லாம் சினிமா பதிவு என்று வகைப்படுத்தியதற்காக வகைதொகையில்லாம கண்டிக்கிறேன்.
இதெல்லாம் சினிமா பதிவா?அதானே
பெல்லினி, பெர்க்மன், புனுவெல்னு நேம்ஸ்ட்ராப்பிங் இல்ல...
ஷாட், ஆங்கிள்ஸ், சிஜிஐ, பாலெட் அப்படின்னு ஜார்கன் இல்ல.
மாடர்னிசம், சர்ரியலிஸம், நிஹிலிஸம் அப்படி இப்படினு ஒரு வஸ்துகூட இல்ல.
இப்படி ஜகன்மோஹினி அடுப்பில் கால்விட்டதை பற்றி சிலாகிக்கும் உப்புமாவையெல்லாம் சினிமா பதிவு என்று வகைப்படுத்தியதற்காக வகைதொகையில்லாம கண்டிக்கிறேன்.
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்
சன் டிவியில் போட்ட ஆயிரம் பொய்[...]ன்னு நினைக்கிறேன்
[...]ஆங்கிலத்தில் வெளி வரும் [...] படங்களைப் பார்த்து வியந்து போவது என்பது ஒவ்வொரு முறையும் நிகழும் ஒன்று. [...]ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளில் படம் பார்த்தது மிகவும் குறைவுதான்.
தமிழ் சினிமா எல்லாம் சும்மா [...] அடுப்புக்குள்ள காலை விட்ட [...] ரேஞ்சுக்குதாங்க.
விமானப் பயணங்களில் பொழுது போகாமல் சில [...] படங்களைக் கண்டது உண்டு.
தமிழ் சினிமா மேம்படுமா [...]? ...[தமிழ் சினிமா] போக வேண்டிய தூரம் ரொம்ப அதிகம்.
தமிழ் சினிமா பாடல்கள் [...] வெறும் இரைச்சலாகவே இருப்பதால் அந்தப் பக்கமே போவதில்லை. [...] இப்பொழுது கர்நாடக சங்கீதம கேட்டுப் பரவசப்படும் [...] காலம்.
---------------
ஒண்ணுமில்லை.. "செலக்டிவ் ஹைலைட்டிங் பார் டம்மீஸ்" பண்ணினா எப்படி இருக்கும்னு பார்த்தேன்.
பதிவில் நீர் சொல்ல வந்ததும் இதேதானே?
//ரஜினி பக்கத்தில் நின்னேன். அவரு தோளில் கையைப் போட்டுக்கிட்டாரு. படம் எடுத்துக்கிட்டோம். பிடிச்சுதான்னா என்ன? பிடிச்சுதுதான். :) //
சூப்பரூ!
அட அந்த போட்டோ போட்டிருந்தா இன்னும் ஜூப்பரா இருந்திருக்கும்ல!
(நானு சத்யநாரயணா கூட மட்டும்தான் நின்னு போட்டோ எடுத்திருக்கேன்!)
//2)என்றென்றும் நட்சத்திரம் வல்லியம்மா//
vaazhga, valarka!
Ramanathanukku oru ripiteeeeeeee
//5) பிட் போட்டிக்கு மட்டுமே பதிவு போடும் எங்கள் கைப்புள்ளை//
பத்த வச்சிட்டியே பரட்டை!!!:(
இனிமே பிட் போட்டிக்கு மட்டும் பதிவு போடுறவன்னு எப்படி சொல்லிக்கிறது. கேள்விகள் எல்லாம் கொஞ்சம் கேஷுவலா ஜாலியா இருந்திருக்கலாம். எதோ தமிழ் சினிமாவைக் காப்பாத்த வந்த saviour நாம தான்ங்கிற ரேஞ்சுக்கு கேட்டிருக்காங்க. முயற்சி சேஸ்தானு.
////ரஜினி பக்கத்தில் நின்னேன். அவரு தோளில் கையைப் போட்டுக்கிட்டாரு. படம் எடுத்துக்கிட்டோம். பிடிச்சுதான்னா என்ன? பிடிச்சுதுதான். :) //
அப்போ அரசியலுக்கு வா தலைவான்னு அவரு பேருல கட்சி ஆரம்பிச்ச கூட்டத்துல நீங்களும் இருக்கீங்கன்னு தானே அர்த்தம்?
:)
ஆனா என் பதில்கள் அத்தனையும் உங்க பதிவில இருக்கு போல இருக்கே.:)
என்னைத் தாரகையாக்கிப் பட்டமும் கொடுத்திட்டீங்க:)
டாக்டர் பட்டமும் வந்துடும்:)
உண்மையாகவே உங்க அன்புக்கு நன்றி கொத்ஸ்.
//இப்படியாகப்பட்ட நுண்ணரசியல் ஜாம்பவான்களோடு எல்லாம் போட்டோ எடுத்துக்கிட்ட ரஜினி இன்னும் அரசியல்னா இப்படி பயப்புடறாரே... :-)//
இது...
ஸ்ரீதர் அண்ணாச்சி கலக்கிப்புட்டீக. :)
சினிமா பதிவு போட்டாச்சு ஐய்யா:)
கேள்விகள் அதிகம்தான் - அதுவும் விஜயின் 25 ஆவது படம் எது என்றுகூடத் தெரியாத உமக்கு!
ரஜினி உங்களுடன் படம் எடுத்துக்கொண்ட பிறகு இருமலு விக்கலு தும்மலு டயலாக்கை சொல்லிக்கொடுத்தீங்களா? அய்யோ பாவம்!
இந்தத் தொடர்லே எல்லாரோட பதிலும் ஏறத்தாழ ஒரே மாதிரி இருக்கிறது :-) முதல் படம் மட்டும்தான் ஒருத்தர் பாதாள பைரவியும் இன்னொருத்தர் அஞ்சலியும் சொல்கிறார்கள்!
ராம்ஸு.. லாங் டைம் நோ சீ!
///கைப்புள்ள said...
////ரஜினி பக்கத்தில் நின்னேன். அவரு தோளில் கையைப் போட்டுக்கிட்டாரு. படம் எடுத்துக்கிட்டோம். பிடிச்சுதான்னா என்ன? பிடிச்சுதுதான். :) //
அப்போ அரசியலுக்கு வா தலைவான்னு அவரு பேருல கட்சி ஆரம்பிச்ச கூட்டத்துல நீங்களும் இருக்கீங்கன்னு தானே அர்த்தம்?
:)////
கைப்புள்ள
என்ன டயலாக்கை மறந்திட்டீங்களா? இதைப் படிச்சுட்டு இலவசத்தைப் பாத்து சொல்ல /கேக்க வேண்டியது...
அவனா நீயீ ?
//அதேதான். சாய்ஸில கூட விட முடியாது போல இருக்கே.//
ஆமாம். கேள்விகள் ரொம்ப கலையுலகோடு சம்பந்தப்பட்டவங்களைப் பார்த்து வைக்கப்பட்ட கேள்விகள் போல. அதுக்கு நம்மளை பதில் சொல்லச் சொன்னா என்ன செய்ய?
//நன்னிம்மா கொத்ஸ். சினிமா ரொம்பப் பிடிக்கும். பதில்தாஅனெ ரெண்டு நாளாகும். யோசிக்கணுமில்ல:)//
இப்படி எல்லாம் செஞ்சுட்டு ரெண்டு மணி நேரத்தில் ரிலீஸ் பண்ணிட்டீங்களே!! :)
//அப்போ அடுத்த முதல்வரை எப்ப்படி தேர்ந்தெடுக்கிறதாம்//
நல்லா இருங்கடே!!
//தல... சங்கிலியை தொடர வைத்ததற்கு நன்றி :)).//
என்னைக் கூப்பிட்டதுக்கு நன்னி சொல்ல மாட்டேன். பெண்டு நிமிர்த்திட்டீரே!!
//இப்படியாகப்பட்ட நுண்ணரசியல் ஜாம்பவான்களோடு எல்லாம் போட்டோ எடுத்துக்கிட்ட ரஜினி இன்னும் அரசியல்னா இப்படி பயப்புடறாரே... :-)//
நல்ல வேளை எடுத்துக்கிட்டதுனாலதான் பயப்படறாருன்னு சொல்லாம விட்டுட்டீரே!! வளர நன்னி!!
//நான் நினைச்சுவச்சுருந்த பல பதில்களைக் காப்பியடித்த மாதிரித் தெரியுது :-))))//
ரீச்சர், என்ன இருந்தாலும் உங்க மாணவந்தானே. நீங்க நினைச்சதை நான் எழுதினதுல என்ன ஆச்சரியம்!! :))
// இப்ப படிக்க நேரமில்லை. உள்ளேனய்யா மட்டும் போட்டுங்கறேனுங்கோ!//
கடமை வீரன் மதுரையம்பதி வாழ்க!! (வேற எதாவது பட்டம் குடுத்தா வம்பாயிடும். அப்படி இருக்கே உம்ம பேரு!)
//இராமநாதன் said...
இதெல்லாம் சினிமா பதிவா?
பெல்லினி, பெர்க்மன், புனுவெல்னு நேம்ஸ்ட்ராப்பிங் இல்ல... ஷாட், ஆங்கிள்ஸ், சிஜிஐ, பாலெட் அப்படின்னு ஜார்கன் இல்ல. மாடர்னிசம், சர்ரியலிஸம், நிஹிலிஸம் அப்படி இப்படினு ஒரு வஸ்துகூட இல்ல.
இப்படி ஜகன்மோஹினி அடுப்பில் கால்விட்டதை பற்றி சிலாகிக்கும் உப்புமாவையெல்லாம் சினிமா பதிவு என்று வகைப்படுத்தியதற்காக வகைதொகையில்லாம கண்டிக்கிறேன்.
//
ராம்ஸு, நீர் தானா? ஆன்லைன் எல்லாம் வரீரு? என்ன ஆச்சு?
ஆனா பின்னூட்டத்தைப் பார்த்தா ரொம்ப அப் டு டேட்டா இருக்கற மாதிரிதான் தெரியுது!!! நல்லா இருமய்யா!
//ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்//
பெருசு, ஒரு பதிவுக்கும் வரது இல்லை ஆனா சினிமான்னா மட்டும் ஓடி வந்து ரிப்பீட்டேய் போடத் தெரியுது. இரும் உம்மை கவனிக்கிற விதத்தில் கவனிக்கிறேன்.
//ஒண்ணுமில்லை.. "செலக்டிவ் ஹைலைட்டிங் பார் டம்மீஸ்" பண்ணினா எப்படி இருக்கும்னு பார்த்தேன்.
பதிவில் நீர் சொல்ல வந்ததும் இதேதானே?//
வர கொஞ்ச நேரத்திலும் சும்மா இருக்க முடியலை? உமக்கு நல்ல குடுமி போட்டு கையில் தம்புராவும் குடுக்க வேண்டியதுதான். செய்ய வேண்டிய வேலையைச் செஞ்சுட்டு நாராயணா நாராயணான்னு போய்கிட்டே இருப்பீரு!
//சூப்பரூ!
அட அந்த போட்டோ போட்டிருந்தா இன்னும் ஜூப்பரா இருந்திருக்கும்ல!//
அது சரி. அதெல்லாம் பார்த்தா சின்னப் புள்ளங்க எல்லாம் பயப்படுமில்ல. அதான் போடலை!
//vaazhga, valarka!
Ramanathanukku oru ripiteeeeeeee//
வாங்க இடக்கு ராணி!! சாரி இடக்கை ராணி!! :))
//பத்த வச்சிட்டியே பரட்டை!!!:(
இனிமே பிட் போட்டிக்கு மட்டும் பதிவு போடுறவன்னு எப்படி சொல்லிக்கிறது.//
அது கூடாதுன்னுதானே இதைச் செஞ்சது!!
// கேள்விகள் எல்லாம் கொஞ்சம் கேஷுவலா ஜாலியா இருந்திருக்கலாம். எதோ தமிழ் சினிமாவைக் காப்பாத்த வந்த saviour நாம தான்ங்கிற ரேஞ்சுக்கு கேட்டிருக்காங்க. முயற்சி சேஸ்தானு.//
கேட்டவங்க, முதலில் கேட்கப்பட்டவங்க எல்லாம் அப்படியாப்பட்ட ஆளுங்க. அதுக்கு நாம என்ன பண்ண?
//அப்போ அரசியலுக்கு வா தலைவான்னு அவரு பேருல கட்சி ஆரம்பிச்ச கூட்டத்துல நீங்களும் இருக்கீங்கன்னு தானே அர்த்தம்?
:)//
இன்னிக்கு ரேட்ல நம்ம பெயரிலேயே கட்சி ஆரம்பிக்கறாங்க. நீங்க வேற!
//ஆனா என் பதில்கள் அத்தனையும் உங்க பதிவில இருக்கு போல இருக்கே.:)
என்னைத் தாரகையாக்கிப் பட்டமும் கொடுத்திட்டீங்க:)
டாக்டர் பட்டமும் வந்துடும்:)
உண்மையாகவே உங்க அன்புக்கு நன்றி கொத்ஸ்.//
பதில் அதே மாதிரி இருந்தால் கூட உங்க ஸ்டைலில் சொன்ன விதம் அருமை! அதுக்குத்தானே உங்களை சேர்த்து விட்டது!
//இது...
ஸ்ரீதர் அண்ணாச்சி கலக்கிப்புட்டீக. :)//
முதலில் பதிவைப் படிக்கலை அப்படின்னு பின்னூட்டம்.
அப்புறம் நேரடியா பின்னூட்டத்தைப் பத்தி பின்னூட்டம்.
பதிவைப் பத்திய உம்ம அபிப்ராயத்தைச் சொன்ன விதத்தில் இருக்கும் நுண்ணரசியலைக் கண்டு பிரமிக்கிறேன்!!
// சினிமா பதிவு போட்டாச்சு ஐய்யா:)//
பார்த்தாச்சே!! அது என்ன அம்புட்டு சந்தோஷமா? ஹைய்யான்னு குதிக்கறீங்க?! :))
//கேள்விகள் அதிகம்தான் - அதுவும் விஜயின் 25 ஆவது படம் எது என்றுகூடத் தெரியாத உமக்கு!//
அதான் சொன்னேன். ஆனா ஸ்ரீதர்தான் எழுதியே ஆகணம் அப்படின்னு சொல்லிட்டாரு. அதான் இப்படி.
//ரஜினி உங்களுடன் படம் எடுத்துக்கொண்ட பிறகு இருமலு விக்கலு தும்மலு டயலாக்கை சொல்லிக்கொடுத்தீங்களா? அய்யோ பாவம்!//
டயலாக் பேசறது, வாய்ஸ் விடறது. இதுக்கெல்லாம் ஒரு ரூமே வெச்சு இருக்காரு. இதில் நாம என்ன படம் எடுக்கப் போறோம்?
//இந்தத் தொடர்லே எல்லாரோட பதிலும் ஏறத்தாழ ஒரே மாதிரி இருக்கிறது :-) முதல் படம் மட்டும்தான் ஒருத்தர் பாதாள பைரவியும் இன்னொருத்தர் அஞ்சலியும் சொல்கிறார்கள்!
//
என்ன செய்ய? ரொம்ப ஸ்கோப் இல்லாத டாபிக்! எம்புட்டுதான் பொய் சொல்ல முடியும்?
//கைப்புள்ள
என்ன டயலாக்கை மறந்திட்டீங்களா? இதைப் படிச்சுட்டு இலவசத்தைப் பாத்து சொல்ல /கேக்க வேண்டியது...
அவனா நீயீ ?//
சங்கரு - எப்பவுமே இப்படித்தானா? பதிவைப் பத்தி பேசாம நுண்ண்ரசியல் செய்வதாக நினைத்துக் கொண்டு இருக்கீரு போல! நல்லா இருங்க சாமி!
//பிரமிக்கிறேன்//
உமக்கு தெரியாத நுண்ணரசியலா? :-)) அதென்ன ஒவ்வொருவாட்டியும் பட்டிக்காட்டான் மிட்டாய் கடையைப் பாத்த மாதிரி பிரமிக்கிறீரு? :))
ராசா, என்ன செஞ்சாலும் நமக்கும் மேல அடுத்தவன் செய்யும் நுண்ணரசியலைப் பார்த்து பிரமிக்காம என்ன செய்ய?
முதல் நாள் போஸ்டைப் படிக்காது போட்ட பின்னூட்டம், மறுநாள் போஸ்ட்/பின்னூட்டம் ரெண்டையும் படிச்ச பின் போட்டது...ஹிஹிஹி
//பதிவைப் பத்திய உம்ம அபிப்ராயத்தைச் சொன்ன விதத்தில் இருக்கும் நுண்ணரசியலைக் கண்டு பிரமிக்கிறேன்!!//
வேற யாராச்சும் சொல்லும் முன்னாடி நானே சொல்றேன்... பாம்பின் கால் பாம்பறியும் அப்படிங்கறது எவ்வளவு சரியா இருக்கு பாருங்க கொத்ஸ் :)
இது வேற! நல்லா இருங்க சாமிகளா!!
அடுத்த பதிவு போட்டாச்சே! அதுக்கு என்ன ரெம்பிளேற் பின்னூட்டம்தானே? :))
//அதுக்கு என்ன ரெம்பிளேற் பின்னூட்டம்தானே? :))//
அதே...அதைக்கூட இங்கணயே போட்ட்டுடட்டுமா? :))
அங்க போய் போடுமய்யா!! :))
போட்டாச்சு போட்டாச்சு !!
http://chinnavan.blogspot.com/2008/10/blog-post.html
Post a Comment