பாரா குடுத்த தைரியத்தில் நான் அந்த இலக்கணத் தொடரை ஆரம்பிச்சேன். ஆனா முதல் பகுதிக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பைப் பார்த்தால் ஆழம் தெரியாமல் காலை விட்டுட்டேனோன்னு பயமாவே இருக்கு. எதோ எனக்குத் தெரிஞ்சதை எழுதறேன். அடிக்கணமுன்னு முடிவு பண்ணிட்டா தயவு செஞ்சு தனியா ஒரு இடத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போய் அடிங்க. பப்ளிக்கா வேண்டாம்.
ரெண்டாவது பகுதி இன்னிக்கு ரிலீஸ் - இங்க போய் பார்த்திட்டு, கருத்து சொல்லுங்க.
நன்றி வணக்கம்.
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
//அடிக்கணமுன்னு முடிவு பண்ணிட்டா தயவு செஞ்சு தனியா ஒரு இடத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போய் அடிங்க.//
மீ த பஸ்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :)))
ரொம்ப நல்லா எளிமையா இருக்கு. விதிகளை விளக்கும் சில படங்களும் இணைத்தால் இன்னும் எளிமையாகுமென நினைக்கிறேன்.
எதுக்கு பயம்? நல்லாத்தானே போயிட்டிருக்கு :) நீங்க கலக்குங்க.
அடியேனின் சில கருத்துகள்...
சினிமா பாடல்கள் கோர்த்து இலக்கண குறிப்புகள் சொல்றது நல்ல உத்தி.
ஆனா, ஜனரஞ்சகமா சொல்லனும்னா ஆங்கிலம் அதிகம் கலக்கனும்னு அவசியம் இல்லையே. சில சமயம் சாதாரண தமிழ் வார்த்தைக்கும் வலிந்து ஆங்கிலம் சேக்கற மாதிரி நெருடலா இருக்கு.
நீங்க தமிழ் வார்த்தைகள் அதிகம் உபயோகிக்கற ஆள். எதுக்கு... இவ்ளோ ஆங்கில கலப்புன்னு ஒரு யோசனை.
மத்தபடி ஜாலியாவே போகுது. நீங்க வழக்கம்போல அடிச்சு ஆடுங்க :)
வாழ்க கோனார் நோட்ஸ்! ச்சே ஐ மீன் கொத்தனார் நோட்ஸ்! :)
//ஸ்ரீதர் நாராயணன் said...
அடியேனின் சில கருத்துகள்...//
இவரு எப்போ "அடியேன்" ஆனாரு? சொல்லவே இல்ல? :)
//நீங்க தமிழ் வார்த்தைகள் அதிகம் உபயோகிக்கற ஆள். எதுக்கு... இவ்ளோ ஆங்கில கலப்புன்னு ஒரு யோசனை//
வரிக்கு வரி ரிப்பீட்டே...
ஆனா கீழ்க் கண்டவாறு! :)
நீங்க தமிழ்ச் சொற்கள் அதிகம் பயன்படுத்துகிற ஆள், எதுக்கு... இவ்ளோ ஆங்கில கலப்புன்னு தான் ஒரு யோசனை!
வாழ்க கொத்ஸ் நோட்ஸ்!!!
Post a Comment