Monday, October 25, 2010

ஈஸியா எழுதலாம் வெண்பா!

எப்பொழுது வெண்பா மீது என் கவனம் திரும்பியது என்று எனக்கு ஞாபகமே இல்லை. சத்தியமாக பள்ளிப் பருவத்தில் இல்லை. இணையத்தில் நுழைந்து மேயத் தொடங்கிய பொழுது ஆறாம்திணை என்ற தளத்தில் வாஞ்சிநாதன் போட்டு வந்த தமிழ்க் குறுக்கெழுத்து புதிர்களைக் கண்டேன். ஆங்கிலக் குறுக்கெழுத்துப் போட்டிகளில் ஆர்வம் இருந்ததால் இந்த தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்களிலும் ஆர்வம் வந்தது. அந்தத் தளத்தில் வெண்பாப் பற்றிய குறிப்புகளும் இருந்தன. படிக்கும் பொழுது ஒரு சூத்திரத்திற்குட்பட்டு வார்த்தைகளை போடும் விதம் ஒரு வகையில் ஒரு வார்த்தைப் புதிர் போலத்தான் இருந்தது.

பின் 2006-ல் வலைப்பூ ஆரம்பித்து நானும் தமிழ்ப் புதிர்கள் போடத் தொடங்கிய பொழுது நண்பர் ஜீவ்ஸுடன் சேர்ந்து வெண்பா சமைப்பதும் (ஆமாம், அப்படித்தான் சொல்ல வேண்டுமாம்) தொடங்கியது. உபிச பெனாத்தலும் நானும் பல இடங்களிலும் இந்த வெண்பா ஆட்டம் போட்டோம். அப்பொழுது பலரும் வெண்பா விதிகளைப் புரியும் படிச் சொல்லித் தந்தால் நாங்களும் ஆட்டத்திற்கு வருவோமே என்று பலரும் சொல்ல வெண்பா தளத்தில், என் வலைப்பதிவில், நாங்கள் நடத்தி வந்த விக்கி பசங்க வலைப்பதிவில் என பல இடங்களிலும் இது பற்றி எழுதினோம்.


தொடர்ந்து ட்விட்டரில் சேர்ந்த பின் வெண்பாவுடன் வெண்பாம்களும் போடத் தொடங்கினோம். இந்த வெண்பாம் விளையாட்டுக்குக் காரணகர்த்தா பாராதான். இங்கும் பலரும் வெண்பா விதிகள் பற்றிக் கேட்கத் தொடங்கினர். அதே சமயம் வழக்கம் போல நேர் நேர் தேமா என்று வெறும் விதிகளாகச் சொன்னால் எங்களுக்குப் புரியப் போவது இல்லை. எளிமையாக, எங்களால் புரிந்து கொள்ளக் கூடிய எடுத்துக்காட்டுகளுடன் தர வேண்டும் என்பது எல்லோருக்கும் இருக்கும் ஓர் எதிர்பார்ப்பு என்பது நன்றாகவே புரிந்தது.


இன்று எனக்கு ஒருவர் சொல்லித் தந்தால் எப்படிச் சொல்லித் தரவேண்டும் என நான் எதிர்பார்ப்பேனோ, அதைப் போல வெண்பா விதிகளை சொல்லிப் பார்க்கலாம் என்று முயன்றேன். எழுதியதை பாராவிடம் காண்பிக்க அவர் நன்றாக வந்திருக்கிறது. இதனை புத்தகமாகவே போட்டுவிடலாம் என்றார். மெருகேற்றிய வடிவம் இப்பொழுது வெளியிடப்பட்டு விட்ட்து.




வெண்பா என்றால் என்ன, அதை எழுதுவது எப்படி என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்களுக்கான ஒரு அறிமுகப் புத்தகம் இது. இதைப் படித்து ஒரு அளவு புரிதல் வந்த பின் மேலும் அறிந்து கொள்பவர்கள் வழமையான புத்தகங்களைத் தேடிச் செல்லலாம். முழுக்க முழுக்க நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொற்களைக் கொண்டே விதிமுறை விளக்கங்களையும், வெண்பா எடுத்துக்காட்டுகளையும் எழுதியுள்ளேன். மனதில் பதிய வேண்டும் என்பதற்காக சினிமாவையும் தாராளமாக சேர்த்து இருக்கிறேன். படித்து, உங்கள் கருத்தினை தெரிவிக்க வேண்டும்.


இந்தப் புத்தகத்தை வாங்க விரும்புகிறவர்கள் கிழக்கு பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளலாம் (தொலைபேசி எண்கள்: (044-42868126 / 0-9500045640) இணையத்தில் வாங்குவதற்கு இங்கு க்ளிக்கவும் அல்லது படத்தின் மேல் க்ளிக்கவும்.


பிகு: இதே போன்று தமிழ் இலக்கணம் பற்றி தமிழ் பேப்பரில் நான் எழுதும் தொடரையும் படித்துப் பாருங்கள்.

60 comments:

said...

அட்டை அட்டகாசமான லே-அவுட் :)

வெண்பா படிக்கவேண்டும் என்ற விபரீத ஆசை [கொலவெறி] வந்தது டிவிட்டரில் வந்த பிறகே! :) வெண்பா பயிற்சிபட்டறை மாதிரி விசேஷமாக ஏதேனும் செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் இருந்தேன்! புத்தகம் ஒரு வரப்பிரசாதம் நானும் படிச்சு வெண்பா குக்’க முயற்சிக்கிறேன் :)


வாழ்த்துகள் பாஸ் :)

said...

ஒத்துக்குறேன்... நீங்களும் ரவுடி தான் என்பதை ஒத்துக்குறேன்...

புத்தகத்தை வாங்கிட்டு அப்புறம் மீட் பண்ணுறேன்

said...

இலவசக்கொத்தனார்


இதுக்கும் ஒரு சல்யூட்

ரைட்டர் இலவசம் - ரைட் செஞ்சதை இலவசமா கொடுப்பாரான்னு யாரு கேக்காம இருக்க.....!
#முந்திக்கிட்டுநான்கேட்டுக்கிடறேன்

said...

வாழ்த்துகள் :)

said...

சூப்பர்! வாழ்த்துகள் :)

அடுத்து ‘தமிழில் குறுக்கெழுத்து போட்டிகள்’ பற்றி புத்தகமா? கலக்குங்க தல! :)

//மனதில் பதிய வேண்டும் என்பதற்காக சினிமாவையும் தாராளமாக சேர்த்து இருக்கிறேன்.//

உங்க நிலைப்பாடு ஆச்சர்யமா இருக்கு. சினிமா பற்றி அதிகமா பேசறாங்கன்னு வேதனைப்படறதா காட்டிக்கறீங்க. இன்னொரு பக்கத்துல உங்க இலக்கண குறிப்புகளிலும், வெண்பா பாடங்களிலும் சினிமா பாடல்கள், பெயர்கள் என்றே உபயோகிக்கறீங்க.

தமிழர்களோட ‘சினிமா மோகம்’ பற்றிய உங்க கவலை உண்மையா இருந்தா நீங்களும் அதை தவிர்த்திருக்கனும் இல்லையா? நீங்க விரும்பாத ஒரு விஷயத்தை வச்சு நீங்க புத்தகம் எழுதறது எதுக்காக? புரியலயே :(

சரி! சரி! ஃப்ரீயா விடுங்க :))

said...

ஸ்ரீதர்

சர்க்கரை உடம்புக்கு நல்லதில்லை எனத் தெரிந்தாலும் மருந்தை அதில் கலந்து தருவோம் இல்லையா? அந்த மாதிரி.

வெண்பா என்றாலே வேப்பங்காயா ஓடுவாங்க. இன்னிக்கு அவங்க மனசுக்குப் பிடிச்சதை சொல்லி வர வெச்சு அப்புறம் நாம தரும் மீட்டரில் அவங்களைப் பாட்டு எழுதச் சொல்லணும். அதான் ப்ளான்! :)

இதே காரணத்திற்காகத்தான் இலக்கணத் தொடரிலும் சினிமா வாசனை!

said...

நேஹா, அனுஷ்கா,சோனியா,மதுமிதா அட்டையே மங்களகரமா இருக்குதே. வெண்பாவை விட இந்த பெண்பா(வைகள்) பேர் அமோகம்.இவங்களை பத்தியே பல வெண்பாக்கள் எழுதிருவோம். வெண்பா எழுதுறது எப்படின்னு சொல்லிக் கொடுத்து, அதுக்கு பாடு பொருளையும் கொடுத்த தமிழ் வாத்யார் வாழ்க!

வாழ்த்துகள்! வாழ்த்துகள் !

said...

ஆயில்யன் அண்ணாத்த கேட்டுட்டாரு! :))))))

said...

பின்றீங்க கொத்தனாரே! இங்க நம்ம ஊருல [US]கிடைக்குமா? இல்லை உங்ககிட்டேருந்தே நேரடியா வாங்கமுடியுமா? வாழ்த்துகள்!

said...

//சர்க்கரை உடம்புக்கு நல்லதில்லை எனத் தெரிந்தாலும் மருந்தை அதில் கலந்து தருவோம் இல்லையா? அந்த மாதிரி. //

அப்படியா? ஆனா புத்தக அட்டைபடத்திலேயே சினிமா நடிகை பெயர்கள்தானே இருக்கு.:)

எனக்கு இது கொஞ்சம் ‘மலிவான’ மார்கெட்டிங் உத்தியாகப் படுது. புத்தக விற்பனை மட்டும்தான் முக்கிய குறிக்கோள்னா அதில தப்பில்லை :)

ஆனா, அதை நீங்க செய்யலாமான்னு ஒரு சின்ன ஆதங்கம் :(

உங்க தளத்துல சினிமா நடிகைகள் படம் போட்டு, கெக்கேபிக்கே ஜோக்கு போட்டு ஹிட்ஸ் ஏத்தறதுக்கு முயற்சி செஞ்சு நான் பார்த்ததில்லை. புத்தகத்துக்கு மட்டும் ஏன் இப்படி?

Rapidex, Dummies, 30 நாட்களில் சீரிஸ் புத்தகங்கள் எல்லாம் எளிமையாக, தேவையான விஷயங்களை மட்டும் சொல்லித் தரும் ’ஆரம்ப’ புத்தங்களாக இருக்கும். அதிகம் Subjectஐ விட்டு வெளியில போகாத உள்ளடக்கமும், வடிவமைப்புமாக இருக்கும். அந்த மாதிரியான வடிவத்திலதான் நீங்களும் எழுதியிருக்கீங்கனனு நினைக்கிறேன். புத்தகத்தின் வெற்றிக்கு மீண்டும் வாழ்த்துகள்ஜி.

said...

வாழ்த்துகள் எழுத்தாளரே/ கவிஞரே :))

மேலும் பல சிகரங்கள் தொட வாழ்த்துகள்

said...

மனமார்ந்த வாழ்த்துகள். அடுத்தது குறுக்கெழுத்துப் போட்டி புத்தகம் தான்! சக பதிவர் (உங்க பேரைப் பார்த்திட்டுத் தான் நானும் crazy! பேரு வச்சிக்கணும்னு தீர்மானம் பண்ணினேன்) எழுத்தாளராக வளர்வதற்கு வாழ்த்துகள்

இந்த வெண்பாயணத்தில (ஹிஹி) நானும் கொஞ்ச நாள் கலந்து கொண்டதினாலும், ஆணாதிக்க நுண்ணரசியலுக்கு எதிராகவும், என் கருத்துக்கள் வரலாற்றுக்கு முக்கியம்! என்பதினாலும், இதையும் எழுதிடறேன்:

நேர்நேர் - சூர்யா / ரித்திக்
நிரைநேர் - ரஜினி / முரளி
நேர்நிரை - மாதவன்
நிரைநிரை - பசுபதி

said...

அன்பார்ந்த கொத்ஸ்,

இந்த ஒருபக்கத்தை கவனிக்க அனுமதி வேணுமாய் கோரிக்கொள்கிறேன்.

அன்பார்ந்த ஸ்ரீதர்,

மலிவான உத்தி - என்பதை நான் ஏற்கவில்லை - உள்ளே உள்ள கண்டெண்டைப் படித்துவிட்டவன் என்ற முறையில். அட்டை, புத்தகத்தின் டோனை அருமையாகப் பிடித்துச் சொல்வதாகத்தான் நான் கருதுகிறேன்.

வெண்பா என்பது எதோ பண்டிதர்கள் சமாசாரம், அதுக்கெல்லாம் நிறைய இலக்கணம் தெரிஞ்சிருக்கணும், ஆசுகவியா இருக்கணும் என்னும் மனப்பான்மையோடு அதன்பக்கம்கூட நெருங்காமல் இருப்பவர்களை சப்பை மேட்டர்டா இது - நேஹாவையும் மதுமிதாவையும் வச்சுக்கூட வெண்பா கத்துக்கலாம்டா என்று அழைக்கும் முயற்சி இது.

டம்மீஸ் புத்தகங்களை யார் வாங்குவார்கள்? மேட்டரில் ஆர்வம் உண்டு, ஆனால் புரியவில்லை என்பவர்கள். இது, மேட்டரில் ஆர்வமே இல்லாதவர்களுக்கு ஆர்வம் ஏற்படுத்தும் முயற்சி - எனவே, மலிவான என்பதைவிட தெளிவான அட்டை என்றுதான் சொல்வேன் :-)

மற்றபடி, ட்விட்டரில் சினிமா பற்றிப் பேசினாலே ஆசாரம் கலைஞ்சுபோச் என்பவர்கள் சினிமாப்பாட்டு பாடியே இலக்கணம் சொல்லிக்கொடுப்பதில் உள்ள .. அதென்ன வார்த்தை.. ஆங்.. நகைமுரண் பத்தி சொல்றீங்களே, அங்கே உங்களோட ஜாயின் பண்ணிக்கறேன் :-)

said...

ஏனுங்க.. பேரு இலவசம்னு வச்சிட்டு புக்குக்கு இம்புட்டு காச கேட்கறீங்க?


வருங்கால முதல்வர் வால்க வால்க

இப்போ கெடைக்குமா புக்கு ப்ரீயா?

எல்லா எழுத்தாளருக்கும் முதல் படைப்பு தலைப் பிரவசத்திற்கு சமனானது என்று எங்கேயோ படித்த ஞாபகம்.
மனமார்ந்த வாழ்த்துகள்! படைத்த படைப்புக்கும் இனி வரும் படைப்புகளுக்கும்

said...

கொத்தனாரே முயற்சிக்கு வாழ்த்துகள்.
புத்தகத்தை வாங்கி விடுகிறேன்.

இதைக் கற்று புதிய கவிஞர்கள் பழம் பாணி
வெண்பாவை எழுத வேண்டும். கிழக்குப் பதிப்பகம் அப்படிக் கவிஞர்கள் உருவாக வேண்டுமென்றுதான் இதை வெளியிட்டிருக்கிறார்கள். விரைவில் வெண்பா நூலும் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாமோ?

சினிமாவைப் பயன்படுத்தும் உத்தி சரியா என்ற விவாதத்தில் நான் இறங்கவில்லை. ஒரு புதில்:

கற்க நடிகையர் பேர்சொல்லி, கற்றபின்
விற்கலாம் வெண்பா பல.

--- வாஞ்சிநாதன்

said...

நான் கேட்க நினைச்சதை எல்லாம் ஸ்ரீதர் நாராயணன் கேட்டு உங்க உபிச வந்து பதிலும் கொடுத்திருக்கார், என்றாலும் கெபி சொன்ன மாதிரி எழுதி இருந்தாலும் புத்தகம் நல்லாவே இருந்திருக்குமோ?? :))))))) சரி, சரி, டென்ஷன் பண்ணலை! :))))

புத்தகவெளியீட்டுக்கு வாழ்த்துகள். இலவசமாக் கொடுப்பீங்கனு நினைச்சேன். கி.ப.விலே போய் வாங்கிக்கோனு சொல்றது அநியாயமா இல்லை??

புதிர் போட்டு வருஷக் கணக்காகிறதே? கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுக்கக் கூடாதா?? :(

said...

ஓ, மறந்துட்டேனே, நினைவு வச்சுட்டுக் கூப்பிட்டதுக்கு நன்னி ஹை! :P

said...

நிஜமாவே கோபமாத் தான் இருந்தேன். :D

said...

//ஆங்.. நகைமுரண் பத்தி சொல்றீங்களே, அங்கே உங்களோட ஜாயின் பண்ணிக்கறேன் :-)//

நன்றி எழுத்ஸ். அதேதான். நகைமுரண் - தேமாங்கனி. :))

said...

வாழ்த்துக்கள், கொத்ஸ்! நேராவே எனக்கு கோச்சிங் தர்றேன்னு சொன்னப்பவே பயந்து ஓடினேன், எனக்கு ஞாபகமிருக்கு... இப்போ புத்தகமே போட்டுடீங்களா, ஊருக்கு போனா வாங்கி ‘திங்’ பண்றேன் - அதுவும் நம்ம தளமான்னு :)

said...

வாழ்த்துக்கள் இ.கொ! எங்க ஊரிலே கூடிய சீக்கிரம் கிடைக்கும் வாங்கிக்கறேன்,
//டம்மீஸ் புத்தகங்களை யார் வாங்குவார்கள்? மேட்டரில் ஆர்வம் உண்டு, ஆனால் புரியவில்லை என்பவர்கள். இது, மேட்டரில் ஆர்வமே இல்லாதவர்களுக்கு ஆர்வம் ஏற்படுத்தும் முயற்சி - எனவே, மலிவான என்பதைவிட தெளிவான அட்டை என்றுதான் சொல்வேன் :-)//

ஒத்துக்கறேன் சுரேஷ்பாபு! வித்தியாசம் இருக்கு!

அல்லாருக்கும்: கொத்து வேலை வேணா இலவசமா செஞ்சு கொடுப்பாரு! புத்தகம் கேட்டா எப்புடி?

said...

\\எனக்கு இது கொஞ்சம் ‘மலிவான’ மார்கெட்டிங் உத்தியாகப் படுது. புத்தக விற்பனை மட்டும்தான் முக்கிய குறிக்கோள்னா அதில தப்பில்லை :)

ஆனா, அதை நீங்க செய்யலாமான்னு ஒரு சின்ன ஆதங்கம் :(

உங்க தளத்துல சினிமா நடிகைகள் படம் போட்டு, கெக்கேபிக்கே ஜோக்கு போட்டு ஹிட்ஸ் ஏத்தறதுக்கு முயற்சி செஞ்சு நான் பார்த்ததில்லை. புத்தகத்துக்கு மட்டும் ஏன் இப்படி?
\\

நிச்சயமாக இல்லை ஸ்ரீதர்! சர்வ நிச்சயமாக இல்லை. சும்மா வெண்பா படிக்கலாம் வாங்கன்னு கூப்பிட்டா சரி இதும் ஏதோ தீண்ட தகாத புத்தகம், அல்லது வாங்கி அலமாரில வச்சுட்டு என்னிக்காவது மலச்சிக்கல் வந்து டாய்லெட்டிலே இருக்கும் எல்லா புத்தகமும் தீர்த்து போன பின்னே புது முயற்சியா இதை படிச்சுப்போம்ன்னு படிக்கும் புத்தகமாகவோ தான் ஆகியிருக்கும். இந்த அட்டை படம் பார்த்து கவர்சியால் அந்த நடிகையின் கிசு கிசு இருக்கும் என்றோ, அவங்க படம் இருக்கும் என்றோ நிச்சயமாக யாரும் நினைத்து விட போவதில்லை. உள்ளே வெண்பா பற்றின விஷய்ம் தான் இருக்க போவுதுன்னு நல்லா தெரியும். "அட இந்த ஆசிரியர் எதுவோ புதுமையா சொல்ல வர்ராரே"ன்னு ஒரு உந்துதல் தான் ஏற்படுத்துகின்றது.

நன்று கொத்ஸ்! நிச்சயம் வாங்கி விடுகின்றேன். படிச்சு ஒரு வெண்பாவாவது எழுதி கவிஞர் கனிமொழின்னு ச்சே கவிஞர் அபிஅப்பான்னு உங்க கிட்டே பேர் வாங்கிடுறேன்!!!

said...

நகைமுரண் - தேமாங்கனி இல்லை - மதுமிதாதான் :-)

said...

ஆயில்ஸ்

/அட்டை அட்டகாசமான லே-அவுட் :)/

என்னே உம் நுகபிநி!!

/புத்தகம் ஒரு வரப்பிரசாதம் நானும் படிச்சு வெண்பா குக்’க முயற்சிக்கிறேன் :) /

நன்றாகக் குக்க என் ஆசீர்வாதம்.

/வாழ்த்துகள் பாஸ் :)/

நன்னி ஹை!

said...

/ஒத்துக்குறேன்... நீங்களும் ரவுடி தான் என்பதை ஒத்துக்குறேன்.../

ஒத்துக்கிட்டதுக்கு நன்னி ஹை!

/புத்தகத்தை வாங்கிட்டு அப்புறம் மீட் பண்ணுறேன்/

மீட்டும்!! :)

said...

//நகைமுரண் - தேமாங்கனி இல்லை - மதுமிதாதான் :-)//

’ஐ’ நெடில் இல்லையோ? ந/கை/முரண் - இப்படித்தானே அசை பிரிக்க முடியும்? #சின்சியர்டவுட்டு

said...

→ | |

நகைமுரண் -> கருவிளம்... :)) லைட்டா ஸ்லிப்பிட்டேன் :)

(கொத்தனார் இதுக்கு ஸ்டேண்டர்டா என்ன பதில் போடுவார்னு தெரியும்... என்பதால்... அப்படியே அப்பீட்டாயிடறேன்.)

said...

முந்தைய கமெண்ட்டில் சில பகுதிகளை HTML tag என்று நினைத்து ப்ளாகர் மறைத்துவிட்டது போல. நான் போட்ட (போட நினைத்த) கமெண்ட் இதுதான் -

நிரை → குறில்+குறில் | குறில்+நெடில் | நிரை+ஒற்று

நகை/முரண் -> கரு/விளம்

said...

நல்ல புத்தகம் நன்றி கொத்ஸ்

said...

அபி அப்பா!

//அட இந்த ஆசிரியர் எதுவோ புதுமையா சொல்ல வர்ராரே"ன்னு ஒரு உந்துதல் தான் ஏற்படுத்துகின்றது.//

உங்க கமெண்ட்டை இப்பதான் பாத்தேன்.

முதல்ல தெளிவா ஒண்ணு சொல்லிடறேன். கவர்ச்சியான தலைப்புலயோ, அல்லது விஷயங்களையோ எழுதவேக் கூடாதுன்னு நான் சொல்லல. கி.ரா. ஜி.நாகராஜன்லாம் விழுந்து விழுந்து படிக்கிறவன்தான் நான். கொத்தனாரே நாளைக்கு அப்படி ஒரு டாபிக்ல எழுதினார்னா சந்தோஷமா கைதட்டுவேன்.

புதுமையா ஆர்வம் ஏற்படுத்தறவிதமா செய்யறதுக்கு ஏகபட்ட வழிகள் இருக்கும் போது கொத்தனார் சினிமா சம்பந்தபட்ட விஷயங்களை மட்டும் தேர்ந்தெடுக்கிறார். அதே சமயம் அவர் தன்னை ‘சினிமா மோகத்துக்கு’ எதிரானவனாகவும் காட்டிக்கிறார். இந்த முரண்பாட்டைத்தான் அவருக்கு சுட்டிக் காட்ட விரும்பறேன். :)

//சினிமாவைப் பயன்படுத்தும் உத்தி சரியா என்ற விவாதத்தில் நான் இறங்கவில்லை. ஒரு புதில்:

கற்க நடிகையர் பேர்சொல்லி, கற்றபின்
விற்கலாம் வெண்பா பல.

--- வாஞ்சிநாதன்//

வாஞ்சி ஐயா! உங்க பதில் பிரகாரம் பாத்தா நடிகையர் பெயர்களின் பேர் ஆர்வம்கொள்ளும் விடலைகள் மட்டும் வெண்பா கற்றுக் கொண்டால் போதும் போல. பெண்கள் கத்துக்கிறதுக்கு வேற ஒரு உத்தியோட புத்தகம் எழுதனுமோ? :) என்னமோ போங்க...

said...

நல்ல நடிகையை வைத்து வெண்பா தந்தீங்க ... வாழ்த்துக்கள்.

said...

/இலவசக்கொத்தனார்


இதுக்கும் ஒரு சல்யூட் /

மீண்டும் நன்னி ஹை! உறைக்க வேண்டிய ஆளுக்கு உறைச்சா சரி! :)

/ரைட்டர் இலவசம் - ரைட் செஞ்சதை இலவசமா கொடுப்பாரான்னு யாரு கேக்காம இருக்க.....!
#முந்திக்கிட்டுநான்கேட்டுக்கிடறேன்/

மத்தவங்க கேட்காம பார்த்துக்கிட்டதுக்கு நன்னி. உமக்கு என் இதயத்தில் என்றுமே இடமுண்டு!

said...

வாத்தி,

வாழ்த்துகளுக்கு நன்னி. புத்தகத்தைப் படிச்சுட்டு அடிக்கணமுன்னு தோணினா பப்ளிக்கில் எல்லாம் பண்ணக் கூடாது! :)

said...

குரு

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்கள் வெண்பாக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!!

said...

லதாமகன்

ஆமாம். அவரு கேட்டுட்டாரு. இனிமே நீங்க அதையே கேட்கக் கூடாது. புக்கை வாங்கிப் படிக்கிற வழியைப் பாருங்க!

said...

விஎஸ்கே ஐயா

வாழ்த்துகளுக்கு நன்றி. அமேசானில் கிழக்கின் புத்தகங்கள் கிடைக்கும். ஆனால் எல்லாப் புத்தகங்களும் கிடைக்குமா எனத் தெரியவில்லை.

அவர்களிடம் கேட்டுச் சொல்கிறேன்.

said...

/அப்படியா? ஆனா புத்தக அட்டைபடத்திலேயே சினிமா நடிகை பெயர்கள்தானே இருக்கு.:)/

வராதவங்களை வர வைக்கத்தான்னு சொல்லியாச்சே. இன்னும் என்ன புரியலை?

/எனக்கு இது கொஞ்சம் ‘மலிவான’ மார்கெட்டிங் உத்தியாகப் படுது. புத்தக விற்பனை மட்டும்தான் முக்கிய குறிக்கோள்னா அதில தப்பில்லை :) /

இப்படி எல்லாம் பேச உங்களுக்கே அசிங்கமா இல்லைன்னா சரி. நல்லவேளை அடுத்த கட்டமா சரோஜாதேவி கதைகள் எழுதுங்க, இன்னும் நல்லா காசு கிடைக்கும்ன்னு சொல்லாம விட்டீங்களே. நன்றி.

என் தளத்திலும் சினிமாவை முன்னிறுத்திப் புதிர்கள் போட்டு இருக்கேன். இப்போ விற்பனை இல்லாம இலவசமா வரும் தமிழ் பேப்பரில் சினிமா வெச்சுத்தான் இலக்கணம் சொல்லறேன். பரவலாப் போய் சேரதான் இதை எல்லாம் செய்யறது. நீங்க சொல்லும் ரேபிடெக்ஸ் எல்லாம் இலக்கணம் சொல்லித்தர உதவாது. அது படிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வாங்குவது. இது என்னவென்று தெரியாதவர்களைக் கூட இழுப்பதற்காக எழுதியது. வித்தியாசம் இருக்கிறது.

said...

டுபுக்கு

நன்றி!!

சிங்க நடை போட்டு சிகரங்கள் ஏற நாம என்ன.... :) நாம நம்ம ஸ்பீடிலயே போகலாம்!! :)

said...

கேபி அக்கா

வாங்க. வாழ்த்துகளுக்கு நன்றி.

/இந்த வெண்பாயணத்தில (ஹிஹி) நானும் கொஞ்ச நாள் கலந்து கொண்டதினாலும், ஆணாதிக்க நுண்ணரசியலுக்கு எதிராகவும், என் கருத்துக்கள் வரலாற்றுக்கு முக்கியம்! என்பதினாலும், இதையும் எழுதிடறேன்:/

டிபிகல் பின்புத்தி!! :)

உள்ள என்ன இருக்குன்னு தெரியாமலேயே ... :)

நீங்க சொன்ன சூர்யாவும் இருக்காரு. சொல்லாத வடிவேலும் இருக்காரு. இன்னும் வில்லன் நடிகர்கள் எல்லாம் கூட இருக்காங்க!! :)

said...

ஐயா பெனாத்தலாரே!!

இதுக்கு நீர் சும்மாவே இருந்திருக்கலாம்!!

ரொம்ப நன்றி!!

said...

/ஏனுங்க.. பேரு இலவசம்னு வச்சிட்டு புக்குக்கு இம்புட்டு காச கேட்கறீங்க?/

அடப்பாவி 25 ரூபாய்க்கா இப்படி? :)

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாஞ்சி ஐயா

எல்லாம் நீங்க ஆரம்பிச்சு வெச்சது! நன்றிகள் உங்களுக்கே!!

/கற்க நடிகையர் பேர்சொல்லி, கற்றபின்
விற்கலாம் வெண்பா பல./

புரிந்து கொண்டதற்கு நன்றி!

said...

/என்றாலும் கெபி சொன்ன மாதிரி எழுதி இருந்தாலும் புத்தகம் நல்லாவே இருந்திருக்குமோ?? :))))))) சரி, சரி, டென்ஷன் பண்ணலை! :))))/

அக்காவிற்குச் சொன்ன பதிலைப் பாருங்க!! புக்கைப் படிச்சா விஷயம் தெரிஞ்சுடப் போகுது!!

/புத்தகவெளியீட்டுக்கு வாழ்த்துகள். இலவசமாக் கொடுப்பீங்கனு நினைச்சேன். கி.ப.விலே போய் வாங்கிக்கோனு சொல்றது அநியாயமா இல்லை?? /

அட! அதுதான் அநியாயமா? யாரும் சொல்லவே இல்லையேம்மா!! :)

said...

/ ஓ, மறந்துட்டேனே, நினைவு வச்சுட்டுக் கூப்பிட்டதுக்கு நன்னி ஹை! :P/

ஆல்வேஸ் வெல்கம் ஹை! கூகிள் ரீடரில் சேர்த்துவிட்டா தானா புதுப் பதிவு வந்தால் சொல்லும். ஆனாச் செய்யணுமே!!

தமிழ் பேப்பரில் இலக்கணத் தொடரைப் படிக்கறீங்களா? எனி கருத்தூஸ்? (இதுதாண்டா வம்பை விலைக்கு வாங்கறது!)

said...

/ நிஜமாவே கோபமாத் தான் இருந்தேன். :D/

இது எதுக்கு? and what is new? :)

said...

/நன்றி எழுத்ஸ். அதேதான். நகைமுரண் - தேமாங்கனி. :))/

நகைமுரண்ன்னு சொல்லறது வேற. நானும் ஆமாம் ஹிஹின்னு சொல்லிட்டுப் போவேன்.

ஆனா மலிவான உத்தி, புக்கு விக்கறதுக்கு செய்யும் வேலை என்பது வேறு. அதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது.

said...

தெக்கி

நாளாச்சு நம்ம பக்கம் வந்து. வாழ்த்தினதுக்கு நன்றி.

said...

திவா

வாழ்த்துகளுக்கு நன்றி

வித்தியாசம் இருக்குன்னு புரிஞ்சுக்கிட்டதுக்கு நன்றி

இலவசமாக் கேட்கக்கூடாதுன்னு சொன்னதுக்கு டபுள் நன்றி (கீதாம்மா கவனிக்கவும்.)

said...

அபி அப்பா

வாழ்த்துகளுக்கு புரிதலுக்கும் நன்றி.

உங்கள் வெண்பாவிற்குக் காத்திருக்கிறேன்.

said...

ஸ்ரீதர்

நகைமுரண் என்றால் நகை/முரண் என்றுதான் அசை பிரிக்க வேண்டும். நான் இதை மதுமிதாவாகவோ ரகசியாவாகவோ சொன்னால் உங்களுக்குக் கோபம் வரலாம் என்பதால் கருவிளம்தான் சரி எனச் சொல்லிவிடுகிறேன்.

said...

வடகரை அண்ணா

படிக்காமலேவா? நல்லா இருங்க! :)

நன்றி!

said...

/புதுமையா ஆர்வம் ஏற்படுத்தறவிதமா செய்யறதுக்கு ஏகபட்ட வழிகள் இருக்கும் போது கொத்தனார் சினிமா சம்பந்தபட்ட விஷயங்களை மட்டும் தேர்ந்தெடுக்கிறார். அதே சமயம் அவர் தன்னை ‘சினிமா மோகத்துக்கு’ எதிரானவனாகவும் காட்டிக்கிறார். இந்த முரண்பாட்டைத்தான் அவருக்கு சுட்டிக் காட்ட விரும்பறேன். :)/

மீண்டும் சொல்கிறேன். நான் சினிமாவிற்கு எதிரி இல்லை. ஆனால் அதை மட்டுமே பேசிக் கொண்டு அலைவதற்குத்தான் எதிரி.

அப்படி இருப்பவர்களை வெண்பா பக்கம் திருப்ப அவர்கள் வழியில்தான் சென்றாக வேண்டும் என நினைத்துத்தான் செல்கிறேன்.

நேர் நேர் தேமா என்றால் நீ பேசாம போம்மா என்பார்கள். அதனால் நேர் நேர் நேஹா என்றோ சூர்யா என்றோ சொன்னால் அட்லீஸ்ட் என்ன என்று நின்று கேட்பார்களே என்று நினைத்துதான் சொல்கிறேன்.

said...

/வாஞ்சி ஐயா! உங்க பதில் பிரகாரம் பாத்தா நடிகையர் பெயர்களின் பேர் ஆர்வம்கொள்ளும் விடலைகள் மட்டும் வெண்பா கற்றுக் கொண்டால் போதும் போல. பெண்கள் கத்துக்கிறதுக்கு வேற ஒரு உத்தியோட புத்தகம் எழுதனுமோ? :) என்னமோ போங்க.../

கெபி அக்காவிற்கு சொன்ன பதிலைப் பாருங்க. அவங்களுக்கும் மேட்டர் புக்கில் இருக்கு. என்ன இருக்கிறது என்று தெரியாமலேயே வெறும் அட்டைப்படம் பார்த்து இவ்வளவு சொன்னால் படித்த பின் என்ன சொல்லப் போகிறீர்களோ? ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

said...

/நல்ல நடிகையை வைத்து வெண்பா தந்தீங்க ... வாழ்த்துக்கள்./

நன்றி சரவணன்.

said...

//எனக்கு இது கொஞ்சம் ‘மலிவான’ மார்கெட்டிங் உத்தியாகப் படுது. புத்தக விற்பனை மட்டும்தான் முக்கிய குறிக்கோள்னா அதில தப்பில்லை :) //

இப்படி எல்லாம் பேச உங்களுக்கே அசிங்கமா இல்லைன்னா சரி. //

நோ ரென்சன் சாரே!

நான் சொன்னது வெகுஜன ரசனைக்காக காம்ப்ரமைஸ் பண்ணிக்கிறது பத்திதான். அதிகம் பேர் படிச்சு பயனடைவாங்கன்னு சொல்றீங்க. நல்லாப் புரியுது :)

பொறுமையா பதில் சொன்னதுக்கு நன்றி! :)

said...

ஆஹா........

நம்ம 'க்ளாஸ்' லீடர் ரௌடி ஆகிட்டார்!!!!!

இனிய வாழ்த்து(க்)கள்.

said...

நமக்கும் கவுஜ, வெம்பா இதுக்கெல்லாம் தூரம் அதிகம்.

நூல் நிறைய விற்று வெம்பா தெருவெங்கும் ஓட வாழ்த்துகள்

said...

வாழ்த்துகள்

said...

வாழ்த்துகள்!

said...

best wishes :)