Friday, January 03, 2020

பாவம், எம்டியாருக்கு வந்த சோதனை!

ராஜநாயகம் எழுதறதை ஒரு பொழுதுபோக்காப் படிப்பேன். ரெண்டொரு சமயத்தில் தவறுகளைச் சுட்டிக் காட்ட ஒரே அழுகை என்பதால் அதையும் நிறுத்தி விட்டேன். ஆனால் இவர் எம் டி ராமநாதனைப் பற்றி எழுதியதைப்https://rprajanayahem.blogspot.com/2019/12/md.html ) படித்த பின்பு சும்மா இருக்க முடியவில்லை. 

எம் டி ராமநாதன் நல்லாப் பாடுவார். அது வரை சரி. டைகர் வரதாச்சாரியின் சிஷ்யர். அதிலும் சந்தேகமில்லை. ஆனால் "ராமநாதன் எந்த அளவுக்கு குருவை உள்வாங்கி செரித்துக்கொண்டார் என்றால்,அவருடைய மாறுகண் கூட இவருக்கும் வந்து விட்டது”, இதை எல்லாம் எந்த ஆதாரத்தோட பேசறார்ன்னு தெரியலை. சும்மா திண்ணையில் உட்கார்ந்துக்கிட்டு அடிச்சு விடற மாதிரி எதையோ சொல்லறார். இதுக்கு எல்லாம் எதாவது ஆதாரம் உண்டா?  போகட்டும். 

"தேவச பாகவதரின் மகனாக பாலக்காடு மஞ்சப்பராவில் பிறந்து” அவரோட அப்பா பேரு தேவசமும் இல்லை திவசமும் இல்லை. தேவேச பாகவதர். அதுவும் போகட்டும். தட்டச்சுப் பிழைன்னு இதை விட்டுடலாம்.  "MD ராமனாதனின் கச்சேரியைக் கேட்கும் போது மேடைக் க்சசேரி பந்ததி என்பது உருவானதற்கு முன்பு கர்னாடக சங்கீதத்தை எல்லோரும் இப்படித்தான் பாடியிருப்பார்களோ என்று தோன்றும்.” அது பத்ததி. பந்ததி எல்லாம் இல்லை. சரி, அதையும் தட்டச்சுப் பிழையில் சேர்த்துடலாம். 

"மயிலை கபாலீசுவரர் மீது ‘பரமகிருபாநிதே’ என்றும் ‘சம்போ மஹாதேவா’ என்றும் கீர்த்தனைகள் இயற்றியிருக்கிறார்.” இதில்தான் எனக்கு முக்கியமான பிரச்னை. இந்த இரண்டு பாடல்களைப் பற்றித் தேடிப் பார்த்து விட்டேன். என்னை விடுங்கள். சங்கீதம் தெரிந்தவர்களிடமும் கேட்டுவிட்டேன். அவர்களும் தெரியவில்லையே என்கிறார்கள். இப்படி எதுவும் அவர் இயற்றியதாகத் தெரியவில்லை. என்ன ராகங்களில் இயற்றியுள்ளார் போன்ற விவரங்கள் தெரிந்தால் அப்படி பாடல்கள் உள்ளதா எனத் தேடிப் பார்க்கலாம். இல்லை வழக்கம் போல சும்மா அடிச்சு விட்ட தகவலாய் இருந்தால் அதையும் நிர்ணயம் செய்து விடலாம். 

"பாகேஸ்வரி ராக ’சாகர சயனா’ இவர் இயற்றியது.” சரி. இதைச்  சொன்ன பிறகு, சில பத்திகள் தாண்டி, ஒரு வரி வருகிறது பாருங்கள்.  "முத்துசாமி தீட்சிதரின் நாட்டை ராக ’மஹா கணபதிம்’, ஸ்ரீ வரத தாசாவின் அடானா ராக ’ஹரியும் ஹரனும்’ இவர் பாடியதை கேட்பது ரசானுபவம்.”. தீக்ஷிதர் சரி. அது யாரு ஸ்வாமின் ஶ்ரீ வரத தாசா? அது பின்னாடி வருகிறது. "இவர் இயற்றிய எல்லா கிருதிகளும் வரத தாச என்ற முத்திரையைப்பெற்றிருக்கும்.வரதாச்சாரியின் தாசன் என்பதையே அது குறிக்கும். இவர் இயற்றிய எல்லா கிருதிகளும் வரததாச என்ற முத்திரையைப்பெற்றிருக்கும். வரதாச்சாரியின் தாசன் என்பதையே அது குறிக்கும்.” 

அதாவது முதலில் இவர் இயற்றியதாக இரண்டு பாடல்கள் பற்றி ஒரு வரி. பின்னர் சாகர சயனவிபோ பற்றி ஒரு வரி. அதன் பின்னர் யாரோ ஶ்ரீ வரத தாசா இயற்றியதாக ஒரு பாடல். ஆனால் அந்த ஶ்ரீ வரத தாசா என்பவர் யாரு? செந்தில் சொல்லற மாதிரி அந்த வாழைப்பழமே இதுதான் மாதிரி சுத்திச் சுத்தி என்னமோ எழுதி இருக்கார். எம்டியாரைப் பத்தின நல்ல கட்டுரை வேணுமானால் ரவி வர்மா அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியுள்ள இந்தப் பதிவையும்https://ramavarma.yolasite.com/vishwa-palam-shri-padmanabham.php ) இந்தப் பதிவையும்https://ramavarma.yolasite.com/unsung-genius---mdr.php) படிக்கலாம். 

விக்கியைப் பார்த்தும் கொஞ்சம் கூகிள்  எழுதினால் கூட கோவையாக எழுத முடியும். இப்படி அள்ளித் தெளித்தால் போல பத்து வரி எழுதி தன்னோட போட்டோவோட ஒரு பதிவு போட்டுக்கணும்ன்னு என்ன ஆர்வமோ. தெரியலை. 

1 comments:

said...

நேற்று ஒரு கமெண்ட் போட்டேன். காணோம்.
It would not be fair to posterity to let it disappear into the ether of the internet என்று மீண்டும் இடுகிறேன்.

இடுகை சிறப்பு!
ராமன் கதை 'சங்க'காலம் தொட்டே தெரிந்த ஒன்றுதான் என்பதைப் பற்றி பி.ஏ.கிருஷ்ணன் ஔட்லுக்கில், ஒரு பத்து ஆண்டுகள் முன்பு எழுதியிருந்தார்.

நீங்கள் குறிப்பிட்ட ஆய்ச்சியர் குரவைப் பாடலைத் தவிர, இன்னொரு இடத்திலும் ஒரு குறிப்பு வரும்

கோவலனைப் பிரிந்த பூம்புகாரின் (மாதவியின்) நிலையை கூற ஒரு பாத்திரம் பயன்படுத்தும் உவமை:

'அருந்திறல் பிரிந்த அயோத்தி போல'

ஆசிரியர் கூற்று இல்லை, mind you.
எந்த அளவுக்கு ராமன் கதை தமிழ்மனங்களிடையே ஆழமாக பதிந்திருந்தால் ஒரு பாத்திரம் கூறுவதாக இளங்கோ காட்டியிருப்பார்!


இங்கு வந்து சேர்ந்தது வான்மீகம் (மட்டும்) அல்ல, அதன் பின் எழுந்த ராமாயனக்கதைகளும் சேர்த்தே.

உதாரணமாக வான்மீகத்தில் அகலிகை கல்லாகவில்லை. உருவில்லாது மறைகிறாள்.
ஆனால் கம்பராமாயணத்திற்கு வெகுமுன்பே இங்கு கல் ஆகிறாள். பரிபாடலில், திருப்பரங்குறத்தில் 'அகலிகை கல்லில் இருந்து சாபவிமோசனம்' பெறும் காட்சி ஓவியமாகத் தீட்டப்பட்டதை, தலைவனும் தலைவியும் காண்கிறார்கள்.

அப்படியென்றால் அகலிகை கல் ஆன கதை எப்போது?
காளிதாசரில் ரகுவம்சத்தில் அவள் கல் ஆகிறாள்.

http://dagalti.blogspot.com/2019/03/blog-post_18.html