Thursday, June 21, 2007

சுட்ட புதிர் வேணுமா? சுடாத புதிர் வேணுமா?

ஹைப்பர் ஆக்ட்டிவிட்டி டிஸ்-ஆர்டரால் பாதிக்கப்பட்டிருந்த முருகன் ஒரு இடத்தில் நிலை கொள்ளாமல் மரத்தின் மேல் ஏறி ஆட்டம் போட்டுக் கொண்டிருக்க, அவன் எங்கேயாவது கீழே விழுந்து அடி பட்டுக் கொள்ளப் போகிறானே என்ற பயத்தில் அவன் பாட்டி ஔவை அவனிருக்கும் மரத்தின் கீழே நின்று கொண்டு அவனை கீழே வாவென அழைக்கிறாள்.

ஒன்று, இரண்டு என்று வரிசைப் படுத்தி பாட்டெல்லாம் பாடினாலும் கீழே வர மறுத்த முருகன் கீழே வந்தால் தனக்கு போர் அடிப்பதாக சொல்ல, அவனை ஒரு இடத்தில் அமர வைக்க புதிர் போடுவதுதான் வழி என நினைத்துக் கொண்டு மரத்தின் மீது இருக்கும் முருகனைப் பார்த்து புதிர் ஒன்று தருகிறேன், கீழே இறங்கி வா எனக் கூப்பிட்டாள். சரி என்ற முருகனைப் பார்த்து "சுட்ட புதிர் வேண்டுமா, சுடாத புதிர் வேண்டுமா?" எனக் கேட்கிறாள். "சுடாத புதிர் என்றால் திரும்பத் திரும்ப கருப்புச் சட்டைக் காரன், காவலுக்குக் கெட்டிக்காரன். அவன் யார் என்ற ரேஞ்சில் கழுத்தை அறுப்பாய். அதனால் சுட்ட புதிரையே குடு" என்றபடி மரத்தில் இருந்து குதித்து வந்தான் முருகன்.

அவனை வீட்டினுள் அழைத்துச் சென்று கணினியில் அமர்த்தி இந்தப் புதிரை விடுவிக்கச் சொன்னாள் ஔவை. புதிரில் மூழ்கிப் போன முருகன், பாட்டி சமையலை முடிக்கும் வரை ஒரு இடத்தில் அமர்ந்திருக்க, நிம்மதியாக வேலைகளை முடித்து வந்த பாட்டி போடும் ஆட்டத்தைப் பாருங்கள்.

நீங்களும் புதிரின் ஒவ்வொரு அடுக்காக சென்று கடைசி அடுக்கினை அடைந்தீர்களானால் பாட்டியின் ஆட்டத்தைக் காணலாம். கூகிளாண்டவர் உதவியை முடிந்த வரை நாடாமல் முயலுங்கள். கொஞ்சம் முயன்றால் விடைகளே கிடைப்பதால் சுவாரசியம் குறைந்து விடும் வாய்ப்பு இருக்கிறது.

கடைசி பக்கம் வரைச் செல்ல எவ்வளவு நேரம் ஆகியது என மறக்காமல் இங்கு பின்னூட்டமிடுங்கள்!!

52 comments:

said...

சுடாத புதிர் வேணுமுன்னா கொஞ்சம் டயம் ஆகும். ஆணி புடுங்கல்ஸ் அதிகம். அது வரை இப்படிச் சுட்ட புதிர்தான். :)

said...

ரொப்ம ஈஸியாத்தான் இருக்கு!

ஏசிஹெச்டி வரைக்கும் கடகடன்னு போயிட்டேன்!

said...

ஆமாம் சிபி. ஆரம்பம் ரொம்பவே எளிதாதான் இருக்கு. போகப் போக கொஞ்சம் கஷ்டமாகுது. ஆனா ரொம்ப ஒண்ணும் கஷ்டமான புதிர் எல்லாம் இல்லை. ஈசியாப் போடலாம்.

said...

நல்லாத்தான் இருக்கு. கடைசில கொஞ்சம் கஷ்டம். கூகுலிருக்க பயமேன். :-)

said...

நல்லாத்தான் இருக்கு.

ஒம்பதுக்கு அப்புறம் எட்டு வருதே கவணிச்சீங்களா?

கடகடன்னு போய்கிட்டே இருக்கும்பொழுது கூகிளாண்டவர் spiller கொணாந்து கொடுத்திட்டார்.

அப்புறம் எப்படி ஜெர்மனி / மெக்ஸிகன் எல்லாம் கண்டுபிடிக்கறது. புச்சனன்னா நமக்கு அவுஸ்திரேலியா கோச்தான் ஞாபகம் வர்றது.

கடைசியில ஹாலிவுட் காமெடி நடிகர பிடிச்சிட்டோமில்ல.

இதப் போட்டிருக்கீங்களா?
http://www.iimi-iris.com/iris/irising/klueLESS/

இதுலயும் ஒரு பத்து லெவலுக்கு மேல போறதுக்குள்ள spillers வந்திடுச்சு :-).

தேசிகன் ஒரு வாரம் முழுக்க உக்காந்து போட்டதா பதிவு எழுதியிருந்தார். நமக்கு 4 மணி நேரம்தான் ஆச்சு ஹி...ஹி... (எடுத்த உடனே spillers-அ தேடாததினால அவ்ளோ டைம்)

said...

//கடைசியில ஹாலிவுட் காமெடி நடிகர பிடிச்சிட்டோமில்ல.
//

கடைசி படியில (23) ஹாலிவுட் காமெடி நடிகர பிடிச்சிட்டோமில்ல... என்று திருத்தி வாசிக்கவும்.

said...

கலக்கலா இருக்கு இ.கொ. புண்ணியத்தில 23 வரை போயாச்சு, பாட்டியம்மா டான்ஸும் பாத்தாச்சு. எங்கேர்ந்துதான் இதெல்லாம் புடிக்கிறீங்களோ? நல்லா இருக்கு.

said...

//You have completely solved the FreeStuffHotDeals Hacker Puzzle! Be sure to to send a personal message to BinkelBop and tell him "Woody" to prove that you did it.//

இந்த BinkelBop நீங்களா கொத்ஸ்?
:-)

catorce வரை சற்று எளிது தான். இதுக்குன்னு போயி ஸ்பானிஷ் எல்லாம் படிக்க முடியுங்களா? அப்புறம் கூகுளாண்டாவர் இல்லாக்காட்டி பைத்தியம் தான்!

ஆனா தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் மாதிரி நின்னு ஆடினா (ஆபிசில் போன் கால்களைக் கூட ஒதுக்கி விட்டு)...
கடைசியிலே பாட்டி வேதாளம் தையா தக்கான்னு குதிக்குது!

said...

கடினமானவை
catorce
sédecim
ojofuffo
icosagon

கடைசிக் கேள்வி ஈசி தான்....பரமபத ஆட்டம் மாதிரி தாயம் விழுந்தா தான் வெற்றின்னு இல்லாம....

எனக்கு இன்னிக்கி தான் தெரியும், வலை முகவரிகள் case sensitive என்று.
eLeVeN என்பது போல் அடுத்ததைச் சும்மானாக்காட்டியும் டைப் பண்ணா ஒன்னும் வரலை! ஆகா!
ElAvAsAm.blogspot.com என்று டைப் பண்ணா வருமா?

said...

ஏசிஹெச்டி வரை ஈஸியா வர முடிஞ்சது. கூகிள் ஆண்டவர் புண்ணியத்தில் ஜெர்மன் படித்து முன்னேறினா இருட்டான இடத்துக்கப்புறம் வழி தெரியல :-(

மீண்டும் கூகிள் ஆண்டவர் கைகொடுக்க, பாட்டி டான்ஸை இன்னோர்தடவை பார்க்க முடிந்தது
:-)

(மீண்டுமோர்) நல்ல அனுபவம் !! நன்றி

said...

பத்து வரைக்கும் வந்துட்டேன். அப்புறம் பாத்தா சீட்டுக் கட்டு...அதெல்லாம் கெட்ட பழக்கம்னு மேல போகல :)

said...

இதெல்லாம் எனக்கு தேவையா? சே 16 க்கு மேல போவ முடியலையே

said...

//CONGRATULATIONS!


GREAT JOB!!
You have completely solved the FreeStuffHotDeals Hacker Puzzle! Be sure to to send a personal message to BinkelBop and tell him "Woody" to prove that you did it.//
கண்ணெல்லாம் கட்டுதே

said...

36 நிமிஷம் ஆச்சுங்க. ஆனா 23க்கு பதில் தேடும்போது ஒட்டு மொத்த பதிலும் ஒரு இடத்துல இருந்ததை பார்த்தேன். :)

said...

http://ilikeit.desiblogz.com/363/ojofuffo,+ojofuffo,+ojofuffo+-+Solutions+to+the+Hacking+puzzle++by+freestuffhotdeals.com.html

said...

//எனக்கு இன்னிக்கி தான் தெரியும், வலை முகவரிகள் case sensitive என்று.
eLeVeN என்பது போல் அடுத்ததைச் சும்மானாக்காட்டியும் டைப் பண்ணா ஒன்னும் வரலை! ஆகா!
ElAvAsAm.blogspot.com என்று டைப் பண்ணா வருமா?//
KRS,
அப்படி இல்ல, வலை முகவரிகள் case insensitive ஆனா நீங்க இங்கே திறக்க முயல்வது ஒரு html கோப்பையை "tWeLvE.html", எனவே நீங்க மாற்றி அடித்தால் file not found error வரும் இது ஒரு வகையான settings இது இவ்வாறு இல்லாமல் கூட அமைக்கலாம்.

said...

//Dont publish//
எவனோ ஒருத்தன் yahoo answerல எல்லாம் கேட்டு இருக்கான் பாருங்க :)

http://answers.yahoo.com/question/index?qid=20060815155230AA4G9bG

said...

ஸ்ஸ்ஸ்ஸ் யப்பா ஒரு வழியா முடிச்சாச்சி(Googleல தேடி முடிக்கறத்துக்கே என்ன scene போடுறான் பாரு - இது மனசாட்சி)

said...

//பத்து வரைக்கும் வந்துட்டேன். அப்புறம் பாத்தா சீட்டுக் கட்டு...அதெல்லாம் கெட்ட பழக்கம்னு மேல போகல :)//
ஆனாலும் உங்களுக்கு குசும்பு ஜி.ரா. :))

said...

அப்பாடா ஒருவழியா கூகள் ஆன்டவர் + சொந்த மூளை (இருக்குங்க.. நம்புங்க) துனையோடு பாட்டியின் ஆட்டம் பார்த்தாச்சு..
வீ எம்

said...

oru kootu muyarchi.......

//You have completely solved the FreeStuffHotDeals Hacker Puzzle! Be sure to to send a personal message to BinkelBop and tell him "Woody" to prove that you did it.//

இந்த BinkelBop நீங்களா கொத்ஸ்?
:-)

said...

//அப்படி இல்ல, வலை முகவரிகள் case insensitive //

case sensitivity என்பது அந்த வலைத்தளம் எந்த Operatins System-ல் இயங்குகிறது என்பதை பொருத்தது. Windows-ல் eleven.html மற்றும் eLeVeN.hTmL இரண்டும் ஒன்றுதான். Unix / Linux-ல் வெவ்வேறு கோப்புகளாக அறியப்படும்.

said...

//நல்லாத்தான் இருக்கு. கடைசில கொஞ்சம் கஷ்டம். கூகுலிருக்க பயமேன். :-)//

ஆமாம் நாகு கூகிளாண்டவர் கருணை இருந்தா எதுதான் கஷ்டம்?

said...

//நல்லாத்தான் இருக்கு.

ஒம்பதுக்கு அப்புறம் எட்டு வருதே கவணிச்சீங்களா?//

அது காலம் செய்த கோலமடி, நம்ம கிரிகரி செய்த மாயமடி!!:))

//கடகடன்னு போய்கிட்டே இருக்கும்பொழுது கூகிளாண்டவர் spiller கொணாந்து கொடுத்திட்டார்.//

ஆமாம், அதான் டிஸ்கி போட்டு இருக்கேன், ரொம்ப கூகிளாதீங்கன்னு.

//அப்புறம் எப்படி ஜெர்மனி / மெக்ஸிகன் எல்லாம் கண்டுபிடிக்கறது. புச்சனன்னா நமக்கு அவுஸ்திரேலியா கோச்தான் ஞாபகம் வர்றது.//

அதெல்லாம் கூகிளாமலேயே போடற பார்ட்டிங்க எல்லாம் நம்ம பக்கத்துக்கு வராங்க தெரியுமா!!

//கடைசியில ஹாலிவுட் காமெடி நடிகர பிடிச்சிட்டோமில்ல.//

அடப்பாவி!! இதுலேயும் சினிமாவைக் கொண்டு வந்துட்டியே!! :))

//இதப் போட்டிருக்கீங்களா?
http://www.iimi-iris.com/iris/irising/klueLESS/

இதுலயும் ஒரு பத்து லெவலுக்கு மேல போறதுக்குள்ள spillers வந்திடுச்சு :-).//

ஆச்சு ஆச்சு. கூகிளாண்டவர் கருணைதானே. அப்புறம் அது Spillerஆ Spoilerஆ?

//தேசிகன் ஒரு வாரம் முழுக்க உக்காந்து போட்டதா பதிவு எழுதியிருந்தார். நமக்கு 4 மணி நேரம்தான் ஆச்சு ஹி...ஹி... (எடுத்த உடனே spillers-அ தேடாததினால அவ்ளோ டைம்)//

எக்கேள்வி யார்யார்வாய் கேட்க, கூகிளில்
டக்கென தேடும் அறிவு!! :))

said...

//கடைசி படியில (23) ஹாலிவுட் காமெடி நடிகர பிடிச்சிட்டோமில்ல... என்று திருத்தி வாசிக்கவும்.//

நான் திருத்தி வாசிக்கிறது இருக்கட்டும், இப்படி சினிமா பக்கம் இந்த புதிரை இழுத்துக்கிட்டு போற உம்மை எப்படி திருத்தறது? :))

said...

//கலக்கலா இருக்கு இ.கொ. புண்ணியத்தில 23 வரை போயாச்சு, பாட்டியம்மா டான்ஸும் பாத்தாச்சு. எங்கேர்ந்துதான் இதெல்லாம் புடிக்கிறீங்களோ? நல்லா இருக்கு.//

வாங்க லக்ஷ்மி, பாட்டி டான்ஸ் பார்த்தீங்களா!! இதெல்லாம் உங்களுக்காக கஷ்டப்பட்டு மூளையை யூஸ் பண்ணி(!) தேடிக் கண்டுபிடிக்கிறதுதான்.

said...

//இந்த BinkelBop நீங்களா கொத்ஸ்?
:-)//

அதான் சுட்ட பழம், ச்சீ, சுட்ட புதிர் அப்படின்னு சொல்லியாச்சே. அப்புறமுமா சந்தேகம்.

//catorce வரை சற்று எளிது தான். இதுக்குன்னு போயி ஸ்பானிஷ் எல்லாம் படிக்க முடியுங்களா? அப்புறம் கூகுளாண்டாவர் இல்லாக்காட்டி பைத்தியம் தான்!//

அதெல்லாம் இல்லாம போடற வஸ்தாதுங்க எல்லாம் இருக்காங்கப்பா. :))

//ஆனா தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் மாதிரி நின்னு ஆடினா (ஆபிசில் போன் கால்களைக் கூட ஒதுக்கி விட்டு)...
கடைசியிலே பாட்டி வேதாளம் தையா தக்கான்னு குதிக்குது!//

பாத்து. ஒரு நாள் சம்பளம் கட் பண்ணிடப் போறாங்க. அப்புறம் வீட்டில் வேற வேதாளம் குதிக்கப் போகுது!! :))

said...

//கடினமானவை
catorce
sédecim
ojofuffo
icosagon//

அப்படியா? நாங்க எல்லாம் acht வந்த உடனேயே கூகிளைப் பார்த்து ஓடிட்டோமில்ல.

//கடைசிக் கேள்வி ஈசி தான்....பரமபத ஆட்டம் மாதிரி தாயம் விழுந்தா தான் வெற்றின்னு இல்லாம....//

ஆமாம்.

said...

//எனக்கு இன்னிக்கி தான் தெரியும், வலை முகவரிகள் case sensitive என்று.
eLeVeN என்பது போல் அடுத்ததைச் சும்மானாக்காட்டியும் டைப் பண்ணா ஒன்னும் வரலை! ஆகா!
ElAvAsAm.blogspot.com என்று டைப் பண்ணா வருமா?//

அப்படித்தான் நினைச்சேன். நானும் முதலில் இலவசத்தைத்தான் தட்டிப் பார்த்தேன். அது நேர நம்ம வலைப்பதிவுக்குத்தான் இட்டுக்கினு போச்சு. அப்புறம் பாருங்க நம்ம ஆளுங்க யூனிக்ஸ், லினக்ஸ் அப்படின்னு கலக்கி எடுக்கறாங்க.

said...

அதேன்னமோ திடீர்னு ஒரே இருட்டாயிடுச்சு. அப்பறம் என்ன பண்ணறதுன்னு யோசிக்கணும். தங்கமணி வேற வீட்ல இப்போ இல்ல. வரட்டும். புதிரைக்கண்டுபிடிக்காம வுடறதில்ல

said...

13 - unlucky for some.
அங்கேருந்து நகரமுடியலியே

said...

கொத்தனாரே, சுட்ட புதிர் ஆறியிருக்கும் இப்போது. பதினைந்து வரை சென்று buchanan என்ற பெயரில் மாட்டிக் கொண்டேன். சில மொழிகளில் "ஒன்றிரண்டு" கற்றதோடு நின்றிருந்தாலும் அது இந்த மட்டும் உதவியது. பிறகு கூகிள் உதவியுடன் 20 வரை வந்து விட்டு
அரைமணிநேரமாக யோசித்து கைவிட்டு விட்டேன். இப்போது காலையெழுந்ததும் இன்னொரு முறை முட்டிப் பார்க்கப் போகிறேன்
நல்ல பொழுதுபோக்கு, சுட்டதற்கும் சுட்டியதற்கும் நன்றி

said...

மீண்டும் கூகிள் உதவியை நாட வேண்டியிருந்தது "பாலிகன்"( polygon) வரிசையில் வரும் பெயர்களை நானாகவே விதவிதமான முன்னொட்டு, பின்னொட்டுகளை (prefix, suffix)
முயன்று கைவிரித்துவிட்டு யாஹூ விடைகளில் இருப்பதைத் தேடிப்பிடித்து ஏமாற்றிக் கடைசியாக ஆடும் பாட்டியையும் பார்த்துவிட்டேன்.
என்ன இலவசம்! நீங்கள் இது போல் புதிர் தமிழில் முயலப்போகிறீர்களா? கௌரவர்களில் பதினைந்தாமவர் யாரென்று கேட்காமல் இருந்தால் நான் ஆட்டத்திற்கு வருகிறேன்.

said...

//அதெல்லாம் கூகிளாமலேயே போடற பார்ட்டிங்க எல்லாம் நம்ம பக்கத்துக்கு வராங்க தெரியுமா!! //

அவங்க போட்ட ஆன்ஸர்ஸ்தான நமக்கு கூகுள்ல சிக்குது.

எந்தரோ மகானுபாவலு அந்தரிகு கூகுள் வந்தனமுலு.

//அப்புறம் அது Spillerஆ Spoilerஆ?
//
Spiller எனப்படுவது யாதெனின்... ரகசியத்தை சொல்லாமல் சொல்வது. அத சொல்லியே ஆவேன் என்று அடம்பிடித்தால்தான் அது spoiler ஆகிவிடுகிறது. :-))

//இப்படி சினிமா பக்கம் இந்த புதிரை இழுத்துக்கிட்டு போற //

Woody என்றவுடன் Woody Allen தான் ஞாபகம் வருகின்றார். மிகத் திறமையான நடிகர் மட்டுமல்ல அதிக சர்சைகளில் சிக்கியதால் பிரபலமடைந்தவரும் கூட.

//அதெல்லாம் இல்லாம போடற வஸ்தாதுங்க எல்லாம் இருக்காங்கப்பா//

இருக்கட்டும். இருக்கட்டும். ஜென் கதையில் வருகிறமாதிரி - 10 ரூபா செலவுல போட்ல சுலபமா ஆற்றை கடந்து போகிறவர்களும் உண்டு. அரும்பாடுபட்டு பாதி வாழ்க்கையை செலவழித்து நீரின் மேல் நடந்து ஆற்றை கடந்து போகிறவர்களும் உண்டு.

நாங்கள்ல்லாம் நோகாம நொங்கெடுத்து, பாவாம பொங்க வச்சு, கோணாம திங்கறவய்ங்க... தெரியும்ல...

said...

//ஏசிஹெச்டி வரை ஈஸியா வர முடிஞ்சது. கூகிள் ஆண்டவர் புண்ணியத்தில் ஜெர்மன் படித்து முன்னேறினா இருட்டான இடத்துக்கப்புறம் வழி தெரியல :-(//

கதிரவன், நம்ம உப்புமா பதிவெல்லாம் படிச்சா இதுக்கெல்லாம் வழி தெரியும். இனிமே எல்லாப் பதிவுக்கும் ஒழுங்கா வாங்க!! :))

//மீண்டும் கூகிள் ஆண்டவர் கைகொடுக்க, பாட்டி டான்ஸை இன்னோர்தடவை பார்க்க முடிந்தது
:-)//

பாட்டி டேன்ஸுக்கு இவ்வளவு பாப்புலாரிட்டியா? அதெல்லாம் தெரிஞ்சுதான் மணிரத்தின அன்னைக்கே ருக்குமணி ருக்குமணின்னு பாட்டிங்களை ஆட விட்டாரு போல.

(மீண்டுமோர்) நல்ல அனுபவம் !! நன்றி

said...

//பத்து வரைக்கும் வந்துட்டேன். அப்புறம் பாத்தா சீட்டுக் கட்டு...அதெல்லாம் கெட்ட பழக்கம்னு மேல போகல :)//

ஓ! அது சீட்டுக்கட்டா? அது என்னான்னே தெரியாம நான் முழிச்சுக்கிட்டு இருந்தேனுங்க. நல்ல வேளை உங்களை மாதிரி களவும் கற்றுக்கிட்ட ஆளு வந்து சொல்லி தந்தீங்க, தெரியுது!! :))

said...

//இதெல்லாம் எனக்கு தேவையா? சே 16 க்கு மேல போவ முடியலையே//

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை. கூகிளினை கேட்டுப் பாருங்கள், விடை தராது போனதுமில்லை!! :))

said...

//கண்ணெல்லாம் கட்டுதே//

கண்ணெல்லாம் கட்ட அது என்ன அது 'சிரிச்சு சிரிச்சு வந்த சீனாத்தானா' பார்ட்டியாய்யா? இது வெறும் பாட்டு. அதான் ஆபீஸ் நேரத்தில் சீரியசா வேலை பாக்குற மாதிரி கூகிளை மேஞ்சாச்சு இல்லை. வாய் எல்லாம் மூடிக்கிட்டு வேலையையைப் பாருமய்யா!!!

said...

//36 நிமிஷம் ஆச்சுங்க. ஆனா 23க்கு பதில் தேடும்போது ஒட்டு மொத்த பதிலும் ஒரு இடத்துல இருந்ததை பார்த்தேன். :)//

நாந்தான் பதிவிலேயே க்ளூ குடுத்தேனே. தேடினால் விடையே கிடைக்குமுன்னு!!

said...

ரங்கமணி வந்ததும் மளமளன்னு 40 நிமிஷத்துல போட்டாச்சுல்ல.
ஒரு எடத்துல எல்லா பதிலும் இருந்தும் கூகிள் உதவியோட சுயமா??? கண்டுபிடிச்சுட்டோமில்ல‌

said...

//அப்படி இல்ல, வலை முகவரிகள் case insensitive ஆனா நீங்க இங்கே திறக்க முயல்வது ஒரு html கோப்பையை "tWeLvE.html", //

அப்பா சந்தோசு, நாங்க எல்லாம் க.கை.நா.க்கள் அப்படின்னு தெரியுமுல்ல. அப்புறம் விவரமாச் சொல்லாம என்ன இது? அப்புறம் கீழ என்னமோ லினக்ஸ், யூனிக்ஸ், பீனிக்ஸ் அப்படின்னு என்னமோ பறவை பேரு எல்லாம் சொல்லறாங்களே. அது என்ன? :)

said...

//ஸ்ஸ்ஸ்ஸ் யப்பா ஒரு வழியா முடிச்சாச்சி(Googleல தேடி முடிக்கறத்துக்கே என்ன scene போடுறான் பாரு - இது மனசாட்சி)//

அதுவும் ஒரு கலைதான் தல! நீங்க அடிச்சு ஆடுங்க. :))

said...

//ஆனாலும் உங்களுக்கு குசும்பு ஜி.ரா. :))//

ஆமாம் இல்ல! பாவம் அந்த மயிலார். நல்லவர். இந்த மாதிரி குசும்பு புடிச்ச ஆளோட எப்படித்தான் காலத்தைத் தள்ளறாரோ!! :))

said...

//அப்பாடா ஒருவழியா கூகள் ஆன்டவர் + சொந்த மூளை (இருக்குங்க.. நம்புங்க) துனையோடு பாட்டியின் ஆட்டம் பார்த்தாச்சு..
வீ எம்//

நீங்க சொன்ன நம்பாம எப்படி? ஆனா கூகிளாண்டவர் ஹெல்ப்பை இப்படிப் பப்ளிக்கா சொல்லிக்கிறீங்களா? அதான் கொஞ்சம் டவுட்டா இருக்கு.

said...

//oru kootu muyarchi.......//

நீங்களும் கூகிளாண்டவரும் ஒரு கூட்டணியா? :))

//இந்த BinkelBop நீங்களா கொத்ஸ்?
:-)//

அட இல்லீங்க. அதான் சுட்ட புதிர் அப்படின்னு சொல்லிட்டேனே!! ஏற்கனவே எனக்கு தந்திருக்கும் அவதாரங்கள் லிஸ்ட் ரொம்ப நீளமா இருக்கு. இதில் உம்ம பங்குக்கு எதையாவது கொளுத்திப் போடாதீங்க.:))

said...

//case sensitivity என்பது அந்த வலைத்தளம் எந்த Operatins System-ல் இயங்குகிறது என்பதை பொருத்தது. Windows-ல் eleven.html மற்றும் eLeVeN.hTmL இரண்டும் ஒன்றுதான். Unix / Linux-ல் வெவ்வேறு கோப்புகளாக அறியப்படும்.//

இது வரை அறிந்திராத தகவல். நன்றி ஸ்ரீதர். :)

said...

//அதேன்னமோ திடீர்னு ஒரே இருட்டாயிடுச்சு. அப்பறம் என்ன பண்ணறதுன்னு யோசிக்கணும். தங்கமணி வேற வீட்ல இப்போ இல்ல. வரட்டும். புதிரைக்கண்டுபிடிக்காம வுடறதில்ல//

இருட்டான ஸ்க்ரீனில் விளக்கேற்ற வரும் தங்கமணி வாழ்க!! அப்படின்னு போஸ்டர் எல்லாம் அடிச்சு ஒட்டினீங்களா?

(அம்மணி, அது தங்கமணியா ரங்கமணியா? ஐயாம் தி கன்பியூஷன் ஆப் தி வேர்ல்ட்)

said...

//13 - unlucky for some.
அங்கேருந்து நகரமுடியலியே//

8 பதிவு போட்டா ஒருத்தர் அன்லக்கின்னு சொல்லிட்டுப் போறார். நீங்க பதிமூணு அன்லக்கின்னு சொல்லறீங்க. விட்டா வார்த்தையே இல்லாம பதிவு போடச் சொல்லுவீங்க போல.

said...

வாங்க வாஞ்சிநாதன்.

//கொத்தனாரே, சுட்ட புதிர் ஆறியிருக்கும் இப்போது. பதினைந்து வரை சென்று buchanan என்ற பெயரில் மாட்டிக் கொண்டேன். //

அது வழக்கம் போல அமெரிக்காவே உலகம் என்ற இவர்கள் சிந்தனைதான். என்ன செய்ய.

//சில மொழிகளில் "ஒன்றிரண்டு" கற்றதோடு நின்றிருந்தாலும் அது இந்த மட்டும் உதவியது.//

நானெல்லாம் அந்த ஸ்டேஜிலேயே கூகிளாண்டவர் காலடியில் விழுந்தாச்சு.

//பிறகு கூகிள் உதவியுடன் 20 வரை வந்து விட்டு
அரைமணிநேரமாக யோசித்து கைவிட்டு விட்டேன். இப்போது காலையெழுந்ததும் இன்னொரு முறை முட்டிப் பார்க்கப் போகிறேன்//

மேல ஒரு வெண்பாவே எழுதியாச்சே பார்தீங்களா?

//நல்ல பொழுதுபோக்கு, சுட்டதற்கும் சுட்டியதற்கும் நன்றி//
வந்ததுக்கு என் சார்பில் நன்றிங்க.

said...

வாஞ்சிநாதன்,

//மீண்டும் கூகிள் உதவியை நாட வேண்டியிருந்தது "பாலிகன்"( polygon) வரிசையில் வரும் பெயர்களை நானாகவே விதவிதமான முன்னொட்டு, பின்னொட்டுகளை (prefix, suffix)
முயன்று கைவிரித்துவிட்டு யாஹூ விடைகளில் இருப்பதைத் தேடிப்பிடித்து ஏமாற்றிக் கடைசியாக ஆடும் பாட்டியையும் பார்த்துவிட்டேன்.//

அதிலும் ரெண்டு ஸ்பெல்லிங் குடுத்து குழப்பிட்டானுங்க!! :))

//என்ன இலவசம்! நீங்கள் இது போல் புதிர் தமிழில் முயலப்போகிறீர்களா? கௌரவர்களில் பதினைந்தாமவர் யாரென்று கேட்காமல் இருந்தால் நான் ஆட்டத்திற்கு வருகிறேன்.//

முயன்று பார்க்கலாம். நமக்கு இந்த அளவு டெக்னிக்கல் அறிவு இல்லை. யாரையாவது துணைக்குச் சேர்த்துக்கணும். நம்ம தேசிகன் ஒரு முயற்சி பண்ணி இருக்காரு. இங்க பாருங்க.

said...

வாங்க ஸ்ரீதர்,

//அவங்க போட்ட ஆன்ஸர்ஸ்தான நமக்கு கூகுள்ல சிக்குது.

எந்தரோ மகானுபாவலு அந்தரிகு கூகுள் வந்தனமுலு.//

கூகிளை பூஜித்தால் நோய்வினை தீரும் சஞ்சலம் அகன்றிடுமே.....:))

//Spiller எனப்படுவது யாதெனின்... ரகசியத்தை சொல்லாமல் சொல்வது. அத சொல்லியே ஆவேன் என்று அடம்பிடித்தால்தான் அது spoiler ஆகிவிடுகிறது. :-))//

நிறையா பேரு ஸ்பில்லர்ன்னு நினைச்சு கொட்டறது எல்லாம் ஸ்பாய்லர் ஆகிடுதே!!

//இருக்கட்டும். இருக்கட்டும். ஜென் கதையில் வருகிறமாதிரி - 10 ரூபா செலவுல போட்ல சுலபமா ஆற்றை கடந்து போகிறவர்களும் உண்டு. அரும்பாடுபட்டு பாதி வாழ்க்கையை செலவழித்து நீரின் மேல் நடந்து ஆற்றை கடந்து போகிறவர்களும் உண்டு.//

அடப்பாவி. நல்லா இருங்கடா சாமி!!! :)))

said...

//ரங்கமணி வந்ததும் மளமளன்னு 40 நிமிஷத்துல போட்டாச்சுல்ல.
ஒரு எடத்துல எல்லா பதிலும் இருந்தும் கூகிள் உதவியோட சுயமா??? கண்டுபிடிச்சுட்டோமில்ல‌//

அப்பா. ரங்கமணிதான். கொஞ்ச நேரம் கன்பியூஸ் பண்ணிட்டீங்களே. சரி. இனிமே ரங்கமணிக்கு ஒரு வேலைக்கும் லாயக்கு இல்லைன்னு திட்டு விழாதே. அவரு அப்புறம் நம்ம கொத்ஸ் புதிரெல்லாம் சரியா தீர்த்து வைக்கிறேன்னு சொல்லிட்டா என்ன செய்வீங்க? :))