ஆசிப் அண்ணாச்சி திறந்த மனசப் பத்திப் பதிவு போட்டாக. பொன்ஸக்காவும், உஷாக்காவும் வந்து அழுவாச்சி ஸ்மைலி போட்டாங்க. சரின்னு நம்ம சிபி அண்ணாச்சி வந்து ஒரு படம் போட்டாக. நம்ம தம்பி வந்து இதுவும் முழுசாத் திறக்கலைன்னு சண்டை போடறாரு.
சரி அம்மணிங்க மனசும் நோவாம, தம்பிண்ணா ஆசையை நிறைவேத்த நம்மளை விட்டா யாரு இருக்கான்னு களத்தில் இறங்கியாச்சி. இதுதாண்டா திறந்த மனசு!!
என்னங்க எல்லாருக்கும் சந்தோஷம்தானே!! கண்ணை மூடி, கன்னத்தில் போட்டுக்கிட்டு வேலையைப் பாருங்கடே!!
Subscribe to:
Post Comments (Atom)
26 comments:
இப்படியும் ஒரு பதிவு போட்டு பதிவு எண்ணிக்கையை ஏத்தணுமாடான்னு கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது!!
/இப்படியும் ஒரு பதிவு போட்டு பதிவு எண்ணிக்கையை ஏத்தணுமாடான்னு கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது!!//
இதுதான் ஒங்க விருப்பமின்னு இருந்தா கேட்ப்போம் இல்லே... :))
????????
(கற்பனையூரில் உள்ள ஒரு பள்ளிக்கூடம்)
ஆசிரியர்: உலகில் முதன் முதலில் ஓபன் ஹார்ட் சர்ஜெரி செய்தது யாரு?
(நான் சொல்றேன் சார் ... நான் சொல்றேன்... என ஒரு ஆர்வக்குரல்)
ஆசிரியர்:சபாஷ் ... நீ சொல்லுப்பா.
இலவசகொத்தனார்: அனுமார் தான் சார் முதலில் ஓபன் ஹார்ட் சர்ஜெரி செய்தது சந்தேகம்னா இதான்டா திறந்த மன்சுல போய் பாருங்க!
(ஆசிரியர் நெஞ்சை பிடித்துக்கொள்கிறார் , ஹார்ட் அட்டாக்!)
ஒரு ஆளு என்னடான்னா கவர்ச்சி படம் போடுறாரு இன்னொரு ஆளு திறந்த மனசு படம் போடுறாரு.. இது எல்லாம் நல்லா இல்ல..வெள்ளிக்கிழமையும் அதுவுமா வேணாம்.. வலிக்குது...இதை எல்லாம் serial பதிவா மாத்திடாதிங்க யாரவது திறந்த மனசை தப்பா புரிஞ்சிகிட்டு வேற படம் போட்டுட போறாங்க. தமிழ்மணம் பச்சைமணமா மாறிட போகுது.
கொத்தனாரே, டைமிங் டயலாக் மாதிரி இது டைமிங் பதிவுங்களா? கலக்கறீங்க போங்க.
//கண்ணை மூடி, கன்னத்தில் போட்டுக்கிட்டு வேலையைப் பாருங்கடே!!
//
:))
ஆஞ்சநேய வீரா அனுமந்த சூரா!
வாயு குமாரா வானர வீரா!
ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய் ராம்!
சீதா ராம் ஜெய் ராதேஷ்யாம்!
:)
//இப்படியும் ஒரு பதிவு போட்டு பதிவு எண்ணிக்கையை ஏத்தணுமாடான்னு கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது!!//
சரி வேற மாதிரி கேள்வி...
இணையில்லா எம்பெருமான் தன்
இடப்புறம் பிராட்டியுடன் காட்சி தர
இதயத்தில் தாங்கும் அனுமன்
இளையவன் இலக்குவனுக்கு மட்டும் இடம் ஒதுக்காமல் போனது ஏனோ?
இராம லக்ஷ்மண ஜானகி!
ஜை போலோ ஹனுமான் கி!!
சரி சரி பதில் தெரியலன்னா பேசாம குமரனோ, KRS-யோ வச்சு ஒரு விக்கி பதிவ போட்டுடுங்க...
ஆஹா பதிவுக்கு சம்பந்தமா ஒரு பின்னூட்டமாவது போட்டாச்சு :-))
ஆஞ்சநேய வீரா அனுமந்த சூரா!
வாயு குமாரா வானர வீரா!
ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய் ராம்!
சீதா ராம் ஜெய் ராதேஷ்யாம்!
வீர அனுமான்.. ஜெய் அனுமான்..
ஜெய் இலவசம்...! ஜெய் கொத்தனார்..!
என்னடா விக்க பசங்க பதிவு ஒண்ணுமே வர மாட்டேங்குதேன்னு நினைச்சேன். எல்லா(ரு)ம் இப்படி மொக்க போட்டுக்கிட்டு இருந்தா அது தூங்கத்தான செய்யும்..
:(
பின்னூட்டப் பெட்டியத் தொறந்தாலே கேக்கக்கூடாத கேள்வியத்தானே கேக்கத்தோணுது!! உங்க முதல் பின்னூட்டம் என்ன ஆண்டிசிப்பேட்டரி பெயிலா?
ஆனாக்கா, தொறந்த மனசுன்னு ஆசீப் ஆரம்பிச்ச அன்னிக்கே எனக்குத் தோணியது மிஸ்டர் ஆஞ்சி தான்:-)
உம்ம நல்ல நேரம், நான் இப்ப பதிவு போடலே, அதுவும் உப்புமாவுக்கு லாங் லீவ் விட்டுருக்கேன், பொழச்சுப்போம்!
சரிதான் எங்க ஜான் ஆப்பிரகாம் ஐயா படத்தை போட்டுட
வேண்டியதுதான் :-)))
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே.............
நல்ல திறந்த மனசு தான்... எங்கிட்ட இன்னும் ஒரு திறந்த மனசு இருக்கு.. வேணுமா? ;-)
அவரு போட்டதே உள்குத்து மாதிரி இருந்துச்சு. அதை வெச்சு எல்லாரும் காமெடி கீமெடி பண்றீங்களா?
பாதிக்குமேல் உனக்கு நீயே பின்னூட்டம் போட்டுக்கரேன்னு எங்கள் கொலைவெறிப்படை சொல்கிறதே உண்மையா?
இது தான் திறந்த மனது!! :-))
மனதுக்குள் யார்? விஜய் & திரிஷா வா?
அவுங்க ஏன் அங்க இருக்காங்க??
நல்லநாளும் அதுவுமா திவ்ய தரிசனம். ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.
நேயடு அழகா இருக்கார்.
அப்பா சாமியோவ்...இதெல்லாம் தாங்காது சொல்லீட்டேன். இப்படியா தெறந்து காட்டுறது....கண்ணக் கட்டுதே. கொத்சு...கொத்சு....
சரி. ஒரு சீரியஸ் மேட்டரு. சென்னை மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் ரிசப்ஷன்ல இந்த அனுமார் செலைய வெச்சு மொதமொதல்ல open heart surgery செஞ்சவருன்னு வெச்சிருக்காங்க. அடைப்புக்குறிக்குள்ள mythologyன்னும் வெச்சிருக்காங்க.
நெஞ்ச தொட்டுடீங்க தம்பி
// பினாத்தல் சுரேஷ் said...
உங்க முதல் பின்னூட்டம் என்ன ஆண்டிசிப்பேட்டரி பெயிலா?//
ஹிஹி...பினாத்தலாரே...கலக்கிட்டீங்க! ரொம்ப நேரம் சிரிச்சேன்!
கொத்தனார் எப்போ டாக்டர் கொத்தனார் ஆனார்? எப்படி இருந்தாலும் மாதவிப் பந்தலுக்கு இன்னொரு அடியாள் ...ச்ச்சே...இன்னொரு அடியார் ரெடி! :-))
காணோம்.. கொத்ஸ் காணோம்..:))
ஆஞ்சனேயரின் ராமபக்தி அளவிடமுடியாதது.ஜெய் ஹனுமான்!
அது சரி வாயுக்குமாரன் நெஞ்சைத்திறந்தார்...சீதா,ராமன் தெரிந்தார்.நாமெல்லாம் நெஞ்சைப்பிளந்தால் என்னவாகும்?
கொத்ஸ்?
நாமெல்லாம் நெஞ்சைப்பிளந்தால் என்னவாகும்?//
நானானி மேடம், கண்ணு முன்னால வைகுண்டம் தெரியும். இதுக்கு நான் காரெண்டி :-)
எங்கய்யா கொத்ஸ் ஆளையே காணோம்????
இப்பொ மொக்கை போட்டி ஆரம்பிச்சிருக்காங்க உடனே அனுப்புங்க
ஆஹா என்ன குவாலிடியான ஒரு பதிவு! :))
என் தங்கமணிக்கு அனுமார்னா உசுரு, அதனால ஒன்னும் சொல்லாம போறேன். (அதான் அவங்களுக்கு ஒரு வானரம் கிடச்சு இருக்கா?னு பதில் கமண்ட் எல்லாம் போடப்படாது) :))
சரி, உளுந்து வடை எங்கே? :p
Post a Comment