இன்னிக்கு ட்விட்டரில் எப்படியோ பொடிதோசை பத்திப் பேச்சு வந்தது. @nchokkan சும்மா இருக்காம பொடிதோசைக்கு எதுகையா சுடிதாரை வெச்சு பாம் போடுன்னு கிளப்பி விட்டாரு. 
  அவரு நேரம் இன்னிக்கு வெண்பாமோட நிக்காம வெண்பாவா விழுந்தது. சரி எல்லாத்தையும் ஒரு இடத்தில் சேர்த்து வெச்சுக்கலாமேன்னு ஒரு போஸ்ட்! 
   
    
பொடிதோசை காரமா போறாது உம்டேஸ்ட்
  சுடிதார் தொடவே சுடும்
   
  பொடிதோசை காரமோ போனால் தெரியும்
  சுடிதார் தொடவே சுடும்
   
  பொடிதோசை போராட்டம் போறாத நேரம் 
  சுடிதாரைப் போலச் சுடும்
   
  பொடிதோசை பொன்னகைகள் போத்தீஸில் பட்டு 
  சுடிதாரும் தந்து சுகி
   
  பொடிதோசை போல பொடிவெச்ச பேச்சு 
  சுடிதாரைச் சேரும் அழகு
   
  பொடிதோசை போலவே போகுமே இவர்க்கு
  சுடிதாரும் சொல்லிடும் சொல்
   
  பொடிதோசைப் பற்றிய பொல்லாத பாம்களையே
  சுடிதாரும் படிக்கலைன்னா சுகம்
   
   
  தொட்டுக்க ஒரு பாம். 
   
  மடிசார் மாமிகை மணக்கும் தோசை
  கடிக்க கணந்தோறும் சுகம் - காண்பாய்
  பொடிதோசை போல புரையேறும் காரம்
  சுடிதாரை கேட்கச் சுடும்
   
  @penathal அவர் பங்குக்கு
   
  பொடிதோசை போட்டு பொடனியிலும் போடுவதே 
  சுடிதார் சுந்தரிகளின் சுயம்! 
   
  ஆசை மிகவுற்று ஆடவர் கேட்பாரே
  தோசை இரண்டேனும் தாவென-மீசைக்குலம்
  அடிமையாய் ஆக்க அடுக்களையே போதும்
  சுடிதார் தருவாள் சூடு! 
   
  சுடிதார் படித்தால் சுடவேண்டாம் தோசை
  விடியாமல் தொடரும் வினை!
   
  பொடிவைத்துச் சுட்டவை தோசைகள் மட்டுமல்ல
  நடிக்கும் கொத்தனார் நுகபிநி! 
   
  பொடிதோசை சுடிதாரும் பொருத்தமாய்ச் சேர்ந்திடவே
  முடியாது தொடருது பாம்!
   
  அப்படின்னு அடிச்சு ஆடினார். 
   
  சொக்கன்
  சுடிதார் சுந்தரி சமையல் திறத்தில் 
  பொடிதோசை டேஸ்ட்டு பலே - ன்னு ஆரம்பிச்சுட்டு கடைசியில் 
   
  பொடியன்என் ஆசைக்குப் பொடிதோசை வெண்பாம்கள் 
  அடுக்கடுக்காய்த் தந்தீர், அழகு!  - ன்னு சொல்லி முடிச்சு வெச்சார்!
    Posted via email  from elavasam's posterous