Friday, March 21, 2008

பிரம்ம ரசம் பொங்க சூப்பர் மூளைப் பயிற்சி!!

நம்ம வவாசங்கத்தினர் அவங்களோட ரெண்டாவது வயதைக் கொண்டாட பிரம்ம ரசத்தை ஓடவிடும் போட்டி ஒண்ணை அறிவிச்சு இருக்காங்க. கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்தப் போட்டியில் ஜெயிக்க உங்களுக்கு உதவலாமே என்ற நல்ல எண்ணத்தில்தான் இந்தப் பதிவு. இந்தப் பதிவில் நான் சொல்லித் தரப் போவது ஒரு எளிமையான உடற்பயிற்சி. இதை தொடர்ந்து செய்து வந்தீங்கன்னா உங்க மூளைக்கு அதிக அளவில் சக்தி கிடைத்து சூப்பர் மூளையாகிடுமாம். அது என்ன அப்படின்னு பார்க்கறதுக்கு முன்னாடி எதுக்காக உடற்பயிற்சி அப்படின்னு பார்க்கலாம்.

உடற்பயிற்சி என்பது வெறும் உடலுக்கு மட்டும் இல்லாது மூளைக்கும் பயன் தரக்கூடியது என சமீப காலத்தில் கண்டுபிடித்திருக்கின்றனர் விஞ்ஞானிகள். மறதியைக் குறைத்து நினைவாற்றலைப் பெருக்குமாம். அப்படியே மனதை ஒருமுகப்படுத்துவது, அல்சைமெர்ஸ் போன்ற வியாதிகள் வருவதைத் தாமதப்படுத்துவதுன்னு ஏகப்பட்ட பயன்கள் உள்ளனவாம். எப்படின்னா உடற்பயிற்சியின் மூலம் மூளைக்கு அதிக ரத்த ஓட்டம் ஏற்படுகிறது. அதனால் மூளையில் அதிக சக்தி வர ஏதுவாகி அவை நல்ல முறையில் இயங்க உடற்பயிற்சி உதவி புரிகிறதாம். முன்பெல்லாம் மூளையில் உள்ள உயிரணுக்கள் இறந்தால் அவைகளுக்கு மாற்றாக புதிய அணுக்கள் வருவதில்லை என நினைத்திருந்தார்கள். ஆனால் உடற்பயிற்சியினால் மூளையில் நினைவாற்றல் மற்றும் படிப்புக்கு ஏதுவாக இருக்கும் ஹிப்போகேம்பஸ் என்ற பகுதியில் புதிய உயிரணுக்கள் தோன்றுகின்றன எனக் கண்டுபிடித்து இருக்கின்றனர்.

இப்போ நாம அந்த சூப்பர் மூளைப் பயிற்சி என்னன்னு பார்க்கலாம். யோகாசனங்களில் ஒன்றாகக் கருதப்படும் இது அக்யூபஞ்சரின் நலன்களையும் தருதாம். யேல் பல்கலைக்கழகத்தின் யூஜீனியஸ் ஆங் என்பவர் கண்டறிந்து இருக்கும் தகவல் இது. மிக எளிமையான இந்த யோகாசனத்தைச் செய்வது எப்படி என்று பார்க்கலாமா?

1) இடது கையால் வலது காது மடலின் முனையைப் பிடிக்கவும். நம் கட்டைவிரல் காது மடலில் முன்பக்கமும், சுட்டு விரல் பின்பக்கமும் இருக்குமாறு பிடித்துக் கொள்ள வேண்டும்.

2) வலது கையால் இடது காது மடலின் முனையைப் பிடிக்கவும். நம் கட்டைவிரல் காது மடலில் முன்பக்கமும், சுட்டு விரல் பின்பக்கமும் இருக்குமாறு பிடித்துக் கொள்ள வேண்டும்.

3) இப்படிப் பிடிக்கும் பொழுது நம் இடது கை உட்புறமாக உடலின் அருகேயும், வலது கை வெளியிலும் இருத்தல் அவசியம். அப்பொழுதுதான் சக்தி மேல் நோக்கிப் பாய்ந்து நம் மூளைக்குப் பயன் தரும்.

4) அப்படி இரு கைகளாலும் காது மடல்களைப் பிடித்துக் கொண்டே, முதுகை நேராக வைத்துக் கொண்டு, முட்டியை மடக்கி குந்த வைத்து எழுந்திருக்கவும். இப்படி உட்காருகையில் மூக்கின் வழியாக சுவாசத்தினை உள்ளே இழுக்கவும். எழுந்திருக்கையில் வாய் வழியாக மூச்சுக் காற்றை வெளியே விட வேண்டும். இப்படி 10 -12 முறையாவது செய்ய வேண்டும்.

சரியாக புரிந்து கொள்ள இந்தப் படத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள்!

ஆமாங்க ஆமாம். அதேதான். நம்ம ஊர் தோப்புக்கரணம் போடறதைத்தான் இந்த சூப்பர் மூளைக்கான பயிற்சியா சொல்லறாங்க! இந்த செய்தியின் மூலத்தைப் பார்க்க இங்க போங்க. அதுல மாஸ்டர் சோவா கோக் சூய் என்பவரின் சூப்பர் ப்ரெயின் யோகா என்ற தளத்திற்கு சுட்டி குடுத்து இருக்காங்க. அங்க இதை இன்னும் விளக்கமாச் சொல்லி இருக்காங்க.

எங்க உறவினர் ஒருவர் அனுப்பின இந்த சுட்டியைப் பார்த்துட்டு எங்க அண்ணன் அடிச்ச கமெண்டு - "யோகா எல்லாம் செய்ய வேண்டியதுதாண்டா, ஆனா இந்த யோகாவைச் செய்யும் பொழுது எதிரில் தங்கமணி இல்லாமப் பார்த்துக்குங்க. ஏற்கனவே உங்க பேருஒரு மாதிரியாத்தான் இருக்கு!!" அண்ணன் சொன்னதை அப்படியே சங்கத்து சிங்கங்களுக்கு ஒரு ரிப்பீட்டேய் எனச் சொல்லி, அனைவரும் இந்த யோகாசனத்தை செய்து சூப்பர் மூளை பெற்று நம்ம சங்கத்துப் போட்டியில் வெல்ல வேண்டும் என வாழ்த்தி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்!

40 comments:

said...

ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டின்னு சொல்லுவாங்க. இப்போ நீங்க எல்லாம் போடுங்கடா அங்க போயி மண்டி!!

said...

படிச்சுக்கிட்டே வந்து படம் பார்த்ததும் இதுதான் நம்ம ரங்குகளுக்குத் தெரியுமே இதுலே என்ன ஸ்பெஷல்னு இருந்துச்சு.
அதுக்குள்ளே உங்க உறவினர் சொல்லிட்டார்:-))))

said...

ரங்குகளுக்கு சூப்பர் ப்ரெயின் என சர்ட்டிபிகேட் குடுத்த மாதாமகி வாழ்க!!

said...

என்னா பில்டப்பு! இதுக்கு பேர்தான் உப்புமாவா? கொஞ்சம் உப்புசமாத்தான் இருக்கு :-))

ஆனால் இம்மாதிரி பல யோகாசனங்கள் நமது பல சடங்குகளில் கலந்து இருக்கும்.

said...

இவ்ளோ மேட்டர் இருக்கா இந்த் தோ.க ல :)

நம்ம வாத்தீஸ் எல்லாம் விஷயம் தெரிஞ்சவங்கதான் போல.

said...

//ரங்குகளுக்கு சூப்பர் ப்ரெயின் என சர்ட்டிபிகேட் குடுத்த மாதாமகி வாழ்க!!//

இப்படி ஏத்தி ஏத்தி விட்டுதான், தோப்புகரணத்தில எக்ஸ்பர்ட் ஆயிட்டோம். இப்படிபட்ட மறைமுக அடக்குமுறைகளை வெளிச்சம் போட்டு காட்டாமல், நீங்கள் ஆனந்தபடும் உங்க பக்கசார்பு நுண்ணரசியலை என்னவென்று சொல்ல?

பி.கு. அது எப்படி 'நுண்ணரசியல்' என்ற வார்த்தை இல்லாத கொத்தனார் பதிவா? :-))

said...

//எங்க அண்ணன் அடிச்ச கமெண்டு - "யோகா எல்லாம் செய்ய வேண்டியதுதாண்டா, ஆனா இந்த யோகாவைச் செய்யும் பொழுது எதிரில் தங்கமணி இல்லாமப் பார்த்துக்குங்க. ஏற்கனவே உங்க பேருஒரு மாதிரியாத்தான் இருக்கு!!" அண்ணன் சொன்னதை அப்படியே சங்கத்து சிங்கங்களுக்கு ஒரு ரிப்பீட்டேய் எனச் சொல்லி, அனைவரும் இந்த யோகாசனத்தை செய்து சூப்பர் மூளை பெற்று நம்ம சங்கத்துப் போட்டியில் வெல்ல வேண்டும் என வாழ்த்தி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்!//

அட, இல்லாத ஒண்ணை இருக்கிறதா காமிக்கச் சொல்றாரே, நம்ம குருநாதர்னு நினைச்சேன், இதானா விஷயம்? நல்லாச் செய்யுங்க, தங்கமணிக்கு எதிரிலே மட்டும்னும் நினைவு இருக்கட்டும்.

இப்போ கொஞ்சம் சீரியஸ், விநாயகருக்குத் தோப்புக் கரணம், (வடமொழியில் தோர்பி: கரணம் னு நினைக்கிறேன்) போடச் சொல்லுவதற்கும், ஆசிரியர் சற்று மந்தமான பிள்ளைகளை தோப்புக்கரணம் போட வைத்ததுக்கும் இதுவே காரணம், இது எந்த ஆராய்ச்சியும் இல்லாமல் படிக்கிறப்போவே எங்க பெரியப்பா சொல்லிக் கொடுத்தது. படிக்கிறது நினைவுக்கு வர மாட்டேங்குதுன்னா, பிள்ளையாரை நினைச்சுட்டுத் தோப்புக் கரணம் போட்டுட்டுப் படின்னு சொல்வார். நான் கொஞ்சம் அதிகமாவே போட்டுட்டேன் போலிருக்குனு என் ம.பா.வோட கருத்து. போன ஜென்மம் எல்லாம் நினைவுக்கு வருதே? :P

said...

அண்ணே! நீங்க தினமும் வீட்ல பண்றதை பகிரங்கமா வெளியே சொல்றதுக்கு இப்படி ஒரு டெக்னிக்கா? நடத்துங்கப்பு! :))

said...

>>>>>>>அண்ணே! நீங்க தினமும் வீட்ல பண்றதை பகிரங்கமா வெளியே சொல்றதுக்கு இப்படி ஒரு டெக்னிக்கா? நடத்துங்கப்பு! :))>>>>>>>>>.

இது சூப்பர் !!!!!

பதிவின் செய்தியும் சூப்பர் !

said...

நல்லாயிருக்கையா...

//ரங்குகளுக்கு சூப்பர் ப்ரெயின் என சர்ட்டிபிகேட் குடுத்த மாதாமகி வாழ்க!!//

ஆமாம், மாதாமகியா? யாரது? :)

said...

வீட்லதான் அப்படி,. இங்கையாவது கொஞ்சம் கெத்து காட்டலாம்னா. இங்கேயுமா?..

said...

"அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே போடவா தோப்புக்கரணம் போடவா??"

said...

//அண்ணன் அடிச்ச கமெண்டு - "யோகா எல்லாம் செய்ய வேண்டியதுதாண்டா, ஆனா இந்த யோகாவைச் செய்யும் பொழுது எதிரில் தங்கமணி இல்லாமப் பார்த்துக்குங்க. ஏற்கனவே உங்க பேருஒரு மாதிரியாத்தான் இருக்கு!!" //

சில கணவர்களின் நல்ல உடல்நலத்துக்கும் மனநலத்துக்கும் காரணம் இப்பத்தான் புரியுது!

said...

//என்னா பில்டப்பு! இதுக்கு பேர்தான் உப்புமாவா? கொஞ்சம் உப்புசமாத்தான் இருக்கு :-))//

வாங்க ஸ்ரீதர். இதுக்குப் பேர்தான் உப்புமாவா? எனக்கும் தெரியலையே. பெனாத்தலாரைத்தான் கேட்கணும் போல!! உப்புசமா இருந்தா இப்போ எல்லாம் ஈனோ குடிக்கிறதுதான் பேஷனாம். நீங்களும் அப்படியே செஞ்சிடுங்க.

//ஆனால் இம்மாதிரி பல யோகாசனங்கள் நமது பல சடங்குகளில் கலந்து இருக்கும்.//

ஆமாம். ஆனால் ஏன் என்று கேட்காமல் விட்டதால் அதை ஏன் செய்கிறோம் என்பது தெரிவதில்லை. நாமோ ஏன் என்பது தெரியாமல் செய்ய மாட்டோம் எனச் சொல்கிறோம். இப்படி யாராவது கண்டுபிடித்துச் சொன்னால் அதான் எனக்குத் தெரியுமேன்னு சொல்லிடறோம்!! :))

said...

//இவ்ளோ மேட்டர் இருக்கா இந்த் தோ.க ல :)//

இருக்கு பார்த்தீங்களா? என்ன கொடுமைன்னா இதை அடுத்தவங்க சொன்னாத்தான் தெரியுது!!

//நம்ம வாத்தீஸ் எல்லாம் விஷயம் தெரிஞ்சவங்கதான் போல.//

இந்த வார நட்சத்திரம் வாத்தியார்ன்னு தெரிஞ்ச உடனே இப்படி ஒரு ஐஸா?

இந்த தோ.க. மேட்டர் எல்லாம் உங்களுக்குத் தண்ணி பட்ட பாடு போல!! :))

said...

//உப்புசமா இருந்தா இப்போ எல்லாம் ஈனோ குடிக்கிறதுதான் பேஷனாம்//

நான் இன்ஸ்டண்ட் தோசை, டோக்ளா செய்ய ஈனோதான் போடறேன்.

தோசைமாவு அரைச்ச ஒரு பத்து நிமிசத்தில் செஞ்சுக்கலாம்:-)

said...

//இப்படி ஏத்தி ஏத்தி விட்டுதான், தோப்புகரணத்தில எக்ஸ்பர்ட் ஆயிட்டோம். இப்படிபட்ட மறைமுக அடக்குமுறைகளை வெளிச்சம் போட்டு காட்டாமல், நீங்கள் ஆனந்தபடும் உங்க பக்கசார்பு நுண்ணரசியலை என்னவென்று சொல்ல?

பி.கு. அது எப்படி 'நுண்ணரசியல்' என்ற வார்த்தை இல்லாத கொத்தனார் பதிவா? :-))//

நுண்ணரசியல் இல்லாம ஒரு பதிவு போடலாமுன்னு பார்த்தா விடமாட்டீங்க போல!!

அப்புறம் சில அடக்குமுறைகளை நல்ல ஸ்பாட் லைட் வெளிச்சம் போட்டு காட்டணும். சிலவற்றை எல்லாம் இப்படி சாப்ட்டாதான் காமிக்கணும். அதாவது வெளிச்சம் போடறது தெரியக்கூடாது, ஆனாலும் வெளிச்சம் போடணும்.

முக்கியமா தங்கமணி எல்லாம் இன்வால்வ் ஆகுற மேட்டரில் இதெல்லாம் ரொம்ப அவசியம்.

என் பக்கசார்பு நிலை தெரிந்தும் இப்படி அபாண்டமான குற்றசாட்டுகளை வீசும் நீரும் விலை போய் விட்டீரோ?

said...

//அட, இல்லாத ஒண்ணை இருக்கிறதா காமிக்கச் சொல்றாரே, நம்ம குருநாதர்னு நினைச்சேன், இதானா விஷயம்? நல்லாச் செய்யுங்க, தங்கமணிக்கு எதிரிலே மட்டும்னும் நினைவு இருக்கட்டும்.//

இது வேற. எட்டா திராட்சைக் கனிதான் ஞாபகத்துக்கு வருது.

//ஆசிரியர் சற்று மந்தமான பிள்ளைகளை தோப்புக்கரணம் போட வைத்ததுக்கும் இதுவே காரணம்,//

ஆனா விஷயம் தெரியாம இல்ல இருந்திருக்கோம்....

//நான் கொஞ்சம் அதிகமாவே போட்டுட்டேன் போலிருக்குனு என் ம.பா.வோட கருத்து. போன ஜென்மம் எல்லாம் நினைவுக்கு வருதே?//

நிறையா பேருக்கு அதிகமாப் போட்டா இந்த ஜென்மமே ஞாபகத்தில் இருக்கிறது இல்லை, நீங்க என்னடான்னா போன ஜென்மம் எல்லாம் ஞாபகத்திற்கு வருதுன்னு சொல்லறீங்க.

said...

//அண்ணே! நீங்க தினமும் வீட்ல பண்றதை பகிரங்கமா வெளியே சொல்றதுக்கு இப்படி ஒரு டெக்னிக்கா? நடத்துங்கப்பு! :))//

அதுவும்தான். ஆனா அது மட்டுமில்லை. ஸ்ரீதருக்குச் சொன்ன மாதிரி "வெளிச்சம் போடறது தெரியக்கூடாது, ஆனாலும் வெளிச்சம் போடணும். " இல்லையா!! அதுக்கும்தான். :))

said...

//Boston Bala said...

:)) //

பாபா ;-) போட வந்து :)) போட்ட மர்மமென்ன? தங்கமணி பக்கத்திலேயே இருந்தாங்களா? :))

said...

//இது சூப்பர் !!!!!

பதிவின் செய்தியும் சூப்பர் !//

அறிவன் உங்க பின்னூட்டமும் கூட ரொம்பவே சூப்பர்! :)))

said...

//மதுரையம்பதி said...

நல்லாயிருக்கையா...//

அண்ணா, நன்றிங்கண்ணா!!

//ஆமாம், மாதாமகியா? யாரது? :)//

வலையுலகப் பிதாமகர் அப்படின்னு ஒருத்தரைச் சொன்னா உடனே ஒரு ஆண் என நினைக்கத் தோன்றுகிறது அல்லவா, அதை மாற்றத்தான் அதற்குப் பெண்பாலாக மாதாமகி என்ற சொல்லை அறிமுகப்படுத்தினேன். அப்பட்டத்திற்கு நம்ம துளசி ரீச்சரை விட்டால் ஆள் உண்டா?

அதனால்தான் அவர்களை மாதாமகி என்று அழைக்கிறேன்! :))

said...

//வீட்லதான் அப்படி,. இங்கையாவது கொஞ்சம் கெத்து காட்டலாம்னா. இங்கேயுமா?..//

எல்லா இடத்திலேயும் உண்மையைச் சொல்லறது நல்லது. அம்புட்டுதான்.

said...

//"அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே போடவா தோப்புக்கரணம் போடவா??"//

அன்பு எனக்கு ரொம்ப இருக்கு
வம்பு வழக்கு இன்னும் எதுக்கு!! :P

said...

//சில கணவர்களின் நல்ல உடல்நலத்துக்கும் மனநலத்துக்கும் காரணம் இப்பத்தான் புரியுது!//

சில என்று சொல்லி உம்ம ஆண் ஆதிக்க பூனைக் குட்டியை வெளியில் அவுத்து விட்ட ஓகையாருக்குக் கண்டனங்கள்!! :)

said...

//நான் இன்ஸ்டண்ட் தோசை, டோக்ளா செய்ய ஈனோதான் போடறேன்.

தோசைமாவு அரைச்ச ஒரு பத்து நிமிசத்தில் செஞ்சுக்கலாம்:-)//

அவனவன் ஈனோவை வெச்சுக்கிட்டு இன்ஸ்டண்ட் ஹீரோவாகப் பாக்கிறான். நீங்க என்னடான்னா தோசை டோக்ளான்னுக்கிட்டு!! :))

said...

//இப்படி அபாண்டமான குற்றசாட்டுகளை வீசும் நீரும் விலை போய் விட்டீரோ?
//
விலை போனது யார்?
வீனாகப் பேசுவது கொத்தனார்

போடுவது தோப்புகரணம்
அதற்கு தேவை ஒரு காரணம்
கேட்டால் பிரம்ம ரசம்
இங்கு ஆகும் சேதாரம்
யார் பொறுப்பாகும்?

வலையில் புலியெனப் ஆடும் இலவசகொத்(ஸ்)
வளையில் எலியாவது ஏன்

said...

:)))

பள்ளிக்கூடத்துல வாத்தியார்ட்ட அடிவாங்கி போட்ட தோப்புகரணத்துலயே முட்டி ஜவ்வெல்லாம் கிழிஞ்சிருச்சு..இதுக்கு மேல என் சார்பா தல கைப்பு போடுவாரு :))

said...

//துளசி ரீச்சரை விட்டால் ஆள் உண்டா?

அதனால்தான் அவர்களை மாதாமகி என்று அழைக்கிறேன்! :))/

அதுசரி, இன்னும் இது பழக்கமாகல்லை போல இருக்கே?

நானும் ரெண்டுமுறை சொல்லிக்கறேன்.... :))

வலையுலக மாதாமகி துளசி ரீச்சர் வாழ்க!!!!

ஈனோ வச்சு தோசை செய்யும் மாதாமகி துளசி ரீச்சர் வாழ்க, வாழ்க. !!

said...

ஸ்ரீதர்,

உம்ம பின்னூட்டத்தில் முதல் பகுதி கவுஜ மாதிரி இருக்கு. அதனால சாய்ஸில் விட்டுட்டேன்.

ஆனா பின் பகுதியில் அழகா ஒரு குறளை போட்டுத் தாக்கிட்டீரே!!

முதலில் அங்க கொத்தும் போது களை ஒண்ணை விட்டுட்டீரே!! அதனால உம்ம பிழைகள் 'சந்தி'க்கு வந்திருச்சுப் பாருங்க!! சந்திப் பிழைக்கு தோப்புக்கரணம் பத்து போடுங்க!! :))

அப்புறம் வளையில் எலியா இருந்தாத்தானே பெருமை. அதனால


தன்வலையில் தானேயெலி என்னும் தகுதியே
உன்னை உயர்த்திடும் பார்!!


டிஸ்கி: இப்படி ஒரு உப்புமா பதிவுன்னு சொன்ன உம்ம கிட்டயே குறள் எழுதி வாங்கி அதுக்குப் பதில் குறளும் எழுதி இருக்கேனே!! இதுக்கு என்ன சொல்லறீங்க!!

இந்த ஈற்றடி நல்லா இருக்கா? இதை வெச்சு ஒரு வெண்பா பதிவு போடலாமா?

said...

//பள்ளிக்கூடத்துல வாத்தியார்ட்ட அடிவாங்கி போட்ட தோப்புகரணத்துலயே முட்டி ஜவ்வெல்லாம் கிழிஞ்சிருச்சு..இதுக்கு மேல என் சார்பா தல கைப்பு போடுவாரு :))//

முட்டி ஜவ்வு கிழிஞ்சது எல்லாம் இருக்கட்டும். ஆனா அதுக்கான எபெக்ட் இருந்ததா? :)

said...

//அதுசரி, இன்னும் இது பழக்கமாகல்லை போல இருக்கே?//

பழக்கமாகலைன்னு சொல்ல இது என்ன கஷ்டமான மேட்டரா? அதாவது பழக்க மா கலை யா? சிம்பிள் மேட்டர்தானே. இன்னும் ரெண்டு முறை சொல்லுங்க. பழக்கமாயிடும். அதாவது பழைய கமா-வா முடியாம இருக்காது.

said...

இப்ப தான் கண்ணில்பட்டது இந்த பதிவு.
சேரில் உட்கார்ந்து,படிச்சுகிட்டே செய்து பார்க்கலாம் என்று..
இடது கை ஓகே
வலது கையும் ஓகே,
அதற்கு கீழே படிக்கமுடியவில்லை.
இரண்டு கையையும் காதில் வைத்துவிட்டால் யார் ஸ்குரோல் பண்ணுவது?? :-)

said...

ஏன் குமார், ரெண்டு கையையும் காதில் வெச்சுக்கிட்டு இவ்வளவு பெரிய பின்னூட்டமே போடறீங்க. ஸ்க்ரோல் பண்ணறதா சிரமம்? :))

said...

//தன்வலையில் தானேயெலி என்னும் தகுதியே
உன்னை உயர்த்திடும் பார்!! //

ஸ்ரீதர் ஒரு சின்ன எழுத்துப் பிழை

தன்வளையில் தானேயெலி என்னும் தகுதியே
உன்னை உயர்த்திடும் பார்!!

said...

புலிக்கு நகமாக இருப்பது இல்லை
எலிக்கு தலையாம் சிறப்பு

அப்படி சொல்றீங்களா... அது சரிதான் :-)

said...

மொத்தத்தில் பத்தொன்பது இலவசக் கொத்தனார் போட்ட கமெண்டுகள், ஹிட் ஏன் ஏறாது? :P

said...

ஸ்ரீதர்,

உங்களோட வெண்பாவில் ஒரே ஒரு தளை தட்டல் இருக்கு. அதைக் கொத்தி சரி செஞ்சா

புலிக்கு நகமாய் இருப்பது இல்லை
எலிக்குத் தலையாம் சிறப்பு

said...

//மொத்தத்தில் பத்தொன்பது இலவசக் கொத்தனார் போட்ட கமெண்டுகள், ஹிட் ஏன் ஏறாது? :P//

கீதாம்மா, கொத்தனார் நோட்ஸ் கொத்தனார் நோட்ஸ் அப்படின்னு சொன்னாப் போதுமா? திறந்து படிக்க வேண்டாமா?

முதல் பின்னூட்டம் நம்மளுது. அப்புறம் வர ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் பதில். இப்படி இருக்கும் பொழுது நம்ம போட்ட பின்னூட்டங்களின் எண்ணிக்கை (மொத்த பின்னூட்டங்களின் எண்ணிக்கை - 1)/2 + 1 என்ற சூத்திரத்தின் படி இருக்கவேண்டும் அல்லவா.

பாடத்தைப் படியுங்கள்! :))

said...

ஹி ஹி...... பள்ளிக்கூடத்திலே படிக்கிறோப்போ(???) இந்த பயிற்சியை நான் தெனைக்கும் செய்வேன்.....

இப்போதான் தெரியுது இதிலே இவ்வளவு விசயமிருக்குன்னு.... :))