Sunday, December 02, 2007

ஒன்றானவன் - இரண்டானவன் - இப்ப நூறானவன்! பட்டிமன்றம் பாகம் 1!

மாயண்ணன் வந்திருக்காக மாப்பிள்ளை மொக்கச்சாமி வந்திருக்காக மற்றும் நம் உறவினர் எல்லாம் வந்திருக்காக. வாம்மா மின்னல் அப்படின்னு ஒரு மீசைப் பார்ட்டி சவுண்ட் விடறது நம்ம எல்லாருக்கும் தெரியும். அந்த மாதிரி இன்னிக்கு நம்ம பதிவில் துளசி ரீச்சர் வந்திருக்காக, பெரியவர் பினாத்தலார் வந்திருக்காக, தலைவர் தேவ் வந்திருக்காக, ரஷ்ய பனிக்கரடி இராம்ஸ் வந்திருக்காக, ரொம்ப முக்கியமா நம்ம பதினெட்டுப்பட்டி பஞ்சாயத்துக்கு நாட்டாமை, ச்சீ, பட்டிமன்றதுக்கெல்லாம் நடுவரா இருக்கிற சாலமன் பாப்பையா வந்திருக்காக.

என்னடே விசேஷம், இம்புட்டு பேரும் ஒண்ணா வந்திருக்காகன்னு பாக்கீயளா? நாமளும் கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா பதிவு போட்டுக்கிட்டு இருக்கோம். இப்போ 100 பதிவு போட்டுட்டோமுன்னு நம்ம ஆளுங்க கிட்ட சொல்லப் போக அவங்க பொங்கல் தீவாளின்னு நாள் கிழமை வந்தா பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடத்துறதுதேன் மொறை. அதனால நம்ம 100ஆவது பதிவுக்கும் அவர் தலைமையில் பட்டிமன்றம் நடத்தணுமுன்னு ஒரே அடம். அவனவன் எம்புட்டு வேகமா 100, 200ன்னு பதிவு போடறான், அதுல 1000க்கு மேல பதிவு வேற போட்டவக எல்லாம் இருக்காங்க. இதுல நாம 100 பதிவு போட்டதுக்கு எல்லாம் கொண்டாட்டமான்னு கேட்டா அதெல்லாம் அப்படித்தான். நாங்க பாத்துக்கிடுதோம் நீர் சும்மா இரும்வேன்னு சொல்லிட்டு ஏற்பாடு செஞ்சுட்டாக.

என்னமோ பட்டிமன்றமாம். நம்ம சாலமன் பாப்பையாதான் நடுவரா இருக்காராம். நான் இப்படி ஓரமா இருந்து பாக்கப் போறேன் நீங்களும் வாங்களேன். நடுவர் பாப்பையா அவங்க பேச ஆரம்பிச்சுட்டாக. என்னான்னு கேப்பமா? அவரு பேசுத கொரலு மறந்து போச்சுன்னா இங்ஙன போயி ஒரு வாட்டி பாத்துக்கிடுங்கடே.

பூமிப் பந்தில் பல்வேறு தளங்களில் கொத்தனாரின் நூறாவது பதிவை கொண்டாடும் வலை மக்களே, உங்கள் அனைவரையும் வாழ்த்தி இந்த பட்டிமன்றத்திற்கு வரவேற்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தலைப்பு என்னான்னு சொல்லிட்டாங்க. அதாவது இன்னைக்கு எத்தனையோ பேரு பதிவு எழுதறாய்ங்க. அதை எத்தனை பேரு படிக்காய்ங்க? ஆனா நம்ம கொத்தனார் எழுதினா எல்லாரும் வந்து படிச்சுடறாங்க இல்லையா. படிக்கலைன்னா அவர் வந்து தனிமடல் எல்லாம் போட்டு, மின்னரட்டையில் வந்து மிரட்டி நம்மளைக் கூட்டிக்கிட்டு வந்திடறாரு அது வேற விஷயம். ஆனா வந்து படிச்சுடறாங்க.

இதுல பாருங்க அவனவன் வந்து என்னென்னமோ எழுதறான். துறை சார்ந்த பதிவுன்னு எழுதறான், நுரை சார்ந்த பதிவுன்னு சோப்பு போடறான். ஆனா எல்லாத்துக்கும் வராத ஒரு கூட்டம் நம்ம கொத்தனார் பதிவுக்கு வருதுன்னா அதுல ஒரு சுவை இருக்கணும். சுவைன்னு சொன்னா பல விதமான சுவை இருக்கு. நகைச்சுவை இருக்கு, அரசியல் சுவை இருக்கு, கவிதைச் சுவை இருக்கு. இப்படி என்னென்னமோ இருக்கு. ஆனா இவரு பதிவுல இருக்கிறது உப்புமா சுவை அப்படின்னு சொல்ல ரெண்டு பேரு வந்திருக்காங்க. இந்த சுவையுணர்வு கொஞ்சம் ஜாஸ்தியாவே இருக்கிற ஆளுங்கதான். ஒருத்தர் வலைமாமணி, உப்புமாமா என பல பட்டங்களை வாங்கின பெனாத்தலாரு. அவரு கூட அந்த அணியில் இருக்கிறது அவரு கட்சி ஆளு மருத்துவர் இராமநாதன்.

சுவை என்னய்யா சுவை. அந்தச் சுவை எல்லாம் தாண்டி அவருகிட்ட ஒரு வெறி இருக்குப் பாருங்க அந்த வெறிதான் அவர் வெற்றியில் பெரும்பங்கு அப்படின்னு சொல்லறாங்க இந்த எதிர் அணியினர். வெறி என்ற சொல்லுக்கு நடுவில 'ற்' அப்படின்னு போட்ட வெற்றிதானே. அதுனால அவங்க சொல்லறது சரியாத்தான் இருக்கும் போலத் தெரியுது. அதுவும் என்ன வெறியாம் - பின்னூட்ட வெறியாம். அட இதை யாரு சொல்லறாங்கன்னு பார்த்தா பின்னூட்ட நாயகி அப்படின்னு பெயர் எடுத்த வலையுலக மாதாமகி துளசி ரீச்சர். இந்த சப்ஜெக்ட் பத்தி இவங்க சொன்னா சரியாத்தானே இருக்கும். இவங்க கூட ஆமாம் போடப் போறது சும்மா தல தல அப்படின்னு சொல்லி கொத்தனாரை ஏத்தி விட்டு வேடிக்கை பார்க்கும் தெள்ளுதமிழ் நாயகன் தேவ்.


ஆக, நாம இன்னிக்கு பேசப் போகும் தலைப்பு "கொத்தனாரின் பதிவுகளில் விஞ்சி நிற்பது உப்புமாச்சுவையா அல்லது பின்னூட்ட வெறியா? ". வலையுலக சர்வீஸ் படி சீனியரான துளசி அவர்களை முதலில் வந்து பின்னூட்ட வெறியே என்ற தலைப்பில் பேசுமாறு அழைக்கிறேன். வாங்கம்மா வாங்க.


(தொடரும்)

74 comments:

said...

வழக்கம் போல போணி பண்ணிக்கிறேன். வந்தவங்க, வரப்போறவங்க எல்லாரையும் வாங்க வாங்கன்னு வரவேற்கிறேன். நன்றியும் சொல்லிக்கிறேன்.

said...

//கொத்தனாரின் பதிவுகளில் விஞ்சி நிற்பது உப்புமாச்சுவையா அல்லது பின்னூட்ட வெறியா? //
அன்பு கொத்ஸ்,
இன்னும் முழுசாப் படிக்கலை...

ஆனால் கேள்வி ஈஸியா இருக்காப்பல இருக்கு...

பின்னூட்ட வெறியே.. என்ற தலைப்பில் நான் ஒரு மணி நேரம் பேசத் தயார்...

இன்னும் ஆயிரம் நூறு பெற்று பெருவாழ்வு வாழ்க என வாழ்த்தும்..


அன்புடன்,
சீமாச்சு

said...

//கொத்தனாரின் பதிவுகளில் விஞ்சி நிற்பது உப்புமாச்சுவையா அல்லது பின்னூட்ட வெறியா//

வெறி வெறி குட்! :-)
வாழ்த்துக்கள் கொத்ஸ்!

பாப்பையா, தீர்ப்பை மாத்திச் சொல்லுன்னு யாரும் சொல்லாம இருந்தாச் சரி! :-)

said...

சீமாச்சு அண்ணா,

முதல் ஆளா வந்து வாழ்த்திட்டீங்க. நம்ம ஆளுங்க என்ன சொல்லறாங்க எனப் பாருங்க. உங்களுக்கும் சான்ஸ் இருக்கு. பேசிடுங்க!! :)

said...

வெறித்தனமா வாழ்த்து சொல்லிட்டீங்க. நன்றி ரவி!

பாப்பையா தீர்ப்பு சொல்லணுமான்னே யோசிக்கிறதாக் கேள்வி!

said...

கொத்ஸ்
கரீட்டா எண்ணிப் பாத்தீங்க இல்ல?
நூறு ஆயிடுச்சா? :-)))
நான் பின்னூட்டத்த மட்டும் வச்சி எண்ணிப் பாத்தேன்! ஆயிரம் பதிவு வாங்கிய அபூர்வ கொத்ஸ் மணி-ன்னா வருது? :-)

said...

ரவி

பிளாக்கர் கணக்காபுள்ளை சொல்லறாரு. இலவசத்தில் இதுதான் 100ஆவது பதிவாம். விக்கி, வெண்பா, சங்கம் எல்லாம் சேர்த்துக்கலை. :)

பின்னூட்டம் இன்னும் ஆயிரக்கணக்கில்தானா இருக்கு? ஹூம்.

said...

:)

said...

அன்புத்தம்பி, என் உடன்பிறப்பே சீமாச்சு,

வாருமைய்யா வாரும்.

//பின்னூட்ட வெறியே.. என்ற தலைப்பில் நான் ஒரு மணி நேரம் பேசத் தயார்...//

நம் கட்சி வழக்கம்போல் ஜெயிக்கணுமுன்னு சொல்லுமைய்யா சொல்லும்.

அக்கா எ(ல்)ள் ன்னு சொன்னால் தம்பி எண்ணெய் என்பது உப்புமாவுக்குத் தெரியட்டும்:-)))

said...

புன்சிரிப்பு சிந்திய பாபாவிற்கு என் நன்றிகள்! :)

said...

இலவசமாவே 1000 பதிவு கொடுத்த கொத்ஸுக்கு வாழ்த்து!

எண்னிக்கைப்பிழை இல்லை!

எத்தனை படம் நடிச்சாருன்றது முக்கியமில்லை!

எத்தினி பின்னூட்டம் ஒண்ணொண்னுத்துக்கும் வந்திச்சுன்றதுதான் முக்கியம்!

அந்த வகையில பாத்தா, இது நம்ம ரவி சொன்னப்புல, ஆயிரத்துக்கு சமம்!

"ரீச்சர்" பேச்சுக்காக வெயிட்டீஈங்!

செயிக்கப்போற கச்சி அதானே!
:))

said...

//அக்கா எ(ல்)ள் ன்னு சொன்னால் தம்பி எண்ணெய் என்பது உப்புமாவுக்குத் தெரியட்டும்:-)))//

ரீச்சர், நல்லா ஆள் பிடிக்கறீங்க!!

நல்ல வேளை அக்கா எள் அப்படின்னு சொன்னாங்க. இதுவே வெள் எனச் சொல்லி இருந்தா தம்பி வெண்ணெய்ன்னு இல்ல ஆயிருக்கும்!! :))

said...

வாழ்த்துக்கு நன்றி வைத்தியரய்யா! ரீச்சர் பேச்சுக்கு எல்லாரும் வெயிட்டிங். ஆனா அதுதான் வின்னிங் கட்சி என இப்பவே சொல்லி பாப்பையா சாபத்துக்கு ஆளாகிடாதீங்க!!

said...

மேட்ச் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே பெட்டிங்கை அனுமதிக்கும் கொத்தனாருக்கு கடும் கண்டனம். உப்புமா அண்டர்டாக்கா இல்லையா என்பதை எங்கள் வாதங்கள் முடிவுசெய்யட்டும்.

said...

100- வதுக்கு வாழ்த்துக்கள்.

-அரசு

said...

ம்ம்ம்ம்ம், இதுக்கும் ஒரு 500 பின்னூட்டத்துக்குக் குறையாது. உங்க பின்னூட்டக் கோனார் நோட்ஸை மறுபதிப்புச் செய்யுங்க, பின்னூட்ட வெறியா, உப்புமாச் சுவையானு புரியும்!

மேலும், மேலும் ஆயிரம் பதிவு கண்ட அபூர்வக் கொத்தனாராகவும், பத்தாயிரம் பின்னூட்டத்துக்கு மேல் காணவும் வாழ்த்துக்கள்.

said...

//மேட்ச் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே பெட்டிங்கை அனுமதிக்கும் கொத்தனாருக்கு கடும் கண்டனம். //

சுரேசு, நான் எஸ்.கேவுக்கு சொல்லி இருக்கும் பதிலைப் பாருங்க. இன்னுமா என் நடுநிலமையில் சந்தேகம்? ஏற்கனவே சிலபேர் ஒண்ணும் செய்யாத போன பதிவிலேயே 'சோ'ன்னு அழுதாங்க, ச்சீ, 'கோ'ன்னு அழுதாங்க. நீங்களுமா?

//உப்புமா அண்டர்டாக்கா இல்லையா என்பதை எங்கள் வாதங்கள் முடிவுசெய்யட்டும்.//

இப்போ என்ன சொல்ல வறீங்க? அண்டர்டாக் அப்படின்னா நிரூபிக்கப் போறீங்க? :)

said...

அரசு,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

said...

//ம்ம்ம்ம்ம், இதுக்கும் ஒரு 500 பின்னூட்டத்துக்குக் குறையாது. //
புகை வாசனை அடிக்கல?

//உங்க பின்னூட்டக் கோனார் நோட்ஸை மறுபதிப்புச் செய்யுங்க, பின்னூட்ட வெறியா, உப்புமாச் சுவையானு புரியும்!//

உப்புமாவிற்கு ஒரு நோட்ஸ் போடணமுன்னு சொல்லறீங்க. ஆவன செய்யலாம்.

//மேலும், மேலும் ஆயிரம் பதிவு கண்ட அபூர்வக் கொத்தனாராகவும், பத்தாயிரம் பின்னூட்டத்துக்கு மேல் காணவும் வாழ்த்துக்கள்.//
நன்றி கீதாம்மா!!

said...

முதல்ல வாழ்த்துகள்ல பிடியுங்க. எல்லாரும் சொன்ன மாதிரி 100 பதிவுன்னாலும் அதுக்கு நீங்க எடுத்துக்கற சிரத்தையும், பின்னூட்டங்கள ஊக்குவித்து தகுந்த மாதிரி பதிலெழுதறதும்... நிச்சயம் 1000 பதிவுகளுக்கான உழைப்பை மிஞ்சும்.

சூடான பட்டிமன்றத்துக்காக வெயிட்டிங்.

said...

//முதல்ல வாழ்த்துகள்ல பிடியுங்க.//

பிடிச்சுட்டேங்க. இப்படி ஒரு சதி பண்ணி, எனக்கு பிடிக்கத் தெரியும் என்ற உண்மையை வெளியில் சொல்லி, இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெறவேண்டும் என்ற என் கனவை கலைத்த உம்மை என்ன செய்வது!

//சூடான பட்டிமன்றத்துக்காக வெயிட்டிங்.//

நானும்தான். பாப்பையாவும் கூப்பிட்டுட்டாரே. ரீச்சருக்கு வயசாச்சு, இதுல இடுப்பை வேற ஒடிச்சுக்கிட்டாங்க. நம்ம வேகத்திற்கு வர முடியுமா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!!!

said...

//மின்னரட்டையில் வந்து மிரட்டி நம்மளைக் கூட்டிக்கிட்டு வந்திடறாரு..//

அடடே! நம்ம பாலமன் சாப்பையாவுக்கும் (!) இது தெரிஞ்சிருக்கே...!

said...

எங்கள் தலைவி ரீச்சர் என்றும் அக்காவென்றும் இணைய உலகமே அழைக்கும் துளசி அவர்களை, " மாதாமகி" என்று வயதான கிழவியாய் உருவகப்படுத்தும் இலவசம் அவர்களுக்கு என் கண்டனங்களை இங்கு பதிவு செய்கிறேன்.
அது சரி, ஒரு கமெண்டுக்கு குறைந்தபட்சம், ஒன்று முதல் இரண்டு மூன்று என்று பதில் பின்னுட்டம் விடும் இலவச கொத்தனார் அவர்கள், சென்ற பதிவில் மெளனம் காத்தது ஏன் ஏன் ஏன்???

said...

100 அடித்த அண்ணன் கொத்ஸ்க்குப் பின்னூட்டம் மூலம் பின்னிட்டீங்க தலைவா என வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். :-)

said...

பின்னூட்டப் புயலாரின் சாதனைப் பதிவுக்கு வருகை தந்து அண்ணனின் பின்னூட்ட வெ(ற்)றிக்கு துணை நிற்க போகும் அனைத்துப் பதிவுலக ரசிகப் பெருமக்களுக்கு உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேவ்
தலைமை மன்றம் - கொட்டிவாக்கம்

said...

//அடடே! நம்ம பாலமன் சாப்பையாவுக்கும் (!) இது தெரிஞ்சிருக்கே...!//

பாலமன்ன்ன் சாப்பையாவா? ஆஹா!! கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க!! என்னடான்னு கேட்டா எங்கூருகாரரு நாங்க எப்படி வேணா கூப்புடுவோம், இப்ப உனக்கென்னா அப்படின்னு அருவாளைத் தேடுவாங்கய்யா. அப்படியே அடங்கி அடக்க ஒடுக்கமா போக வேண்டியதுதான். ஆத்தாடி நம்ம நெலமை இப்படி ஆயிருச்சே.....

said...

தலைவரின் 100வது பதிவை முன்னிட்டு.. ரசிக கண்மணிகளுக்கும் பொதுமக்களுக்கும் முக்கியமாக எல்லா இடங்களிலும் உப்புமாத் தின்னு நாக்குச் செத்துப் போனப் பதிவுலக பெருமக்களுக்கு தலைவர் தன் சொந்தச் சிந்தனையில் செய்ய போதித்த ஸ்பெஷல் கொத்துப் பரோட்டா வழங்கப்படும்...

பரோட்டாவைத் தின்று விட்டு பின்னூட்ட மைதானத்தில் நடக்கும் கச்சேரியில் பங்குபெற்று செல்லுமாறு அன்போடு கேட்டு கொள்கிறோம்..

அகில இந்திய பின்னூட்ட சூப்பர் ஸ்டார் கொத்தனார் தலைமை மன்றம்
நியு ஜெர்சி கிளை ஒன்றியம்

said...

//எங்கள் தலைவி ரீச்சர் என்றும் அக்காவென்றும் இணைய உலகமே அழைக்கும் துளசி அவர்களை, " மாதாமகி" என்று வயதான கிழவியாய் உருவகப்படுத்தும் இலவசம் அவர்களுக்கு என் கண்டனங்களை இங்கு பதிவு செய்கிறேன்.//

செய்யுங்க செய்யுங்க. செஞ்சுட்டீங்கல்லா. இப்ப என்ன? அவங்களே மதாமகீஈஈஈஈ அப்படின்னு நான் ஆசையா கூப்பிட்டா அப்படியே அந்த அகிலாண்டேஸ்வரி மாதிரி கண்ணுல கருணையை வடியவிட்டுக்கிட்டு என்னப்பா அப்படின்னு கேட்பாங்க, இடையில நீங்க என்ன? :))

//சென்ற பதிவில் மெளனம் காத்தது ஏன் ஏன் ஏன்???//

எல்லாம் உங்களை மாதிரி ஆளுங்க வந்து பதிவுக்கு ஒரு பதிலும் சொல்லாம மொக்கையா பின்னூட்டம் போட்டீங்க இல்ல, அதே காரணத்திற்குத்தான். :))

said...

//100 அடித்த அண்ணன் கொத்ஸ்க்குப் பின்னூட்டம் மூலம் பின்னிட்டீங்க தலைவா என வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். :-)//

அழகா உம்ம அணிக்கு சப்போர்ட் பண்ணிட்டீங்க. நல்லா இருங்கடே!!

said...

100 க்கு வாழ்த்துக்கள். அப்புறமா வரேன்!

said...

//தேவ்
தலைமை மன்றம் - கொட்டிவாக்கம்//

அப்படின்னா எல்லா தலைவர்களும் மெம்பரா இருக்கும் க்ளப்பா? அப்போ என்னை மாதிரி அடியவர்களுக்கு அங்க இடம் இல்லையா?

போராட்டம் நடத்தணும் போல இருக்கே!

said...

//பரோட்டாவைத் தின்று விட்டு பின்னூட்ட மைதானத்தில் நடக்கும் கச்சேரியில் பங்குபெற்று செல்லுமாறு அன்போடு கேட்டு கொள்கிறோம்..//

யோவ் என்ன இது? பரோட்டா செலவு எல்லாம் பட்ஜெட்டில் இல்லையே. இப்படி இழுத்து விடற? இதுக்கு நடுவில் கச்சேரின்னு உம்ம பதிவுக்கு போஸ்டர் அடிச்சு ஒட்டிக்கிற. கில்லாடி ஐயா நீர்!!

said...

//100 க்கு வாழ்த்துக்கள். அப்புறமா வரேன்!//

வரி வரியா போட்டதான் புலி. இப்படி ஒத்தை வரியில் எப்படி ஒத்துக்கறது. வரேன்னு சொல்லி இருக்கீரு. பார்க்கலாம். :)

வாழ்த்துக்களுக்கு நன்றிப்பா.

said...

நூறுக்கு நூறு வாழ்த்துக்கள் !!

said...

நாங்க உப்புமாக் கட்சி.

ஏன்னா உப்புமா பதிவுனு சொல்லிட்டு
அர்த்தமுள்ள இந்துமதம் (ச்சும்மா ஒரு பேச்சுக்கு) மாதிரி ஏகப்பட்ட விசயங்களைச் சொல்லி விடறீங்க.

ஆகையினாலே உப்புமாவாப் போட்டாலும் சரி, கொத்து பரோட்டாவா போட்டாலும் ஓகே.
பதிவர்கொத்ஸ் இலவசம் வாழ்க.

அவர் பதிவுகளும் பின்னூட்டங்களும்
பத்தாயிரம் லட்சம் கோடினு பல்கிப் பெருக வாழ்த்துக்கள்.

said...

சுவைன்னு சொன்னா பல விதமான சுவை இருக்கு.
இவ்வளவு சுவை இருந்தா வருபவர்கள் பிச்சி பிச்சி சாப்பிட்டு போயிடபோறாங்கா. :-)

நான் பின்னூட்ட வெறி பக்கம் தான்.

said...

வாழ்த்துக்கள் கொத்ஸ்! இவ்ளோ நாளா.. இவ்ளோ தானா? ஆனா அவ்வளவு இருக்கே. எவ்வளவு நீங்க? எப்படி நீங்க..

3rd View is always better for judgement..

said...

இலவசம் வாழ்த்துக்களு.

//கொத்தனாரின் பதிவுகளில் விஞ்சி நிற்பது உப்புமாச்சுவையா அல்லது பின்னூட்ட வெறியா? //

பாப்பையா: ஒரு குருப்பாத்தான்யா திரியறாய்ங்க... நானே சன் டி.வி கழற்றி விட்டுச்சுன்னா என்ன பண்ணன்னு ராஜாவோட யோசிச்சுட்டிருக்கேன். இவிய்ங்க வேற... கொல்றாய்ங்கய்யா...மனுஷனை கொல்றாய்ங்கய்யா...

said...

இப்போதான் உங்க பதிவுகள் படிக்க ஆரம்பிச்சிருக்கேன்..ஆனாலும் நா உப்புமாக் கட்சிதான்...உப்புமா ஊட்டம் சுவையா இல்லேன்னா..பின்னூட்டம் எங்கே?

said...

நூறுக்கு வாழ்த்துக்கள் சொல்ல வயதில்லாத காரணத்தினால் வணங்கி மகிழ்கிறேன்...

நன்றி... :)

said...

வாழ்த்துக்கள் கொத்தனாரே!!
பட்டிமன்றம் சூப்பரு!!
:-)

said...

//நூறுக்கு நூறு வாழ்த்துக்கள் !!//

நூறு வாழ்த்துக்களுக்கு நூறு நன்றி மணியன்!

said...

//நாங்க உப்புமாக் கட்சி.//

அப்பாடா அந்த கட்சிக்கும் ஆள் வந்துட்டாங்க, நானும் பப்ளிஷ் பண்ணிட்டேன். இனிமேலாவது வேற பதிவில் பெனாத்தும் ஒருவர் நம்ம நடுநிலமையை புரிஞ்சு கிட்டா சரி.

//ஏன்னா உப்புமா பதிவுனு சொல்லிட்டு
அர்த்தமுள்ள இந்துமதம் (ச்சும்மா ஒரு பேச்சுக்கு) மாதிரி ஏகப்பட்ட விசயங்களைச் சொல்லி விடறீங்க.//

வல்லிம்மா, என்னை வெச்சு காமெடி எதுவும் பண்ணலையே...

//அவர் பதிவுகளும் பின்னூட்டங்களும்
பத்தாயிரம் லட்சம் கோடினு பல்கிப் பெருக வாழ்த்துக்கள்.//

நன்றி வல்லிமா.

said...

//இவ்வளவு சுவை இருந்தா வருபவர்கள் பிச்சி பிச்சி சாப்பிட்டு போயிடபோறாங்கா. :-)

நான் பின்னூட்ட வெறி பக்கம் தான்.//

வாங்க குமார். பிச்சி பிச்சி சாப்பிடத்தானே நம்ம சுவை மிக்க பதிவுகள்!

நீங்களும் அந்தப் பக்கம்தானா? :)

said...

//வாழ்த்துக்கள் கொத்ஸ்! இவ்ளோ நாளா.. இவ்ளோ தானா? ஆனா அவ்வளவு இருக்கே. எவ்வளவு நீங்க? எப்படி நீங்க..

3rd View is always better for judgement..//

வாய்யா இளா, வழக்கம் போல பின்நவீனத்துவமா என்னமோ சொல்லி இருக்க, இந்த மரமண்டைக்குத்தான் ஒண்ணும் புரிய மாட்டேங்குது. நல்லதாத்தான் சொல்லி இருப்பேன்னு நினைச்சுக்கறேன். :))

said...

//பாப்பையா: ஒரு குருப்பாத்தான்யா திரியறாய்ங்க... நானே சன் டி.வி கழற்றி விட்டுச்சுன்னா என்ன பண்ணன்னு ராஜாவோட யோசிச்சுட்டிருக்கேன். இவிய்ங்க வேற... கொல்றாய்ங்கய்யா...மனுஷனை கொல்றாய்ங்கய்யா...//

வாழ்த்துக்களுக்கு நன்றி ஆடுமாடு.

அவரு சும்மாத்தானே இருக்காரு. அதான் இங்க இழுத்துக்கிட்டு வந்துட்டோம்.

said...

//இப்போதான் உங்க பதிவுகள் படிக்க ஆரம்பிச்சிருக்கேன்..ஆனாலும் நா உப்புமாக் கட்சிதான்...உப்புமா ஊட்டம் சுவையா இல்லேன்னா..பின்னூட்டம் எங்கே?//

ஆஹா அந்தக் கட்சிக்கு இன்னும் ஒரு ஆள். வாங்க பாசமலர்.

பதிவு எப்படி இருந்தாலும் பின்னூட்டம் வாங்க முடியும் என்பது இவங்க வாதம். என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்.

said...

//நூறுக்கு வாழ்த்துக்கள் சொல்ல வயதில்லாத காரணத்தினால் வணங்கி மகிழ்கிறேன்...

நன்றி... :)//

ராயலு, வயசையாய்யா 100ன்னு சொல்லறோம். வாழ்த்தறோம் வணங்கறோமுன்னுக்கிட்டு. இது பதிவு எண்ணிக்கைப்பா அதான் நீங்க எல்லாம் பல நூறு பாத்தவங்களாச்சே. ஆசீர்வாதம் பண்ணுங்க! :)

said...

//வாழ்த்துக்கள் கொத்தனாரே!!
பட்டிமன்றம் சூப்பரு!!
:-)//

வாங்க சிவிஆர்.. வாழ்த்துக்களுக்கு நன்றி.

பட்டிமன்றம் இப்போதானே ஆரம்பிச்சு இருக்கு. எப்படிப் போகுதுன்னு பார்க்கலாம்.

said...

கொத்ஸ்! 100 வது பதிவிலே என் 50வது பின்னூட்டம்! வாழ்க வளர்க!!! ஆக வேர வழியே இல்லை நநஅன் உப்புமா கட்சி! ரீச்சர் உங்கள்ளுக்கு எதிரா நாங்க அமீரகம் சார்பா குறைந்த பட்சம் 20 பேர் இருக்கோம்!:-))(வரேன்னு சொல்லிட்டு வரலில்ல அதான்)

said...

சீமாச்சு அண்ணா மன்னிச்சுக்கோங்க, குருஷேத்திரத்தில் "கிருஷ்ணா" சொன்னபடிதான் நான் நடப்பேன் என்பது உங்களுக்கு தெரியுமே!!!!

said...

//அதுல 1000க்கு மேல பதிவு வேற போட்டவக எல்லாம் இருக்காங்க. //

எண்ணிக்கையா முக்கியம் குவாலிட்டிதானே முக்கியம் அது உங்க கிட்ட இருக்குங்கோ.

(ஸ்மைலி எல்லாம் போடாமல் சொல்வதால் மேலே சொல்லி இருப்ப படி சீரியஸ் கமெண்ட்)

said...

கொத்தனாரே, வாழ்த்துக்கள்.

பட்டிமன்றம் ஜோரா நடக்கட்டும். பாப்பையா டீச்சர் பக்கம் சாயுறா மாதிரி தெரியுது. உப்புமா ஜெயிக்காதா?

said...

//கொத்ஸ்! 100 வது பதிவிலே என் 50வது பின்னூட்டம்!//

அபி அப்பா, இது என்ன இப்படி பொய் சொல்லறீங்க. என்னோட 100ஆவது பதிவில் இதுதான் உங்க முதல் பின்னூட்டம். இப்படி எல்லாம் பொய் சொன்னா என்ன பனிஷ்மெண்ட் தெரியுமில்ல. ஆமாம், அதேதான் - நீங்க 50 பின்னூட்டம் போட்டே ஆகணும்! :)

//ரீச்சர் உங்கள்ளுக்கு எதிரா நாங்க அமீரகம் சார்பா குறைந்த பட்சம் 20 பேர் இருக்கோம்!://

கட்டாயம் வந்திடுங்க. உங்க கருத்தை எல்லாம் சொல்லுங்க.

said...

//பாப்பையா, தீர்ப்பை மாத்திச் சொல்லுன்னு யாரும் சொல்லாம இருந்தாச் சரி! :-)
//

ரவி, அதல்லாம் கடைசில...
தீர்ப்பு எல்லாத்துக்கும் தெரிஞ்சதுதான..;)

துளசி டீச்சர் அணி வெற்றி பெற வாழ்த்துக்கள்!! ;)

சே... கடைசில வந்த விசயத்தை மறந்துட்டேன்... "வாழ்த்துக்கள், கொத்ஸ்!!"

said...

வாழ்த்த வயதில்லை எனவே தலை தாழ்த்தி இந்த மலையை வணங்குகிறேன்.

said...

//வரி வரியா போட்டதான் புலி. இப்படி ஒத்தை வரியில் எப்படி ஒத்துக்கறது. //

சத்திய சோதனை. காலம் பதில் சொல்லும் :)

//வரேன்னு சொல்லி இருக்கீரு. பார்க்கலாம். :)//

திராவிட வழி வந்தவன். சொன்னதை தான் செய்வோம். சொல்லுறதை தான் செய்வோம்.

வந்தோம்ல :)

said...

எங்கள் அணித் தலைவர்கள் உப்புமா பதிவுகளின் நிறுவனவர்கள் ஆன பெனாத்தல் சுரேஷ் & டாக்ஸ் இராமாநாதன் அவர்களின் ஆசிர்வாதத்துடனும் வழிக்காட்டுதலுடனும் உப்புமா சுவையே என்ற அணிக்கு வலு சேர்க்க வந்து இருக்கேன்.

said...

உலகத் தமிழர்களில் நெஞ்சங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து உலகத் தமிழர்களின் பிரநிதியாக(தலைவராக அல்ல) வலம் வரும் சாலமன் ஆப்பையா அவர்களுக்கும்

உப்புமா உலகின் தனி பெறும் சிங்கமாம் ப்ளாஷ் உலக மன்னனாம் பெனாத்தல் சுரேஷ் அவர்களுக்கும்

வோட்கா கொண்டான் மருத்துவர் இராமநாதன் அவர்களுக்கும்

தினமும் ஒரு உப்புமா பதிவு போட்டும் பின்னூட்ட வெறியே என்ற அணிக்கு தலைமை தாங்கும் டீச்சர்க்கும்

தல தல என்று எல்லாரையும் ஏத்தி விட்டு கண்ட இடத்தில் அடி வாங்க வைத்து விட்டு இங்கும் மறுபடியும் தலைவர் என்று வழித்து சந்தியில் நிறுத்த வந்து இருக்கும் தேவ்க்கும்

சந்திக்கு செல்லுவதா உள்ளே சென்று உப்புமாவை தொடர்ந்து ருசிப்பதா என்று குழப்பத்தில் நிற்கும் கொத்தனாருக்கும்

இதுவும் ஒரு தலைப்பு இதுக்கு ஒரு பதிவு அதை படிக்க சொல்லி ஒரு மின்மடல் படிச்சா மட்டும் பத்தாதுனு கருத்தும் சொல்ல வந்து இருக்கும் பதிவுலக மக்களக்கு என் வணக்கங்களையும் உரித்தாக்கி என் உரையை தொடங்குகிறேன்

said...

நடுவர் அவர்களே!

முதலில் அந்த எதிர் பக்கம் இருப்பவர்கள் எதுக்கு வந்து இருக்காங்க என்று கேட்டீங்களா... பட்டிமன்றம் முடிஞ்சதும் உப்புமா போடுவாங்க அதை வாங்கி தின்னுட்டு போகலாம் என்று வந்தவங்களை மேடை ஏத்தின மாதிரி இருக்கு. இதில் ஒரு படி மேலே போய் தேவ் கொத்து புரோட்டா வேணும் கேட்குறார்.

ஏனய்யா மேடையில் பேச கூப்பிட்டா தலைப்பை எல்லாம் பாக்க மாட்டீங்களா... என்ன தலைப்பு கொத்தனார் பதிவுகளில் விஞ்சி நிற்பது
உப்புமாச்சுவையா அல்லது பின்னூட்ட வெறியா? என்பது தானே தலைப்பு.

said...

விஞ்சி நிற்பது என்ற வார்த்தைகளை படிச்சு பாத்தீங்களா இல்லையா. அதை பாத்த பிறகுமா பேசுவதற்கு மேடை ஏறி வந்தீங்க. என்ன கொடுமையா இது.

கொத்தனார் பதிவுல் இருப்பது உப்புமா சுவையா பின்னூட்ட வெறியா என்று தலைப்பு இருந்தாலவது உங்களுக்கு பேச ஏதும் வாய்ப்பு இருக்கு. தலைப்புல தான் தெளிவா சொல்லிட்டாங்களே விஞ்சி நிற்பது என்று.

நாங்க அவருக்கு பின்னூட்ட வெறி கிடையவே கிடையாது என்று பேச வரவில்லை. அது இருக்குய்யா... தமிழ் பதிவரா இருந்தா அது இருக்கனும். ஆனால் அதையும் மீறி இங்க ஒரு சுவை இருக்குய்யா...

அதை பத்தி தான் நாங்க பேச வந்து இருக்கோம்.

said...

பின்னூட்ட வெறி பின்னூட்ட வெறி என்று பேசுறீங்களே... எப்படியா பின்னூட்டம் வரும் ஏதாச்சும் ஒரு பதிவு போட்டா தானே வரும். உருப்படியான பதிவு போட்டா வருமா? இல்ல மலேசிய அமைச்சருக்கு சவுண்ட் விட்டா வருமா? அங்கு எல்லாம் சவுண்ட் விட்டா... பூனைக்குட்டி வெளிய வந்துடுச்சு என்று கல்லு தான் வரும். பின்ன எப்படி பின்னூட்ட வாங்கவது. கல்லடி பட்டு பதிவை விட்டு ஒரு மாசம் ரெஸ்ட் எடுத்துட்டு எதாச்சும் குவிஜ் போட்டு தான் வரனும்...

said...

இதுவே ஒரு சரியான உப்புமா பதிவா போட்டா உப்புமாவின் சுவையை ரசித்துக் கொண்டே பின்னூட்டத்தில் அடித்து ஆட முடியும். இதுல இருந்தே தெரியவில்லை பின்னூட்டம் போடுவதற்கு உப்புமா பதிவு தான் அடித்தளம், அடிநாதம் என்று.

இது வரை அவரு போட்ட பதிவுகளை எடுத்து பாருங்க.. அதில் எத்தனை உப்புமா என்று பாருங்க.. அத்தனை உப்புமா பதிவிலும் பின்னூட்டக் கச்சேரி களைக் கட்டி இருக்கும். எப்படி எல்லாம் பதிவின் மகிமை. சும்மா எல்லாம் பின்னூட்டம் போட முடியாது. அதுக்கு ஒரு பிடிமானம் வேணும். அந்த பிடிமானம் தருவது தான் உப்புமா.

said...

என் வாதத்துக்கு வலு சேர்க்கும் விதமாக ஒரே ஒரு உதாரணத்தை சொல்லி முடிக்கிறேன்.

உப்புமா பதிவு போட்டு அந்த பதிவில் பின்னூட்டத்தில் அடித்து ஆடியதற்காக அவரை வாழ்த்தி பின்னூட்ட புயல் என்று பட்டத்தை வழங்கி கவுரப்படுத்தினோம்.

அதுவே அவர் உப்புமா பதிவை விட்டு ஒரு பதிவில் போய் வெறித்தனமாக பின்னூட்டத்தில் இறங்கி ஆடினார். பெற்ற பட்டம் என்னவென்று தெரியுமா?

MCP

இதுக்கு அர்த்தம் தெரியாதவங்க அவர் கிட்டவே கேட்டு தெரிஞ்சுக்கோங்க.

இதை எல்லாத்தையும் மனதில் வைத்து கொத்தனார் பதிவில் விஞ்சி நிற்பது உப்புமா சுவையே என்று தீர்ப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டு வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி கூறி விடைப்பெறுகிறேன்.

said...

வாழ்த்துக்கள் ஜெர்சி கண்ட பின்னூட்ட பதிவருக்கு.

said...

நூறு பதிவிட்டமைக்கு வாழ்த்துகள்.

பட்டிமன்றம் கலக்கல். சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்.

அடுத்த பதிவுக்குக் காத்திருக்கேன்.

said...

நூறுக்கு வாழ்த்துக்கள் தல :))

பட்டிமன்றம் கலக்கல் ;))

எங்கள் ஊர்க்காராருக்கு சிறப்பு வாழ்த்துக்கள் :))

said...

//மறுமொழியா? பின்னூட்டமா? பேரில் என்ன இருக்கு? ஆக வேண்டியதைப் பாருங்க//

இது என்ன புதுசா இருக்கு?? சரி கேள்வி எல்லாம் கேக்காம ஆக வேண்டியத பாக்கரேன்:)

100 க்கு வாழ்த்துக்கள்.....எனக்கென்னவோ உங்களோட உப்புமாவாலதான்......பின்னூட்ட வெறி உண்டாச்சுன்னு தோணுது....நான் உப்புமா சைட்.!!!

said...

//கொத்தனாரின் பதிவுகளில் விஞ்சி நிற்பது உப்புமாச்சுவையா அல்லது பின்னூட்ட வெறியா?//

ஹலோ... பி.க.வுக்கு எப்பங்க பின்னூட்ட வெறின்னு பேர் மாத்தினாங்க??

இம்மாம்பெரிய ஆளு நீங்க.. ஆப்டர் ஆல் 100 பதிவு தானா போட்டிருக்கீங்க? ஆச்சரியமா இருக்கே? இருந்தாலும்... வாழ்த்துக்கள் :-)

said...

தலை வாழ்த்துக்கள்!!!

said...

நூறு தடவ உப்புமா கிண்டுனாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமா கிண்டுற கொத்தனாருடைய பதிவில் உப்புமா சுவையே தூக்கல் என தீர்ப்பளிக்குமாறு நடுவர் அவர்களை கேட்டுக் கொள்கிறோம். :))

said...

இந்த பதிவில் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லாத மர்மம்.

பின்னூட்டங்களில் உப்புமாவை விட வெறி விஞ்சி இருக்கலாம். அந்த வெறியையும் விஞ்சும் விதமாக உங்கள் பதில் இருக்குமே.

said...

பட்டிமன்றம் சூப்பரா ஆரம்பிச்சிருக்கு... இதுக்கு பட்டிமன்றமே தேவையில்லை. பின்னூட்ட வெறி தான் வெற்றி பெரும் அணி.

said...

சதமானம் பவதி சதாயு புருஷ: என்றெல்லாம் வடமொழியில் வாழ்த்துவார்களே அது இதுக்குத் தானோ? நூற்றுக்கணக்கான பெருமைகள், நூற்றுக்கணக்கான ஆயுள் போல் நூற்றுக்கணக்கான இடுகைகள் இட்டு வாழ்வாங்கு வாழுங்கள் என்று நூறாவது இடுகையான இங்கு வந்து ரொம்ப லேட்டா வாழ்த்துறேன்.

மத்தபடி நாகை சிவா முதற்கொண்டு பலரும் சீறித் தள்ளிய பின்னூட்டங்களை எல்லாம் படித்து விட்டதால் நான் தனியாகச் சொல்ல ஒன்றுமில்லை. அடுத்த பகுதிகளையும் கூடிய விரைவில் படித்துவிடுகிறேன். :-)