Monday, December 03, 2007

கோதாவில் பின்னூட்டநாயகியும் உப்பு மாமாவும் - பட்டிமன்றம் பாகம் 2

சாலமன் பாப்பையா

விளம்பர இடைவேளை எல்லாம் முடிஞ்சு மீண்டும் நம்ம பட்டிமன்றத்திற்கு வரும் அனைவரையும் வரவேற்கிறேன். இப்போ முதலில் பேசப்போறது நம்ம பின்னூட்ட நாயகி துளசி ரீச்சர். வாங்கம்மா வாங்க.

துளசி ரீச்சர்

முதல்லே அனைவருக்கும் வணக்கம். உப்புமாவா, பின்னூட்டமா என்றதுதான் விவாதமுன்னா.........கொஞ்சம் நீங்களே யோசிங்க. உப்புமா...... ஹஹ்ஹஹா....... மறுநாளே ஊசிப்போயிரும். பின்னூட்டங்கள் அப்படியா? நாளாக ஆக மெருகு கூடுமேயன்றிக் குறையாது. இது புதுப்புதுக்கருத்துக்கள் ஊற்றுபோல பொங்கிவரும் ஆழ்கிணறு.

ஆழமா(??) எழுதும் பதிவர்களின் பதிவுகளில் பார்த்தீங்கன்னா.......பதிவையும் விடப் பின்னூட்டங்களிலே இருக்கும் கருத்துப் பரிமாற்றங்கள்(???) அதி'ரசமா' இ(னி)ருக்கும். பின்னூட்டம் வரலைன்னா கவலையே படாத பதிவர்கள் இருக்கலாம். ஆனால் (நல்ல) பின்னூட்டம் வந்ததால் மகிழ்ச்சி அடையாதவர்கள் இருக்கவே முடியாது. நம்ம பதிவுகள் நல்லதோ சொத்தையோ, மக்கள் அதைப் படிச்சிருக்காங்கன்றதுக்கு ஆதாரமே பின்னூட்டம்தான். அது கும்மியானாலும் சரி, கோலாட்டமானாலும் சரி.

பின்னூட்டங்களை மதித்து, அதுக்குப் பின்னூட்டங்களைப் போடறதுன்றது ஒரு கலை. எல்லாருக்கும் எளிதாக் கை வராத ஒரு கலை. 'வருகைக்கு நன்றி, கருத்துக்கு நன்றி'ன்னு சப்பையாப் பதில் சொல்லாம,ஆடற மாட்டுக்கு...அடடா ..... சரி. ஆடற பின்னூட்டத்துக்கு ஆடியும், பாடற பின்னூட்டத்துக்குப் பாடியும் பதில் சொல்லணும். எப்பப் பின்னூட்டங்கள் வருமுன்னே தெரியாத ஒரு நிலையில் கண் துஞ்சாமல் ( பதம் சரியா?) மெய் வருத்தம் பாராமல் உடனுக்குடன் அதுகளை 'மாடு விரட்டிப் பட்டியில்' அதாங்க பெட்டியில்...எந்தப் பெட்டியா? சரியாப்போச்சு விடியவிடிய ராமாயணம் கேட்ட கதைதான் போங்க....பின்னுட்டப்பெட்டியில் அடைச்சு, 'அதுக்குத் தண்ணி காமிக்கறது' லேசுப்பட்ட வேலையா?

பின்னூட்டத்துக்குப்போய் இவ்வளவு மெனெக்கெடணுமான்னு கேக்கறவங்க நெஞ்சுலே கை வச்சு யோசியுங்க. உங்களில் எத்தனைபேர் பின்னூட்டிட்டு, அது பப்ளிஷ் ஆச்சா ஆச்சான்னு போய்ப்போய் பார்த்து கவுண்ட்டரை ஏத்திக்கிட்டு இருந்தீங்க? ஆகலைன்னா என் பின்னூட்டத்துக்கு என்ன ஆச்சுன்ற எதிர்க்கேள்வி வேற....... இவ்வளோ என்னத்துக்கு? பப்ளிஷ் பட்டனை ஒரு முறைக்குப் பலமுறையா அழுத்தி ஒரே பின்னூட்டம் நாலைஞ்சுதடவை வெளிவர்றதைக் கவனிச்சிருப்பீங்கதானெ?

என்னவோ இப்ப ப்ளொக்கர் பகவான் அருளாலே பின்னூட்ஸ் எல்லாம் உங்க மெயில் பொட்டிக்கே வந்துருது. கவுண்(ட்)டரும் கம்னு கிடக்கார். உப்புமா ஒரு பூனைன்னா பின்னூட்டம் ஒரு யானை. பூனையைக் கவனிக்காமப்போறவங்க இருப்பாங்க. யானையைக் கவனிக்காம இருப்பாங்களா? இல்லே இருந்துற முடியுமா ? ஏன்? அதோட பிரமாண்டம் அப்படி!!!

எதைச்சொன்னாலும் எழுதுனாலும் 'எங்கே இதுக்குச் சான்று?'ன்னு கேக்கும் மக்கள்ஸ்க்கு இந்த இடத்தில் இன்னொண்னும் சொல்லிக்க ஆசைப்படறேன். பின்னுட்ட வெறிதான் என்பதற்கு சான்று வேணுமா ? இங்கே இந்தப் பட்டிமன்ற அறிவிப்புலேயே பாருங்கைய்யா..!!!! 'நான் உப்புமா, நானுப்புமா 'ன்னு உப்புமாக் கட்சியாளுங்கக்கூட அதைப் பின்னூட்டத்துலே வந்துதான் சொல்லிக்கிட்டு இருக்காங்க. பின்னூட்டங்களைக் கவனிச்சு, யார் யார் ஆதரவு தராங்கன்னுக் கவனிச்சுக்கிட்டே இருக்காங்கைய்யா....கவனிச்சுக்கிட்டே இருக்காங்க. இப்பப் புரிஞ்சிருக்குமே உங்களுக்கு எந்தச் சுவை மிகுதியா இருக்குன்னு (கடைசி வரியை சிவாஜி ஸ்டைலில்,நடிகர்திலகம் சிவாஜிய்யா படிக்கவும்.)

வெறும் நூறு பதிவுக்குப் ஆயிரக்கணக்கில் பின்னூட்டங்கள் வாங்கி இருப்பது வெறி என்று நீங்கள் நினைத்தால் அது வெறிதான். ஏன்? நாய்க்கு மட்டும்தான் வெறி பிடிக்கணுமா? மனுஷன் நாயைவிடக் கேவலமா? ஷாஜகானின் காதல் வெறிதான் இன்னிக்கு உலகம் முழுசும் வாயைப்பிளந்து 'ஆ'வெனப்பார்க்கும் அதிசயம். பணவெறி, நிறவெறின்னு வெறிகள் நிரம்பின உலகத்திலே என்
அருமை மாணவரான கொத்ஸின் பதிவுகளில் விஞ்சி....விஞ்யென்ன விஞ்சி?
மிஞ்சி இருப்பதும் பின்னூட்டவெறிதான் என்பதில் மிகவும் பெருமைகொண்ட ரீச்சருள்ளத்துடன் ( தாயுள்ளம் மாதிரி இது ஒரு உள்ளமுன்னு வச்சுக்குங்க) நூறு பதிவு கண்ட கொத்ஸ் நீடூழிவாழ்ந்து இன்னும் பலநூறு பதிவுகள் காணட்டுமென வாழ்த்துகின்றேன்.

வணக்கம்.


சாலமன் பாப்பையா

கும்மி ஆனாலும் சரி கோலாட்டமானாலும் சரி என பேசி பெண்கள் அனைவரையும் கவர்ந்துட்டாங்க துளசி. இவ்வளவு வெறித்தனமா பேசின இவங்களுக்குப் பதில் சொல்ல வராரு உப்பு மாமா அப்படின்னு எல்லாரும் செல்லமா கூப்பிடற வலைமாமணி பெனாத்தலார் அவர்கள். வாங்கய்யா வந்து ப்ளாஷுங்க, ச்சீ விளாசுங்க.

பினாத்தல் சுரேஷ்


ஊசிப்போவதுதான் உப்புமா என்ற சமையலறைக் கண்ணோட்டத்தோடு மட்டும் பார்க்கும் மதிப்பிற்குறிய ரீச்சர் அக்கா, உப்புமா என்பது என்போன்ற, கொத்ஸ் போன்ற பதிவர்களின் ஜீவனோபாயம் என்பதை முதற்கண் புரிந்து கொள்ளுங்கள்!

உப்புமா என்பது பதிவிடுதல் மட்டுமே, வெறி அல்ல என்ற பார்வையிலிருந்து வெளியே வாருங்கள். உப்புமாவும் ஒருவகை வெறிதான்! பின்னூட்டத்துக்கு அல்ல, ஹிட்டுக்கு வெறி.

சூடான தலைப்பை ஒட்டி வெட்டிப் போடுவது, நாலணா பெறாத மேட்டரை முதல் நாலு வரிகளில் பில்ட் அப் கொடுத்து ஊதிப் பெரிதாக்குவது, வலைப்பதிவர்களின் பெயர்களைத் தலைப்பில் வைத்து அனைவரையும் ஆசைகாட்டுவது, நன்றி என உணர்ச்சிவசப்பட்டு தலைப்பு கொடுத்து உள்ளே போய்ப் பார்த்தால் "டிக்கெட் காசு போக நாலணா திருப்பிக் கொடுத்த பேருந்து நடத்துனருக்கு நன்றி" என்று ஏமாற்றுவது, விடைபெறுகிறேன் என்ற தலைப்பில் "ஆஹா தமிழ் வலைப்பதிவுகளுக்கு வந்ததடா நல்ல காலம்" என்று நினைத்துக்கொண்டு உள்ளே போனால் அல்பமாய் குவிஸ் வைத்து விடை கேட்பது.. இதுதான் உப்புமா.. இப்படிப்பட்ட பதிவுகள் இல்லாவிட்டால் கொத்ஸின் பதிவுகள் பூரிபோல் நூறாக உப்புமா? நேர்மையானவர் பார்வையில் இப்பதிவுகள் தப்புமா? இப்படி பதிவு போடாவிட்டால் பின்னூட்டங்கள் அவர் மெயிலை ரொப்புமா?

தமிழ்மணத்தில் பின்னூட்ட உயரெல்லை என ஒரு கருத்தாக்கத்தைக் கொண்டுவந்தபோது முதலில் கலங்கக்கூடிய ஆள் என எல்லாரும் நினைத்தவர் கொத்ஸ்.. ஆனால் தன் உப்புமாமேல் உள்ள நம்பிக்கையால் பின்னூட்டம் வந்தாலென்ன, முகப்பைவிட்டுப் போனாலென்ன என தன்கடன் உப்புமா செய்து கிடப்பதே என்று கருமமே கண்ணானார் நம் கொத்ஸ். இதிலிருந்தே தெரியவில்லையா அவருக்கு இருப்பது பின்னூட்டவெறியல்ல, உப்புமா வெறிதான் என்பது?

இவருடைய உப்புமா வரலாறை சற்றே திரும்பிப் பார்ப்போம். இவருடைய பதிவுகளில் முதல்முதலாக பேசப்பட்ட பதிவு "போலி டோண்டுவும் மறுமொழி மட்டுறுத்தலும்".. அன்றல்ல இன்றல்ல, என்றும் தமிழ் வலைப்பதிவுகளில் ஹிட் வாங்கித் தரக்கூடிய முக்கியமான் குறிச்சொல் டோண்டு - திட்டினாலும் படிப்பார்கள், வாழ்த்தினாலும் படிப்பார்கள். அதுவும் கூட போலி சேர்ந்தால் - தமிழ்மணம் படிப்பவர்களுக்கு அடுத்த நொடி க்ளிக்காவிட்டால் வலிப்பே வந்துவிடும். ஆனால் எல்லாருமே பின்னூட்டம் போட அஞ்சும் களம் இஃது! பின்னூட்ட வெறியா இப்படி ஒரு பதிவிடச் சொல்லும்? இத்துடன் அன்றைய ஹாட் டாபிக்கான மறுமொழி மட்டுறுத்தலையும் சேர்த்தது ஹிட்டுக்கு மண் சுமக்கும் வெறி அன்றி வேறு என்ன? உப்புமா இலக்கணம் மீறாமல், பதிவுக்குள் இவற்றைப் பற்றி ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை! இந்த தரமான உப்புமாவுக்குக் கிடைத்த பரிசுதான் 400க்கு மேல் பின்னூட்டங்கள்.

நீங்கள் சொல்கிறீர்கள்,

// உங்களில் எத்தனைபேர் பின்னூட்டிட்டு , அது பப்ளிஷ் ஆச்சா ஆச்சான்னு போய்ப்போய் பார்த்து கவுண்ட்டரை ஏத்திக்கிட்டு இருந்தீங்க ? ஆகலைன்னா என் பின்னூட்டத்துக்கு என்ன ஆச்சுன்ற எதிர்க்கேள்வி வேற ....... // என்று.

ஏன் அவர் உடனடியாக பப்ளிஷ் செய்வதில்லை? ஏனென்றால் உப்புமாக்கலையை - ஹிட் வெறியை ஒரு விஞ்ஞானமாகப் பயின்றவர் கொத்ஸ். உடனே வெளியிட்டு உடனே பதில் சொன்னால் ஒரு ஹிட், நேரம் பார்த்து வெளியிட்டு (அமெரிக்க நேரம், அமீரக நேரம், இந்திய நேரம் இங்கிலாந்து நேரம் - எல்லாம் கொத்ஸுக்கு அத்துபடி) அதில் ஒரு 100 ஹிட் பார்த்து, பிறகு இன்னொரு நேரம் பார்த்து பதில் சொல்லி இன்னொரு 100 ஹிட் பார்ப்பது பின்னூட்ட வெறியா ஹிட் வெறியா?

வெறும் வெண்பாப் பதிவிலும் குமரன் என்ற சகவலைப்பதிவரை இழுப்பது, நன்றி, விடைபெறுகிறேன், தமிழ்மணத்தில் 33% ஒதுக்கீடு, ஈழ நண்பர்களுக்கு கேள்வி, விளிம்புநிலை மாந்தர்களும் ஊடகச் சார்புநிலைகளும் (அவருக்காவது புரிஞ்சிச்சா இந்தத் தலைப்பு?) க்ரீமி லேயரை ஏன் தூக்கணும்?, கமலின் வலி எனக்குப் புரிகிறது, துளசி டீச்சருக்கு சமர்ப்பணம், சர்வைவல் ஆப் பிட்னஸ் என்று எல்லா நேரங்களிலும் வைத்த தலைப்புகளிலேயே தெரிகிறதே இவருடைய உப்புமா வெறி?

சான்று சான்றுன்னு சலம்பிகிட்டிருக்காய்ங்களே துளசி அக்கா, சாதா பதிவரெல்லாம் 100ஆவது பதிவுன்னா என்ன பண்ணுவாங்க? "வணக்கம், இது என் நூறாவது பதிவு"ன்னு ஒரு லைன் மேட்டர் எழுதி, அதுக்கு நன்றி நன்றின்னு ஒரு டைட்டிலைக் கொடுத்தாலே போதும், 100க்கு வாழ்த்து, வாழ்த்த வயதில்லை, திட்ட திடமில்லைன்னு கும்மி, உங்கள் சேவை நாட்டுக்குத் தேவைன்னு ஆதரவு, வரிக்கு வரி உடன்படுகிறேன், படிச்சிட்டு வந்து பதில் சொல்றேன் (எழுதினதே ஒரு வரி) அப்படி இப்படின்னு 100 பின்னூட்டம் தேத்திடலாமே, பின்னூட்டவெறியா இருந்தா அதானே பண்ணியிருப்பாரு கொத்ஸும்? ஆனா என்ன பண்ணாரு? அவரு தன்னோட உப்புமா பாசத்தைக் காட்டினாரு, டைட்டில்லே என்னன்னு புரியாம மையமா எதையோ எழுதினாரு, வர ஆளுங்களை ரிப்பீட் ஆடியன்ஸ் ஆக்க பின்னூட்டத்துலயும் விடாம உப்புமா கிண்டிகிட்டே இருக்காரு.. இது எதுக்கு சான்றுன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாக்க வாணாம்?

நட்சத்திர வாரத்திலும் விடாமல் உப்புமா கிண்டிய கொத்தனாருக்கு பின்னூட்டவெறியை தாராளமாக, ஏராளமாக விஞ்சி இருப்பது ஹிட் வெறியே - உப்புமாச் சுவையே என்று ஆணித்தரமாக, போல்டுத் தரமாக, ஸ்க்ரூத் தரமாகக் கூறி வாய்ப்புக்கு நன்றிசொல்லி கிண்டுகிறேன், நன்றி வணக்கம்.


சாலமன் பாப்பையா


உப்புமா இது தப்புமான்னு நினைச்சேன். ஆனா சும்மா கிண்டி எடுத்துட்டீரே. ஆணி, போல்ட்டு, நட்டு, ஸ்க்ரூ அப்படின்னு ஒரு ஹார்ட்வேர் ஸ்டோரே திறந்துட்டாரு பெனாத்தலார். இதுக்கு எந்த மாதிரி ஆயுதங்களை வெச்சு பதில் சொல்லப் போறாரு நம்ம தேவ் அப்படின்னு பார்க்கலாம். அவரு வர வரையில் பார்வையாளர்கள் நீங்கள் எல்லாரும் உங்க வாதங்களை எடுத்து வையுங்க.


(தொடரும்)

46 comments:

said...

வாங்க மக்கள்ஸ், நீங்களும் துளசி ரீச்சர் அணியிலோ, பெனாத்தலார் அணியிலோ சேர்ந்து உங்க பக்க வாதங்களை எடுத்து வையுங்க!

said...

மக்களுக்கெல்லாம் DIY ஆசை இருக்குன்னு ஒரு ஹார்ட் வேர் ஸ்டோர்ஸ் திறந்துருக்காரு பினாத்தலார்:-)

said...

நாங்க எல்லாரும் பாப்பையா அணிதான்.

இலவச அரசன் இருபத்தி ஏழாம் (நம்பர் கரெக்டா?) பின்னூட்டகேசின்னு பட்டம் வாங்கின கொத்தனார், பின்னூட்டங்கள பாங்காக, பரவலாக, பரபரவென்று அள்ளுவதில் குறியாக இருந்தாலும்... வெண்பா, விக்கி பசங்க, குயி... குயி... குயிஜு...ன்னு, அட்லாஸ் வாலிபர் இப்படின்னு பல்சுவை உப்புமாக்களை கிண்டி கொடுப்பதில் மன்னன் என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

அதனால்... பின்னூட்ட கேசரி, உப்புமா வேந்தன், மொக்கை மாமன்னன் என்றெல்லாம் பாராட்டபடும் கொத்தனாரின் பதிவில் உப்புமா சுவையும், பின்னூட்டத்தில் கொத்சு (அவருடைய ட்ரேட்மார்க்) சுவையும் விஞ்சி நிற்கின்றன என்று சொல்லி இன்னும் பல காலம் பல பதிவுகள் கிண்டி கிளறி தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு தொண்டாற்றுமாறு வேண்டி விடை பெறுகிறேன். வணக்கம்.

said...

பின்னூட்ட கேசரி, உப்புமா வேந்தன், மொக்கை மாமன்னன் என்றெல்லாம் பாராட்டபடும் கொத்தனாரின் பதிவில் உப்புமா சுவையும், பின்னூட்டத்தில் கொத்சு (அவருடைய ட்ரேட்மார்க்) சுவையும் விஞ்சி நிற்கின்றன என்று சொல்லி இன்னும் பல காலம் பல பதிவுகள் கிண்டி கிளறி தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு தொண்டாற்றுமாறு வேண்டி விடை பெறுகிறேன். வணக்கம்.

ஸ்ரீதர் வெங்கட், ரிப்பீஈட்ட்ட்டேஏஏஏஏ

said...

மன்றத்தின் அன்பு சகோதரா வெங்கட்.. நம் தலைவரின் பின்னூட்ட புரட்சி திரைக்காவியமாகப் பதியப் பட்டிருப்பதை உலகுக்கு எடுத்துக்காட்ட ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறாய்..

பின்னூட்டக் கேசி என நம் தலைவர் அழைக்கப்பட காரணமான வரலாறு இதோ இந்தச் சுட்டியில் இடம் பெற்றுள்ளது.. பாருங்கள்

http://chennaicutchery.blogspot.com/2006/07/23.html

said...

//நாங்க எல்லாரும் பாப்பையா அணிதான்.//
அதே!!! அதே!!!

அவர் உப்புமா கிண்டுவதிலும் வல்லவர்

அதே சமயம் "பின்(மற்றவருக்கு)ஊட்டி" விடுவதிலும் வல்லவர்


இதில் எந்த "பாத்திரத்தை" பாராட்டுவது என‌
(அவர் ஊட்டிய உப்புமாவின் மயக்கத்தால்) புரியவில்லை

said...

ஒரு சந்தேகம் பட்டிமன்றத்திலே இதையும் தெளிவு படுத்தவும்.

இந்த 2ம் பாகம் 100வது பதிவா? 101வது பதிவா?

சொல்லமுடியாது தலைவர் இந்த தலைப்பிலே தனி பதிவாக உப்புமா கிண்டினாலும் கிண்டுவார்

said...

சமிபகாலங்களில் தான் கொத்ஸ் பதிவுகளை படிக்கிறேன்...அதனால வெங்கட் சொன்னது போல நானும் பாப்பையா அணிதான்.

said...

சபாஷ்! சரியான போட்டி!

உப்புமா கட்சி வாழ்க!

said...

அக்கா, DIYக்காவது உதவுது எங்க வாதம்!

said...

:):):):):):):):):):)
:):):):):):):):):):)
:):):):):):):):):):)
:):):):):):):):):):)
:):):):):):):):):):)
:):):):):):):):):):)
:):):):):):):):):):)
:):):):):):):):):):)
:):):):):):):):):):)
:):):):):):):):):):)

said...

வரிக்கு வரி

வார்த்தைக்கு வார்த்தை

எழுத்துக்கு எழுத்து

உப்புமா வேந்தன் பெனாத்தலார்வுடன் உடன்படுகிறேன்

said...

பின்னூட்ட நாயகி என்ற பெயர் காரணத்தால் உப்புமாவுக்கு எதிராக திருப்பலாமா ரீச்சர் அவர்களே!

அந்த பட்டமே உப்புமா பதிவுகளுக்கு எல்லாம் நீங்க இட்ட பின்னூட்டத்தினால் தானே கிடைத்தது.

அதை மறக்கலாமா?, மறைக்கலாமா?

said...

நான் உப்புமா கட்சிதான்.

//உப்புமாச் சுவையே என்று ஆணித்தரமாக, போல்டுத் தரமாக, ஸ்க்ரூத் தரமாகக் கூறி வாய்ப்புக்கு நன்றிசொல்லி கிண்டுகிறேன், நன்றி வணக்கம்.//
தான் ஒரு இயந்திரவியல் பேராசிரியர் என்பதை எப்படிக் கடப்பாரைத் தனமாக சொல்லுகிறார் பாருங்கள் பெனாத்தலார். ஆனாலும் கொஞ்சம் தமிழில் தகராறு போலிருக்கிறது, போல்ட்டு என்பதில் ஒரு இட் விட்டுவிட்டார்.

said...

வாழ்த்துக்கள் தல! :))

உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா என்ற கபிலனின் திரைப்பாடல் தான் நினைவுக்கு வருகிறது என்பதை இந்த நேரத்திலே கூறிக்கொள்ள கடமை பட்டிருக்கிறேன்..அடிபட்டிருக்கிறேன்..உதைபட்டிருக்கிறேன்!

said...

கொத்தனாரின் கொலைவெறி

said...

போட்டி பெரும் போட்டியா இருக்குதய்யா. ஆனா யாரு வெற்றி பெறும் போட்டின்னுதான் தெரியலை.

பின்னூட்டம் வலக்கண்ணா இருந்தா உப்புமா இடக்கண்ணுன்னு இருக்கீங்க நீங்க. இருகண்ணுல ஒருகண்ணுன்னு எப்படிச் சொல்றது. போட்டி முடிவுக்காக காத்திங். ஆனா பதினாலு பின்னூட்டந்தான வந்திருக்கு. உப்புமா வேகலையோ? இல்ல..பின்னூட்டப் பெருமைய புரிய வைக்கிறாங்களோ?

said...

ROFL post!!!
ரொம்பவே ரசிச்சு சிரிச்சு படிச்சேன்!!

தொடருங்க சீக்கிரம்.ஆவலுடம் வெயிட்டிங்!! :-D

said...

கொத்சு

ப.ம.கல செல்வாக்கை நிருபிக்க இப்படி எல்லாம் சதி செய்யறீங்கன்னு ஒரு தகவல் வந்துச்சு.பட்டிமண்டபம்,பேரணி எல்லாம் நடத்தி ரஷ்யா ராம்ஸ் இடத்தை பிடிக்க திட்டம்னு சொல்றாங்க, உண்மையா:-))

said...

பட்டிமன்றம் கலக்கல்...அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்..;)

(இப்படி கூட பின்னூட்டம் போட்டு எஸ் ஆகிடலாம்)

said...

//மக்களுக்கெல்லாம் DIY ஆசை இருக்குன்னு ஒரு ஹார்ட் வேர் ஸ்டோர்ஸ் திறந்துருக்காரு பினாத்தலார்:-)//

என்னதான் எதிர் அணியாக இருந்தாலும் இப்படி பிலோ தி பெல்ட் தாக்குதல் எல்லாம் சரி இல்லை ரீச்சர்!! (நாங்க எல்லாம் ஆசை இருந்தா DIY செய்யறோம்? வேற வழி இல்லை ரீச்சர். இதெல்லாம், கல்யாணம் கட்டிக்கிற மாதிரி Necessary Evil!!) :))

said...

//நாங்க எல்லாரும் பாப்பையா அணிதான்.//

இதப் பாருடா. எல்லாருக்கும் நடுவராக ஆசை வந்திருச்சு!! ஸ்ரீதர், இந்த மாதிரி எல்லாம் இருந்தா அப்புறம் நடுநிலமைவியாதி ஆகிடுவீங்க. அப்புறம் நீங்க சாதாரணமா எதாவது சொன்னாக் கூட கலர் கிளாஸ் போட்டுப் பார்த்து முத்திரை குத்திடுவாங்க.

//பல பதிவுகள் கிண்டி கிளறி தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு தொண்டாற்றுமாறு வேண்டி விடை பெறுகிறேன். //

நான் என்னத்த கிண்டறேனோ தெரியலை. உம்மை ஒரு கட்சிக்குப் பேசச் சொன்னா அங்கயும் இல்லாம இங்கயும் இல்லாம நல்லா அல்வா கிண்டி இருக்கீரு!

said...

//ஸ்ரீதர் வெங்கட், ரிப்பீஈட்ட்ட்டேஏஏஏஏ//

அவராவது புது அல்வா கிண்டினாரு. இந்த கீதாம்மா என்னடான்னா டேஸ்டுக்குக் குடுத்த அல்வாவை வெச்சு தனிக்கடையே போடறாங்க. என்ன அநியாயமா இருக்கு!!

said...

//பின்னூட்டக் கேசி என நம் தலைவர் அழைக்கப்பட காரணமான வரலாறு இதோ இந்தச் சுட்டியில் இடம் பெற்றுள்ளது.. பாருங்கள்

http://chennaicutchery.blogspot.com/2006/07/23.html//

அடங்கொக்கமக்கா, இந்த கேப்புலேயும் புகுந்து கச்சேரிக்குப் போஸ்டர் ஒட்டறாம்பா. அட நீதாம்பா காரியத்துல கண்ணா இருக்கிற தாண்டவக்கோனு...

said...

//இதில் எந்த "பாத்திரத்தை" பாராட்டுவது என‌
(அவர் ஊட்டிய உப்புமாவின் மயக்கத்தால்) புரியவில்லை//

நல்ல வேளை சட்டியில் இருந்தால்தானேன்னு கேட்காம விட்டீங்களே. வாங்க சீனு!!

said...

//சமிபகாலங்களில் தான் கொத்ஸ் பதிவுகளை படிக்கிறேன்...அதனால வெங்கட் சொன்னது போல நானும் பாப்பையா அணிதான்.//

இங்க பாருடா!! என்ன மதுரையம்பதி, அரியர்ஸ் எக்ஸாமுக்கு சிலபஸ் தந்திடலாமா? :)

said...

//சபாஷ்! சரியான போட்டி!

உப்புமா கட்சி வாழ்க!//

என்னதான் சரியான போட்டியாக இருந்தாலும் ஒரு கட்சியை மட்டும் வாழ்க எனச் சொல்லி பாசத்தைக் காண்பித்த பாசமலருக்கு என் நன்றிகள்!

said...

//அங்கயும் இல்லாம இங்கயும் இல்லாம//

அதானே பட்டிமன்ற நடுவர் ஸ்ஸ்ஸ்டைல்.

//நான் என்னத்த கிண்டறேனோ தெரியலை.//

தேவ் அண்ணா.... பாருங்க உங்க கட்சிக்கு சரியான பாயிண்ட்.

பதிவுல என்னத்த கிண்டறோம்னு கூட தெரியாம கிறுக்கிகிட்டிருக்கார்... ஆனா பின்னூட்டத்துல எல்லாரையும் கிண்டி கிழங்கெடுத்து, பின்னி பெடலெடுத்திட்டிருக்காரு அப்படின்னு பிட்ட போடுங்கண்ணா.

டாக்டர் சார் எப்பவும் முடிச்சு முடிச்சா போட்டு யாருக்கும் விளங்காமத்தான் பேசுவாரு :-)) (அவங்க கட்சிக்காரங்களுக்கு என்னவாவது விளங்கும்.)

விடாதீங்க.... அமுக்குங்க அப்படியே :-))))

said...

//அக்கா, DIYக்காவது உதவுது எங்க வாதம்!//

யோவ் உப்புமாவுக்கு வாதாடச் சொன்னா இந்த மாதிரி DIYக்கு வாதாட வந்துட்டீரு? இதுக்குத்தான்யா சொல்லறது இந்த மாதிரி ஸ்பேர் பார்ட்ஸ் ஆளுங்களைக் கூப்பிடக்கூடாதுன்னு!!

said...

//மங்களூர் சிவா said...

:):):):):):):):):):)
:):):):):):):):):):)
:):):):):):):):):):)
:):):):):):):):):):)
:):):):):):):):):):)
:):):):):):):):):):)
:):):):):):):):):):)
:):):):):):):):):):)
:):):):):):):):):):)
:):):):):):):):):):)
//

யய்யா ராசா, நூறு பதிவுக்கு நூறு சிரிப்பானைப் போட்டுட்டீரு. எதோ கொஞ்சம் சீரியஸான பதிவும் எழுதி இருக்கோமேய்யா. இப்படி தராதரம் இல்லாம எல்லாத்துக்கும் சிரிச்சு நம்மளை காமெடியனாக்கிட்டீங்களே!! இனி சீரியஸ் பதிவு போட்டா இது சீரியஸ் பதிவுன்னு டிஸ்கி போடும் அளவுக்கு நம்மளைக் கொண்டு வந்துட்டீங்களே!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((

said...

உப்புமா அனித்தலைவர் அகடவிகடகமாக சப்பைக்கட்டு கட்டி எல்லாரையும் உப்புமா தின்ன வைக்க முயற்சி செய்தாலும்,
பின் ஊட்டி விட இத்தனை ஆட்கள் வந்ததில் இருந்தே தெரியவில்லையா, கொத்ஸின் பின்னூட்டவெறி.!!

ரீச்சர் சொன்னது போல அதுதான் விஞ்சி நிற்கிறது என்பதை ஆணித்தரமாக, ஸ்க்ரூத்தரமாக, போல்ட்தரமாக, நட்டுத்தரமாக [பெனாத்தலாருக்கு மட்டும் தான்கடை போடத் தெரியுமா என்ன!:)) நாங்களும்போடுவோமில்ல!] சொல்லிக் கொள்ள ஆசைப்படும் நேரத்தில்.......

சரி தேவ் சொல்றதைக் கேட்டுட்டு மீதியை சொல்றேன்1
:))

said...

//வரிக்கு வரி

வார்த்தைக்கு வார்த்தை

எழுத்துக்கு எழுத்து

உப்புமா வேந்தன் பெனாத்தலார்வுடன் உடன்படுகிறேன்//

அதான் நேத்தே எல்லாம் சொல்லிட்டீரே. உம்ம அணி சார்பு நல்லாவே தெரியுது!!

said...

//பின்னூட்ட நாயகி என்ற பெயர் காரணத்தால் உப்புமாவுக்கு எதிராக திருப்பலாமா ரீச்சர் அவர்களே!

அந்த பட்டமே உப்புமா பதிவுகளுக்கு எல்லாம் நீங்க இட்ட பின்னூட்டத்தினால் தானே கிடைத்தது.//

ரீச்சர், ஓவர்டு யூ!!

said...

//நான் உப்புமா கட்சிதான்.//

ஓகை, நேத்து எல்லாரும் அந்தப் பக்கம் பேசினாங்க. இன்னிக்கு இந்தப் பக்கம் காத்தடிக்குது போல!

//ஆனாலும் கொஞ்சம் தமிழில் தகராறு போலிருக்கிறது, போல்ட்டு என்பதில் ஒரு இட் விட்டுவிட்டார்.//

கொஞ்சம் போல்டாவே சொல்லிட்டார் போல தெரியுது!! :))

said...

//வாழ்த்துக்கள் தல! :))//

நன்றி தல.

//கடமை பட்டிருக்கிறேன்..அடிபட்டிருக்கிறேன்..உதைபட்டிருக்கிறேன்!//

கப்பி, உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா? சொல்லவே இல்லையே!! :))

said...

//பெளர்ணமி பாண்டியன் said...

கொத்தனாரின் கொலைவெறி
//

உமக்கு அங்க சொன்ன பதில்தான்.

முதலில் நம்மளை வெச்சு நமக்கு அலர்ஜியான கவுஜ எழுதியதுக்குக் கண்டனம்.

ரெண்டாவது உம்ம கனவை நீர் காண்பதற்கு முன்னமே நிறைவேற்றி வைத்திருக்கிறேன். பார்க்கவும்.

மூன்றாவது மே மாசம் ஒரு பதிவு போட்டுட்டு சும்மா இருந்த உம்மை எழுந்து ஒரு பதிவு போட வெச்சதுக்காவது நம்ம பட்டிமன்றம் உபயோகப்பட்டத நினைச்சா சந்தோஷமா இருக்கு.

நாலாவது

//தமிழை இணையத்தில் முன்னெடுத்துச்
செல்ல வேண்டிய
கொத்ஸ//

யப்பா ராசா, இந்த முன்னெடுத்துச் செல்வது, அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது, முன்னோடியா இருப்பது - இதுக்கெல்லாம் நிறையா ஆளுங்க இருக்காங்க. நாம எல்லாம் சும்மா பொழுது போகாம வலைப்பதிய வந்தவங்க. இப்படி எல்லாம் ஏன்யா ஏத்திவிட்டு அடிவாங்க வைக்கலாமுன்னு ஐடியா? வேணாம் ராசா. விட்டுடு.

said...

//போட்டி பெரும் போட்டியா இருக்குதய்யா. ஆனா யாரு வெற்றி பெறும் போட்டின்னுதான் தெரியலை.//

இன்னும் தேவ் பேசணும் அப்புறம் டாக்டர் பேசணும் அவங்க பேசும் போது நம்ம ஆளுங்க எல்லாம் வந்து பின்னூட்டத்தில் அவங்க தரப்பு வாதங்களை வைக்கணும்.

இதை எல்லாத்தையும் பார்த்துட்டு சில பழைய ஜோக்குக்களோட பாப்பையா கொஞ்ச நேரம் பேசணும். அப்புறம்தானேய்யா தீர்ப்பு. அது வரை யாரு வெற்றி பெறப் போறாங்கன்னு நமக்கும் தெரியாது இல்ல.

//பின்னூட்டம் வலக்கண்ணா இருந்தா உப்புமா இடக்கண்ணுன்னு இருக்கீங்க நீங்க. இருகண்ணுல ஒருகண்ணுன்னு எப்படிச் சொல்றது.//

யாருய்யா இந்தப் பையன், நம்ம டயலாக் எல்லாம் சொல்லறான் அப்படின்னு பாப்பையா கேட்கறாருங்க.

//ஆனா பதினாலு பின்னூட்டந்தான வந்திருக்கு. உப்புமா வேகலையோ? இல்ல..பின்னூட்டப் பெருமைய புரிய வைக்கிறாங்களோ?//

ஆஹா அதான் மேட்டரா? நான் என்னமோ உடனே பதில் சொல்லாததுனாலேயா அல்லது பதிவின் நீளத்துனாலேயான்னு என்னென்னமோ யோசிச்சுக்கிட்டு இருந்தேன். நீங்க சொல்லறதும் பாயிண்டுதான். எல்லா அந்த தேவ் செய்யற வேலையாத்தான் இருக்கும்.

said...

//ROFL post!!!
ரொம்பவே ரசிச்சு சிரிச்சு படிச்சேன்!!//

அப்பாடா, ஒருத்தர் படிச்சேன்னு சொல்லிட்டாரப்பா. ரொம்ப நன்றிங்க. ஆனா ஒண்ணு. இந்த மாதிரி கண்டதைப் படிச்சு உடம்பைக் கெடுத்துக்காதீங்க. :))

//தொடருங்க சீக்கிரம்.ஆவலுடம் வெயிட்டிங்!! :-D//

நானும்தான். தேவ் சீக்கிரம் வாங்க! :))

said...

//பட்டிமன்றம் கலக்கல்...அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்..;)

(இப்படி கூட பின்னூட்டம் போட்டு எஸ் ஆகிடலாம்)//

வாங்க கோபி, இப்போ எஸ் ஆனா பரவாயில்லை. அடுத்த பதிவு போட நேரம் வந்தாச்சே!! அங்க சரியா வந்திடுங்க!

said...

//ரஷ்யா ராம்ஸ் இடத்தை பிடிக்க திட்டம்னு சொல்றாங்க, உண்மையா:-))//

அட செல்வன் அடிப்படை அரசியலே தெரியாம இருக்கீங்களே.

கட்சியில் ப்ரமோஷன் வாங்கணமுன்னா தலைவரை வாழ்த்திப் போஸ்டர் அடிக்கணும். அட்லீஸ்ட் அவரோட வாரிசுகள் போட்டோ எல்லாம் போட்டு புப்புனித நீராட்டு விழாவிற்கு வருகை தரும் அண்ணன் / அண்ணி / மதனி அவர்களை.... அப்படின்னு ஏற்பாடு செய்யணும்.

சரி அப்படியே பட்டிமன்றம் வெச்சாக்கூட தலைவரின் கண்களில் தெரிவது பாசமா? கருணையா? என்றது போன்ற தலைப்புகளில் வைக்கணும். சந்திரனே, சூரியனே அப்படின்னு எல்லாம் சொல்லி கூடவே மானே தேனே பொன்மானே இதெல்லாம் போட்டு ஒரு கவியரங்கம் வைக்கணும். தொட்டுக்க குத்தாட்டம் போடறவங்களைக் கூட்டிக்கிட்டு வந்து தலைவர் முன்னாடி...

.... குத்தாட்டம் போட வைக்கணமுன்னு சொன்னேன்யா, அதுக்குள்ள முந்திரிக் கொட்டை மாதிரி எதையாவது சொல்லிக்கிட்டு. இதையெல்லாம் விட்டுட்டு அப்பாவியா நான் 100 அப்படின்னு சொன்ன உடனே கவியரங்கம் வைக்கலாமா, கட் அவுட் வைக்கலாமா, தங்கத்துல வாள் தரலாமா வேல் தரலாமான்னு கிளம்பின பெனத்தலையும் தேவையும் நிறுத்தி இந்த பட்டிமன்றம் போதும் என சொல்வதற்குள் நான் பட்ட கஷ்டம் எனக்கில்ல தெரியும்!

நீர் இன்னும் அரசியல் அரிச்சுவடியே படிக்கலை போல!

said...

//அதானே பட்டிமன்ற நடுவர் ஸ்ஸ்ஸ்டைல்.//

நீர் நடுவராய்யா?

தேவுக்குப் பாயிண்ட் எல்லாம் நல்லாத்தேன் எடுத்துக் குடுக்கறீரு. கடைசியில் என்ன ஆவுதுன்னு பார்க்கலாம்.

said...

//ஆணித்தரமாக, ஸ்க்ரூத்தரமாக, போல்ட்தரமாக, நட்டுத்தரமாக [பெனாத்தலாருக்கு மட்டும் தான்கடை போடத் தெரியுமா என்ன!:)) நாங்களும்போடுவோமில்ல!]//

நீங்க ஸ்க்ரூத்தனமாக, ப்ளேட்தனமாக, ஸ்டெத்தனமாக, தர்மாமீட்டர்தனமாக இல்லையா கடை போடணும். இது என்ன தொழிலை மாத்தீட்டீங்க? :))

//சரி தேவ் சொல்றதைக் கேட்டுட்டு மீதியை சொல்றேன்1
:))//

அவரையும் கேளுங்க நம்ம இராம்ஸையும் மறக்காம கேளுங்க. அப்புறமா ஒரு முடிவுக்கு வருவோம். என்ன சொல்லறீங்க?

said...

செல்வன் அவர்களே.. இது தலைவரின் இலக்கிய வாழ்க்கை குறித்த விழா இதில் பமக அரசியல் கலக்க வேண்டாம் என எச்சரிக்கிறேன்....

said...

கொத்சு

நீங்க ஆயிரம்தான் சொன்னாலும் தலைவர் ராம்ஸ் நூறுபதிவை எல்லாம் தாண்டியும் அதை கொண்டாடாமல் கமுக்கமாக இருக்கும்போது நீர் மட்டும் இப்படி பட்டிமண்டபம், வெற்றி விழான்னு கொண்டாட்டம் நடத்துவதை பார்த்தால் தலைவரின் இடத்தை பிடிக்க சதி செய்வது போல்தான் தெரிகிறது.போதாகுறைக்கு குத்தாட்டம் வேற வேணும்னு கழக கண்மணிகள் கிட்ட ஜாடை மாடையா சொல்லிருக்கீங்க...சரி,அதெல்லாம் உங்க உள்கட்சி விவகாரம்..நமக்கெதுக்கு வம்பு.தேவ் வேற கடும்கோபத்தில் இருக்கார்:-)).அதனால் பட்டிமண்டபத்துல கலந்து ஒரு ரவுண்டு அடிக்கலாம்....முதலிலிருந்து படிச்சுட்டு வந்து கோதாவில் குதிச்சுடறேன்

said...

என்ன தான் செல்வன் பின் வாங்கினாலும் ஊசி வாங்கினாலும் ஆணி வாங்கினாலும் எனக்கென்னவோ இதுல ப.ம.க. உட்ட்ட்கட்ட்ட்சி அரசியல் இருக்குன்னு தான் தோணுது. பார்க்கலாம். இராம்ஸ் என்ன சொல்லியிருக்காருன்னு. அப்ப தெரிஞ்சு போகும் இந்த கட்சி அரசியல் என்னன்னு. ஆமா. ப.ம.க. எப்ப உப்புமா கட்சியாச்சு? எப்பவுமே உப்புமா கட்சி தானோ? நான் தான் கவனிக்கலையா? பெனாத்தலாரும் அந்தக் கட்சி தானே? கண்ணை மூடி கண்ணைத் திறக்குறதுக்குள்ளே என்ன என்னமோ நடக்குது இங்க. ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போலிருக்கு.

செல்வன். நம்ம கட்சி என்னாச்சு? இன்னும் உசுரோட தானே இருக்கு? ஆல் இன் ஆலா நீங்க நடத்துன கட்சியை காணாம அடிச்சுராதீங்க. நான் ரொம்ப வருத்தப்படுவேன்.

said...

உப்புமா கட்சியும் பின்னூட்ட வெறி கட்சியும் நல்ல நல்ல வாதங்களை வச்சிருக்காங்க. ஆனா நான் பாத்தவரைக்கும் உப்புமா போடறதுக்கு இங்கே நிறைய பேரு இருக்காங்க. ஆனா கொத்ஸ் அளவுக்கு பின்னூட்ட வெறியோட இருக்கிறவங்க யாரும் கண்ணுக்கும் கருத்துக்கும் தெரியலை. கும்மி அடிச்சு அடுத்தவய்ங்களைத் திட்டி ஆயிரம் பின்னூட்டம் வாங்கலாம் - அப்படி வாங்கறவய்ங்களையும் பாத்திருக்கேன். ஆனா ஒவ்வொரு பின்னூட்டத்துலயும் ஒரு கருத்து சொல்லி கந்தசாமியா அருள் பாலிக்கிறது கொத்ஸ் மட்டும் தான். அதனாலே அடியேன் மாதாமகி கட்சி தான். (மனசுக்குள்: என் எதிரிகள் யார்ன்னு தெள்ளத் தெளிவா சொல்லியிருக்கேன். புரிஞ்சுக்குவாய்ங்களா? பாக்கலாம்).