வீணா தணிகாசலம்! பெயரைக் கேட்டாலே பெண்கள் அனைவர் முகத்திலும் பெருமிதம் தாண்டவமாடும். அவர்கள் அனைவருக்கும் அவள் ஒரு ஆதர்ச பெண் அல்லவா? எழுத்திலாகட்டும், எடுக்கும் படங்களிலாகட்டும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கும் பெண்ணுரிமைக்கும் அவள் கொடுக்கும் குரல் உலகெங்கும் அல்லவா எதிரொலிக்கிறது. அவளது பெருமையை பெரிதாய் பாராட்டாத ஆணுலகம் கூட அவள் அழகிற்கு அடிமையாக அல்லவா கிடக்கிறது. இன்றைக்கும் பாருங்கள் மயிலின் கழுத்தின் நிறத்தை ஒத்த புடவையாகட்டும் அதற்கேற்ற ஒரு மேற்சட்டையாகட்டும், கழுத்திலும் காதிலும் ஜொலிக்கும் நகைகளாகட்டும் வானுலகில் இருந்து வந்த தேவதை போல் அல்லவா இருக்கிறாள். இப்பேர்பட்ட பெருமைகளுடைய வீணா தணிகாசலம், சர்வாலங்கார பூஷிதையாக எங்கே போகிறாள் என்று நாமும் பின்னாடியே போய் பார்க்கலாமா?
ஆஹா, இது நகரின் எல்லைகளைத் தாண்டி விளைநிலங்கள் நடுவே நம் நாட்டின் ஜாதிக்கட்சி தலைவர் ஒருவர் கட்டியிருக்கும் கல்லூரி வளாகம் அல்லவா இது. கண்டபடி சீரழியும் தமிழ்ப் பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பதற்காகவே கட்டப்பட்ட கலைக் கோயில் அல்லவா இது. அதிலும் இன்று எதோ ஒரு பெரிய விழா நடக்க இருக்கிறது போல் இருக்கிறதே. இதோ, இந்த சுவரொட்டியைப் பார்த்தால் விபரம் தெரிய வரும் போலிருக்கிறதே. விழி வழி தகவற் பரிமாற்ற துறையின் ஆண்டு விழாவாம். சிறப்பு விருந்தினர் நம்ம வீணாவின் குருநாதர், பிரபல திரைப்பட இயக்குநர் வேலு ராஜேந்திராவாம். கூட கூப்பிடப்பட்டிருப்பது விளம்பரப் பட இயக்குநர் விஜயன் பாலாவும் பிரபல எழுத்தாளர் அமரனுமாம். இவர்களுக்கு சமமாக தன்னையும் அழைத்து இருப்பதே வீணாவிற்கு ரொம்ப பெருமை போல. அத்தனை பெருமிதமும் தன் முகத்தில் தெரிய கல்லூரி வாசலில் வந்து சேர்கிறாள் நம் நாயகி வீணா.
ஆனால் என்ன இது? இத்தனை ஆர்வத்தோடு வந்த வீணாவை உள்ளே விட மறுக்கிறானே இந்த பாதுகாப்பு அதிகாரி. வீணாவோடு எதோ ஒரு சர்ச்சையில் வேறு ஈடுபட்டிருக்கிறான் போலத் தெரிகிறதே. நாம் கொஞ்சம் அருகில் சென்று விஷயம் என்னவென்று கவனிக்கலாம். அந்த அதிகாரி "மன்னிக்கவும். என்னால் உங்களை உள்ளே அனுப்ப இயலாது. இந்த கல்லூரியின் விதிகள் உங்களுக்குத் தெரியுமல்லவா. தமிழ்ப் பாரம்பரியத்தை மீண்டும் நிலைநாட்டுவதை தன் கடனாக நினைத்து தலைவர் தொடங்கிய கல்லூரி அல்லவா இது. தமிழர் பாரம்பரிய உடையில் இல்லாதவர்கள் யாரும் உள்ளே வர முடியாது என்பது தாங்களுக்கு தெரியாததல்ல. ஆண்களாய் இருந்தால் வெறும் வேட்டியும் பெண்களாய் இருந்தால் புடவையும் அணிவதல்லவா நம் தமிழ் பாரம்பரியம். மேற்சட்டை என்பது வெளிநாட்டு நாகரீகத்தின் மூலம் ஏற்பட்ட மாசல்லவா? அதனை அணிந்து இங்கு உள்ளே வர முடியுமா? இவ்விதியை நிலைநாட்ட, திரைப்படங்களில் தன் கதாபாத்திரங்களை மேற்சட்டை இன்றியே அலைய விட்டு கலாச்சாரத்துக்கு பெருமை சேர்த்த சாரதிரோசாவைத் துறைத் தலைவராகக் கொண்டிருக்கும் கல்லூரி அல்லவா இது. மற்ற இடங்களில் வேண்டுமானால் கலாச்சார சீரழிவு ஏற்பட்டு நீங்கள் உடுத்தி இருக்கும் உடையை அனுமதிக்கலாம். ஆனால் அது இங்கு ஒரு நாளும் ஒத்துக் கொள்ளப் படாது. இவ்விதியினை என்னால் மீற முடியாது. உங்களை என்னால் உள்ளே அனுமதிக்க முடியாது. தயவு கூர்ந்து என்னை மன்னிக்கவும்." என்று கூறி அல்லவா வீணாவை உள்ளே விடாமல் தடுக்கிறான்.
எவ்வளவோ சொல்லிப் பார்த்த வீணாவின் முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீராய் அல்லவா போகிறது. ஆனால் தன் பங்கிற்கு அவளும் போட்ட துணியிடனே உள்ளே செல்வேன் அல்லது உள்ளே செல்லேன் என்றல்லவா இருக்கிறாள். கடைசி வரை போராடிப் பார்த்துவிட்டு தனது நிலைபாட்டை மாற்றிக் கொள்ளாமல் நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டு வீட்டை நோக்கி செல்கிறாள் வீணா.
கோபத்தில் எள்ளும் கொள்ளுமாய் வெடித்த அவள் முகம் வீட்டினுள் நுழையும் பொழுது மகிழ்ச்சியாகத் தெரிகிறதே. என்ன மாயம் இது? ஒன்றும் புரியவில்லையே. நமக்குத்தான் இந்த குழப்பம் என நினைத்தால் வீட்டில் இருந்த அவளின் உதவியாளரும் இந்த குழப்பத்தில் இருக்கிறாள் போல. வீட்டினுள் நுழைந்த வீணாவிடம் "அம்மா, இப்பொழுதுதான் விஷயத்தைக் கேள்விப்பட்டேன். என்ன அக்கிரமம் இது? கேட்கும் பொழுதே என் மனம் கொதிக்கிறதே. ஆனால் நீங்கள் என்னடாவென்றால் மகிழ்ச்சியுடன் வருகிறீர்களே. எனக்கு ஒன்றும் புரியவில்லையே அம்மா" என்கிறாள்.
அதற்கு வீணாவோ " போடி பயித்தியக்காரி. அங்கு இப்படி உடை அணிந்து சென்றால் என்னை விட மாட்டார்கள் எனத் தெரியாமலா இப்படிச் சென்றேன். அங்கு நான் சென்று விழாவில் கலந்து கொண்டிருந்தால், செய்தித்தாட்களில் மற்றவர்கள் பேசியதை எல்லாம் போட்டுவிட்டு, கடைசியாக இவ்விழாவில் வீணா தணிகாசலமும் கலந்து கொண்டார் என சின்னதாக போட்டு இருப்பார்கள். இப்பொழுது இந்த சர்ச்சையினால் பார், தினத்தந்தியில் கட்டுரை, சந்திரத் தொலைக்காட்சியில் பேட்டி, வலைப்பதிவில் என்னை வைத்து தொடர் பதிவுகள் என எல்லா ஊடகங்களிலும் என் பெயர் அடிபடும். இந்த விளம்பரத்திற்காகத்தானே நான் இப்படி உடையணிந்து சென்றேன்" என்கிறாளே. இது எல்லாம் இவளே முன்னின்று நடத்திய கபட நாடகமா? அய்யோ எனக்கு தலை சுற்றுகிறதே, மயக்கமாய் வருகிறதே. இந்தத்திட்டத்தை அறியாமல் நானும் ஒரு பதிவிட்டு இவளது கபட நாடகத்துக்குப் பலியாகிவிட்டேன் போல இருக்கிறதே!
டிஸ்கி: உண்மைச் செய்தியில் ஒரு விருந்தினரை நடத்திய விதம் என்னால் ஒத்துக்கொள்ள முடியாத, கண்டிக்கப் பட வேண்டிய ஒரு விஷயம். அதே சமயம் ஒரு கல்லூரியில் மாணவர்கள் எவ்விதமான உடையணியலாம் என சட்டம் போடுவது அப்படி ஒன்றும் தவறாகத் தெரியவில்லை. என் கல்லூரியில் காலரில்லா ரீ சட்டை போடுவது நான் படித்த வரையில் அனுமதிக்கப்பட்டதில்லை. அது ஒன்றும் பெரிய உரிமை மீறலாக எனக்குப் படவில்லை. பள்ளிகளில் இருக்கும் இந்த விதிகள் கல்லூரியிலும் வந்தால் மட்டும் ஏன் இவ்வளவு பிரச்சனைகள்? இதனை வைத்து எழுப்பப்படும் ஈய பித்தளை சத்தங்கள் எல்லாம் வெறும் சத்தங்களாகவே இருக்கிறது. இது குறித்த செல்வனின் பதிவில் நாகை சிவா அவர்கள் தெரிவித்த கருத்துடன் நான்பெரும்பாலும் ஒத்துப் போகின்றேன். இக்கதை எழுதத் தூண்டிய வவ்வாலுக்கு நன்றி.
வழக்கம் போல இக்கதையில் வரும் சம்பவங்களோ, பெயர்களோ முழுக்க கற்பனையே. நடந்த சம்பவத்தில் எனது கருத்தாக இதனை திரிக்க வேண்டாம். இது சர்வேசனின் நச் என்று ஒரு கதை போட்டிக்காக.
Subscribe to:
Post Comments (Atom)
71 comments:
வழக்கம் போல ப்ரோபைலிங் செய்பவர்களுக்கு அரிய சந்தர்ப்பம். ஐயாம் தி ரெடி. ஸ்டார்ட் மியூஜிக்!!
பலிகடாவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!
:))
கொத்ஸ்,
உங்கள் நுண்ணரசியலைக் கண்டு பிரமித்து நிற்கிறேன்!! ;-)
//இது குறித்த செல்வனின் பதிவில் நாகை சிவா அவர்கள் தெரிவித்த கருத்துடன் நான்பெரும்பாலும் ஒத்துப் போகின்றேன்//
புரட்சி புலி சூடான்கொடுத்த சுந்தரவிவிழியானுக்கு ஒரு ஸ்பெசல் சாதா ஓஓஓஓஓஓ
:)
ஆனா சும்மா சொல்லக் கூடாது...செந்தமிழில் செம நக்கல்.
:)
ஏதோவொரு முடிவோட கிளம்புனமாதிரி இருக்கு.....
அதுனாலே :) மட்டும் போட்டுட்டு கிளம்பிக்கிறேன்...
நன்மையில் முடிந்தால் சரி தான்...;)))
வாழ்த்துக்கள் !..;)
கொத்தனார், கல்கி எஸ் வி வி ரொம்பப்படிக்கிறீங்களா என்ன? இப்ப 2007 நடக்குது சாமி (அதுவும் முடியப்போவுது).. 1945 ஸ்டைல்லேயே இன்னும் எழுதிகிட்டிருந்தா எப்படி? ஆமாம், அந்த ஜாக்கெட் இல்லாத காலேஜ் எங்க இருக்கு? (யோவ் ஜொள்ளு விடக் கேக்கலைய்யா - பொது அறிவுக்குதான்!)
இ.கொ,
கலக்கிட்டிங்களே(நான் கலங்கிட்டேன்) அந்தக்கால தேவன் ஸ்டைல் என்று சொல்லலாம், பினாத்தல் சொன்னாப்போல கல்கி என்று வைத்துக்கொள்ளலாம்.
ஆனால் ஓவர் ஆசை தான் ... ஜாக்கெட் இல்லாம தரிசனம் பார்க்கணும்னு ரொம்ப நாளா ஆசை அதை இப்படி கதைல எழுதி தீர்த்துக்கிட்டிங்க போல!
ந.ஓ.க போல இது ஒரு ரவுண்டு கட்டி அடிக்கும் போல இருக்கே!!
ஆரம்பித்து வைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.
ஒரு சின்ன ஜாக்கெட்டுக்குள் இம்புட்டு கருத்தை வைத்து நல்ல படைப்பை தந்த கொத்தனாரே நீங்க பெரிய ஆளுதான்.
கதை நல்லா இருந்தது!! வாழ்த்துக்கள்!!
//பலிகடாவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!
:))//
ஐயா, வாங்க. பலிகடாவா? விட்டா தலையில் தண்ணி ஊத்தி மாலை எல்லாம் போட்டலும் போடுவீங்க போல! ஆனாலும் அடுத்தவனை பலியாடா ஆக்க லைனில் நிக்கறாங்கப்பா! :))
//கொத்ஸ்,
உங்கள் நுண்ணரசியலைக் கண்டு பிரமித்து நிற்கிறேன்!! ;-)//
கைப்ஸ் உம்ம போஸ்டில் நான் சொன்னது எனக்கேவா? ஆனா அந்த மேட்டரோட கம்பேர் பண்ணினா இதெல்லாம் ஜுஜுபி. ஆனா உமக்குத் தெரியாததா? :)))
விழாவிற்கு ஏற்பாடு செய்தவர்கள் பத்திரிக்கையில் எந்த மாதிரி ஆடை அனிய வேண்ட்டும் என்ரு இங்கே சோல்வது போல )formal, business casual, black tie etc) சொல்லி இருந்தால் இந்த பிரச்சினையே வந்ந்திருக்காது.ஏனென்றால் அதற்கு ஒப்புதல் இல்லாதவர்கள் ஆரம்பத்திலேயே மறுத்திருப்பார்கள்.வந்தபின் வற்புறுத்துவதென்பது அநாகரீகம். மற்றபடி கல்லூரிகளில் ஆடைகளுக்கு விதிகள் என்று இருப்பது கல்லூரி நிர்வாகத்தை ஒட்டியது. இங்கேயும் கத்தோலிக்க பள்ளி, தனியார் பள்ளிகளில் ஆண், பெண் மாணவிகளுக்கு விதிகள் உண்டு. அதை ஒப்புக்கொண்டு சேர்வதோ சேராமல் இருப்பதோ அவரவர் விருப்பம்.
நீண்ட சிந்தனைக்குப்பிறகு, கல்கி தேவன் எல்லாம் இல்லைன்ற முடிவுக்கு வந்துட்டேன் கொத்ஸ்.
உங்க நடை எதை ஞாபகப்படுத்துதுன்னா
"கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே, இதுதானய்யா பொன்னகரம்" என்று முடியுமே அந்த நடையிலேயே இருக்கு :-)
சந்தேகம் இருக்கவங்க இங்கே பாருங்க!
//ஒரு சின்ன ஜாக்கெட்டுக்குள் இம்புட்டு கருத்தை வைத்து//
jacket kulla karuththu vaippaangalaa.. haiyo haiyoo.. kusumbu saar... innum chinna paiyanave irukkeengale
vayasukkeththa mathiri valarnthu vanga saar.
jacket kkulla karuththellam vaikka maattaanga... athukkulla vaikkarathu vEra..
adade makkale thappa eduththukkaathinga...
" Cholikke peeche kya hai " athaanga.. jacket kulla manasu vaichchu iruppaanga.. ;)
adikkaatheengappaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
anulla anony
கலக்கிப்புட்டீர் ஐயா கொத்ஸ்.
:-)))))
//வழக்கம் போல இக்கதையில் வரும் சம்பவங்களோ, பெயர்களோ முழுக்க கற்பனையே.//
IS IT?
ஹலோ.. நான் கதையப் படிக்கல.. ஆனா, அடக்கடவுளே இப்படியொரு தலைப்பான்னு சொல்லிட்டுப்போகத்தான் வந்தேன் :-D
//புரட்சி புலி சூடான்கொடுத்த சுந்தரவிவிழியானுக்கு ஒரு ஸ்பெசல் சாதா ஓஓஓஓஓஓ
:)//
என்னய்யா சொல்லறீரு? புரட்சி புலி புரியுது அது என்ன சுந்தரவிவிழியான்? கன்பியூஷன் ஆப் தி வேர்ல்ட்!
//ஆனா சும்மா சொல்லக் கூடாது...செந்தமிழில் செம நக்கல்.
:)//
ஆமாம் கைப்ஸ், இப்போ எல்லாம் எழுதும் போது முடிஞ்ச வரை ஆங்கில கலப்பு இல்லாம முயற்சி செய்யணும் அப்படின்னு பார்க்கிறேன்..
//ஏதோவொரு முடிவோட கிளம்புனமாதிரி இருக்கு.....
அதுனாலே :) மட்டும் போட்டுட்டு கிளம்பிக்கிறேன்...//
ஏன்யா, முடிவோடு கிளம்பினா கூட துணைக்கு வருவீங்கன்னு பார்த்தா, இப்படி சிரிப்பான் போட்டுட்டு எஸ் ஆனா எப்படி? :)
//நன்மையில் முடிந்தால் சரி தான்...;)))
வாழ்த்துக்கள் !..;)//
நம்மளை நாரதர் அப்படின்னு சொல்லறீங்க. இருக்கட்டும் தல! :))
//கொத்தனார், கல்கி எஸ் வி வி ரொம்பப்படிக்கிறீங்களா என்ன?//
பெனாத்தல், சரியாப் புடிக்கறீரு ஐயா!! இப்போ படிச்சு முடித்த புத்தகங்கள் - சிவகாமியின் சபதம், அலை ஓசை, சோலை மலை இளவரசி. எல்லாம் கல்கியின் படைப்புக்கள். அவரு செய்யும் இந்த third person narrative ரொம்பவே பிடிச்சுப் போச்சு. அதான் ஒரு முயற்சி. நீங்க சொல்வதைப் பார்த்தா சுமாராவே வந்திருச்சு போல இருக்கே!! :))
//அந்த ஜாக்கெட் இல்லாத காலேஜ் எங்க இருக்கு?//
உங்க கேள்வியை உங்க தங்கமணிக்கு பார்வேர்ட் செஞ்சிருக்கேன். எதோ அடியேனால் ஆன சிறு உதவி. அவங்க புரியற மாதிரி சொல்லுவாங்க!! :))
//கலக்கிட்டிங்களே(நான் கலங்கிட்டேன்) அந்தக்கால தேவன் ஸ்டைல் என்று சொல்லலாம், பினாத்தல் சொன்னாப்போல கல்கி என்று வைத்துக்கொள்ளலாம்.//
வவ்வால் பாராட்டுக்களுக்கு நன்றி.
தேவனா? என்னளவில் தமிழில் மிகச் சிறந்த நகைச்சுவை எழுத்தாளர் அவர்தான். நான் மிகவும் விரும்பிப் படிக்கும் படைப்புகள் அவருடையதுதான். அவரை நினைக்கும் அளவுக்கு இந்தக் கதை இருந்ததா? ஆச்சரியமா இருக்கே!!
அப்புறம் கலங்காதே ராசா, காலம் வரட்டும் நள்ளிரவு போன பின்னே வெள்ளி முளைக்கும்...... :)
//ஆனால் ஓவர் ஆசை தான் ... ஜாக்கெட் இல்லாம தரிசனம் பார்க்கணும்னு ரொம்ப நாளா ஆசை அதை இப்படி கதைல எழுதி தீர்த்துக்கிட்டிங்க போல!//
பார்க்கணும் அப்படின்னு ஆசை இருந்தா இப்படி எழுதித் தீர்த்துக்கிட்டா ஆச்சா? :(
//ந.ஓ.க போல இது ஒரு ரவுண்டு கட்டி அடிக்கும் போல இருக்கே!!
ஆரம்பித்து வைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.//
குமார், ஆரம்பிச்சது நானில்லை. வவ்வால்தான். தலைப்பாகட்டும் கதாபாத்திரங்கள் ஆகட்டும் எல்லாம் அவர் படைச்சது. நான் சும்மா அவர் பாடின பாட்டுக்கு எதிர்பாட்டு பாடினேன்! :))
//ஒரு சின்ன ஜாக்கெட்டுக்குள் இம்புட்டு கருத்தை வைத்து நல்ல படைப்பை தந்த கொத்தனாரே நீங்க பெரிய ஆளுதான்.//
யோவ் குசும்பரே, என்ன கேள்விய்யா கேட்கறீரு. வாயில நல்லா வருது. ஆனா அது சின்ன ஜாக்கெட் என்பது உமக்கு எப்படித் தெரியும் என்ற ஒரே ஒரு கேள்வியோடு நிறுத்திக் கொள்கிறேன். நன்றி வணக்கம். :)
//விழாவிற்கு ஏற்பாடு செய்தவர்கள் பத்திரிக்கையில் எந்த மாதிரி ஆடை அனிய வேண்ட்டும் என்ரு இங்கே சோல்வது போல )formal, business casual, black tie etc) சொல்லி இருந்தால் இந்த பிரச்சினையே வந்ந்திருக்காது.ஏனென்றால் அதற்கு ஒப்புதல் இல்லாதவர்கள் ஆரம்பத்திலேயே மறுத்திருப்பார்கள்.வந்தபின் வற்புறுத்துவதென்பது அநாகரீகம். மற்றபடி கல்லூரிகளில் ஆடைகளுக்கு விதிகள் என்று இருப்பது கல்லூரி நிர்வாகத்தை ஒட்டியது. இங்கேயும் கத்தோலிக்க பள்ளி, தனியார் பள்ளிகளில் ஆண், பெண் மாணவிகளுக்கு விதிகள் உண்டு. அதை ஒப்புக்கொண்டு சேர்வதோ சேராமல் இருப்பதோ அவரவர் விருப்பம்.//
பத்மா, ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க. வார்த்தைக்கு வார்த்தை நான் ஒத்துப் போகிறேன் என்பதைத் தவிர என்னத்த சொல்ல! :)
//நீண்ட சிந்தனைக்குப்பிறகு, கல்கி தேவன் எல்லாம் இல்லைன்ற முடிவுக்கு வந்துட்டேன் கொத்ஸ்.
உங்க நடை எதை ஞாபகப்படுத்துதுன்னா
"கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே, இதுதானய்யா பொன்னகரம்" என்று முடியுமே அந்த நடையிலேயே இருக்கு :-)//
பெனாத்தல் ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல! இப்படி எல்லாம் வார போகிறதா முடிவு செஞ்சது தெரியாமப் போச்சே! வழக்கம் போல கதை சூப்பர் அப்படின்னே ஓட்டி இருக்கலாம். :))
அப்புறம் முன்னால சொல்ல மறந்து போச்சு படிச்ச கதைகளுக்கு நன்றி ப்ராஜெக்ட் மதுரை!
//சந்தேகம் இருக்கவங்க இங்கே பாருங்க!//
நீர் சொன்னது எல்லாம் என்னை ஓட்டுவதற்காகத்தான் என்றது பற்றிய சிறு சந்தேகம் கூட இல்லை என்றாலும் இந்த பக்கம் சென்று படித்தேன். அட எவ்வளவு அற்புதமான சிறுகதை!
மணிக்கொடியில் புதுமைப்பித்தன் எழுதியது. What a powerful story. என்பதைத் தவிர வேறு என்ன சொல்வது.
சுட்டிக்கு நன்றி.
அன்புள்ள அனானி, என்னமோ இங்கிலிபீஸில் எழுதி இருக்கீங்க. நல்லா எழுதி இருக்கீங்க நமக்குத்தான் எழவு இதெல்லாம் புரியறதே இல்லை!! நல்லதே எழுதி இருக்கீங்கன்னு நினைச்சுக்கிறேன்!:))
//கலக்கிப்புட்டீர் ஐயா கொத்ஸ்.
:-)))))//
ரீச்சர், அப்போ நான் பாஸா? :))
////வழக்கம் போல இக்கதையில் வரும் சம்பவங்களோ, பெயர்களோ முழுக்க கற்பனையே.//
IS IT?//
அதெல்லாம் எனக்குத் தெரியாது விவ்ஸ். வவ்வாலைப் பார்த்து பிட் அடிச்சது அது! :))
//ஹலோ.. நான் கதையப் படிக்கல.. ஆனா, அடக்கடவுளே இப்படியொரு தலைப்பான்னு சொல்லிட்டுப்போகத்தான் வந்தேன் :-D//
சேது, அந்த தலைப்புக்கு எல்லாம் நான் பொறுப்பு இல்லை. அவரு போட்டாரு, நாம அதுக்கு அப்புறம் என்ன செய்ய.
//என்னய்யா சொல்லறீரு? புரட்சி புலி புரியுது அது என்ன சுந்தரவிவிழியான்?//
சூடான்கொடுத்த சுந்தரவிவிழியான் = சூடிக் கொடுத்த சுடர்கொடிக்கு ஆண்பால்.
:)
கொத்ஸ்,
கதையின் மேட்டரை விடவும், உங்கள் நடை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு விதமான
'நாஸ்டால்ஜியா' வைத் தூண்டும் எழுத்து நடை, அழகு ! அதனாலே, கதை நல்லாயில்லைன்னு
சொல்றேன்னு நினைச்சுக்காதீங்க, கிளுகிளுப்பாகவே இருக்கு ;-)
ந.ஒ.க போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள், அதுக்கு ஏதாவது ஓட்டு கீட்டு போடணுமுன்னா
சொல்லுங்க, போய் குத்திடறேன் :)
என்னோட (சமீபத்திய, டோ ண்டுவின் "சமீபத்தில்" அல்ல:)) நட்சத்திர வாரத்தின் போது,
"வெகுண்டு" எனற் தலைப்பில் எழுதிய கதையை மீள்பதிவாக இட்டு இருந்தேன், வாசிச்சுப் பாருங்க.
http://balaji_ammu.blogspot.com/2007/12/star-22c.html
என்றென்றும் அன்புடன்
பாலா
//
சேதுக்கரசி said...
ஹலோ.. நான் கதையப் படிக்கல.. ஆனா, அடக்கடவுளே இப்படியொரு தலைப்பான்னு சொல்லிட்டுப்போகத்தான் வந்தேன் :-D
//
அப்ப மத்த எல்லாரும் படிச்சிட்டுதான் கமெண்டு போடறாங்களா???
என்ன கொடுமை கொத்தனார் இது!!
//
குசும்பன் said...
ஒரு சின்ன ஜாக்கெட்டுக்குள் இம்புட்டு கருத்தை வைத்து நல்ல படைப்பை தந்த கொத்தனாரே நீங்க பெரிய ஆளுதான்.
//
//
இலவசக்கொத்தனார் said...
யோவ் குசும்பரே, என்ன கேள்விய்யா கேட்கறீரு. வாயில நல்லா வருது. ஆனா அது சின்ன ஜாக்கெட் என்பது உமக்கு எப்படித் தெரியும் என்ற ஒரே ஒரு கேள்வியோடு நிறுத்திக் கொள்கிறேன். நன்றி வணக்கம். :)
//
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!
//சூடான்கொடுத்த சுந்தரவிவிழியான் = சூடிக் கொடுத்த சுடர்கொடிக்கு ஆண்பால்.//
என்னமோ சொல்லறீரு. நல்லா இருந்தாச் சரி.
//கதையின் மேட்டரை விடவும், உங்கள் நடை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு விதமான
'நாஸ்டால்ஜியா' வைத் தூண்டும் எழுத்து நடை, அழகு ! //
பாலா, வாங்க. நடை பிடிச்சு இருந்துதா. பெனாத்தலுக்குச் சொன்ன மாதிரி கொஞ்சம் கல்கி ஓவர்டோஸ். அதில் கொஞ்சம் இதிலும் தெரியுது போல!! ஆனா இந்த பழங்கால நடை இண்டெண்ஷனலா செஞ்சதுதான்.
//அதனாலே, கதை நல்லாயில்லைன்னு
சொல்றேன்னு நினைச்சுக்காதீங்க, கிளுகிளுப்பாகவே இருக்கு ;-)//
கிளுகிளுப்பா, அடப்பாவிகளா, சமுதாயப் பிரச்சனையை சொல்லி இருக்கேம்பா! ;-)
//ந.ஒ.க போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள், அதுக்கு ஏதாவது ஓட்டு கீட்டு போடணுமுன்னா
சொல்லுங்க, போய் குத்திடறேன் :)//
அடக்கடவுளே, இந்தக் கதையை அங்க அனுப்பலையே. அதுக்கு அந்த கதையை இல்ல அனுப்பி இருக்கேன். அதையும் படிச்சுடுங்க. அப்புறம் மறக்காம வோட்டு போடுங்க! :))
//அப்ப மத்த எல்லாரும் படிச்சிட்டுதான் கமெண்டு போடறாங்களா???//
மத்தவங்களைப் பத்தி தெரியலை. ஆனா உங்க ரெண்டு பின்னூட்டமும் கதையைப் பத்தி இல்லை மத்த பின்னூட்டங்களைப் பத்திதான். இதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா....
//எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!//
சிவா, என்ன உண்மைப்பா தெரியணும். இந்த ஊருன்னா கூட உண்மையா பொய்யான்னு இந்த சப்ஜெக்ட்டில் பேசினா புரியுது. நம்ம ஊர் நிலமை இன்னும் அம்புட்டு மோசமா ஆகலைன்னுதான் நினைக்கிறேன்.
//ஆனா அது சின்ன ஜாக்கெட் என்பது உமக்கு எப்படித் தெரியும் என்ற ஒரே ஒரு கேள்வியோடு நிறுத்திக் கொள்கிறேன். நன்றி வணக்கம். :)//
அதானே! கொத்ஸிக்கு மட்டும் தான் தெரியும்.
ஏன்னா அவர் தானே கதையாசிரியர். அதனால தான் சொன்னேன் ;)
கதை நச்சுனு தான் இருக்கு :-)
உமக்கு குருபெயர்ச்சில என்னவோ கோளாறு போலிருக்கு. தொடர்ந்து இப்படியாப்பட்ட மேட்டரையே போட்டுகிட்டிருக்கீரு. பாத்து.. :)
இவ்வளவு தூரம் வந்துட்டோம்...
ஆச்சு..
திருப்திதானே?
கல்கி, தேவன், எஸ்விவி, புதுமைபித்தன் எல்லாரையும் கூட்டி வ்நதுட்டீங்களே... ரொம்ப செலவு ஆயிருக்கும் போல :-))
இருங்க உங்களுக்கு ஒரு கடினமான வேலை காத்திட்டிருக்கு :-)
\\
கைப்புள்ள said...
கொத்ஸ்,
உங்கள் நுண்ணரசியலைக் கண்டு பிரமித்து நிற்கிறேன்!! ;-)
//
அதே அதே, வழி மொழிகிறேன்.
அரசியல் என்றால் சும்மாவா
கொத்ஸ்க்கு வருகிறதே இலவசமா
-அரசு
//அதானே! கொத்ஸிக்கு மட்டும் தான் தெரியும்.
ஏன்னா அவர் தானே கதையாசிரியர். அதனால தான் சொன்னேன் ;)//
நல்ல வேளையா ரெண்டாவது வரியையும் போட்டீரு!! நல்லா இருங்கடே!
//கதை நச்சுனு தான் இருக்கு :-)//
நன்றி தல!!
//உமக்கு குருபெயர்ச்சில என்னவோ கோளாறு போலிருக்கு. தொடர்ந்து இப்படியாப்பட்ட மேட்டரையே போட்டுகிட்டிருக்கீரு. பாத்து.. :)//
அதான் மேட்டரா? என்னடா நம்ம வாழ்க்கையில் இவ்வளவு திருப்பங்கள் எங்க இருந்துன்னு பார்த்தேன். இதுக்கு என்ன பரிகாரம்? அதையும் சொல்லிடுங்க! :))
//இவ்வளவு தூரம் வந்துட்டோம்...//
ரொம்ப நாள் ஆச்சு உமக்கு இந்த வாசனை பிடிச்சு! 50 அடிச்சு எனக்கும் ரொம்ப நாள் ஆச்சு போல! :)
//ஆச்சு..
திருப்திதானே?//
ம்.ம். இல்லாமலேயா!! :) ஆனால் ஆசைக்கும் உண்டோ அடைக்கும் தாழ்! :))
//கல்கி, தேவன், எஸ்விவி, புதுமைபித்தன் எல்லாரையும் கூட்டி வ்நதுட்டீங்களே... ரொம்ப செலவு ஆயிருக்கும் போல :-))//
அடப்பாவிகளா, மண்டபத்தில் எழுதித் தந்தது கூட இல்லையா? அவ்வ்வ்வ்வ்வ் :(
//இருங்க உங்களுக்கு ஒரு கடினமான வேலை காத்திட்டிருக்கு :-)//
இதுக்கு என்ன பட்ஜெட் வைக்கணுமோ தெரியலை. :)
//அரசியல் என்றால் சும்மாவா
கொத்ஸ்க்கு வருகிறதே இலவசமா
-அரசு//
அரசு, நீங்களுமா? சரி அரசியல்ன்னா இலவசம் இருந்துதானே ஆகணும்.
இன்னும் விவாதம் சூடாக நடந்துட்டு இருக்குங்க!
உங்களைப் "புத்தாண்டு சபதம்" போட அழைப்பு விடுத்திருக்கிறேன். இனிமேல் "ஜொள்ள" மாட்டேன் என்று சபதம் போடவும்! :P
//இன்னும் விவாதம் சூடாக நடந்துட்டு இருக்குங்க!//
இன்னும் என்ன விவாதம்? அதான் மேட்டரை எல்லாரும் அக்கு வேற ஆணி வேறையா பிரிச்சு எழுதியாச்சே!
//உங்களைப் "புத்தாண்டு சபதம்" போட அழைப்பு விடுத்திருக்கிறேன். இனிமேல் "ஜொள்ள" மாட்டேன் என்று சபதம் போடவும்! :P//
சபதம் போடணும் அப்படின்னு முடிவு நீங்க செஞ்சாச்சு, என்ன போடணும் அப்படின்னு வேற சொல்லியாச்சு, அப்புறம் நான் என்னத்த தனியா எழுத!!
ஆமாம் இப்படி எல்லாம் செஞ்சா சுட்டியைக் குடுத்து போஸ்டர் ஒட்ட வேண்டாமா? இதெல்லாமா சொல்லித் தந்துக்கிட்டு இருக்க முடியும்!!
//அப்ப மத்த எல்லாரும் படிச்சிட்டுதான் கமெண்டு போடறாங்களா???//
மங்களூர் சிவா இப்படிக் கேட்ட ஒரே காரணத்துக்காகவும், "சின்ன ஜாக்கெட்" என்ற குறிச்சொல் பல பின்னூட்டங்களில் கலக்கிக்கொண்டிருந்ததாலும் போனாப்போகுதுன்னு கதையைப் படிச்சேன். current affairs-க்கு லொள்ளு முலாம் பூசி நல்லாத்தான் எழுதியிருக்கீங்க.
//அந்த தலைப்புக்கு எல்லாம் நான் பொறுப்பு இல்லை. அவரு போட்டாரு, நாம அதுக்கு அப்புறம் என்ன செய்ய.//
எவரு போட்டாரு?
//
சேதுக்கரசி said...
மங்களூர் சிவா இப்படிக் கேட்ட ஒரே காரணத்துக்காகவும், "சின்ன ஜாக்கெட்" என்ற குறிச்சொல் பல பின்னூட்டங்களில் கலக்கிக்கொண்டிருந்ததாலும் போனாப்போகுதுன்னு கதையைப் படிச்சேன்.
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//மங்களூர் சிவா இப்படிக் கேட்ட ஒரே காரணத்துக்காகவும், "சின்ன ஜாக்கெட்" என்ற குறிச்சொல் பல பின்னூட்டங்களில் கலக்கிக்கொண்டிருந்ததாலும் போனாப்போகுதுன்னு கதையைப் படிச்சேன். current affairs-க்கு லொள்ளு முலாம் பூசி நல்லாத்தான் எழுதியிருக்கீங்க.//
ரொம்பவே சந்தோஷம்! :))
//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
சிவா, ட்யூட்டியில் இருக்கும் போது உணர்ச்சி வசப்படக்கூடாது. (அபூர்வ சகோதரர்கள் படத்தில் ஜனகராஜ்!)
//எவரு போட்டாரு?//
பதிவு படிக்கலை சரி. டிஸ்கி கூடவா படிக்கலை? முதலில் கதையை எழுதினது நம்ம வவ்வாலுங்க.
கதை நல்லா இருக்கு கொத்ஸ்.
குமரன், ரொம்ப நன்றி வாழ்த்துகளுக்கு. தொடர் எழுத்தாளரிடம் இருந்து இந்த சிறு எழுத்தாளருக்கு வரும் பாராட்டுக்கள் என்னை ஊக்குவிப்பதில் ஆச்சரியமுண்டோ?
Post a Comment