Wednesday, December 05, 2007

மருத்துவர் தரும் செகண்ட் ஒப்பீனியன் - பட்டிமன்றம் பாகம் 4

சாலமன் பாப்பையா

நியூசிலாந்த்தில் ஆரம்பிச்சு அப்படியே அமீரகம் வந்து பின்ன என்னமோ மறந்து போனா மாதிரி இந்தியாவுக்குப் போயிட்டு இப்போ நம்ம பட்டிமன்ற வண்டி ரஷ்யாவில் வந்து நிக்குது. இந்தக் குளிருக்கு இதமா தேவ் ஆரம்பிக்கப் போற டீக்குடிப்பு போராட்டத்தில் கலந்துக்கிட்டா நல்லா இருக்குமேன்னு நினைச்சா இப்போ வரப்போறவரு வோட்காதிபதி இராமநாதன். இளஞ்சிங்கம் நீரு, பஞ்ச் டயலாக் எல்லாம் வெச்சு பேசுவீரு. நீர் விரலைச் சுத்தி பேசும் அந்த அழகைப் பார்த்து எல்லாரும் எங்க வீட்டுக்கு வாங்க, வந்து பழகுங்க அப்படின்னு ஆசையாக் கூப்பிடணும். அப்படிக் கலக்க 'வா நீ, வா நீ, வா நீ, நம்ம மேடை ஏறி வா நீ!!'


மருத்துவர் இராமநாதன்

இதுவரைக்கும் பெருந்தலைகளெல்லாம் வந்து பேசிட்டு போயிட்டாங்க. கடசியா ஒரு தறுதலையும் பேசினாத்தான் தீர்ப்பு சொல்வேன்னு பாப்பையா நினச்சிருப்பாரு போல. அதான் என்ன கூப்பிட்டிருக்காரு.

முதல்ல கொத்ஸுக்கு இந்த தறுதலை வாசகனின் வாழ்த்து!

நள் இருளில்(ம்) நட்டம் பயின்று ஆடும் நாதனே!
கல்லிடைஉள் குத்தனே தென்பாண்டி நாட்டானே!
எண்ணுதற்கு எட்டா ஊட்டு பெறுகழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழு மாறு ஒன்று அறியேன்!

கொத்தனாருக்கு ஏதோ வெறி பிடிச்சுருக்குனு எல்லாரும் ஒத்துக்கறாங்க. அந்தவரைக்கும் என் செகண்ட் ஒப்பீனியன்ல டவுட் இல்ல. ஆனா பிடிச்சுருக்கறது என்ன வெறி? அது ஏன் தலைக்கு ஏறியிருக்குனு யோசிச்சு பார்த்தா அது உப்புமா வெறிதான்னு கன்பர்ம் ஆயிடுது. எனக்கு முன்னாடி எங்க அணித்தலைவர் பெனாத்தலார் பல்வேறு பாயிண்ட்ஸ அள்ளிவிட்டாரு. அதோட சேர்த்து கொசுறா நானும் கொஞ்சம் சொல்லிக்கிறேன்.

உப்புமானா என்னவோ சாதாரணம்னு அளந்துவிடறாங்க தேவும் ரீச்சரும். உப்புமாவோட உன்னதத்தை உணர்த்த ஒரு குட்டிக்கதை சொல்றேன். உடனே கண்ணீர் துடைக்க க்ளீனெக்ஸோட உஷாராவற வாலிப வயோதிக அன்பர்களே: இது எந்த குட்டியோட கதையும் இல்ல. நான் சொல்றது குட்டி as in சின்ன. சத்ரபதி சிவாசி சின்ன வயசுல அவுரங்கசீப்ப எதிர்த்து சண்டை போட்டு சில கோட்டைகளை ஜெயிச்சார். ஆனா சில நாட்கள்லேயே அதையெல்லாம் அவுரங்கசீப் படையினர் மீண்டும் கைபற்றிட்டாங்க. ஒருநாள் அவுரங்கசீப்போட படை துரத்துனதுல உசுருக்கு பயந்து ஒரு கிராமத்து வீட்டுக்கு மாறுவேஷத்துல போய் பசின்னு கேக்க, அங்க ஒரு கிழவி சிவாஜிக்கு 'உப்புமா'வ கிண்டிப்போட்டு அத எப்படிச் சாப்பிடறதுன்னு சொல்றாப்போல போர்த்தந்திரத்தை, கோட்டைகளை கூட வசப்படுத்தும் வழியை கத்துக்கொடுத்தாங்களாம். இப்படியாக உப்புமாவ வச்சுதான் சத்ரபதியே சாம்ராஜ்யம் சமைச்சாரு. கதைனு சொன்னா நீதி வேணுமில்லியா? உப்புமாவ குறைச்சு மதிப்பிட்டா பதிவு ஊத்திக்கும்கறது சிவாஜிக்கு தெரியுது. ஆனா விவாஜி எழுதுற மன்றத்துக்கு தெரியலியே!

ஒண்ணுமில்லாத விஷயத்தை ஊதிப்பெருசாக்கி அதையும் நாலு பேரு படிச்சு கருத்து சொல்லுமளவுக்கு எழுதணும். அதுக்கு உப்புமாவெறி இல்லாம முடியுமா? நான் இன்னிக்கு கார்த்தால ட்ரெட்மில்ல ஓடினேன்கற mundane மேட்டரையும் தமிழ்ப்பதிவுலகின் முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகளில் ஒன்றாக மாற்ற முடியும்னா அதுக்கு உப்புமாவெறி இல்லாம முடியாது. பின்னூட்டம் போடறது இப்பல்லாம் நிறைய பேரு செய்யறதில்லனு ரீச்சர் வருத்தப்படறாங்க. அத நானும் ஒத்துக்கறேன்.


ஏன்? இன்னிக்கு தமிழ் வலையுலக முகப்பை பாருங்க... எத்தனையோ பேரு ரவுசு பண்றேன் நக்கல் பண்றேனு பதிவு போடறாங்க. அதையும் எத்தனையோ பேரு வந்து படிக்கிறாங்க. ஆனா கமெண்ட் போடறாங்களோ? இல்லையே. கொத்தனாருக்கு மட்டும் போடறாங்கன்னா அது ஏனு நாம யோசிக்கணும். பதிவுல ஒண்ணுமில்ல. ஆனா என்னவோ இருக்கு. அந்த என்னவோ வந்தவங்கள ஒரு பதிலாவது கொடுத்துட்டு போகணும்னு படுத்துது. அது என்னது? அது பின்னுட்ட வெறிங்கறாங்க அவங்க. ஆனா உப்புமா வெறிங்கறேன் நான். ஏன்னா பின்னூட்டத்துலயும் உப்புமா கிண்டறவர் நம்ம கொத்ஸு.


வெறுமனே பின்னூட்டம் வாங்கணும்னா அதுக்கு எத்தனையோ டாபிக்ஸ் இருக்கு. அந்தந்த செக்ஷன் ஆளுங்க வந்து தானா போட்டுட்டு போவாங்க. ஆனா அது எல்லாமே குழுக்களா இருக்கும். ஆனா எந்தக்குழுவுக்குள்ளும் சிக்காம தொடர்ச்சியா சிக்ஸர் அடிக்க முடியுதுன்னா எந்த பக்கத்திலயும் சாயாத ஜோரான உப்புமா போடற திறமை கொத்ஸுக்கு இருக்கறதுனால மட்டுமே. அந்த unique நடையும் நக்கலும் இல்லேன்னா இலவசம் இவ்வளவு பிரபலமாகியிருக்குமா? பதிவு மட்டும் உப்புமாவா இருந்தா போதுமா? கண்டிப்பா போதாது. பின்னூட்டத்துலயும் உப்புமா கிண்டத்தெரியணும். கிண்டாம விட்டா கல்லாகிடும். வந்து பின்னூட்டம் போட்டவன் வாயக் கிண்டனும். கிண்டக் கிண்டக் கவுண்டரும் குன்ஸாவாரு. ப்ளாக்கரும் ரென்சன் ஆவாரு. இதுல எதிரணியில இருந்தும் தானே மனமுவந்து சூனியம் வச்சுகிட்டு இந்த பாயிண்ட கொடுத்த அக்காவுக்கு நன்னி.


அய்யா...கண்ணாடி போட்டவங்கள்லாம் எம்ஜிஆர் ஆக முடியுமா? பதிவு போட்டவங்கள்லாம் உப்புமா மன்னனாக முடியுமா? மிச்ச பதிவுகள்ல போடற பின்னூட்டங்களால மட்டும் தான் கொத்தனாரின் பதிவுகளிலும் பின்னூட்டங்கள் எகிறுதுங்கற மாதிரி கருத்த தேவு சொல்லிருக்காரு. இதவிட தவறா கொத்ஸோட புல்லிங் பவர மதிப்பிட முடியாது. கொத்தனாரின் பதிவுகள்ல போய் நீ கொடுத்த தவசதானியத்துக்கு இப்ப நாங்க மொய் வைக்கிறோம்னு பலகாலம் கழிச்சா பின்னூட்டம் போடறாங்க? இங்க பின்னூட்டம் போடறவங்களோட நோக்கம் கொடுத்து வாங்கறது இல்ல. உப்புமா ருசிக்க வந்தவங்கள தப்பா எடை போடலாமா?


அந்த மாதிரி மொக்கை பின்னூட்டங்கள் - ஒண்ணு நமக்கு நாமே போட்டுக்கணும் இல்லேன்னா பொழுது போகாத நண்பரை கட்டாயமா உட்கார வச்சு போடச் சொல்லணும். இதுல இன்னஸண்டான வெளியாளுங்க (அதாவது சாட்ல "மச்சான் வெளாடுவோம் வா"னு கூப்பிடப்பட்டவர்கள் அல்லது ஆஞ்சலீனா அண்டர்க்ரவுண்ட் சொஸைடிஸோட பார்களிலிருந்து மோப்ளாக் செய்பவர்கள்) வந்து மே ஐ கம் இன்' னு வந்து சொல்லிட்டு -, நீ உருப்படுவியா, நீமட்டும் உருப்படுவியான்னு இப்படியாக யாஹூல பண்ணவேண்டிய கான்பரன்ஸை போடலாம். போடறாங்க. ஆனா பொதுவா மத்தவங்களுக்கு துளிக்கூட சுவாரசியமா இருக்காது. எல்லாரையும் இன்வால்வ் பண்ண வைக்கிற திறமை இல்லேன்னா இப்படி தொடர்ந்து செய்ய முடியாது. மேற்சொன்ன வழிமுறைகள்ல இந்த பின்னூட்ட வெறி பிடிச்சவங்களுக்கு ஒரு சில பதிவுகள்ல வெற்றி கிடைச்சாலும் அவங்களால அத தக்க வச்சுக்க முடியாது.


அதுதான் நான் சொல்ல வர்றது. உப்புமாத் திறமையும் வெறியும் இல்லேன்னா பின்னூட்டங்களும் வரப்போறதில்லை. வரும் ஆனா ரெண்டு மூணு பேரு மட்டும் ஜோக் பண்றேனு ஜோக்கர் ஆவற காமெடி பண்ணி எல்லாரையும் கழுத்தறுத்து ஓடவச்சிருவாங்க. உதாரணங்கள் சொல்லலாம். ஆனால் தேவையில்லை.


இப்ப கடைசியா பஞ்ச் செக்ஷனுக்கு வந்திருக்கோம். ரெண்டு காதுக்கு ரெண்டு பஞ்ச். பஞ்சு வச்சுக்குற அளவுக்கு விஷ்க் விஷ்கோட டயலாக் சொல்லலேனா எப்படி?


ஒண்ணு: தெளிவா சொல்லிடறேன். எதிர் அணியினர் புரிஞ்சுதான் இந்த பட்டிமன்றத்துல கலந்துகிட்டாங்களானு தெரியாது. ஆனா என்னப் பொறுத்தவரைக்கும் இப்ப நாம எழுதிருக்கோமே - இதுதான் உப்புமாவுக்கு டெபனிஷன். இந்த மாபெரும் உப்புமா மன்றத்துல உங்கள எதிரணியில பேசக்கூப்பிட்டதுல இருக்குற உள்குத்தை புரிஞ்சுக்காம பேசியிருக்காங்க. அக்காதான் இன்னஸெண்டுன்னா தேவு அவர வச்சு காமெடி கீமடி பண்ற்த புரிஞ்சுக்காம ரொம்ப நல்லவர் மாதிரி கச்சேரி நடத்திருக்காரு.


ரெண்டு: கடுகு தாளிக்காம உப்புமா சாப்பிடலாம். ஆனா உப்புமா பண்ணாமா வெறுமனே கடுகு மட்டும் தாளிச்சா சாப்பிட முடியாது.

சாலமன் பாப்பையா

மருத்துவரே வாங்க. மத்த டாக்டருங்க எல்லாம் கை பிடிச்சுப் பார்த்து விஷயம் என்னான்னு சொல்லுவாங்க. நீங்க விஷயம் என்னான்னு சொல்லிட்டு கைத்தட்டலை அள்ளிக்கிட்டீங்க. பாட்டு என்ன, கதை என்னான்னு தூள் கிளப்பிட்டீங்க. இனிமேலாவது அந்த ஸ்ரீதர் வெங்கட் இது பட்டிமன்றம்தான்னு ஒத்துப்பாருன்னு நினைக்கிறேன்.

இப்போ, ரெண்டு அணியும் தங்களுக்குக் கொடுத்த தலைப்பை எடுத்துப் பிரமாதமா பேசிட்டாங்க. கூடவே வந்து பின்னூட்டங்களில் காரசாரமா வெளுத்து வாங்கிட்டாங்க சிலர். இப்போ எல்லாத்தையும் சீர் தூக்கிப் பார்த்து தீர்ப்பு சொல்லும் வேளை வந்தாச்சு.

அதுக்குள்ள டைரக்டர் அங்க என்னமோ கையைக் காட்டறாரே, என்ன விஷயமுன்னு பார்க்கலாம். என்னது ப்ரேக் போகணுமா? சரி சரி.

யாரு வெற்றி பெறப் போறாங்க பின்னூட்டமா, உப்புமாவான்னு பார்க்கறதுக்கு முன்னாடி ஒரு சின்ன ப்ரேக்!


(தொடரும்)

61 comments:

said...

யோவ் டாக்குடரு, என் பதிவில் வந்து கவுஜ எல்லாம் போட்டு இப்படி என்னை இன்ஸல்ட் பண்ணிட்டயேய்யா. இதுக்கே நான் அடுத்த அணிக்கு ஆதரவு தெரிவிக்கணும் போல இருக்கே!!

said...

"ரெண்டு: கடுகு தாளிக்காம உப்புமா சாப்பிடலாம். ஆனா உப்புமா பண்ணாமா வெறுமனே கடுகு மட்டும் தாளிச்சா சாப்பிட முடியாது."

என்ன ஒரு தத்துவம்!!!!!!! டாக்டர் இதான் ஆராய்ச்சி பண்ணி இருக்கார் போலிருக்கு, அது சரி, என்ன யாரையுமே காணோம்? மீ த செகண்டு??????????

said...

ஏங்க ராமநாதன், மருத்துவர் அப்படின்னு சொல்லி கூப்பிட்ட உடனே இப்படித்தான் பேசனும்ன்னு நீங்க முடிவு பண்ணினீங்களா?, இல்ல அது தானா வந்துச்சாங்க?....அப்படியே பமக மருத்துவர் மாதிரி கவுஜ, தத்துவம்ன்னு பொங்கி பிரவாகமா வந்திருக்கு?

said...

//ஒருநாள் அவுரங்கசீப்போட படை துரத்துனதுல உசுருக்கு பயந்து ஒரு கிராமத்து வீட்டுக்கு மாறுவேஷத்துல போய் பசின்னு கேக்க, அங்க ஒரு கிழவி சிவாஜிக்கு 'உப்புமா'வ கிண்டிப்போட்டு...//

பாவம் சிவாஜி. அவரை இதைவிடக் கேவலமா ஆக்க முடியாது(-:

சிங்க மராட்டியன் உசுருக்குப் பயந்து ஓடுனானா........ ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்.....

said...

//
கடுகு தாளிக்காம உப்புமா சாப்பிடலாம். ஆனா உப்புமா பண்ணாமா வெறுமனே கடுகு மட்டும் தாளிச்சா சாப்பிட முடியாது.
//
இது....இது....
பஞ்சி டயலாக்!!

கலக்கல்!

said...

//எல்லாரையும் இன்வால்வ் பண்ண வைக்கிற திறமை இல்லேன்னா இப்படி தொடர்ந்து செய்ய முடியாது. .//

// கடுகு தாளிக்காம உப்புமா சாப்பிடலாம். ஆனா உப்புமா பண்ணாமா வெறுமனே கடுகு மட்டும் தாளிச்சா சாப்பிட முடியாது.//

இது போலச் சுட்டிக் காட்டிக் கொண்டே போகலாம்..உப்புமாக்கு ஒரு பஞ்ச் டயலாக் ரசிக்கும்படி எழுதியதே உப்புமாக்கு வெற்றி..

உப்புமாக் கட்சிக்கு காய் முந்திரி அது இது என்று சேர்த்து மவுசு கூடிக் கொண்டே போகிறது....

பஞ்ச் டயலாக் ....

ஒன்ஸ் மோர்..

(ரிப்பீட்டேய்...patent right மங்களூர் சிவா வாங்கிட்டார்...)

எங்க? எதிரணிப் பக்கம் ப்ரேக்குக்கு அப்றம் ஆளயே காணோம்..உப்புமா சாப்டப் போய்ட்டாங்களா?

said...

வாடா என் தங்க ராசா!

//உப்புமாவ குறைச்சு மதிப்பிட்டா பதிவு ஊத்திக்கும்கறது சிவாஜிக்கு தெரியுது. ஆனா விவாஜி எழுதுற மன்றத்துக்கு தெரியலியே!// அது!!!!!!!!!!!

//கொத்தனாரின் பதிவுகள்ல போய் நீ கொடுத்த தவசதானியத்துக்கு இப்ப நாங்க மொய் வைக்கிறோம்னு பலகாலம் கழிச்சா பின்னூட்டம் போடறாங்க? இங்க பின்னூட்டம் போடறவங்களோட நோக்கம் கொடுத்து வாங்கறது இல்ல. உப்புமா ருசிக்க வந்தவங்கள தப்பா எடை போடலாமா?//

ஆஹா ஆஹா ஆஹா! கண்ல தண்ணி வருதுப்பா!

//இருக்குற உள்குத்தை புரிஞ்சுக்காம பேசியிருக்காங்க// அதேதான்!

புல்லரிக்க வச்சுட்டய்யா.. நம் அணியோட தங்கம்யா நீ!

கொத்ஸு..

//இதுக்கே நான் அடுத்த அணிக்கு ஆதரவு தெரிவிக்கணும் போல இருக்கே!!// இந்த வரிக்காக உம்மை கன்னாபின்னவென்று, கண்கள் சிவக்க, கொலைவெறியோடு உடல் முழுக்க பற்றியெரிய கண்டிக்கலாம்னுதான் வந்தேன்.. ஆனா உம்ம உள்குத்து, போட்டு வாங்கற டெக்னிக் எல்லாம் தெரிஞ்சவன்றதால வெறுமன ஹி ஹி பண்ணிட்டு போயிடறேன்.

said...

//துளசி கோபால் said...
//ஒருநாள் அவுரங்கசீப்போட படை துரத்துனதுல உசுருக்கு பயந்து ஒரு கிராமத்து வீட்டுக்கு மாறுவேஷத்துல போய் பசின்னு கேக்க, அங்க ஒரு கிழவி சிவாஜிக்கு 'உப்புமா'வ கிண்டிப்போட்டு...//

பாவம் சிவாஜி. அவரை இதைவிடக் கேவலமா ஆக்க முடியாது(-:

சிங்க மராட்டியன் உசுருக்குப் பயந்து ஓடுனானா........ ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்.....//

தலைவியாரின் தாகுதலுக்கு ஒரு பெரிய ஓ போட்டு அவர்கள் கருத்துக்கு ஒரு ரிப்பீட்டும் போட்டுக்குறேன் :-))))

said...

பச்சப் புள்ள எல்லாம் பஞ்ச் டயலாக்ன்னு பஞ்சு முட்டாய் காரனை டென்சன் பண்ணிட்டு திரியற காலம் இதுன்னு கரெக்ட்டா டாக்டர் ப்ருவ் பண்ணிட்டார்....

உப்புமா போட்டுத் தான் கொத்ஸ் பொழப்பு நடத்துராருன்னு அவரை இழிவு படுத்த டாக்டரும் இஞ்ஜினியரும் செட் சேந்ததே தப்பு....எப்படின்னு கேக்குறீங்களா...

கண்ணா.. மருத்துவர் மன்னா... எங்க தலைவர் கொத்ஸ் பதிவுங்கற பேர்ல்ல உப்புமா எல்லாம் போட வேணாம்ய்யா... உ அப்படின்னு ஒரு எழுத்தைப் போட்டுட்டு... அந்த உ வை ஏன் பதிவாப் போட்டேன்னு முதல் ஆளா பின்னூட்டத்திலே போய் கருத்துச் சொல்லுவார் பாரு...அங்கே தெரியும்ய்யா அவரோட பின்னூட்ட லட்சிய வெறி....

மராட்டிய வீரனின் வரலாறையே உப்புமா சட்டிக்குள் சட்டைக் கழற்றி உக்கார வைக்க நீ சொன்னக் குட்டி ( குட்டின்னா குட்டியே தான் அதாவது சின்ன... ஸ்மால்... ) கதையிலே விளங்கிவிட்டது உப்புமா வெறி யாருக்கு என....

இந்த பட்டி மன்ற பதிவுகளின் பின்னூட்டங்களையே உற்று பாருங்கள்... முதல் பின்னூட்டம் யார் போட்டிருக்கான்னு.. பின்னூட்டக் கொள்கை வீரன்... பின்னூட்ட பாசறையின் வீரத் தளபதி.. இனமான பின்னூட்ட மக்களின் ஒப்பற்ற உலகத் தலைவன் எங்கள் கொத்தனார் தானே... அதையும் ஒரு சட்டி உப்புமாவுக்குள் மறைக்க நினைத்தால்... நீங்கள் தின்னும் உப்புமா உங்களுக்கே செறிக்காது என மிகத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்....

said...

//உ அப்படின்னு ஒரு எழுத்தைப் போட்டுட்டு... அந்த உ வை ஏன் பதிவாப் போட்டேன்னு முதல் ஆளா பின்னூட்டத்திலே போய் கருத்துச் சொல்லுவார் பாரு...அங்கே தெரியும்ய்யா அவரோட பின்னூட்ட லட்சிய வெறி....//

சூப்பரப்பு...

said...

//
பாச மலர் said...

பஞ்ச் டயலாக் ....

ஒன்ஸ் மோர்..

(ரிப்பீட்டேய்...patent right மங்களூர் சிவா வாங்கிட்டார்...)
//
அடேங்கப்பா பாசமலரின் பாசம் புல்லரிக்க வைக்குது. போன போஸ்ட்ல நான் போட்ட கமெண்ட்ட ஞாபகம் வெச்சு இங்க சுட்டிக்காட்டியிருக்கீங்க!!

நான் போட்ட கமெண்ட் இதுதான்
- - - - - - - - - -
Repeateyyyyyyyyy (R)
(Patent reserved)
- - - - - - - - - -

இப்ப ஒருத்தர் எதுக்காவது பேடண்ட் வாங்கீட்டா நாம அத செய்யாம விட்ருவமா லைட்டா அப்டி இப்டி மாத்தி நாம புது பேடண்ட் வாங்கி அதயே செய்யறதில்ல??

அது இங்கிலீஷ் Repeateyyyyyyyyy

அப்டீனு சொல்லிகிட்டு

ரிப்பீ (இது அர்ஜன்ட்ல போடறது 'ட்' போட டைம் இல்லாம)
ரிபீட் (இங்க 'ப்' போட டைம் இல்ல)
ரிப்ப்பீட்
ரிப்பீட்டேய்
ரிப்ப்பீட்டேய்
ரிப்ப்பீட்டேய்ய்
ரிப்ப்பீட்ட்டேய்ய்
இப்பிடி நிறைய பெர்முட்டேஷன் காம்பினேஷன் போட்டு நீங்க கூட பேடண்ட் வாங்கிக்கலாம்!!

said...

//என் பதிவில் வந்து கவுஜ எல்லாம் போட்டு இப்படி என்னை இன்ஸல்ட் பண்ணிட்டயேய்யா. //

கஷ்டப்பட்டு திருவாசக பாட்டையெல்லாம் டகால்டி பண்ணிருக்கேன். இதுக்காக எதிரிக்கட்சிக்கு வோட்டு போடுவீரா?

நீங்களும் பமக தான். எங்கள் பக்கம் தானு சாலமன் பாப்பையா வேடமேற்றிருக்கும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

said...

அதான் காலையிலேயே வந்து "உப்புமா" சாப்பிட்டுப் போயாச்சே, திரும்பவும் டாக்டர் வந்து அதே உப்புமா சாப்பிடக் கூப்பிட்டா என்ன அர்த்தம்? கட்சி மாறிடலாமானு பார்க்கிறேன்!!!!!! :P

said...

உப்புமா பதிவுலகின் சக்கரவத்தி னு சும்மாவா சொன்னாங்க டாக்ஸ்...

என்னமா கிண்டி இருக்காரு பாருங்க...

உப்புமாவின் சுவை இன்று தூக்கல் :)

said...

//நீங்கள் தின்னும் உப்புமா உங்களுக்கே செறிக்காது என மிகத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்....//

டாக்டருக்கே செறிக்காதுனு சாபமா... அதுக்கு அவரை விட நல்லா டாக்டருக்கிட்ட மாத்திரை வாங்கி சரி பண்ணிப்பார் விடுங்க...

said...

//கடுகு தாளிக்காம உப்புமா சாப்பிடலாம். ஆனா உப்புமா பண்ணாமா வெறுமனே கடுகு மட்டும் தாளிச்சா சாப்பிட முடியாது."//

டாக்ஸ்... நார்மலா வெள்ளிக்கிழமை நைட் தானே இது போல பேசுற(தத்துவம் கக்குற) வியாதி. இன்னிக்கு என்ன வியாழக்கிழமையே ஸ்டார்ட் பண்ணிட்டீங்க.....

said...

//"ரெண்டு: கடுகு தாளிக்காம உப்புமா சாப்பிடலாம். ஆனா உப்புமா பண்ணாமா வெறுமனே கடுகு மட்டும் தாளிச்சா சாப்பிட முடியாது."//

உப்புமாவில் உப்பு இருக்கு ஆனா பின்னூட்டாத்தில் பின் இருக்கா? என்ற தத்துவம் கூட சொல்லி இருக்கலாம் இல்லையா கீதாம்மா!!

// மீ த செகண்டு??????????//

மத்த பதிவுகளுக்கு எல்லாம் லேட்டா வருவீங்க. ஆனா இந்தப் பதிவுக்கு நீங்க சீக்கிரமா வந்த பின்னாடி மத்தவங்க வர பயப்படறாங்களே!

said...

//:)))))))))))))))))0//

வாங்க டெல்பீனக்கா, மத்த பதிவு எல்லாமும் படிச்சாச்சா?

said...

//அப்படியே பமக மருத்துவர் மாதிரி கவுஜ, தத்துவம்ன்னு பொங்கி பிரவாகமா வந்திருக்கு?//

இவருதாங்க பமக மருத்துவர். நீங்க இங்க கொஞ்சம் புதுசா, அதனால முழு விபரம் தெரியலை.

கொஞ்சம் பச்சோந்தி மக்கள் கட்சி எனத் தேடிப் பாருங்கள். :)

said...

//பாவம் சிவாஜி. அவரை இதைவிடக் கேவலமா ஆக்க முடியாது(-:

சிங்க மராட்டியன் உசுருக்குப் பயந்து ஓடுனானா........ ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்.....//

ரீச்சர், பின்னாடி பெரிய காரியமெல்லாம் சாதிக்கணும் அப்படின்னா சில சமயங்களில் பின் வாங்க வேண்டியது வரும். அது தப்பா?

இந்த வெற்றி அல்லது வீர மரணம் என்ற கான்செப்ட் எல்லாம் சினிமாவில் வசனம் பேசத்தான் சரி.

இது என் தாழ்மையான கருத்து.

said...

//இது....இது....
பஞ்சி டயலாக்!!

கலக்கல்!//

மங்களூர் சிவா, இந்த மாதிரி கலக்கல், ரிப்பீட்டேன்னு போட்டே ஓட்டறீங்களே!! நல்லாத் தொழில் கத்துக்கிட்டீங்க.

said...

//இது போலச் சுட்டிக் காட்டிக் கொண்டே போகலாம்..உப்புமாக்கு ஒரு பஞ்ச் டயலாக் ரசிக்கும்படி எழுதியதே உப்புமாக்கு வெற்றி..

உப்புமாக் கட்சிக்கு காய் முந்திரி அது இது என்று சேர்த்து மவுசு கூடிக் கொண்டே போகிறது....//

ஹிஹி, நீங்க உப்புமா கட்சிக்குத்தான் ஆதரவாமே!!

//எங்க? எதிரணிப் பக்கம் ப்ரேக்குக்கு அப்றம் ஆளயே காணோம்..உப்புமா சாப்டப் போய்ட்டாங்களா?//

இல்லீங்களே! முதலில் துளசி ரீச்சர், அடுத்தது பெனாத்தல், அப்புறமா தேவ் இப்போ டாக்குடரு அப்படின்னு வரிசையாத்தானே வருது!

said...

//புல்லரிக்க வச்சுட்டய்யா.. நம் அணியோட தங்கம்யா நீ!//

உங்க அணி தங்கத்துக்கு தங்கமணி (தங்கம்+அணி - இப்போ தெரியுதா ஏன் நகைக்கடைகளில் கூட்டமுன்னு!) ஒண்ணு பாருங்க.

//இந்த வரிக்காக உம்மை கன்னாபின்னவென்று, கண்கள் சிவக்க, கொலைவெறியோடு உடல் முழுக்க பற்றியெரிய கண்டிக்கலாம்னுதான் வந்தேன்.. ஆனா உம்ம உள்குத்து, போட்டு வாங்கற டெக்னிக் எல்லாம் தெரிஞ்சவன்றதால வெறுமன ஹி ஹி பண்ணிட்டு போயிடறேன்.//

நானும் ஹிஹி சொல்லிக்கிறேன்.

said...

//தலைவியாரின் தாகுதலுக்கு ஒரு பெரிய ஓ போட்டு அவர்கள் கருத்துக்கு ஒரு ரிப்பீட்டும் போட்டுக்குறேன் :-))))//

அப்படியே நான் போட்ட பதிலையும் படிங்க. அப்பா, ஒரு கூட்டமாத்த்டேன் அலையுறாங்கப்பா.

said...

//. உ அப்படின்னு ஒரு எழுத்தைப் போட்டுட்டு... அந்த உ வை ஏன் பதிவாப் போட்டேன்னு முதல் ஆளா பின்னூட்டத்திலே போய் கருத்துச் சொல்லுவார் பாரு//

ஏம்பா, அவங்க அப்படி போடற பின்னூட்டமே உப்புமாதான் அப்படின்னு சொல்லறாங்களே!

said...

//சூப்பரப்பு...//

அனானி, ரொம்ப நன்றியப்பூ!

said...

//இப்பிடி நிறைய பெர்முட்டேஷன் காம்பினேஷன் போட்டு நீங்க கூட பேடண்ட் வாங்கிக்கலாம்!!//

ரிப்பீ
ரிபீட்
ரிப்ப்பீட்
ரிப்பீட்டேய்
ரிப்ப்பீட்டேய்
ரிப்ப்பீட்டேய்ய்
ரிப்ப்பீட்ட்டேய்ய்!! :))

said...

//கஷ்டப்பட்டு திருவாசக பாட்டையெல்லாம் டகால்டி பண்ணிருக்கேன். இதுக்காக எதிரிக்கட்சிக்கு வோட்டு போடுவீரா?//

ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசமய்யா எனச் சொல்லத்தான் நினைத்தேன். ஆனா ஆழ் மனதில் ஒருத்தன் உல்டா செஞ்சாலும் இது கவுஜாதானேன்னு கேள்வி கேட்டதில் இருந்த நியாயத்தைப் புரிந்து கொண்டதால்....

//நீங்களும் பமக தான். எங்கள் பக்கம் தானு சாலமன் பாப்பையா வேடமேற்றிருக்கும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.//

நாங்க ஒரு வேடம் ஏற்றுக் கொண்டேன் என்றால் அந்தப் பாத்திரமாகவே மாறி விடுவேன் என்பது உமக்குத் தெரியாத விஷயம் இல்லை. இப்படி கட்சி செண்டிமெண்ட் எல்லாம் அங்க போடக்கூடாது என்பதும் உமக்குத் தெரியாததில்லை!! :))

said...

//அதான் காலையிலேயே வந்து "உப்புமா" சாப்பிட்டுப் போயாச்சே, திரும்பவும் டாக்டர் வந்து அதே உப்புமா சாப்பிடக் கூப்பிட்டா என்ன அர்த்தம்? கட்சி மாறிடலாமானு பார்க்கிறேன்!!!!!! :P//

உங்களுக்கு ரெண்டு இடத்தில் இருந்து அழைப்பு வந்திருக்கு. நீங்களும் ரெண்டு தடவை உப்புமா சாப்பிட்டுட்டீங்க. :))

said...

//உப்புமா பதிவுலகின் சக்கரவத்தி னு சும்மாவா சொன்னாங்க டாக்ஸ்...

என்னமா கிண்டி இருக்காரு பாருங்க...

உப்புமாவின் சுவை இன்று தூக்கல் :)//

புலி, உப்புமா சக்கரவத்தியா? அது எப்போ?

:))

said...

//டாக்டருக்கே செறிக்காதுனு சாபமா... அதுக்கு அவரை விட நல்லா டாக்டருக்கிட்ட மாத்திரை வாங்கி சரி பண்ணிப்பார் விடுங்க...//

செறிக்காதா? செரிக்காதா? நான் ரெண்டாவதுதான் சரியான முறைன்னு நினைக்கிறேன்.

மத்தபடி நல்ல டாக்குடரு பத்தி எல்லாம் நீங்க பேசினது எல்லாம் என் காதில் விழலை!

said...

//டாக்ஸ்... நார்மலா வெள்ளிக்கிழமை நைட் தானே இது போல பேசுற(தத்துவம் கக்குற) வியாதி. இன்னிக்கு என்ன வியாழக்கிழமையே ஸ்டார்ட் பண்ணிட்டீங்க.....//

இப்போ எல்லாம் வியாழன் வெள்ளி எல்லாம் கணக்கே இல்லை புலி, வாயைத் திறந்தாலே தத்துவம்தான்!!

said...

சபாஷ்! சரியான போட்டி!

said...

ஆமாம் இரவி. சரியான போட்டிதான். யாரு ஜெயிக்கப் போறாங்கன்னு பொறுத்திருந்து பார்க்கலாம். :)

said...

//
இலவசக்கொத்தனார் said...
//இது....இது....
பஞ்சி டயலாக்!!

கலக்கல்!//

மங்களூர் சிவா, இந்த மாதிரி கலக்கல், ரிப்பீட்டேன்னு போட்டே ஓட்டறீங்களே!! நல்லாத் தொழில் கத்துக்கிட்டீங்க.
//
என்னங்க பன்றது நினைக்கிறது எல்லாம் பின்னூட்டம் போட்டா அனானியா வந்து நீங்களே திட்ட மாட்டீங்க??

எவ்ள எடத்துல வாங்கியிருப்போம்!!!!

அவ்வ்வ்வ்வ்வ்

said...

நல்லாதான் போயிட்டிருக்கு.

டாக்டர் என்னதான் உப்புமாவ புகழ்ந்து பேசினாலும் அவரோட 'பின்னூட்ட கோனார் நோட்ஸ்'தான் ஞாபகத்தில நிக்குது :-))

உப்புமாக்கு கடுகு தாளிக்கற மாதிரி பதிவுக்கு பின்னூட்டம்கறது சரிதான். ஆனா 300 - 400 ன்னு எகிறும்போது கடுகு உப்புமால்ல ரவையை தாளிச்ச (என்ன உவமைடா சாமி!) மாதிரி இருக்காது? :-))))

said...

//உப்புமா ருசிக்க வந்தவங்கள தப்பா எடை போடலாமா?//

இது! இது! இது!

//கல்லிடைஉள் குத்தனே தென்பாண்டி நாட்டானே!//

அய்யா வோட்காதிபதியே! என்னய்யா வாசகம் அது? தெருவாசகமா? உபவாசகமா? உப்புமா வாசகமா?
உள் குத்தனே, பாண்டிச் சித்தனே! பின்னூட்டப் பித்தனே! உப்புமாப் புத்தனே! ன்னு என்னய்யா வாசகம்! :-)

//பொல்லா வினையேன் புகழு மாறு ஒன்று அறியேன்!//

இலவசமாக் கொத்தினேன் இகழு மாறு பல அறிவேன்-னு...நாட்டாமை வாசகத்தை மாத்திச் சொல்லு! :-)

said...

//துளசி கோபால் said...
பாவம் சிவாஜி. அவரை இதைவிடக் கேவலமா ஆக்க முடியாது(-:
சிங்க மராட்டியன் உசுருக்குப் பயந்து ஓடுனானா........ ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்.....//

டீச்சர்...
ஒரு கரண்டி உப்புமாவுக்காக
ஒரு கோடிப் பின்னூட்டங்களின் (ஐ மீன்) ஒரு கோடிப் படைகளின் தலைவனை இழிவு செய்து, வோட்கா வேந்தனை முறம் கொண்டு விரட்டுங்க! :-)

ஒரு கரண்டி உப்புமாவால் சரித்திரம் மாறாது!
அரை கரண்டி உப்புமாவால் உண்மைகள் ஊறாது!
கால் கரண்டி உப்புமாவால் கவலைகள் தீராது!
வெறுங் கரண்டி உப்புமாவால் மருந்துக் கட்சி தேறாது!!!

நடுவருக்கெல்லாம் நடுவரே, நீங்கள் உரைக்கப் போகும் தீர்ப்பு, பதிவுலகின் தலையெழுத்தை மாற்ற வல்ல தீர்ப்பு என்பதை மனத்தில் இருத்தி, பொறுப்புக்குப் பொறுப்பு சேர்ப்பீர்கள் என்று நம்புகிறோம்!

said...

//தேவ் | Dev said...
அதையும் ஒரு சட்டி உப்புமாவுக்குள் மறைக்க நினைத்தால்... நீங்கள் தின்னும் உப்புமா உங்களுக்கே செறிக்காது என மிகத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்....//

தேவ் அண்ணா தாழ்மையுடன் காழ்மையின்றி, பின்னூட்ட ஏழ்மையின்றி, பதிவறியாப் பாழ்மையின்றிச் சொல்லி இருக்காரு!

ஒரு பானை உப்புமாவுக்கும் ஒரே ஒரு பின்னூட்டம் பதம்!
ஒரு அண்டா உப்புமாவுக்கு ஒராயிரம் பின்னூட்டம் நிதம்!!
இதுதெரியா உப்புமா கட்சி, கதம் கதம்!!!

என்று தலைவர் படத்தில் சொன்னதை மறக்க மாட்டீர்கள் என்று தெரியும் நடுவர் அவர்களே!

said...

//என்னங்க பன்றது நினைக்கிறது எல்லாம் பின்னூட்டம் போட்டா அனானியா வந்து நீங்களே திட்ட மாட்டீங்க??//

சிவா நாங்க எல்லாம் வந்த ஸ்ட்ரெயிட் அடிதான். இந்த அனானி ஆட்டமெல்லாம் கிடையாது.

said...

//டாக்டர் என்னதான் உப்புமாவ புகழ்ந்து பேசினாலும் அவரோட 'பின்னூட்ட கோனார் நோட்ஸ்'தான் ஞாபகத்தில நிக்குது :-))//

அடுத்தது உப்புமா பார் டம்மீஸ் எழுதச் சொல்ல வேண்டியதுதான். :)

//(என்ன உவமைடா சாமி!)//

ரிப்பீட்டேய்!!

said...

//இலவசமாக் கொத்தினேன் இகழு மாறு பல அறிவேன்-னு...நாட்டாமை வாசகத்தை மாத்திச் சொல்லு! :-)//

ரவி, என்னைப் பத்தி நல்லாத் தெரிஞ்சும் நீரும் கூட்டத்தோட சேர்ந்து கவுஜ பாடறீரு பாரும். உம்மை..

said...

100வது உப்புமாவிற்கு வாழ்த்துக்கள்.

பட்டிமன்றத்திற்கு பதில் உப்புமா செய்வதற்கு முன் சுடு தண்ணீர் வைப்பது எப்படி என்று ஒரு பதிவை போட்டிருந்தால் பின்னூட்டம் சூடு கிளப்பி இருக்கும் என்று நினைக்கிறேன்.
தீர்ப்பு உப்புமாதான் என்று தெள்ள தெளிவாய் தெரிகிறது. நூறாவது பதிவு என்று சொல்லி அதை 103 ஆக ஆக்கியதால்.

அரசு

said...

//ஒரு பானை உப்புமாவுக்கும் ஒரே ஒரு பின்னூட்டம் பதம்!
ஒரு அண்டா உப்புமாவுக்கு ஒராயிரம் பின்னூட்டம் நிதம்!!
இதுதெரியா உப்புமா கட்சி, கதம் கதம்!!!//

தெய்வமே கே.ஆர்.எஸ் எங்கேயோ போயிட்டீங்க...அவ்வ்வ்வ்வ்

said...

மதுரையம்பதி,
//பமக மருத்துவர் மாதிரி கவுஜ, தத்துவம்ன்னு பொங்கி பிரவாகமா வந்திருக்கு?//
ஹி ஹி.. நான் தாங்க அசல் அக்மார்க் பமக மருத்துவர்.

ஒரு கால் விட்டிருக்கு பாருங்க. கொத்ஸ் சொன்னா மாதிரி கொஞ்சம் கூகிள்ல தேடிப்பாருங்க.

said...

அக்கா,
//சிங்க மராட்டியன் உசுருக்குப் பயந்து ஓடுனானா........ ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்.....//

சிவாஜி தலைமறைவா போனது உண்மைதானே? ஹிஸ்டரி ரீச்சரே திரிச்சா அப்புறம் மிஸ்டரி ஆயிடும்.

அப்புறம் கேவலப்படுத்தல. படுத்தினாதான் என்ன. அவர் என்ன தமிழனா? எதுவும் சொல்லக்கூடாதுன்னு ஃபட்வா போட? அப்புறம் இந்த ரெட்ரீட்டெல்லாம் ஆர்ட் ஆப் வார்ல முக்கியமான பாடம்.

said...

மங்களூர் சிவா, பாசமலர்
ரொம்ப நன்னி.

வலையுலக அரசியலெல்லாம் கத்துத்தேர்ந்துட்டீங்கனு நல்லாத்தெரியுது.

பின்ன கோப்பிரைர்னு பதம் யூஸ் பண்ணாம பேடண்ட்னு பயன்படுத்திருக்கீங்களே. அங்கன தான் நீங்க நிக்கறீங்க. :)

said...

உப்புமாமாவே,
ஆகா குருவின் பெருந்தன்மையே பெருந்தன்மை.

கொத்ஸு துள்ளிகிட்டுதான் இருக்கார். ஏற்கனவே நம்ம அணிக்கு எதிரா ஒரு மிகப்பெரும் சூழ்ச்சி நடத்த முயற்சி பண்ணினாரு. இந்தத் தேர்தல்ல நாம ஜெயிக்கலேன்னா தேர்தல் செல்லாதுன்னு ஐரோப்பிய ஒன்றியத்திடம் கம்ப்ளெயிண்ட் கொடுத்துடுவோம்.

said...

தேவு,
//அந்த உ வை ஏன் பதிவாப் போட்டேன்னு முதல் ஆளா பின்னூட்டத்திலே போய் கருத்துச் சொல்லுவார் பாரு...அங்கே தெரியும்ய்யா அவரோட பின்னூட்ட லட்சிய வெறி....//
இதுக்கு ஏற்கனவே இங்க யாரோ பதில் சொல்லிட்டாங்க.

//மராட்டிய வீரனின் வரலாறையே உப்புமா சட்டிக்குள் சட்டைக் கழற்றி உக்கார வைக்க//
உப்புமா கூட சாப்பிடத்தெரியாத நீயெல்லாம் என்னத்த சாதிக்க போறானு அந்த கிழவி போட்ட அதட்டலுக்கப்புறம்தான் சிவாஜி சத்ரபதீ ஆனாருங்கறது வரலாறு.

//உப்புமா போட்டுத் தான் கொத்ஸ் பொழப்பு நடத்துராருன்னு அவரை இழிவு படுத்த டாக்டரும் இஞ்ஜினியரும் செட் சேந்ததே தப்பு....எப்படின்னு கேக்குறீங்களா...//

ஊர் ஊராப் போயி பின்னூட்டம் போட்டு அவர் (பின்னூட்ட) பஜனை பாடி சொந்தப் பதிவுல உஞ்சவிருத்தி செய்கிறார்னு நீர் சொன்னத விட நான் சொன்னது ஒண்ணும் கேவலமில்லை.

(ஆகமொத்தம் கொத்தனாரை திட்டியாச்சு. நம்ம ப்ளான் டபுள் சக்ஸஸ்! champagneeeeeeeeeeeee... dev!)

said...

கீதாக்கா,
//திரும்பவும் டாக்டர் வந்து அதே உப்புமா சாப்பிடக் கூப்பிட்டா என்ன அர்த்தம்?//

திரும்ப மைக்ரோவேவ்ல சூடு பண்ணி எடுத்துவச்சிருக்கோம்னு அர்த்தம். மூணு வேளையும் உப்புமா சாப்பிடலாமே. உடம்புக்கும் நல்லது. :)

said...

புலி,
பெனாத்தலார் இருக்கும்போது இந்தப் பட்டமா? எனக்கா?

இருக்கட்டும். டாக்டர் விஜய் டாக்டர் விஷாலெல்லாம் இருக்கும்போது டாக்டர் மன்மோகன் சிங்கும் இருக்காரே.. அந்த மாதிரி பெனாத்தலார் நினச்சுப்பாரு.

யார் என்ன னு எல்லாம் கேள்வி கேக்கப்படாது.

said...

//அதுக்கு அவரை விட நல்லா டாக்டருக்கிட்ட மாத்திரை வாங்கி சரி பண்ணிப்பார் விடுங்க.//

ஹூம்.. பஞ்சு..? இருக்கட்டும் இருக்கட்டும்.

said...

//இன்னிக்கு என்ன வியாழக்கிழமையே ஸ்டார்ட் பண்ணிட்டீங்க.....//
வெள்ளியென்ன வியாழனென்ன? நமக்கெல்லாம் எந்நாளும் தீபாவளி!

said...

கொத்ஸு,
//இப்படி கட்சி செண்டிமெண்ட் எல்லாம் அங்க போடக்கூடாது என்பதும் உமக்குத் தெரியாததில்லை!! :))//

இந்த பட்டிமன்ற விழா முடிஞ்சப்புறம் பாப்பையா அவர் வேலையப் பாத்துட்டு போயிடுவாரு.

ஆனா காலத்துக்கும் இங்கேயேதான் பமக இருக்குமென்ற உண்மையை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

said...

ஸ்ரீதர்,
//அவரோட 'பின்னூட்ட கோனார் நோட்ஸ்'தான் ஞாபகத்தில நிக்குது :-))//

அதானே.. நோட்ஸ் போட்ட நாங்களே உப்புமானு சொல்லும்போது எல்லாரும் ஒத்துக்கவேணாமா? அதானே ஜனநாயகம்?

there's pride in your work, and then there's arroganceனு எல்லாம் யாரும் போட்டு குழப்பிக்கவேணாம். இதெல்லாம் மேட்டர்-ஆப்-பாக்ட்லியா அநுபவிக்கணும்.

said...

KRS,
//தெருவாசகமா? உபவாசகமா? உப்புமா வாசகமா?
உள் குத்தனே, பாண்டிச் சித்தனே! பின்னூட்டப் பித்தனே! உப்புமாப் புத்தனே! ன்னு என்னய்யா வாசகம்! :-)//
கண்ணபிரான்னு பேர வச்சுகிட்டு இங்க வந்து இருக்கும் நபரிடமிருந்து சைவத் திருமுறையின் அடியொற்றிய இந்த கவுஜயின் பெருமையைக் குறித்த புரிதல்(ந்துகொள்ளல்களை) எதிர்பார்க்க முடியாது என்பதால் விட்டுவிடுகிறேன்.

My God can beat the shit out of your God!!!! தெரிஞ்சுக்கோங்க. :P

குமரன் எங்கப்பா? :)))))

said...

அரசு,
அரசே நல்ல தீர்ப்பு சொன்னப்புறம் அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் படியேறும் நயவஞ்சகர்களின் சூழ்ச்சிகள் வெளிப்படும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை.

said...

//நூறாவது பதிவு என்று சொல்லி அதை 103 ஆக ஆக்கியதால்.//
இதேதான் நானும் சொல்றேன்..


வெறும் நூறாவது பதிவுன்னு போட்டிருந்தா வாழ்த்தூஸ் மட்டுமே வந்திருக்கும். அதுலையே வெறியோட (பின்னூட்ட வெறி இருந்திருந்தா) அடிச்சு ஆடியிருக்கலாமே?

அத விட்டு நூறாவது பதிவைப் பற்றியே எக்ஸ்ட்ரா நாலு பதிவு போடுவது உப்புமா வெறியா பின்னூட்ட வெறியான்னு சபையோர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறென்.

said...

//எங்க? எதிரணிப் பக்கம் ப்ரேக்குக்கு அப்றம் ஆளயே காணோம்..உப்புமா சாப்டப் போய்ட்டாங்களா?//

இல்லீங்களே! முதலில் துளசி ரீச்சர், அடுத்தது பெனாத்தல், அப்புறமா தேவ் இப்போ டாக்குடரு அப்படின்னு வரிசையாத்தானே வருது!//

இது ஒரு effectக்காக சொன்னதுங்கோ..

அதாவது அடுத்துப் பேச ஆள் இல்லாம எதிர் அணி உப்புமாகட்சிக்கு வந்துட்டாங்கன்னு சொன்னது...

said...

//குமரன் எங்கப்பா? :)))))//

ஒரு காலத்துல இராகவனைப் பாத்தா குமரன் எங்கேன்னு கேட்டாங்க. இப்ப இரவிசங்கரைப் பாத்து கேக்குறாங்க. காலம் மாறிப்போச்சிப்பூ. இராகவன் நோட் திஸ் பாய்ன்ட்.

said...

இந்த பமக மருத்துவர் சொன்னதை எல்லாம் படிச்ச பின்னாடி கொஞ்சம் கொழப்பமாத் தேன் இருக்கு. நான் எதுக்கு பின்னூட்ட வெறி தான் கரெகிட்டுன்னு சொன்னேனோ அதையே உப்புமாவுக்கும் சொல்லுறாரு. பாப்போம் பாப்பையா என்னத்த சொல்றாருன்னு.