Sunday, December 09, 2007

பூ பூக்கும் மாசம் தை மாசம் - ஆனா எங்க ஊரில் இல்லை!

நான் பாட்டு என் வேலையைப் பார்த்துக்கிட்டு இருந்தேன். என்னை உசுப்பி விட்டு புகைப்படப் போட்டியில் கலந்துக்க வைச்சாரு நம்ம வெண்பா வாத்தி. அப்புறம் பாருங்க. நம்ம பதிவை கணக்கில் கூட எடுத்துக்கலை. சரி போகட்டும். ஆனா அந்த முறை எடுத்த படத்தை அப்படியே போட்டுட்டேன். ஆனா எடுத்த படத்தை கொஞ்சம் மேம்'படுத்தி'ப் போடணும் அதுக்காக பிக்காஸா, ஜிம்ப் என என்னென்னமோ சொல்லிக்குடுக்கப் பார்த்தாரு. ஆனா நம்ம மண்டையில்ல ஏறும் மேட்டர்தானே ஏறும். சரி போகட்டும்.

இந்த மாதம் தலைப்பு என்னடான்னா மலர்களாம். அங்க நான் சொன்னேன் - "புதுசா படமெடுக்கப் போகலாமுன்னு பார்த்தா மரத்துல இலை கூட இல்லை!! நல்லா தலைப்பு குடுத்தீங்க போங்க!!" நான் சொன்னதில் நம்பிக்கை இல்லைன்னா இந்த படத்தைப் பாருங்க.

பின்ன என்னங்க. இங்க எல்லாம் மரங்கள் இலை இல்லாம இருக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு தலைப்பைக் குடுத்தது பூமியில் வடப்பக்கம் வாழும் தமிழர்களுக்கு எதிரான சதிதான். இளவேனிற் காலம் ஆரம்பித்திருக்கும் தெற்கு வாழ்கிறது, வடக்கு தேய்கிறது. இதற்குத் துணை போன அனைத்து வலைப்பதிவர்களுக்கும் என் கண்டனங்கள்.

சரி போகட்டும். பரணில் (அட அந்தப் பரண் இல்லைங்க, இது நம்ம பரண்) கிடந்த படங்களை கொஞ்சம் தூசி தட்டிப் போட்டு இருக்கேன். இந்த போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலை எல்லாம் இது வரை செஞ்சதில்லை. இதான் முதல் முறை. நல்லா இருக்கான்னு சொல்லுங்க.என்னடா இது சுவாரசியமா எதுவும் இல்லையே என்று ரென்சனாகும் நண்பர்களுக்காக இது. ரொம்ப நாள் கழிச்சு ரெண்டு நண்பர்கள் சமீபத்தில் பதிவு போட்டு இருக்காங்க. ஒண்ணு நம்ம கால்கரி சிவா, ரெண்டாவது விட்டது சிகப்பு. ரெண்டு பேரும் அவங்க அவங்க ஸ்டைலில் எழுதி இருந்தாலும் சிவாண்ணா எழுதி இருக்கும் பின்குறிப்பு என்னமோ நம்மளை உறுத்திக்கிட்டே இருக்கு. நீங்களும் ரெண்டு பதிவையும் பாருங்க.

38 comments:

said...

என் ஐடியாப் படி சீர் திருத்தப்பட்ட இரண்டாவது மற்றும் மூன்றாவது பூக்களை போட்டிக்கு அளிக்கலாம் என நினைக்கிறேன். உங்கள் சாய்ஸ் எது?

said...

2வதும் 3வதும் சூப்பர். வண்டு பூ கிட்ட போற படம் க்ளாஸ் ஷாட்.

வாழ்த்துகள்.

said...

ரொம்ப நாள் கழிச்சு ரெண்டு நண்பர்கள் சமீபத்தில் பதிவு போட்டு இருக்காங்க. ஒண்ணு நம்ம கால்கரி சிவா, ரெண்டாவது விட்டது சிகப்பு. ரெண்டு பேரும் அவங்க அவங்க ஸ்டைலில் எழுதி இருந்தாலும் சிவாண்ணா எழுதி இருக்கும் பின்குறிப்பு என்னமோ நம்மளை உறுத்திக்கிட்டே இருக்கு. நீங்களும் ரெண்டு பதிவையும் பாருங்க//

எனக்கு என்னமோ "எங்கப்பா குதிர்க்குள்ளே இல்லே" பழமொழிதான் நினைவுக்கு வருது :-))))))))))))))

said...

2 & 3 தான் என் சாய்சும் கூட....


//இளவேனிற் காலம் ஆரம்பித்திருக்கும் தெற்கு வாழ்கிறது, வடக்கு தேய்கிறது//

என்னய்யா, ப்லொக்கர் போட்டி வச்சா கூட (தென்னைமரத்தில் தேள் கொட்டினா) தமிழ் நாட்டு அரசியல் ஞாபகம் வருதா?

said...

//எனக்கு என்னமோ "எங்கப்பா குதிர்க்குள்ளே இல்லே" பழமொழிதான் நினைவுக்கு வருது :-))))))))))))))//

ரீப்பீட்டே...

said...

flower3 நல்லாயிருக்கு.

flower2 ரொம்ப வெள்ள அடிச்சிட்டீங்க.

என்னது? போன மாசம் ஆட்டையில் சேத்துக்கலியா? அடடா, கவனிக்காம போயிட்டனே.
இனிமே, இந்த மாதிரி ஆச்சுன்னா, எனக்கு அனுப்ப வேண்டியது அனுப்பினீங்கன்னா, ஏற்பாடூ செஞ்சுடறேன் ;)

said...

எல்லாமே நல்லா இருக்கு, வண்டு தான் என் சாய்ஸ்!

said...

2 & 3 ரெண்டும் நல்லாருக்கு

said...

பூக்கள் எல்லாம் அழகாத்தானே இருக்கு.அப்புறமென்ன கவலை?

ஆனா அந்த கடைசிப் பூ எனக்கு பிடிச்சிருக்கு.

said...

//இந்த மாதம் தலைப்பு என்னடான்னா மலர்களாம். அங்க நான் சொன்னேன் - "புதுசா படமெடுக்கப் போகலாமுன்னு பார்த்தா மரத்துல இலை கூட இல்லை!! நல்லா தலைப்பு குடுத்தீங்க போங்க!!" நான் சொன்னதில் நம்பிக்கை இல்லைன்னா இந்த படத்தைப் பாருங்க./////

அதுக்கு நான் ஒரு மறுமொழி கொடுத்திருந்தேனே அண்ணாச்சி!!

//@இலவசகொத்தனார்
உங்க ஊர்ல இல்லாத பூக்களா?? பக்கத்து கடைக்கு போனா நிறைய ப்ளாஸ்டிக் மலர்கள் கிடைக்க போகுது!!
இல்லைனா ரோஜா கொத்துக்கள் கிடைக்கும்,வாங்கிட்டு நாலு படம் எடுத்துட்டு, உங்க தங்கமணி கிட்ட கொடுத்து விடுங்க!! அவங்களும் சந்தோஷப்படுவாங்க!!
Land of oppurtunities-la இல்லாத வாய்ப்புகளா?? :-)////

உங்க தங்கமணிக்கு பூ வாங்கி தரணும்னு உங்களுக்கு தோணல!அதுக்கு நான் என்ன பண்ண??? (அப்பாடி!! வந்ததுக்கு கொளுத்தி போட்டாச்சு!! :P)

said...

முதல் படம்.. வேண்டாம் அதைப்பற்றி சொல்லவேண்டாம். :-))
இரண்டாவது,நிஜமாகவே சொல்லுங்க நீங்க எடுத்தது தானா?

said...

நீங்களும் இந்தத் தில்லாலங்கடி வேலையெல்லாம் ஆரம்பிச்சிட்டீங்களா? நல்லா இருக்கு!

said...

நண்ப, இப்படி இலவசமாய் விளம்பரம் தந்து என்னை ஏற்றி வைத்ததற்கு நன்றி.

டெக்ஸாஸில் குளிர்காலமாம். நான் அரைடிராயருடன் நீச்சல் குளத்தில் அமர்ந்திருக்கிறேன். அழகான மலர்கள் இங்குண்டு ஆனால் கையில் காமிரா இல்லை. நம்மூரில் வெயில் காலத்தில் விற்கும் அய்ட்டங்களை இங்கே இப்போது விற்கிறார்கள்.

வித்தியாசமாக தான் இருக்கிறது.

உஷா மேடம், நான் நிச்சய்மாக சிகப்பு அல்ல. வேண்டுமானால் அவரிடமே கேட்டு விடுங்ககள்

said...

//2வதும் 3வதும் சூப்பர். வண்டு பூ கிட்ட போற படம் க்ளாஸ் ஷாட்.

வாழ்த்துகள்.//

கைப்ஸ், உங்களை வெளியில் கொண்டு வர என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு. குவிஜு அல்லது படம் போட்டாத்தான் வரீங்க. :))

அதுதான் என் சாய்ஸும். இரண்டாவது படத்தில் ரொம்ப வெள்ளை இருப்பதாக சொல்லறாங்க. அதை கொஞ்சம் சரி செய்து போடலாம் என எண்ணம். பார்க்கலாம்.

said...

//எனக்கு என்னமோ "எங்கப்பா குதிர்க்குள்ளே இல்லே" பழமொழிதான் நினைவுக்கு வருது :-))))))))))))))//

உஷாக்கா, சரியாச் சொல்லுங்க. ரொம்ப ரென்சனா இருக்கு. குதிருக்குள்ள இருக்கறது எங்கப்பாவா இல்லை சிவாண்ணா அப்பாவா? :))

said...

//என்னய்யா, ப்லொக்கர் போட்டி வச்சா கூட (தென்னைமரத்தில் தேள் கொட்டினா) தமிழ் நாட்டு அரசியல் ஞாபகம் வருதா?//

என்னங்க செய்ய, எல்லாத்துக்கும் கடைசியில் அங்க போய்தான் முடிய வேண்டியதா இருக்கு. அப்படி எல்லாம் எழுதினாத்தானே மக்கள்ஸ் வந்து படிக்கறாங்க....

said...

//ரீப்பீட்டே...//

மதுரையம்பதி, உஷக்காவிற்கு கேட்ட கேள்விதான் உங்களுக்கும்.

said...

//என்னது? போன மாசம் ஆட்டையில் சேத்துக்கலியா? அடடா, கவனிக்காம போயிட்டனே.
இனிமே, இந்த மாதிரி ஆச்சுன்னா, எனக்கு அனுப்ப வேண்டியது அனுப்பினீங்கன்னா, ஏற்பாடூ செஞ்சுடறேன் ;)//

பொதுவா இரண்டாவது படம் நல்லா இருக்குன்னு சொல்லறாங்க. ஆனா அங்க பாடம் சொல்லித்தரவங்கதான் வெள்ளையா இருக்குன்னு சொல்லறீங்க. அதை கொஞ்சம் மாத்திப் பாக்கறேன்.

போட்டியில் சேர்த்துக்காததுக்கு, உம்ம சர்வீஸ் சார்ஜ் நமக்குக் கட்டுப்படி ஆகாது.

said...

//எல்லாமே நல்லா இருக்கு, வண்டு தான் என் சாய்ஸ்!//

ஆஹா!! கீதாம்மா போட்டிக்குத் தலைப்பு மலர்கள் எனக் கொடுத்தால் வண்டுதான் என் சாய்ஸ் எனச் சொல்லும் உங்கள் உள்குத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

said...

//பாச மலர் said...

2 & 3 ரெண்டும் நல்லாருக்கு
//

நன்றி பாசமலர்.

said...

//பூக்கள் எல்லாம் அழகாத்தானே இருக்கு.அப்புறமென்ன கவலை?//

கவலை எல்லாம் இல்லை. எதை எடுப்பது எதை விடுவது என்பதுதான் கன்பியூஷன்.

//ஆனா அந்த கடைசிப் பூ எனக்கு பிடிச்சிருக்கு.//
அதுதாங்க எல்லாருக்கும் பிடிச்சது. அது கட்டாயம் உண்டு.

said...

//உங்க தங்கமணிக்கு பூ வாங்கி தரணும்னு உங்களுக்கு தோணல!அதுக்கு நான் என்ன பண்ண??? (அப்பாடி!! வந்ததுக்கு கொளுத்தி போட்டாச்சு!! :P)//

நாங்க எல்லாம் Wifeology பாட மாணவர்கள் என்பதை மறந்து விட்டு கொக்கரிக்கும் உம்மைப் பார்த்து பரிதாபமாகத்தான் இருக்கிறது.

said...

//முதல் படம்.. வேண்டாம் அதைப்பற்றி சொல்லவேண்டாம். :-))//

ஏங்க, அவ்வளவு கேவலமாவா இருக்கு? சரி போகட்டும்.

//இரண்டாவது,நிஜமாகவே சொல்லுங்க நீங்க எடுத்தது தானா?//

நாந்தாங்க. சத்தியமா நாந்தேன். எல்லாரும் நல்லா இருக்குன்னு சொன்ன மூணாவது படத்தைப் பத்தி ஒண்ணுமே சொல்லலையே....

said...

//நீங்களும் இந்தத் தில்லாலங்கடி வேலையெல்லாம் ஆரம்பிச்சிட்டீங்களா? நல்லா இருக்கு!//

என்ன செய்ய, சும்மா இருந்தவனைக் கிளப்பி விட்டு வேடிக்கை பார்க்கறாங்களே...

ஒரு மனிதாபிமான முறையில் நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு நன்றி.

said...

//நண்ப, இப்படி இலவசமாய் விளம்பரம் தந்து என்னை ஏற்றி வைத்ததற்கு நன்றி.//

அண்ணா, இந்த மாதிரி எல்லாம் போட்டாலாவது நம்ம படப்பதிவுக்கு மக்கள்ஸ் வருவாங்களான்னு பார்க்கறேன்.ஹூம்....

//டெக்ஸாஸில் குளிர்காலமாம். நான் அரைடிராயருடன் நீச்சல் குளத்தில் அமர்ந்திருக்கிறேன். அழகான மலர்கள் இங்குண்டு ஆனால் கையில் காமிரா இல்லை. நம்மூரில் வெயில் காலத்தில் விற்கும் அய்ட்டங்களை இங்கே இப்போது விற்கிறார்கள்.//

போன வருடம் இதே நேரம் நாங்களும் போய் இருந்தோம். இந்த மாதிரி அரைடிராயராத்தான் போனேன். ஆனா குளிர் பின்னி எடுத்திடுச்சு. எல்லாம் என் நேரம்தான்!!

//வித்தியாசமாக தான் இருக்கிறது.//

பதிவா, படமா இல்லை சேதுக்கா சொல்லும் தில்லாலங்கடி வேலையா? :))

//உஷா மேடம், நான் நிச்சய்மாக சிகப்பு அல்ல. வேண்டுமானால் அவரிடமே கேட்டு விடுங்ககள்//

ஆக, உஷாக்காவிற்கு சிகப்பை தெரியும் என நல்லாவே சொல்லறீங்க!! உஷாக்கா, என்ன இது!! நமக்கும் சொல்லபிடாதா....

said...

பின்னிட்டீங்க கொத்துஸ்..

கலக்கலா இருக்கு..

வாழ்த்துக்கள் :)

said...

//என் ஐடியாப் படி சீர் திருத்தப்பட்ட இரண்டாவது மற்றும் மூன்றாவது பூக்களை போட்டிக்கு அளிக்கலாம் என நினைக்கிறேன்

//

மொழி வழிகிறேன். சீ சீ வழி மொழிகிறேன்

said...

இரண்டாவது மூன்றாவது சூப்பர். வாழ்த்துக்கள்!

said...

@இ கொ. 3 வது பூ சூப்பர்.பூவில்வண்டு போதையில் கண்டு....

said...

//பின்னிட்டீங்க கொத்துஸ்..

கலக்கலா இருக்கு..

வாழ்த்துக்கள் :)//

நன்றி புலி!!

said...

//மொழி வழிகிறேன். சீ சீ வழி மொழிகிறேன்//

வழியாதீங்க. ச்சீ முழிக்காதீங்க. அட சட். என்னய்யா இப்படி குழப்பறீங்க.... :))

said...

//இரண்டாவது மூன்றாவது சூப்பர். வாழ்த்துக்கள்!//

நன்றி ரவி.

said...

//@இ கொ. 3 வது பூ சூப்பர்.பூவில்வண்டு போதையில் கண்டு....//

யாரது திரச ஐயாவா? நம்ம பக்கமெல்லாம் கூட வழி தெரியுமாய்யா? :))

வந்து பாட்டு எல்லாம் பாடறீங்க. நல்ல மூட்தான் போல!! :))

said...

சிவா சார், அப்படி பயந்து எழுதுகிற ஆளா நீங்க?

இலவசம், பழமொழி சொன்னா ரசிக்கணும் ஆராய கூடாதுன்னு PKS சொல்லியிருக்கார். அழகா படத்தைப்
போட்டுவிட்டு போகாமல், உம்மை யாரூ பின் குறிப்பு போட சொன்னது? அதுக்குதான் அந்த பழமொழி.

said...

பரவாயில்லையே!இந்த முறை தூங்காம பந்திக்கு முந்திட்டீங்களே?போன தடவை நீங்க போட்டிக்குள்ள வரலையேன்னு கவலைப் பட்டேன்.இந்த தடவை ஏன் சீக்கிரமாக வந்தீங்கன்னு கவலை.படமும் பின் தயாரிப்பும் நல்லாவே இருக்கு.எப்படியோ நமக்கு பரிசு இல்லைங்கிறது இது வரைக்கும் வந்த படங்களைப் பார்த்தாலே தெரியுது.வாழ்த்துக்கள்.

said...

//இலவசம், பழமொழி சொன்னா ரசிக்கணும் ஆராய கூடாதுன்னு PKS சொல்லியிருக்கார்.//

PKS என்னென்னமோ சொல்லி இருக்கார். அதை எல்லாம் நான் சொன்னா உங்களுக்குக் கோபம் வரும் என்பதால் சும்மா இருக்கேன்.

:))

said...

//பரவாயில்லையே!இந்த முறை தூங்காம பந்திக்கு முந்திட்டீங்களே?//

என்னங்க, ஒரு தடவை தூங்கினா அடுத்த தடவை சும்மா கன் டயத்துக்கு வருவோமில்ல.

//போன தடவை நீங்க போட்டிக்குள்ள வரலையேன்னு கவலைப் பட்டேன்.இந்த தடவை ஏன் சீக்கிரமாக வந்தீங்கன்னு கவலை.//

அட என்னங்க நீங்க வந்தாலும் கவலைப்படறீங்க வரலைன்னாலும் கவலைப்படறீங்க. அதுக்குத்தான் நம்ம பக்கத்தில் மேல எழுதி ஒட்டி இருக்கேன் பாருங்க - Freeயா விடு மாமே....

//படமும் பின் தயாரிப்பும் நல்லாவே இருக்கு.//
நன்றி நட்டு.

said...

//ரொம்ப நாள் கழிச்சு ரெண்டு நண்பர்கள் சமீபத்தில் பதிவு போட்டு இருக்காங்க. ஒண்ணு நம்ம கால்கரி சிவா, ரெண்டாவது விட்டது சிகப்பு. ரெண்டு பேரும் அவங்க அவங்க ஸ்டைலில் எழுதி இருந்தாலும் சிவாண்ணா எழுதி இருக்கும் பின்குறிப்பு என்னமோ நம்மளை உறுத்திக்கிட்டே இருக்கு. நீங்களும் ரெண்டு பதிவையும் பாருங்க//

விட்டது சிகப்பு ப்லாக் ஐ பாக்க முடியலியே? ன்னு சொல்லுது. எப்படி பெர்மிசன் கேக்கரது?