Wednesday, December 19, 2007

நச் என்று ஒரு போட்டி!

புதிரு போட்டின்னு எதனா செஞ்சுக்கிட்டு இருப்பியே. இப்போ என்னடான்னா புகைப்பட போட்டி, நச் கதை போட்டின்னு நீ பங்கெடுத்துக்கிட்டு புதிர் போடாம இருக்கியே அப்படின்னு நம்ம நண்பர் ஒருத்தர் திட்டுனதுனால இந்தப் பதிவு. இதுவும் ஒரு புதிர்தான், ஆனா வித்தியாசமான புதிர். இந்த புதிரை அதன் முழு சுவாரசியத்தோட விளையாடணமுன்னா நான் சொல்லும் விதிமுறைகளை சரியாகப் பின்பற்ற வேண்டும். சரியா?

ஒரு உரல் தரப் போறேன். அந்த உரலை சொடுக்கினால் வரும் பக்கத்தில் ஒரு நகர்படம் (அதாங்க வீடியோ) இருக்கும். இதுல ரெண்டு அணியினர், அணிக்கு ஒரு பந்தை வெச்சுக்கிட்டு விளையாடிக்கிட்டு இருப்பாங்க. ஒரு அணியினர் கருப்பு மேலாடையும் மற்றொரு அணியினர் வெள்ளை மேலாடையும் அணிந்து கொண்டிருப்பார்கள். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ரொம்ப எளிமையான ஒரு வேலைதான். இந்த நகர்படத்தை ஒரே ஒரு முறை பாருங்கள். அப்படி பார்க்கும் பொழுது வெள்ளை மேலாடை அணிந்திருக்கும் அணியினர் பந்தினை எத்தனை முறை தரையில் தட்டுகிறார்கள் என எண்ணிச் சொல்ல வேண்டும். கவனமாய் எண்ணுங்கள். அவர்கள் தரையினில் படாமல் தூக்கிப் போட்டு பிடிக்கவும் செய்வார்கள். அதனால் கவனமாக வெள்ளை அணியினர் (எளிதாக வெள்ளை அணியினர், கருப்பு அணியினர் எனச் சொல்லலாம், சரியா) பந்தினை தரையில் எத்தனை முறை தட்டுகிறார்கள் என எண்ணி பின்னூட்டமாய் இடுங்கள்.

நீங்கள் சொடுக்க வேண்டிய உரல் இது.

பார்த்தாச்சா? எண்ணியாச்சா? பின்னூட்டம் போட்டாச்சா? என்னது போடலையா? முதலில் அதைச் செய்யுங்க. நான் சொன்னபடி கேட்டாத்தான் புதிரின் சுவாரசியமேன்னு சொல்லி இருக்கேன் இல்லையா. செய்யுங்க.

செஞ்சாச்சா? இப்போ அடுத்தது. எண்ணச் சொன்னதை சரியா எண்ணினீங்க. வேற என்ன கவனிச்சீங்க? இதை முதலில் காண்பிச்ச நண்பர் ஒருவர் சொன்ன விஷயம் இது - "வெள்ளை அணியில் இருக்கும் பெண் தன்னிடம் பந்து வருகையில் தரையில் ஒரு முறையாவது தட்டிய பிந்தான் அடுத்தவரிடம் தந்தார். மற்றொரு நண்பர் சொன்னது - "வெள்ளை அணியைச் சேர்ந்த ஒரு ஆண் ஒரு தடவை கூட தரையில் பந்தைத் தட்டவே இல்லை." இது போன்று நீங்கள் எதாவது வித்தியாசமாகப் பார்த்தீர்களா? அதனை அடுத்த பின்னூட்டமாகப் போடுங்கள்.

மீண்டும் சொல்கிறேன் ஒரே ஒரு முறை மட்டுமே பார்த்துவிட்டு பின்னூட்டங்களை அளியுங்கள்.

வழக்கம் போல் பின்னூட்டங்கள் உடனடியாக வெளியிடப்படாது. ஆனால் நீங்கள் சொன்ன விடைக்கு எனது பதில்கள் வெளியிடப்படும். இந்திய நேரம் திங்கள்கிழமை காலை இந்த புதிருக்கான விளக்கம் வெளியிடப்படும். அப்பொழுது உங்கள் விடைகள் வெளியிடப்படும்.

அந்த பதிவை எதிர்பார்த்திருங்கள். உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது!!

54 comments:

இலவசக்கொத்தனார் said...

என்னப்பா ஆட்டத்துக்கு ரெடியா? ஏமாத்தினா ஐபி எல்லாம் வெச்சு கண்டுபிடிச்சுடுவேன். அழுகுண்ணி ஆட்டம் எல்லாம் வேண்டாம். :)

SurveySan said...

10?

ரிங்கா ரிங்கா ரோஸஸ் மாதிரி சுத்தி சுத்தி இடம் மாத்திக்கிட்டாங்க?
A-to-B-to-C-to-A...
அந்த பொண்ணு மட்டும் ரெண்டு தடவ கீழ போட்டா

ஒரு பையன் கீழயே போடலீயோ?

SurveySan said...

மேலே போட்ட பின்னூட்டம் 1st time பாத்து போட்டது.

இப்ப, மூணாவது தடவ பாக்கும்போதுதான், கருப்பு டீம்ல நடக்கர கூத்த கவனிச்சேன். நடூல சூப்பரா ஒருத்தர் போறாரு ;)

இலவசக்கொத்தனார் said...

சர்வேசன், நீங்கதான் போணி. சரியாத்தான் எண்ணி இருக்கீங்க போல! அப்புறம் நீங்க இந்த மாத பிட் போட்டி மூடில் இருக்கீங்க போல இருக்கு - ரோஸ் அது இதுன்னு சொல்லிக்கிட்டு. ஆனா நீங்க சொன்ன மத்த பாயிண்ட் எல்லாம் நானே பதிவில் சொன்னதுதானே!!

இருக்கட்டும். திங்கள் வரை காத்திருங்கள்! :))

இலவசக்கொத்தனார் said...

சர்வேசன், அழுகுணி ஆட்டம் ஆடறீங்க பார்த்தீங்களா? ஆனா மேட்டர் எப்படி? சூப்பர்தானே! :))

பினாத்தல் சுரேஷ் said...
This comment has been removed by a blog administrator.
இலவசக்கொத்தனார் said...

யோவ் பெனாத்தல், அதான் உமக்கு மாடரேஷன் கிடையாது இல்ல. அப்புறம் என்ன விடை சொல்லிக்கிட்டு. உமக்கும் சரியா எண்ணத் தெரியுது. வித்தியாசங்களில் உம்ம டெக்னிகல் அறிவைக் காமிக்கறீரு. இருக்கட்டும் இருக்கட்டும்.

Anonymous said...

9 times.

- Ramya.

இலவசக்கொத்தனார் said...

ரம்யா, எண்ணிக்கை தப்பா இருக்கே...

Geetha Sambasivam said...

10 நிமிஷம் காத்திருந்தும் வீடியோ திறக்கவே இல்லை, திரும்பப் பார்க்கிறேன். ம்ம்ம்ம்ம்ம்., நீங்க கொடுக்கப் போற பொற்கிழிக்கு எனக்கு அதிர்ஷ்டமே இல்லைனு நினைக்கிறேன்.:P

Geetha Sambasivam said...

ஜாவா இல்லைனு சொல்லுதே கணினி, சரி, சாயங்காலம் பையன் வரட்டும், கேட்டுட்டுச் சொல்றேன். :((((((((

குமரன் (Kumaran) said...

9 times

குமரன் (Kumaran) said...

கரடி வேஷம் போட்ட ஒருவர் நடுவுல வந்து போனார்.

Boston Bala said...

9 ?

Anonymous said...

10 -- Gopi..

rv said...

:))))))))))

:(|) - முத தடவை அது தெரியவேயில்ல...

சேதுக்கரசி said...

ரெண்டு பந்துன்னு முதல்லயே சொல்லித் தொலைக்கிறதில்லையா? :-( இந்த ஆட்டைக்கு நான் வரலை... அவ்வூஊஊஊ

Radha Sriram said...

9 முறை சரியா??

நாகை சிவா said...

கிளம்பிட்டாங்கய்யா... கிளம்பிட்டாங்க...

ஜாவா இல்லனு சொல்லுது... என் சிஸ்டம் ஜாவா இருப்பது எனக்கே தெரியுது... அது இல்லனு பொய் சொல்லுது...

இதையும் மீறி நான் போய் அதை பாக்கனுமா சாமி!

Anonymous said...

வெள்ளை அணியினர் 9 முறை பந்தை தட்டுகிறார்கள்.
இரு அணியினரும் ஏதோ ஒரு pattern வைத்து சுற்றி வருகிறார்கள். Black, white, black, white என்று தங்கள் இடத்தை வைத்துக் கொள்கிறார்கள். கொஞ்சம் நம் ஊர் கோலாட்டம் pattern தெரிகிறது.
Black team's movement is in one direction and white team in the opposite? I am not sure about this.

தருமி said...

மூணு தடவை முயற்சி பண்ணியாச்சி. ஹும்..ம் பாச்சா பலிக்கவில்லை - தொறக்கவேயில்லை. அட .. போங்கய்யா ..!
:(

பாத்திருந்தா இன்னேரம் கொன்னுறுப்பேன் தெரியுமா?

இலவசக்கொத்தனார் said...

எல்லோருக்கும் மன்னிக்கவும். இன்னிக்கு ஆணி ஒரு 'கஷ்ட'மர் சைட்டில். அங்க நம்மளை இணையப்பக்கமே வர விடலை. அதனாலதான் பதில் சொல்லத் தாமதம்.

இலவசக்கொத்தனார் said...

கீதாம்மா,
கொஞ்சம் முட்டாள்தனமான பார்மேட்டில் இருக்கு இந்த நகர்படம். அதனால லோட் ஆக ரொம்ப நேரம் ஆகுது. ஆனா முடிஞ்சா கொஞ்சம் முயற்சி செஞ்சு பார்த்திடுங்க.

இலவசக்கொத்தனார் said...

வாங்க டாக்குடரு. வழக்கம் போல அழுகுணி ஆட்டம் ஆடிட்டீரு போல! ஆன மேட்டர் சூப்பர் மேட்டர் என்பது உம்ம சிரிப்பான் நீளத்தை வெச்சே தெரியுது!! :))

இலவசக்கொத்தனார் said...

//இதையும் மீறி நான் போய் அதை பாக்கனுமா சாமி!//

புலி, நான் சொல்லறேன். எதாவது தில்லுமுல்லு பண்ணிப் பாருங்க. Its worth it!!

இலவசக்கொத்தனார் said...

குமரன், நீங்க எண்ணினது நான் எண்ணினதை விட வேறயா இருக்கே!! நான் எண்ண ஓட்டத்தைச் சொல்லலை! எண்ணிக்கையைச் சொன்னேன்!!

இலவசக்கொத்தனார் said...

குமரன், உண்மையைச் சொல்லுங்க!! நீங்க சொன்ன மேட்டரை முதல் தடவையே கண்டுபிடிக்கலைதானே?!! அப்படிக் கண்டுபிடிச்சு இருந்தா உமக்கு ஒரு பட்டம் ரெடி பண்ண வேண்டியதுதான்.

இலவசக்கொத்தனார் said...

பாபா, நீங்க எண்ணினது குமரன் எண்ணினதோட ஒத்துப் போகுது. குமரன் எண்ணினது நான் எண்ணினதை விட வேறயா இருந்தது.

ஆக நீர் எண்ணினது சரி இல்லை!! :))

இலவசக்கொத்தனார் said...

//ரெண்டு பந்துன்னு முதல்லயே சொல்லித் தொலைக்கிறதில்லையா? :-( இந்த ஆட்டைக்கு நான் வரலை... அவ்வூஊஊஊ//

சேதுக்கா, இதெல்லாம் ஓவராத் தெரியலை.

நான் என்ன எழுதி இருக்கேன் - //இதுல ரெண்டு அணியினர், அணிக்கு ஒரு பந்தை வெச்சுக்கிட்டு விளையாடிக்கிட்டு இருப்பாங்க.//

இது புரியலையா? சரி போனாப் போகுது. இன்னும் ஒரு முறை பார்த்துட்டு சொல்ல வேண்டிய ரெண்டு மேட்டரையும் சொல்லுங்க.

இலவசக்கொத்தனார் said...

//மூணு தடவை முயற்சி பண்ணியாச்சி. //

நான் என்ன செய்யட்டும் பெரியப்பா!! இது காப்பிரைட் இருக்கிற படம். நான் ஒண்ணும் செய்யறதுக்கில்லை. வந்தா பாருங்க. முடிஞ்சா எங்கயாவது பேரகலப் பட்டை இணைப்பு இருந்தாப் பாருங்க.

இலவசக்கொத்தனார் said...

கோபி, எண்ணுனது என்னமோ சரிதான். ரெண்டாவது பின்னூட்டம் எங்க? அதையும் போடுங்க. அப்புறமா மார்க் தரேன்.

இலவசக்கொத்தனார் said...

இராதாக்கா, அவசரம் அவசரம். பெண்களுக்கே உரிய அப்படின்னு நான் எதாவது சொல்லி அப்புறம் ப்ரொபைலிங் செய்யப்படவே உண்டான அவசரம். :))

எண்ணினது தப்பு. ரெண்டாவது கேள்விக்கு பதில் இல்லை!!

இலவசக்கொத்தனார் said...

கவிதா,

நீங்களும் எண்ணிக்கையில் கோட்டை விட்டுட்டீங்க. ஆனா ரெண்டாவது மேட்டரில் புதுசா சொல்லி இருக்கீங்க. வெரி குட். திங்கள் வரை காத்திருங்க.

இலவசக்கொத்தனார் said...

கால்கரி,

முதல் கேள்விக்கு சரியான விடையை சொல்லிட்டீங்க. ரெண்டாவதை சாய்ஸில் விட்டுட்டீங்களே!!

அரை பிளேடு said...

முதல்தடவை 9 எண்ணினேன்.
யாரோ குறுக்கால வந்ததால கரெக்டா எண்ண முடியலை.

இரண்டாவது தடவை 10 எண்ணினேன்.

மூணாவதா எண்ணாம குறுக்க வந்த ஆளு யாருன்னு கவனிச்சேன்

:)))))

இலவசக்கொத்தனார் said...

அரைபிளேடு,

ஆக மொத்தம் முக்காலே முக்காலே மூணுதரம் அப்படின்னு விளையாடிட்டீங்க. மேட்டர் எப்படி!! :))

Anonymous said...

10 தடவை. ஒரு கரடி உள்ளே வந்து போனது. கருப்பு மேலாடை அணிந்த பெண் வெள்ளை மேலாடை அணிந்த பெண்ணை போல ஒரு கால்சட்டை அணிந்து இருந்தார்கள்

-அரசு

இலவசக்கொத்தனார் said...

அரசு,

சொன்னது எல்லாமே சரி. ஒரு முறை பார்த்துட்டா இம்புட்டும்? பெரிய ஆள்தான் போங்க.

Anonymous said...

அவ்வளவு பெரிய ஆள் இல்லை.
ஒரு முறை பந்து. ஒரு முறை மேட்டர். கூட்டி கழிச்சா ஒரு முறை தான்.

ஹி ஹி ஹி ஹி ....
-அரசு

இலவசக்கொத்தனார் said...

அரசு, செய்யாதேன்னு சொல்லறதை செய்யறதே நமக்குப் பழக்கமாப் போச்சு இல்ல!! :))

ஆனாலும் பொறுமையாப் பார்த்து பதில் சொன்னதுக்கு நன்றிங்கோ!! :))

ILA (a) இளா said...

வெள்ளை பிகரை விட கருப்பு சட்டை பிகர் சூப்பரு. அங்கே பந்து வேற வெச்சு இருந்தாங்களா?

ILA (a) இளா said...

வெள்ளை பிகரை விட கருப்பு சட்டை பிகர் சூப்பரு. அங்கே பந்து வேற வெச்சு இருந்தாங்களா?

இலவசக்கொத்தனார் said...

இளா, ஒரு தடவைக்கு ரெண்டு தடவை வேற சொல்லறீங்களா? உங்க பின்னூட்டத்தை உங்க தங்கமணிக்கு பார்வேர்ட் பண்ணியாச்சு. வீட்ல வெப்கேம் இருந்தா wifeology ப்ராக்டிகல் எக்ஸாமில் பாசான்னு சொல்லிடுவோம்!! :))

Anonymous said...

அட, ஒரு கொரில்லா நடந்துப் போகுதே! 9 தடவை தானே தட்றா! கொத்ஸ் தப்புன்றாரே?!.

(நேற்று ஒரே தடவை தான் பார்த்தேன். இன்னைக்கும் ஒரே தடவை தான். விதிமுறை எல்லாம் மீறல்லையாக்கும்.:)))

இலவசக்கொத்தனார் said...

கவிதா,

இன்னிக்கு மேட்டரை பிடிச்சுட்டீங்க பார்த்தீங்களா? இது ஏன் நேத்து கண்ணில் படலை? அதுதான் மேட்டர். மத்தது எல்லாம் லூஸில் விடுங்க.

விளக்கம் திங்கள் காலை!

:))

கிருத்திகா said...

10 முறை.

இலவசக்கொத்தனார் said...

கோவை ராஜா, சரியா சொல்லி இருக்கீங்க. ஆனா முதல் கேள்விக்கு மட்டும் தானே விடை வந்திருக்கு!

Anandha Loganathan said...

1) வெள்ளை அணி 10 தடவை தரையில் தட்டுகிறார்கள்.
2) வெளளை அணியில் உள்ள அக்கா தரையில் த்ட்டாமல் அடுத்தவர்களுக்கு பந்தை pass பண்ணுவதில்லை
3) ஒரு கரடி வேசம் போட்ட மனிதன் வந்து போகிறான். ஒருவரும் கண்டு கொள்ளவில்லை.
4) பந்தை PASS பண்ணும்போது அவரவர் இடத்தை மாற்றீ கொள்கிறார்கள்.

அந்த மக்கள் எதோ ஒரு FILE FORMAT ஆராய்ச்சிக்காக ஒரு வீடியோ படம் எடுத்தால் , அந்த வீடியோவை வைத்து வேறு எதோ ஆராய்ச்சி பண்ண சொல்றீங்களே.

இலவசக்கொத்தனார் said...

ஆனந்த லோகநாதன், அதெல்லாம் சரிதான். எம்புட்டு தடவை இதைப் பார்த்தீங்க?

நாகை சிவா said...

9 தடவை.

வெள்ளை சட்ட பசங்க அவங்ககுள்ள பந்தை மாற்றிக் கொள்ளாமல் அந்த பொண்ணு மூலமாகவே பந்தை வாங்குறாங்க.

பின்னாடி 3 லிப்ட் இருக்கு, ரெண்டு இடத்தில் S னு போட்டு இருக்கு

நாகை சிவா said...

11?

விடாது சிவப்பு னு நினைச்சா, விடாது கருப்பா இருக்கீர்.

:))))))))))))))))

இலவசக்கொத்தனார் said...

புலி, வாய்யா வா!! ஒரு வழியா ஜாவா எல்லாம் சரி பண்ணிட்டு படத்தைப் பார்த்துட்டியாக்கும். வெரி குட்.

ஒண்ணுக்கு ரெண்டா பதில் சொல்லி இருக்க, அது ஆவரேஜ் எடுத்தா சரியா வருது.

அப்புறம் இன்னும் என்னவெல்லாமோ சொல்லி இருக்க, வெரி குட். ஆனா முக்கியமான விஷயத்தைக் கோட்டை விட்டுட்டீரே!!

SurveySan said...

Vidai enge?

இலவசக்கொத்தனார் said...

சர்வேசன்,

நடுவில் உங்க போட்டிக்கு சிறுகதை எழுதப் போனதுனால கொஞ்சம் லேட் ஆகிப் போச்சு. போட்டாச்சு பாருங்க. உங்க அனுபவத்தைச் சொல்லுங்க. :)