Tuesday, December 04, 2007

தேவு பிழிந்த சேவு - பட்டிமன்றம் பாகம் 3

சாலமன் பாப்பையா

மீண்டும் விளம்பர இடைவேளை எல்லாம் முடிஞ்சு மீண்டும் நம்ம பட்டிமன்றத்திற்கு வரும் அனைவரையும் வரவேற்கிறேன். துளசி ரீச்சரும் பெனாத்தலாரும் கலக்கி எடுத்துட்டாங்க. அடுத்து பின்னூட்ட வெறியேன்னு பேச வரது கொத்ஸின் ரசிகர் மன்ற செயல் தலைவர் தேவ். வாங்க தேவு, வந்து பிழியுங்க சேவு!

நேத்து விளம்பரம் போட நேரமில்லாம ரெண்டு பேரை பேசச் சொல்லிட்டேன்னு டைரக்டர் கோச்சிக்கிட்டாரு. அதனால இன்னிக்கு ஒருத்தர் பேசின உடனே ஒரு சின்ன ப்ரேக். (என் நேரமடா, இந்த சின்னப் பொண்ணுங்க மாதிரி கையை ஆட்டிக்கிட்டே ப்ரேக் சொல்ல வேண்டியதாப் போச்சு. நல்ல வேளை குட்டியா ஒரு டவுசர் போட்டுக்கச் சொல்லாம விட்டாங்களே!)

தேவ்

பதிவுலகம் போற்றும் பின்னூட்டக் கலையின் பிதாமகனே... பின்னூட்ட இலக்கணத்தின் மொத்த உருவமே... உங்கள் பதிவுலக வாழ்க்கையில் இது ஒரு மைல் கல்லாம்...100 வது பதிவாம்... என்னச் சொல்லுவது... பதிவுகளின் எண்ணிக்கை என்பது எதிரணியில் இருக்கும் மதிப்பிற்குரிய நண்பர்களுக்கும் பிறருக்கும் வேண்டுமானால் பொருத்தமானதாக இருக்கும்..ஆனால் பின்னூட்ட வள்ளலாகிய உங்களுக்கு இதுவரை 10000 ஆயிரத்துக்கும் அதிகமான பின்னூட்டங்கள் வாங்கிய உங்களுக்கு பின்னூட்ட எண்ணிக்கையை வைத்து அல்லவா விழா எடுக்க வேண்டும்...

பதிவுகளின் எண்ணிக்கையை இங்கு நாளும் கூட்டுவோர் பலருண்டு..அது பதிவுலக இயல்பு..ஆனால் ஒரே பதிவை இட்டு அந்த பதிவிலேயே பின்னூட்டக் கச்சேரியை நிகழ்த்தி.. அந்தக் கச்சேரியை எண்ணிக்கைக்கே வலிக்கும் அளவுக்கு ஏற்றி போற்றி உயர்த்தும் உங்களுக்கு எதில் வெறி என்று ஒரு பட்டி மன்றம்...அதை விவாதிக்க ஒரு பதிவு..

எதிரணியில் இருக்கும் நண்பர்கள் செய்த முதல் குற்றம் அண்ணனின் பதிவுகளைப் படித்தது...பொதுவாக அண்ணனின் எண்ணற்ற என்னைப் போன்ற அன்புத் தொண்டர்கள் அண்ணன் பதிவை எவ்வாறு நோக்குகிறோம் என்பதைச் சொல்லுகிறேன் கேளுங்கள்...கேட்டப் பிறகாவது உண்மையைப் புரிந்து உடனே ஒத்துக் கொள்ளுங்கள்

கிரிக்கெட் ஸ்கோர் எப்படி பார்க்க வேண்டுமோ அப்படி பார்க்க வேண்டும் தலைவர் கொத்தனார் பதிவுகளை... சும்மா பந்துக்கு பந்து ரன் ஏத்தும் சச்சின் போல... தமிழ்மணத்தில் அண்ணன் பதிவு பின்னூட்டப் பகுதியில் தெரிய ஆரம்பித்ததும்... ஒவ்வொரு முறை ரிபிரெஷ் ஆகும் போதும்.. பின்னூட்டம் ஏறும் அழகைப் பார்த்து இருந்தால் இப்படி ஒரு வாதம் இடவே நீங்கள் முயன்று இருக்க மாட்டீர்கள்

உங்களுக்கு எல்லாம் பதிவு போடுவதோடு பணி முடிந்தது எனப் பின்னூட்டப் பெட்டியைத் திறந்து வைத்துவிட்டு உறங்கப் போய் விடுவீர்கள்..ஆனால் அண்ணன் ஸ்டைலே தனிய்யா....சும்மா பதிவு போட்டுட்டு. கீ போர்டு நிமிர்வதற்குள் பின்னூட்ட வரிசையில் முதல் ஆளாய் நின்று பின்னூட்ட விளையாட்டை அண்ணனே ஆரம்பித்து வைக்கும் அழகு என்ன....அது ஒரு அழகான வெறி என இந்த இடத்தில் கூறிக்கொள்கிறேன்..
அண்ணன் போட்டக் கடைசி பத்து பதிவுகளில் 1000 பின்னூட்டங்களை அனாசயமாகத் தொட்டவர் என்பது வரலாறு அறிந்தவர்களுக்குத் தெரியும்...அவசரத்தில் உப்புமாத் தின்று விட்டு இங்கே மேடையேறியிருக்கும் அருமை நண்பர்களுக்கு எப்படித் தெரியும்...

பின்னூட்டப் புயலாரின் சாதனைகளை அவர் தம் இலவசம் என்ற பதிவிற்குள்ளே அடக்க நினைக்கிறார்கள் எதிரணி நண்பர்கள்... அண்ணன் பின்னூட்டக் கோலம் போடாத தமிழ் பதிவு என்பது இனி தமிழ் மணத்தில் பிறக்கப் போகும் பதிவு என்றே அர்த்தம்..அந்த அளவுக்கு பதிவுகளில் பின்னூட்டச் சுனாமியாய் புகுந்துப் புறப்படும் ஆற்றல் படைத்தவர் எங்கள் அண்ணன்,

பதிவுகளுக்கு நேரமுண்டு...பின்னூட்டங்களுக்கு நேரம் காலமுண்டா... ஒரு நாளுக்கு 24 மணி நேரமென்றால் தன் பின்னூட்ட நற்பணிக்காகவே அடுத்த நாளிடம் எக்ஸ்ட்ராவாக இரண்டு மணி நேரம் கடன் வாங்கி பின்னூட்டப் பணி புரியும் எங்கள் அண்ணனை ஒரு உப்புமாச் சட்டிக்குள் அடைத்து வைக்க நினைக்கும் உங்களைப் பார்த்தால் எனக்குச் சிப்பு சிப்பாக வருகிறது,..

அவரவர் பதிவினைப் பாருங்கள்..உங்களால் கண்டு கொள்ளாமல் விடப் பட்டப் பின்னூட்டங்கள் எத்தனை... நீங்கள் பதில் சொல்லத் தயங்கிய பின்னூட்டங்கள் எத்தனை...வெளியிடத் தயங்கிய பின்னூட்டங்கள் எத்தனை... மொத்தப் பின்னூட்டங்களுக்கு ஒற்றை பின்னூட்டத்தில் நன்றி நவின்று நகர்ந்த தருணங்கள் எத்தனை? இப்படி எதாவது ஒரு நிகழ்வை அண்ணனின் பதிவினில் காட்ட முடியுமா?

அண்ணனின் பின்னூட்ட வெறி ஒரு கட்டத்தில் கரை உடைத்துப் பொங்கி கடலாக பாய...அதைத் தொடர்ந்து பின்னூட்டக் கயமை என அந்த கலையை ஆதிக்க வர்க்கம் அறிவித்து அண்ணன் மீது பின்னூட்டக் கயமைப் பிரிவு போலீஸ்காரை ஏவி விட்டது உலகறிந்த செய்தி..அந்தப் போராட்டத்தில் பங்கேற்கும் போது அண்ணன் எங்களுக்கு உப்புமா வழங்கவில்லை.. பின்னூட்டங்கள் தான் வழ்ங்கினார் என்பது வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுத வேண்டிய செய்தி

ஆயிரம் பின்னூட்டங்கள் வந்தாலும் ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் பதில் பின்னூட்டம்... நக்கல் பின்னூட்டத்துக்கு நயமான பின்னூட்டம்...கேலிப் பின்னூட்டத்திற்கு கலக்கலானப் பின்னூட்டம், அனானியாக வந்து உசுப்பேத்திப் பின்னூட்டினாலும் அதற்கும் தக்க பின்னூட்டம் என அசத்தும் அண்ணனை எங்கள் பின்னூட்டப் பேரசானை... உப்புமா எனச் சொல்லுவதை எதிர்த்து இந்த நிமிடமே டீ குடிக்கும் போராட்டத்தை அறிவிக்க ஆயுத்தமாக உள்ளேன்... அண்ணனின் விழா என்பதால் காபியும் குடிக்க தயார் என அறிவிக்கிறேன்...

பொதுவாக அண்ணனுக்காக உணர்ச்சிவசப் படும் கோடானு கோடி தொண்டர்களில் முதல் தொண்டன் நான்..அந்த முறையில் அண்ணனின் பின்னூட்டப் பணிகளுக்காகவே அவருக்கு உலகமெங்கும் ஆயிரமாயிரம் மன்றங்கள் இயங்கி வருகின்றன என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்

வாழும் பின்னூட்ட வரலாறு அண்ணன் கொத்ஸ் அவர்களின் 100வது பதிவிற்கு அண்ணனை வாழ்த்தி வணங்குவதோடு.... அண்ணனின் பின்னூட்ட வெறியை மீண்டும் நினைவுப்படுத்தி நிலைனிறுத்தி விடை பெறுகிறேன் நன்றி வணக்கம்.

சாலமன் பாப்பையா


பெனாத்தலார் பின்னூட்ட உயரெல்லை பத்திப் பேசினா இவரு பின்னூட்ட கயமை பத்திப் பேசிட்டாரு. அவரு பப்ளிஷ் பண்ண டயம் சோன் பத்திப் பேசினா இவரு 24 மணி நேரமும் பின்னூட்டம் போடறதைப் பத்திப் பேசிட்டாரு. தடாலடியா டீ குடிப்பு போராட்டம் அறிவிச்சுட்டாரே அடுத்தது என்ன போண்டா தின்னும் போராட்டமான்னு கேட்க வந்தா அதுக்கு வலையுலகில் அர்த்தமே வேறயாமே. அதுனால பக்கோடா தின்னும் போராட்டம் ஒண்ணு ஆரம்பிங்கப்பா. அடுத்து பக்கோடா தின்ன வருவது, அட, உப்புமா சுவையைப் பத்திப் பேச வருவது நம்ம இராமநாதன் அவர்கள். வாங்கய்யா.

(தொடரும்)

24 comments:

said...

வழக்கம் போல உங்கள் வாதங்களை பின்னூட்டத்தில் வையுங்கன்னு சொல்ல மறந்துட்டாராம் பாப்பையா. என்னைச் சொல்லச் சொன்னாரு. சொல்லிட்டேன்!

said...

சேவு புழிஞ்ச தேவுக்கு சேவை பண்ண யாராச்சும் வாங்கப்பா.. சப்பையா வாதத்தை வச்சு டாக்டர்கிட்ட அடிவாங்கப்போறாரு.. பாவம் யாராச்சும் வந்து காப்பாத்துங்க அவரை (எதிரணியா இருந்தாலும் மனிதநேயம் அதிகமாச்சே எங்களுக்கு)

said...

சபாஷ் தேவ். சரியான கலக்கல்.

போன பதிவில் பார்த்தீங்கல்லே...பின்னூட்ட வெறியை.

ஒருத்தர் கேட்ட கேள்விக்கு இவர் பதிலைச் சொல்லாம 'ஓவர் டு ரீச்சர்'
னு சொல்லி இருக்காரு. அதை பார்த்துட்டு நான் ஒரு பதில் சொல்லி, அதுக்கு அந்த ஒருத்தர், இன்னொண்ணு கேட்டு அதுக்கு மறுபடி இவர் சொல்லிட்டு, நம்மையும் ஏவன்னு பின்னூட்ட வெறீ ஏறிக்கிட்டே போகுது. இது கைப்புண்ணுக்குக் கண்ணாடி கேக்கறமாதிரி இல்லை?


நல்லாச் சொன்னீர். வெல் செட்:-))))

said...

//சேவு புழிஞ்ச தேவுக்கு சேவை பண்ண யாராச்சும் வாங்கப்பா.. சப்பையா வாதத்தை வச்சு டாக்டர்கிட்ட அடிவாங்கப்போறாரு.. பாவம் யாராச்சும் வந்து காப்பாத்துங்க அவரை (எதிரணியா இருந்தாலும் மனிதநேயம் அதிகமாச்சே எங்களுக்கு)//

பெனாத்தல் போன பதிவில் உங்களை ரீச்சர் இங்கிலிபீசில் திட்டினதுக்கு இப்போ நீங்க பதிலுக்கு இந்த மாதிரி திட்டறது எல்லாம் நல்லாவா இருக்கு? வாய்க்கு வந்தபடி பேச இது என்ன சட்டசபையாய்யா?

said...

//ஒருத்தர் கேட்ட கேள்விக்கு இவர் பதிலைச் சொல்லாம 'ஓவர் டு ரீச்சர்'
னு சொல்லி இருக்காரு.//

அடப்பாவிகளா!!

உங்க கிட்ட கேட்கப்பட்ட கேள்வி ரீச்சர் அது.

அதுக்கு நான் பதில் சொன்னா, என் கிட்ட கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லறான் பாரு. அவன் பதில், அதுக்கு நான் பதில், ஒரிஜினல் கேள்விக்கு என் பதில் அப்படின்னு நீண்டுக்கிட்டே போகும் பாருன்னு சொல்லுவீங்க.

பதில் சொல்லாம நல்ல பிள்ளையா ஓவர் டு ரீச்சர் போட்டா இப்படிச் சொல்லறீங்க.

ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல!! :))

said...

மருத்துவர் அய்யாவுக்காக மீ வெயிட்டிங்

said...

கலக்கறீங்க, நடத்துங்க!!!! :)))))))) புகை எல்லாம் ஒண்ணும் இல்லையே!!!!!

said...

கலக்கறீங்க, நடத்துங்க!!!! :)))))))) புகை எல்லாம் ஒண்ணும் இல்லையே!!!!!

said...

தாங்க்ஸ் ரீச்சர் என்னப் பண்ணுவது...அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல்.. இங்கு நம் நண்பர்களுக்கு எல்லாமே உப்புமாமயமாகத் தெரிகிறது... பின்னூட்டங்கள் பொங்கி பொங்கலாய் வழிவதை அவர்கள் மறுத்தாலும் மறைக்கமுடியுமா?

said...

அய்யா எம்புட்டு அடி வாங்கினாலும் சும்மா பந்து மாதிரி குதிச்சு ஓடுவோம்ய்யா நாங்க... அவ்வளவு சுறுசுறுப்பு வேகம் எங்களுக்கு அதெல்லாம் எப்படி வந்துச்சு பெனத்தாலரே... ஊட்டம்ய்யா.... பின் ஊட்டம்.... உப்புமா உப்புமா எனப் பெனாத்துவது தப்பும்மா என எதிரணியில் நீங்கள் இருந்தாலும் உங்களுக்கு அன்பாக எடுத்துச் சொல்லுவது எங்கள் கடமையாக எண்ணுகிறோம்.. அதான் எங்கள் அணித்தலைவியும் அவர் வழியில் நானும் சொல்லிகிறோம்

said...

பட்டிமன்ற இலக்கணத்துபடி -

'உப்புமா உப்புமா என்று ஊளையிடும் எதிர் அணியில் இருக்கும் இவர், எனக்கு பின்னூட்டமே வரவில்லை என்று மூக்கால் அழுதது தெரியாதா, இல்லை... நான் உப்புமா கிண்ட மாட்டேன் என்று பிரசவ சங்கல்பம் செய்து கொண்டதுதான் தெரியாததா'

என்றோ...

'பின்னூட்டத்த பத்தி பேச இவங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? பதிவே போட சரக்கு இல்லாம ஆறு மாசம் லீவ போட்டுட்டு சங்கத்த விட்டு ஓடிப்போனவங்க எல்லாம் இங்க வந்து வக்காலத்து வாங்கற கொடுமையை என்ன சொல்ல?'

என்றோ...

'இவர் என்ன சொல்றார்? உப்புமாக்கு உப்பு பத்தாதுன்னு சொல்றாரா? பிரஷர் இருக்கறவங்களுக்கு உப்புமா கொடுக்க கூடாதுன்னு சொல்றாரா? இப்படித்தாங்க விளங்காம பேசு வீட்டுல கூட அன்னிக்கு மனைவிகிட்ட மாத்து வாங்கினாரு'

என்றோ...

எதிரணியினரை பர்சனலா தாக்கற பஞ்ச் இல்ல...


ஒரு சினிமா பாட்டு இல்ல...

நடு நடுவில நடுவரை சூரியனே, சந்திரனே என்று புகழ்வது போல புகழ்ந்து, 'பாருங்க! அந்த கேமரா ப்ளாஷ் கிளேர் அடிச்சு உங்க தலையில் சூரியன் உதிக்குது' அப்படின்னு ஒரு கெக்கே பிக்கே கிண்டல் இல்ல...

அரங்கம் அமைச்சு கொடுத்த தமிழ்மணத்திற்க்கோ இல்ல ப்ளாக்கருக்கோ இல்ல கொத்தனாருக்கோ ஒரு மறைமுக முகஸ்த்துதி கூட இல்ல...

'அப்படி சொல்ல்ங்கய்யா...ஹ்ம்ம்... ஹ்ம்ம்ம்.. ஆஹா... ஆஹா...'

அப்படின்னு பாப்பையா சைடு கமெண்ட் கொடுக்கல...

அட ஒரு 'குட்டி' கதை கூட இல்ல...

கம்ப இராமாயணத்தில் 'நீர்க்கோல வாழ்வை நெடிதுநாள் நச்சி... அப்படின்னு சொன்னது போல ' என்று உதாரண உவமேயம் இல்ல...

இதெல்லாம் ஒரு பட்டிமன்றமா? பெப்பை கூட்டுங்கையா. :-))

'நடந்தது என்ன?'

'துளசி ரீச்சரின் உடல் நலக் குறைவுக்கும் சுரேஷின் ஊசிப்போன உப்புமாவிற்க்கும் என்ன சம்பந்தம்?'

'தான் ஒதுக்கப் படுவதாக இராமநாதன் புகார். இது ப ம க-வில் எதிரொலிக்கும். எச்சரிக்கை!'

இப்படி ஏதாவது விளம்பரம் கொடுத்து ஏத்துங்க ரேட்டிங்கை...

said...

தேவ், உங்களுக்கு கிடைக்கிற ஊட்டம் பின்+ஊட்டம்! முன் என்ன? உப்புமாதானே? அதை மறைப்பது ஏன், மறுப்பது ஏன்?

தப்பும்மா என்று சொல்பவர்களுக்குத்தான் மப்பும்மா!

ஸ்ரீதர் வெங்கட், ரொம்ப ஆசைப்படறீங்க.. ஒரு பாட்டு மட்டும் தர்றேன்..

ஊரைத் தெரிஞ்சிகிட்டு - உடனே கிளறவேணும் உப்புமா என் உப்புமா..
ஊட்டம் வேணுமுன்னா நாமே போட்டுக்கரது தப்பும்மா ரொம்ப தப்பும்மா!

பின்னூட்டம் வருமென்று சீரியஸ் போஸ்ட் போட்டேன்.. பொழுது போகாதவன் பொதுமாத்துப் போடறாண்டி...

நேத்து ஒரு ஃபைட்டில்..
கிடைச்சுது இன்னிக்கு டைட்டில்..
நாலு ஹிட்டு வந்தா
ஹீட் ஆகும் இந்த சைட்டில்..

கும்பலே.. நட்புக் கும்பலே லீவ் போடும் ஒரு நாளில்
ஞாயிறு.. அந்த ஞாயிறு
காத்து வாங்கும் போஸ்டுதானோ..

சரியான நேரம் பாத்து சரக்கில்லா உப்புமா போட்டா பலநூறு ஹிட்டு வரும் கண்மணி என் கண்மணி..
போக்கத்த வேளையில போஸ்டெல்லாம் ஈ ஓட்டும் கண்மணி என் கண்மணி..

போதுமா ஸ்ரீதர்?

said...

கொத்ஸ்,

நான் ஒரே ஒரு :) மட்டும் போட்டா திட்டுவீங்களா?

said...

பின்னூட்ட வெறி பிடிச்ச தேவு அவர்கள் உப்புமா கிண்ட முயற்சித்தன விளைவை கண்டீர்களா சபையோர்களே?

பாவமாயிருப்பதால், 13-லிருந்து மேலே தூக்கிவிட இதோ வந்தேன் யான்!

said...

//இங்கு நம் நண்பர்களுக்கு எல்லாமே உப்புமாமயமாகத் தெரிகிறது... பின்னூட்டங்கள் பொங்கி பொங்கலாய் வழிவதை அவர்கள் மறுத்தாலும் மறைக்கமுடியுமா?//

எப்படி இந்தப் பதிவு மாதிரியா??

பர்ஸனலா போகுதோ.. மன்றம்னு வந்துட்டா அப்புறம் சேர், தொப்பியெல்லாம் தூக்கியடிக்கிறதுதானே நாகரிகம்? ஸோ கண்டுக்காதீங்க தேவு.

said...

பெனாத்தலாரே நான் இருக்கேன் உங்களுக்கு கை குடுக்க! ஆனா என்னை கைதாங்கலா த்ஹூக்க்கி விடுங்க!! வந்துட்ட்டேன் வந்துட்டேன்!

said...

பின்னூட்ட வெறி இல்லாமலா, ஒவ்வொரு தீஞ்சுபோன உப்புமா பதிவுக்கெல்லாம் முதல் ஆளா வந்து வெறித்தனமா பின்னுட்டம் இடுகிறார் கொத்தனார்?

உப்புமாப் பதிவின் மேல் இருக்கும் ஆசையாலா பின்னூட்டக் கணக்கைத் தானே தொடங்கி வைத்து, தன் வெறி எதில் எனப் பறை சாற்றுகிறார் எங்கள் பின்னூட்டச் செம்மல்?

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்னென்ப பின்னூட்டத் திற்கு"
எனப் 'புதுக்குரல்' படைத்து, அதனை நடத்திக் காட்டியும் வரும் தனைத் தலைவனுக்கா கேவலம் உப்புமாவின் மேல் ஆசை இருக்க முடியும் எனப் பிதற்றுகிறார்கள்?

உப்புமாப் பதிவுகள் வெறும் ஒரு ஆரம்பம் தான்! பின்னூட்டக்கயமைத்தனத்தில் தான் இவ்வுலகே... ஐ மீன்... பதிவுலகே இயங்குகிறது என்பதைச் சரியாகப் புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு செயல்படும் பின்னூட்ட வீரனுக்கா உப்புமா வெறி?

மாங்கு மாங்குன்னு பதிவெழுதிப் பதிந்துவிட்டு, நம் கடமை முடிந்துவிட்டது, இனி, வருபவர் வந்து சொல்லட்டும் எனவிருக்கும் எம்போன்ற சோம்பேறிப் பதிவர்களுக்கெல்லாம் ஒரு விடிவிளக்காக.... விதிவிலக்காக.... இந்த மாவீரன் காட்டும் சுறுசுறுப்பு வியக்கத்தக்கதல்லவா?

பதிவு தமிழ்மணத்தில் ஏற வேண்டியதுதான் தாமதம்.... பலநூறு மயில்பெட்டிகளில் ஒரு மயில் வந்து உடனே குதிக்கும்... வந்து பாருடா என! கண்டதில்லாஇயா இந்த உப்புமா ஆதரவாளர்கள்?

பதிவின் மேல் உள்ள வெறியா இப்படி செய்யத் தூண்டியது இந்த சுயநலம் நிறைந்த மாமேதையை?

மற்ற எல்லாருமே 'பதிவர்கள்' என்றுதான் அடையாளம் காட்டப் படுவார்கள்! ஆனால், இந்த தங்கத் தமிழன் [இப்படி சொல்லலாம்தானே! யாரும் அடிக்க வரமாட்டாங்களே!:))] ஒருவன் மட்டும்தான் பின்னூட்டத் தலைவன் என சொல்லப்படுவார் என்பது பதிவுலகம் அறியாத செய்தியா என்ன?

நேற்று பெய்த மழையிலே, இன்று முளைத்த காளான்கள் போல இவரது உப்புமாப் பதிவுகள் காணாமல் போனாலும், பின்னுட்டங்களின் வழியாகவே இவையெல்லாம் அழியாக் காவியங்களாக நிலை பெற்று நின்றிருப்பது, பதிவுலகம் தெரியாத தகவலா என்ன?

எதிரணியினரை ஒன்று கேட்க ஆசைப் படுகிறேன்!

உப்புமாப் பதிவுகள் என்ன இவர் ஒருவர்தான் எழுதுகிறாரா?
அநேகமாக எல்லாரும் எழுதுவதும் உப்புமாப் பதிவுகள் தானே!

இந்த துயிலஞ்சா மறவனது நீங்காத பின்னூட்ட வெறியினாலன்றோ, இவனது பதிவுகள் மட்டும் நூற்றுக்கணக்கில் பின்னூட்டப் பெருமை அடைந்து, சாகா இலக்கியங்களாக இன்றும் நம்மிடையே உலா வருகின்றன?

டைம் ஆச்சுன்னு தலைவர் பெல் அடிக்கறாரு! அதனால, இத்தோட முடிச்சுக்கறேன்!

said...

//
Sridhar Venkat said...
பட்டிமன்ற இலக்கணத்துபடி -

'உப்புமா உப்புமா என்று ஊளையிடும் எதிர் அணியில் இருக்கும் இவர், எனக்கு பின்னூட்டமே வரவில்லை என்று மூக்கால் அழுதது தெரியாதா, இல்லை... நான் உப்புமா கிண்ட மாட்டேன் என்று பிரசவ சங்கல்பம் செய்து கொண்டதுதான் தெரியாததா'

என்றோ...

'பின்னூட்டத்த பத்தி பேச இவங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? பதிவே போட சரக்கு இல்லாம ஆறு மாசம் லீவ போட்டுட்டு சங்கத்த விட்டு ஓடிப்போனவங்க எல்லாம் இங்க வந்து வக்காலத்து வாங்கற கொடுமையை என்ன சொல்ல?'

என்றோ...

'இவர் என்ன சொல்றார்? உப்புமாக்கு உப்பு பத்தாதுன்னு சொல்றாரா? பிரஷர் இருக்கறவங்களுக்கு உப்புமா கொடுக்க கூடாதுன்னு சொல்றாரா? இப்படித்தாங்க விளங்காம பேசு வீட்டுல கூட அன்னிக்கு மனைவிகிட்ட மாத்து வாங்கினாரு'

என்றோ...

எதிரணியினரை பர்சனலா தாக்கற பஞ்ச் இல்ல...


ஒரு சினிமா பாட்டு இல்ல...

நடு நடுவில நடுவரை சூரியனே, சந்திரனே என்று புகழ்வது போல புகழ்ந்து, 'பாருங்க! அந்த கேமரா ப்ளாஷ் கிளேர் அடிச்சு உங்க தலையில் சூரியன் உதிக்குது' அப்படின்னு ஒரு கெக்கே பிக்கே கிண்டல் இல்ல...

அரங்கம் அமைச்சு கொடுத்த தமிழ்மணத்திற்க்கோ இல்ல ப்ளாக்கருக்கோ இல்ல கொத்தனாருக்கோ ஒரு மறைமுக முகஸ்த்துதி கூட இல்ல...

'அப்படி சொல்ல்ங்கய்யா...ஹ்ம்ம்... ஹ்ம்ம்ம்.. ஆஹா... ஆஹா...'

அப்படின்னு பாப்பையா சைடு கமெண்ட் கொடுக்கல...

அட ஒரு 'குட்டி' கதை கூட இல்ல...

கம்ப இராமாயணத்தில் 'நீர்க்கோல வாழ்வை நெடிதுநாள் நச்சி... அப்படின்னு சொன்னது போல ' என்று உதாரண உவமேயம் இல்ல...

இதெல்லாம் ஒரு பட்டிமன்றமா? பெப்பை கூட்டுங்கையா. :-))

'நடந்தது என்ன?'

'துளசி ரீச்சரின் உடல் நலக் குறைவுக்கும் சுரேஷின் ஊசிப்போன உப்புமாவிற்க்கும் என்ன சம்பந்தம்?'

'தான் ஒதுக்கப் படுவதாக இராமநாதன் புகார். இது ப ம க-வில் எதிரொலிக்கும். எச்சரிக்கை!'

இப்படி ஏதாவது விளம்பரம் கொடுத்து ஏத்துங்க ரேட்டிங்கை...

//
Repeateyyyyyyyyy (R)
(Patent reserved)

said...

தேவே...
கொத்ஸ் படையின் கோவே
தேமே என்றிராமல்
தாமே முன்னின்று எடுத்து வைத்த கருத்துகளைக் கண்டு நாம் மனம் மகிழ்ந்த கதையைச் சொல்லவா?

சரசர
முறுமுறுவென
தேவைக்குத் தக்கப் பிழிந்த
சேவை நொறுக்கி நுங்கிய கதையைச் சொல்லவா?

நீர்
நீர் கலவாத
ஜோர் பாலில்
டீ குடிப்புப் போராட்டம் நடத்த முனைந்த கதையைச் சொல்லவா?

சொல்ல நூறு கதையுண்டு. அவைகளைச் சொன்னால் மற்றவர்கள் எடுத்து வந்து மொத்துவதற்கும் நூறு கதையுண்டு. ஆகையால் இந்த ஒரு பின்னூட்டத்தோடு நிறுத்திக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.

said...

//கலக்கறீங்க, நடத்துங்க!!!! :)))))))) புகை எல்லாம் ஒண்ணும் இல்லையே!!!!!//

கீதாம்மா புகை எதுவும் காணும் ஆனா பல்லு நற நறன்னு கடிக்கிற சத்தம் மட்டும் ஏனோ கேட்குது!! :))

said...

//. இங்கு நம் நண்பர்களுக்கு எல்லாமே உப்புமாமயமாகத் தெரிகிறது... பின்னூட்டங்கள் பொங்கி பொங்கலாய் வழிவதை அவர்கள் மறுத்தாலும் மறைக்கமுடியுமா?//

ஆமாய்யா.நீ பேசும் போது இதுதான் சரியாத் தெரியுது. அவங்க பேசும் போது அதுவும் சரியாத்தான் தெரியுது. யார் சரி யார் தவறுன்னு புரியவே இல்லையே...

said...

//உப்புமா உப்புமா எனப் பெனாத்துவது தப்பும்மா //

உப்புமா தப்புமான்னு நான் சொன்னதை ம் கொட்டிக் கேட்கப் போறன்னு நினைச்சேன். நீ அந்த ம் மை சேர்த்து தப்புமாவை தப்பும்மா என மாற்றி வார்த்தை சித்தனா ஆயிட்டியேப்பா!!!

said...

கலக்கல் தேவ்!

//உப்புமாப் பதிவுகள் என்ன இவர் ஒருவர்தான் எழுதுகிறாரா?
அநேகமாக எல்லாரும் எழுதுவதும் உப்புமாப் பதிவுகள் தானே!

இந்த துயிலஞ்சா மறவனது நீங்காத பின்னூட்ட வெறியினாலன்றோ, இவனது பதிவுகள் மட்டும் நூற்றுக்கணக்கில் பின்னூட்டப் பெருமை அடைந்து, சாகா இலக்கியங்களாக இன்றும் நம்மிடையே உலா வருகின்றன?
//

சபாஷ், VSK ஐயா!
டீச்சர்... இந்த பாயிண்டையும் நடுவருக்கு 'எடுத்து' சொல்லுங்க!

said...

நான் போன இடுகையில சொன்னதை வி.எஸ்.கே. இந்த இடுகையில ரொம்ப விவரமா சொல்லியிருக்காரு. அவரு சொன்னதுக்கெல்லாம் நான் ரிபீட்டே போட்டுக்கிறேன்.