நண்பர் என். சொக்கன் நடத்திய எழுத்துப் பயிற்சி வகுப்பில் பங்கேற்றவர்கள் தொடர்ந்து உரையாட ஒரு வாட்ஸாப் குழுமம் இருக்கிறது. தொடர்ந்து எழுதும் பழக்கம் வர அக்குழுவில் நிதம் ஒரு தலைப்பு தந்து சிறுகுறிப்போ, கதையோ, கட்டுரையோ ஏதேனும் எழுதச் சொல்வார். பாடம் முடிந்த பின்னரும் தொடர்ந்து வழிகாட்ட அவர் எடுக்கு முனைப்பு பாராட்டுக்குரியது.
ஒரு காலத்தில் சொக்கன், பெனாத்தல், நான் என ஒரு ஜமாவே தொடர்ந்து பாட்டும் பாவும் வெண்பாமும் போட்டது நினைவிற்கு வந்தது. ஹூம். அது ஒரு காலம்!
நேற்று எழுதிய பாட்டு இது.
இளைக்கவே ஆயிரம் வழிகளுமிங்கேஇருக்குது என்று சொன்னாரேசளைப்பே துளியும் இல்லாமல்தான்சரியனெ நானும் செய்தேனேகையும்காலும் காயம் பட்டுக்காயலான் கடைக்குத் தான்போச்சேஐயமின்றி அடித்தே சொன்னேன்ஐயா எனக்கிது ஆகாதேகாலை அல்லது கருக்கலில் தினமும்கையை வீசி நடக்கையிலேவேலையில் செய்ய வேண்டியவைதான்வேர்வையில் நனையுமென் நினைப்பாச்சேபிளக்கும் வெய்யில் பித்தனாய் ஆக்கிடும்பிடிக்காதெனக்கு அதனாலேகுளத்தில் இறங்கி நீச்சல் அடித்துக்குளிப்பது வேறொரு வழியாச்சேபுதிதாய் வேறு செய்யத் துணிந்தால்புண்ணாய் என்னுடல் ஆகிடுமேஅதிகம் பயிற்சி ஆகாதெனக்குஅளவாய் இவையே போதுமப்பா!
0 comments:
Post a Comment