Thursday, October 22, 2020

வல்கனைசிங் வரலாறு!

சிங் என்று பெயர் இருந்தாலே சீக்கியர் என நினைக்கக்கூடாது. தென் தமிழகத்தில், குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி பகுதிகளிலும் சிங் என்ற பெயர் கொண்டவர்கள் உண்டு. ராஜா சிங், ஜெயசிங் என்ற பெயர்களைக் கொண்டவர்களை சர்வசதாரணமாகப் பார்க்க முடியும். இதையே ராஜாசிங் பாண்டியன் என மீசையை முறுக்கவும் வகை செய்து இருப்பார்கள். எனக்கே இந்த மாதிரி சர்தார்ஜி இல்லாத சிங் நண்பர்கள் உண்டு. 

கல்லிடையில் இருந்து அம்பையில் உள்ள பள்ளிக்குச் செல்லும் பொழுது வல்கனைசிங் என்ற பெயர் கொண்ட கடைகள் இரண்டு தென்படும். எதேனும் வேலையாக நெல்லைக்குச் சென்றால், போகும் வழியிலும் சரி, அங்கும் சரி பல வல்கனைசிங் கடைகளைப் பார்க்கலாம். என்னடா இது, வல்கனைசிங் என்ற ஒத்தை ஆளு ஊர் ஊராகக் கடை திறந்து வைத்திருக்கிறாரே என எனக்கு ஆச்சரியமாக இருக்கும். வெகு நாட்களுக்குப்பின்தான் அது Vulcanizing எனப்படும் விதத்தில் டயர்களை சரிசெய்து தரும் கடைகள் அவை என அறிந்து கொண்டேன். 

இப்படி மூலம் தெரியாமல் மாறிப் போன சொற்கள் பெயர்கள் மீது ஒரு காதல் வரக் காரணமாக இருந்ததே இந்த நிகழ்வுதான் என நினைக்கிறேன். இன்னும் கொஞ்சம் பார்ப்போம். 

Hamilton Bridge, அம்பட்டன் வாராவதி ஆகி மீண்டும் Barber's Bridge என்றான கதை எல்லாரும் அறிந்ததே. ஆனால் இது போன்ற பிழைகள் என்றாலே உணவகங்கள்தான் முதலில் நினைவுக்கு வரும். மஞ்சூரி என சீனாவிலேயே கேள்விப்பட்டிராத பெயரை சீன உணவுக்கு வைத்தவர்கள் நம் ஆட்கள். Vanilla என்பதை எந்தத் தயக்கமும் இல்லாமல் வெண்ணிலா என எழுதி, Vanilla Burfi என்பதை வெண்ணிலா பர்பி என்றாக்கி, அதையே மீண்டும் ஆங்கிலத்தில் Vennilla Purby என எழுதும் திறமை கொண்டவர்கள் நம் ஆட்கள். சுக்குணி என்றால் என்ன தெரியுமா? Zucchini என்ற காய்தான் பாவம் சுக்குணி என்றாகி அதையே ஆங்கிலத்தில் Zukkuni என்று எழுதப்பட்டதும் நடந்திருக்கிறது. 

மேற்கத்தியப் பெயர்களை தம் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழும் பெற்றோர் அப்பெயர்களை ஆங்கிலத்தில் எழுதும் பொழுது செய்யும் கலவரம் பற்றித் தனிப் பதிவே எழுதலாம். Gorky, தன் பெயர் தமிழில் கார்க்கி ஆகி திரும்பவும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட விதங்களைக் கண்டால் வெறுத்தே போய் விடுவார். சமீபத்தில் அப்படித்தான் ஒரு Bernatsha-வை பார்க்க நேர்ந்தது. இந்த கதி மேற்கத்திய பெயர்களுக்கு மட்டும்தான் என நினைக்க வேண்டாம், வடவர் பெயரையும் இவ்விதமே வதைப்போம். நம் முதல் பிரதமர் Jawagarlal Negru. அவர் அப்பா Modilal. அரசியல் வேண்டாம் என்றால் கிரிக்கெட்டில் Ragul Dravid.  இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.  அவ்வளவு ஏன் நம் மயிலாப்பூர் கபாலி கூட Kapali என்றாகாமல் Kabali என்றானது சூப்பர்ஸ்டார் கைங்கர்யம். 

அது என்னவோ கொஞ்சம் அழுத்திச் சொல்ல வேண்டியதை எல்லாம் அழுத்தாமல் மென்மையாகச் சொல்வது நம் மொழிக்கே உரிய அழகுதான் போல. அதை அப்படியே ஆங்கிலத்தில் எழுதும் பொழுதுதான் கொஞ்சம் உதைக்கிறது. Boori, Gireedam, Kaligambal, Magarashtra, Sagunthala, Rasiga, நவராத்திரி சமயத்தில் Golu, எனப் பார்க்கும் போதும் கேட்கும் போதும் கொஞ்சம் பல் கூசத்தான் செய்கிறது. ஒரு துணிக்கடையில் Frogs என்ற பெயர்ப்பலகை பார்த்தது இதன் உச்சம். இவங்களை எல்லாம் உள்ள தள்ளி உட்கார வைக்கலாம்ன்னு Barole கேட்பாங்களேன்னு பயமா இருக்கு. 

இந்தக் கொடுமை ஒரு பக்கம்ன்னா கர்நாடிக் பாட்டு பாடறவங்க கிட்ட தமிழ் மாட்டிக்கிட்டு முழிக்கிறது இன்னுமொரு விதக் கொடுமை. ஆஷை முகம் மறந்து போச்சேன்னு ஆரம்பிச்சா அந்தப் பாட்டைக் கேட்கும் ஆசையே இல்லாம ஆகிடும். பாசம் நேசம் எல்லாம் பாஷம் நேஷம்ன்னு ஷமத்தா பாடுவாங்க. இல்லை தளை விடும் ஆயர்கள்ன்னு பாட வேண்டிய பாசுரத்தை தலை விடு மாயர்கள்ன்னு பாடி அர்த்தத்தை அனர்த்தம் ஆக்கிடுவாங்க. திரைப்படப் பாடல்களில் லகர, ளகர, ழகர வித்தியாசங்கள் இல்லாமல் போனது தாண்டி இப்போ ந,ன,ண வித்தியாம் கூட இல்லாமப் பாடறதுதான் புதுமை. 

குறங்குதமிழ் என்ற தலைப்பில் ஜெயமோகன் எழுதி இருக்கும் கட்டுரையை இன்று படித்த பின் நினைவுக்கு வந்தவை இவை. ரொம்ப முக்கியமா, 

பொதுவாகவே தமிழ்க்கல்வி தமிழகத்தில் இல்லாமலாகிவிட்டது. புதிய தலைமுறையினரில் சரளமாகத் தமிழ்படிப்பவர்கள், பெரிய எழுத்துப்பிழைகள் இல்லாமல் ஓரிரு பத்திகள் எழுதுபவர்கள் மிகமிக அரிதாகிவிட்டார்கள். ஆகவே நாளிதழ்கள்கூட அவர்களால் வாசிக்கப்படுவதில்லை. 

எனச் சொல்லி இருக்கிறார். ஆனால் நாளிதழ்களில் மட்டும் தமிழ் நல்லாவா இருக்கு. எழுத்துப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும்தான் இருக்கு. நல்ல தமிழ் என்பது இல்லாமலேயே போய்விட்ட ஒன்றாகி நாளாச்சு. ஒருமை பன்மைன்னா வீசை என்ன விலைன்னு கேட்பாங்க. எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் இயக்குனர், நியாபகம், ஞாயம்ன்னு தப்பாவே எழுதுவாங்க. இந்த நாளிதழ்களையும் வாரயிதழ்களையும் படிக்காம இருந்தாத் தப்பே இல்லை ஜெயமோகன். இவங்க மட்டும்தான்னு இல்லை. பிரபல எழுத்தாளர்களிடம் கூட தமிழ் மாட்டிக்கிட்டு கதறிக்கிட்டுதான் இருக்கு. ஆனா சொன்னால் நீ யாரு சொல்ல என்ற மனோபாவம்தான் முதலில் வரும். 

ஆனா இதை எல்லாம் எடுத்துச் சொன்னா அதுக்குப் பேரு குத்தம் கண்டுபிடிக்கிறது. இப்படிச் செய்யறவங்களை கிண்டல் பண்ணுவது போகும் போக்கில் ரெண்டு சாத்து சாத்துவதும்  எப்போதும் நடப்பதுதான். இதே கட்டுரையில் ஜெயமோகன் கூட "பிழைதிருத்தி பிழைசமைத்து உயிரைவாங்கும் பிராமணர்கூட்டம் ஒன்று இணையத்தில் உண்டு." என்றுதான் எழுதி இருக்கிறார். வேறெப்பொழுதும் சாதி பார்க்காத பெரியார் மண்ணும் இந்த சமயத்தில் மட்டும் மறக்காமல் சாதியை துணைக்குக் கூட்டிக் கொள்ளும். ஆனால் பண்ணும் தப்பை மட்டும் திருத்திக் கொள்ளவே கொள்ளாது. 

போகட்டும். அதற்காக, கம்பரசர் என எழுதி இருப்பதைக் கிண்டல் பண்ணும் ஆசான் விளக்கமாக கம்ப்ரஸர் என எழுதாமல் கம்பிரஷர் என எழுதி இருப்பதை சொல்லிக் காட்டாமல் இருக்க முடியுமா என்ன! 

Sunday, August 02, 2020

A Day of Dwijavanthi

I had this urge to listen to Ustad Bismillah Khan today and I started playing his music. I trusted the YouTube algorithm to feed me tracks of his music and had this Jaijaivanti delivered. This is a jugalbandi with Pandit V.G. Jog on the violin and the duo have created magic. Simply mesmerizing. Let us listen to that first. 



While listening to this I started thinking how this ragam has been transplanted in Carnatic music. Muthuswami Dikshitar is credited with bringing this ragam to the South. It is said that he, being the Sanskrit scholar that he was, christened the Carnatic ragam as Dwijayavanthi, instead of Jayajayavanti (which got morphed into Jaijaivanti in Hindustani) with its repeated Jayas, and it became to be Dwijavanthi. Dikshitar’s two brilliant compositions in Dwijavanthi, of course, are Akhilandeswari and Chetha Sri. 

One very interesting point to note is that when Jaijaivanti was brought to Carnatic music it was not a direct cut and paste. It was not introduced as a completely new ragam that has been imported from Hindustani music. The transition was made easy by adapting it on the back of a well known ragam Sahana. Lot of Sahana phrases were incorporated into Dwijavanthi and then the distinction between the ragams was highlighted and brought out brilliantly. That way, the listeners were not made to listen something alien but a take off on something familiar. This has been a consistent practice when such imports were made from other music forms. Talk about change management. 

I only wish I could get someone to demonstrate some of these common phrases between Sahana and Dwijavanthi and how Dwijavanthi sounds distinct despite those phrases. Let us listen to some of the songs set in Dwijavanthi.

First up is the legend Semmangudi Srinivasa Iyer singing Chetha Sri in his own inimitable style. I don’t know how many times I have listened to this rendering and every time the way he paints the ragam from 00:40 to 01:40 just leaves me breathless. I feel like he is executing a lazy dive off a cliff, suspending himself for a bit before a graceful dive into the waters. Just defines what Dwijavanthi is, in one mere minute. Or how in the middle of swaram singing he throws that one small embellishment in at 14:37 followed by violin. Simply great.  



Next comes is Akhilandeshwari by Dikshitar. Here Vignesh Ishwar and Sriranjani Santhanagopalan are singing a delightful version of that song after a shlokam. 


Another famous song is the Padam ’Taruni Njaan Endu Cheivu' by Maharaja Swati Thirunal of Travancore, where Dwijavanthi has been used in a haunting melody to bring out the separation anxiety of a girl who is away from her lover. Ramakrishnan Murthy has done a fantastic rendering of this and in the video you can see the smile of approval of his guru RK Shriram Kumar. Dwijavanthi has been used in Kathakali as well to bring out this emotion. 


Not to forget Tamil songs, here ‘Engu Naan Selven Ayya' by Periyasami Thooran sung by Sikkil Gurucharan. 


Thillanas in Dwijavanthi provide a different facet of the raga as they involve much faster phrases than the compositions we listened to above. Popular thillanas include those composed by Lalgudi Jayaraman and Balamurali Krishna. This one is composed and performed by Bharat Sundar. 


In retrospect I realize my first exposure to Dwijavanthi has been through Tamil film music and it is no wonder that it is a MSV song. The song is from the MGR movie ‘Maduraiyai Meeta Sundara Pandiyan’. It is sheer bliss to listen to how MSV has handled this ragam in this song.  The movement in the two seconds from 00:38 to 00:40 is such a joy to listen to. 


We have had some other nice songs in this ragam in Tamil film music. Dwijavanthi seems to be a favorite of Vidyasagar. His Poi Solla Koodathu Kadhali from the movie Run,  Mouname Parvaiyaai from Anbe Sivam and this song from the Malayalam movie Mister Butler are all good examples of Dwijavanthi in film music. Himesh Reshammiya has tuned Mukunda Mukunda in Dasavatharam and Shakar Ehsaan Loy the song Unnai Kaanadhu Naan in the movie Vishwaroopam in this ragam. Google tells me AR Rahman has used Dwijavanthi in a background score if not a song. It is surprising that I have not come across a song by Ilayaraja in this ragam. 

I will end this post with Chetha Sri rendered by my favorite, TM Krishna, in his languorous style. Just bliss. 



Saturday, August 01, 2020

அகரம் இகரம் உகரம் ஆச்சு...

இந்தத் திரைப்பட விளம்பரம் இன்று பரவலாகப் பகிரப்படுகிறது. ஞேயங் என்ற சொல்லே இல்லை என்னும் கருத்தோடு.

Image 

ஞேயம் என்பது நேயம் என்ற சொல்லின் திரிபு எனச் சொல்கிறது அகராதி. நேயம் காத்தல் என்பதை இணைத்தால் நேயங்காத்தல் எனப் புணரும். அதே போல ஞேயங்காத்தல் என எழுத நினைத்திருந்தால் அங்கே இடைவெளி வந்திருக்கக்கூடாது. ஞேயங்காத்தல் எனச் சேர்த்தே எழுதி இருக்க வேண்டும். 

இன்று பலரும் ஞாபகம் என்பதை நியாபகம் என்றும், நியாயம் என்பதை ஞாயம் என்றும் எழுதி வருகின்றனர். இதையும் திரிபு என ஏற்றுக் கொள்ள வேண்டும் எனச் சொல்வார் உண்டு. ஆனால் திரிக்கத்தான் வேண்டுமா என்ற கேள்விக்குப் பதில் இல்லை. 

இதே போல அய்யா, அவ்வை என்றெல்லாம் எழுதத் தொடங்கி இன்று அய்ந்து என்றெல்லாம் எழுதி ஐ ஔ என எழுதினாலே பாவம் என்ற அளவுக்குப் போய்விட்டது. கேட்டால் தொல்காப்பியரே சொல்லி இருக்கிறார். அகரம் இகரம் ஐகாரமாகும், அகரம் உகரம் ஔகாரமாகும், எனவே இப்படி எழுதுவது தவறில்லை. எழுத்துப் போலி எனத் தமிழில் உள்ளதே என்பர்.

ஆனால் ஐ என்றால் இரு மாத்திரை அது அய் எனும் பொழுது ஒன்றரை மாத்திரை ஆகிறதே ஐயா, அது எந்த விதத்தில் சரி எனக் கேட்டால் பதிலே இருக்காது. 

என்னளவில் இந்தத் திரிபுகளைத் தவிர்த்து ஐயா, ஔவை, ஞாபகம், நியாயம் எனச் சரியாக எழுதுவதே நலம். 

இந்தத் திரைப்படப் பெயர் நேயம் காத்தல் செய் என இருந்திருந்தால் இந்தப் பேச்சு வந்திருக்காது என்பதால் ஒரு பரபரப்புக்கு ஞேயங்காத்தல் செய் என வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த இடைவெளி இருப்பதால் அது தவறே. கா என்றாலே காத்தல் செய். காத்தல் செய் என நீட்டி முழக்க வேண்டுமா? 

முயல் என்பதை முயற்சி செய் என்பது போலத்தானே இதுவும்? முயல் எனத் தொடர்ந்து சொல்லி இருந்தால் முயற்சித்து என்ற கொடுமை வந்தே இருக்காது. இன்று விஷச்செடி போல மெத்தப் படித்தவர்களில் தொடங்கி அனைவரும் முயற்சித்து என எழுத முயல் எனப் புழங்காததும் காரணம். 

நல்ல தமிழில் எழுதுவோம். இந்த நலங்கெடல் தவிர்ப்போம்.

Thursday, July 09, 2020

கோபால கிருஷ்ண நாயர்!

“தாயே யசோதே உந்தன் ஆயர் குலத்துதித்த மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளாய்” என ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் எழுதியது, இவர் பாடுவதற்காக மட்டுமே என எண்ணும் அளவுக்குத் தன் முத்திரையை அதில் பதித்தவர் மதுரை மணி ஐயர். “காலினில் சிலம்பு கொஞ்ச, கைவளை குலுங்க, முத்துமாலைகள் அசைய தெருவாசலில் வந்தான்” என அவர் பாடும் போது கண்ணன் நிஜமாய் வருவது போல இருக்கும். கேட்போம். 



 

இந்தப் பாடலை வேறு யாரோ பாடும் பொழுது வார்த்தைகளைத் தவறாகப் பிரித்து “தாயே யசோதே உந்த நாயர் குலத்துதித்த மாயன்” எனப் பாடிவிட்டதாகவும், விமர்சகர் சுப்புடு இப்படி கண்ணனை நாயர் ஆக்கிவிட்டீர்களே என எழுதியதாகவும் ஒரு கதை உண்டு. இன்று இதனைப் புதுக்கதை போல பேஸ்புக்கில் போட்டு வேலியில் போகும் ஓணானை எடுத்து வேட்டியில் விட்டுக் கொண்டான் ஐயப்பன். அங்கு ஒரு சிறு விளக்கம் தந்தாலும் இதனை முழுதாக விளக்கிச் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பதிவு. 

 

வெண்பா எழுதும் பொழுது எதிர்மறையாக எதையும் எழுதாதே, அது பலித்துவிடும் என்பார் ஹரியண்ணா. ஒரு கவிஞன் தன்னை வஞ்சனை செய்தவர்களைச் சபித்து பாடுவதை அறம் பாடுதல் என்பார்கள். தமிழில் எதைச் சொன்னாலும் அது தவறாது என்பதே அதற்குக் காரணம். அது போல தமிழில் என்ன சொன்னாலும் அது உண்மையாகிவிடும் என்பதற்கு இந்தப் பாடலே உதாரணம். 

 

இவர்கள் தவறென்று பழித்துச் சிரிப்பதைப் பார்க்குமுன்னர் ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் எழுதியதுதான் தவறென்று என்னிடம் வந்து கடிந்து கொண்ட நண்பர் ஒருவரும் உண்டு. அது எப்படி கண்ணனை ஆயர் குலத்தில் உதித்த எனச் சொல்லலாம்? அவன் ஆயர் குலத்திலா உதித்தான்? வசுதேவருக்கும் தேவகிக்கும் பிறந்த குழந்தை அல்லவா அவன்? அவன் எப்படி ஆயர்குலத்தில் உதித்தவனாக முடியும் என்பது அவர் கேள்வி. உதித்த என்றால் பிறந்த என்ற பொருள் உண்டு என்றாலும் அது மட்டுமே பொருள் இல்லை. தோன்றிய, உதயமாகிய என்றெல்லாமும் சொல்லலாம் என்பதால் ஆயர் குலத்தினர் இடையே தோன்றிய எனப் பொருள் கொண்டால் பாடலில் தவறில்லை என விளக்குவதற்குள் எனக்குப் போதும் போதும் என்றானது. 

 

சரி, இன்றைய சர்ச்சைக்கு வருவோம். அப்படி என்ன மாற்றிப் பாடிவிட்டார்கள்? உந்த நாயர் குலத்துதித்த மாயன் எனப் பாடிவிட்டாரகள் அவ்வளவுதானே ஐயா. அதற்கேன் இவ்வளவு சினம்? 

 

கிருஷ்ண என்றால் கருப்பு. ப்ரெஞ்சில் Noir என்றால் கருப்பு. உச்சரிப்பு அப்படியே இல்லை என்றாலும் அப்படி ஒரு குழப்பம் வந்திருக்கலாம் எனச் சப்பைக்கட்டு கட்ட முடியும். அதைச் செய்ய வேண்டாம்.

 

வெளிப்படையான பொருளைக் கொண்டால், நாயர் குலத்தில் உதித்திருக்கும் மாயன் என்பதில் இருந்து அந்தக்காலத்திலேயே சேர நாட்டிற்கும் தற்பொழுது மெக்ஸிகோ என அழைக்கப்படும் அந்த நாளைய மாயன் சாம்ராஜ்ஜியத்திற்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பு இருந்திருப்பதையும் கண்ணனே இவ்விரு பிரிவுகளின் கலப்பு என்பதையும் ஒரு பாடலின் வரி மூலம் நம்மை உணரச்செய்கிறார் கவிஞர். 

 

வேண்டுமென்றால் மாயர்கள் பிள்ளையார் வழிபாடு செய்திருப்பதையும், அங்கிருந்து புலம் பெயர்ந்தவர்கள் இங்கு காடு சூழ்ந்த இடங்களில் குடியேறியதால் முல்லை நிலக் கடவுளின் பெயரையையே தமிழில் மாயோன் என நம் வரலாற்றில் சுட்டி இருப்பதையும் பேசி மேலும் பல தரவுகள் தரலாம். கூடவே மாயக்கண்ணன் விஷ்ணுவின் அவதாரம். ஆனால் அந்த அவதாரத்திற்கு முன்னர் வந்தவர் பரசுராமர். அவர் தனது கோடாலியைக் கடலில் எறிந்து கேரள கர்நாடக நிலப்பரப்பை உண்டாக்கியதால் அங்குள்ள அனைவருக்கும் அவரே மூதாதையர் எனக் கொண்டு நாயரும் அவரே ராயரும் அவரே என்பதிலும் தவறில்லை. 

 

நாயருக்கு விளக்கம் தருவது இருக்கட்டும் அதற்கு முன்னால் என்ன உந்த? யார் உந்த எதற்கு உந்த எனக் கேள்வி. அங்கேதான் தமிழின் அழகு வெளிப்படுகிறது. இவன் என்றால் இங்கே இருப்பவன், அவன் என்றால் அங்கே இருப்பவன். உவன் என்றால் அவனுக்கும் இவனுக்கும் நடுவே இருப்பவன். அது போல தமிழ்நாட்டில் இருந்து பேசும் பொழுது இந்தத் தமிழன், அந்த வடநாட்டவன். அப்பொழுது கேரள நாயரை என்னவென அழைக்க? அதனால்தான் உந்த நாயர். என்னே தமிழின் சிறப்பு எனச் சொல்லி முடித்துவிடலாம்.



ஆனால் கொஞ்சம் உள்ளார்ந்து பார்த்தோமானால் எத்துணை ஆழமாகச் சிந்தித்து இப்படியும் பாடலாம் என உணர்ந்து அதன் பின்னரே இப்படிப் பாடி இருக்கிறார்கள் என்பதை நாம் அறிந்து கொள்வோம். நாயர் என்றால் ஒரு குறிப்பிட்ட சாதியினரைக் குறிப்பதில்லை. நாய்களுடன் இருப்பவர் நாயர், அதாவது தத்தாத்ரேயர். கருட புராணத்திலும் பிரம்மபுராணத்திலும் இவர் விஷ்ணுவின் அவதாரமாகவே கருதப்படுபவர். எனவே பரசுராமரானாலும் சரி, கண்ணன் ஆனாலும் சரி, தத்தாத்ரேயர் ஆனாலும் சரி, அவர் விஷ்ணுவின் வடிவமே என்பதைக் குறிக்கவே கண்ணனை நாயர் என அழைத்துள்ளனர். வேறு புராணங்களின் படி தத்தாத்ரேயர் சிவன், விஷ்ணு, பிரம்மா என மூவரும் இணைந்த வடிவமாகப் பார்க்கப்படுபவர். எந்தப் பெயரில் அழைத்தாலும் கடவுள் ஒருவரே என்பது மற்றுமொரு தத்துவ விசாரம். நாய்கள் சூழ்ந்து இருப்பவரே தவிர ஆடு மேய்க்கும் இடையன் இல்லை என்பதை இந்திய ஞானமரபின் எல்லையற்ற தரிசனம் என்றும் கொள்ள வேண்டும்.  

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். அதுதான் தமிழ். இதெல்லாம் தெரியாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் எனத் தப்பு கண்டுபிடிப்பதை நிறுத்துவதே தமிழுக்குத் தரும் மரியாதை.

Saturday, March 14, 2020

Pi Day - Blast from the Past!

Pi Day! 

March 14th or as we Americans write, 3.14. 

Birthday of Albert Einstein and what better day to bring Math to the public. 

But of course, we made it Pie Day and we see a slew of deals such as a pizza for $3.14 or free dessert pies with entree orders and the like from various restaurants to mark the day. 

Schools, Colleges and Libraries remain faithful to Pi Day and organize special events to celebrate the day. This year though, these events all stand cancelled, thanks to Covid19 scare. 

Let us turn the clock to 2018, when Austin Public Library put up a fantastic set of events in the, then newly opened, central library location. 


We were greeted by a specially curated rack of books for the occasion called the Pi Day Picks. A very topical and interesting collection that had books ranging from Math and Science to Cooking to Music.  


I borrowed this book. A mathematician decides to search for the earliest inscription of zero and to prove conclusively that zero was a concept from Asia. Quite an interesting read. If I remember right, the earliest inscription that he found out was one from the Far East. Is there anything older in India?  


The main event was a lecture on the history of Pi by a lecturer from University of Austin. It was a delightful session, unfortunately I don't seem to have a picture. 

It was followed by a class on pie making. We got to sample the pies. 


The library had designated 3:14:12PM as the time to celebrate Pi Day. There was even a countdown clock. 


And when it was time, there entered a Mariachi band who entertained us all with some lovely music. Look at the Pi themed background. 








The final event of the day was a Pieku contest where we had to write Pi themed Haikus on the spot. I did submit a few of them. A couple of them were

Cakes are total fake
Pokey corners their sides make
True Pies are not squared?


Song, Dance and Some math
Plates of pies and coffee
Pie day in Austin


Two sides of a slice
That three times over plus some
The crust of a pie


The last one was selected as one of the winning entries and I won a book, on Pi, of course. 


We did stop in a neighborhood Pizza place for a bite before getting back home.




A Happie day overall!



Sunday, January 12, 2020

தசரதன் தர்பார்

தர்பார் ரிலீஸ் படலம் நடந்துவிட்டது. தூற்றுவார் தூற்றலும் போற்றுவார் போற்றலும் வழக்கம்போல் நடந்துகொண்டு இருக்கிறது. இதில் போற்றுவார் சுட்டும் ஒன்று இப்படத்தில் வரும் மகள்- தந்தை உறவு. பொதுவாக கதாநாயகனைச் சுற்றிச் சுழலும் திரையுலகத்தில் அவன் தாய்மேல் கொண்ட பாசத்தைப் போற்றும் திரைப்படங்கள் அதிகம். தன் பெண் மேல் கொண்ட அன்பினைப் பேசும் படங்கள் உண்டு என்றாலும் அவை அரிதே. ஒரு பெண் தனது தந்தை மேல் கொண்ட பாசத்தினைப் பற்றிப் பேசும் படங்கள் இல்லை என்றே சொல்லிவிடலாம். 

தாய் மேல் பாசம் கொண்டவர்கள் மகன்கள், தந்தை மேல் பாசமுள்ளவர்கள் மகள்கள் என்பது பொதுவழக்கு. ஒன்றுக்கு மூன்று தாய்கள் அவர்கள் மேல் பாசம் கொண்ட ராமன் என தாய்ப்பாசம் பற்றிப் பேசி இருக்கும் கம்பன் இந்த தந்தை மேல் மகள் கொண்ட பாசத்தை விட்டு வைத்திருப்பானா என்ன? அதை எப்படிச் சொல்லி இருக்கிறான் எனப் பார்க்கலாம். 

ராமருக்குப் பட்டாபிஷேகம் என அறிவிப்பு வந்தாயிற்று. ஊரே கொண்டாடிக்கொண்டு இருக்க, ஒருத்திக்கு மட்டும் வயிறு எரிகிறது. அது மந்தரை என்னும் கூனி. இந்தப் பட்டாபிஷேகம் நடக்கக்கூடாது என முடிவு செய்து கொண்டு, அதைத் தடுக்க கைகேயியைத் தேடி வருகிறாள். கைகேயி படுத்துத் தூங்கிக் கொண்டு இருக்கிறாள். துன்பம் வரும் போது தூங்கிக் கொண்டு இருக்கிறாயே என அவளை எழுப்புகிறாள் மந்தரை. ராமன் எனக்கு மகனா இருக்கும்போது எனக்கென்ன துன்பம் என்றபடி எழுந்திருக்கிறாள் கைகேயி. 

இவளை எப்படி மனம் மாற்ற வைப்பது என நினைத்து மந்தரை முதலில் ஆரம்பிப்பது சக்களத்திச் சண்டை. நேரா ராமனுக்குப் பட்டாபிஷேகம்ன்னு சொல்லலை. உனக்கு எல்லாம் போச்சே, தன்னோட அறிவால் கோசலை எல்லாத்தையும் எடுத்துக்கிட்டாளேன்னு ஆரம்பிக்கறா. 

வீழ்ந்தது நின் நலம். திருவும் வீழ்ந்தது
வாழ்ந்தனள் கோசல மதியினால் என்றாள் 

"உன்னோட நலம் போச்சு, செல்வமும் போச்சு, அந்தக் கோசலை இருக்காளே புத்திசாலி, அவளுக்குப் பாரு வாழ்வு"ன்னு ஆரம்பிக்கிறா மந்தரை. ஆனா கைகேயி பாவம் நல்லவள். "கோசலைக்கு இது வரை என்ன இல்லை, எனக்குதான் என்ன குறைச்சல்?" அப்படின்னு பதில் சொல்லறா. அப்போதான் கூனி விஷயத்தையே சொல்லறா. 

கோடிய வரிசிலை இராமன் கோமுடி
சூடுவன் நாளை வாழ்வு இதெனச் சொல்லினள் 

வளைந்த கட்டமைப்பைக் கொண்ட வில் உடைய ராமனுக்கு நாளை பட்டாபிஷேகம், இதனால் கோசலைக்கு வந்ததே வாழ்வு எனச் செய்தியைச் சொல்கிறாள். செய்தியைக் கேட்ட கைகேயிக்கு ஒரே சந்தோஷம். எப்படி சந்தோஷம்ன்னா கோசலைக்கு எவ்வளவு சந்தோஷம் வந்ததோ அவ்வளவு சந்தோஷமாம் கைகேயிக்கும். சந்தோஷத்தில் தான் போட்டுக் கொண்டு இருந்த மணிமாலையைக் கழற்றி மந்தரைக்குப் பரிசாகத் தந்தாள். மந்தரைக்குக் கோவமான கோவம். 

சரி, சக்களத்திச் சண்டை சரி வரலை. அடுத்ததா பரதனைக் காட்டி இவள் மனத்தை மாத்துவோம் என தாய்ப்பாசத்தைக் குறி வைத்து, “அடியே, சீதையும் ராமனும் சிம்மாசனத்தில் உட்கார உன் மகன் வெறும் தரையில் இருப்பான். ராமனுக்கு பேரும் புகழும் கிடைக்கும், உன் மகன் ஒண்ணுமில்லாமல் போவான். அப்படி இருக்கிறதுக்குப் பதிலா பேசாம சந்நியாசியாகக் காட்டுக்கே போகலாம். ஏன் செத்தேக் கூடப் போகலாம்.” என்று அடுத்த அம்பை எய்கிறாள் மந்தரை. 

கைகேயி இதைக் கேட்டுக் கோவப்படறா. “நீ எனக்கும் பரதனுக்கும் நல்லது செய்ய வந்தா மாதிரி தெரியலை. என் தோழியாப் போனதால உன்னைச் சும்மா விடறேன். இல்லைன்னா இப்படிப் பேசின உன் நாக்கை வெட்டி இருப்பேன். பேசாம இருக்கிற வழியைப் பாரு” அப்படின்னு கொந்தளிக்கறா. 

மந்தரை விடலை. “நீ என்னை என்ன வேணுமானாலும் திட்டு. ஆனா நான் இங்க இருந்து போகறதா இல்லை. ராமன் பட்டம் சூட்டிக்கிட்டான்னா கோசலையும் சீதையும் உன்னைச் சீந்த மாட்டாங்க. அவங்க பார்த்துத் தரதை வெச்சுதான் நீ வாழணும். அதை வெச்சுதான் நீ மற்றவர்களுக்கும் தர முடியும். ஆனா அதை எல்லாம் விடு. இன்னும் ஒரு பிரச்னை இருக்கு.” எனச் சொல்லி அடுத்த குண்டைப் போடறா 

காதல் உன் பெருங் கணவனை அஞ்சி, அக் கனி வாய்ச்
சீதை தந்தை, உன் தாதையைத்தெறுகிலன்; இராமன்
            மாதுலன் அவன்; நுந்தைக்கு வாழ்வு இனி உண்டோ?
            பேதை! உன்துணை யார் உளர் பழிபடப் பிறந்தார்?

"இப்படி ஒண்ணும் தெரியாம இருக்கியே. உன் காதல் கணவன் தசரதனுக்குப் பயந்துதானே சீதைக்கு அப்பா, ராமனுக்கு மாமா அந்த ஜனகன் உன் அப்பாவின் மேல் போர் தொடுக்காமல் அமைதியாக இருக்கான். இனிமேலும் அவங்க அப்படி இருப்பாங்களா? உன்னைச் சார்ந்ததினால் இப்போ அவங்களுக்கு ஆபத்து வரப் போகுதே" 

மற்றும் நுந்தைக்கு வான் பகை பெரிது உள; மறத்தார்
செற்றபோது, இவர் சென்று உதவார் எனில், செருவில்
            கொற்றம் என்பது ஒன்று, எவ் வழி உண்டு? அது கூறாய்!
            சுற்றமும் கெட, சுடு துயர்க் கடல் விழத் துணிந்தாய்!

"உங்கப்பாவுக்கு ஊரெல்லாம் சண்டை. அந்தப் பகைவர்கள் யாராவது உங்கப்பாவோட சண்டை போட வந்தால் இவங்க போய் உதவுவாங்கன்னு நினைக்கிற? மாட்டாங்க. அப்படி இவங்க உதவாம போரில் உங்க அப்பாவால ஜெயிக்க முடியுமா? அதுக்கு வழி இருந்தாச் சொல்லு. இல்லைன்னா உன் உறவெல்லாம் துன்பக் கடலில் விழுவாங்க. கூடவே நீயும் சேர்ந்து விழப் போற. இதுதான் நடக்கப் போகுது" என மந்தரை தனது கடைசி ஆயுதத்தைப் பயன்படுத்தினாள். 

தீய மந்தரை இவ் உரை செப்பலும், தேவி
தூய சிந்தையும் திரிந்தது 

இப்போதான் கைகேயி மனம் மாறுது.  சக்களத்தி சண்டை வேலைக்காகலை, உனக்கு ஒண்ணும் இல்லாமப் போகப் போகுதுன்னு சொன்னது வேலைக்காகலை, பரதன் வேலைக்காரனாகப் போறான், சந்நியாசி ஆகிடுவான், செத்தே போயிடுவான்னு சொன்னது கூட உரைக்கலை. ஆனா உங்க அப்பாவுக்குக் கஷ்டம் வரப் போகுதுன்னு சொன்ன உடனே பதறி அடிச்சு எங்கப்பாவுக்குப் பிரச்னையா, என்ன செய்யலாம் சொல்லுன்னு கைகேயி கிளம்பறா பாருங்க. அதுதாங்க ஒரு பொண்ணுக்கு அப்பா மேல இருக்கிற பாசம்!! அதை இவ்வளவு அழகாச் சொன்ன கம்பருக்கு ஜே!! 

பின்குறிப்பு: 

அந்தக் கடைசி பாட்டோட முழு வடிவம் இது.  

தீய மந்தரை இவ் உரை செப்பலும், தேவி
தூய சிந்தையும் திரிந்தது - சூழ்ச்சியின் இமையோர்
            மாயையும், அவர் பெற்ற நல் வரம் உண்மையாலும்,
           ஆய அந்தணர் இயற்றிய அருந் தவத்தாலும்.

கூனி சொன்னதுனால மனம் மாறிடும் அளவுக்கு கைகேயி சிறிய மனம் படைத்தவள் இல்லை. தேவர்கள் திருமால் கிட்ட போய் ராவணன் எங்களைப் படுத்தறான் நீங்கதான் காப்பாத்தணும்ன்னு வேண்ட, அவரும் நான் ராமனா அவதாரம் எடுத்து ராவணனைப் பார்த்துக்கிறேன்னு சொன்னார். அதே மாதிரி இந்த அந்தணர்கள் எல்லாம் அரக்கர் கொட்டம் அடங்க வேண்டும் என்று தவம் செய்தார்கள். இவைதான் மந்தரையாக வந்து கைகேயி மனத்தைக் கலைத்தது என்பது முழுப்பொருள். 

Saturday, January 04, 2020

And whisper'd in the sounds of silence.....

Apparently the bhakths are going around saying the sun sounds Om. And in retaliation the non-bhakths have taken to saying how can there be sounds in space. 

There ARE sounds in space. We cannot hear them as there is no medium, such as, air or water for the vibrations to travel. So, the famous, "In space, no one can hear you scream." tagline of the movie Alien is true to that extent. 

However, there are other ways for us to hear them. All of space is not vacuum. There is interstellar gas, there is galactic dust. The sound transmitted by these are of such low frequency that we cannot hear them. 

Electromagnetic waves, such as Radio waves and Microwaves are aplenty in space. Electromagnetic waves can travel through space. By converting these waves into sound waves, you can hear the space sounds. Scientists employ this technique as one way of analyzing the data that they receive from space. 

Using this and a variety of other techniques there are plenty of space sounds that are available for us to hear. Scientists have been successful in even simulating the sound of the Big Bang!

   

NASA has released a compilation of space sounds that can be the background for any space themed video games or even for a Halloween party!

   

We even know how it sounds, when two black holes collide. Look out for that distinct ‘Wooop’ in this video.

    

 So, what about Sun, then? Of course we do have sounds from Sun. Here is a compilation of those.

   

Does that sound like Om? No. It does not. 

But next time someone says there is no sound in space, tell them there is. You just should listen. 

But, hey, that is exactly what my wife tells me. I should listen!

Friday, January 03, 2020

அழுதற் பொருட்டன்று அன்பு....

அயோத்தியா காண்டம். நகர்நீங்கு படலம். ராமனுக்குப் பட்டாபிஷேகம் என்ற செய்தி கேட்டு  மகிழ்ச்சியாக இருந்த அயோத்தி மக்கள் மேல் இடியாய் இறங்குகிறது, 'பட்டாபிஷேகம் தடைபட்டது. ராமன் பதினான்கு வருடங்கள் காட்டுக்குச் செல்கிறான்', என்ற செய்தி. வசிஷ்டர் அதைச் சொன்னதும் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள் மக்கள். 

அவர்கள் வருத்தத்தை பல பாடல்களில் சொல்கிறான் கம்பன். இந்தச் செய்தி தசரதனுக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்ததோ அம்மக்கள் எல்லாருக்கும் அதே போலக் கஷ்டமாக இருந்தது. புண்ணில் மேல் தீ பட்டாற்போல் இருந்தது. பெருங்காற்றில் வீழ்ந்த மரம் போல மண் மேலே விழுந்து அழுதார்கள் அம்மக்கள் என்றெல்லாம் அவர்கள் வருத்தத்தைச் சொல்கிறான். 

ஆனால் மக்கள் மட்டுமா கஷ்டப்பட்டார்கள்? இல்லை, அங்குள்ள பறவைகளும் மிருகங்களும் கூட ராமன் நகர் நீங்கப் போகிறான் என்பது அறிந்து கலங்கினவாம்.

கிள்ளையொடு பூவையழுத கிளர் மாடத்து
உள்ளுறையும் பூசையழுத வுருவறியாப்
பிள்ளையழுத பெரியோரை யென் சொல்ல
வள்ளல் வனம் புகுவானென்றுரைத்த மாற்றத்தால்.

பதம் பிரிச்சு எழுதினா அப்படியே பொருள் புரியும். 

கிள்ளையொடு பூவை அழுத, கிளர் மாடத்து
உள் உறையும் பூசை அழுத, உரு அறியாப்
பிள்ளை அழுத, பெரியோரை என் சொல்ல
‘வள்ளல் வனம் புகுவான்’ என்று உரைத்த மாற்றத்தால். 

கிள்ளைன்னா கிளி. பழங்களை மூக்கால் கிள்ளித் தின்பதால் அப்பெயர். பூவை என்றால் நாகணவாய்ப் பறவை. இன்னிக்கு நாம மைனா எனச் சொல்கிறோமே, அந்தப் பறவை. பூசை என்றால் பூனை.

வள்ளல் வனம் புகப் போகிறான். வள்ளல் என ராமனை ஏன் சொல்கிறான்? நேரடிப் பொருளாக தனக்குண்டான அரசுரிமையைத் தம்பிக்குத் தந்ததால் வள்ளல். ஆனால் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால் அவன் அவதாரம். தன்னை நம்பி வருபவர்களை கைதூக்கி மேலே கொண்டு செல்லும் தன்மை உடையவன். அப்படி தந்து, பெறுபவர்களை உயர் நிலைக்குக் கொண்டு செல்வதனால் ராமன் வள்ளலாம். இதைத் தொடர்ந்து பல விதங்களில் சொல்லிக் கொண்டே இருக்கிறான் கம்பன். 

அப்படிப்பட்ட வள்ளலாகிய ராமன் காட்டுக்குப் போகப் போகிறான் என்ற செய்தியைக் கேட்ட கிளிகள் அழுதன. கூட இருக்கும் மைனாக்கள் அழுதன.  வீட்டில் செல்லமாக வளர்ந்து வரும் பூனைகள் அழுதன. அவ்வளவு எல்லாம் ஏன்யா? தன் தாயின் வயிற்றில் இன்னமும் முழு உருவம் பெறாத பிள்ளைகள் அழுதனவாம். இவர்களே இப்படி வருத்தப்பட்டால் எல்லாம் தெரிந்த பெரியவர்களின் நிலையை சொல்லவும் வேண்டுமா என்கிறார் கம்பர். 

இதோட கூட இன்னுமொரு பாடலில் 

ஆவு மழுதவதன் கன்றழுத வன்றலர்ந்த
பூவு மழுதபுனற் புள்ளழுத கள்ளொழுகம்
காவு மழுத களிறழுத கால்வயப்போர்
மாவு மழுதன வம்மன்னவனை மானவே 

அதாவது 

ஆவும் அழுத அதன் கன்று அழுத அன்றலர்ந்த
பூவும் அழுத புனல் புள் அழுத கள்ளொழுகும்
காவும் அழுத களிறு அழுத கால்வயப்போர்
மாவும் அழுதன அம்மன்னவனை மானவே

புனல் புள் - நீரில் வாழும் பறவைகள். களிறு - யானை, கால்வயப்போர் மாவும் - தேர்க்காலில் பூட்டப்படும் போருக்குப் பயன்படும் வலிமையுள்ள குதிரைகள். மா என்றால் குதிரை என்றாலே ஹரியண்ணா எழுதிய கல்லா மா பதிவுதான் ஞாபகத்திற்கு வருகிறது! 

ஓரறிவு உடைய பூக்கள் அழுதன, கள் ஒழுகும் சோலையில் இருக்கும் மரங்கள் அழுதன. ஐந்தறிவு கொண்ட பசுக்களும், அவற்றின் கன்றுகளும் அழுதன. நீரில் வாழும் பறவைகள் அழுதன. யானைகள் அழுதன. போரில் பயன்படும் தேர்களில் பூட்டப்படும் வலிமையான குதிரைகள் அழுதன. அவை எல்லாம் ராமனின் பிரிவைத் தாங்க முடியாத தசரதன் அழுததைப் போல அழுதன. 

இப்படி ஓரறிவு கொண்ட காவும் பூவும் முதல் ஆறறிவு கொண்ட மாந்தர் வரை எப்படி வருத்தப்பட்டாங்கன்னு சோகத்தைப் பிழிஞ்சு எடுக்கறார் கம்பர். ஆனா இதே சம்பவத்தை வேறு ஒரு காப்பியத்தில் எப்படிச் சொல்லறாங்க தெரியுமா? 

மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து

சிலப்பதிகாரம். ஆய்ச்சியர் குரவை. இங்க இளங்கோவடிகள் என்ன சொல்லறார்ன்னா. "அடேய் ராமா, தம்பியோட நீ காட்டுக்குப் போகப் போறயா? உன் காலில் கல்லும் மண்ணும் குத்திச் சிவந்து போகப் போகுதா? நல்லா வேணும்! அன்னிக்கு மாபலி கிட்ட போய் எனக்கு மூணு அடி நிலம் வேணும்ன்னு கேட்ட, அந்த நல்லவனும் நீயே அளந்துக்கோன்னு சொன்னான். ஆனா நியாயமா மூணு அடி அளந்துக்காம முறை கெட்டு மூவுலகையும் ரெண்டே அடியில் அளந்துக்கிட்டு மூணாவது அடியை அந்த மாபலி தலையிலேயே வைத்து அழுத்தினாய்தானே. அதான் இன்னிக்கு அந்த காலில் கல்லும் முள்ளும் குத்தி சிவந்து போகப் போகுது உனக்கு நல்லா வேணும்!" இப்படி ஆய்ச்சியர்கள் கேலியாய்ப் பாடுவதாய் எழுதி இருக்கிறார் இளங்கோவடிகள். 

இது அதிகப்பிரசங்கித்தனம் இல்லை. நல்ல நண்பனை கேலி செய்து, இப்போ சொல்லற மாதிரி சொல்லணும்ன்னா கலாய்ச்சு, கிண்டல் பண்ணி பேசற மாதிரி. பெனாத்தல் ஒரு சினிமா பார்த்துட்டு இதெல்லாம் படமான்னு விமர்சனம் போடுவான். உடனே தேடித் தேடிப் போய் பார்க்கிறதானே உனக்கு நல்லா வேணும் அப்படின்னு நான் கமெண்ட் போடுவேன். எங்களுக்குள்ள இந்த கொடுக்கல் வாங்கல் எல்லாம் ஒரு விளையாட்டு. அது மாதிரி ஆண்டவன் கிட்ட ரொம்ப உரிமை எடுத்துக்கிட்டு அவரையே கிண்டல் பண்ணறதும் உண்டு. இதுக்கு அசதியாடல்ன்னு பேரு. இதை இளங்கோவடிகள் மட்டுமில்லை. சுந்தரமூர்த்தி நாயனார் தொடங்கி பலரும் இப்படி அசதியாடலைக் கையாண்டு இருக்காங்க. 

போகட்டும். இப்போ ஏன் இந்தப் பதிவுன்னா சமீபத்தில் தமிழகத்தில் ராமரை வணங்குவது வழக்கமா என்று சோஷியல் மீடியாவில் ஒரு பேச்சு வந்தது. இன்னிக்கு புலவர் கீரன் கம்பராமாயணம் பத்திப் பேசினதைக் கேட்டுக்கிட்டு இருக்கும் பொழுது, அந்தக் கேள்வி கேட்டவங்களுக்கு இதுதான் பதில் என மனத்தில் பட்டது. அதான் அவர் சொன்ன கருத்துகளை ஒட்டி இந்தப் பதிவினை எழுதினேன். 

கம்பராமாயணம் பொயு 12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகச் சொல்லறாங்க. அதாவது கிட்டத்தட்ட 900 வருஷத்துக்கு முன்னாடி. ஆனா அதுக்கும் ஆயிரம் வருடங்களுக்கு முன்னாடி எழுதப்பட்டது சிலப்பதிகாரம். அதிலும் ராமனைப் பற்றிக் குறிப்பு இருக்கு. குறிப்பு மட்டுமில்லை , வாமன அவதாரமும் ராம அவதாரமும் எடுத்தது திருமால்தான், அந்தத் திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே என அவரைப் போற்றிப் பாடி இருக்காங்க. 
  
ஆக, நம்ம ஊரில் ராமர் இரண்டாயிரம் வருஷமா இருக்காரு, புது வரவு எல்லாம் இல்லைன்னு தெரிஞ்சுக்குங்க. 

பாவம், எம்டியாருக்கு வந்த சோதனை!

ராஜநாயகம் எழுதறதை ஒரு பொழுதுபோக்காப் படிப்பேன். ரெண்டொரு சமயத்தில் தவறுகளைச் சுட்டிக் காட்ட ஒரே அழுகை என்பதால் அதையும் நிறுத்தி விட்டேன். ஆனால் இவர் எம் டி ராமநாதனைப் பற்றி எழுதியதைப்( https://rprajanayahem.blogspot.com/2019/12/md.html ) படித்த பின்பு சும்மா இருக்க முடியவில்லை. 

எம் டி ராமநாதன் நல்லாப் பாடுவார். அது வரை சரி. டைகர் வரதாச்சாரியின் சிஷ்யர். அதிலும் சந்தேகமில்லை. ஆனால் "ராமநாதன் எந்த அளவுக்கு குருவை உள்வாங்கி செரித்துக்கொண்டார் என்றால்,அவருடைய மாறுகண் கூட இவருக்கும் வந்து விட்டது”, இதை எல்லாம் எந்த ஆதாரத்தோட பேசறார்ன்னு தெரியலை. சும்மா திண்ணையில் உட்கார்ந்துக்கிட்டு அடிச்சு விடற மாதிரி எதையோ சொல்லறார். இதுக்கு எல்லாம் எதாவது ஆதாரம் உண்டா?  போகட்டும். 

"தேவச பாகவதரின் மகனாக பாலக்காடு மஞ்சப்பராவில் பிறந்து” அவரோட அப்பா பேரு தேவசமும் இல்லை திவசமும் இல்லை. தேவேச பாகவதர். அதுவும் போகட்டும். தட்டச்சுப் பிழைன்னு இதை விட்டுடலாம்.  "MD ராமனாதனின் கச்சேரியைக் கேட்கும் போது மேடைக் க்சசேரி பந்ததி என்பது உருவானதற்கு முன்பு கர்னாடக சங்கீதத்தை எல்லோரும் இப்படித்தான் பாடியிருப்பார்களோ என்று தோன்றும்.” அது பத்ததி. பந்ததி எல்லாம் இல்லை. சரி, அதையும் தட்டச்சுப் பிழையில் சேர்த்துடலாம். 

"மயிலை கபாலீசுவரர் மீது ‘பரமகிருபாநிதே’ என்றும் ‘சம்போ மஹாதேவா’ என்றும் கீர்த்தனைகள் இயற்றியிருக்கிறார்.” இதில்தான் எனக்கு முக்கியமான பிரச்னை. இந்த இரண்டு பாடல்களைப் பற்றித் தேடிப் பார்த்து விட்டேன். என்னை விடுங்கள். சங்கீதம் தெரிந்தவர்களிடமும் கேட்டுவிட்டேன். அவர்களும் தெரியவில்லையே என்கிறார்கள். இப்படி எதுவும் அவர் இயற்றியதாகத் தெரியவில்லை. என்ன ராகங்களில் இயற்றியுள்ளார் போன்ற விவரங்கள் தெரிந்தால் அப்படி பாடல்கள் உள்ளதா எனத் தேடிப் பார்க்கலாம். இல்லை வழக்கம் போல சும்மா அடிச்சு விட்ட தகவலாய் இருந்தால் அதையும் நிர்ணயம் செய்து விடலாம். 

"பாகேஸ்வரி ராக ’சாகர சயனா’ இவர் இயற்றியது.” சரி. இதைச்  சொன்ன பிறகு, சில பத்திகள் தாண்டி, ஒரு வரி வருகிறது பாருங்கள்.  "முத்துசாமி தீட்சிதரின் நாட்டை ராக ’மஹா கணபதிம்’, ஸ்ரீ வரத தாசாவின் அடானா ராக ’ஹரியும் ஹரனும்’ இவர் பாடியதை கேட்பது ரசானுபவம்.”. தீக்ஷிதர் சரி. அது யாரு ஸ்வாமின் ஶ்ரீ வரத தாசா? அது பின்னாடி வருகிறது. "இவர் இயற்றிய எல்லா கிருதிகளும் வரத தாச என்ற முத்திரையைப்பெற்றிருக்கும்.வரதாச்சாரியின் தாசன் என்பதையே அது குறிக்கும். இவர் இயற்றிய எல்லா கிருதிகளும் வரததாச என்ற முத்திரையைப்பெற்றிருக்கும். வரதாச்சாரியின் தாசன் என்பதையே அது குறிக்கும்.” 

அதாவது முதலில் இவர் இயற்றியதாக இரண்டு பாடல்கள் பற்றி ஒரு வரி. பின்னர் சாகர சயனவிபோ பற்றி ஒரு வரி. அதன் பின்னர் யாரோ ஶ்ரீ வரத தாசா இயற்றியதாக ஒரு பாடல். ஆனால் அந்த ஶ்ரீ வரத தாசா என்பவர் யாரு? செந்தில் சொல்லற மாதிரி அந்த வாழைப்பழமே இதுதான் மாதிரி சுத்திச் சுத்தி என்னமோ எழுதி இருக்கார். எம்டியாரைப் பத்தின நல்ல கட்டுரை வேணுமானால் ரவி வர்மா அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியுள்ள இந்தப் பதிவையும் ( https://ramavarma.yolasite.com/vishwa-palam-shri-padmanabham.php ) இந்தப் பதிவையும் ( https://ramavarma.yolasite.com/unsung-genius---mdr.php) படிக்கலாம். 

விக்கியைப் பார்த்தும் கொஞ்சம் கூகிள்  எழுதினால் கூட கோவையாக எழுத முடியும். இப்படி அள்ளித் தெளித்தால் போல பத்து வரி எழுதி தன்னோட போட்டோவோட ஒரு பதிவு போட்டுக்கணும்ன்னு என்ன ஆர்வமோ. தெரியலை. 

Saturday, December 07, 2019

ராமன் அப்துல்லா

“யுவரானர், இந்த வழக்கு ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு” என்று தன் வாதத்தைத் தொடங்கினார் பரசுராமன். தமிழகத்தின் சிறந்த குற்றவியல் வழக்கறிஞர். வாதாட வந்தால் மணி நேரத்திற்குப் பல லட்சங்கள் வாங்கும் அளவு புகழ் பெற்றவர். வலதுசாரி கட்சி ஒன்றின் வெளிப்படை ஆதரவாளர் என்றாலும் தேவை என வந்துவிட்டால் இவரை அனைத்துக் கட்சியினரும் நாடுவது இவரின் திறமைக்குச் சான்று. பரசுராமன் ஆரம்பித்த விதத்தை ரசித்துக்கொண்டு குற்றவாளிக் கூண்டில் நின்றான் ரமேஷ்.

ரமேஷ் பிரபல தொழிலதிபர். ரமேஷ் பில்டர்ஸ் என்றால் எல்லாருக்கும் தெரியும். அதற்கு புற்றீசல் போல் எல்லா இடங்களிலும் இவர்கள் பெயர் தாங்கி வரும் கட்டடங்கள் மட்டும் காரணமில்லை. பிரபல எதிர்கட்சி அரசியல்வாதி ஒருவரின் பினாமி ரமேஷ் என்றும் அந்த அரசியல் தொடர்பைப் பயன்படுத்தி தனக்கு தேவையான நிலங்களை அபகரித்தும் மிரட்டி வாங்கியும்தான் தன் கட்டுமான சாம்ராஜ்யத்தை நிறுவி இருக்கிறான் என்பதும் பரவலான பேச்சு. இன்று நடக்கும் வழக்கும் அது போலத்தான்.

இணைந்த கரங்கள் என்ற பெயரில் ஒரு தொண்டு நிறுவனம் நடத்தி வருபவர் அப்துல்லா. தன் இடமொன்றில் ஏழைக் குழந்தைகளுக்கு இலவசப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். அந்த இடத்தைக் காலி செய்யும்படி மிரட்டியதாகவும் அந்த வாக்குவாதம் வலுத்து ரமேஷ் கத்தியால் அப்துல்லாவைக் குத்தி இப்பொழுது அப்துல்லா மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கிறார் என்பது இந்த வழக்கு. உண்மையும் அதுதான். பரசுராமனைப் பிடித்தால் எளிதில் வெளி வந்து விடலாம் என்று செலவுக்குக் கவலைப்படாமல் அவரை நாடினான் ரமேஷ்.

“இதுதானே நீங்கள் குத்தியதாகச் சொல்லப்படும் கத்தி?” என ரமேஷைக் கேட்டார் பரசுராமன்.

“ஆமாம்.”

“யுவரானர், அப்துல்லாவின் கழுத்தில் இருந்து வயிற்றின் இடப்பகுதி வரை குத்திக் கிழித்து இருப்பதாக மருத்துவ அறிக்கை சொல்கிறது. இந்தக் கத்தி, கூர்க்கா இனத்தவரால் பயன்படுத்தப்படும் கூக்ரி என்ற கத்தி. இதன் வெட்டும் பகுதி வளைந்திருப்பதால் இதனைக் கொண்டு குத்தினால் வெட்டு ஆழமாக விழும். இந்தக் கத்தியைக் கொண்டு அறிக்கையில் சொல்லப்படும் படி குத்தினால் கழுத்தில் இருக்கும் ரத்த நாளங்கள் வெட்டுப் பட்டு ஆள் பிழைக்க வழியே இல்லை. நீங்களே பாருங்கள்” எனப் பேசிக் கொண்டே பரசுராமன் தன் கையில் இருந்த கத்தியால் ரமேஷின் கழுத்தைக் கிழித்தார். அங்கேயே துடித்து விழுந்தான் ரமேஷ். 




அவனுக்கு மட்டும் கேட்குமாறு பரசுராமன் சொன்னார்..

"ஏண்டா காசு இருந்தா எந்த வக்கீலும் வாலாட்டுவான்னு நினைச்சியா? அப்துல்லா என் பையனுக்கு காட்பாதர் - அதைக்கூடவா விசாரிக்க மாட்டே?"

ஐம்பதாண்டு கால உயிர்நண்பர் அப்துல்லா உயிர் பிழைத்து வர வேண்டும் என்ற பிரார்தனையோடு கண்கள் கலங்கியபடி விலங்குக்குக் கை நீட்டினார் பரசுராமன்.