Thursday, March 30, 2006

Voipstunt - வெறும் ஸ்டண்ட்?

Voipstunt . இப்பொழுது இணையத்தில் அதிகம் பேசப்படும் ஒரு சேவை இது. கணினியிலிருந்து கிட்டத்தட்ட ஐம்பது நாடுகளில் உள்ள தொலைபேசிகளை இலவசமாக அழைக்க முடியும் என்பதுதான் இந்த சேவை. இந்த நாடுகளில் இந்தியர்கள் அனேகம் பேர் வசிக்கும் பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளும் அடக்கமென்பதால் அதிக அளவில் ஆர்வத்தைத் தூண்டும் ஒரு தளமாய் விளங்கி வருகிறது. நமது தமிழ் மணத்தில் கூட ஒரு நண்பர் இதைப் பற்றி எழுதியிருந்தார்.

உலகெங்கிலும் இலவச தொலைபேசி அழைப்புகள், 100% சதவிகிதம் இலவசம், என பெரிய எழுத்துகளில் விளம்பரம் செய்யப்படுகின்ற ஒரு தளம் இது. இவர்களின் முதற் பக்கத்திலேயே கிட்டத்தட்ட 10 இடங்களில் இலவசம், முற்றிலும் இலவசம் போன்ற வார்த்தைகள் வருமாறு அமைக்கப் பட்டுள்ளது. இது எவ்வளவு தூரம் உண்மையான ஒரு கூற்று என்பதைப் பார்ப்போம். இணையத்தில் இருக்கும் நண்பர்கள் மட்டுமின்றி பதிவிடப்பட்டிருக்கும் நாடுகளில் உள்ள தொலைபேசி எண்களை இலவசமாக அழைக்கலாம் என்னும் விளம்பரத்தின் கீழே பொடி எழுத்துகளில் தெரியப்பட்டிருக்கும் விதிமுறைகள் கீழ் வருமாறு.

'இத்தளத்தைத் தவறாக பயன்படுத்த இயலாமல் செய்வதற்காக இலவசமாக அழைக்கக்கூடிய வசதி ஒரு நிமிடத்திற்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. அதற்குமேல் இவ்வசதியை வேண்டுவோர், ஒரு நிலுவைத்தொகையை செலுத்தவேண்டும். இந்தத்தொகை நீங்கள் வெறும் இலவச சேவையை மட்டும் உபயோகிக்கும் வரையிலும், அதிகபட்சமாக 120 நாட்கள் வரையிலும் தொடப்படமாட்டாது.'

அதாவது 120 நாட்களுக்குப் பின் இத்தொகை அவர்களைச் சேர்ந்துவிடும். குறைந்த பட்சமாக 10 யூரோவாவது செலுத்தப்பட வேண்டும். ஆக மொத்தம், 120 நாட்கள் இந்த இலவச சேவையை உபயோகிக்க 10 யூரோ கொடுக்க வேண்டுமாம். ஆனால் இது இலவச சேவையாம். எப்படி இருக்கிறது பாருங்கள் இந்தக் கதை. இந்த மாதிரி தவறுதலாக வழி காட்டக்கூடிய விளம்பரங்களை எதிர்த்து யாரேனும் தட்டிக் கேட்க வேண்டாமோ? 'There is no such thing as free lunch' என்னும் கூற்றைத்தான் இத்தளம் மெய்ப்பிக்கின்றது.

இதை ஒட்டி நான் முன்னமே எழுதிய ஒரு பதிவையும் இப்பொழுது மீள்பதிவு செய்கிறேன்.

மொத்த ஆளுமை விலை

முன்பெல்லாம் வன்பொருள் வாங்கினால் பல்வேறு மென்பொருட்களை இலவசமாக தருவார்கள். இன்றைக்கோ நிலமை தலைகீழ். வன்பொருள் விலைகள் சடசடவென சரிய, மென்பொருளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. அதுவும் சில சமயம் சகாய விலையில் கிடைத்தாலும், upgrade செய்யும் பொழுது மூக்காலே அழ வேண்டியிருக்கிறது. ஜோசஃப் சாரை இது பற்றி விரிவாய் ஒரு பதிவு போட சொல்ல வேண்டியதுதான்.

மென்பொருள் என்றில்லை. ப்ரிண்டர்களை கிட்டதட்ட இலவசமாகவே கொடுத்து பின் அதற்கான கேபிள், மசி என்று கடனட்டையை நிரப்ப செய்யும் வியாபார யுக்திகள். இன்னும் சில தளங்களில், இலவசமாக உங்கள் புகைப்படத்தை அச்சிட்டு தருகிறோம், வெறும் தபால் கட்டணம் தந்தால் போதுமென விளம்பரம் செய்து பல மடங்கு கட்டணம் வசூல் செய்யும் வசூல்ராஜாக்கள். எங்களிடம் இரு வருட சேவைக்கு ஒப்பந்தம் செய்து கொண்டால், இலவசமாய் razrயும் rockrயும் தருவோம் எனச்சொல்லி அதிக விலை திட்டங்களை தலையில் கட்டும் தொ(ல்)லைபேசி நிறுவனங்கள்.

இங்கு இதெல்லாம் போதாதென்று mail in rebate என்று ஒரு கொடுமை. (இதற்கு தனிப்பதிவுதான் போடவேண்டும்.)

எதற்காக இதெல்லாம் சொல்கிறேன் என்றால், இலவசமாய் கிடைக்கிறது, சகாய விலையில் கிடைக்கிறது என்று எதையாவது வாங்கிவிட்டு அதற்கு தீனி போட்டு கட்டுப்படியாகாமல் கஷ்டப்படாதீர்கள்.

ரொம்ப சீரியஸாய் போச்சோ? வீட்டில் உள்ள (இலவசமாய் கிடைத்த) பிரிண்டரில் மசி தீர்ந்துவிட்டது. புதிய மசி தோட்டாவிற்கு (cartridge என்றால் தோட்டா தானுங்களே) கொடுத்த விலையை யாரிடமாவது சொல்லி அழ வேண்டும் போலிருந்தது. அதான். :)

இதற்கு பின் இன்றைய இலவசமாய் ஒரு நகைச்சுவை துணுக்கு. சற்றே அசைவ வகை. ஆகவே பிடிக்காதோர் மன்னித்துவிட்டு அடுத்த பதிவிற்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன். இதை ஆங்கிலத்திலே சொல்வது சற்றே எளிதாக இருக்கிறது. ஆகவே மற்றுமோர் மன்னிப்பு.

"There is sex for money and there is sex for free. And sex for free costs more!"

புரிந்ததா. இதைத்தான் TCO - Total Cost of Ownership (தமிழிலே என்னங்க?) என்று குறிப்பிடுகின்றனரோ.

44 comments:

said...

உண்மை தான் சார்ர்ர்......................

said...

அநாமதேயரே,

மிக்க நன்றி. ரொம்ப conterversial topic எல்லாம் இல்லையே. பேரைச் சொல்லலாமே.

said...

//புதிய மசி தோட்டாவிற்கு (cartridge என்றால் தோட்டா தானுங்களே) கொடுத்த விலையை யாரிடமாவது சொல்லி அழ வேண்டும் போலிருந்தது.//

நீர் புலம்பறதுக்கு நாங்க தான் கிடைச்சோமா? சரி சரி என்னவோ. என் கடமையச் செஞ்சுட்டேன். பின்ன யாரும் கேள்வி கேட்டுடக்கூடாதில்ல. :))

மூணு மாசத்துலேயே subscription cancel பண்ணிட்டு திரும்ப அடுத்த நாள் புதுக்கணக்கு ஆரம்பிக்க முடியாத உங்க ஸ்டண்ட் தளத்துல?

said...

//மூணு மாசத்துலேயே subscription cancel பண்ணிட்டு திரும்ப அடுத்த நாள் புதுக்கணக்கு ஆரம்பிக்க முடியாத உங்க ஸ்டண்ட் தளத்துல? //

இதுக்குத்தான்ய்யா நீங்க வேணும்கிறது. ஆனா அந்த தளத்தில ரீபண்ட் பாலிஸி பத்தி ஒண்ணும் போடலையே. நம்பி பணம் குடுக்க தயக்கமாத்தான் இருக்கு.

said...

கொத்ஸ்,

எப்பவுமே இந்தப் 'பொடி' எழுத்துலேதான் இருக்கும் சூட்சமம்.

said...

ஆமாங்க டீச்சர். ஆனா, நம்மள மாதிரி நாணயமான இலவசங்களோட பேரை இப்படி கெடுக்கறாங்களே. என்ன செய்யலாம்?

said...

கொத்சு!
இலவசம்ன்னாலே 'பொடி'யெழுத்துதான். அதனாலதான் அந்த மாதிரி வார்த்தை இருக்கிற எதையும் கிளிக் பண்றதில்ல.... (உம்ம ப்ளாக்கத் தவிர)
அட! இப்பதான் பாக்கறேன்...
'Freeயா விடு மாமே' க்கு பின்னால '............'
அய்யய்யோ :-)))))))))

தியாக்

said...

தியாக் தம்பி,

பயப்படாதீங்க. இங்க ஒண்ணும் விசேஷமில்லை. இப்போதைக்கு இலவச ஹெட்குவார்ட்டர்ஸ்தான் தமிழ்நாடுன்னு ஆகிப் போச்சே. கலர் டீவி தராங்களாமே. கூடவே செட் டாப் பாக்ஸும் தரலாமில்லை....

said...

அந்த 10 யூரோவை பயன்படுத்தி பிற நாடுகளுக்கு அழைக்கலாம் நீங்கள். 120 நாள் போன்ற கெடுக்கள் எல்லா சேவையிலும் உண்டு, ஸ்கைபியில் கூட நீங்கள் வாங்கிய க்ரெடிட் 180 நாள் வரைதான் செல்லும். ஒறெ ஒரு 10 யூரோவை கொடுத்து விட்டு நாழ்னால் முழுவதும் இலவசமாக பேச ஆசைப்படலாமா.. இந்த விளம்பரத்தில் எந்த தப்பும் இருப்பதாகத் தெரியவில்லை..

said...

www.voipstunt.com, www.voipbuster.com, www.internetcalls.com இவை எல்லாமே ஒன்றுதான், வலைதளங்களும் மென்பொருட்களும் வெவ்வேறு நிறத்தில் இருக்கும், அவ்வளவுதான் வித்தியாசம. நான் ஒரு சந்தேகத்தோடேயே இதில் க்ரெடிட் வாங்கினேன், பரவாயில்லை, ஏமாற்றாமல் இலவசம் என்று சொன்ன நாடுகளுக்கு இலவசமாகவே சேவை கொடுக்கிறார்கள்

said...

// ஒறெ ஒரு 10 யூரோவை கொடுத்து விட்டு நாழ்னால் முழுவதும் இலவசமாக பேச ஆசைப்படலாமா.. இந்த விளம்பரத்தில் எந்த தப்பும் இருப்பதாகத் தெரியவில்லை.. //

சுதர்சன், வருகைக்கு நன்றி. நான் சொல்ல வந்தது என்னவென்றால் 10 யூரோ கட்டணம் இருப்பதால் 100% இலவசம் போன்ற விளம்பரங்கள் சரியில்லை என்பது பற்றிதான். ஸ்கைப்பை எடுத்துக்கொண்டால் அவர்கள் தெளிவாக சொல்கிறார்கள். கணினியிலிருந்து மற்றொரு கணினியை கூப்பிடுவது முற்றிலும் இலவசம், ஆனால் தொலைபேசிகளை அழைத்தால் கட்டணமுண்டு என்று. அது போன்றே, மற்றொரு கணினியை கூப்பிடுவதற்கு அவர்கள் கட்டணம் எதுவும் வாங்குவதில்லையே.

ஆனால் இங்கு கதை வேறு. இலவசம், இலவசம் என்று பக்கம் பக்கமாய் ஜல்லி அடித்துவிட்டு வெறும் ஒரு நிமிஷம் மட்டும்தானே இலவசமாய் கொடுக்கிறார்கள். அதுதான் தவறென சொல்ல வருகிறேன். மற்றபடி ஒரு சேவைக்கு இதுதான் கட்டணம் எனக் கூறி அதை வாங்குவதில் எனக்கும்(!) உடன்பாடுதான்.

said...

இதனால் நான் பாதிக்கப்படவில்லை, ஆனால் பலருக்குப் பாதிபேற்பட வாய்ப்புள்ள விளம்பரங்கள் தான்
என்பது உண்மையே!
இலவசம்- என்னும் சொல்- மிகத்தவறாக வியாபாரவுலகில்-பயன்பாட்டில் உள்ளது .மிகக்கவலைக்குரியது.
"திருடனாப்பாத்து திருந்தாவிட்டால்,திருட்டை ஒழிக்க முடியாது"
நன்றி
யோகன்

said...

இதனால் நான் பாதிக்கப்படவில்லை, ஆனால் பலருக்குப் பாதிபேற்பட வாய்ப்புள்ள விளம்பரங்கள் தான்
என்பது உண்மையே!
இலவசம்- என்னும் சொல்- மிகத்தவறாக வியாபாரவுலகில்-பயன்பாட்டில் உள்ளது .மிகக்கவலைக்குரியது.
"திருடனாப்பாத்து திருந்தாவிட்டால்,திருட்டை ஒழிக்க முடியாது"
நன்றி
யோகன்

said...

வாங்க யோகன். வருகைக்கு நன்றி.
//பலருக்குப் பாதிபேற்பட வாய்ப்புள்ள விளம்பரங்கள் தான்
என்பது உண்மையே!
இலவசம்- என்னும் சொல்- மிகத்தவறாக வியாபாரவுலகில்-பயன்பாட்டில் உள்ளது .மிகக்கவலைக்குரியது.//

இதைத்தான் நானும் சொல்ல வருகிறேன். காசு வாங்கிக் கொண்டு கொடுக்கும் சேவையை இலவசமென விளம்பர படுத்தாதீர்கள். இதைத்தட்டிக் கேட்க வழியே இல்லையா?

said...

"stunt" the name is very much suitable.

said...

அப்படி போடுங்க அனானி. வருகைக்கு நன்றி.

said...

நான் தான் தமிழ்மணத்தில் இது பற்றிக் கூறினேன்.

கொத்தனாரே, நான் கடந்த 5 மாதங்களாக உபயோகிகின்றேன். என் இந்தியாவுக்ககான தொலைபேசிச் செலவு 95% குறைந்து விட்டது. என் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நான் உருவாக்கிக் கொடுத்துள்ள கணக்கை உபயோகித்து என்னிடம் பேசுகின்றனர்.

சிங்கப்பூர், மற்றும் அமெரிக்கா வில் வசிக்கும் என் வகுப்புத் தோழர்களுடனும் அடிக்கடி பேசிக் கொள்ள முடிகிறது. நான் லண்டணில் பார்த்த தமிழ் பிகர்கள் பற்றியெல்லாம் மணிக் கணக்காகப் பேசிக் கொள்கிறேம்.

ஒரு மாதத்திற்கு சுமாராக 40 பவுண்டுகள்(லண்டனில் ஒரு வாரத்திற்காண என் போக்குவரத்துச் செலவு) வரை சேமிக்க முடிகிறது. அதற்காக மாதம் 2.5 யூராக்கள் செலவு ஒன்றும் அதிகமில்லை.

எண்ணைப் போல நண்பர்களிடம் அதிகம் பேசுபவர்களுக்கு ஒரு வரப் பிரசாதம் voipstunt.

said...

மகேஷ்,

வருகைக்கு நன்றி.

முதலில் நான் இந்த சேவையை உபயோகப்படுத்துவது இல்லை. அவர்கள் தரம் வாய்ந்த சேவையை அளித்தால் எனக்கு சந்தோஷமே. அதைப் பற்றி நான் கருத்து கூறவும் வரவில்லை. நான் சொல்ல வந்தது, அவர்கள் இலவசமென விளம்பரம் செய்வது போல் அவர்கள் சேவை இலவசமானது இல்லை. அதனை நம்பி ஏமாற வேண்டாம் என்பது மட்டுமே. While I am not criticizing the service in itself, I do definitely condemn the misleading advertisements which create an image that this service is entirely free for the listed countries.

இவர்கள் மட்டுமல்லாது மேலும் பலரும் இது போன்ற விளம்பரங்களின் மூலம் பலரை மிஸ்லீட் செய்கிறார்கள். இது கண்டிக்கப் படவேண்டிய ஒன்று. இதைத்தான் நான் வலியுறுத்துகிறேன்.

எனக்கு அமெரிக்காவிலிருந்து இந்தியா பேச இவர்களைவிட குறைந்த விலையில் தொலைபேசி சேவைகள் கிடைக்கிறது. நீங்களும் ரிலையன்ஸ் இந்தியா சேவையை முயன்று பாருங்கள். (relianceindiacall.com).

எனது நண்பர் குழாமுடன் பெரும்பாலும் ஸ்கைப் மற்றும் கூகிள் டாக்கில் பேசிவிடுகிறேன். ஆகையால் எனக்கு இவ்வசதி தேவையாக இல்லை.

said...

இலவசம்....நீங்க கடைசியாச் சொன்ன நகைச்சுவைத் துணுக்குல நீங்க பதிவுல சொன்ன அத்தனையும் அடங்கீருக்கு....உண்மையும் அதுதான்....

இலவசமுன்னு பாக்காதீங்க...எதுவுமே இலவசமில்லை. இல்லை. இல்லவேயில்லை. உங்க பதிவு உட்பட ஹி ஹி

said...

ஜிரா,

கொஞ்சம் பொறுங்கள் ஒரு செய்தி வரும்ன்னு சொன்னீங்க. இப்போ இந்த துணுக்கை இவ்வளவு ரசிக்கறீங்க. இது போக அடிக்கடி இரவுகளிலே வேற தொலைபேசி வருது. எல்லாம் சேர்த்துப் பார்த்தால் ஒரு கணக்கு வொர்க் அவுட் ஆகுதே. என்ன சரிதானா?

said...

//உங்க பதிவு உட்பட ஹி ஹி//

அதான் நம்ம பதிவு இலவசம்ன்னு சொல்லவே இல்லையே. வந்தா ஒரு பின்னூட்டமாவது போடணும். அதிகம் போட்டா ஸ்பெஷல் கவனிப்பு உண்டு. இது ஊருக்கே தெரிஞ்சதுதானே.

காசா பணமா? வெறும் பின்னூட்டம். அதுக்கே இவ்வளவு அலம்பலா? ஹிஹி.

said...

//புதிய மசி தோட்டாவிற்கு (cartridge என்றால் தோட்டா தானுங்களே) கொடுத்த விலையை யாரிடமாவது சொல்லி அழ வேண்டும் போலிருந்தது.//

நீங்க முழுக் காசு கொடுத்து தோட்டா வாங்க வேண்டாமே! காலி தோட்டா எடுத்துப் போனால் office depot
போன்ற இடங்களில் மசி நிரப்பிக் கொடுத்து விடுகிறார்கள் பாதி விலைக்கு. வீட்டிலேயே தோட்டாவில் ஊசி மூலம் மசி செலுத்தும் நண்பரையும் தெரியும்.
அன்புடன்
சாம்

said...

சாம்,

இப்போதானே பிரிண்டர் வாங்கி இருக்கேன். முதல் தடவைங்கறதுனால இதெல்லாம் தெரியலை. மெதுவா இந்த டெக்னிக் எல்லாம் கத்துக்கறேன். இன்னொரு நண்பன் சொன்னது - புது பிரிண்டர் வாங்கிடு. பழைய பிரிண்டரை ஈபேயில் விற்றுவிடு. This will work out cheaper. :)

said...
This comment has been removed by a blog administrator.
said...

மகேஸ்,
கொஞ்சம் உங்கள் மெயில் ஐ.டியை கொடுங்கள். பதிவு செய்ய மாட்டேன். உங்கள் கேள்விக்கு தனிமடல் அனுப்புகிறேன்.

said...

// ஜிரா,

கொஞ்சம் பொறுங்கள் ஒரு செய்தி வரும்ன்னு சொன்னீங்க. இப்போ இந்த துணுக்கை இவ்வளவு ரசிக்கறீங்க. இது போக அடிக்கடி இரவுகளிலே வேற தொலைபேசி வருது. எல்லாம் சேர்த்துப் பார்த்தால் ஒரு கணக்கு வொர்க் அவுட் ஆகுதே. என்ன சரிதானா? //

நீங்க என்ன சொல்றீங்க..ஒன்னும் புரியலையே பராபரமே...........

said...

// அதான் நம்ம பதிவு இலவசம்ன்னு சொல்லவே இல்லையே. வந்தா ஒரு பின்னூட்டமாவது போடணும். அதிகம் போட்டா ஸ்பெஷல் கவனிப்பு உண்டு. இது ஊருக்கே தெரிஞ்சதுதானே.

காசா பணமா? வெறும் பின்னூட்டம். அதுக்கே இவ்வளவு அலம்பலா? ஹிஹி. //

பின்னே...இல்லாம....ஒரு பின்னூட்டம் அஞ்சு பின்னூட்டமாயிருக்கே.....

said...

//நீங்க என்ன சொல்றீங்க..ஒன்னும் புரியலையே பராபரமே...........//

சரி சரி, நானும் விஷயத்தை வெளில சொல்லலை. நானும் ஒண்ணும் தெரியலையே பராபரமேன்னு இருக்கேன். ஓக்கேவா? ;)

said...

ஏன்யா இலவசம், இந்தப் பதிவை ஒரு பத்து நால் முன்னாடி போட்டிருக்கா மாட்டீரா? போன வாரம்தான் 10 யூரோ தாரை வாத்தேன்....பொடி எழுத்துக்களை படிக்காம :-(

said...

//பொடி எழுத்துக்களை படிக்காம :-(//

வயசாச்சுன்னா இது மாதிரி பொடி எழுத்து தெரியாம போகறது சகஜம்தானய்யா. விடுங்க. :D

உங்களை மாதிரி ஆளுங்க அனுபவம்தான் மத்தவங்க ஏமாறாம இருக்க இந்தப் பதிவை எழுத தூண்டுதலா இருந்தது.

said...

இது நியாயப்படி 31ஆவது பின்னூட்டம். நண்பர் டோண்டு (போலி), அவர்தன் வழக்கமான பாணி பின்னூட்டங்கள் இரண்டு அனுப்பியுள்ளார். பிரசுரிக்க முடியாமைக்கு வருந்துகிறேன் நண்பரே. நான் பெரியவர் டோண்டுவிற்கு (ஒரிஜனல்) வாழ்த்து சொன்னதற்காக எனக்கு போலியின் பின்னூட்டம்.

இவரின் அருமையான தமிழுக்கு பயந்து நான் எனக்கு வேண்டும் என்கிற பதிவுகளுக்கு செல்லாமல் இருக்க மாட்டேன் என தெரிவிக்கவே இப்பின்னூட்டம்.

said...

இந்தியாவில் பி.எஸ்.என்.எல். காரர்கள் எங்கிருந்து எங்கு பேசினாலும் ஒரு. ரூபாய் என்று விளம்பரம் செய்தார்கள். சற்றுக் கூர்ந்து பார்த்தால் அது ஒரு நிமிடத்துக்கான ரேட் என்பது தெரிய வரும். அதை முதலிலேயே வெளிப்படையாகப் போட்டிருந்தாலும் மலிவான ரேட்தான், ஏன் போடவில்லை எனத் தெரியவில்லை.

இன்னும் உள்ளே போய்ப் பார்த்தால் இந்தச் சேவை பி.சி.ஓ.-க்களுக்கு இல்லையாம். மேலும் ஏதோ பணம் கட்ட வேண்டுமாம். என் வீட்டு ஃபோனுக்கு கூட அது இல்லை என நினைக்கிறேன்.

வீட்டிலிருந்து ஸ்டேஷன் செல்ல ஐந்து நிமிட தூரம் என்று வீட்டு ப்ரோக்கர் கூறுவார். உள்ளே கூர்ந்து பார்த்தால் மணிக்கு 60 கிலோமீட்டர் செல்லும் காரில் ஐந்து நிமிடம் பயணம் செய்ய வேண்டியிருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

ஆமாம் டோண்டு சார்,

இந்த பொடி வார்த்தைகளில் என்ன வில்லங்கம் எல்லாம் ஒளிஞ்சு இருக்கு பாருங்க. அதைத்தான் நானும் சுட்டிக்காட்ட விரும்பினேன்.

வருகைக்கு நன்றி.

said...

முற்றிலும் இலவசம் என்ற விளம்பரச் சொல் பற்றி மட்டுமே உங்கள் ஆதங்கம் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டேன்.
ஆனால் இது எல்லாவற்றிலும் இருக்கிறது போலுள்ளதே. 'வரையறையற்றது' என்றுதான் வலைய இணைப்பு எடுக்கும்போது சொல்கிறார்கள். ஆனால் அதற்கு இவ்வளவு கிகா பைற்தான் என்று வரையறையுள்ளது. இப்படிப் பலவிசயங்கள்.

ஆனால் மேற்கூறிய தொலைபேசிச் சேவைத்தளங்களிற் சில தொடக்கத்தில் 45 நிமிடம் இலவசமாகக் கதைக்க விட்டன. ஒரு கணக்கு முடிந்ததும் நாங்கள் செய்யவேண்டிது இன்னொரு கணக்கைத் தொடங்கி அடுத்த முக்கால் மணிநேரம் கதைக்க வேண்டியதுதான். அதற்கு எமக்குத் தேவை ஒரு மின்னஞ்சல் முகவரி மட்டுமே. பலநாட்களின் பின்தான் அந்த நேரத்தைக் குறைத்தார்கள். இப்போது ஒரு நிமிடத்தில் வந்து நிக்கிறது.
அதேபோல் இலவசமாக அறிவிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலும் சுருங்கிக்கொண்டே வருகிறது.

ஆனால் ஒப்பீட்டளவில் மிகமிக இலாபமான சேவைதான் அது. நேரடித் தொலைபேசி இணைப்புக்களைவிடவும் தெளிவான இணைப்பு.

said...

//முற்றிலும் இலவசம் என்ற விளம்பரச் சொல் பற்றி மட்டுமே உங்கள் ஆதங்கம் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டேன்.//

வாங்க வசந்தன். இதுதாங்க நான் நினைத்தது. இலவசம்ன்னு தப்பா நினைச்சுக்கிட்டு போகக்கூடாதேன்னு எனக்கு தெரிஞ்ச விஷயத்தை சொன்னேன். அவ்வளவுதான்.

மத்தபடி சரியான விலையை தெரிஞ்சுகிட்டு இந்த சேவையை உபயோகப் படுத்தினால் சரிதான்.

வேறெங்க இது மாதிரி மிஸ்லீடிங் விளம்பரம் வந்தாலௌம் சொல்லுங்க. அப்போதான் மத்தவங்க விழிப்போட இருக்க முடியும்.

said...

இப்போ 90 நாட்களின் பின்னர் உங்கள் பணத்திலிருந்து காசு அறவிடுகிறார்கள். அதாவது 10 யுரோக்கள் முடியும் வரை.. பின்னர் உங்கள் கணக்கை புதிப்பித்த பின்னர் மீண்டும் 90 நாட்களுக்கு இலவசம்.. பின்னர் பணம் குறைந்தளவு அறவிடப்படுகிறது.. எப்படிப்பார்த்தாலும் ஒவ்வொரு தடவையும் முதல் 3 மாதங்களுக்கு இலவசம் தான்.. நான் voip analog telephone adapter பயன்படுத்தி சாதாரண தொலைபேசியுடாக இந்த இலவச அழைப்புக்களை மேற்கொள்கிறேன்.. கணணியை உபயோகப்படுத்த தேவையில்லை..

said...

கொழுவி,

நம்ம பழைய பதிவு எல்லாம் படிக்கறீங்க. ரொம்ப நன்றி. விக்கி பசங்க பதிவில் பின்னுட்டங்கள் மட்டுறுத்திக் கொண்டிருந்ததால் இங்கு வரவே இல்லை! தாமததிற்கு மன்னிக்கவும்.

நீங்கள் சொல்வது எனக்கு சரியாகப் புரியவில்லை.

1) இப்பொழுது முதலில் 10 யூரோ நிலுவைத் தொகை செலுத்தப்பட வேண்டுமா?

2) அப்படி செலுத்தப்பட்ட நிலுவைத் தொகையானது 90 நாட்கள் வரை உபயோகப்படுத்தாமல் இருந்தால் அவர்களால் எடுத்துக் கொள்ளப் படுமா?

கொஞ்சம் விளக்குங்களேன்.

said...

நீங்களும் இலவசமா கொத்திட்டு அப்புறம் பூசுறதிற்கு சொத்தை கேட்பீங்களா?

நான் இலவசகொத்தனார்தான் இலவச பூசனார் இல்லை என்பீர்களா?

இவ்வுலகில் எதுவுமே இலவசமில்லை ஐயா

said...

//நான் இலவசகொத்தனார்தான் இலவச பூசனார் இல்லை என்பீர்களா?//

ஹிஹிஹி

//இவ்வுலகில் எதுவுமே இலவசமில்லை ஐயா//

என்னங்க அப்படிச் சொல்லிட்டீங்க. சில விஷயங்கள் இருக்குங்க. கொஞ்சமா சரக்கடிச்சிட்டு யோசிச்சுப் பாருங்க. :D

நம்ம சக வலைப்பதிவாளர்கள் சிலரின் அன்பு வார்த்தைகள் முற்றிலும் இலவசம்தாங்க. :-D

said...

கொத்ஸ்..

இப்போ அதை 120 நாட்களாக ஆக்கியிருக்கிறார்கள்.

மேட்டர் ரொம்ப சிம்ப்பிள்..

10 யூரோ நீங்க முதலில் தண்டம் அழுவணும். அவங்க சொல்லியிருக்கிற நாடுகளுக்கு அந்த 120 நாட்களில் (லேண்ட் லைன்கள், ஒரு சில நாடுகளுக்கு மட்டும் மொபைலும் உண்டு) நீங்கள் தொலைபேசினால் நிச்சயம் இலவசம். அந்த சமயத்தில் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அழைத்தால் காசு குறையும். அதே சமயத்தில் 120 நாட்கள் தாண்டிய பிறகு மேற்கண்ட நாடுகளுக்கு நீங்கள் அழைத்தால் குறைவான தொகையொன்றை வசூலித்துக் கொள்கிறார்கள். நீங்கள் இந்தப் பதிவை போட்ட சமயத்தில் 90 நாட்கள் கழித்து அந்த 10 யூரோவை 'ஸ்வாகா' செய்து கொண்டிருந்தார்கள். நீங்கள் பதிவு வெளியிட்ட நேரம், இப்போது 'ஸ்வாகா' கிடையாது என்று சொல்லி விட்டார்கள் போங்கள்.

அது சரி..இந்தியாவிற்கு இன்னும் குறைவான விலையில் கிடைக்கும் tpad.com உபயோகித்துப் பாருங்களேன். (எங்கும் இலவச கால்கள் கிடையாது)

கடந்த பல மாதங்களாக இந்த voip serviceகளை உபயோகிப்பவன் என்ற முறையில் என்னுடைய கருத்து : திடீரென அறிவிப்பே கொடுக்காமல் விலையை கன்னாபின்னாவென்று ஏற்றி விடுகிறார்கள் - குறிப்பாக இந்தியாவிற்கு!

கொழுவியார், அந்த டெலிபோன் அடாப்டர் மூலம் பேசுவதை சொன்னாரே அது என்ன மேட்டர்?!

said...

//நீங்கள் பதிவு வெளியிட்ட நேரம், இப்போது 'ஸ்வாகா' கிடையாது என்று சொல்லி விட்டார்கள் போங்கள்.//

ஆஹா, மாயவரத்தான். நம்ம பதிவு செஞ்ச வேலையைப் பாத்தீங்களா!! இனி யாருக்காவது பிரச்சனைன்னா இங்க வாங்க. இவ்விடம் கட்டை பஞ்சாயத்து செய்யப்படும் அப்படின்னு வேணா போர்ட் மாட்டி விட்டுடலாம்.

//(எங்கும் இலவச கால்கள் கிடையாது)//

கால் இல்லை என்றால் கை உண்டா? அல்லது அரை உண்டா? என்னது அறைதான் உண்டா, ஆளை விடுங்க சாமி! :)

//திடீரென அறிவிப்பே கொடுக்காமல் விலையை கன்னாபின்னாவென்று ஏற்றி விடுகிறார்கள் - குறிப்பாக இந்தியாவிற்கு!//

ஏமாறாதே ஏமாறாதே. ஏமாற்றாதே ஏமாற்றாதே...

திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை நிறுத்த முடியாது...

இப்போ ஏன் எனக்கு இந்த பாட்டு எல்லாம் ஞாபகத்துக்கு வருது?

said...

//கொழுவியார், அந்த டெலிபோன் அடாப்டர் மூலம் பேசுவதை சொன்னாரே அது என்ன மேட்டர்?!//

ரொம்ப சரியா தெரியலை, நான் செஞ்சிருக்கறதை சொல்லறேன்.

நான் வானெஜ் இணைப்பு வைத்துள்ளேன். இது ஒரு voip சேவை.

கேபிள் இணைப்பு முதலில் வானெஜ் அடாப்டருடன் இணைக்கப்படுகிறது. இந்த அடாப்டரில் நமது சாதாரண தொலைபேசி கருவியை இணைத்து அதன் மூலமே பேச முடிகிறது. இதற்கு கணினி மூலம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

அந்த அடாப்டரிலிருந்து வரும் இணைப்பை கொண்டு கணினியில் நேராகவோ அல்லது ஒரு ரௌட்டர் மூலமாகவோ இணைத்து இணைய தொடர்பு பெற முடிகிறது.

இதற்கு மேலும் சந்தேகம் இருந்தால் விக்கி பசங்களுக்கு ஒரு கேள்வியைத் தட்டிவிடவும். நிபுணர் பதில் கிடைக்கும்!

said...

அதாவது சனங்களே.. நான் Linksys analog telephone adepter என்ற ஒரு கருவியை பயன்படுத்துகிறேன். அந்தக் கருவி எனது broadband modem with router உடன் இணைக்கப்பட்டிருக்கும். அந்த கருவியில் எனது தொலைபேசி இணைக்கப்பட்டிருக்கும். இனி அந்தக் கருவிக்கான கொன்பிக்றேசன்.. (modem த்திற்கு செய்வோமே.. அப்படி..) அதனை கணணியல் செய்து விட்டு தொலைபேசியுடாக பேசலாம். voipstunt அல்லது voipcheap இங்கே SIP என்ற ஒரு லிங்கில் சில தகவல்கள் தந்திருக்கிறார்கள். அது இந்த சமாச்சாரத்திற்காகத்தான்..

(இதை வைத்து எங்கள் சுற்று வட்டாரத்தில் உப தொழிலே தொடங்கி விட்டேன் என்றால் பாருங்களேன்..

said...

கொழுவி, தொழிலே தொடங்கியாச்சா? பேஷ் பேஷ், ரொம்ப நன்னா இருக்கே...:))