Friday, October 26, 2007

குயி...குயி...குயி...குயிஜு

இந்த தலைப்பு உங்களில் நிறையா பேருக்கு தெரிஞ்ச தலைப்பா இருக்கும். இந்த மாதிரி தலைப்புகளில்தான் கேள்வி கேட்க ஆரம்பிச்சாரு ஒரு பெரிய தல. அப்புறமா குயிஸ், குவிசு, க்யூஸ், குவிஸ் என்றெல்லாம் பட்டையைக் கிளப்பிய ஆசாமி மே மாசம் "அவுட்டே........ய்ய்ய்ய்!" அப்படின்னு ஒரு பதிவு போட்டாரு. அப்போ காணாமப் போனவருதான். இப்போ எல்லாம் வந்து செப்டெம்பர் மாத போட்டி, அக்டோபர் மாத போட்டி அப்படின்னு மாசத்து ஒரு தடவ படம் காண்பிக்க மட்டும்தான் வராரு. அதுவும் அவர் பதிவுக்கு மட்டும். மத்தவங்க பக்கமே வரது இல்லை. சரி இப்படி ஒரு தலைப்பு வெச்சாலாவது வந்துட்டுப் போகறாரான்னு பார்க்கத்தான் இது.

சரிடா, மேட்டருக்கு வான்னு நீங்க கத்தறது இங்க வரை கேட்குது. வந்துட்டேன். இது தலைப்புக்கேத்த மாதிரி (நாம எப்பவுமே தலைப்புக்கு ஏத்த மாதிரிதான் எழுதுவோங்கிறது தனி மேட்டர். அதை விடுங்க.) இந்த வாரம் கேள்வி பதில் வாரம். ஸ்கூலில் படிச்ச போது ஒரு நாளில் பல சப்ஜெக்ட்டுகளில் டெஸ்ட் எழுதின மாதிரி பல சப்ஜெக்ட்டுகளில் கேள்வி வரப் போகுது. ஆங்கிலம், தமிழ், விஞ்ஞானம், கணக்கு, வணிகம், கணினி, வரலாறு, புவியியல், விளையாட்டு (பி.டி. பீரியட் இல்லாமலா?) என பல தலைப்புகளில் வருது கேள்விகள். தமிழில் நான் கேள்வி கேட்டா நம்ம தமிழறிவைப் பத்தி நீங்க கேள்வி கேட்பீங்க என்பதால் அதுக்கு மட்டும் ஒரு சிறப்பாசிரியரைக் கூட்டிக்கிட்டு வந்திருக்கேன். அவரு எனக்கு கணக்குப் பண்ணவும் சொல்லிக் குடுத்து இருக்காரு. ச்சீ, கணக்குக் கேள்விகளிலும் சொல்லிக் குடுத்து இருக்காரு.

செவ்வாய் காலை இந்திய நேரப்படி தொடங்கி, ஒரு நாளைக்கு மூணு சப்ஜெக்ட் வீதம் மூன்று நாட்கள் கேள்விகள் வெளி வரும். ஒவ்வொரு பதிவுக்கும் ஒரு நாள் மட்டுமே அவகாசம். அதற்குப் பின் யாரு மொத்தத்தில் அதிக மதிபெண்கள் எடுத்திருக்கிறாரே அவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப் படுவார். கூகிளாண்டவரை வேண்டக் கூடாதென்று சொல்ல ஆசைதான். ஆனால் நான் ஆசைப்படுவதால் மட்டும் அந்தப் பக்கம் போகாம இருக்கப் போறீங்களா? அதனால் அது கூடாது எனச் சொல்ல மாட்டேன்.

முக்கியமா ஒரு கேள்விக்கு ஒருவர் அளிக்கும் முதல் பதில் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதனால முதலில் ஒரு பதில் சொல்லிட்டு மாத்துற வேலை எல்லாம் நாட் அலவுட். அப்புறம் வழக்கம் போல Quiz Master's decision is final. ஆட்டத்திற்கு ரெடியாகுங்க மக்கள்களே!! போட்டியில் கலந்து கொள்ள யாரெல்லாம் ரெடின்னு இந்த பதிவுக்கு பின்னூட்டமாப் போட்டு ரிஜிஸ்தர் பண்ணிக்குங்கப்பா.

68 comments:

said...

ப்ரிவ்யூ பார்த்த சிலர் கேள்விகள் கொஞ்சம் கஷ்டமாகவே இருக்குன்னு சொல்லி இருக்காங்க. அதனால மக்கள்களே கவனமா இருங்க!!

said...

உள்ளேன் அய்யா !
:-)

said...

நாங்க எல்லாம் கேள்வி தான் கேட்போம்... பதில் எங்க தல தான் சொல்லுவாரு...

said...

முதல்லே கேள்வி என்ன்னன்னு சொல்லுங்க!

இப்படியெல்லாம் பூ சுத்த வேணாம்!:))

said...

ஒரு விளக்கம் :

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் பதில் சொல்லலாம். ஆனால் ஒரு கேள்விக்கு அவர் தரும் முதல் பதில் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

அதாவது நீங்கள் முதலில் தமிழ் பாட கேள்விகள் 1, 2, 3 மட்டும் பதில் சொல்லலாம். அடுத்த முறை வந்து 4,5,6 என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லலாம். ஆனால் 4ஆன் கேள்விக்கு விடை தவறாக இருந்து நீங்கள் மீண்டும் வந்து சரியான பதிலைச் சொன்னால் அதற்கு மதிப்பெண்கள் கிடையாது.

இப்போ புரியுதா?

said...

பாலா, போன தடவை வெற்றி பெற்ற நீங்களே இந்த தடவை முதல் ஆஜர் போட்டது ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்களுக்குக் கொடுத்த வாக்கின் படி இந்த முறை சினிமா என்ற தலைப்பு இல்லை! :))

said...

//நாங்க எல்லாம் கேள்வி தான் கேட்போம்... //

நாங்களும் அந்த கட்சிதானே!!

//பதில் எங்க தல தான் சொல்லுவாரு.//
அவருதான் வரக்காணுமே. இப்போ எல்லாம் அப்ரசண்டிங்கதானே கண்ட்ரோலில் இருக்கிறதா கேள்வி.

said...

//முதல்லே கேள்வி என்ன்னன்னு சொல்லுங்க!

இப்படியெல்லாம் பூ சுத்த வேணாம்!:))//

முதலில் பதிவைப் படியுங்க! :P

கேள்வி எல்லாம் நாளையில் இருந்துதான்!! :))

said...

//ஆங்கிலம், தமிழ், விஞ்ஞானம், கணக்கு, வணிகம், கணினி, வரலாறு, புவியியல், விளையாட்டு //

பொட்டி தட்டி, தட்டி இதெல்லாம் மறந்து போயிடுச்சு.. இப்போ தோண்டி எடுக்க சொல்றீங்க... கேள்விய கேளுங்க, பதில் சொல்லலாமா இல்ல சாய்ஸ்ல விடலாமான்னு நாங்க முடிவு பண்றோம்.. :D

said...

சுத்தம்..

இருந்தாலும் நானும் களத்தில் குதிக்கலாம் என்று இருக்கேன்....

ஹல்ப் லைன் எல்லாம் யூஸ் பண்ணலாமா... (கூகிள் டாக், யாஹு கான்) ;)

said...

மே மாசம் "அவுட்டே........ய்ய்ய்ய்!" அப்படின்னு ஒரு பதிவு போட்டாரு. அப்போ காணாமப் போனவருதான். இப்போ எல்லாம் வந்து செப்டெம்பர் மாத போட்டி, அக்டோபர் மாத போட்டி அப்படின்னு மாசத்து ஒரு தடவ படம் காண்பிக்க மட்டும்தான் வராரு. அதுவும் அவர் பதிவுக்கு மட்டும். மத்தவங்க பக்கமே வரது இல்லை. சரி இப்படி ஒரு தலைப்பு வெச்சாலாவது வந்துட்டுப் போகறாரான்னு பார்க்கத்தான் இது.

ரிப்பிட்டெய் ரிப்பிட்டெய் ரிப்பிட்டெய்...

ஆட்டத்திற்கு ரெடியாகுங்க மக்கள்களே!! போட்டியில் கலந்து கொள்ள யாரெல்லாம் ரெடின்னு இந்த பதிவுக்கு பின்னூட்டமாப் போட்டு ரிஜிஸ்தர் பண்ணிக்குங்கப்பா.

Any Age restriction... If not ரெடிரெடிரெடிரெடிரெடிரெடி...

said...

இலவசக்கொத்தனார் said...
ப்ரிவ்யூ பார்த்த சிலர் கேள்விகள் கொஞ்சம் கஷ்டமாகவே இருக்குன்னு சொல்லி இருக்காங்க. அதனால மக்கள்களே கவனமா இருங்க!!

பிட் அலவ்டா...

said...

கேளுங்கள், கொடுக்கப் படும்! ஒண்ணையுமே காணோமே? :)))))))))

said...

போனா போகுதுன்னு விட்டுக்கொடுக்கிறேன் ... கேள்வி கேக்குற உரிமையைச் சொல்றேன்..
கேள்வியோடு வாங்க... நமக்கும் அட்டெண்டன்ஸ் மார்க் பண்ணிக்குங்க..

said...

ஐயாம் தி பிரசண்ட்டு :))

said...

//அதுவும் அவர் பதிவுக்கு மட்டும். மத்தவங்க பக்கமே வரது இல்லை//

புது மாப்பிள்ளைக்கு என்ன சோலியோ.. விடுங்கப்பா!


//நாம எப்பவுமே தலைப்புக்கு ஏத்த மாதிரிதான் எழுதுவோங்கிறது தனி மேட்டர்//

ஆகா :-D


//ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் பதில் சொல்லலாம். ஆனால் ஒரு கேள்விக்கு அவர் தரும் முதல் பதில் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.//

தெரிஞ்சுபோச்சு.. ஏன்னு தெரிஞ்சுபோச்சு.. பின்னூட்ட எண்ணிக்கையை அதிகரிக்கத் தானே?

எப்படியோ, நான் கல(ந்து)க்கப்போறேன் :)

said...

நானும் வர்றேன் ஆட்டைக்கு

said...

me me ...register my name also

said...

..............கூ...............

அன்புடையீர்,
நானும் இப்போட்டியில் பங்கெடுத்துக்கொள்ள விரும்புகிறேன். கடவுளை நாடாதே என்று சொல்லுமளவிற்கு தாங்கள் நாத்திகன் அல்ல என்பது தெரியுமதனால் - இறையருளாலே அவன் (விடைத்)தாளைப் பெற்று நன்மதிப்பெண் பெறுவேன் என்று நம்புகிறேன்.

இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள
இராமநாதன்

said...

ஆஜர் ஐயா,

உள்ளேன் சார்,

பிரசண்ட் வாத்தி... :)

said...

//அதாவது நீங்கள் முதலில் தமிழ் பாட கேள்விகள் 1, 2, 3 மட்டும் பதில் சொல்லலாம். அடுத்த முறை வந்து 4,5,6 என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லலாம். ஆனால் 4ஆன் கேள்விக்கு விடை தவறாக இருந்து நீங்கள் மீண்டும் வந்து சரியான பதிலைச் சொன்னால் அதற்கு மதிப்பெண்கள் கிடையாது. //

ப்ரிவியூ பாத்தவன்ற முறையில சொல்றேன் கொத்ஸ், இதெல்லாம் டூஊ மச்சு! விடை சொல்றதே பெரிய விஷயம்.. ரெண்டு விடை சொன்னாங்கன்னா, முதல் விடையை அழிச்சுடுங்கன்னு சொல்ற உரிமைய பங்கேற்பவர்க்கு விட்டுக்கொடுங்க!

நல்ல முயற்சி என்பதால் வாழ்த்தி வரவேற்று, பதில் எப்படியும் தெரிந்திருக்காது என்பதால் ஓரவேடிக்கைக்கு அமர்கிறேன்.

said...

அண்ணா நானும் participate பண்ணலாமா....இல்ல ரொம்ப tough ஆ கேப்பீங்களா..சாய்ஸ் எல்லாம் இருக்கா..

said...

சிங்கம் சிங்கிளா வெளியே வரும் பாருங்க... அவரை வெளியே வர வைக்கத் தானே இந்தப் போட்டி....

தல...தல...கட்டத்தொரைக் கொத்ஸ் கெட்டப்ல்ல க்வீஸ் வைக்கிறாப்பல்ல வா தல...வந்து ஒரு காட்டு காட்டுத் தல

said...

நான் ரெடி ஜூட்! (ஓடத்தான்):-))

said...

//
நாகை சிவா said...
சுத்தம்..

இருந்தாலும் நானும் களத்தில் குதிக்கலாம் என்று இருக்கேன்....

ஹல்ப் லைன் எல்லாம் யூஸ் பண்ணலாமா... (கூகிள் டாக், யாஹு கான்) ;)
//
ரிப்பீட்டேய்

said...

//பொட்டி தட்டி, தட்டி இதெல்லாம் மறந்து போயிடுச்சு.. //

சிங்கமே, அதான் அப்பப்போ இப்படி கேள்வி எல்லாம் கேட்கறதுன்னு முடிவு பண்ணியாச்சு! :))

said...

//இருந்தாலும் நானும் களத்தில் குதிக்கலாம் என்று இருக்கேன்....//

புலி பதுங்குதுடோய்!!

//ஹல்ப் லைன் எல்லாம் யூஸ் பண்ணலாமா... (கூகிள் டாக், யாஹு கான்) ;)//

நான் கூடாதுன்னு சொல்லலை! ;-)

said...

//Any Age restriction... If not ரெடிரெடிரெடிரெடிரெடிரெடி...//

அதெல்லாம் இல்லை. யாரு வேணாலும் கலந்துக்கலாம். :))

said...

//பிட் அலவ்டா...//

புலிக்குச் சொன்னதுதான். நான் கூடாதுன்னு சொல்லலை. (சொன்னா மட்டும் கேட்கவா போறீங்க?)

said...

//கேளுங்கள், கொடுக்கப் படும்! ஒண்ணையுமே காணோமே? :)))))))))//

கீதாம்மா, இதுக்குத்தான் பதிவை எப்பவாவது ஒரு முறையாவது படிச்சுட்டு பின்னூட்டம் போடணும்.

இன்னிக்கு ரிஜிஸ்ட்ரேஷந்தான். நாளைக்குத்தான் கேள்வி.

said...

//போனா போகுதுன்னு விட்டுக்கொடுக்கிறேன் ... கேள்வி கேக்குற உரிமையைச் சொல்றேன்..//

நாங்க எல்லாம் எப்பவாவதுதானே. நீங்க தான் எப்பவுமே! அட கேள்வி கேட்கறதைத்தான் சொன்னேன். :))

//கேள்வியோடு வாங்க... நமக்கும் அட்டெண்டன்ஸ் மார்க் பண்ணிக்குங்க..//

பண்ணிக்கிட்டோம்.

said...

//கப்பி பய said...

ஐயாம் தி பிரசண்ட்டு :))//

நோட்டட்!

said...

//புது மாப்பிள்ளைக்கு என்ன சோலியோ.. விடுங்கப்பா!//

சேதுக்கா, மோகம் 30, ஆசை 60 ஆக மொத்தம் 90 ன்னு வெச்சுக்கிட்டாக்கூட அதெல்லாம் ஓவர். இனி பெனாத்தலார் க்ளாஸ் பக்கம் கொண்டு போயி உக்கார வைக்க வேண்டியதுதான்.

////நாம எப்பவுமே தலைப்புக்கு ஏத்த மாதிரிதான் எழுதுவோங்கிறது தனி மேட்டர்//

ஆகா :-D//

இப்போ என்னதான் சொல்ல வறீங்க? :))

//எப்படியோ, நான் கல(ந்து)க்கப்போறேன் :)//

இந்த பதிவு பேரை இப்படி வெச்சு இருக்கலாம் போல.

கல(ந்து)க்கப் போவது... யாரூஊஊஊ!!

ஓஜாயே ஒஜா...யே யே ஓஜா....

said...

//நானும் வர்றேன் ஆட்டைக்கு//

வாரும் வாரும்.

said...

//me me ...register my name also//

என்னய்யா இது? என்ன பீட்டர் இதெல்லாம்? இந்த ஒரு காரணத்துக்காகவே உம்மை ஆட்டத்தில் இருந்து நீக்கலாம்.

சரி போனாப் போகுதுன்னு தமிழில் மட்டும் நீர் தடை செய்யப்படுகிறீர் என தீர்ப்பு வழங்குகிறேன். :)

said...

//..............கூ...............

அன்புடையீர்,
நானும் இப்போட்டியில் பங்கெடுத்துக்கொள்ள விரும்புகிறேன். கடவுளை நாடாதே என்று சொல்லுமளவிற்கு தாங்கள் நாத்திகன் அல்ல என்பது தெரியுமதனால் - இறையருளாலே அவன் (விடைத்)தாளைப் பெற்று நன்மதிப்பெண் பெறுவேன் என்று நம்புகிறேன்.

இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள
இராமநாதன//

கண்ணே இராமநாதா, ஒரே ஒரு பின்னூட்டம் போட்டாலும் இப்படி உள்குத்து மயமா இருக்கேப்பா.

கண்ணி வெடி புதைச்ச நிலத்தில் நடக்குற மாதிரி ஒரு உணர்வு உம்ம பின்னூட்டத்தைப் படிக்கையில். இதுக்கு ஒரு பின்னூட்டத்தில் பதில் சொன்னாப் போதாது. பின்நவீனத்துவமா ஆராயணும். இருங்க வரேன். :))

said...

தம்பி இராமநாதா, முதலில் அந்த 'கூ'. சிலர் உ எனப் போட்டு கடிதம் தொடங்குவார்கள். என்னவென்று கேட்டால் அது பிள்ளையார் சுழியாம். ஆனால் அப்படி ஒரு எழுத்தினுள் அடக்கக்கூடியவனா இறைவன்? அல்லது 'உ'விற்குப் பதில் 'கூ' எனப் போட்டால் அவனருள் கிடைக்காமல் போய்விடுமா என்ற ஒரு பெரும் தத்துவத்தை இறையாளர்கள் அறிந்து கொள்ளும் படிச் செய்து இருக்கிறீர்கள் என்று நினைக்கும் அதே சமயம், இறை மறுப்பாளர்களும் இந்த ஒரு சொல்லில் ஆனந்தப்படுமாறு செய்திருக்கிறாயே!! ஆமாம் கற்சிலைக்கு எதற்கு மாலையும் மரியாதையும் எனக் கேட்டுவிட்டு பின் அதனையே செய்யும் பழக்கத்தில் இருக்கும் அவர்கள் பாங்கினை மதிக்கும் படி 'உ' எனப் போடும் மானிடர்களே எள்ளி நகையாடி அதற்குப் பதில் 'கூ' எனப் போட்டு அப்பழக்கத்தை நிலைநிறுத்தி இருக்கும் உம்மை இப்படி இரு சாரரும் மகிழும் படி செய்வதற்காக அமைதிக்கான நோபல் பரிசுக்கு சிபாரிசுதான் செய்ய வேண்டும்.

(முதல் எழுத்துக்கே இம்புட்டு நேரம் ஆயிடுச்சா? அடுத்த வரிக்கு அடுத்த பின்னூட்டம்தான்!)

said...

//அன்புடையீர்,//
அன்பிலார் எல்லாம் தமக்குரியர். அன்புடையார் என்பும் உரியர் பிறர்கு என்ற வள்ளுவன் வாக்கின் படி என்னை அன்புடையீர் என விளிப்பதின் மூலம் என்னை உம்முடையவராக வரித்துக் கொண்டு அதன் மூலம் என் கேள்விகளுக்கான பதில்களைப் பெறலாம் என்ற உம் சதித்திட்டம் இந்த ஒரு வார்த்தையின் மூலம் வெளிவந்து விட்டது. ஆனால் இதற்கெல்லாம் இடம் கொடுக்க மாட்டேன் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

said...

//நானும் இப்போட்டியில் பங்கெடுத்துக்கொள்ள விரும்புகிறேன்.//

நல்ல அரசியல் ஞானம் மவனே உனக்கு. ஒரு முறை நம்ம ஊர் அரசியல்வியாதி ஒருத்தன் புதரகம் போனானாம். அங்க நல்ல செழிப்பா இருக்கிற லோக்கல் வியாதி ஒண்ணைப் பார்த்து எப்படின்னு விசாரிச்சானாம். அவன் ஜன்னலைக் காமிச்சு அதோ தெரியுது பாருங்க, அந்த பாலத்தில் 20%தான் இந்த வீடுன்னானாம். அடுத்த தபா அந்த வியாதி நம்ம ஊருக்கு வந்துதாம். இங்க நம்ம ஆள் வாழும் வாழ்க்கையைப் பார்த்து மிரண்டு போயி எப்படிய்யா இதுன்னு கேட்டா, நம்ம ஆளும் ஜன்னல் கிட்ட போயி அந்தா தெரியுது பாரு ரோடு அதுல 100% மே இதுதான் அப்படின்னானாம். அந்த மாதிரி கேள்வி கேட்கறது நானு, பதில் சொல்வது நம்ம பதிவுலகம். ஆனா பங்கு கேட்கறது நீரு. அதையும் இப்படி ஓப்பனா, வெட்கம் இல்லாம கேட்கறீரே உம்மை எல்லாம்....

said...

//கடவுளை நாடாதே என்று சொல்லுமளவிற்கு தாங்கள் நாத்திகன் அல்ல என்பது தெரியுமதனால் //

யோவ் ஆனாலும் உமக்கு நக்கல் அதிகமய்யா!! நாத்திகம் என்றால் கடவுளை நாடாதே எனச் சொல்வதாய்யா? கடவுள் இல்லை என்பதல்லவா அவர்கள் நிலைப்பாடு? இப்படிச் சொல்வதன் மூலம் கடவுள் இருக்கிறான் அவனை நீ நாடாதே எனச் சொல்லி உம் ஆத்திகக் கருத்துக்களை நாத்திகப் போர்வையைப் போர்த்திக் கொண்டு திணிக்கும் உம் சாமார்த்தியத்தை என்னவென்பது? சரி போகட்டும். சிலர் முட்டை சாப்பிட மாட்டார்கள். சிலர் முட்டை கண்ணிற்குத் தெரியாத கேக் போன்ற தின்பண்டங்களை உண்பார்கள் தனியாக முட்டை சாப்பிடமாட்டார்கள் என்றாலும் கூட. அந்த மாதிரி நாத்திகத்தில் கடவுள் இல்லை, கடவுள் இருக்கலாம் எனக்குக் கவலை இல்லை, கடவுள் இருக்கிறார் ஆனால் நான் நாடுவதில்லை என தன் தேவைக்கேற்ப விதிகளை வளைத்துக் கொள்ளும் பலரின் இருப்பினை எள்ளி நகையாடும் உம் குசும்புத்தனம் எனக்கு நன்றாகவே புரிகிறது.

said...

//இறையருளாலே அவன் (விடைத்)தாளைப் பெற்று நன்மதிப்பெண் பெறுவேன் என்று நம்புகிறேன்.//

இம்புட்டு சிண்டு முடியும் வேலை போதாது என்று இப்போ சைவ வைணவ சண்டை வேறா? பின்ன என்னய்யா. கடவுளை நம்புகிறேன். அவன் அருளால் நன்றாகச் செய்வேன் எனச் சொல்லி விட்டுப் போக வேண்டியதுதானே. அதை விட்டு விட்டு இப்படி வம்படியாக ஏன் எழுத வேண்டும்? ஒரு கலெக்டர் ஆபீஸில் வேலை ஆக வேண்டுமானால் அங்கு இருக்கும் ப்யூன் காலைப் பிடிக்க வேண்டும். அதன்படி உமக்கு இங்கு வேலையாக வேண்டும் என யார் காலை பிடிக்கிறீர்? நந்தியின் காலை. நீர் விடைத்தாள் எனச் சொல்வது நந்தியின் காலைத்தான் என எங்களுக்குத் தெரியாதா? ஏன் சிவனால் மட்டும்தான் இது முடியும் என்பதாலா? பெருமாளால் முடியாதா? கருடன் காலைப் பிடிப்பதுதானே? இராமனுக்கு நாதன் சிவனே என்ற உம் பெயருக்கேற்றவாரு சைவமே பெரிது என அறைக்கூவல் விடுத்திருக்கும் உம்மை எதை வைத்து அடிப்பது?

அதிலும் குறிப்பாக அந்த 'நன்மதிப்பெண்' - இங்கும் உமது ஆரியத்தனம் சிரிக்கிறது பாருங்கள். உம் வயதில் நல்ல பெண் வேண்டும் என வேண்டுவது இயல்புதான். ஆனால் எப்படிப்பட்ட பெண் வேண்டும் எனக் கேட்கிறீர்கள்? நன் மதிப் பெண் வேண்டுமாமே. ஏன்யா நன் மதின்னா பூரண சந்திரன். அதாவது பால் போல வெள்ளையான சந்திரனை ஒத்த வெளுப்பான பெண்தான் வேண்டும் எனக் வேண்டுதலை முன் வைக்கிறீர்களே, உமக்கு வெட்கமாய் இல்லை? மனதைப் பாருமய்யா, அந்த பெண் நல்லவளான்னு பாருமய்யா அதை விட்டு விட்டு இப்படி வெள்ளைத் தோலைப் பார்க்கிறீரே. உம்ம ஆண் ஆதிக்கப் பூனைக்குட்டி இப்படி துள்ளி விளையாடுதேய்யா. கருப்பா இருக்கிற பொண்ணு பரவாயில்லைன்னா என்ன கேட்டு இருக்கணும் குணவதியக் கொடு, நல்ல பொண்ணாக் குடுன்னு கேட்டு இருக்கணும். மதின்னா கூட அறிவுதானே என சப்பைக்கட்டு கட்ட உம்மால் முடியும். ஆனா அதை நான் ஒத்துக்கிட்டா அப்புறம் நான் என்னய்யா பின்நவீ 'ஈனத்' 'தூ' வவியாதி?

said...

உள்ளேன் அய்யா !

//இறையருளாலே அவன் (விடைத்)தாளைப் // இராமநாதன் அய்யா, "அவன்" எனக்கும் "தாளை"த் தரப் பணிந்தேன்....:-))

இ.கொ., ஓபன் புக்னு வேற சொல்லிட்டீங்க. அவசரமா, ஸ்கேலு, கர்சீப்பு எல்லாம் பக்கத்து சீட்டுல இருந்து (பிட்டோட) கடன் கேட்போம்... பரவாயில்லியா (+2, காலேஜ்ல அப்டித் தான் காப்பியடிச்சது...)

இந்த பின்னூட்டத்தை நான் டைப்படித்து விட்டு, பப்ளிஷ் செய்வதற்குள் கொத்ஸின் (இராமநாதனுக்கான) பின்னூட்டப் புயல் அடித்து விட்டது! கொத்ஸின் பதில்(களை)ப் பார்த்துச் சிரித்ததில், பக்கத்தில் வேலை செய்பவர் எல்லாம் ஒரு மாதிரி பார்க்கிறார்கள்;-))) (ஏற்கனவே "ஒரு மாதிரி"ன்னு தெரிஞ்சதுதான்...)

said...

புயலடிச்சு ஓய்ஞ்சிடுச்சா?

இந்த புயலுக்கெல்லாம் அசருகிற புல்லல்ல நாம். மறுபடி துள்ளிப்பாயும் புள்ளியெண்டு சொல்லவே இப்பின்னூட்டம்.

மறுபடியும் தில்லையில் ஆடிடும் கூத்தாடிகளின் (அ) தமிழினத்தின் தனிப்பெரும் தெய்வங்களின்/தலைவர்களின் சிலைக்கு போடப்பட்ட மாலைகளின் புண்ணியத்தாலோ, கொத்ஸ் இங்கே சொ.செ.சூ வைத்துக்கொண்டு - அதன் விளைவாய் நாற்பதாமெல்லையை அடைந்துவிட்ட இப்பதிவு இனிமேலும் கவனம் பெறுமானால் மீண்டும் வந்து - புயலுக்குண்டான எதிர்ப்பை முயல்களும் பதிய முயலும் சமத்துவசமயங்களில், இந்த புயலுக்கே புகைய கற்றுக்கொடுத்த நான் வந்து பதில் சொல்வேன். சொல்லாமலும் போவேன்.

said...

நம்மளையும் ஆட்டைக்கு சேர்த்துக்குங்க. நானும் கூட கொஞ்சம் குயிஜூவேன்

said...

பிள்ளையார் சுழில ஆரம்பிச்ச உங்க பின்னூட்ட பதில் நல்லா போயிட்டு இருக்கு இதுல உஷாவும், துளசி டீச்சரூம் வந்தா நல்லா இருக்கும்)

said...

//ஆஜர் ஐயா,

உள்ளேன் சார்,

பிரசண்ட் வாத்தி... :)//

பதில் எம்புட்டு தடவ சொன்னாலும் மார்க் ஓண்ணுதான். :)

said...

//முதல் விடையை அழிச்சுடுங்கன்னு சொல்ற உரிமைய பங்கேற்பவர்க்கு விட்டுக்கொடுங்க!//

தல நீங்க சொல்லிட்டதால அதை கன்ஸிடர் பண்ணறேன். அதாவது ஒரு பெரியவர் வழியில் பதில் சொல்லணமுன்னா "ஆகட்டும் பார்க்கலாம்!"

said...

//அண்ணா நானும் participate பண்ணலாமா....இல்ல ரொம்ப tough ஆ கேப்பீங்களா..சாய்ஸ் எல்லாம் இருக்கா..//

அவந்திகா, கட்டாயம் முயற்சி செய்யுங்க. கொஞ்சம் கடினமா இருந்தாலும் பரவாயில்லைன்னு முயன்று பாருங்க.

said...

//தல...தல...கட்டத்தொரைக் கொத்ஸ் கெட்டப்ல்ல க்வீஸ் வைக்கிறாப்பல்ல வா தல...வந்து ஒரு காட்டு காட்டுத் தல//

நீங்கதான் 'காட்டுக்' கத்தல் கத்தறீங்க!!
:))

said...

//நான் ரெடி ஜூட்! (ஓடத்தான்):-))//

அபி அப்பா - ஓடிக்கிட்டே இருக்கப் போறீங்க!!

said...

ரிப்பீட்டேய்//

மங்களூர் சிவா, நான் அவருக்குச் சொன்ன பதிலைப் பார்த்துக்குங்க.

said...

//இ.கொ., ஓபன் புக்னு வேற சொல்லிட்டீங்க. அவசரமா, ஸ்கேலு, கர்சீப்பு எல்லாம் பக்கத்து சீட்டுல இருந்து (பிட்டோட) கடன் கேட்போம்... பரவாயில்லியா (+2, காலேஜ்ல அப்டித் தான் காப்பியடிச்சது...)//

வாங்க கெக்கேபிக்குணி - நடத்துங்க!

//கொத்ஸின் பதில்(களை)ப் பார்த்துச் சிரித்ததில், பக்கத்தில் வேலை செய்பவர் எல்லாம் ஒரு மாதிரி பார்க்கிறார்கள்;-))) (ஏற்கனவே "ஒரு மாதிரி"ன்னு தெரிஞ்சதுதான்...)//
:))

அப்புறம் கருத்து சொல்ல வேண்டாமா?

said...

//அப்புறம் கருத்து சொல்ல வேண்டாமா? //

கருத்தை இன்னொரு பின்னுட்டத்தில்தான் சொல்வோம். (இது பி.க.யா?)
;-)

said...

//இந்த புயலுக்கெல்லாம் அசருகிற புல்லல்ல நாம். மறுபடி துள்ளிப்பாயும் புள்ளியெண்டு சொல்லவே இப்பின்னூட்டம்.//

முதலில் ஒண்ணு சொல்லறேன் கேட்டுக்குங்க.

புயலில் பெரிய மரம் விழும் ஆனா சிறு காத்துக்குக் கூட அசையும் புல் புயலிலும் விழாது. அதனால புல்லை இந்த மாதிரி பேசறதை நிறுத்துங்க.

/மறுபடியும் தில்லையில் ஆடிடும் கூத்தாடிகளின் //
அப்போ பாடுபவர்கள் கதி?

//தமிழினத்தின் தனிப்பெரும் தெய்வங்களின்/தலைவர்களின் சிலைக்கு போடப்பட்ட மாலைகளின் புண்ணியத்தாலோ, கொத்ஸ் இங்கே சொ.செ.சூ வைத்துக்கொண்டு//

வைத்துக் கொண்டு??

//அதன் விளைவாய் நாற்பதாமெல்லையை அடைந்துவிட்ட இப்பதிவு இனிமேலும் கவனம் பெறுமானால் //

இந்த எல்லை எல்லாம் நம்மளை ஒண்ணும் பண்ணாது.

//மீண்டும் வந்து -//

யோசிக்க டையம் வேணுமா? நேராக் கேட்க வேண்டியதுதானே?

//முயல்களும் பதிய முயலும் சமத்துவசமயங்களில்,//

அப்படிப் போடு அருவாளை. இதுக்கு நான் என்னத்த சொல்ல! நல்லா இருடே!

//பதில் சொல்வேன். சொல்லாமலும் போவேன்.//
அதான் சொல்லாமக் கொள்ளாம போயீட்டீரே. மீண்டு(ம்) வாங்க. ஐயாம் தி வெயிட்டிங்

said...

//நம்மளையும் ஆட்டைக்கு சேர்த்துக்குங்க. நானும் கூட கொஞ்சம் குயிஜூவேன்//

வாங்க விவ்ஸ். உங்களுக்கு இல்லாமலேயா!!

said...

//பிள்ளையார் சுழில ஆரம்பிச்ச உங்க பின்னூட்ட பதில் நல்லா போயிட்டு இருக்கு இதுல உஷாவும், துளசி டீச்சரூம் வந்தா நல்லா இருக்கும்)//

இப்படி எல்லாம் சொல்லி 33% வாங்கிக் கொடுத்து நீங்க ஆண் ஈயம் பேசும் ஆள் இல்லை என்ற உங்கள் முயற்சி வெற்றியடையாது எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

said...

//கருத்தை இன்னொரு பின்னுட்டத்தில்தான் சொல்வோம். (இது பி.க.யா?) ;-)//

பாலா, யூ டூ?

ஆமாம் இது பி.க.வேதான்!! :))

said...

//புயலில் பெரிய மரம் விழும் ஆனா சிறு காத்துக்குக் கூட அசையும் புல் புயலிலும் விழாது//

புயல் இப்போது நுனிப்புல்லுக்கு சப்போர்ட் செய்வது இருக்கும் ஐம்பதை ஐந்நூற்றாக்க கிடைத்த சந்தர்ப்பவாத அரசியல் என்பதை முந்நிறுத்தும்வேளையில் - தன் வழியில் நிற்கும் புல்லை சாய்க்க நினைக்கும் கூட்டத்தின் அறமற்ற சீற்றங்களில் புயல்களும் உண்டு என்கிற உண்மையை நுனிப்புற்களும் கருத்தில் கொள்ளவேண்டுமென்பதே என் அவா.

said...

//(ஏற்கனவே "ஒரு மாதிரி"ன்னு தெரிஞ்சதுதான்...)// - அதான் கருத்து சொல்லிட்டோமே;-)))) யாருக்கு "ஒரு மாதிரி"ன்னு சொல்லாதப்பவே கெ(த்)ஸ் பண்ணுவீங்கன்னு நெனச்சேன்...

இ.கொ., ////ஆஜர் ஐயா,

உள்ளேன் சார்,

பிரசண்ட் வாத்தி... :)//

பதில் எம்புட்டு தடவ சொன்னாலும் மார்க் ஓண்ணுதான். :)// அப்படியா? இம்மூன்று பதில்களில் எது சொன்னாலும் மார்க் உண்டா, பரவாயில்லியே!?

தெரியல சார், ஏதோ என்னாலான பி.க:-)

said...

பி.ந. சரக்கை இராமாயணப் பெரியவர்கள் குந்திவச்சு அடிச்சதன் பின் எஞ்சியிருந்திருக்கக்கூடிய 'சைட் டிஸ்' 65-ன் சில எலும்புதுண்டுகளை கண்டெடுத்ததற்கே 'பி.ந'வை கண்டதாக எண்ணி நீட்டி முழக்கும் கொத்தனார் அவர்களின் தகுதியையும் இங்கே சற்று பார்க்கவேண்டிய நிர்பந்தமிருப்பதால்.. (பிறப்பை பற்றி பிறிதொருநாள் கூட்டம் போடுவது குறித்து இராஜ்ய சபை உறுப்பினர்களிடம் தேதி கேட்டிருக்கிறோம். தெரிந்தவுடன் சொல்கிறேன். வந்து அவசியம் கலந்துகொள்ளவும்)

நான் கூ வென்று போட்டதன் பின்னணியை ஆராய வேண்டிய கட்டாயத்தின் பேரில்.. களங்கமற்ற என் வார்த்தைகளினூடே கள்ளினைத் தேடும் உமது கயமைத்தனத்தை வெளிக்கொணர இதோ மெய்யை உதிர்க்கிறேன். ஏன்? சில நியாயங்கள் வெளிச்சத்திற்கு வரவேண்டுமென்றால் பல மெய்களை பொதுவில் அம்பலப்படுத்தவும் நாங்கள் தயங்காதவர்கள் என்று எங்கள் வரலாறு சொல்லும்.

பி.நத்துவத்தில் கரை கண்டவரென கொக்கரிக்கும் கொத்ஸுக்கு அவ்வெழுத்தின் பின் வெறும் குறியீடாக முடங்கிக்கிடக்கும் சில சொற்களை பொதுவில் பயன்படுத்தத் தெரியவில்லையா/முடியவில்லையா?

இப்படி பலவாயிரம் ஆண்டுகளாக அடிமையாகி இன்று இணையத்தில் கூட தமிழை 'பரிமணக்க' முடியாததன் காரணம் என்ன?.. சில சொற்கள் புனிதம்.. ஏனைய சொற்கள் 'தீட்டு' என்ற போலி பாசிச கட்டுமான அனுமானரின் வாலைப் பிடித்து இன்னும் - இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் - தொங்கிக்கொண்டிருக்கும் இந்த இருநிலைகளே காரணமென்பது புரியவில்லையா?

இது மட்டுமே இவரின் போலி பி.ந முகமூடியை கிழித்துவிடுமென்றாலும் ஒவ்வொன்றாக இவரின் கேள்விகளுக்கும் புரட்டுகளுக்கும் மடலிடுவேன். மேலும்.. ஜோடா குடித்துவிட்டு.. தெளிவாக வருகிறேன்.

said...

//புயல் இப்போது நுனிப்புல்லுக்கு சப்போர்ட் செய்வது இருக்கும் ஐம்பதை ஐந்நூற்றாக்க கிடைத்த சந்தர்ப்பவாத அரசியல் என்பதை முந்நிறுத்தும்வேளையில்//

இப்போ எல்லாம் 500 எல்லாம் அடிக்க முடியலைப்பா. ரொம்ப வயசாயிடுச்சு. :))

//தன் வழியில் நிற்கும் புல்லை சாய்க்க நினைக்கும் கூட்டத்தின் அறமற்ற சீற்றங்களில் புயல்களும் உண்டு என்கிற உண்மையை நுனிப்புற்களும் கருத்தில் கொள்ளவேண்டுமென்பதே என் அவா.//

இல்லாத புல்லுக்கு இம்புட்டு சப்போர்ட்டா? அவங்க வர நான் என்ன ஆணியம் பத்திப் பேசறேனா இல்லை அந்த மாதிரிதான் தலைப்பு வெச்சிருக்கேனா? இந்த மாதிரி பதிவுக்கெல்லாம் அவுக வரமாட்டாக.

said...

துளசி ரீ/டீ ச்ச்ச்ச்ச்ச்சர் ஒரு ஓரமா நின்னு வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருக்கேன்:-))))

said...

//அப்படியா? இம்மூன்று பதில்களில் எது சொன்னாலும் மார்க் உண்டா, பரவாயில்லியே!?//

அந்த மார்க் அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்தரில். ஆனா பரிட்ச்சைப் பேப்பரில் மார்க் வேணுமுன்னா ஒழுங்கா எழுதுற வழியைப் பாருங்க. :)

said...

ராம்ஸு, கொஞ்சம் இரும். உமக்கு அப்புறமா வரேன்.

said...

ரீச்சர், இப்படி ஒதுங்கி நின்னு வேடிக்கை பார்த்தா எப்படி? ஒரு அதட்டு போடுவீங்களா? நீங்களும் இந்தப் பசங்களோட சேர்ந்துக்கிட்டு....

said...

ஒக்கே....வரேன்.....என்னது தப்பான பதிலுக்கு நெகடிவ் மதிப்பெண்ணா?? இது ஓவரா இருக்கே.....??!! :):)

said...

//ஒக்கே....வரேன்....//
வாங்க ராதாக்கா.

//என்னது தப்பான பதிலுக்கு நெகடிவ் மதிப்பெண்ணா?? //
அப்படின்னு நான் எங்கேயாவது சொல்லி இருக்கேனா? ஏன் இப்படி வீண் புரளியைக் கிளப்பறீங்க?

//இது ஓவரா இருக்கே.....??!! :):)
இதுதா ஓவரா இருக்கு!! :))

said...

நல்ல முயற்சி என்பதால் வாழ்த்தி வரவேற்று, பதில் எப்படியும் தெரிந்திருக்காது என்பதால் ஓரவேடிக்கைக்கு அமர்கிறேன்.//
அதே அதே.
இன்றைய பதிவையும் பார்த்ததால்,
எமக்கு இருக்கும் அரை குறைத் தமிழறிவைத் தம்பட்டம் அடித்துப் பிரகடனப் படுத்தும் அவாவும்
இல்லாததால்,

மேலும் போட்டிகளில் கலந்து கொண்டால் பெறும் இன்பத்தைவிடப் பார்ப்பவர்களுக்கே அறிவு வளரும் என்று நுண்ணறிவு சொல்லுவதால்,

நாங்கள் போட்டியில் கலந்து கொள்ளவில்லை:)
பந்தபாசம் படம் பார்த்ததிலிருந்து நான் எழுதுவது பேசுவது எல்லாமே செந்தமிழில் தான்.:))))