Thursday, December 06, 2007

மக்கள் தீர்ப்பே பாப்பையா தீர்ப்பு! பட்டிமன்றம் பகுதி 5

சாலமன் பாப்பையா

ஆக மொத்தம் பேச வேண்டிய எல்லாரும் பேசி முடிச்சுட்டாங்க. மேடையேறிப் பேசின நாலு பேரா இருக்கட்டும். பின்னூட்டத்துல பொளந்து கட்டின ஜனங்களா இருக்கட்டும். என்னமா பேசுனாங்கய்யா. அதுவும் நம்ம மக்கள் இருக்காங்களே சும்மாவே நல்லாப் பேசுவாங்க. இங்க ஒரு அப்பாவி ஒருத்தன் கிடைச்சு இருக்கான் வந்து மொத்துங்கடான்ன உடனே கிளம்பி வந்துட்டாங்கய்யா.


அத்தனை பேரு பேசினாங்களே, என்னென்ன பேசுனாங்க - பின்னூட்ட வெறின்னு பேசினாங்க, உப்புமா சுவைன்னு பேசினாங்க, அண்ணான்னாங்க, தம்பின்னாங்க, அடிச்சுக்கிட்டாங்க, அணைச்சுக்கிட்டாங்க. ஆஹா, ஆஹா என்ன உணர்ச்சிகள், என்ன காட்சிகள். ஆனா யாராவது ஒருத்தனாவது பதிவு எல்லாமே உப்புமா இல்லை, வெறும் பின்னூட்டத்துக்காக பதிவுகள் எழுதலை அப்படின்னு ஒரு வார்த்தை சொன்னீங்களாய்யா? வல்லியம்மாதான் கொஞ்சம் கிட்ட வந்தாங்க ஆனா அதுலேயும் அர்த்தமுள்ள ஹிந்து மதம் அப்படி இப்படின்னு காமெடி பண்ணிட்டாங்க.


இப்படித்தான் ஒரு முறை ஒரு பட்டிமன்றம் - சீதைக்கு ராமன் சித்தப்பாவா? பெரியப்பாவான்னு தலைப்பு. பங்கெடுத்துக்கிட்டவங்க எல்லாம் ரொம்ப அற்புதமா பேசுனாங்க. அங்க நான் குடுத்த தீர்ப்பு சித்தப்பாதான்! இது எல்லாம் சரித்திரம் பார்த்துத் தர தீர்ப்பு இல்லைங்க. இது என்ன பரீட்சையா சரியான பதிலை யார் எழுதி இருக்கான்னு சொல்ல? இது பட்டிமன்றமய்யா. இங்க அன்னிக்கு டேட்ல யாரு நல்லா பேசி இருக்காங்க அப்படின்னு சீர் தூக்கிப் பார்த்து தீர்ப்பு சொல்லணும்.


அப்படித்தான் இங்க துளசி ஆரம்பிச்ச அழகைச் சொல்லவா, பெனாத்தலார் பெருமையாப் பேசினதைச் சொல்லவா, வேவு பார்த்திட்டு வ்ந்தா மாதிரி பாயிண்டா அடுக்கின தேவைச் சொல்லவா, இல்லை பாட்டு என்ன, கவுஜ என்ன குட்டிக் கதை என்னான்னு கலக்கின மருத்துவரைச் சொல்லவா. என்னா பேச்சு என்னா பேச்சு. இதுல நடுவில சினிமா பாட்டு மெட்டுல இட்டுக்கட்டிப் பாட ஆரம்பிச்சுட்டாரு நம்ம பெனாத்தலார். ஆனா அதுக்கு ஈடு குடுக்கிற மாதிரி தேவ் வந்து பட்டையைக் கிளப்பிட்டாரு.


இப்படி எல்லாம் சீர்தூக்கிப் பார்த்து ஒரு முடிவு சொல்லலாமுன்னு நினைக்கும் போதுதான் தெரிஞ்சுது நம்ம கொத்ஸ் நெல்லைச் சீமையாளாமே. அந்த பக்கத்து ஆளுங்களைப் பார்த்தாலே நமக்குக் கொஞ்சம் டென்ஷந்தான்யா. ஒரு தடவை அங்க ஒரு பட்டிமன்றம் அப்படின்னு ஒத்துக்கிட்டு போயிட்டோம். எல்லாரும் பேசி முடிச்சு தீர்ப்பு சொல்லற வேளை வந்தது. அப்போன்னு பார்த்து நல்ல வெள்ளையும் சொள்ளையும் போட்டுக்கிட்டு மூஞ்சி நிறையா மீசையை வெச்சுக்கிட்டு ஒரு ஆள் பின்னாடி கையைக் கட்டிக்கிட்டு நம்ம பக்கத்தில் வந்து நின்னான். என்னடா பார்வை ஒரு மாதிரி இருக்கேன்னு நினைச்சுக்கிட்டே இருக்கும் போது இவனை கலர் ஜெராக்ஸ் எடுத்தா மாதிரி ஒருத்தன் அந்தப் பக்கம் வந்து நின்னு நம்மளைப் பார்த்து ஒரு மாதிரி சிரிச்சான். என்னடா அப்படின்னு பார்த்தா நம்ம கிட்ட ஜாமான் இருக்கு சாமி, நம்மூர் வழக்கப்படி நமக்கு எதிரா தீர்ப்பு வந்தா ஒரே போடா போட்டுருவேன்னான். அப்போ அவன் அப்படின்னு கேட்டா அந்த பக்கத்துக்கு எதிரா தீர்ப்பு வந்தா அவன் போடுவாமில்ல அப்படின்னு அசராமச் சொல்லுதாங்கய்யா.


அன்னைக்குத் தப்பிச்சு வந்தது தம்பிரான் புண்ணியமாப் போச்சு. அது என்னமோ தெரியலை. இன்னிக்கு மேடை ஏறினதுலேர்ந்து அந்த நினைப்பாவே இருக்கு. அதுனால நான் என்ன சொல்லறேன்னா ஜனநாயக முறைப்படி வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக வாக்காளப் பெருமக்களான உங்களை அறிமுகப் படுத்திக்கிட்டு நான் எஸ் ஆகறேன். வாக்காளப் பெருமக்களே தவறாம உங்கள் பொன்னான பட்டிமன்றத்தில் பேசிய அனைவருக்கும் என் நன்றிகளும் வாழ்த்துக்களும். அப்போ வர்ட்டா!!


46 comments:

said...

அந்த மூணாவது ஆப்ஷன் வந்து வாஸ்துக்காக வெச்சது. அதை யாரும் க்ளிக்காதீங்கப்பா!!

said...

உப்புமா சட்டி ஏந்திய எதிரணி நண்பர்களே... பின்னூட்ட புரட்சியைக் கவனித்தீர்களா... தீர்ப்பு சொல்லும் சக்தி வாய்ந்த இந்தப் பதிவை.. நாலு வரியில் சொல்லி முடிக்காமல்..அதிலும் தன் பின்னூட்ட கொள்கை வெறி கொடி கட்டி பறக்க விட்டிருக்கிறார் அண்ணன்.... வாக்கெடுப்பு என அதற்கு வண்ணம் பூசி உள்ளார்.. இப்போதாவது விளங்கி கொள்ளுங்கள்.. பின்னூட்டப்புயலார் வாழ்க... அவர் தம் பின்னூட்ட வெறி வாழ்க... வாழ்த்துக்கள்...

போடுங்கம்மா ஓட்டு பின்னூட்ட வெறியை ஏத்து...

said...

குத்தறதுன்னா வரிஞ்சு கட்டிகிட்டு வந்துட்டுவோமில்ல.. பட்டிமன்றம் ஐடியா சூப்பர்.. :)

said...

//இங்க அன்னிக்கு டேட்ல யாரு நல்லா பேசி இருக்காங்க அப்படின்னு சீர் தூக்கிப் பார்த்து தீர்ப்பு சொல்லணும்.
//

சொல்ல வேண்டிதானே. அத விட்டுட்டு ஒரு சர்வே போட்டுக்கினு... என்னது சின்னபுள்ளத்தனமா!

போங்கங்.... :-))))

(இப்பதைய நிலவரத்துல அந்த ஆப்ஷந்தான் அதிக ஓட்டு வாங்கும் போல இருக்குது :-)) )

said...

தேவ் சொன்னதுக்கு ஒரு
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

பின்னூட்டவெறிக்கே உங்கள் ஓட்டுக்களை அளிக்கும்படி அன்பர்களையும் நண்பர்களையும்
எதிரணி நட்புக்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.

எங்களுக்கும் மனித நேயம் இருக்கு. எதிரணியையும் அன்பா அரவணைச்சுக்கறவங்கதான் நாங்க:-))))

said...

தம்பி தேவு.

//நாலு வரியில் சொல்லி முடிக்காமல்..//

இதான்யா உப்புமா! என்னவோ தீர்ப்புக்கொடுக்கறாமாதிரி பில்ட் அப் கொடுத்துட்டு உள்ளே சர்வே வைக்கிறதௌ என்னன்னு சொல்வீங்க?

மக்களே உப்புமாவுக்கே வாக்கு!

said...

//எங்களுக்கும் மனித நேயம் இருக்கு. எதிரணியையும் அன்பா அரவணைச்சுக்கறவங்கதான் நாங்க:-))))//

துளசி அக்காவே உப்புமாக்கட்சிக்கு ஓட்டுப் போட்டதாக பூடகமாகச் சொல்லி இருக்கும்போது எங்கள் வெற்றியை யார் தடுக்க முடியும்?

said...

மக்களே,

எதிர்கட்சிகளின் வஞ்சனையான பேச்சைப் பார்த்தீங்களா?

ஓட்டுன்னதும் தில்லுமுல்லு வந்துருது பாருங்க.

ஞாபகம் வச்சுக்குங்க...பின்னூட்டவெறிக்கே உங்கள் ஓட்டு:-)

said...

இது உப்புமான்னு சொல்ல பின்னூட்டப் பெட்டியைக் கடும் பின்னூட்ட வெறியோடு பெனத்தலார் திறந்திருப்பது ஊருக்கே இப்போது தெரிந்து விட்டது... அந்த வெறியை ஆதரிப்பீர்... பினாத்தலாரையும் அணி தர்மம் மீறி எங்களுக்கு வாக்களிக்கச் செய்த கொத்ஸின் பின்னூட்ட வெறி வாழ்கவே..

said...

கொத்ஸ்,

மூணாவது ஆப்ஷன கிளிக்கி சப்மீட் பண்ணினபிறகுதான் உங்க பின்னூட்டத்த கவனிச்சேன்...ஹிஹி

said...

போட்டாச்சு!

போட்டாச்சு!

said...

//நூறாவது பதிவு என்று சொல்லி அதை 103 ஆக ஆக்கியதால்.//
இதேதான் நானும் சொல்றேன்..

வெறும் நூறாவது பதிவுன்னு போட்டிருந்தா வாழ்த்தூஸ் மட்டுமே வந்திருக்கும். அதுலையே வெறியோட (பின்னூட்ட வெறி இருந்திருந்தா) அடிச்சு ஆடியிருக்கலாமே?

அத விட்டு நூறாவது பதிவைப் பற்றியே எக்ஸ்ட்ரா நாலு பதிவு போடுவது உப்புமா வெறியா பின்னூட்ட வெறியான்னு சபையோர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறென்.

said...

உப்புமாவுக்கே எங்கள் ஓட்டு...

உப்புமா 100 முடித்து 200 வது தடவை சாப்பிட...எங்கள் கட்சியில் அனைவ்ரும் தயார்!!!

said...

யோவ்! சாமி என்ன அதுகுள்ள முடிச்சிட்டீர்!! இன்னும் எங்க வாதம் பிரதிவாதம் எல்லாம் இருக்கு!!!

said...

32% அந்த மூணாவது ஆப்ஷன், வோட் போட்டோமில்ல!

said...

////மதுரையம்பதி said...

கொத்ஸ்,

மூணாவது ஆப்ஷன கிளிக்கி சப்மீட் பண்ணினபிறகுதான் உங்க பின்னூட்டத்த கவனிச்சேன்...ஹிஹி
/////

ரிப்பீட்டேய்!!!!
பட்டி மன்றம் சூப்பர் ஐடியா!!
வாழ்த்துக்கள்!! B-)

said...

// மதுரையம்பதி said...

கொத்ஸ்,

மூணாவது ஆப்ஷன கிளிக்கி சப்மீட் பண்ணினபிறகுதான் உங்க பின்னூட்டத்த கவனிச்சேன்...ஹிஹி/

நானும் தான்.... :))

said...

//போடுங்கம்மா ஓட்டு பின்னூட்ட வெறியை ஏத்து...//

தேவ், உம்ம பின்னூட்டத்தில் பொருட் பிழை இருக்கிறது. பின்னூட்ட வெறிக்கு வெறும் ஓட்டு மட்டும் போட்டால் போதுமா?

said...

//குத்தறதுன்னா வரிஞ்சு கட்டிகிட்டு வந்துட்டுவோமில்ல.. பட்டிமன்றம் ஐடியா சூப்பர்.. :)//

வாங்கய்யா வாங்க. வந்து நல்லாப் பழகுங்க. ச்சீ படியுங்க.:))

said...

//(இப்பதைய நிலவரத்துல அந்த ஆப்ஷந்தான் அதிக ஓட்டு வாங்கும் போல இருக்குது :-)) )//

இப்பக்கூட இப்படித்தான் இருக்கு!!!

said...

பின்னூட்ட வெறி இல்லாமலா, அந்த மூணாவது ஆப்ஷனை வைச்சாரு கொத்ஸ்!

நல்லாருங்கடே!

said...

//எங்களுக்கும் மனித நேயம் இருக்கு. எதிரணியையும் அன்பா அரவணைச்சுக்கறவங்கதான் நாங்க:-))))//

ரீச்சர், நல்ல பழுத்த அரசியல்வியாதி ஆகிட்டீங்க. வோட்டு சமயத்தில் நல்லாவே அரவணைச்சுக்கறீங்க....

said...

//இதான்யா உப்புமா! என்னவோ தீர்ப்புக்கொடுக்கறாமாதிரி பில்ட் அப் கொடுத்துட்டு உள்ளே சர்வே வைக்கிறதௌ என்னன்னு சொல்வீங்க?//

நியாயமாத்தேன் இருக்கு நீங்க சொல்லறது!!

said...

//துளசி அக்காவே உப்புமாக்கட்சிக்கு ஓட்டுப் போட்டதாக பூடகமாகச் சொல்லி இருக்கும்போது எங்கள் வெற்றியை யார் தடுக்க முடியும்?//

அதான் லீடிங்கில் இருக்கீங்க போல!! ஆனா லீட் கொஞ்சம் கம்மியாத்தேன் இருக்கு.

said...

//எதிர்கட்சிகளின் வஞ்சனையான பேச்சைப் பார்த்தீங்களா?

ஓட்டுன்னதும் தில்லுமுல்லு வந்துருது பாருங்க.//

ஏமாத்திப்புட்டீரே ஐயா ஏமாத்திப் புட்டீரேன்னு பாட்டு எல்லாம் பாடுவீங்க போல இருக்கே. நல்லாத்தேன் 'அம்மா' அரசியல் பண்ணறீங்க.

said...

//இது உப்புமான்னு சொல்ல பின்னூட்டப் பெட்டியைக் கடும் பின்னூட்ட வெறியோடு பெனத்தலார் திறந்திருப்பது ஊருக்கே இப்போது தெரிந்து விட்டது..///

இதுவும் நியாயமாத்தேன் இருக்கு!! :))

said...

//மூணாவது ஆப்ஷன கிளிக்கி சப்மீட் பண்ணினபிறகுதான் உங்க பின்னூட்டத்த கவனிச்சேன்...ஹிஹி//

பதிவுலயே டிஸ்கியா போடலாமுன்னு நினைச்சேன். உம்மை மாதிரி எத்தனை பேர் இருக்காங்கன்னு பார்க்கலாமேன்னுதான் இப்படி....

said...

//போட்டாச்சு!

போட்டாச்சு!//

புலி ரெண்டு ஓட்டா போட்ட? அதுவும் ஒரே அணிக்குப் போட்டதா இல்லை அணிக்கு ஒண்ணுன்னு போட்டு நடுநிலமைவியாதி ஆகிட்டியா?

said...

//வெறும் நூறாவது பதிவுன்னு போட்டிருந்தா வாழ்த்தூஸ் மட்டுமே வந்திருக்கும். அதுலையே வெறியோட (பின்னூட்ட வெறி இருந்திருந்தா) அடிச்சு ஆடியிருக்கலாமே?

அத விட்டு நூறாவது பதிவைப் பற்றியே எக்ஸ்ட்ரா நாலு பதிவு போடுவது உப்புமா வெறியா பின்னூட்ட வெறியான்னு சபையோர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறென்.//

இதைப் படிச்சா சரியாத்தானே இருக்கு!! :))

said...

//உப்புமா 100 முடித்து 200 வது தடவை சாப்பிட...எங்கள் கட்சியில் அனைவ்ரும் தயார்!!!//

இன்னும் 50 வோட்டு கூட வரலை. அதை 100 ஆக்கணும் அப்புறம்தான் 200.

said...

//யோவ்! சாமி என்ன அதுகுள்ள முடிச்சிட்டீர்!! இன்னும் எங்க வாதம் பிரதிவாதம் எல்லாம் இருக்கு!!!//

வாய்யா வா! ஒண்ணுக்கு நாலு பதிவு போட்டாச்சு. அப்போ எல்லாம் இந்த பிரதி வாதம், பக்க வாதம் எதுவும் காணும். இப்போ வந்து சவுண்ட் விடற ஆளைப் பாரு.

said...

//32% அந்த மூணாவது ஆப்ஷன், வோட் போட்டோமில்ல!//

கீதாம்மா - இந்த 32%, 33% எல்லாம் பார்த்து அந்த அந்த 'ஈய' ஆப்ஷன் அப்படின்னு நினைச்சு வோட்டு போட்டுட்டீங்களா? அது வெத்து வேட்டு ஆப்ஷன்!! :))

said...

//ரிப்பீட்டேய்!!!!
பட்டி மன்றம் சூப்பர் ஐடியா!!
வாழ்த்துக்கள்!! B-)//

சிவீஆர் நீருமாய்யா?!! :))

said...

//நானும் தான்.... :))//

ராயலு - நார்மலா இருக்கும் போது வந்துட்டீரா? ஒரு நிலையா இருக்கும் போது வந்தா இதெல்லாம் மிஸ் பண்ணி இருக்க மாட்டீரே....

said...

//பின்னூட்ட வெறி இல்லாமலா, அந்த மூணாவது ஆப்ஷனை வைச்சாரு கொத்ஸ்!

நல்லாருங்கடே!//

ஐயா அந்த ஆப்ஷனுக்கும் பின்னூட்டத்துக்கும் என்ன சம்பந்தம்? புரியலையே....

பொதுவா சர்வே வெச்சா பின்னூட்டம் வராதாமே - சர்வேசன் சொல்லறாரு.

said...

வாக்களித்தோம். வாக்களித்தோம். களித்தோம். தோம். ம்.

said...

//பதிவுலயே டிஸ்கியா போடலாமுன்னு நினைச்சேன். உம்மை மாதிரி எத்தனை பேர் இருக்காங்கன்னு பார்க்கலாமேன்னுதான் இப்படி....//

+1
ஹி...ஹி...

said...

ஓட்டு போட்டாச்சு.

-அரசு

said...

//வாக்களித்தோம். வாக்களித்தோம். களித்தோம். தோம். ம்.//

போட்டாச்சா? வெரி குட். நீங்க எழுதி இருக்கறதைப் பார்த்தா எனக்கு சின்ன வயசில் சொல்லும் ஒரு வாக்கியம் ஞாபகத்துக்கு வருது.

சாப்பாடு போடப்படும், ப்பாடு போடப்படும், பாடு போடப்படும், டு போடப்படும், போடப்படும், டப்படும், ப்படும், படும், டும், ம். என வேகமாகச் சொல்வோம்.

அதையும் நீங்க சொன்னதையும் வெச்சுப் பார்த்தா நீங்க உப்புமாதான் சாப்பிட்டு இருக்கீங்க போல!!

said...

//+1
ஹி...ஹி...//

அட தஞ்சாவூரான், நீங்க கூடவா இந்த லிஸ்டில்?

said...

// அரசு said...

ஓட்டு போட்டாச்சு.

-அரசு//

நன்றி அரசு! :)

said...

இந்தியா தேர்தல் முடிவுகள் ரெண்டு நாளில் வந்துரும். இங்கே நாலு நாள் ஆச்சு.
முடிவுகள் எப்போ வரும்? உப்புமாதான் என்று அழுத்தம் திருத்தமாக சொல்லியாச்சு போன பதிவுல. வாக்கும் குத்தியாச்சு அதுக்கு. waiting....
-அரசு

said...

//உப்புமாதான் என்று அழுத்தம் திருத்தமாக சொல்லியாச்சு போன பதிவுல.//

அரசு, அதான் மக்கள் தீர்ப்புதான் பாப்பையா தீர்ப்புன்னு சொல்லியாச்சே!! இப்போதைக்கு 40% வாக்குகள் வாங்கி உப்புமாதான் லீடிங்!

said...

நான் வாக்களிக்க வர்றதுக்குள்ள வாக்குப் பெட்டியைக் காணோம். :-(

பரவாயில்லை. பாப்பையாவே ஒன்னும் சரியா சொல்லலை. நான் சொல்லி என்ன ஆவப் போவுது.

said...

குமரன், இம்புட்டு லேட்டா வந்துட்டு பெட்டியைக் காணோமுன்னு சொன்னா எப்படி? வாக்கெடுப்புக்கு விட்டுட்டாரு பாப்பையா. அதில் கிட்டத்தட்ட 40% வாக்குகள் வாங்கி உப்புமா அணிதான்னு முடிவாயிருச்சு! :))

said...

ஆமாங்க குமரன்.

ஒரே ஊழல். வாக்குப்பெட்டியையே களவாடி........

கடைசியில் ஊசிப்போன உப்புமாவுக்கே வெற்றியாம்(-: