Friday, October 09, 2009

குறுக்கெழுத்துப் புதிர் - அக்டோபர் 2009

வழக்கம் போல்
  • இங்கே இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும்.
  • பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
  • நீங்கள் அனுப்பும் விடை உடனே வெளிவராது ஆனால் நான் சரியா தவறா எனச் சொல்வேன்.
  • நான் பொதுவாகப் பயன் படுத்தும் அகராதி இது.
  • இந்த வார திண்ணை இதழிலும் வெளிவந்துள்ளது.



இனி இந்த மாதப் புதிரின் கட்டவலையும் குறிப்புகளும்.


1
2
345
6





7
89




10
11

12
13
14





15
16


குறுக்கு

3 வானம்பாடியோ வீழ்த்திடும் வில்லோ (5)
6 தலை வகிடெடுத்து நகையோடு பிணைத்துக் கயிலாயம் பார்க்கலாம் (4)
7 நெஞ்சில் கம்பு கொண்டு அடித்த திங்கள்(4)
8 கபடமாக யானை கையா எனக் குழம்பியது (6)
13 இனாமா இடையில்லாப் பயன் கலந்து செய்யுள் தா (6)
14 சிறப்பான தடை தரும் துருவை (4)
15 உள்ளிருந்து வந்து வக்கணையாய் ஆரம்பிக்க (4)
16 யோசித்தால் தானைத்தலைவன் தலை குழப்பி இரு (5)

நெடுக்கு

1 தோகையில் மறைந்த முடியாத மனது படிப்பதைக் குறிக்கும் (5)
2 திக்கி தலைகீழாய் விழுந்த பிஞ்சை பொறுப்பில் எடுத்து நடத்து (5)
4 சரமாகக் கோர்த்தது சாறாக ஓடியது (4)
5 தலை மேல் சுமை ஏற்றி ஆடிடும் ராசி (4)
9 இறந்தவன் பெரும்பாலும் ஊர்க்காவலன் (3)
10 அத்தி கத்துவது ஆட்கள் கொப்பளிப்பது (5)
11 முடிவிலாப் பாசம் கொண்ட உலகர் பெரும்பாலும் ஆராதிப்பவர் (5)
12 முதலும் முடிவும் முனைந்து தொடங்கி தாக்குதல் நடக்குமிடம் (4)
13 மண்டையில் ஏறாதா என்று உணர் அம்மாவா திரும்பியது? (4)


இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம்.

ஸ்டார்ட் மியூஜிக்!

31 comments:

இலவசக்கொத்தனார் said...

வேலை அதிகம். அதனால் பதில் சொல்வதில் தாமதம் ஆகலாம். முன் ஜாமீன் வாங்கிக்கறேன் மக்களே!

Simulation said...

குறுக்கு

14. செம்மறி

Simulation said...

நெடுக்கு

4. சரசம்

இலவசக்கொத்தனார் said...

வாங்க சிமுலேஷன்

அதிசயமா இந்தப்பக்கம்!! :))

14. சரிட்
4. கிட்டத்தட்ட வந்துட்டீங்க

Simulation said...

நெடுக்கு

5. கும்பம்

Simulation said...

நெடுக்கு

15. அந்தாதி

Simulation said...

குறுக்கு

7. மார்கழி

இலவசக்கொத்தனார் said...

சிமுலேஷன்

5, 15 - கொஞ்சம் மாத்தி யோசியுங்க.
7 சரிதான்

G3 said...

அவ்.. ரொம்ப கஷ்டமா இருக்கும் போல இருக்கே..

கண்டுபிடிச்ச வரை :

குறுக்கு

3. சாரங்கம்
7. மார்கழி
14. செம்மறி
15. துவக்க

நெடுக்கு

4. ரசமாக
5. கரகம்

இலவசக்கொத்தனார் said...

வாங்க ஜி3.

போன தபா எல்லாரும் சுளுவாப் போட்டீங்களா? அதான் கொஞ்சம் கஷ்டமாக்கப் பார்த்தேன்.

3 7 14 15

4 5

என போட்டது எல்லாம் சரிதான்!!

G3 said...

குறுக்கு

13. அன்பளிப்பா

நெடுக்கு

13. அறிதாமா
10. பிளிறுவது
11. உபாசகர்

இலவசக்கொத்தனார் said...

ஜி3

13கு 10 11 ஓக்கே

13 நெ சரியில்லை

பூங்கோதை said...

ஒரு நல்ல ஞாயிற்றுக்கிழமை காலைல இப்படி பழி வாங்கிட்டீங்களே..
ஏதொ முடிஞ்சதை போட்டிருக்கேன்.. அப்புறமா வந்து try பண்றேன் .

குறுக்கு
--------
3 வானம்பாடியோ வீழ்த்திடும் வில்லோ (5)
- சாரங்கமோ
6 தலை வகிடெடுத்து நகையோடு பிணைத்துக் கயிலாயம் பார்க்கலாம் (4)
-??
7 நெஞ்சில் கம்பு கொண்டு அடித்த திங்கள்(4)
- மார்கழி
8 கபடமாக யானை கையா எனக் குழம்பியது (6)
- தந்திரமாக
13 இனாமா இடையில்லாப் பயன் கலந்து செய்யுள் தா (6)
- அன்பளிப்பா
14 சிறப்பான தடை தரும் துருவை (4)
- செம்மறி
15 உள்ளிருந்து வந்து வக்கணையாய் ஆரம்பிக்க (4)
- துவங்க
16 யோசித்தால் தானைத்தலைவன் தலை குழப்பி இரு (5)
- நினைத்தால்

நெடுக்கு
-------
1 தோகையில் மறைந்த முடியாத மனது படிப்பதைக் குறிக்கும் (5)
--??
2 திக்கி தலைகீழாய் விழுந்த பிஞ்சை பொறுப்பில் எடுத்து நடத்து (5)
--??
4 சரமாகக் கோர்த்தது சாறாக ஓடியது (4)
- ரசமாக
5 தலை மேல் சுமை ஏற்றி ஆடிடும் ராசி (4)
- கடகம்.
(கும்பம் - clue க்கு பொருத்தமா இருக்கு, ஆனா கட்டத்துக்கு பொருந்தலை.. கரகம், கடகம் - ரெண்டுமே பாதி பாதி clue-க்கு, பொருந்தற மாதிரி, ஒரு confusion, ஏதோ பெரிய மனசு வச்சிப் பார்த்து போட்டு pass பண்ணுங்க)
9 இறந்தவன் பெரும்பாலும் ஊர்க்காவலன் (3)
- மாடன்
10 அத்தி கத்துவது ஆட்கள் கொப்பளிப்பது (5)
- பிளிறுவது
11 முடிவிலாப் பாசம் கொண்ட உலகர் பெரும்பாலும் ஆராதிப்பவர் (5)
- உபாசகர்
12 முதலும் முடிவும் முனைந்து தொடங்கி தாக்குதல் நடக்குமிடம் (4)
- மும்முனை
13 மண்டையில் ஏறாதா என்று உணர் அம்மாவா திரும்பியது? (4)
- அறியாதா

Geetha Sambasivam said...

தீபாவளி பக்ஷணம் பண்ணறதா? கொத்தனாரின் புதிரை விடுவிக்கிறதானு சீட்டுப் போட்டதில் பக்ஷணம் பண்ணறதே சுலபம்னு பதில் வந்திருக்கு! :P:P:P:P:P

இலவசக்கொத்தனார் said...

வாங்க பூங்கோதை!!

3 7 8 13 14 16 - சரி
15 -ஒரு சின்ன தப்பு

4 9 10 11 12 13 - சரி

ரொம்பக் கஷ்டமா இருக்கோ! :)

இலவசக்கொத்தனார் said...

வி ஆர் பாலகிருஷ்ணன் சார்

சூப்பர்!!

எல்லா விடைகளுமே சரி!! அனைத்தையும் சரியாகப் போட்ட முதல் ஆள் நீங்கதான்!!

சிற்றறிவுக்கே இப்படின்னா முழுசா பயன்படுத்தினா நாங்க எல்லாம் என்ன ஆகறது!! :))

போன முறை எளிதாக இருக்கிறது என்பது பரவலான கருத்தாக இருந்ததால் இந்த முறை கொஞ்சம் கடினமாக்கப் பார்த்தேன்.

மீண்டும் வாழ்த்துகள்!!

பூங்கோதை said...

ஆமாங்க ரொம்ப கஷ்டமா .. ஆனா ரொம்ப ரொம்ப நல்லா இருந்துச்சு

குறுக்கு
-------
6 தலை வகிடெடுத்து நகையோடு பிணைத்துக் கயிலாயம் பார்க்கலாம் (4)
- சிவகிரி
15 உள்ளிருந்து வந்து வக்கணையாய் ஆரம்பிக்க (4)
- துவக்க

நெடுக்கு
--------
1 தோகையில் மறைந்த முடியாத மனது படிப்பதைக் குறிக்கும் (5)
- வாசித்தல்
2 திக்கி தலைகீழாய் விழுந்த பிஞ்சை பொறுப்பில் எடுத்து நடத்து (5)
- வகித்திடு

இலவசக்கொத்தனார் said...

வாங்க பூங்கோதை

6 15
1 2

நாலுமே சரி!!

பூங்கோதை said...

oh!! 5 நெ தப்புன்னு சொன்னீங்களா?
2nd attempt allowed- ஆ?

5. தலை மேல் சுமை ஏற்றி ஆடிடும் ராசி (4)

- கரகம்.

இலவசக்கொத்தனார் said...

பூங்கோதை

5 - இப்போ ஓக்கே!

Anonymous said...

இது கொஞ்சம் கடினமாத்தான் இருக்கு . முயற்சி செய்யறேன்.

Anonymous said...

குறுக்கு

3. சாரங்கம்
7.மார்கழி
14. செம்மறி

நெடுக்கு

4.ரசமாலை
5. கடகம்

ambi said...

3)காண்டீபம்
5) கும்பம்

ரெண்டு சொல்லியாச்சு இல்ல, ஒரு பானை சோத்துக்கு ரெண்டு சோறு பதம்னு கருதி.... :))

இலவசக்கொத்தனார் said...

வாங்க சின்ன அம்மிணி

3 7 14

4 5 - சரி இல்லை

இலவசக்கொத்தனார் said...

அம்பி

ஒரு பானை சோத்துக்கு ரெண்டு சோறு பதமுன்னு போட்டு இருக்கீங்க. எடுத்த ரெண்டும் வேகவே இல்லையே!!

ரெண்டும் தப்பு. இன்னும் கொஞ்சம் வேக வையுங்க!!

இலவசக்கொத்தனார் said...

லக்ஷ்மி ஷங்கர்

உங்கள் விடைகள் அனைத்தும் சரியே. வாழ்த்துகள்!!

அரசு said...

வணக்கம் கொத்ஸ்.

குறுக்கு

3. சாரங்கமோ
6. சிவகிரி
7. மார்கழி
8. தந்திரமாக
13. அன்பளிப்பா
14. செம்மறி
15. துவக்க
16. நினைத்தால்

நெடுக்கு

1. வாசித்தால்
2. வகித்திடு
4. ரசமாக
5. கரகம்
9. மாடன்
10. பிளிறுவது
11. உபாசகர்
12. மும்முனை
13. அறியாதா

-அரசு

ச.சங்கர் said...

5 மே-கி ---கடகம்
7 இ வ-----மார்கழி

Raaj said...

Can't find out how to type in Tamil. Some answers:
3A not solved yet
6A not solved yet
7A Margazhi
8A Thandhiramaga
13A not solved yet
14A not solved yet
15A thuvakka
16A not sure (Ninaithaal?)
1D not solved yet
2D Vagiththidu
4D Rasamaga
5D Kadagam
9D Maayan
10D not solved yet
11D Mummunai
13D not sure (Puriyadhaa?)
Hope to improve when tackling Nov. puzzle.
-Rajagopalan

சதிஸ் said...

கொத்தனாரே...

சும்மா ஒரு பேச்சுக்கு ஈசியா இருந்ததுன்னு சொன்னத்துக்காக இப்படியா...

இந்தாங்க என்னோட விடைகள்

குறுக்கு:
3. சாரங்கம்
6. ...
7. மார்கழி
8. ...
13. அன்பளிப்பா
14. செம்மறி
15. துவக்க
16. நினைத்தால்

நெடுக்கு:
1. ...
2. ...
4. ரசமாக
5. கடகம்
9. ...
10. பிளிருவது
11. உபாசகர்
12. செம்முனை
13. அறியாதா

மிச்சத்தை ரொம்ப யோசிச்சு அப்புறமா.. சொல்லுறேன்..

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

வல்லிசிம்ஹன் said...

கொத்ஸ், பங்கெடுத்துக்க முடியாமப் போயிடுத்து.