இப்பொழுது இந்த நண்பர்கள் குழாமில் புதிதாக அறிமுகம் ஆகி இருக்கும் நபர்தான் ராஜ் படேல். மாறி வரும் அமெரிக்க சமுதாயத்தில் இந்தியர்களின் பங்கினை பறைசாற்றும் விதமாகவே இம்மாற்றம் நிகழ்ந்துள்ளது. ராஜின் தந்தை ஒரு மருத்துவராகவும், அவனது தாயார் ஒரு விஞ்ஞானியாகவும், அவனது தமக்கை நம்மூர் சொல்லாடலில் டபுள் பிரமோஷன் பெறும் அளவு புத்திசாலியாகவும் காண்பிக்கப் படுகிறார்கள். ராஜுக்கு ஸ்கேட்டிங் செய்வதிலும், சினிமா எடுப்பதிலும்தான் ஆசை. எங்கு சென்றாலும் விடியோ காமிராவுடன் அலைவது போன்ற பாத்திரப் படைப்பு!

ராஜ் படேல் தொடர்ந்து வரும் ஒரு பாத்திரமா அல்லது சில இதழ்களுடன் விடைபெற்று விடுவானா என்பது ஆர்ச்சி காமிக்ஸ் ரசிகர்கள் இடையே உலா வரும் கேள்வி. ஹாரி பாட்டர் புத்தகங்களில் கூட பார்வதி, பத்மா என்ற சகோதரிகள் வந்தாலும் அவர்களுக்குப் பெரும் அளவில் பாத்திர படைப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் இந்தியர்கள் எங்கும் வியாபித்து வருவதை காண்பிக்க இப்படி ஒரு பாத்திரத்தை உருவாக்கிய ஆர்ச்சி காமிக்ஸ் நிறுவனத்தாருக்கு நமது பாராட்டுக்கள். மேல் விபரங்களுக்கு இந்தச் சுட்டியைப் பாருங்கள்.