Showing posts with label Indibloggies. Show all posts
Showing posts with label Indibloggies. Show all posts

Thursday, February 22, 2007

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ....

என்னவென்று சொல்வதம்மா இன்று வந்த செய்திதனை..

செய்தியைக் கேட்ட உடனே எம்புட்டு சந்தோஷமா இருக்கு. கையும் ஓடலை காலும் ஓடலை அப்படின்னு சொல்ல வந்த கை எப்படிடா ஓடுமுன்னு ஒரு டெவில் ஷோ நடத்துவீங்களோன்னு பயமா இருக்கு. அதனால அதைச் சொல்லலை.

ஆனா செய்தியைக் கேட்ட உடனே சும்மா இருக்க முடியுதா? அதான் இல்லை. வீட்டு சோபாவில் துள்ளிக் குதிச்சதைப் பார்த்து தங்கமணி டென்சனானதுதான் மிச்சம். அதுவும் வாயெல்லாம் பல்லா இருக்கா, விஷயத்தைச் சொல்லாம ஆடுறானேன்னு ஒரே கடுப்பு. என்னது?, உங்களுக்கும் அதே கடுப்புதானா? விஷயத்தைச் சொல்லணுமா? சரி சொல்லறேன்.

இண்டிபிளாக்கீஸ் தேர்தல் முடிவு வந்திருச்சுங்க!

நம்ம ஆளு, விக்கி சகோதரர், நகைச்சுவை மன்னர், நக்கல் நாயகன் பினாத்தலார் 2006ன் சிறப்பான பதிவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். வெற்றி பெற்ற நம்மவர் அண்ணன் பினாத்தலார் அவர்களுக்கு அனைவரும் ஒரு பெரிய ஓ! போடுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.


(ஏன் மஞ்ச கலரா? அதான்ய்யா ஆளுங்கட்சி கலரு, அதான். இதே வேற சமயமா இருந்த பச்சையா போட்டு இருக்க மாட்டோம்.)

அதுவும் வெற்றின்னா வெற்றி, சாதாரண வெற்றி இல்லைங்க. மகத்தான வெற்றி. அவரது வெற்றிக்கு காரணமாய் இருந்த நம் சக வலைப்பதிவர்கள் அனைவரும் என் நன்றிகள். உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட அளவு பின்னூட்டங்கள் விரைவில் வந்து சேர ஏற்பாடு செய்யப்படும். பினாத்தலார் பதவி ஏற்றுக்கொண்ட உடன் இடும் முதல் கையெழுத்து பின்னூட்ட போலீஸ்துறையை கலைப்பதாகத்தான் இருக்கும். ஆகவே இனி பின்னூட்டங்களுக்குப் பஞ்சமே இருக்காது!

இந்நேரத்தில் வெறும் ரீமேக் செய்ததற்கே இப்படி எல்லாம் பட்டம் கிடைக்கையில் நீர் சொந்தமாக எழுதினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற பாசிச பேச்சுகள் எதையும் பேசி அண்ணன் அவர்கள் மூடை அவுட் ஆக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அதிகார பூர்வ அறிவிப்பில் கள்ள ஓட்டுக்களை கண்டுபிடித்து நீக்கிவிட்டதாகச் சொல்லி இருக்கிறார்கள். அது கண்டுபிடிக்க முடியாத வகையில் கள்ள ஓட்டுக்களைப் போட்டு கழக பலத்தை காட்டிய கண்மணிகளுக்கு என் நன்றி. நல்ல வோட்டு மட்டுமே போட்ட பொதுஜனங்களுக்கும் எனது நன்றி. (கூட ரெண்டு வோட்டு போட்டு இருந்தா குறைஞ்சா போவீங்க?). பினாத்தலாரின் பெருவெற்றிக்கு அயராது உழைத்த அனைவருக்கும் என் நன்றியைக் கூறி அண்ணன் அவர்களுக்கு மீண்டும் எனது வாழ்த்துக்களைக் கூறி இப்பதிவை முடித்துக் கொள்கிறேன். நன்றி! வணக்கம்!



இண்டிபிளாக்கின் அதிகார பூர்வ முடிவறிவிப்பு

அண்ணன் வாங்கிய வாக்கு விபரங்கள்

Thursday, February 15, 2007

இரு தலை கொள்ளி எறும்பு

இப்படி என் நிலமை ஆகுமுன்னு எதிர்பார்க்கவே இல்லையே. எந்த விஷயமா இருந்தாலும், என்னதான் நடுநிலமைவியாதி (நன்றி: யாருக்குன்னு உங்களுக்கே தெரியும்) வேஷம் போட்டாலும், உள்ளுக்குள்ள நம்ம வோட்டு எந்தப் பக்கமுன்னு சரியாத் தெரியுமே. ஆனா இன்னைக்கு நம்மளை இப்படித் தொங்க விட்டுட்டாங்களே! மேட்டர் என்னான்னு கேட்கறீங்களா? எல்லாம் இந்த பாழாப்போன இண்டிபிளாக்கீஸ் தேர்தல்தாங்க.

எப்பவும் தேர்தல்ன்னு வந்தா நம்ம வோட்டு யாருக்குன்னு எளிதா முடிவு பண்ணிட்டு, தேர்தல் நாளன்று வோட்டு போட முடியாமல் எங்கயாவது வெளியூரில் ஆணி புடுங்குறதுதானே நம்ம வழக்கம். ஆனா இந்த முறை பாருங்க அந்த மாதிரி ஒரு முடிவுக்கு வர முடியாதபடி தவிக்க விட்டுட்டாங்களே. போதுமய்யா புலம்பல், மேட்டருக்கு வான்னு சொல்லறீங்களா? இருங்க வரேன்.

இந்த இண்டிபிளாக்கீஸ் இருக்காங்களே, இவங்களுக்கு வேற வேலையே இல்லை. வருஷா வருஷம் சிறந்த பதிவுகள் அப்படின்னு சில பதிவுகளைத் தேர்வு செய்து அவங்களுக்கு பரிசெல்லாம் குடுத்து அவங்களைக் குட்டிச்சுவராக்கறதே வேலையாப் போச்சு. அதுல பல பிரிவுகள் வேற. நமக்குத் தமிழ்மணத்தை விட்டு வேற என்ன தெரியும்? அதுனால இந்த தேர்தலை எல்லாம் சாய்ஸில் விட்டு வேடிக்கைப் பார்க்கலாம்ன்னு நினைத்தால் சிறந்த தமிழ்ப் பதிவு அப்படின்னு ஒரு பிரிவை வெச்சுத் தொலச்சுட்டாங்க. 24 மணி நேரமும் தமிழ்மணத்தில் குடியிருக்கற நாம இந்த தேர்தலில் பங்கேற்று ஓட்டுப் போடாம யாரு போடப்போறாங்கன்னு உள்ள போயி பார்த்தா அங்கதான் நமக்கு அதிர்ச்சி.

ஆமாங்க, நம்ம பசங்களோட பசங்களா, விக்கி பசங்களா இருக்கிற ரெண்டு பசங்களை இந்த தேர்தலில் மோத விட்டு இருக்காங்க, இந்த பாழாப் போன இண்டிபிளாக்கீஸ். அதுவும் ரெண்டு பேரும் நமக்கு ரொம்பவே நெருக்கமான, வேண்டியப்பட்ட பசங்க. அது மட்டும் இல்லாம நம்ம ப.ம.க.வில் வேற ரெண்டு பேரும் பெரும் தலைங்க. இப்போ நான் யாருக்குன்னு வோட்டு போட? அதான் என்ன பண்ணினேன், இவருக்கு ரெண்டு வோட்டு, அவருக்கு ரெண்டு வோட்டுன்னு பிரிச்சுப் போட்டு இருக்கேன். என்ன பண்ண, நம்ம நிலமை அக்னி நட்சத்திரம் விஜயகுமார் மாதிரி ஆகிப் போச்சே!

என்னது யாரு அந்த ரெண்டு பேரா? சரியாப் போச்சு. நம்ம பெனாத்தலாரும், ரஷ்ய மருத்துவர் ராமநாதனும்தாங்க அவங்க. நீங்களும் என்ன பண்ணுங்க, இவருக்கு ஒரு வோட்டு, அவருக்கு ஒரு வோட்டுன்னு ஒண்ணுக்கு ரெண்டா ஓட்டு போட்டு நம்ம ஆளுங்களை பெருவாரியான வோட்டு வித்தியாசத்தில் ஜெயிக்க வையுங்க.

வோட்டு போடறது எல்லாம் ரொம்ப சிம்பிளுங்க. வோட்டுக்கு ஒரு மெயில் ஐடி வீதம் ரெண்டு மெயில் ஐடி வேணும். அதை வெச்சுக்கிட்டு இந்த தளத்துக்குப் போங்க. போயி உங்க மெயில் ஐடியைக் குடுத்தீங்கன்னா அந்த மெயில் ஐடிக்கு ஒரு மெயில் வரும். அதில் ஒரு சுட்டி இருக்கும். அதை சொடுக்கி வோட்டிடும் பக்கத்திற்குப் போங்க. அங்க இரண்டாவது பக்கத்தில் indic blog (tamil) என்ற பிரிவு இருக்கும். அங்க போயி Theriyala என்ற தளத்திற்கு ஒரு வோட்டும், Penathals என்ற தளத்திற்கு ஒரு வோட்டும் போடுங்க.

ஞாபகம் இருக்கட்டும் ஒரு மெயில் ஐடிக்கு ஒரு வோட்டுதான். அதனால இவங்க ரெண்டு பேருக்கும் வோட்டு போட ரெண்டு ஐடி வேணும். எனக்கு ரெண்டு ஐடி இல்லை அப்படின்னு பொய் சொல்ல நினைக்காதீங்க, அப்படி இல்லைன்னு சொன்னா நம்ம கிட்ட சொல்லுங்க இலவசமா ஒரு ஜிமெயில் ஐடி தரேன்!

போடுங்கய்யா வோட்டு, விக்கி பசங்கள பாத்து!
போடுங்கம்மா வோட்டு, விக்கி பசங்கள பாத்து!