Wednesday, January 11, 2006

இலவசகொத்தனாரியல் - பாகம்1

பதிவுக்கு இலவசம்ன்னு பேரை வச்சாச்சு. (இந்த பெயர் இதுவரை முன்பதிவு செய்யப்படாததே ஒரு சின்ன ஆச்சரியம்தான்.) மக்களை கவர அப்படின்னு சாக்கு போக்கு சொல்லியாச்சு. அதென்னய்யா இலவசகொத்தனாருன்னு உனக்கு பேரு அப்படீன்னு யாருமே கேக்கலையேன்னு நெனைச்சேன். நம்ம கைப்புள்ள வந்து கேட்டுப்புட்டாரு. ரொம்ப டாங்ஸுங்கோவ். (இதை வைத்து ஒரு பதிவு ஓட்டிவிடலாமே.ஹிஹி.) பாவம் விக்கிபீடியாவாண்டை எல்லாம் போயிக்கினு வந்திருக்காரு. நம்மளாண்டை கேட்டிருந்தா இன்னான்னு சொல்லாதியா இருப்பேன்.

இலவசம் அப்படீன்னு ஒரு தளம். அதை கட்டற ஆளு நானு. அதனாலத்தேன் நான் இலவசகொத்தனாரு. ஆங்கிலத்துல freemason அப்படீன்னு ஒரு பதம் இருக்கறது தெரியும். விவகாரமா ஒண்ணும் இல்லையேனு பாத்துட்டு அதையே பேரா போடுக்கிட்டேன். அவ்வளவுதான். இப்போ இவரு எங்க எங்கயோ போயி படிச்சுட்டு வந்துட்டாரு. அதனால இந்த பெயரை இன்னும் நியாயபடித்தவேண்டிய நிலைக்கு நம்மளை தள்ளிட்டாரே. சரி.

இலவசகொத்தனாரியல் - அட அதாங்க freemasonry - அப்படீன்னா என்னான்னும் பார்த்துட்டு அது நமக்கு எப்படி சரியாகுதுன்னு ஒரு கதை விட்டுருவோம்.

Freemasonry என்றால் என்ன?

இது சகோதரத்துவத்தை முன்னிறுத்தி செயல்படும் ஒரு ரகசிய கூட்டமைப்பு. (கைப்புள்ள, நம்மளைப்போய் இப்படியெல்லாம் எழுத வெச்சுட்டீங்களே. இப்போ திருப்திதானே.) இதன் துவக்கத்தை பற்றி அதிகம் தெரியவில்லை. 18-ம் நூற்றாண்டையொட்டி இங்கிலாந்தில் முறைபடுத்தபட்ட இயக்கம்.

பெரும்பாலும் கட்டிடக்கலை நிபுணர்களால் தொடங்கப்பட்டதாகவே ஒத்துக்கொள்ளபடுகிறது. மன்னர் சாலமனின் கோயிலை கட்டியவர்களால் தொடங்கப்பட்டது என்பது ஒரு ஐதீகம். இதன் ரகசிய நடவடிக்கைகளால் அச்சத்தையும் சந்தேகத்தையும் சம்பாதித்த ஒர் இயக்கம். அதானால், திரைகளை விலக்கி தங்கள் நடவடிக்கைகளை வெளிக்கொணர முயல்கிறது இவ்வியக்கத்தின் ஒரு பகுதி. 'சகோதரத்துவம், உண்மை, உதவி' - இதுதான் இவர்களின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு.

அமைப்பு
இதன் அடிப்படை அமைப்பு Lodge எனப்படும். Lodge-ன்னா நம்ம போலீஸ்காரங்க அடிக்கடி ரெய்டெல்லாம் போவாங்களே, அது இல்லை. இவர்களின் ஒரு குழுமமே அப்படி அழைக்கப்படுகிறது. இவர்கள் எங்கு வேணுமானாலும் சந்திக்கலாம், லாட்ஜ் உள்பட. இவ்வாறு கூடும் இடத்தை கோயில் என்பர். இப்பொழுது இது சற்றே மாறி ஹால் என்றும் அழைக்கப்படுகிறது. லண்டனில் உள்ள Freemasons Hall மிக பிரச்சித்தம். ஒரு நாட்டில் இருக்கும் லாட்ஜுகளை ஒருங்கிணைப்பது Grand Lodge. இது பொது விதி. இங்கு அமெரிக்காவில் பார்த்தீர்களானால் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு கிராண்ட் லாட்ஜ் உண்டு. ஒவ்வொரு லாட்ஜும் தனக்கேயுள்ள விதிமுறைகளை பின்பற்றியே செயல்படுகிறது. லாட்ஜுக்கும், கிராண்ட் லாட்ஜுக்கும் தலைவர், உப தலைவர் போன்ற பதவிகளெல்லாமுண்டு.

ஒவ்வோரு லாட்ஜின் விதிமுறைகள் வித்தியாசப்படலாம். இவைகளுக்கு பங்காளி லாட்ஜுகள், பகையாளி லாட்ஜுகள் எல்லாமுண்டு. ஒரு லாட்ஜின் உறுப்பினர், அதன் பங்காளி லாட்ஜின் கூட்டத்திற்கு செல்லமுடியும். ஒரு லாட்ஜ், தனது பகையாளி லாட்ஜின் இருப்பையே ஒத்துக்கொள்ளாது.

இங்கும் நம் காங்கிரஸைப்போல பல கோஷ்டிகள் உண்டு. இங்கிலாந்து பாரம்பரியத்தை சார்ந்த அல்லது கண்ட ஐரோப்பிய பாரம்பரியத்தை சார்ந்த பிரிவுகள் (anglo-saxon vs continental european), நவீன கோட்பாட்டையோ சம்பிரதாய கோட்பாட்டையோ சார்ந்திருப்பவர்கள் (moderns vs ancients) என்றெல்லாம் பல பிரிவுகள்.

---------------------------------------------------------------------------------
பதிவு கொஞ்சம் பெருசா போச்சு. அதானால் ரெண்டு பாகமாய் பிரிச்சிருக்கேன். யார் உறுப்பினராகலாம், நமக்கு தெரிந்தவர்களில் யார் யார் உறுப்பினர் போன்றவையெல்லாம் அடுத்த பகுதியில். இன்றைய இலவசமும் அடுத்த பகுதியை படித்தால்தான்.

9 comments:

said...

பின்னூட்டமே இல்லாமல் உம் பதிவா????

said...

ச்சே.. இலவசக்கொத்தனார் பதிவுக்கு ஒரே ஒரு பின்னூட்டம் தானா?

அதான் இது...

said...

//பின்னூட்டமே இல்லாமல் உம் பதிவா???? //

அதானே!
என்ன கொடுமை சரவணன்!!

துர்கா...
கும்மி பற்றிக் கேட்டீங்களே! இங்க கொஞ்சம் வரக்கூடாதா?

said...

மக்கள்களா, ஒரு வருஷத்துக்கு முன்னாடி போட்ட பதிவுக்கெல்லாம் பிக பண்ணாதீங்கப்பா. ஏற்கனவே நம்மளை ஒரு மாதிரி பாக்கறாங்க. ஹிஹி...

said...

அதனாலத்தேன் நான் இலவசகொத்தனாரு. //

ஓஓஓஓஓஓஓ... இதானா... நா என்னவோ நெனச்சேன்.:-)

said...

//ஓஓஓஓஓஓஓ... இதானா... நா என்னவோ நெனச்சேன்.:-)//

ஐயா, நீங்க என்ன நினைச்சீங்க? என்னை வெச்சு காமெடி எதுவும் பண்ணலையே.... ஹிஹிஹி.... :))

said...

எப்படி இதைக் கோட்டை விட்டேன்னு தெரியலையே......

ஊருலே இருந்துருக்க மாட்டேன்....

said...

அப்போ எல்லாம் என் இருப்பிடமே உங்களுக்குத் தெரியாது!! இதுக்கு அடுத்து வந்த பதிவில்தான் உங்கள் முதல் வருகையே!! :)

said...

Detailed explanation !