Thursday, January 12, 2006

இலவசகொத்தனாரியல் - பாகம்2

இலவசகொத்தனாரியல் - பாகம்2

முதலில் இதைப்படியுங்களேன் - பாகம் 1

உறுப்பினர்
உறுப்பினராக விரும்புபவர் விண்ணப்பம் செய்து காத்திருக்க வேண்டியதுதான். லாட்ஜின் உறுப்பினர்கள் அதனை பரிசீலித்து அவரை சேர்த்துக்கொள்வதா என முடிவு செய்வார்கள். சேரும்பொழுது உறுதிமொழி, பல்வேறு சம்பிரதாயங்கள், தனிச்சின்னங்கள், சமிக்ஞைகள் (signs. படிக்கும் பொழுது இந்த வார்த்தையை உபயோகிப்பேன் என நினைத்ததேயில்லை. எழுத்துப்பிழை இல்லையே.) என்று பல சட்டதிட்டங்களும் உண்டு. மூன்று வகையான உறுப்பினர்கள் உண்டு. முதற்கட்ட உறுப்பினராய் சேர்ந்தபின் தனது தாய் லாட்ஜில் படித்து பட்டம் பெற்றே இரண்டாம், மூன்றாம் நிலையை அடைய முடியும். மூன்றாம் நிலை உறுப்பினராலேயே பங்காளி லாட்ஜுகளுக்கெல்லாம் செல்லமுடியும்.

யாரால் உறுப்பினராக முடியும்? இந்த பட்டியலைப் பாருங்கள்.

1.அவரின் சொந்த விருப்போடு வரவேண்டும்.
2.எல்லாம் வல்ல ஒரு சக்தி இருக்கிறது என்ற நம்பிக்கை வேண்டும்.
அவர்கள் எந்த மதத்தினராகவும் இருக்கலாம். ஆனால் இந்த நம்பிக்கை
அவசியம். கடவுள் நம்பிக்கை இல்லையென்றாலும் பரவாயில்லை.
3.குறைந்தபட்ச வயதினை அடைந்திருக்க வேண்டும். பெரும்பாலும் 21.
4.நல்ல உடல், மன நலத்துடன், நற்பெயருடன் இருத்தல் அவசியம்.
5.சுதந்திரமாய் இருக்க வேண்டும். அடிமையாய் இருக்க கூடாது.

பாரம்பரியமாக இதில் பெண்களை சேர்த்துக்கொள்வது இல்லை. ஆயினும் சில பெண்கள் உறுப்பினராக இருந்திருக்கின்றனர். இப்பொழுது பெண்களுக்கான தனி லாட்ஜுகளும் இருக்கின்றன.

சர்ச்சைகள்

வரலாற்றில் இவர்களின் இடம் சர்ச்சைக்குறியதாகவே இருக்கிறது. இவர்களின் ரகசிய நடவடிக்கைகளே இதற்கு காரணம். பல்வேறு கட்டங்களில் இவர்கள் கிருத்துவதிற்கு எதிராக போதிக்கின்றனர் என்றும், அப்பொழுது இருந்த ஆட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்றும் குற்றச்சாட்டுகள் இருந்துகொண்டே இருந்தன. இவர்களின் ரகசியத்தை சொல்ல முற்படுகின்றவர்களை கொன்றுவிடுகின்றனர் என்றும் சாத்தானையும் துர்தேவதைகளையும் வழிபடுகின்றனர் என்றும் கூட குற்றச்சாட்டுகள் உண்டு. இது போன்ற குற்றச்சாட்டுகளை இவர்கள் மறுத்தே வந்திருக்கின்றனர்.

இதற்கு மேல் இதைப்பற்றி எழுத விரும்பவில்லை. இன்றைக்கு வலையுலகில், இந்த சர்ச்சைகளை பற்றி கூகிளீர்களானல் பல்லாயிரக்கணக்கான வலைத்தளங்கள் கிடைக்கும். இவைகளில் இவ்வியக்கதை ஆதரித்தும் எதிர்த்தும் இருக்கும் வலைத்தளங்களின் எண்ணிக்கை சமமாகவே இருக்கும்.

நமக்கு தெரிந்த கொத்தனார்கள்

(பல்வேறு வலைத்தளங்களிலிருந்து தொகுத்தது. )

எழுத்தாளர்கள் - பைரன், ஆர்தர் கானன் டாயல், ராபர்ட் பேர்ன்ஸ், அலெக்ஸாண்டர் போப், வால்டர் ஸ்காட், ஜொனாதன் ஸ்ப்பிப்ட், ஆஸ்கர் வைல்ட், பி ஜி வேட்ஹௌஸ் என்று பலர்

ஜார்ஜ் வாஷிங்டனில் தொடங்கி கிட்டத்தட்ட 15 அமெரிக்க குடியரசு தலைவர்கள்

ஹென்றி போர்ட், சார்லஸ் ஹில்டன், வால்டர் கிரைஸ்லர், தாமஸ் லிப்டன், ஆண்ட்ரூ மெல்லான் போன்ற தொழிலதிபர்கள்

தனியாளாக விமானத்தில் கண்டம் விட்டு கண்டம் சென்ற சார்லஸ் லிண்ட்பெர்க்

துருவங்களில் சாகசம் புரிந்த ராபெர்ட் பியரி, ரோஆல்ட் அமுண்ஸன்

பீத்தோவன், ஹேடின், மோஸார்ட் போன்ற மேற்கத்திய பாரம்பரிய இசை வல்லுனர்கள்

லூயிஸ் ஆர்ம்ஸ்டராங், நாட் கிங் கோல் போன்ற தற்காலத்திய இசைக் கலைஞர்கள்

கிளார்க் கேபிள், ஜான் வெயின், டக்ளஸ் பேர்பாங்ஸ் போன்ற ஹாலிவுட் நடிகர்கள்

தற்காலத்திய விளையாட்டு வீரர்களான அர்னால்ட் பால்மர் (கால்ப்), ஸ்காட்டி பிப்பன் (கூடைப்பந்து)

சிங்கையின் தாமஸ் ராப்பிள்ஸ்

தென்னமெரிக்கர் டெஸ்மாண்ட் டுட்டு
இந்தியாவை பற்றி அதிகம் எழுதியுள்ள ருட்யார்ட் கிப்ளிங்
அன்னி பெசண்ட் அம்மையார்

மோதிலால் நேரு
ஸ்வாமி விவேகாநந்தர்
டி.ன்.டாட்டா
குடியரசு தலைவர்கள் - இரஜேந்திரபிரசாத், இராதாகிருஷ்ணன், பக்குரிதீன் அலி அஹமது
இராஜாஜி
சி.பி.இராமசாமி ஐயர்
மன்சூர் அலி கான் பட்டோடி
மாதவராவ் சிந்தியா
இன்னும் பல மகராஜாக்கள், நீதிபதிகள் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

Dan Brown-ன் Angels and Demons மற்றும் Da Vinci Code நாவல்களில் இவர்களது செயல்பாடுகளின் தாக்கம் அதிகமுள்ளது. இவரது அடுத்த புத்தகம் இவ்வியக்கத்தை பற்றிதான் என்று கேள்வி.

சென்னையிலே சுமார் 20 லாட்ஜுகள் இருப்பதாக கேள்வி.

10 comments:

said...

:> interesting ;)

said...

பாஸ்டன் பாலா - ரொம்ப நன்றிங்கோ.
ஆனா கண்ணடிக்கிறத பாத்தா கொஞ்சம் காலை வார முடிவு செஞ்சாமதிரியில்லாயிருக்கு. ஆத்தாடி, இவிங்க என்ன சொல்ல வராங்கன்னே தெரியலையே. ஒரே ஒரு வார்த்தையை போட்டுபிட்டு நம்மளைய்ய இந்த மாதிரி புலம்பவிட்டுடாரே...அய்யா...

said...

Kothanar Sir,
En vaarthaikku madhippu koduthu "Freemasonry" pathi ezhudhunadukku romba nanri. Verum 'elavasam'mattum themena elavasa soap, elavasa seeppu, rendoda onnu elavasam appadi edhavadhunu blogukku peru vechirukkalam. Elavasathukkum kothanarukkum ennanga sambandham? When I commented on your blog I firmly believed that you were part of this Freemasonry association or atleast influenced by their ideals to some extent and hence you chose the name. Ennoda vaarthaiku mattume madhippu koduthu translate panni irundheenganna...my special thanks to you...really Kaipullai is sailing on the clouds. Padhivu nalla irundhuchu...really informative.

said...

Informative. thanks

Another conspiracy theory from Dan!!!

said...

கைப்புள்ள, அவர்களின் கொள்கைகளில் ஒன்று - 'To make good men better'. நாமும் தெரியாததை தெரிந்து, படித்ததை பகிர்ந்து கொள்ளவே இந்த வலைப்பூ. மற்றபடி நமக்கும் அவர்களுக்கும் வேறெந்த தொடர்பும் இல்லை.

நன்றி நிலா. அடிக்கடி வந்து போங்க.

said...

இலவச கொத்தனார்,
கொஞ்சம் கொத்து வேலையெல்லாம் விட்டுப்புட்டு இப்படி வாங்க. பொங்கலுக்கு அடுப்பு வைக்கனும்.

பொங்கல் வாழ்த்துகள்.
நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியும் அன்பும் பொங்கல் போல் பொங்கட்டும்.

அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா

said...

ஓஹோ, இப்படித்தான் சரித்திரங்கள் படைக்கப் படுகின்றனவோ?
:-))))

said...

வல்லியம்மா, இதெல்லாம் மட்டும் இருந்தா போதுமா? உங்களை மாதிரி பெரியவங்க ஆசீர்வாதமும் வேணுமே!

said...

என்ன....சென்னையில் லாட்ஜ் இருக்கா??????


பெண்களைச் சேர்த்துக்கலேன்னா அந்த நெக்லேஸ்களை யார் போட்டுக்குவாங்க?

(பாடத்தைப் படிச்சேன் என்பதற்கான பின்னூட்டம் இது)

said...

ரீச்சர், சென்னையில் 20 லாட்ஜுகளுக்கு மேல் இருக்காம். எம்புட்டு சைலண்டா இருக்காங்க பாருங்க!!

அப்புறம் பெண்களைச் சேர்த்துக் கொள்ளாததினால்தான் உங்க பதிவில் நீங்கள் நகைகள் பற்றி எழுதி இருக்கும் விமர்சனங்கள் வந்துள்ளன என நம்புகிறேன்! :)