Thursday, May 25, 2006

தமிழ்மணத் தாக்கமும் கவிப்பூ திறனாய்வும்

கால்கரி பயணம் பற்றிய முதல் பதிவு

நாங்கள் உணவருந்தச் சென்ற இடம் கால்கரியில் உள்ள மைசூர் பாலஸ் என்ற உணவு விடுதி. உள்ளே சென்று அமர்ந்ததும் அவர்கள் தந்த உணவுப் பட்டியலில் அவர்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பு இருந்தது. அதில் முதல் வரி - "Welcome to Mysore Palace, the South Indian Chettinadu restaurant".



வித்தியாசமானதொரு கூட்டணியாகத் தெரிகிறதா? சற்றே சிந்தித்தால் கூட்டணி என்றவுடன் நினைவுக்கு வருவது அரசியல்தான். அதிலும் மைசூர் என்றவுடன் நினைவுக்கு வருபவர் யாரென்று தெரியாதா? அதே போல் செட்டிநாட்டின் அரசியல் முகம் நமது நிதியமைச்சர்தானே. சரிதான். மற்ற கட்சிகளும் இருக்கிறதா எனப் பார்த்தால் அங்கு உதயசூரியனுக்கு இடமே இல்லை. அவர்கள்தான் இல்லை தமிழ்க்குடிதாங்கி அவர்களின் சின்னமாம் மாம்பழமாவது இருக்கிறதா எனப் பரிமாறுபவரை அழைத்துக் கேட்டால் அதுவும் இல்லை. ஆக முன்னேறிய வருக்கமான பார்ப்பனர்களும் செட்டியார்களும் இடம் பெற்று இருக்கும் அந்த விடுதியிலே ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு இட ஒதுக்கீடு இல்லாமல் போனதேன்? இது அம்மக்களுக்கு எதிரான திட்டமிட்ட சதியல்லவா? இச்சதிக்கு துணை போகும் அவ்விடுதியின் உரிமையாளர்களுக்கு என்ன முத்திரை குத்த வேண்டுமென நமக்குத் தெரியாதா?

ஒண்ணுமில்லைங்க. இப்போ வரும் தமிழ்மணப் பதிவுகள் எல்லாம் படிச்சு, இப்படித்தான் யோசிக்கத் தோணுது. நான் மாம்பழம் இருக்கான்னு கேட்ட போது என்னை ஒரு மாதிரி பார்த்த சிவா, நான் ஏன் கேட்டேன் என விளக்கியதும் பார்த்த பார்வை இருக்கிறதே. செம காமெடி போங்க. உண்மையை சொல்லுங்க, மைசூர் அரண்மனை என பெயர் வைத்துக் கொண்டு செட்டிநாடு உணவகம் எனச் சொன்னா நல்லாவா இருக்கு? ஆனா உண்மையாகவே அந்த விடுதி மேல கோபம்தாங்க. பின்ன என்ன, தங்கக்கழுகும் இல்லை, மீன்கொத்தியும் இல்லை. சரி நம்ம சரக்குதான் இல்லை, உள்ளூர் சரக்காவது இருக்கான்னு பார்த்தா அதுவும் இல்லை. கடைசியாக அவங்களே முடிவு செய்து தண்ணீரைப் போல இருக்கும் ஹெய்னிகன் கொண்டு வந்து கொடுத்தார்கள்.

அந்த உணவுப் பட்டியலின் முதல் பக்கத்தைத் தாண்டிச் சென்றால் அடுத்தது Appetizers எனும் துவக்க உணவுகளின் விபரம். அதில் முதலாவதாக இருந்தது கவிப்பூ வறுவல். கவிதை எழுதினால்தான் அதைப் பிய்த்து பொரித்து எடுக்கிறார்கள் என்றால் இங்கு உண்மையாகவே அதனை வறுத்து கொடுக்கிறார்களே என ஆச்சரியப்பட்டு, அது என்ன என விசாரித்தால் அது காலிஃபிளவர் ஃபிரையாம். காலிஃபிளவரருக்கு கவிப்பூ என கவித்துவமான பெயர் சூட்டிய மகான் யாருன்னு தெரியலை. ரொம்ப நேரம் யோசித்துப் பார்த்தால் எங்களுக்கு தமிழில் என்ன சொல்லுவோம் என ஞாபகத்திற்கு வரவில்லை. எனக்கு தெரிந்து பூக்கோஸ் (முட்டைக்கோஸ் போல) எனச் சொல்லித்தான் கேள்விப்பட்டிருக்கேன். ஆக, கால்கரி சென்றதனால் நானும் சிவாண்ணாவும் காலிஃபிளவருக்கு தமிழ் பெயர் அறிந்து கொண்டோம். இதையும் சிவாண்ணா அவர் பதிவில் என் வருகையால் கிடத்த புதையல் லிஸ்டில் சேர்க்க வேண்டும்.



இதற்குப் பின் விசேஷமாக எந்த நிகழ்வும் இல்லாமல் அன்றைய இரவுணவு முடிந்தது. துளசியக்கா, அங்கு ஒரு மிகப்பெரிய யானை சிற்பமொன்று வைத்திருந்தார்கள். பார்த்தவுடன் உங்கள் ஞாபகம்தான் வந்தது! அதை எப்படி கொண்டு வந்திருப்பார்கள் என்பது என் மனைவிக்கு மிகப் பெரிய கேள்வியாய் இருந்தது. அதிகப்பிரசங்கித்தனமாக பதில் ஏதும் சொல்லாததால் என் தலை தப்பியது. அந்தப் படம் உங்களுக்குத் தனி மடலில் அனுப்பறேன்.

அடுத்த நாள், நாங்கள் திட்டமிட்டபடி பான்ஃப் சென்று வந்தோம். அது Rocky Mountains என அழைக்கப்படும் மலைத்தொடரில் இருந்தது. குளிராக இருக்கும், மழை வருமெனவெல்லாம் பயமுறுத்தினார்கள், ஆனால் நாங்கள் சென்ற அன்று வெயில் காய்ந்தது. ஒரு மலை மீது ஏற Gondola எனும் கம்பி வழி செல்லும் இழுவண்டி ஒன்றை அமைத்திருக்கிறார்கள். அதை போன்ற வண்டிகளில் நாங்கள் இந்தியாவிலும் மலம்புழா மற்றும் ஹரித்துவாரில் போய் இருக்கிறோம். குஜராத்திலும் ஒன்று இருப்பதாக கேள்விப்பட்டு இருக்கிறேன். அம்மலையில் Sulphur Springs என அழைக்கப்படும் சுனைகள் இருக்கின்றன. வருடமுழுவதும் அங்கு சூடான நீர் வருமாம். அதில் குளித்தால் உடம்புக்கு நல்லதாம். இங்கு எடுத்த படங்களை வேறொரு நாள் பதிவில் போடுகிறேன். (அதாவது எழுத சரக்கு இல்லாமல் போனா படங்காட்டறேன்!)

மலையிலிருந்து கீழே இறங்கி நேராக சிவாண்ணா வீட்டுக்கு போனோம். அங்க என்ன நடந்தது? ஜிகர்தண்டா கொடுத்தாரா? இதெல்லாம் அடுத்த பதிவில். :)

73 comments:

said...

மைசூர் பேலஸ்னு பேர் வச்சுக்கிட்டு யானை இல்லாம இருந்தா எப்படி?

யானையை உடனே அனுப்புங்கள்.

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் போட்ட முடிச்சுதான்
மைசூர் செட்டினாடு குசீன்:-))))

said...

முதல் பின்னூட்டம் நான் தானே:)

said...

//யானையை உடனே அனுப்புங்கள்.//

அது முடியாதுங்க. படம் மட்டும்தான் முடியும். அதுவும் கைவசம் இல்லை. வீடு திரும்பிய பிந்தான்.

said...

//முதல் பின்னூட்டம் நான் தானே:)//

இல்லையே. எங்க யானை மார்க் டீச்சர் சும்மா பிள்ளையார் மாதிரி அக்கவுண்ட் ஓப்பன் பண்ணிட்டாங்களே!

துளசியக்கா, நீங்கதான் போணி. பதிவு நல்லா போச்சுன்னா உங்களுக்குத்தான் பெருமை. :)

said...

யோவ்!உம்ம மோரக்கட்டையைக் காட்டும்னு சொன்னா எதோ போண்டா படம் போட்டிருக்கீரே?

said...

வலைப் பதிவர்கள் அடிக்கடு சந்தித்துக் கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது.. மைசூர் எழில் வாய்ந்த நகர் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதைப் பற்றி இன்னுமொரு பதிவில் எழுதினாலும் மகிழ்ச்சி..

-குப்புசாமி செல்லமுத்து

said...

//யோவ்!உம்ம மோரக்கட்டையைக் காட்டும்னு சொன்னா எதோ போண்டா படம் போட்டிருக்கீரே?//

அதுக்கு உம்மை மாதிரி அழகாய்யா நானு? படமெல்லாம் போட்டாலும் அந்துமணி மாதிரி கார்டூன் மூஞ்சி ஒட்டிதான் போடணும். :)

said...

//மைசூர் எழில் வாய்ந்த நகர் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.//

வருகைக்கு நன்றி ஐயா. தற்ப்பொழுது புதரகத்தில் (அதாங்க அமெரிக்கா) இருப்பதால் மைசூர் பயணம் நடக்க வாய்ப்பு குறைவு. இந்தியாவில் இருக்கும் பதிவர்கள் போடலாம்.

said...

//:-)//

கும்ஸ்,

இது ஹாட்டிரிக் சிரிப்பான் பின்னூட்டம். எதாவது சொல்லுமய்யா.

said...

கொத்தனாரே, என்ன ஒரே சைவமாச் சாப்டீங்களா?

//வலைப் பதிவர்கள் அடிக்கடு சந்தித்துக் கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது//

நானும் ஒரு வலைப்பதிவரைத் தினமும் சந்திக்றேன். அவர் நம்ம 'அம்மா' புகழ் ஜெயக்குமார்.
அட ஆமாங்க அவரும் நானும் ஒரே வீட்லதாங்க தங்கி இருக்கோம்.

தினம் தினம் நாங்க அடிக்கிற கூத்தையெல்லாம் எழுதினால் கொத்தனார் காணாமப் பூடுவார்.

said...

//கொத்தனாரே, என்ன ஒரே சைவமாச் சாப்டீங்களா?//

அட ஆமாங்க. நான் அசைவம் சாப்பிடறதை நிறுத்தப் பாக்கறேன். கிட்டத்தட்ட நிறுத்தியாச்சு. :) சிவாண்ணாவும், என் பையனும் மட்டும் ஒரு கோழிவறுவல் அடிச்சாங்க.

//அட ஆமாங்க அவரும் நானும் ஒரே வீட்லதாங்க தங்கி இருக்கோம். //

இதெல்லாம் வெளிய சொல்லலாமா? உங்க மேல சந்தேகம் வராதா?;)

//தினம் தினம் நாங்க அடிக்கிற கூத்தையெல்லாம் எழுதினால் கொத்தனார் காணாமப் பூடுவார்.//

அட எழுதுங்க. அதுக்குத்தானே உங்க வலைப்பூ. அதுக்காக என்னை ஏன் காணாமப் போகச் சொல்லறீங்க? நான் பாட்டு ஒரு ஓரமா இருந்துட்டுப் போறேன்.

said...

//அட எழுதுங்க. அதுக்குத்தானே உங்க வலைப்பூ. அதுக்காக என்னை ஏன் காணாமப் போகச் சொல்லறீங்க? நான் பாட்டு ஒரு ஓரமா இருந்துட்டுப் போறேன்.//

அட கோவிச்சுக்கிட்டீங்களே. இல்லீங்க ஒரு ஸ்மைலி போட மறந்து போச்சுங்க.

:))))))


//இதெல்லாம் வெளிய சொல்லலாமா? உங்க மேல சந்தேகம் வராதா?;)//
சந்தேகம் வந்து நமக்காக ஒரு பதிவு யாராச்சும் போட்டா நானும், JK யும் பிரபலாமாயிட மாட்டோமா? :)))))

said...

//அட கோவிச்சுக்கிட்டீங்களே. இல்லீங்க ஒரு ஸ்மைலி போட மறந்து போச்சுங்க.//

நமக்குக் கோவமே வராதுங்க. கவலையேப்படாதீங்க. அப்புறம் அதுக்கு தமிழில் சிரிப்பான் அப்படின்னு பேரு வெச்சாச்சே. அதை கொஞ்சம் உபயோகப் படுத்துங்க.

//சந்தேகம் வந்து நமக்காக ஒரு பதிவு யாராச்சும் போட்டா நானும், JK யும் பிரபலாமாயிட மாட்டோமா? :)))))//

அவரு ஏற்கனவே பிரபலம்தானே! உங்களையும் அவர் லிஸ்டுல சேர்த்திடப் போறாங்களேன்னு சொன்னேன்.

said...

JK பதிவிடுவதற்கு முன்னாலேயே அப்பதிவிற்கு என்னென்ன குத்துகள் விழும் என்று சொல்லிவிடுவேன். யார் யார் என்னென்ன குத்துவார்கள் எனச் சொல்லிச் சிரித்துக் கொள்வோம்.

said...

//யார் யார் என்னென்ன குத்துவார்கள் எனச் சொல்லிச் சிரித்துக் கொள்வோம்.//

ஆஹா. இப்படி அடுத்தவங்களை ஏத்திவிட்டு வேடிக்கை பாக்கறீங்களேப்பா. அது சரி, அப்ப அவரு உண்மையிலே அம்மா பக்கமா இல்லை சும்மானா விளையாடறாரா?

said...

//ஆஹா. இப்படி அடுத்தவங்களை ஏத்திவிட்டு வேடிக்கை பாக்கறீங்களேப்பா. அது சரி, அப்ப அவரு உண்மையிலே அம்மா பக்கமா இல்லை சும்மானா விளையாடறாரா//

அது எப்படீங்க தொழில் ரகசியத்தை வெளிய சொல்ல முடியும். :)))

said...

//அது எப்படீங்க தொழில் ரகசியத்தை வெளிய சொல்ல முடியும். :)))//

நல்லாயிருங்கப்பூ. நாங்கதான் இனிமே சாக்கிரதையா இருக்கோணும்.

said...

//குளிராக இருக்கும், மழை வருமெனவெல்லாம் பயமுறுத்தினார்கள், ஆனால் நாங்கள் சென்ற அன்று வெயில் காய்ந்தது.//

நாலு நல்லவங்க அங்க போனதுக்கப்புறம் எப்படி மழை வரும் :)

said...

கவிப்பூ பூக்கோஸ் மிக நல்ல புதையல்கள்

பான்ஃப் கண்ட தோழரே நீவிர் வாழ்க

said...

//நாலு நல்லவங்க அங்க போனதுக்கப்புறம் எப்படி மழை வரும் :)//

சொந்த செலவில சூனியம் வெச்சுக்கறா மாதிரி எனக்கு நானே உள்குத்து வெச்சேனே, யாருமே பாக்கலையேன்னு வருத்தமா இருந்தது. அவ்வருத்தத்தை களைந்த கப்பிபய வாழ்க. :)

அதுல பாருங்க. நான் இங்க போனம்போது நியூஜெர்ஸியில் நல்ல மழை. ஆகவே, உலகக்கோப்பை நேரத்தில் எனக்கு டிக்கெட் கொடுத்து மேற்கிந்திய தீவுகளுக்கு அனுப்பி வைத்தால் நீங்கள் எல்லோரும் நல்ல படியாக கிரிகெட் மாட்ச் பார்க்கலாம்!

(இன்னும் ஒண்ணும் சொல்லிக்கறேன். போன தபா மும்பையில் பெஞ்ச மழையில் மாட்டிக்கொண்டு விமான நிலையத்தில் நாள் பூராவும் அடைந்து கிடந்த அனுபவமும் உண்டி.)

said...

//கவிப்பூ பூக்கோஸ் மிக நல்ல புதையல்கள்//

வேற பேரு இருக்கா? யாருமே சொல்லக்காணுமே. சாப்பாட்டு விஷயம். ஆனா துளசியக்கா கூட ஆஜர் போட்டுட்டு போயிட்டாங்களே.

//பான்ஃப் கண்ட தோழரே நீவிர் வாழ்க//

அதுக்கு வழிகாட்டித்தந்த நீவிரும் வாழ்க. (வாழ்க போடவுமா நமக்கு நாமே. சரியாப் போச்சு!)

said...

நாலு நாள் பயணத்துக்கு நாற்பது பதிவு!!! நான் பரவாயில்லை.. :)

இப்படியே போனா உங்க பதிவையும் அரசியல் பதிவா எடுத்து குமரன் மாதிரி :) போட்டுட்டு போகவேண்டியதாப் போய்டும்!!

அந்த யானை படத்தை எனக்கும் அனுப்புங்க.. நானும் யானைப் பிரியை தான் :) இந்த ஊர்ல தான் சாப்பாட்டு மேசையைத் தவிர எங்கயும் மிருகங்களைப் பார்க்கவே முடியலை.. ஒரு எருமை மாடு/பசு மாடு கூடவா தெருவில் போகாது? ஒரு காக்கையக் கூடக் காணோமேய்யா, என்ன கிராமமோ!!!ம்ஹும்!!! :(

//ஜிகர்தண்டா கொடுத்தாரா?//
எல்லாரும் இந்த சாப்பாட்டு மேட்டர்லயே சஸ்பென்ஸ் வைக்கிறாங்களே!!! :))

said...

அடடே...நாங்கூட என்னடா கவிப்பூத் திறனாய்வுன்னு பாத்துட்டு...கொத்சு ஏதாவது வெண்பா கிண்பா எழுதீருக்குறாரோன்னு ஓடி வந்தேன். வந்து பாத்தா...அடடா! என்ன படம்...என்ன படம்...பாக்கையிலேயே எச்சி ஊறுதே...இதுல கவிப்பூக்குப் பதிலா எலும்பில்லாத கோழிக்கறியோ முள்ளில்லாத சீலா மீன் துண்டோ வெச்சிப் பொரிச்சிருந்தா...அடடா! அடடா!

ஆனையப் பாத்ததும் துளசி டீச்சர் நினைவு வந்தது சரி....எதைப் பாத்தா என்னோட நெனவு வரும்?

said...

//நாலு நாள் பயணத்துக்கு நாற்பது பதிவு!!! நான் பரவாயில்லை.. :)//

இல்லை. 36க்கு மேல போகக்கூடாதுன்னு டீச்சர் உத்தரவு. :)

//இப்படியே போனா உங்க பதிவையும் அரசியல் பதிவா எடுத்து குமரன் மாதிரி :) போட்டுட்டு போகவேண்டியதாப் போய்டும்!! //

குமரன் அரசியல் பதிவுக்கெல்லாமா சிரிப்பான் போடறாரு? அவரு நல்லா சண்டை போடுவாரே? சரி சரி ரொம்ப மிரட்டாதீங்க. அடுத்த பதிவே கடைசி. நான் வாக்கு கொடுத்தா காப்பாத்துவேனாக்கும். :)

//அந்த யானை படத்தை எனக்கும் அனுப்புங்க.. நானும் யானைப் பிரியை தான் :) இந்த ஊர்ல தான் சாப்பாட்டு மேசையைத் தவிர எங்கயும் மிருகங்களைப் பார்க்கவே முடியலை.. ஒரு எருமை மாடு/பசு மாடு கூடவா தெருவில் போகாது? ஒரு காக்கையக் கூடக் காணோமேய்யா, என்ன கிராமமோ!!!ம்ஹும்!!! :(//

சரி. அனுப்பறேன். தெருவில் எல்லாம் பார்க்க முடியாது. என் பையன் ஸ்கூலில் ஃபார்ம் ட்ரிப் எனச் சொல்லி தலைக்கு 15 ரூபாய் வாங்கிக்கொண்டு ஆட்டையும் மாட்டையும் காட்டின கொடுமையை என்ன சொல்ல?

//எல்லாரும் இந்த சாப்பாட்டு மேட்டர்லயே சஸ்பென்ஸ் வைக்கிறாங்களே!!! :))//

சாப்பாடு இல்லைன்னா நம்ம மக்கள் வரமாட்டேங்கறாங்களே. என்ன செய்ய. :)

said...

மழையைப் பத்தி இப்படி சொல்லிடீங்க அன்றிரவு மழை பெய்தது மறந்துவிட்டதா

said...

//நாலு நாள் பயணத்துக்கு நாற்பது பதிவு!!!//

கொத்ஸ், இன்னம் 38 இருக்காஆஆஆஆஆஆஆ...

:-)

பதிவ பத்தி சொல்லறதுக்கு ஒன்னும் இல்ல அதான்.:-)

said...

//தலைக்கு 15 ரூபாய் வாங்கிக்கொண்டு ஆட்டையும் மாட்டையும் காட்டின கொடுமையை என்ன சொல்ல? //
ரூபாயா டாலராய்யா? சரியா சொல்லுங்க..
15 ரூபாய்க்கு இங்க என்ன கிடைக்கும்?!! 50 ரூபாய்க்கு குறைஞ்சு இங்க ஒண்ணுமே கிடைக்காது போலிருக்கே..

said...

//அடடே...நாங்கூட என்னடா கவிப்பூத் திறனாய்வுன்னு பாத்துட்டு...கொத்சு ஏதாவது வெண்பா கிண்பா எழுதீருக்குறாரோன்னு ஓடி வந்தேன்.//

நீங்க வெண்பா எழுதறேன்னு சொல்லுங்க. அடுத்தது வெண்பா பதிவுதான். ஆனா பிடி குடுக்க மாட்டேங்கறீங்களே.

//இதுல கவிப்பூக்குப் பதிலா எலும்பில்லாத கோழிக்கறியோ முள்ளில்லாத சீலா மீன் துண்டோ வெச்சிப் பொரிச்சிருந்தா..//

அந்த எலும்பில்லாத கோழி சமாச்சாரமும் இருந்தது,ஆனா அதைப் படம்தான் பிடிக்கலை.

//ஆனையப் பாத்ததும் துளசி டீச்சர் நினைவு வந்தது சரி....எதைப் பாத்தா என்னோட நெனவு வரும்?//

எம்பெருமான் முருகன் படம் பாக்கும்போதெல்லாம் உம்ம ஞாபகம்தான் வரும். மறக்காமல் 'யாமோதிய கல்வியும் எம் அறிவும்
தாமே பெற வேலவர் தந்ததினால்'ன்னு மனசுக்குள்ள சொல்லிக்குவேன். :)

said...

//மழையைப் பத்தி இப்படி சொல்லிடீங்க அன்றிரவு மழை பெய்தது மறந்துவிட்டதா//

ஆமாம். நல்ல வேளை சொன்னீங்க. நான் வெளிய போகும்போதுதான் மழை வராது. நான் வீட்டுக்குள்ள இருந்தா நல்ல மழை பெய்யும். :)

said...

//கொத்ஸ், இன்னம் 38 இருக்காஆஆஆஆஆஆஆ...//

அதுதான் அடுத்த பதிவு கடைசின்னு வாக்கு குடுத்தாச்சே.

//பதிவ பத்தி சொல்லறதுக்கு ஒன்னும் இல்ல அதான்.:-)//

சரி. வேண்டாம். அதுக்காக வந்த 30 பின்னூட்டம் பத்தியாவது சொல்லலாமில்ல. பேருக்கேத்த மாதிரி நல்ல மனசு இருக்கறதா தெரியலையே.

said...

//ரூபாயா டாலராய்யா? சரியா சொல்லுங்க..
15 ரூபாய்க்கு இங்க என்ன கிடைக்கும்?!! 50 ரூபாய்க்கு குறைஞ்சு இங்க ஒண்ணுமே கிடைக்காது போலிருக்கே..//

பொன்னரசி, இந்த ஊர் பணம்தான். இங்க வந்தா முதலில் இந்திய பணத்துக்கு மாத்தி அப்புறம் அங்க இருக்கற விலையோட கம்பேர் பண்ணறதை விடுங்க. அப்படி பண்ணியே ஆகணும்ன்னா ஒரு டாலர் 10 ரூபாய்ன்னு வெச்சுக்கோங்க. அதான் இந்த ஊர் பணத்தில் வாழும் செலவினங்களுக்குன்னு தராங்க இல்லை.

said...

//அப்படி பண்ணியே ஆகணும்ன்னா ஒரு டாலர் 10 ரூபாய்ன்னு வெச்சுக்கோங்க. //

எக்ஜாக்டிலி... இது தான் நான் புதுசா வர்ற எல்லோருக்கும் சொல்றது. 45, 46ஆல பெருக்கிட்டே இருந்தா பட்டினியா கிடந்து கிழிசலைப் போட்டுக்கிட்டு அலையவேண்டியது தான். பத்தால பெருக்கிப் பாத்தா ஒரு புரிதல் (ஐடியா) கிடைக்கும்.

எக்ஜாக்ட்லி மட்டும் ஏன் ஆங்கிலத்துல சொன்னேன்னு கேக்கறீங்களா? தெரியாத் தனமா ரெண்டு நாளைக்கு முன்னால அதை என் பொண்ணு ஏதோ கேட்டப்ப சொல்லிட்டேன். அப்பல்ல இருந்து அதைத் திரும்பத் திரும்பச் சொல்லச் சொல்லி வாட்டி எடுக்கிறா. ஒரு 200 தடவையாவது சொல்லியிருப்பேன். பேசாம வழக்கம் போல 'செர்க்கஸ்'ன்னு (சௌராஷ்ட்ரத்துல சரி என்று பொருள்) சொல்லியிருந்தா பொழைச்சிருபேனோன்னு தோணுது. :-( அந்தப் பழக்க தோசம் தான்.

said...

//பொன்னரசி//
எல்லாரும் விதவிதமா கூப்பிடறாங்க.. இந்தவார நட்சத்திரம், பொன்மகள்ன்னு சொல்றாரு... பேசாம பேரை மறுபடி மாத்திரலாமான்னு யோசிக்கிறேன்.. பொன்னரசி நல்லாத் தான் இருக்கு.. "பொன்னரசி, நாரணனார் தேவி புகழ் அரசி"ன்னு ஒரு பாட்டு வரும்.. அதுல வர்றா மாதிரி... :)என்ன சொல்றீங்க?

//இங்க வந்தா முதலில் இந்திய பணத்துக்கு மாத்தி அப்புறம் அங்க இருக்கற விலையோட கம்பேர் பண்ணறதை விடுங்க. //
இப்படிச் சொல்லியே நிறைய செலவு செஞ்சாச்சு. இனியாவது கொஞ்சம் கட்டுப்பாடா இருக்கணும்னுதான்..

said...

//ரூபாயா டாலராய்யா? சரியா சொல்லுங்க..
15 ரூபாய்க்கு இங்க என்ன கிடைக்கும்?!! 50 ரூபாய்க்கு குறைஞ்சு இங்க ஒண்ணுமே கிடைக்காது போலிருக்கே..//

எங்களுக்கு 1 டாலர் = 1 ருபாய் தான் அதுதான் இந்தியாவிற்க்கு வந்தால் முழிபிதுங்குது.

ஒரு தோசை 40 ரூபாயாம்

said...

//எக்ஜாக்டிலி... //

ஆஹா. குமரனை சிரிப்பான் போடறதை விட்டு பேச வைச்சாச்சு.

நான் சொல்லறதையே நீங்களும் சொல்லறீங்க. ஏற்கனவே, நீங்கதான் இ.கொ. என்ற பெயரில் எழுதுவதாக வதந்தி. இப்போ இது வேறையா? :)

said...

//பேசாம வழக்கம் போல 'செர்க்கஸ்'ன்னு (சௌராஷ்ட்ரத்துல சரி என்று பொருள்) சொல்லியிருந்தா பொழைச்சிருபேனோன்னு தோணுது.//

எக்ஜாக்ட்லி!! :D

said...

//பொன்னரசி//

பெண்கள் எல்லாம் அரசிகள்தானே. அப்புறம் பெண்ணரசிகள் எல்லாரும் பொன்னரசிகள்தானே. என்ன டீச்சர், நான் சொல்லறது சரிதானே?

(அதாருப்பா சைடில் பொன்னரசிகள் எல்லாம் போன்னரசிகள் கூடத்தான்னு சவுண்ட் விடறது..)

அதான் உங்க படத்தில் தங்கக்காசா கொட்டுதே, அதான் பொன்னரசின்னு கூப்பிட்டேன். அப்படியே வச்சுக்குங்க. நல்லாத்தான் இருக்கு.

said...

//இப்படிச் சொல்லியே நிறைய செலவு செஞ்சாச்சு. இனியாவது கொஞ்சம் கட்டுப்பாடா இருக்கணும்னுதான்..//

இப்பவாவது நல்லா செலவு பண்ணுங்க. நாளைக்கு ரங்கமணி வந்தாருன்னா அவரையும் பண்ணவிட மாட்டீங்க, நீங்களும் வேணுங்கிறதுக்கு செலவு பண்ண மாட்டீங்க. என்சாய்.

said...

//எங்களுக்கு 1 டாலர் = 1 ருபாய் தான் அதுதான் இந்தியாவிற்க்கு வந்தால் முழிபிதுங்குது.//

அதெப்படி? எனக்கு புரியலையே. உங்க டாலர் கிட்டத்தட்ட எங்க டாலர்தானே?

said...

கொத்ஸ்,

// அதில் குளித்தால் உடம்புக்கு நல்லதாம்.

நீங்க என்ன பண்ணுனிங்க ?

//கவிப்பூ பூக்கோஸ்

இதுக்குன்னே உக்காந்து யோசிபாங்களோ ?


//அதாவது எழுத சரக்கு இல்லாமல் போனா படங்காட்டறேன்!)

ஒரு படம் என்பது 1008654 வார்த்தைகளுக்கு சமாணம் என்பது உங்களுக்கு தெரிந்தும் இப்படி சொல்லுவது..படம் போட்டு பதிவு எழுதுறவங்களை தாக்கும் உள்குத்து தானே ? (எப்படி போனாலும் விடமாட்டமுல்ல..)

:-)))))))))))

said...

"காளி" பிளவர் என்ற பெயரை கவிப்பூ என தமிழ்படுத்திய அந்த ரெஸ்டாரன்ட் ஓனர் இடதுசாரியாக இருப்பாரோ?சிவாவை விசாரித்து சொல்ல சொல்லுங்கள்:-)))

said...

//நீங்க என்ன பண்ணுனிங்க ?//

நாங்க போன இடத்தில் எதோ அரிய வகை நத்தை இருந்ததாம். தண்ணீரைத் தொடக்கூட விடலை. குளிக்கறது எல்லாம் வேற படித்துறையாம். :)

//இதுக்குன்னே உக்காந்து யோசிபாங்களோ ?//

யோசிப்பாங்க போல இருக்கே. நல்லா இருந்தா எடுத்துக்க வேண்டியதுதானே.

//.படம் போட்டு பதிவு எழுதுறவங்களை தாக்கும் உள்குத்து தானே ? (எப்படி போனாலும் விடமாட்டமுல்ல..)//

விடாதீங்கப்பா விடாதீங்க. அப்போதான் இன்னுமொரு கும்பல் வந்து விட்டுது விட்டுதுன்னு விளையாட முடியும். :)

said...

//"காளி" பிளவர் என்ற பெயரை கவிப்பூ என தமிழ்படுத்திய அந்த ரெஸ்டாரன்ட் ஓனர் இடதுசாரியாக இருப்பாரோ?//

அவங்க பிராண்டே காளிதாங்க. அதை அவங்க மாத்த மாட்டாங்க. ஆனா பாருங்க அது பாக்க சிவப்பாத்தான் இருக்கு. :)

said...

//குமரன் அரசியல் பதிவுக்கெல்லாமா சிரிப்பான் போடறாரு? அவரு நல்லா சண்டை போடுவாரே? சரி சரி ரொம்ப மிரட்டாதீங்க. அடுத்த பதிவே கடைசி. நான் வாக்கு கொடுத்தா காப்பாத்துவேனாக்கும். :)//

யோவ்! என்னைத்தானே உள்குத்து போட்டுத் தாக்கறே?

என் ராஞ்சிப்பதிவு சொன்னதைவிட ஒண்ணு எக்ஸ்ட்ரா ஆகிட்டது உண்மைதான்.. அதுக்காக?

said...

//யோவ்! என்னைத்தானே உள்குத்து போட்டுத் தாக்கறே?

என் ராஞ்சிப்பதிவு சொன்னதைவிட ஒண்ணு எக்ஸ்ட்ரா ஆகிட்டது உண்மைதான்.. அதுக்காக?//

நல்லபடியா வந்து பதிவைப் போட்டா திரும்பிக் கூட பாக்க மாட்டேங்கறீங்க. அதுவும் தனிமனித உள்குத்து தாக்குதல்தானே இன்னிக்கு ஃபேஷன்.

சரி நான் உங்களைப்பேரைச் சொல்லியா தாக்குனேன்? அது என்னமோ அங்குசன் ஆனைன்னு எல்லாம் சொல்லறாங்களே. அதெல்லாம் நமக்கு வராது. உமக்கு குற்றமுள்ள நெஞ்சம். அதான் குறுகுறுக்குது.

நம்ம சிவாண்ணாவைக் கேட்டு பாருங்க. வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே அரசியல்வாதி நாந்தான். வெறும் கையெழுத்துப் போட்டு நிறைவேத்தியாச்சுன்னு சொல்லறவங்களை சேத்துக்கலை. ;)

said...

யோவ் சிபி,

47 ஆச்சுயா. சீக்கிரம் வாங்க.

said...

இ.கொ. என் தம்பிக்கு இன்று எச்சரிக்கை விடுத்தேன்.

"நான் இவர்கிட்டே ஒரு வார்த்தைக்குத் தான் கேட்டன் உடனே நிறைவேற்றி விட்டார். இப்போ நீ நடைமனிதனைக் கேட்டு விட்டாய். அவர் சிங்கை வந்தால் என் வீடு மிட்டாய் கடை ஆனது மாதிரி உன் வீடு டாஸ்மார்க் கடை அகிவிடும்" என்று

வாக்குறுதி காக்கும் இ.கொ (E.K.) அவர்கள் வாழ்க

said...

ஐயா, நீங்க இன்கிருந்து போனதிலிருந்து நல்ல மழை. சூடு நார்மல் ஆமி 4 டிகிரிக்கு வந்திருச்சி

said...

பிடிங்க 50

said...

அது தெரியாதுங்க. ஆனா உங்களுக்கு கொடுத்தா மாதிரி அவருக்கும் இலவச அறிவுரைகள் எல்லாம் ஏற்கனவே கொடுத்தாச்சு. :)

அங்க கொஞ்சம் ஜாஸ்தி எடுத்துகிட்டு போனா பிரம்படி எல்லாம் கொடுப்பாங்களாமே. நிஜமா?

நீங்க என்னடான்ன மோப்ப நாயிங்கன்ன பயமுறுத்துனீங்க. இப்போ உங்க தம்பி பிரம்படி மேட்டர் கையில் எடுத்து இருக்காரு. நல்ல குடும்பம். நல்லா இருங்கடா சாமி.

said...

//ஐயா, நீங்க இன்கிருந்து போனதிலிருந்து நல்ல மழை. சூடு நார்மல் ஆமி 4 டிகிரிக்கு வந்திருச்சி//

ஏற்கனவே நான் வந்தா மழை பெய்யாதுன்னு இணையம் முழுதும் போலிப் பிரச்சாரம் பண்ணறாங்க. நீங்க என்ன எரிய நெருப்பில் எண்ணையைக் கொட்டறா மாதிரி.

நான் நல்லவந்தாங்க. நான் நல்லவந்தான். தெரியலையேன்னு எல்லாம் சொல்லலை, நல்லா தெரியும். நான் நல்லவந்தான்.

said...

//பிடிங்க 50//

இன்னிக்கு உங்க உபயமா. ரொம்ப டாங்க்ஸ். பொதுவா 50 அடிச்சவங்கதான் 100-ம் அடிப்பாங்க. ஞாபகம் இருக்கட்டும். :)

said...

முதலில் உள்குத்து உள்ள வாசகம்,

பிறகு என்னையே குற்றமுள்ள நெஞ்சென்று ஏளனம்..

கொத்தனாரே - வழிதவறிப்போகவேண்டாம்.. வவாசாவாக ஆகவேண்டாம் என எச்சரிக்கிறேன்..

said...

//நல்ல குடும்பம். நல்லா இருங்கடா சாமி.//

டாங்க்ஸ்

இப்போ ஒரு மீட்டிங் போறேன் வந்து 100 தான்

சிபி தூங்கிட்டார் போலிருக்கு. அதுதான் சிபியின் அப்பா வந்திருக்கேன்

said...

அண்ணே என்னாச்சு, உங்க ரன் ரேட் கம்மி ஆயிடுச்சே

said...

//அப்போதான் இன்னுமொரு கும்பல் வந்து விட்டுது விட்டுதுன்னு

//தனிமனித உள்குத்து தாக்குதல்தானே இன்னிக்கு ஃபேஷன்.

//ஒரே அரசியல்வாதி நாந்தான்.

மனசுல நினைச்சதை அப்படியே சொன்ன பன்முக மன்னன் கொத்ஸ் வாழ்க வாழ்க :-)

(எப்படியோ இத வச்சி ஒரு 10 கமென்ட் வரும்.. போதுமா)

said...

//வவாசாவாக ஆகவேண்டாம் என எச்சரிக்கிறேன்..//

என்னதான் நாம இப்போ அவங்களோட ஒண்ணுக்குள்ள ஒண்ணானாலும் நம்ம கடைசி மூச்சு வரை பமகதான் நம்ம கட்சி. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

மத்தபடி இந்த உள்குத்து வெளிக்குத்து எல்லாம் சும்மா தமாசு.

said...

//சிபி தூங்கிட்டார் போலிருக்கு. அதுதான் சிபியின் அப்பா வந்திருக்கேன்//

முதலில் அப்பா வந்து 8 பின்னூட்டம் போட்டா பின்னாடி அவர் வந்து 16 போட்டாதான் பழமொழி நிஜமாகும். யோவ் சிபி, தமிழ் மொழியின் மானமே உம்ம கையில்தான் இருக்கு. ஜாக்கிரதை.

said...

/அண்ணே என்னாச்சு, உங்க ரன் ரேட் கம்மி ஆயிடுச்சு//

நான் வெளியூர் பயணம் போயிட்டேனா. அதனால பின்னூட்டமெல்லாம் உடனே உடனே பதிவிட முடியலை. பதிலும் தரலை. அதனால சூடு ஆறிப்போச்சு. என்ன பண்ணறது?

said...

//மனசுல நினைச்சதை அப்படியே சொன்ன பன்முக மன்னன் கொத்ஸ் வாழ்க வாழ்க :-)//

இப்போதான் குமரனுக்கு சொன்னேன். இப்போ நீங்களா? இப்படியெல்லாம் போட்டா கார்த்திக் ஜெயந்த்தும், இ.கோவும் ஒண்ணுன்னு சொல்லப் போறாங்க.

அது உண்மையில்லைன்னு ஒரு திஸ்கி போடுமய்யா.

said...

மன்னிக்கவும் இந்த கிழத்துக்கு பமக என்றால் என்னவென்று புரியவில்லை. தயவுசெய்து விளக்கவும்

said...

//சிவாண்ணா வீட்டுக்கு போனோம்//

சிவா என்றே அழைக்கலாம் "அண்ணா" எல்லாம் வேண்டாம்

said...

சிவாண்ணா,

இப்போதான் எல்லாருக்கும் மரியாதை குடுக்கணும்ன்னு சொல்லறாங்க. நீங்க என்னடான்னா இப்படி சொல்லறீங்க. சரி இனிமே கூப்பிடறேன்.

said...

//மன்னிக்கவும் இந்த கிழத்துக்கு பமக என்றால் என்னவென்று புரியவில்லை. தயவுசெய்து விளக்கவும்//

அடடா இது பின்னூட்டத்தில் சொல்லற விஷயமா? மருத்துவர் ஒரு பதிவே போட்டு இருக்காரு பாருங்க. முக்கியமாக பின்னூட்டங்களும் அதில் உள்ள சுட்டிகளும்.

said...

-ஆக முன்னேறிய வருக்கமான பார்ப்பனர்களும் செட்டியார்களும் இடம் பெற்று இருக்கும் அந்த விடுதியிலே ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு இட ஒதுக்கீடு இல்லாமல் போனதேன்? இது அம்மக்களுக்கு எதிரான திட்டமிட்ட சதியல்லவா? இச்சதிக்கு துணை போகும் அவ்விடுதியின் உரிமையாளர்களுக்கு என்ன முத்திரை குத்த வேண்டுமென நமக்குத் தெரியாதா?-

கொத்தனாரே, ரசமட்டத்தால் அவ்வப்போது சுத்தி சித்தி அடிப்பீங்க போல, கலக்குங்க -ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது, சந்துல சிந்துன்னா இதான், இல்லியா?

said...

// //ஆனையப் பாத்ததும் துளசி டீச்சர் நினைவு வந்தது சரி....எதைப் பாத்தா என்னோட நெனவு வரும்?//

எம்பெருமான் முருகன் படம் பாக்கும்போதெல்லாம் உம்ம ஞாபகம்தான் வரும். மறக்காமல் 'யாமோதிய கல்வியும் எம் அறிவும்
தாமே பெற வேலவர் தந்ததினால்'ன்னு மனசுக்குள்ள சொல்லிக்குவேன். :) //

ஆகா.........போட்டுத் தாக்குறீங்க கொத்ஸ். உண்மையிலேயே சந்தோஷமா இருக்கு.

said...

வெங்கட்ரமணி,

சில சந்தேகங்கள் இருக்கின்றன. நான் வந்து கேட்டுக்கொள்கிறேன்.

said...

வாங்க அனானி,

//ரசமட்டத்தால//
இப்படின்னா என்னங்க?

//ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது, சந்துல சிந்துன்னா இதான், இல்லியா?//
தமிழ்மணத்துக்கு புதுசா? இப்போதான் இதுக்கு உள்குத்து, வெளிக்குத்துன்னு ஒரே கூத்தா இருக்கே.

said...

//ஆகா.........போட்டுத் தாக்குறீங்க கொத்ஸ். உண்மையிலேயே சந்தோஷமா இருக்கு.//

ரொம்ப நன்றிங்க. எல்லாரையும் சந்தோஷப் படுத்ததான் முயல்கிறேன். யாரேனும் ஒருத்தர் இரண்டு பேர் சந்தோஷமானாலும் வெற்றிதான்.

said...

கொத்ஸ்,

ரசமட்டம் என்பது வீடு கட்டும் போது அளவு பார்க்க உபயோகபடுத்தும் ஒரு பொருள்..

முன்னேறிய வர்க்கத்தினருக்கு இது எல்லாம் எங்க தெரிய போகுதுன்னு யாரவது கேப்ல ஆப்படிக்க போறங்க பாத்துகோங்க சொல்லிட்டேன் :-)

said...

கார்த்தி தம்பி,

அது நாங்க வீடு கட்டும் போது உபயோகப்படுத்தறது. அது இங்க எங்க வந்தது? அதான் கொஞ்சம் கன்பியூஷன்.

said...

கொத்ஸ்,

இதையுமா நாஞ்சொல்லனும்.. அதை யூஸ் பண்ணி தலமை கொத்தனார் நேக்கா அளவுகளை கரெக்ட் பண்ணுறது, அப்புறம் வேல முடிஞ்சதும் டே துரைசாமி வீட்டு ஓனர் பாத்தா பூசுனது மாதிரியும் / அளவு சரியா இருக்குற மாதிரியும் இருக்கணும்டா ந்னு வேலை செய்யாதை சொல்லிகாட்டுவாருல்ல, அந்த மாதிரி நீங்க இந்த பதிவுல உள்குத்து வைச்சதா அனானி அண்ணன் சொல்லுறார்.. :-)

இது உங்களுக்கு தெரியும்ன்னாலும் எங்கிட்ட கேக்குறது எந்த உள்குத்துன்னு யாருக்காவது மண்டைல பல்பு எறிஞ்சா கண்டிப்பாக சொல்லுங்க. :-)

போதுமா எப்படியே 10 கமென்ட் ரெடி :-)

said...

//போதுமா எப்படியே 10 கமென்ட் ரெடி :-)//

அதுதானே நம்ம நோக்கமே. ஹிஹி.