Tuesday, October 03, 2006

தமிழில் பேசினால் தீவிரவாதியா?

விமானத்திற்காக காத்துக் கொண்டிருந்த ஒருவர் தனது செல்பேசியில் தமிழில் பேசினாராம். அதனால் சந்தேகப்பட்டு போலீஸார் அவரை விசாரணைக்கு கொண்டு சென்றனராம். பாவம், அவரும் இதனால் தனது விமானத்தைத் தவற விட்டுவிட்டாராம். அதைப் பற்றிய ரீடிஃப் செய்தியைப் பாருங்கள். இன்றைக்கு அமெரிக்காவில் இருக்கும் கட்டுப்பாடுகள் ஒரு அளவில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. பாதுகாப்பு நடவடிக்கை என்ற போர்வையில் இதை அனுமதித்தாலும் கூட, இச்செய்தியின் கடைசி வரியைப் பாருங்கள். இனி விமான நிலையங்களில் அன்னிய மொழிகளில் பேசுவதில்லை என அவர் அதிகாரிகளிடம் உறுதியளித்துள்ளாராம்.

என்ன கொடுமை இது சரவணன். இனி விமான நிலையத்திலிருந்து என் மனைவியிடம் பேச வேண்டுமானால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டுமா? அவர்களுக்கு ஆங்கிலம் தெரியும் சரி. ஆனால் என் தாயாரிடம் பேச வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? அதையும் சொல்வார்களா? தமிழ் பேசும் நல்லுலகே, உங்கள் கருத்துகளைப் போட்டுத் தாக்குங்க.

இதுதான் அந்தச் செய்தி.

A Tamil-speaking man in the US missed his flight from Seattle over the weekend because at least one person thought he was suspicious.

According to a report in Seattle Post Intelligencer, the man was speaking Tamil and some English in a conversation over his cellphone about a sporting rivalry when getting ready to board an American Airlines flight to Dallas' Fort Worth International Airport.

An off-duty airline employee heard the conversation and alerted the flight crew.

"It's a big misunderstanding," said Bob Parker, the airport spokesman. "He had a perfectly innocent explanation that all added up."

The spokesman noted that it was mandatory for airport officials to investigate reports of suspicious activity. The man was supposed to be talking of a sporting rivalry involving his alma mater.

Parker had no explanation as to why a man speaking Tamil would be considered suspicious. The person who contacted airport officials could give an answer to that question, he added.

The detained person was said to be cooperative and later boarded a flight to Texas. He reportedly told airport officials that he will not speak a foreign language on his cellphone at an airport in the future.

64 comments:

said...

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் !
:)

said...

இந்த மேட்டர் சரியா? தவறா? இதை கண்டிக்கணுமா? வேண்டாமா? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க சாமிங்களா.

said...

can somebody in the seattle area touchbase with him directly? it will be great to bring his voice online.

US is becoming like 'Thenali'

said...

தமிழில் இந்தப் பதிவு உள்ளதால், அமெரிக்காவுக்கு பயமாக இருக்கிறதாம்.

எதற்கும் சாக்கிரதையாக இருக்கவும் :P

said...

கொத்ஸு,

அது அந்த ஆளு நொந்து போயி தானா சொன்னது.அமெரிக்காகாரன் ஒண்ணும் தமிழில் பேசக்கூடாதுன்னு சொல்லலை.

செக்யூரிட்டி ஜாக்கிரதையா இருக்கறப்ப இந்த மாதிரி குளறுபடி ஆகத்தான் செய்யும்.விமானபயணம் இப்பல்லாம் ரொம்ப ரிஸ்கா மாறிடுச்சு.எதுக்கெடுத்தாலும் விமான கடத்தல்,ஹைஜாக்குன்னு தீவிரவாதிகள் ஆட்டம் கட்டறாங்க.

said...

//இந்த மேட்டர் சரியா? தவறா? இதை கண்டிக்கணுமா? வேண்டாமா? கொஞசம் தெளிவா சொல்லுங்க சாமிங்களா. //

இதை எதுக்கு கண்டிக்கணும்?:-)

சந்தேகம் வந்துச்சு.விசாரிச்சான்.விட்டுட்டான்.அமெரிக்ககாரன் என்ன தமிழ் எதிர்ப்பாளனா?:-)

ஆனா இதுக்கு பின்னூட்டம் வந்து குவியுதா இல்லையான்னு பாருங்க:-)ஒரே ரவுசான பதிவா இருக்க போகுது.புதுசுபுதுசா நெறைய பேர் வந்து பின்னூட்டம் இடுவார்கள்:-))

ஒரே காமடிதான் போங்க

said...

//அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் !
:)//

வாங்க கோவியாரே. என்னென்னமோ நடக்குது போங்க.

said...

//can somebody in the seattle area touchbase with him directly? it will be great to bring his voice online.//

வாங்க பாபா. நம்ம பதிவுக்கு நீங்க எல்லாம் வரா மாதிரி பண்ணிட்டாங்க பாத்தீங்களா இந்த அமேரிக்கா காரங்க. எதோ நல்லதும் நடக்குது பாருங்க. :)

//US is becoming like 'Thenali'//

அதே. அதே.

said...

//தமிழில் இந்தப் பதிவு உள்ளதால், அமெரிக்காவுக்கு பயமாக இருக்கிறதாம்.//

LOL

said...

..அது அந்த ஆளு நொந்து போயி தானா சொன்னது.அமெரிக்காகாரன் ஒண்ணும் தமிழில் பேசக்கூடாதுன்னு சொல்லலை.//

சரிதான், ஆனா அடுத்தவனுக்கு புரியாத மொழியில் பேசாம இருக்கறது நல்லது. அதுக்காக் தத்தம் தாய்மொழியில் பேசாம இருக்கறது நல்லது அப்படிங்கற எண்ணம் வர அளவுக்கு இருக்கே. இது நல்லாவா இருக்கு?

//செக்யூரிட்டி ஜாக்கிரதையா இருக்கறப்ப இந்த மாதிரி குளறுபடி ஆகத்தான் செய்யும்.விமானபயணம் இப்பல்லாம் ரொம்ப ரிஸ்கா மாறிடுச்சு.எதுக்கெடுத்தாலும் விமான கடத்தல்,ஹைஜாக்குன்னு தீவிரவாதிகள் ஆட்டம் கட்டறாங்க.//

உண்மைதான். இவரு என்ன பேசினாருன்னும் தெரியலை. என்னதான் இருந்தாலும் எனக்கு இந்தாள் பேசறது புரியலைன்னு ஒருத்தன் கம்பிளெய்ண்ட் பண்ணறதும், அதுக்காக் அதை அதிகாரிகள் விசாரணை பண்ணறதும்... ஹூம் எங்க போயிகிட்டு இருக்கோமோ தெரியலை.

said...

//ஒரே காமடிதான் போங்க//
அதெல்லாம் இருக்கட்டும், போன பதிவுக்கு வரேன்னு பிலிம் காமிச்சிட்டு போனீரே. எங்க ஆளைக்காணும்?

said...

அப்ப இன்மே தமிழில் 'பதிவு மட்டுமே ' எழுதணுமா?

நோ பேச்?

said...

தமிழில் பேசினதால் அவர் விசாரிக்கப்பட்டார் என்பது மிகையாக தெரிகிறது.

/ the man was speaking Tamil and some English in a conversation over his cellphone about a sporting rivalry when /

சில வார்த்தைகள் அந்த வேலையாளுக்கு சந்தேகத்தை கொடுத்திருக்கலாம் என்பது என் எண்ணம்.

நான் Airport-ல் தமிழில் தான் பேசுவது வழக்கம்.

கோவி சொன்னது போல் அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

said...

5 வருஷத்திற்கு முன்னாடி பிளேன் வாசல் வரைக்கும் வந்து வழி அனுப்பிகிட்டுதான் இருந்தாங்க. அப்பவும் சவூதியிலே கோமணத்தே கழட்டி பார்த்துக்கிட்டுதான் இருந்தாங்க. அந்த நாதாரிங்க பண்ணின காரியத்திலேதான் இந்த மாதிரி.

said...

பாருங்க டீச்சர், நம்ம அடிமடியில் கை வைக்கிறாங்க. பேசாம எப்படி இருக்கறதாம்?

said...

//தமிழில் பேசினதால் அவர் விசாரிக்கப்பட்டார் என்பது மிகையாக தெரிகிறது. //

உண்மைதான்.

//சில வார்த்தைகள் அந்த வேலையாளுக்கு சந்தேகத்தை கொடுத்திருக்கலாம் என்பது என் எண்ணம்.
//

அவர் தமிழில் பேசி இருந்தால், பக்கத்தில் இருந்தவர்க்கு புரிய வாய்ப்பில்லை. அப்படி அவர் ஆங்கில் வார்த்தைகள் கலந்து பேசியிருந்தால் அவர் தமிழில் பேச மாட்டேன் என ஏன் கூறியிருக்க வேண்டும்? ஒன்றும் புரியவில்லை போங்க.

//நான் Airport-ல் தமிழில் தான் பேசுவது வழக்கம். //

நானும்தாங்க. அதான் இவ்வளவு பயம்.

said...

வாங்க சிவா. உங்க point of viewவை சொல்லிட்டீங்க. இப்போ என்ன பண்ணலாம்? அதையும் சொல்லுங்க.

said...

கொத்ஸ் முதல்ல வீட்டுல அந்நிய நாட்டுல தமிழ் தெரிந்த மனைவி மற்றும் குழந்தைகளிடம் ஆங்கிலத்தை தவிர்த்து தமிழ்ல பேசுவதை தவிர்க்க ஒரு .பதிவு தேவை.அதுக்கப்பறம் அந்நிய நாட்டில் அவர்களின் (ஏன் உங்களைப் போன்றோரின்) பாதுகாப்புக்காவும் அவர்களின் சட்ட திட்டங்களை மாற்றுவது பற்றி யோஜிக்கலாம்.

said...

நாம் சற்று அதிகமாகவே எதிர்வினை கொடுக்கிறோம் என்று நினைக்கிறேன். தமிழை விடுங்கள், அந்தப் பயணி அரேபிய மொழியில் பேசியிருந்தால் அவருக்கு விசாரிப்பதற்கு முன்பே குமட்டில் நாலு அமெரிக்க போலீஸ் குத்தே கிடைத்திருக்கும்.

இப்போது கூட அந்தப் பயணி ஏர்போர்ட் அதாரிடிகள் மீது கேஸ் போடலாம், நல்ல தொகை அள்ளலாம். செய்வாரா என்று தெரியவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

பாதுகாப்பு கருதி ஒரு அரசு எடுத்த நிலைக்கு இப்படி ஒரு களங்கம் கற்பிக்க உங்களால் மட்டுமெ இயலும், இ.கொ.

ஆங்கிலமும் தமிழும் [அது தமிழ் என்றே அந்த அதிகாரிக்குத் தெரியக்கூட வாய்ப்பில்லை!] கலந்து ஒருவர் ரைவல்ரி பற்றிப் பேசும் போது, ஹிட், ஷாட், டச் டௌன், பாம்ப் போன்ற சொற்கள் வந்திருக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

இதைக் கவனிக்கவெனவே நியமிக்கப்பட்ட ஒருவர் இவரை சந்தேகித்ததிலும் நியாயம் இருக்கிறது.

இவராகத்தான் இனி ஆங்கிலம் அல்லாத மொழியில் பேசுவதில்லை என முடிவெடுத்திருக்கவே அதிக வாய்ப்புகள்!

இதை ஒரு மொழிப் பிரச்சினையாக்கிய உங்களை என்ன செய்யலாம்!

said...

/இப்போது கூட அந்தப் பயணி ஏர்போர்ட் அதாரிடிகள் மீது கேஸ் போடலாம், நல்ல தொகை அள்ளலாம். செய்வாரா என்று தெரியவில்லை./

இதுக்கு கேஸ் எல்லாம் போட முடியாது.தவறாக நடத்தியிருந்தால்,அல்லது அடித்திருந்தால் தான் கேஸ் போட முடியும்.

said...

Fear itself is equals to death. இதுதான் தினமும் நடக்கிறது. அதுதான் இதனை தொடங்கி வைச்சவங்களுக்கும் வேணும். எதிர்பார்த்தது மாதிரியே நடக்க தொடக்கி விட்டது.

எனக்கு ஒருமுறை அட்லாண்டா- நூ யொர்க் விமானத்தில என்ன நடந்திச்சுன்னு தனியா ஒரு பதிவு போடுற அளவிற்கு விசயமிருக்கு. ஒண்ணும் பெரிச பண்ணிடலை, வந்த ஃபோன லாண்ட் ஆகுறதுக்கு முன்னாலே அட்டெண்ட் பண்ணினேன் அப்படிங்கிற காரணத்தினாலே. ஒரு கருப்பன் ரொம்பப்ப்ப்ப் பண்ணான். அவன் கிட்ட என்ன பேசினேன் அப்படிங்கிறதுதான் என்னோட அடுத்தப் பதிவு. :-))

ஆக மொத்தத்தில காட்டுப் பயலுகளா, புத்தி பேதலித்து திரியப் போறங்கப்பா...

said...

கொத்ஸ்,
ஏதோ தப்பா யோசிக்கிறீங்களோன்னு தோணுது.. நம்ம எல்லாம் என்னிக்கு தமிழில் பேசி இருக்கோம்? பேசுவதெல்லாம் தங்கிலீஸ் தானே? அந்த ஆளும் மனைவியிடம் ஆங்கிலம் கலந்த தமிழில் பேசி இருக்கலாம். கலந்திருந்த ஓரிரு ஆங்கில வார்த்தைகள் சந்தேகம் கொடுத்திருக்கலாம்.. அம்புட்டு தான்..

அடுத்த முறை அமெரிக்க விமான நிலையத்தில் இருக்கும் போது தனித் தமிழில் தொலைபேசி அந்த அனுபவத்தை எங்களுடன் பதிவிட்டுப் பகிர்ந்து கொள்ளுமாறு தமிழ்கூறு நல்லுலகம் சார்பாக, கொத்தனாரிடம் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன்.. ;)

said...

அமெரிக்கா ஏர்போர்ட்ல்ல இனிமே தஸ் 'புஷ்'ன்னு பேசுன்னாத் தான் ஒத்துக்குவாங்களா?

நம்ம தமிழர் பாதுகாஆப்பு படை வச்சு எதாவது ட்ரை பண்ணலாமா? ஏர்போர்ட் அத்தாரிட்டி நம்பர் வாங்கிக் கொடுங்களேன்...

said...

Is this how US accepting multi ethnic??

said...

முஸ்லீம்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட போது டேனிஷ் தூதரக அதிகாரி டெல்லி வெளிவிவகாரத் துறையினால் எச்சரிக்கப்பட்டார். ஆனால் தமிழன் தடுத்து வைக்கப்பட்ட போது டில்லி மெளனம் சாதிப்பதேன் ? தமிழர்களென்ன இரண்டாம்தர குடிமக்களா இந்தியாவில் ?

said...

Hello koths...

news ennavo provoking'a thaan irukku.. aana konjam aasuvaasama yoosipoma?

namma aalungalukku intha one to one talk'na ennanne theriyaathu.. naanum gavanichu irukken.. athu india'va irundalum sari ... US'a irudalum sari.. cell phone'a on pannina announce panna aarambichuduvaanga...

akkam pakkathula irukkuravangalukku thontharava irukkume'nu konjam kooda yoosikka maataanga.. ada flight land aananum oru courtesy'ku u can switch on ur mobile'nu announce pannuvanga... athukulla namma aalunga..

"aaaa mamu... flight land aagiduchupa.. inime namma pilot park panninaatha kathava thorapaanunga.. apparam poi pottikku kaathukittu ninakkum... nee enna airport vanthiya illaya?" ippadi oru conversation... ellarukkum kekkura maathiri.. ithu thevaiya?? baggage'a eduthutu veliya vandhu pesalame...

oru security measure edukuraanga.. naan thamizh'la dei makka.. rendu vengaaya vedi.. naalu kambi vedi.. moonu kanni vedi anupuda'nu sonna inga evanukku theriyum... athaan konjam athiga jaakirathaiya irukaanga..

inga oru varathula 4 school'a shooting.. ippadi irukura nilamaila extra protection onnum thappu illa..

naamalum mathavangaloda space'a mathikka kathukka ithu oru chance...

Kanya

said...

GK's comment !!! :-))))

said...

அவர் பேசியது தமிழ் என்று புரிந்து கொண்டு அமெரிக்கப் போலீஸ் எதிர்வினை காட்டியதாக நினைக்கவில்லை.

வேண்டுமென்றால் இப்படியிருக்கலாம். தமிழ் பேசுகையில் நடுநடுவில் ஆங்கிலம் கலந்து பேசியதால் சொல் ஒரு சொல் அமெரிக்கக் குழுவினர் கடுப்பாகி இந்த நடவடிக்கை எடுத்திருக்கலாம். இன்று பெங்களூரில் கடையடைப்பு என்பதால் அமெரிக்க ரிப்போர்ட் இன்னும் கையில் கிடைக்கவில்லை. :-))))

said...

//He reportedly told airport officials that he will not speak a foreign language on his cellphone at an airport in the future.//

தமிழ் எங்கே பேச மாட்டேன் என்றிருக்கிறார்.. (தனக்கு) அன்னியமொழியான ஆங்கிலம்தானே பேசமாட்டேன் என்றிருக்கிறார் ;) இனி தங்கிலீஸில் பேச வேண்டாம்.

இத்தகைய ஒரு சம்பவம் வட இந்தியருக்கு நடந்திருந்தால் இந்திய அரசின் எதிர்வினை எப்படியிருந்திருக்கும் ?

கமல்பாணியில்: இதைத்தான் கடவுளை நம்புவோர் சொல்வாங்களே, எப்போ ஆண்டவனைப் பார்க்கவே மெடல் டிடெக்டர் வழியாக போக வேண்டி வந்ததோ அன்றே கலிகாலம் முத்தி விட்டது !

said...

எனக்கு இப்போதெல்லாம் வீட்டிலோ அலுவலகத்திலோ பதிவுகள் படிக்க நேரம் இருப்பதில்லை. அதனால் தாள் பிரதி எடுத்து அலுவலகத்திற்குப் பேருந்தில் சென்று வரும் போது படிப்பேன். சில முறை சில வெள்ளைக்காரர்கள் (வெள்ளைக்காரர்கள் மட்டுமே, கறுப்பர்களோ மற்றவர்களோ இல்லை) நான் படித்துக் கொண்டிருக்கும் தமிழ் எழுத்துகளைப் பார்த்தவுடன் என் அருகில் உட்காராமல் வேறு இருக்கைக்குப் போய்விடுகிறார்கள். இது சில முறை நடந்தது மட்டுமே. நல்ல வேளையாக இது வரை யாருமே 911ஐ அழைக்கவில்லை. :-) பெரும்பாலானோர் நான் தமிழ் படிப்பதைக் கண்டு கொள்வதில்லை. இப்படி பயப்படுபவர்கள் அரண்டவன் கண்ணுக்கு... பழமொழியைத் தான் நினைவூட்டுகிறார்கள். :-)

said...

இது என்னய்யா வம்பா இருக்கு. எனக்கு என்ன மொழி தெரியுமோ அந்த மொழி தானே பேச முடியும். ரொம்ப தான் பண்ணுறாங்களோ?

said...

//இந்த மேட்டர் சரியா? தவறா? இதை கண்டிக்கணுமா? வேண்டாமா? கொஞசம் தெளிவா சொல்லுங்க சாமிங்களா. //

மேட்டரு சரியா இருந்தா கண்டிக்க வேண்டாம். தவறா இருந்தால் கண்டிக்க வேண்டும். ஆனா இது சரியா தப்பா யாரு சொல்லுறது. அது தானே மேட்டரு. என்ன சூழ்நிலையோ, என்ன பிரச்சனையோ யாருக்கு தெரியும்.

said...

//கொத்ஸ் முதல்ல வீட்டுல அந்நிய நாட்டுல தமிழ் தெரிந்த மனைவி மற்றும் குழந்தைகளிடம் ஆங்கிலத்தை தவிர்த்து தமிழ்ல பேசுவதை தவிர்க்க ஒரு .பதிவு தேவை.//

ஆங்கிலத்தையும் தவிர்த்து தமிழில் பேசுவதையும் தவிர்த்தால் அப்புறம் எப்படி? எல்லாரும் ஹிந்தி பேசக் கத்துக்கணுமா?

said...

டோண்டு சார்,

//இப்போது கூட அந்தப் பயணி ஏர்போர்ட் அதாரிடிகள் மீது கேஸ் போடலாம், நல்ல தொகை அள்ளலாம். செய்வாரா என்று தெரியவில்லை.//

இதெல்லாம் ஆவறது இல்லை. பாதுகாப்பு என்ற பெயரில் ஆளைச் சுட்டுத் தள்ளினாலே கேஸ் வருஷக் கணக்கா ஓடுது, நீங்க வேற.

said...

//சில சமயம், நமது ஆட்கள் பார்பதற்கு மத்தியகிழக்கு ஆட்கள் போல இருந்தாருந்தால் விசாரிப்பார்கள்.....//

உருவம் கண்டு எள்ளாமை வேண்டும் அப்படின்னு பாடினாங்க. இப்போ உருவம் கண்டு ஐயப்படேல் அப்படின்னு எழுதணும் போல இருக்கு. மாட்டினவரு தோற்றம் பற்றி ஒண்ணும் தெரியலையே.

//என்னை பார்த்தால் சில அமெரிக்கர்கள், உடனே நமஸ்தே என்பர்... நான் அவர்களை வேண்டுமென்றே வணக்கம் என சொல்வேன் இதனாலே சிலர் என்னை இந்தியன் என நினைப்பது இல்லை.//

நீங்க வேற. வணக்கம் அப்படின்னு தமிழ்ல பேசறதுனால நம்ம ஆளுங்களே அவங்க இந்தியன் இல்லை என்ற ரேஞ்சுக்குப் பேசறாங்க, நீங்க போயி வெளிநாட்டுக்காரனைப் பத்தி சொல்லிக்கிட்டு. :(

//எனக்கு என்னமோ தமிழில் பேசியதால் சந்தேகபட்டார்கள் என கூறுவது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.//

அதுவும் ஒரு காரணி, அது மட்டுமே இல்லை என நினைக்கிறேன்.

said...

//பாதுகாப்பு கருதி ஒரு அரசு எடுத்த நிலைக்கு இப்படி ஒரு களங்கம் கற்பிக்க உங்களால் மட்டுமெ இயலும், இ.கொ.//

ஆஹா. வந்துட்டாங்கய்யா, வந்துட்டாங்க. பாதுகாப்பு என்ற போர்வையில் என்னென்னவோ செய்யறாங்க. அத விடுங்க. அவங்க கொடுத்த டார்ச்சரில் இந்த ஆள் பொது இடங்களில் தமிழில் பேசவே மாட்டேன்னு சவுண்ட் விடறாரே. அதானே மேட்டர்.

//ஆங்கிலமும் தமிழும் [அது தமிழ் என்றே அந்த அதிகாரிக்குத் தெரியக்கூட வாய்ப்பில்லை!] கலந்து ஒருவர் ரைவல்ரி பற்றிப் பேசும் போது, ஹிட், ஷாட், டச் டௌன், பாம்ப் போன்ற சொற்கள் வந்திருக்க அதிக வாய்ப்பிருக்கிறது.//

அப்படிப் பேசினதா தெரியலையே. அப்படிப் பேசினா தமிழில் பேச மாட்டேன்னு ஏன் சொல்லணும்?

//இதைக் கவனிக்கவெனவே நியமிக்கப்பட்ட ஒருவர் இவரை சந்தேகித்ததிலும் நியாயம் இருக்கிறது.//

'off-duty airline employee ' அப்படின்னா இந்த மாதிரி பேச்சுக்களை கவனிக்கவென நியமிக்கப்பட்ட ஆளா? :)

//இவராகத்தான் இனி ஆங்கிலம் அல்லாத மொழியில் பேசுவதில்லை என முடிவெடுத்திருக்கவே அதிக வாய்ப்புகள்!//

அப்படின்னு நீங்க சொல்லறீங்க. அவனுங்க குடுத்த டார்ச்சரில் எடுக்கப்பட்ட முடிவுன்னு நான் சொன்னா யாரு சரி? மாட்டின அவரே வந்து சொன்னாத்தான் உண்டு.

//இதை ஒரு மொழிப் பிரச்சினையாக்கிய உங்களை என்ன செய்யலாம்!//

தமிழ் பாதுகாவலர்கள் எல்லாம் சேர்ந்து செம்மொழிச் செம்மல் அப்படி இப்படின்னு பட்டம், பணமுடிப்புன்னு குடுக்கலாம், நம்ம பேரில் ஒரு நாள் எல்லாருக்கும் லீவு விடலாம், ஒரு மந்திரிப் பதவியோ ஏதாவது கார்பரேஷன் தலைமையோ தரலாம், குறைந்த பட்சம் வரிவிலக்காவது தரலாம். அட எல்லாத்தையும் விடுங்க. ஆளுக்கு நாலு பின்னூட்டம் போட்டு பதிவுல பி.க.தனமாவது பண்ணலாம். என்ன சொல்லறீங்க? :D

said...

தெக்கி, எதோ ஆங்கிலத்துல எல்லாம் சொல்லி இருக்கீங்க. நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.

//எனக்கு ஒருமுறை அட்லாண்டா- நூ யொர்க் விமானத்தில என்ன நடந்திச்சுன்னு தனியா ஒரு பதிவு போடுற அளவிற்கு விசயமிருக்கு. ஒண்ணும் பெரிச பண்ணிடலை, வந்த ஃபோன லாண்ட் ஆகுறதுக்கு முன்னாலே அட்டெண்ட் பண்ணினேன் அப்படிங்கிற காரணத்தினாலே. ஒரு கருப்பன் ரொம்பப்ப்ப்ப் பண்ணான். அவன் கிட்ட என்ன பேசினேன் அப்படிங்கிறதுதான் என்னோட அடுத்தப் பதிவு. :-))//

ஐயாம் தி வெயிட்டிங்.

said...

//அந்த ஆளும் மனைவியிடம் ஆங்கிலம் கலந்த தமிழில் பேசி இருக்கலாம். கலந்திருந்த ஓரிரு ஆங்கில வார்த்தைகள் சந்தேகம் கொடுத்திருக்கலாம்.. அம்புட்டு தான்..//

அதுக்கு ஏன் தமிழில் பேச மாட்டேன்னு அந்த ஆள் கதறணும்? அங்கதானே உதைக்குது?

//அடுத்த முறை அமெரிக்க விமான நிலையத்தில் இருக்கும் போது தனித் தமிழில் தொலைபேசி அந்த அனுபவத்தை எங்களுடன் பதிவிட்டுப் பகிர்ந்து கொள்ளுமாறு தமிழ்கூறு நல்லுலகம் சார்பாக, கொத்தனாரிடம் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன்.. ;)//

ஆஹா. காத்துக்கிட்டு இருக்காங்கடா. நான் பஞ்சராகணமின்னு, இவங்க கூட இருக்கும் போது சாக்கரதையாத்தேன் இருக்கோணும் போலிருக்கு. ஆத்தாடி...

said...

//அமெரிக்கா ஏர்போர்ட்ல்ல இனிமே தஸ் 'புஷ்'ன்னு பேசுன்னாத் தான் ஒத்துக்குவாங்களா?//

தம்பி தேவு, புஷ்ஷுன்னு பேசினா டைரக்ட் ஆப்புதான்.

//நம்ம தமிழர் பாதுகாஆப்பு படை வச்சு எதாவது ட்ரை பண்ணலாமா? ஏர்போர்ட் அத்தாரிட்டி நம்பர் வாங்கிக் கொடுங்களேன்...//

அட அவங்களே உள்ளாட்சி தேர்தல் சீட்டு விவகாரத்தில் அடிச்சிக்கிட்டு இருக்காங்க. அது முக்கியமா தமில் முக்கியமா? நீங்க வேற, இப்போ தமிழ் பாதுகாப்பு எல்லாம் தமிழுக்கு ஆப்பு என்ற லெவலில்தான்.

said...

//Is this how US accepting multi ethnic??//

நிலமை நார்மலா அவ்வளவு மோசமில்லை மயூரேசன். இந்த் இடத்தில பசங்க கொஞ்சம் ஓவரா ரியாக்சன் குடுத்துட்டாங்கன்னு நினைக்கறேன். அம்புட்டுதான்.

said...

//முஸ்லீம்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட போது டேனிஷ் தூதரக அதிகாரி டெல்லி வெளிவிவகாரத் துறையினால் எச்சரிக்கப்பட்டார். ஆனால் தமிழன் தடுத்து வைக்கப்பட்ட போது டில்லி மெளனம் சாதிப்பதேன் ? தமிழர்களென்ன இரண்டாம்தர குடிமக்களா இந்தியாவில் ?//

அட்றா சக்கை. அட்றா சக்கை. இந்த மாதிரி ஆளுங்களைத்தான் எதிர் பார்த்தேன். நீ ஆடும்மா. ஸ்டார்ட் மீசிக்.

said...

கன்யாக்கா, மொத முறை நம்ம பக்கம் வந்திருக்கீங்கன்னு நினைக்கறேன். வாங்க வாங்க.

அவரு சத்தம் போட்டு பேசினதா தெரியலையே. சரி அதெல்லாம் விடுங்க. எது சந்தேகத்துக்குரிய நடவடிக்கைன்னு கட்டம் கட்டறது? இது எங்க போயி முடியும்? அதான் கவலை.

நம்ம ஆளுங்க மட்டும் இல்லைங்க. விமானம் இறங்கினாப் போதும் எல்லாருமே போன் எடுத்து பேசறாங்க. அதுக்கு மனோத்தத்துவ முறையில் என்னென்னமோ சொல்லறாங்க. வேணுமுன்னா நம்ம தெக்கியைக் கேளுங்க. அவருக்குத்தான் அனுபவம் அதிகம். :)

சரி இந்த முறை கொஞ்சம் கஷ்டப்பட்டு உங்க தங்கலிஷைப் படிச்சுப் பதில் போட்டுட்டேன். அடுத்த முறை கொஞ்சம் தமிழிலேயே போடுங்களேன். ப்ளீஸ்.

said...

யாத்திரீகன்,

வந்து சிரிச்சமைக்கு நன்றி. அட சட், வந்து படிச்சமைக்கு நன்றி! :)

said...

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டு பிறகு விடுதலையான புகைப்பட நிருபர் சுந்தரம் (அவர்தான் என நினைக்கிறேன்) ஒரு முறை ஒரு சமஸ்தானத்துக்கு ஃபோட்டோ கவரேஜுக்காக சென்றிருக்கிறார். முதல் நாள் மஹாராஜாவின் நிகழ்ச்சியை ஷூட் செய்ய இயலவில்லை. ஆகவே அவர் இவ்வாறு தனது ஆசிரியருக்கு சமஸ்தானத் தலைநகரிலிருந்து தந்தி கொடுத்திருக்கிறார். "Unable to shoot the Maharaja today, hope to be able to shoot him tomorrow."

தந்தியை வாங்கிக் கொண்ட க்ளார்க் அதை நைசாக போஸ்ட் மாஸ்டருகூ காட்ட அவர் ஓசைப்படாமல் போலீஸை வரவழைக்க, பீமன் மற்றும் அவன் மகன் கடோத்கஜனைப் போன்ற இரு போலீசார் வந்து சுந்தரத்திடம் வந்து "எங்கள் மஹாராஜாவையாடா சுடப் போகிறாய் கயவனே" என்றெல்லாம் கன்னாபின்னாவென்றெல்லாம் திட்டிக் கொண்டு அள்ளிப் போனார்கள், முட்டிக்கு முட்டி தட்ட.

நல்ல வேளையாக அவர் தான் யார் என்பதை உதை ஆரம்பிக்கும் முன்னாலேயே கூற முடிய, பிறகு மன்னிப்பெல்லாம் கேட்டுக் கொண்டு ஃபீலிங்ஸோடு அனுப்பித்தார்கள் என்று அவர் குமுதத்தில் சமீபத்தில் 1991-க்கு முன்னால் எழுதியதை படித்திருக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

//வேண்டுமென்றால் இப்படியிருக்கலாம். தமிழ் பேசுகையில் நடுநடுவில் ஆங்கிலம் கலந்து பேசியதால் சொல் ஒரு சொல் அமெரிக்கக் குழுவினர் கடுப்பாகி இந்த நடவடிக்கை எடுத்திருக்கலாம். இன்று பெங்களூரில் கடையடைப்பு என்பதால் அமெரிக்க ரிப்போர்ட் இன்னும் கையில் கிடைக்கவில்லை. :-))))//

வாங்கண்ணா, இது மேட்டர். இதை விட்டுட்டு என்னென்னமோ பேசறாங்க பாருங்க. ஆபீஸ் வந்து ரிப்போர்ட் எல்லாம் பார்த்து டீட்டெயில்டா ஒரு அறிக்கை விட்டுடுங்க.

said...

//தமிழ் எங்கே பேச மாட்டேன் என்றிருக்கிறார்.. (தனக்கு) அன்னியமொழியான ஆங்கிலம்தானே பேசமாட்டேன் என்றிருக்கிறார் ;) இனி தங்கிலீஸில் பேச வேண்டாம்.//

அப்படி போடுங்க அருவாள!

//இத்தகைய ஒரு சம்பவம் வட இந்தியருக்கு நடந்திருந்தால் இந்திய அரசின் எதிர்வினை எப்படியிருந்திருக்கும் ?//

அக்காங்ப்பா. அத்த சொல்லு. இது இன்னா நாயம்னு கேட்டா நம்ம ஆளுங்க சும்மா வந்து கூவினேக்கீறாங்கப்பா. நீயாவது நாயமா கேட்டீயே.

//கமல்பாணியில்: இதைத்தான் கடவுளை நம்புவோர் சொல்வாங்களே, எப்போ ஆண்டவனைப் பார்க்கவே மெடல் டிடெக்டர் வழியாக போக வேண்டி வந்ததோ அன்றே கலிகாலம் முத்தி விட்டது !//

அத்த சொல்லு. எல்லாம் கலி காலம்ப்பா. :)

said...

//நான் படித்துக் கொண்டிருக்கும் தமிழ் எழுத்துகளைப் பார்த்தவுடன் என் அருகில் உட்காராமல் வேறு இருக்கைக்குப் போய்விடுகிறார்கள். //

என்ன கொடுமை இது சரவணன், சாரி குமரன். சரி விடுங்க. எல்லாம் ஒண்ணுதானே. :)

//நல்ல வேளையாக இது வரை யாருமே 911ஐ அழைக்கவில்லை.//

தப்பிச்சீங்க போங்க.

//பெரும்பாலானோர் நான் தமிழ் படிப்பதைக் கண்டு கொள்வதில்லை. இப்படி பயப்படுபவர்கள் அரண்டவன் கண்ணுக்கு... பழமொழியைத் தான் நினைவூட்டுகிறார்கள். :-)//

இப்படி நடக்கத்தான் அந்த தீவிரவாதிகளும் எண்ணியிருப்பார்கள், அந்த விதத்தில் அவர்கள் வென்றுவிட்டார்கள் அல்லவா?

said...

//இது என்னய்யா வம்பா இருக்கு. எனக்கு என்ன மொழி தெரியுமோ அந்த மொழி தானே பேச முடியும். ரொம்ப தான் பண்ணுறாங்களோ?//

அதக் கேளு ராசா. புலி நீ பாஞ்சு வர வேணாம்? இம்மா லேட்டா வந்து சும்மா பூனை மாதிரி சவுண்ட் விடற?

said...

//மேட்டரு சரியா இருந்தா கண்டிக்க வேண்டாம். தவறா இருந்தால் கண்டிக்க வேண்டும். ஆனா இது சரியா தப்பா யாரு சொல்லுறது. அது தானே மேட்டரு. என்ன சூழ்நிலையோ, என்ன பிரச்சனையோ யாருக்கு தெரியும்.//

சரி. இப்போ என்ன சொல்ல வர? அதைத்தான் கொஞ்சம் தெளிவா சொல்லித் தொலையேன். :)

said...

//பிறகு மன்னிப்பெல்லாம் கேட்டுக் கொண்டு ஃபீலிங்ஸோடு அனுப்பித்தார்கள் என்று அவர் குமுதத்தில் சமீபத்தில் 1991-க்கு முன்னால் எழுதியதை படித்திருக்கிறேன்//

பாருங்க. நம்ம ஆளுங்க மாப்பெல்லாம் கேட்டு இருக்காங்க. இங்க பாருங்க. மாட்டுன ஆளு தமிழே பேச மாட்டேன்னு அலறரான். அதுதான் நிலமை.

சுவையான சம்பவத்தை பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி டோண்டு சார்.

said...

எனக்கென்னமோ அமெரிக்கர்கள் தீவிரவாதிகள் விஷயத்தில் ஓவர் ரியாக்ட் செய்வதாகத் தான் படுகிறது. 9/11க்கு அப்புறம் ரொம்பவே தான் பயந்து போயிருக்கிறார்கள். அஃப்கானியர்கள் என்று கருதி நம்மூர் அப்பாவி சர்தார்ஜிக்கள் ரெண்டு பேரை 9/11க்கு அப்புறம் போட்டுத் தள்ளியதையும் படித்திருக்கிறேன். எல்லாம் தும்ப விட்டு வாலைப் பிடிக்கற கதை தான். அமெரிக்காவுல இருக்கிற நீங்க தான் பக்குவமா எடுத்துச் சொல்லி அவிங்களைத் திருத்தோணும்.

said...

//என்ன கொடுமை இது சரவணன். இனி விமான நிலையத்திலிருந்து என் மனைவியிடம் பேச வேண்டுமானால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டுமா? அவர்களுக்கு ஆங்கிலம் தெரியும் சரி. ஆனால் என் தாயாரிடம் பேச வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?//

என் மனசுல இருந்த கேள்விகள், இலவசம்.. உண்மயிலே இது கொடுமை தான் இலவசம்

said...

//அமெரிக்காவுல இருக்கிற நீங்க தான் பக்குவமா எடுத்துச் சொல்லி அவிங்களைத் திருத்தோணும்.//

ஆமாம். நான் சொன்னாத்தான் கேட்கப் போறாங்க. நீங்க வேற.

said...

//என் மனசுல இருந்த கேள்விகள், இலவசம்.. உண்மயிலே இது கொடுமை தான் இலவசம்//

வாங்க. இதெல்லாம் எங்க போயி முடியுதுன்னு வெயிட் பண்ணித்தான் ஆகணும். அதுவரைக்கும் இப்படி நாம பேசிக்கிட்டே இருக்கலாம். :)

said...

வணக்கம் கொத்ஸ்..
(முதலில் உள்ளேன் ஐயா.. உங்களுக்கு அர்த்தம் புரிந்திருக்கும்.).

இனிமேல், வந்து கண்டிப்பாக கையெழுத்து போட்டுவிட்டுப் போகிறேன்.. எஸ்.கே பதிவில் நீங்கள் தலையில் அடித்த அடியில் நேராக இங்கே வந்துவிட்டேன். :-) ( எப்போதும் உங்களின் பக்கங்களை வாசித்து வருபவன் என்று சொன்னால் நம்புவீர்கள் தானே..)

said...

//வணக்கம் கொத்ஸ்..
(முதலில் உள்ளேன் ஐயா.. உங்களுக்கு அர்த்தம் புரிந்திருக்கும்.).//

புரியுது. புரியுது. :)

//இனிமேல், வந்து கண்டிப்பாக கையெழுத்து போட்டுவிட்டுப் போகிறேன்.. எஸ்.கே பதிவில் நீங்கள் தலையில் அடித்த அடியில் நேராக இங்கே வந்துவிட்டேன்.//

ஐயா அடிக்க எல்லாம் இல்லை. அது ஒரு சுய விளம்பரம். அவ்வளவுதான். அதைப் பார்த்து நீங்கள் வந்ததால அது சக்ஸஸ்! ஹிஹி. மத்தபடி அடி உதை எல்லாம் வாங்கற ஆளுங்க நானு. குடுக்கறது எல்லாம் இல்லை.

//எப்போதும் உங்களின் பக்கங்களை வாசித்து வருபவன் என்று சொன்னால் நம்புவீர்கள் தானே..) //

நம்புதேன். நம்புதேன். ஆமா, நான் நம்புதேன்னு சொன்னா நீங்க நம்புவீயளா?

said...

வணக்கம் இ.கொ.

உங்கள் பக்கம் வரலாம் எனப்பார்த்தால் இயற்கை சதி செய்து கொண்டே இருக்கிறது. உங்கள் பக்கத்தின் எழுத்துவடிவம் எனக்கு சரியாகவே வரவில்லை. ஏன் எனவும் தெரியவில்லை. குத்துமதிப்பாக தமிழில் பேசினால் தீவிரவாதியா என்பதை மட்டும் புரிந்து கொண்டேன்.

நம்ம ஊரு தமிழ்குடிதாங்கிகள் விளம்பர பலகையில் தார் பூசுவது விட்டு விட்டு இது போல பிரச்சினைகளில் கவனம் செலத்தாலாம். புஷ் கிட்டே இவங்க பருப்பு வேகாதுனு உள்ளூரில் கூவினுகிறாங்க போல.!

said...

வாங்க வவ்வால். இது நம்ம பாப்புலாரிட்டி பிடிக்காம எதிர் கட்சியினர் செய்கின்ற சதி. ஆனால் அதையெல்லாம் மீறி வந்து வாழ்த்தும் உங்களுக்கு என்ன பட்டம் கொடுப்பதென தெரியவில்லை.

..நம்ம ஊரு தமிழ்குடிதாங்கிகள் விளம்பர பலகையில் தார் பூசுவது விட்டு விட்டு இது போல பிரச்சினைகளில் கவனம் செலத்தாலாம். ..

அய்யய்யே நீங்க வேற, அதெல்லாம் இவங்க செய்யலைன்னா யாரு செய்வா? அப்புறம் தமிழ் எப்படி வளரும்? போர்டில் தார் பூசறது வந்து களையெடுக்கறா மாதிரி. சினிமாக்களுக்கு தமிழ் பெயர் வைக்கிறது உரம் போடறா மாதிரி. களையெடுத்து உரம் போட்டா தமிழ் வளராமலையா போயிடும்.....

said...

மிக நல்ல பதிவு...

said...

//savepozhichalur said...

மிக நல்ல பதிவு... //

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிங்க. இனி ரெகுலரா நம்ம பக்கத்துக்கு வாங்க.

said...

அமெரிக்காவுல இருந்துகிட்டு தமிழ்ல பதிவு போட்டா தப்புன்னு எப்போ வரும்? இங்கே அமெரிக்காரங்க வந்தா தமிழ்ல பேச சொல்லிடலாமா? அதுக்கும் நம்ம போலீஸ் மாமாங்க கையை நீட்டிக்கலாம் பாருங்க.

said...

இளா,

தமிழ்ப் பதிவு போட்டா வராது. நம்ம பேட்நியூஸ் இந்தியா பதிவு பாருங்க. வேற என்னன்னமோ சொல்லி இருக்காரு!

சரிதான், இப்படி எதாவது குண்டக்க மண்டக்கன்னு சொல்லிட்டுப் போகாதீங்க. அவன் காதுல விழுந்து தொலைக்கப் போகுது. அப்புறம் இன்னிக்கு இருக்கற நிலைமையில் அப்படியே சொன்னாலும் சொல்லுவான்.

நம்ம ஊரில் மாமாஸ் கையூட்டு வாங்க இன்னொரு வழி தந்த வள்ளலே வாழ்க!

said...

ஏற்கனவே காட்டுப் புலி, கழுதைப் புலின்னு அலையறானுங்க. நீங்க என்ன இப்படி ஒண்டியா வந்துட்டீங்க. ஆமாங்க, இன்னிக்கு எல்லாம் பயமயமாகிப் போச்சு, இங்க இருக்கறவனுங்க நம்ம தெனாலி ரேஞ்சுக்கு புலம்ப ஆரம்பிச்சா ஆச்சரியம் இல்லை.

அவனுங்க மட்டும் அப்படி புலம்பட்டும், அடுத்த டாபிக் ரெடி இல்ல?! - இலங்கைத் தமிழில் புலம்பினால் தீவிரவாதியா!