Tuesday, October 24, 2006

பிளேனில் போனா போலீஸ் புடிக்கும்

என்னடா இவன் இப்போதான் தமிழில் பேசினா போலீஸ் புடிக்கும் அப்படின்னு எழுதினான். இப்போ அமெரிக்காவில் பிளேனிலேயே போகக் கூடாதான்னு கேட்கும் மக்களே, இந்தப் பிரச்சனை நம் திருநாடாம் இந்தியாவில்தான். அட, ஆமாங்க ஆமாம். நேத்து ரீடிப் தளத்தில் இந்த செய்தியைப் படித்தேன். படிச்சதுலேர்ந்து வயத்தைக் கலக்குதப்பா. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். மேட்டர் இதுதான்.

நம் நாட்டில் 126 விமானநிலையங்கள் இருக்காம். அதில் இயங்குவதற்கான அனுமதி பத்திரங்கள் (Operating Licence) பெற்றுள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? வெறும் ஐந்து. ஆமாம். அதிகமில்லை ஜெண்டில்மென் வெறும் ஐந்தே ஐந்து. தற்போதைய விதிமுறைகள் படி ஒரு விமான நிலையம் இயங்க வேண்டுமானால், இந்த அனுமதி பெற்றே தீர வேண்டும். ஆனால் இவ்வளவு நாட்களாக இந்த அனுமதி இல்லாமல் 121 நிலையங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது இந்த அனுமதியை வரும் மார்ச் மாத இறுதிக்குள் பெற வேண்டும். இல்லையென்றால் இந்நிலையங்கள் இயங்க முடியாதென்று இத்துறை அமைச்சரகம் தற்பொழுது கெடு விதித்துள்ளது.

இந்த அனுமதி பெற்றிருக்கும் விமானநிலையங்கள் ஐந்தும் இவைதான் - புது தில்லி, மும்பை, கொச்சின், புட்டபர்த்தி மற்றும் மிசோரத்தில் இருக்கும் லெங்புய். நாட்டில் இருக்கும் முக்கிய நகரங்களான சென்னை, கொல்கொத்தா, ஹைதராபாத், பெங்களூர் போன்ற விமான நிலையங்கள் கூட அனுமதி பெறாமல்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதில் புது தில்லி, மும்பாய் ரெண்டும் தனியார் வசம் சென்றாகிவிட்டது. சர்வதேச விமான போக்குவரத்து கழகத்தின் (International Civil Aviation Organisation) வற்புறுத்தலால்தான் இது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

இப்பொழுது பாதுகாப்பு அமைச்சகம், சுற்றுச்சூழல் அமைச்சகம், ராணுவத் தலைமை மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகளின் அனுமதி பெற்ற பின்னரே இந்நிலையங்கள் DGCA (Directorate General of Civil Aviation) என்ற அமைப்பிடம் சென்று அனுமதி பத்திரம் பெற வேண்டும். அடுத்த ஐந்து மாதங்களில் இதைச் செய்ய வேண்டும். இது போன்று அவசரத்தில் அள்ளித் தெளித்தால் எவ்வளவு தூரம் இது முறையாகச் செய்யப்படுமோ தெரியவில்லை.

இந்த சமயத்தில் என் மனதில் சில கேள்விகள். உங்கள் கருத்தைத்தான் சொல்லுங்களேன்.
  • இது நாள் வரை எப்படி இவ்வளவு விமான நிலையங்களையும் அனுமதித்துள்ளனர்? ஒரு விமான நிலையம் கட்டும் பொழுது பெற வேண்டிய அனுமதிகள் பெறப் பெற்றனவா என்ற தணிக்கையே கிடையாதா?
  • இது சட்டபூர்வமான ஒன்றா? ஒரு விபத்தே நடந்தால் இது யார் பொறுப்பு?
  • இதனை இவ்வளவு நாள் அனுமதித்திருந்த அதிகாரிகள் தண்டிக்கப் படுவார்களா?
  • இப்பொழுது ராணுவமோ, சுற்றுச்சூழல் அமைச்சகமோ, உள்ளூர் அதிகாரிகளோ எதேனும் ஆட்சேபணை எழுப்பினால் என்னவாகும்?

89 comments:

இலவசக்கொத்தனார் said...

அடுத்தது எத்தனை பைலட்டுகள் எட்டு போட்டு லைசன்ஸ் எடுத்தாங்களோ தெரியலையே....

Thekkikattan|தெகா said...

இது என்ன புதுக் கதையா இருக்கு. மரத்த வச்சவனுக்கு தண்ணி ஊத்தத் தெரியாதா?

இப்பத்தான் இதெல்லாம் வெளிச்சத்துக்கு வருது. ஏன்னா, பெரிய பெரிய மூளைகள் எல்லாம் எல்லா இடத்துக்கும் அடிக்கடி போக வேண்டி இருப்பதால்.

rv said...

ஆரமிச்சாச்சா அடுத்த ரவுண்ட?

இதுக்கு எவ்வள்வு டார்கெட்?

அதச் சொன்னீருன்னா, ப்ளான் பண்ணி அடிக்கலாம்.

இலவசக்கொத்தனார் said...

//இது என்ன புதுக் கதையா இருக்கு. மரத்த வச்சவனுக்கு தண்ணி ஊத்தத் தெரியாதா?//

இப்போ என்ன சொல்ல வறீங்க? இதை எல்லாம் கார்பெட் அடியில தள்ளிடுவாங்கன்னா?

//இப்பத்தான் இதெல்லாம் வெளிச்சத்துக்கு வருது. //

என்ன அநியாயம் பாருங்க. சட்டம் போடற அரசாங்கமே சட்டத்தை மதிக்காம மிதிக்குது.

இலவசக்கொத்தனார் said...

ஆரமிச்சாச்சா அடுத்த ரவுண்ட?//

ஆரம்பிச்சாச்சு. :D

இதுக்கு எவ்வள்வு டார்கெட்?//

நம்ம பசங்களை கேளுங்க. டார்கெட் எல்லாம் கிடையவே கிடையாது. படிப்படியாதான்.

அதச் சொன்னீருன்னா, ப்ளான் பண்ணி அடிக்கலாம்.//

முதலில் 25, அப்புறம் 50, அப்படியே போகும்...அதானால நீங்க அப்பப்போ வந்து பி.க. பண்ணிக்கிட்டே இருங்க.

நாகை சிவா said...

தல, என்ன தல இப்படி பயம் காட்டுறீங்க. நான் டில்லிக்கு போகமா இந்த தடவை தான் நேரா சென்னை போகலாம் என்று இருந்தேன். அதுக்கும் இப்ப ஆப்பா?

இலவசக்கொத்தனார் said...

புலி,

நான் என்ன பண்ண? அதுதான் நம்ம ஊரு லட்சணம். எதுக்கும் சாமியை வேண்டிக்கிட்டே வண்டி ஏறு.

நாகை சிவா said...

இது எல்லாம் சரி ஆகும் வரைக்கும் இந்தியாவிற்கு கப்பல போக வேண்டியது தான்.....

அதுக்கும் ஏதும் ஆப்பு இருக்கா கொஞ்சம் பாத்து சொல்லுங்க கொத்துஸ்

நாகை சிவா said...

//நான் என்ன பண்ண? அதுதான் நம்ம ஊரு லட்சணம். எதுக்கும் சாமியை வேண்டிக்கிட்டே வண்டி ஏறு. //

இதில் என் தவறு என்ன வந்துச்சு. இது வரைக்கும் சென்னைக்கு வந்து போன அத்தனை பேரையும் போலீஸ் பிடிக்கட்டும் அப்புறம் என்னய புடிக்கட்டும்..... இது மட்டும் நடக்காட்டி எங்க தானை தலைவர் கொத்துஸ் தனி விமான நிலையம் ஆரம்பிப்பார் எங்களுக்காக....

நாகை சிவா said...

//முதலில் 25, அப்புறம் 50, அப்படியே போகும்...அதானால நீங்க அப்பப்போ வந்து பி.க. பண்ணிக்கிட்டே இருங்க.//

இதுல இந்த பி.க என்பது பின்னூட்ட கவுண்டிங் தானே????

சரி சரி நானும் அப்ப அப்ப வந்து பி.க. பண்ணிட்டு போறேன். :)

இலவசக்கொத்தனார் said...

//அதுக்கும் ஏதும் ஆப்பு இருக்கா கொஞ்சம் பாத்து சொல்லுங்க கொத்துஸ்//

யப்பா இது கடல் கணேசனை கேட்க வேண்டிய கேள்வி. தப்பா இங்க வந்திருச்சு. அவரு வந்து படிக்கும் போது இதுக்கு பதில் சொல்வாரு.

இலவசக்கொத்தனார் said...

//இது வரைக்கும் சென்னைக்கு வந்து போன அத்தனை பேரையும் போலீஸ் பிடிக்கட்டும் அப்புறம் என்னய புடிக்கட்டும்....//

புலி, நாட்டுல எத்தனையோ பேரு லைசன்ஸ் இல்லாம போறான், ஆன நம்ம நேரம் மாட்டறது இல்லையா? அந்த மாதிரி ஆவ கூடாதுன்னு வேண்டுக்கோ. அம்புட்டுதான் சொல்வேன்.

//இது மட்டும் நடக்காட்டி எங்க தானை தலைவர் கொத்துஸ் தனி விமான நிலையம் ஆரம்பிப்பார் எங்களுக்காக....//

சொல்ல மறந்துட்டேனே. லைசன்ஸ் இருக்குற ஐந்தில் இரண்டு ஏற்கனவே தனியார் வசம். அதை சேர்க்கறேன்.

இலவசக்கொத்தனார் said...

//இதுல இந்த பி.க என்பது பின்னூட்ட கவுண்டிங் தானே????//

நம்ம ஊர் தேர்தலுக்கு அப்புறமா கவுண்டிங் கயமைத்தனம் எல்லாமே ஒண்ணுதானே.... வந்து கவுண்ட் பண்ணிட்டுப் போங்க. :)

நாகை சிவா said...

//நம்ம ஊர் தேர்தலுக்கு அப்புறமா கவுண்டிங் கயமைத்தனம் எல்லாமே ஒண்ணுதானே.... வந்து கவுண்ட் பண்ணிட்டுப் போங்க. :) //

நம்ம பதிவுல அரசியல் பேசக் கூடாது என்ற விதிய மீறி பேசிட்டீங்க....

இருந்தாலும் உண்மை தான் சொல்லி இருக்கீங்க .... :)

இலவசக்கொத்தனார் said...

//நம்ம பதிவுல அரசியல் பேசக் கூடாது என்ற விதிய மீறி பேசிட்டீங்க....//

இது விதிமுறை மீறல் பத்தின பதிவுதானே. மன்னிச்சிடுங்க.

நாகை சிவா said...

//சொல்ல மறந்துட்டேனே. லைசன்ஸ் இருக்குற ஐந்தில் இரண்டு ஏற்கனவே தனியார் வசம். அதை சேர்க்கறேன். //

இரண்டை மூனு ஆக்கிட வேண்டியது தான்
:)

rv said...

அட...

அதுக்குள்ள கூட்டு சேர்ந்து சாட்டா? யோவ் புலி, அதான் யாஹூ மெசெஞ்சர் கூகிள் டாக்கெல்லாம் இருக்குல்ல. அங்கன பேசினா என்னவாம்?

தமிழ்மண வைரஸ்னு யாராவது பட்டம் கொடுக்கறதுக்குள்ள நிறுத்துவோய்!

rv said...

பதிவப் பத்தி ஒண்ணுமே சொல்லலேன்னு கேக்கக்கூட இல்ல பாருங்க கொத்ஸு.

உம்ம பணி பி.க செய்து கிடப்பதேன்னு அலையுறீரு..

rv said...

நல்ல பயனுள்ள பதிவு.

லைசென்ஸ் இல்லாமல் ஏர்போர்டே நடாத்தலாமா? அதுனாலதான் இண்டர்நேஷனல் ப்ளைட்டெல்லாம் நடுராத்திரில இறங்கி ஏறுதா?

rv said...

இந்தப்பதிவை பயனுள்ள ஒரு அரிய தகவல் பெட்டகமாக மாற்றியதற்கு ஒரு நன்னி! (எனக்கு நானே!)

கதிர் said...

இந்தியால மட்டும்தான் இப்படியா?
இல்ல உலகம் பூராவுமே இப்படிதானா?

இஞ்ஜினியரிங் காலேஜ் தொறக்கற மாதிரி திறந்து வச்சிட்டாங்களே நம்ம ஆளுங்க!

கதிர் said...

இந்தியால மட்டும்தான் இப்படியா?
இல்ல உலகம் பூராவுமே இப்படிதானா?

இஞ்ஜினியரிங் காலேஜ் தொறக்கற மாதிரி திறந்து வச்சிட்டாங்களே நம்ம ஆளுங்க!

இலவசக்கொத்தனார் said...

//தமிழ்மண வைரஸ்னு யாராவது பட்டம் கொடுக்கறதுக்குள்ள நிறுத்துவோய்!//

ஒரே ஒரு பதிவு முகப்பில் வந்தா வைரஸ் இல்லை. இது வெறும் பி.க.தான். அதுக்கான போலீஸ்காரே அப்பீட் ஆகியாச்சி. அப்புறம் என்ன? அப்படியாவது இந்த பதிவு தமிழ்மண முகப்பில் இருந்து நாலு பேர் படிக்கட்டுமேன்னுதான்.

இலவசக்கொத்தனார் said...

//பதிவப் பத்தி ஒண்ணுமே சொல்லலேன்னு கேக்கக்கூட இல்ல பாருங்க கொத்ஸு.//

கேட்டு கேட்டு அலுத்துப் போச்சுங்க. அதான் வரவங்க படிப்பீங்க அப்படின்னு நானே முடிவு பண்ணிக்கறேன்.

இலவசக்கொத்தனார் said...

//நல்ல பயனுள்ள பதிவு.//

நன்றி. நன்றி! :)

//லைசென்ஸ் இல்லாமல் ஏர்போர்டே நடாத்தலாமா? அதுனாலதான் இண்டர்நேஷனல் ப்ளைட்டெல்லாம் நடுராத்திரில இறங்கி ஏறுதா?//

அதானா விஷயம். எனக்கு இப்போ எதுக்கு சம்பந்தமில்லாம கஜா கப்பல் நினைவுக்கு வருது??

இலவசக்கொத்தனார் said...

//இந்தப்பதிவை பயனுள்ள ஒரு அரிய தகவல் பெட்டகமாக மாற்றியதற்கு ஒரு நன்னி! (எனக்கு நானே!)//

அட நானும் சொன்னேங்க. :D

இலவசக்கொத்தனார் said...

//இந்தியால மட்டும்தான் இப்படியா?
இல்ல உலகம் பூராவுமே இப்படிதானா?

இஞ்ஜினியரிங் காலேஜ் தொறக்கற மாதிரி திறந்து வச்சிட்டாங்களே நம்ம ஆளுங்க!//

வாங்க தம்பி. பாருங்க என்ன அநியாயம். ஒரு அளவு இல்லாம நடந்து இருக்குற அராஜகம். இதுக்கு பொறுப்பானவங்க எல்லாம் சந்தோஷமா சம்பளமும் பென்ஷனும் வாங்கிக்கிட்டு இருப்பாங்க.

தி. ரா. ச.(T.R.C.) said...

ஏம்பா இலவசம் நாங்கதான் கொஞ்சம் விவரம் கம்மி.உங்க ஆளுங்கதான் ரொம்ப விவரம் தெரிஞ்சவங்களாச்சே.எப்படி உங்க ஊர் விமானம் எல்லாம் இங்கே வந்து இறங்குது.ஒருவேளை அங்கே இதைவிட மோசமோ.

இலவசக்கொத்தனார் said...

//எப்படி உங்க ஊர் விமானம் எல்லாம் இங்கே வந்து இறங்குது.ஒருவேளை அங்கே இதைவிட மோசமோ.//

அதான் பாதி ராத்திரிக்கு வருது. கஜா போட் மாதிரி அப்படின்னு எல்லாம் பேசியாச்சே. இன்னும் அதையே கேட்டுக்கிட்டு. :)

பினாத்தல் சுரேஷ் said...

இப்படிப்பட்ட அனுமதியை சென்னைக்கும் பெங்களூருக்கும் வழங்காமல் வட இந்திய நகரங்களுக்கு மட்டுமே வழங்கியதைத்தான் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று சொல்கிறோம்.

(அரசியல் கலக்காம் பதிவு போட்டுடுவீங்க்ளோ?)

இலவசக்கொத்தனார் said...

//இப்படிப்பட்ட அனுமதியை சென்னைக்கும் பெங்களூருக்கும் வழங்காமல் வட இந்திய நகரங்களுக்கு மட்டுமே வழங்கியதைத்தான் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று சொல்கிறோம்.//

இதெல்லான் தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும் வெரைட்டிங்க. அவங்களா பாத்து தர விஷயமில்லை. நாமளா கேட்கணும்.

//(அரசியல் கலக்காம் பதிவு போட்டுடுவீங்க்ளோ?)//

சரி. அரசியல் வந்தாச்சு. அப்புறம் என்ன ஆரியம் திராவிடம், பார்ப்பன எதிர்ப்பு, இந்து முஸ்லீம் - அவ்வளவுதானே? அதுக்கும் வந்து எதாவது சொல்லிடுங்க. :D

Floraipuyal said...

1937 ல் இயற்றப்பட்ட விமானச் சட்டத்தின் 78வது பிரிவின் படி உரிமம் வாங்காத விமான தளத்தி்ற்கு யாரும் விமானப் போக்குவரத்தில் ஈடுபடக்கூடாது. ஆனால் DGCA அனுமதி பெற்றவர்கள் ஈடுபடலாம். பல விமானப் போக்குவரத்துக் கழகங்களும் பல விமான தளங்களுக்கும் போக்குவரத்தில் ஈடுபட அனுமதிக்கப்பட்டன.

2004 ல் இச்சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டது. புதிதாக போக்குவரத்தில் ஈடுபடுவோர் உரிமம் வாங்காத விமான தளத்தி்ற்குச் செல்லக்கூடாது என்றும் இதற்கு முன் அனுமதி பெற்றவர்கள் செல்லத் தடையில்லை என்றும் இதில் கூறப்பட்டது. மேலும் அரசு குறிப்பிடும் தேதி வரை மட்டுமே இந்த அனுமதி பொருந்தும் என்றும் இதில் கூறப்பட்டது.

இத்தேதி 2006 மார்ச் 31 என்று 2006 சனவரி 7ல் வெளியிடப்ட்ட GSR 6E தெரிவிக்கிறது. தற்போது இது மீண்டும் மாற்றப்பட்டு 2006 டிசம்பர் 31 என்று SO 1038 E ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடரும் என்றே எண்ணுகிறேன்.

Aircraft Rules, 1937 - Rule 78
"78. Licensing of Aerodromes - (1) No aerodrome shall be used as
a regular place of landing and departure by a scheduled air transport
service or for a series of landings and departures by any aircraft
carrying passengers or cargo for hire or reward unless --
(a) it has been licensed for the purpose, and save in
accordance with the conditions prescribed in such
licence; or
(b) it has been approved by the Director-General, subject to
such conditions as he may deem fit to impose, for the
purpose of operation of flights in the event of national or
international crisis, natural calamities, emergencies or
otherwise requiring such flights to carry material goods
for relief purposes, or for giving joyrides for hire or
reward:

Provided that any person already permitted and operating
scheduled air transport services to an aerodrome before the
commencement of the Aircraft (4th Amendment) Rules, 2004 may
continue operation of such services till the aerodrome operator
obtains the licence from the Director-General by the date to be
notified by the Central Government. "

SO 1038 (E)
"New Delhi, Monday, July 10, 2006/ASADHA 19, 1928
Ministry of Civil Aviation
Notification
New Delhi, the 7th July, 2006
S.O.1038(E).--In pursuance of proviso to Rule 78
of the Aircraft Rules, 1937, and in supersession of the
notification No. G.S.R. 474(E), dated 31st March, 2006,
published in the Gazette of India, Part II, Section 3, Sub-
section (ii) dated 31st March, 2006, the Central Government
hereby directs that no person shall operate scheduled air
transport services to/from an aerodrome with effect from
the 31st December,2006, unless it has been licensed by the
Director-General, Civil Aviation.
[F.No. AV-11012/4/2005-A]
R.K.SINGH, Jt.Secy."

இது தவிர ICAO என்பதை வளர்ந்த நாடுகள் பெரும்பாலும் மதிப்பதில்லை ( ஐநா சபை போல ). அமெரிக்காவில் FAA அனுமதி பெற்றால் போதும்.

இலவசக்கொத்தனார் said...

ப்ளோரையாரே,

மிக நல்ல தகவல்களைத் தந்து இருக்கிறீர்கள். இந்த துறையில்தான் இருக்கிறீர்களா?

மிக்க நன்றி. விரிவாக படித்து விட்டு பின் பதில் போடுகிறேன்.

VSK said...

அடுத்த போராட்டத்துக்கு காரணம் ரெடி!

வாழிய பாரதம்!

இல்லை இல்லை! வழியுது பாரதம்!

ம்ம்ம்ம்.... என்னத்தச் சொல்ல!

இப்பத்தான் சிபா பதிவுல இந்தப் பி.ஊ.வைப் போட்டேன்.

அதை இங்கேயும் 'ஹைஜாக்' செய்யறேன்!

:))

நாமக்கல் சிபி said...

இதை கண்டித்து மத்திய அரசுக்கு வழங்கும் ஆதரவை தமிழக அமைச்சர்கள் விலக்கி கொள்ள வேண்டுமென்று சொல்ல வரீங்களா கொத்ஸ்???

நாமக்கல் சிபி said...

நம்ம ஆளுங்க இத்தனை நாளா இவ்வளவு கேப்மாறித்தனம் பண்ணிருக்காங்களா??? இது தெரிஞ்சிருந்தா ஃபிளைட்டுக்கு டிக்கெட் எடுக்காமலே வந்திருக்கலாமே?

அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்தறன்னு சொல்லியிருக்கலாம் ;)

ALIF AHAMED said...

ம் என்னத்த சொல்ல...

ALIF AHAMED said...

/./
ஃபிளைட்டுக்கு டிக்கெட் எடுக்காமலே வந்திருக்கலாமே?
/./

தல(கைப்பூ) சொன்ன டயலாக்

நடுவழியில் இறக்கி விடமாட்டாங்கனு தைரியம் தான்..:)

ALIF AHAMED said...

/./
தம்பி said...
இந்தியால மட்டும்தான் இப்படியா?
இல்ல உலகம் பூராவுமே இப்படிதானா?
/./

எந்த புத்துல எந்த பாம்புனு யாருக்கு தெரியும்..:)

தண்டவாளத்தில போனதான் தப்பு போலிஸ் புடிக்கும்...::)

"பிளேனில் போனாலுமா...??

பதிவ சரியா படிக்கத
மின்னல்

கப்பி | Kappi said...

அந்த ஐந்து விமான நிலையங்களின் உரிமங்களையும் ரத்து செய்யக் கோரி மாபெரும் போராட்டத்தில் குளிக்கலாமா?? அவங்க மட்டும் எப்படி ஒழுங்கா இருக்கலாம்?? :))

துளசி கோபால் said...

ரெண்டு மாசத்துக்குள்ளே அனுமதி கிடைச்சிருமா? இல்லே நான் போற விமானத்தை ச்சென்னையில் இறக்கமாட்டாங்களா? (-:

எதுக்குப்பா இப்படி எல்லாம் பீதியை கிளப்புறீர்?

கடல்கணேசன் said...

/இது எல்லாம் சரி ஆகும் வரைக்கும் இந்தியாவிற்கு கப்பல போக வேண்டியது தான்...../

அடப்பாவிங்களா?.நான் எழுதினதைப் படிச்சுமா கப்பலுக்கு போகணும்னு தோணுது. இன்னும் வெவெரமா சொல்லலைன்னு தோணுது..

கடல்கணேசன் said...

//அதுக்கும் ஏதும் ஆப்பு இருக்கா கொஞ்சம் பாத்து சொல்லுங்க கொத்துஸ்//

/யப்பா இது கடல் கணேசனை கேட்க வேண்டிய கேள்வி. தப்பா இங்க வந்திருச்சு. அவரு வந்து படிக்கும் போது இதுக்கு பதில் சொல்வாரு./

கப்பல்ல வேலை பார்த்த நமக்குத் தானுங்க இந்த ஆப்பல்லாம் வச்சாங்க.. மத்தபடி நீங்க சொன்ன மாதிரி உள்ளே போய் விசாரிச்சா கப்பலுக்கும் ஆப்பு இருக்கும்.

நம்ம ஊரில இதெல்லாம் சகஜமப்பா.. எதுக்கும் அடுத்த ஆப்சன் எத்தனை ரயில்வே ஸ்டேசன் லைசன்ஸ் வாங்கியிருக்குன்னு பார்த்திட்டா நல்லது.

ஓகை said...

தனியார் விமான நிலையங்கள் உரிமம் இல்லாமல் இருந்தால் இந்நேரம் பல கோடிகள் கைமாறி உரிமங்கள் முறைப் படுத்தப் பட்டிருக்கும். அரசு விமான நிலையங்களைப் பற்றிக் கவலைப் பட தேவை இல்லை. தப்பு செய்பவர்களும் அவர்களே. அதைக் கண்டுபிடிப்பவர்களும் அவர்களே. தண்டனை கொடுப்பவர்களும் அவர்களே.

ஓகை said...

இகொ,

அதெப்டி அதுக்குள்ளாற 41. அந்த ரகசியத்த சொல்லி குடுங்களேன்.

இலவசக்கொத்தனார் said...

//ம்ம்ம்ம்.... என்னத்தச் சொல்ல!//

அவ்வளவுதாங்க நம்ம லட்சணம். சந்தி சிரிக்குது.

இலவசக்கொத்தனார் said...

//இதை கண்டித்து மத்திய அரசுக்கு வழங்கும் ஆதரவை தமிழக அமைச்சர்கள் விலக்கி கொள்ள வேண்டுமென்று சொல்ல வரீங்களா கொத்ஸ்???//

என்னடா இது? ஒரு தகவல் சொல்லலாமேன்னு பதிவு போட்டா எல்லாரும் அதில் அரசியல் பண்ணறீங்க. யூ டூ வெ.பை.? :)

கால்கரி சிவா said...

இன்னாபா, கொத்தனார், இப்பிடி படாபடா மேட்டரெல்லாம் போட்டு டங்குவார் கிழிக்கிறீங்களே. புதரகம் வந்ததிலிருந்து பீட்டர் வுட்டுகினே இருக்கேன், தமிழ்லே பேசினா புடிச்சுடுவாங்களாம் நீங்க சொல்ல போயி. ப்ரண்ட்ஸ் எல்லாம் கலீஜ் பன்றாங்கப்பா. இன்னா பீட்டர் உட்ரே புதரகம்ன்னா இன்னா மூஞ்சிலே குத்துராங்கப்பா. இப்போ இந்த மேட்டரே சொன்னாக்க கால்கரிக்கு பாக் பண்ணிடுவாங்க. சும்மா சொல்லகூடாது புஷ் ஊரு சூப்பாராதான் கீது இன்னா வெயிலு

இலவசக்கொத்தனார் said...

//இது தெரிஞ்சிருந்தா ஃபிளைட்டுக்கு டிக்கெட் எடுக்காமலே வந்திருக்கலாமே? //

ஓவர் டு கைப்பு.

//அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்தறன்னு சொல்லியிருக்கலாம் ;)//

பாதி பறக்கும் போது பிளேனை நிறுத்திப்புட்டான்னா படா டேஞ்சர்பா. இந்த டயலாக் பேசும் போது எங்க பேசறோம், எப்ப பேசறோமுன்னு ஜாக்கிரதையா பாத்து பேசு. என்னா?

இலவசக்கொத்தனார் said...

//ம் என்னத்த சொல்ல...//

இதைத்தான் எஸ்.கேவும் சொன்னாரு, நான் ஆமான்னு சொன்னேன். இப்போ நீங்களும். வாம்மா மின்னல்!

இலவசக்கொத்தனார் said...

//நடுவழியில் இறக்கி விடமாட்டாங்கனு தைரியம் தான்..:)//

பார்த்து. காந்தஹார் பக்கம் எங்கயாவது டிக்கெட் போட நிறுத்தி இறக்கி விடப் போறாங்க. அப்புறம் என்ன ஆவறது?

இலவசக்கொத்தனார் said...

//தண்டவாளத்தில போனதான் தப்பு போலிஸ் புடிக்கும்...::)//

யப்பா சாமி, இந்த போற மேட்டர் ஒண்ணை போட்டு நம்மாளு ஒருத்தன் செஞ்சுரியே அடிச்சாச்சு, இன்னுமா நிறுத்தலை?

அட. போறதை நிறுத்த சொல்லலை. அந்த டாபிக்கைச் சொன்னேன்.

இலவசக்கொத்தனார் said...

//அந்த ஐந்து விமான நிலையங்களின் உரிமங்களையும் ரத்து செய்யக் கோரி மாபெரும் போராட்டத்தில் குளிக்கலாமா?? அவங்க மட்டும் எப்படி ஒழுங்கா இருக்கலாம்?? :))//

அதானே.

கப்பின்ன கப்பிதான், என்னமா திங்க் பண்ணற மேன் நீ!

இலவசக்கொத்தனார் said...

//எதுக்குப்பா இப்படி எல்லாம் பீதியை கிளப்புறீர்?//
டீச்சர், போகும் போது நம்ம டீச்சருன்னு சொல்லிக்குங்க. எல்லாம் நம்ம பாய்ஸ்தான். நல்லா பாத்துப்பாங்க.

(ஆனா போகும் போது ரொம்ப ஹோம்வொர்க் எல்லாம் குடுத்தீங்க, அப்புறம் என்ன ஆகுமோ தெரியாது. நான் கியாரண்டி இல்லை.)

கால்கரி சிவா said...

ஹாய், ஆர் யு ஸிடில் அவேக்? ஹவ் இஸ் வெதர் யா?. ஐ ஹேர்ட் லாட் ஆப் ஸ்னோஸ் இன் யுவர் ஏரியா?

இலவசக்கொத்தனார் said...

//நான் எழுதினதைப் படிச்சுமா கப்பலுக்கு போகணும்னு தோணுது. இன்னும் வெவெரமா சொல்லலைன்னு தோணுது..//

பின்ன என்ன கணேசன், ஒரு அடி வாங்கினாலும் அப்புறமா பார், பார்ட்டி அப்படின்னு சொல்லறீங்க. அது போதாத குறைக்கு இப்போ பிரேஸில் பத்தி வேற சொல்லறீங்க. நம்ம மக்கள் இந்தோரில் இருந்து ராஜஸ்தான் போகக் கூட கப்பல் கேட்கறாங்க. நீங்க வேற!

இலவசக்கொத்தனார் said...

//உள்ளே போய் விசாரிச்சா கப்பலுக்கும் ஆப்பு இருக்கும்.//

இருக்கும். இருக்கும்.

//நம்ம ஊரில இதெல்லாம் சகஜமப்பா..//

இப்படி என்னவெல்லாம் நடக்குதோ. நினைச்சாலே பயமா இருக்கு.

//எதுக்கும் அடுத்த ஆப்சன் எத்தனை ரயில்வே ஸ்டேசன் லைசன்ஸ் வாங்கியிருக்குன்னு பார்த்திட்டா நல்லது.//

இந்த மாதிரி எங்க எங்க என்ன பூதம் கிளம்பப் போகுதோ. ஆண்டவா.....

இலவசக்கொத்தனார் said...

//தனியார் விமான நிலையங்கள் உரிமம் இல்லாமல் இருந்தால் இந்நேரம் பல கோடிகள் கைமாறி உரிமங்கள் முறைப் படுத்தப் பட்டிருக்கும்.//

ஆஹா! சொல்லிட்டீங்க இல்லை. உடனே எல்லாம் தனியார் கைக்கு போயி யாராவது பணம் பண்ணப் போறாங்க. விடாம போயி ஒரு பங்கு கேட்டு வாங்கிக்குங்க. :)

//அரசு விமான நிலையங்களைப் பற்றிக் கவலைப் பட தேவை இல்லை. தப்பு செய்பவர்களும் அவர்களே. அதைக் கண்டுபிடிப்பவர்களும் அவர்களே. தண்டனை கொடுப்பவர்களும் அவர்களே.//

என்ன அராஜகம்? ஒரு checks and balances இல்லாத சிஸ்டம். இதையெல்லாம் தட்டிக் கேட்க ஆளில்லாமதான் இப்படி.

ஆனா நம்ம ப்ளோரையார் சொன்ன விதிகளைப் பாருங்க. அது என்னமோ சைட் ரூட் மாதிரித்தான் தெரியுது.

இலவசக்கொத்தனார் said...

//அதெப்டி அதுக்குள்ளாற 41. அந்த ரகசியத்த சொல்லி குடுங்களேன்.//

தல. அதுல என்ன ரகசியம்? அதைப் பத்தி பதிவு எல்லாம் கூட போட்டாச்சே. இருங்க பாத்து சுட்டி எல்லாம் எடுத்து தரேன்.

(இங்க குடுக்காம அப்புறம் இன்னொரு பின்னூட்டமா போடறேன் பாருங்க, அதுவே ஒரு டெக்னிக்தான்.):-D

இலவசக்கொத்தனார் said...

//இன்னாபா, கொத்தனார், இப்பிடி படாபடா மேட்டரெல்லாம் போட்டு டங்குவார் கிழிக்கிறீங்களே. புதரகம் வந்ததிலிருந்து பீட்டர் வுட்டுகினே இருக்கேன், தமிழ்லே பேசினா புடிச்சுடுவாங்களாம் நீங்க சொல்ல போயி. //

அப்படியே மெயிண்டெயின் பண்ணுங்க. உங்க பாஸ்போர்டில் இருக்கும் இடங்களையும், உங்க தாடியையும் பார்த்து ஏற்கனவே சந்தேகமா இருக்கும். அதனால கொஞ்சம் பீட்டர் விட்டுக்கினே இருங்க. நல்லதுதான்.

//ப்ரண்ட்ஸ் எல்லாம் கலீஜ் பன்றாங்கப்பா. இன்னா பீட்டர் உட்ரே புதரகம்ன்னா இன்னா மூஞ்சிலே குத்துராங்கப்பா.//

அவனுங்க கிடக்கறானுங்க டுபாக்கூருங்க. நீ ஆவ வேண்டியத பாரு..

//இப்போ இந்த மேட்டரே சொன்னாக்க கால்கரிக்கு பாக் பண்ணிடுவாங்க. //

சந்தோசமா ரிடர்ன் போக வேண்டியதுதானே? தங்கமணிக்கிட்ட போக சந்தோசம் தானே? :)

//சும்மா சொல்லகூடாது புஷ் ஊரு சூப்பாராதான் கீது இன்னா வெயிலு//

நமக்கு அவ்வளவு வெயில் ஆவாதுப்பா. ஐ வெயிட்டிங் பார் விண்டர். :D

இலவசக்கொத்தனார் said...

//ஹாய், ஆர் யு ஸிடில் அவேக்? ஹவ் இஸ் வெதர் யா?. ஐ ஹேர்ட் லாட் ஆப் ஸ்னோஸ் இன் யுவர் ஏரியா?//

ஹாய். மி ஸ்டில் அவேக் யா. வெதர் இஸ் கெட்டிங் கோல்டர். ஃபால் கலர்ஸ் ஆர் இன். நோ ஸ்நோ எட் யா. வெயிட்டிங் பார் பர்ஸ்ட் ஸ்நோ. ஹௌ இஸ் கால்கரி யா?

இலவசக்கொத்தனார் said...

ஓகையாரே,

உங்களுக்காக கண்விழித்து பதிவுலகம் எல்லாம் சென்று தேடி சுட்டிகளைக் கண்டுபிடித்துக் கொண்டு வந்து விட்டேன்.


முதலில் இதைப் பாருங்கள். முக்கியமாக பின்னூட்டங்களை.

இதற்கு குமரன் தந்த கோனார் நோட்ஸையும் பாருங்கள்.

இதற்குப் பிறகும் சந்தேகம் இருந்தால் தயங்காது கேளுங்கள். :-D

Unknown said...

IT HAPPENS ONLY IN INDIA....அப்படின்னு ஒரு கோவிந்தாப் பாடுற இந்திப் படத்துப் பாட்டு தான் நியாபகத்துக்கு வருது

ஹே..ஹே.. இதுக்குப் போய் அலட்டிக்கலாமா?

Anonymous said...

Hi Koths,

Ithu munadiyae theringiruntha naan yenga oorla oru aeroplane station arampichu irupane....

Kadaikodi Tamilan

கைப்புள்ள said...

//இந்த அனுமதி பெற்றிருக்கும் விமானநிலையங்கள் ஐந்தும் இவைதான் - புது தில்லி, மும்பை, கொச்சின், புட்டபர்த்தி மற்றும் மிசோரத்தில் இருக்கும் லெங்புய்.//

ஐயோ! ஐயோ! இப்போ தான் எதோ கொஞ்ச நாளா அஃபிசியலாவே பறக்க பெர்மிஷன் இருக்குதேன்னு ரொம்ப சந்தோஷப் பட்டேன். அதுக்கு அரசாங்கமே ஆப்பு வைக்குதா? அப்போ நம்ம ராசிக்கு மறுபடியும் நவஜீவன் எக்ஸ்பிரஸ் தானா?
:(

கைப்புள்ள said...

//அந்த ஐந்து விமான நிலையங்களின் உரிமங்களையும் ரத்து செய்யக் கோரி மாபெரும் போராட்டத்தில் குளிக்கலாமா?? அவங்க மட்டும் எப்படி ஒழுங்கா இருக்கலாம்?? :))//

கப்பி ! எப்படிப்பா இப்படியெல்லாம்? இந்த மாதிரி ரெவல்யூஷனரியா யோசிக்கச் சொல்லி யாருப்பா உனக்கு சொல்லிக் குடுக்கறாங்க?
:)

இலவசக்கொத்தனார் said...

//IT HAPPENS ONLY IN INDIA....அப்படின்னு ஒரு கோவிந்தாப் பாடுற இந்திப் படத்துப் பாட்டு தான் நியாபகத்துக்கு வருது//

தேவு, ஒரே வரியில இங்கிலிபீசு, ஹிந்தின்னு பிச்சு உதறித் தள்ளறையேப்பா. எப்படிப்பா இப்படி எல்லாம்....

இலவசக்கொத்தனார் said...

//Hi Koths,

Ithu munadiyae theringiruntha naan yenga oorla oru aeroplane station arampichu irupane....

Kadaikodi Tamilan//

அதான் தெரியாம போயிருச்சு. :)

கடை கோடி வெச்சு இருக்கீங்களே. எனக்கு ரெண்டு தரப்பிடாது?

இலவசக்கொத்தனார் said...

//ஐயோ! ஐயோ! இப்போ தான் எதோ கொஞ்ச நாளா அஃபிசியலாவே பறக்க பெர்மிஷன் இருக்குதேன்னு ரொம்ப சந்தோஷப் பட்டேன். //

அட எதுக்குப்பா இப்படி ஆலா பறக்கறீங்க. :) (ஆளாப் 'பறக்கறீங்க'ன்னு சொல்லணுமோ?)

//அதுக்கு அரசாங்கமே ஆப்பு வைக்குதா? அப்போ நம்ம ராசிக்கு மறுபடியும் நவஜீவன் எக்ஸ்பிரஸ் தானா?//

இப்போ ரயில்வே டேசன் மேலயும் சந்தேகம் வருதே. அப்போ என்ன செய்வீங்க. அப்போ என்ன செய்வீங்க?

இலவசக்கொத்தனார் said...

//Nalaikku Railway stationaium anumathy illainu moodaporangalam.//

ஐயா சடையப்பரே, நீங்க பாட்டுக்கு எதாவது சொல்லிட்டு போயிடறீங்க. நம்ம கைப்ப பாருங்க, புள்ள எப்படி அழுது. வேணாம்ப்பா. விட்டுறுங்க.

இலவசக்கொத்தனார் said...

ஆமாம் என்ன விசேஷம்? நம்ம பதிவுக்குக் கூட அனானி அண்ணாங்க எல்லாம் வராங்க? எனக்குத் தெரியாமல் எதாவது நடக்குதா?

இலவசக்கொத்தனார் said...

//கப்பி ! எப்படிப்பா இப்படியெல்லாம்? இந்த மாதிரி ரெவல்யூஷனரியா யோசிக்கச் சொல்லி யாருப்பா உனக்கு சொல்லிக் குடுக்கறாங்க?//

அதான் கைப்பு நம்ம காத்து எல்லாம் பட்டு பையன் கெட்டுப் போயிரக்கூடாதுன்னு அப்படியே உருகுவே பராகுவேன்னு அனுப்பிடறாங்க.

ஓகை said...

//உங்களுக்காக கண்விழித்து பதிவுலகம் எல்லாம் சென்று தேடி சுட்டிகளைக் கண்டுபிடித்துக் கொண்டு வந்து விட்டேன்.

முதலில் இதைப் பாருங்கள். முக்கியமாக பின்னூட்டங்களை.

இதற்கு குமரன் தந்த கோனார் நோட்ஸையும் பாருங்கள்.

இதற்குப் பிறகும் சந்தேகம் இருந்தால் தயங்காது கேளுங்கள். :-D//

இதுல இவ்ளோ விஷ்யம் இருக்கா?

சந்தேகமெல்லாமில்லை. எதேஷ்டம்.

கப்பி | Kappi said...

//அதானே.

கப்பின்ன கப்பிதான், என்னமா திங்க் பண்ணற மேன் நீ! //

ஹி ஹி..சரி ஆப்பாட்டத்தை ஆரம்பிக்கலாமா??? :))

கப்பி | Kappi said...

75!!??


//கப்பி ! எப்படிப்பா இப்படியெல்லாம்? இந்த மாதிரி ரெவல்யூஷனரியா யோசிக்கச் சொல்லி யாருப்பா உனக்கு சொல்லிக் குடுக்கறாங்க?
:)
//

வேற யாரு..எல்லாம் நீ கொடுக்கற ட்ரெயினிங் தான் தல ;)

வேற யாரு

கப்பி | Kappi said...

//அதான் கைப்பு நம்ம காத்து எல்லாம் பட்டு பையன் கெட்டுப் போயிரக்கூடாதுன்னு அப்படியே உருகுவே பராகுவேன்னு அனுப்பிடறாங்க.
//

உருகுவே உகாண்டான்னு சொல்லாம விட்டீங்களே?? ;)

இலவசக்கொத்தனார் said...

//சந்தேகமெல்லாமில்லை. எதேஷ்டம்.//

ஆஹா! அப்புறம் என்ன? அடுத்த பதிவுல செஞ்சுரிதானே? :-D

இலவசக்கொத்தனார் said...

//ஹி ஹி..சரி ஆப்பாட்டத்தை ஆரம்பிக்கலாமா??? :))//

யாருக்கு ஆப்பு, யாருக்கு ஆட்டம், யாருக்கு ஆர்ப்பாட்டமுன்னு தெளிவா சொல்லிடுங்க. :D

ஸ்டார்ட் மியூஜிக்

இலவசக்கொத்தனார் said...

//வேற யாரு..எல்லாம் நீ கொடுக்கற ட்ரெயினிங் தான் தல ;)//

அட என்னா பசங்கடா நீங்க? இங்க என்ன ட்ரெயின் பத்தியா பதிவு போடறோம் ட்ரெயினிங்க் குடுக்க? இனிமேயாவது இந்த மாதிரி பதிவு எல்லாம் வந்தா ப்ளேனிங்க் குடுங்க மேட்.

இலவசக்கொத்தனார் said...

//உருகுவே உகாண்டான்னு சொல்லாம விட்டீங்களே?? ;)//

அவ்வளவுதானே. சொல்லிட்டாப் போச்சு. எல்லாம் கேட்டுக்குங்கப்பா.

அதான் கைப்பு நம்ம காத்து எல்லாம் பட்டு பையன் கெட்டுப் போயிரக்கூடாதுன்னு அப்படியே உருகுவே உகாண்டான்னு அனுப்பிடறாங்க.

G.Ragavan said...

அடடா! இதுவும் இப்படியா! இப்ப என்னதான் செய்றது........பேசாம அந்தக் காலம் போல சோத்து மூட்டையக் கட்டிக்கிட்டு நடந்து போக வேண்டியதுதான்......இன்னும் அம்பது வருசத்துல அதுதான் வரப்போகுதுன்னு நெனைக்கிறேன்.

இலவசக்கொத்தனார் said...

வாங்க ஜிரா. அதுக்கு அப்புறம்தான் சக்கரம் எல்லாம் கண்டுபிடிச்சி, மாட்டு வண்டியெல்லாம் ஓட்டுனோமே. அதனால நடக்க வேண்டாம். வண்டியேறி போகலாம். என்ன மனேகா காந்தி கண்ணுல படாம போங்க.

Unknown said...

Attendance pinnuuttam

uLLeen aiyaa....

MiiNtum varuveen

மு.கார்த்திகேயன் said...

அடங்கொக்காமக்கா.. இவ்வளவு நாளா என்ன பண்ணிகிர்ரு இருந்தாங்க எல்லோரும்..

இலவசக்கொத்தனார் said...

//Attendance pinnuuttam

uLLeen aiyaa....

MiiNtum varuveen//

இவ்வளவு நாள் கழிச்சு ஒரு உள்ளேன் ஐயா பின்னூட்டம் அதுவும் இங்கிலிபீஸில். என்னய்யா ஆச்சு? மீண்டும் எப்போ வர போறீங்க? சீக்கிரம் வாங்க.

இலவசக்கொத்தனார் said...

//அடங்கொக்காமக்கா.. இவ்வளவு நாளா என்ன பண்ணிகிர்ரு இருந்தாங்க எல்லோரும்..//

அதானே. ஆனா பாருங்க. ப்ளோரி புயல் சொல்லறது பார்த்தா, இது அதிகாரிங்களுக்குத் தெரிஞ்ச விஷயம்தான். அதுக்கு எதோ குறுக்குவழி விதிகள் எல்லாம் போட்டு ஓட்டிக்கிட்டு இருந்திருக்காங்க.

இப்போ வெளிச்சத்துக்கு வந்திருச்சு. அம்புட்டுதான்.

குமரன் (Kumaran) said...

கெடுவா? கெடுபிடியா?

இலவசக்கொத்தனார் said...

கும்ஸ்,

கெடுவோ கெடுபிடியோ, இப்பவாவது எல்லாம் சரியாச் செஞ்சாங்கன்னா சரிதான். என்ன சொல்லறீங்க?

இலவசக்கொத்தனார் said...

குமார், ப்ளோரிபுயல் சொன்னதைப் படிச்சீங்களா? இதுக்காக சட்டத்தையே மாத்தியாச்சே! அதுக்காக சென்னை சில்குக்காக சட்டத்தை மாத்த முடியுமோ?