Tuesday, November 28, 2006

விரைவில் தமிழ்மணத்திலும் 33% ஒதுக்கீடு???

இந்தியாவில் இருக்கும் வலைப்பதிவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆண்களே! அதுவும் சும்மா 51 சதவிகிதம் 60 சதவிகிதம் எல்லாம் இல்லை. இந்திய வலைப்பதிவர்களில் 76% ஆண்களாம். இதை நான் சொல்லலைங்க. ஆனானப்பட்ட பில் கேட்ஸ் கம்பெனி வெளியிட்டு இருக்கும் ஒரு ஆராய்ச்சி கட்டுரையில் தெரிய வந்திருக்கும் புள்ளி விபரம் இது. (அவங்களை நம்பாதவங்க நம்ம தமிழ்மண நட்சத்திரங்களில் பெண்களின் எண்ணிக்கை அப்படின்னு ஒரு சின்ன ஆராய்ச்சி பண்ணிப் பார்த்துக்குங்க. :) )

இன்னும் சில புள்ளி விபரங்கள் பார்க்கலாமா?

  • வலைப்பதிவுகளைப் படிப்பவர்களில் 42% உலக நிகழ்வுகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்காகவும் (பாவம் மக்கள்ஸ்!) 49% பொழுது போக்கிற்காகவும் (அடுத்தவன் சண்டை போட்டுக்கிறத பாக்கறது ஒரு பொழுது போக்கா?) படிப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.

  • வலையில் மேய்பவர்களில் 14% தொடர்ந்து வலைப்பூக்களில் பதிவுகள் இடுகிறார்கள். (அதுவே இந்த நிலமையின்னா மத்தவங்களும் எழுத ஆரம்பிச்சா என்ன ஆவறது?)

  • வலையில் மேய்பவர்களில் 39% பேருக்குத்தான் வலைப்பூக்கள் பற்றி தெரிந்து இருக்கிறதாம். (மத்த 61% எவ்வளவு புண்ணியம் செஞ்சு இருக்காங்க.)

  • வலைப்பதிவர்களில் 54% பேர் 25 -34 வயதுக்குள்ளாக இருப்பவர்களாகவும், 32% 25 வயதிற்குக் கீழாகவும், 15% 35 வயதிற்கு மேலாகவும் இருப்பதாகத் தெரிகிறது. (கூட்டினா 100 மேல வருதேன்னு என்னைத் திட்டாதீங்க. இது அவங்க சொன்னது.)

  • 87% வலைப்பதிவர்கள் வாரத்திற்கு ஐந்து மணி நேரம் வரை வலைப்பதிவுகளைப் பதிவதிலும் படிப்பதிலும் செலவிடுகின்றனராம். (நம்மள மாதிரி தமிழ்மண வியாதி பிடிச்சவங்களைப் பத்தி தெரியாது போல!)

  • பாதிக்கும் மேற்பட்ட வலைப்பூக்களை வாரத்திற்கு பத்து பேர் கூட வந்து படிப்பதில்லையாம். (கவர்ச்சிகரமான தலைப்பு வைக்கத் தெரியாமலோ, விவகாரமான விஷயங்களைப் பத்தி எழுதாமலோ இருந்தா எவன் வருவான்.)

  • தொழிலதிபர்களால் எழுதப்படும் வலைப்பூக்களுக்குத்தான் நல்ல வரவேற்பாம். (மா.சிவக்குமார் ஞாபகம் வருதா?)

  • அரசியல்வாதிகளால் எழுதப்படும் பதிவுகளை 24% பேர் தொடர்ந்து படிக்கிறார்களாம். (நம்ம ஊர் கரை வேட்டிங்க யாராவது வலைப்பூவில் எழுதி தமிழைப் பாதுகாக்கறாங்களா?)

இது பத்தின ரீடிப் செய்தி இங்க, ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி இங்க.



38 comments:

said...

அந்த பிராக்கெட்டில் பிங்க் கலரில் இருக்கும் கருத்துக்கள் அந்த ஆராய்ச்சி கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டவை இல்லை. :-D

said...

எப்படி உங்க கண்னுல மட்டும் இந்தமாதிரி சர்வேயெல்லாம் படுது ? )))

said...

//வலையில் மேய்பவர்களில் 39% பேருக்குத்தான் வலைப்பூக்கள் பற்றி தெரிந்து இருக்கிறதாம். (மத்த 61% எவ்வளவு புண்ணியம் செஞ்சு இருக்காங்க.)
//

:)))
சூப்பர் கமெண்ட்!

said...

மிக நல்ல ஆராய்ச்சி அந்த 15% ஒடுக்கப்பட்டவர்கள் (அதாங்க 35 வயதிற்கு மேலுள்ளவர்கள்) சார்பாக கேட்கிறேன். என் கேள்விகளுக்கு நீரோ அல்லது உங்க பசங்களோ இன்னும் பதில் ஏன் சொல்லவில்லை?

said...

அப்போ நானும் புண்ணியம் பண்ணினவன் தான்!

ஒண்ணும் தெரியாத மக்கு![என்னைத்தான் சொல்கிறேன்!]

said...

இதெல்லாம் சரிதான்.
இதுக்கும், தலைப்புக்கும் என்னங்க சம்பந்தம்?

said...

I second calgary siva!!

said...

ர.ம.த.

என்ன மொத ஆளா வந்துட்டீங்க? எல்லாம் தலைப்பு செஞ்ச மாயமா? :)

யாரோ பெரியவர் ஒருத்தர், பசித்திரு விழித்திருன்னு சொன்னாராமே. அத பின்பற்ற போயி சாப்பிடற நேரத்தில் இணையத்தை மேஞ்ச போது கிடைச்ச விஷயம்தான். :)

said...

//
:)))
சூப்பர் கமெண்ட்!//

சிபி, என்ன வெச்சு காமெடி எதுவும் பண்ணலையே.

said...

//என் கேள்விகளுக்கு நீரோ அல்லது உங்க பசங்களோ இன்னும் பதில் ஏன் சொல்லவில்லை?//

அந்த காலத்து ரோமன் அரசர் நீரோவை எல்லாம் கேட்டா எங்க போறது? அதான் எங்க சார்புல புயலார் வந்து சொல்லிட்டாரே, இருங்க வரேன். இப்போதானே லீவு முடிஞ்சு வந்திருக்கேன்.

said...

//வலைப்பதிவர்களில் 54% பேர் 25 -34 வயதுக்குள்ளாக இருப்பவர்களாகவும், 32% 25 வயதிற்குக் கீழாகவும், 15% 35 வயதிற்கு மேலாகவும் இருப்பதாகத் தெரிகிறது. //

இந்த கணக்கெடுப்பை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. என் போன்ற 16-18 வயது இளைஞர்களும் வலைப்பதிவு இடுகிறோம் என்பதை இவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்..

said...

ஒரு பதிவை பாதி எழுதிட்டு ஏதேச்சையாய் தமிழ்மணம் பக்கம் வந்தா .... நற நற :)

உங்க comments எல்லாம் பார்த்தேன், ரசித்தேன், நான் எழுதிக்கொண்டிருந்த பதிவை டெலிட்டேன்

said...

//ஒண்ணும் தெரியாத மக்கு![என்னைத்தான் சொல்கிறேன்!]//

சரிதான். இப்படிச் சொல்லறதுதான் இப்போ பேஷனா? நடக்கட்டும். எனக்கு ஏன் நாரதர் ஞாபகத்துக்கு வராருன்னு தெரியலையே. நாராயண. நாராயண.

said...

//இதெல்லாம் சரிதான்.
இதுக்கும், தலைப்புக்கும் என்னங்க சம்பந்தம்?//

இந்த மாதிரி ஒரு கணக்கெடுத்துதான் பாராளுமன்றத்தில்.... சரி விடுங்க. நமக்கு எதுக்கு பொல் ஆப்பு, சாரி, பொல்லாப்பு. :)

said...

//பெருசு said...

I second calgary siva!! //

அவரு என்ன சொன்னாருன்னு இப்போ இப்படி ஆமாம் போடறீங்க? வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க. :D

said...

//என் போன்ற 16-18 வயது இளைஞர்களும் வலைப்பதிவு இடுகிறோம் என்பதை இவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்..//

என்ன கணேசர் இப்படி டென்சனாவறீங்க. உங்களை மாதிரி ஆளுங்க 15% இருக்கறதா சொல்லியாச்சே.

சாரி, அது நிஜ வயசு கணக்கா?! நீங்க என்றும் 16ஆ. அது மறந்து போச்சே. நீங்கதான் 32% இருக்கீங்களே. அப்புறம் என்ன கோபம்! :)

said...

என்ன விக்கி, இப்படி பண்ணிட்டீங்க. இது என்ன ஒருத்தர் மட்டும் சொன்னா போதும் அப்படிங்கற மாதிரி மேட்டரா? நீங்களும் போட்டுத் தாக்க வேண்டியதுதானே. (எனக்கு வர ஆப்புல பாதியை உங்களுக்கு தந்திருப்பேன் இல்ல)

நீங்க நல்ல தகவல்கள் பல தந்திருப்பீங்க. இப்ப என்ன, திரும்பி எழுதிப் போடுங்க. நாங்க வந்து படிக்கிறோம்.

said...

//வலையில் மேய்பவர்களில் 14% தொடர்ந்து வலைப்பூக்களில் பதிவுகள் இடுகிறார்கள். (அதுவே இந்த நிலமையின்னா மத்தவங்களும் எழுத ஆரம்பிச்சா என்ன ஆவறது?)//

எழுத ஆரம்பிச்சா என்ன ஆவறது? ன்னு யாரைச் சொல்லறீங்க கொத்ஸ்?
எழுத ஆரம்பிச்சவங்களையா?
இல்லை,
பின்னூட்டுபவர்களையா?? :-))
நாராயண. நாராயண!!

(ஆரம்-பிச்சவங்களையா என்று நீங்கள் படித்தீர்களேயானால் அதற்கு நான் பொறுப்பல்ல! சொல்லிட்டேன் :-))

said...

கொத்ஸ்,

இந்த 'அசைன்மெண்ட்' நான் நம்ம 'மழை ஷ்ரேயா' கிட்டே கொடுத்துருந்தேன்,
போன மாசம் ஆஸி போனப்ப. அவுங்க கணக்குலே பெண் வலைஞர்கள் 23 பேர்ன்னு
சொன்னதா ஞாபகம். அப்ப இது எத்தனை %? 1.5?

said...

இந்த சதவிகிதம் எல்லாமே பொதுவா ஒரு ஃபிராட் கணக்குன்னுதான் நினைக்கிறேன். Sample size சின்னதா இருந்தா அதை வச்சுட்டு போடற கணக்கெல்லாமே ஒதைக்கும்தான்.

கிருஷ்ணன்

said...

//நாராயண. நாராயண!!//

கே.ஆர்.எஸ்., உங்க பங்குக்கு நீங்க நாரதராக பாக்கறீங்க. நடக்கட்டும். எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. :)

//ஆரம்-பிச்சவங்களையா என்று நீங்கள் படித்தீர்களேயானால் அதற்கு நான் பொறுப்பல்ல! சொல்லிட்டேன் :-)//

அப்படித்தாங்க படிச்சேன். என்ன செய்யறது. இது என் 'குரங்கு' புத்தி!!

said...

//அப்ப இது எத்தனை %? 1.5?//

அப்படியா விஷயம்? ஆனா 76 ஆண் நட்சத்திரங்களுக்கு இடையே 11 பெண் நட்சத்திரங்கள். இது 12.65%. இது என்ன கணக்கு? :-D

said...

//இந்த சதவிகிதம் எல்லாமே பொதுவா ஒரு ஃபிராட் கணக்குன்னுதான் நினைக்கிறேன். Sample size சின்னதா இருந்தா அதை வச்சுட்டு போடற கணக்கெல்லாமே ஒதைக்கும்தான்.//

உண்மைதான் கிருஷ்ணன். இவங்க கூட அவங்க தளத்துக்கு வந்த 1000 பேர் கிட்ட கேட்ட கருத்துதான் இது போல தெரியுது.

அதுக்காக இப்படி பதிவு போட வந்த ஒரு சான்ஸை விட முடியுமா? அதான்....

said...

//நம்ம ஊர் கரை வேட்டிங்க யாராவது வலைப்பூவில் எழுதி தமிழைப் பாதுகாக்கறாங்களா?)//

என்ன இப்படி கேட்டுடீங்க...இங்கு இல்லாத கரை வேட்டிகளா, சிவப்பு-கருப்பு (தாய்-சேய் கழகங்கள் இரண்டும்) மற்றும், சிவப்பு-கருப்பு-வெள்ளை நன்றாக வியாபாரம்ஆகிறதே...

said...

ipoo ellam narayana pazhasa possu. koths gyapakamthaan varathu.

said...

அதாகப்பட்டது ஆம்புளைங்கள்லாம் "வெட்டி"முறிக்கிறீங்கன்னு தெரியுது.

said...

//என்ன இப்படி கேட்டுடீங்க...இங்கு இல்லாத கரை வேட்டிகளா, சிவப்பு-கருப்பு (தாய்-சேய் கழகங்கள் இரண்டும்) மற்றும், சிவப்பு-கருப்பு-வெள்ளை நன்றாக வியாபாரம்ஆகிறதே...//

அனானி, இவங்க எல்லாம் ஆதரவாளர்கள்தானே. தொழில்முறை அரசியல்வாதிகள் யாராவது இருக்காங்களா? அதான் என் கேள்வி.

said...

//ipoo ellam narayana pazhasa possu. koths gyapakamthaan varathu.//

ஐயா பெரியவரே, என்ன சொல்ல வறீங்க? நான் என்ன செஞ்சாலும் நன்மையில்தான் முடியுமுன்னா? நல்லது நடந்தா சரிதானே.

அது போகட்டும், என்ன ஆங்கில பின்னூட்டம்? கலப்பைக்கு என்ன ஆச்சு?

said...

//அதாகப்பட்டது ஆம்புளைங்கள்லாம் "வெட்டி"முறிக்கிறீங்கன்னு தெரியுது. //

பிரேமலதாக்கா, கோபமா சொல்லறீங்களா? கேலியா சொல்லறீங்களா? சிரிப்பான் எதுவும் காணுமே! ஒரே டென்சனா இருக்கு. சீக்கிரம் வந்து பதிலைச் சொல்லுங்க.

said...

:-))))))))))))))

எத்தன சிர்ப்பான் வேணும்? :-)

said...

//எத்தன சிர்ப்பான் வேணும்? :-)//

அப்பாடா. இப்போதான் நிம்மதியா இருக்கு. இப்போ நல்லா கமெண்ட் போடலாம்.

//அதாகப்பட்டது ஆம்புளைங்கள்லாம் "வெட்டி"முறிக்கிறீங்கன்னு தெரியுது.//

அப்படி எல்லாம் இல்லைங்க. வெட்டி, கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் மொத்தத்துல நல்ல பையனுங்க. நாங்க எல்லாம் சேர்ந்து கலாய்ச்சாலும், முறிக்க எல்லாம் மாட்டோம். அவரே பாவம், சில தெலுங்கு பசங்க கையில் மாட்டிக்கிட்டு முறிபடாம வந்த நிம்மதியில் இருக்காரு. அதைக் கெடுத்துடுவீங்க போல இருக்கே. :)

said...

ஒவ்வொரு புள்ளி விபரத்திற்க்கும் நீங்கள் தந்துள்ள கமண்ட் ரசிக்கும் படியாக உள்ளது

said...

வாங்க திவ்யா. சொன்ன வாக்கைக் காப்பாத்திட்டீங்க. இதே மாதிரி கண்டின்யூ பண்ணுங்க.

said...

தமிழ் மணத்துல்ல இப்போ எண்ணெய் கொப்பரையிலேப் போட்டு தாளிச்சு கொதிச்சு கொப்பளிக்கற பதிவுக்கு ரிஷி மூலம் இந்தப் பதிவு தானா... ஆகா நாரதர் நாய்ஸ் நல்லாவே கேக்குதுண்ணா...

said...

அந்த 'நல்ல' பதிவு வரதுக்கு நான் காரணமா? பொன்ஸ் கோவிச்சிக்கப் போறாங்க.

பாதி பின்னூட்டம் நாரயண நாரயணன்னே இருக்குது அப்புறம் நாரதர் நாய்ஸ் கேட்காம வேற என்ன கேட்கும்?

இருக்கட்டும், தலைவர் சொன்னா மாதிரி நாலு பேருக்கு நல்லது நடக்குதுன்னா எதுவுமே தப்பில்லை! :)

said...

ம்ம்ம் தலைவரே சொல்லுங்க

இப்படி எல்லாம் 'நல்ல ' பதிவு வர்றதுக்குக் காரணமான நீங்க நல்லவரா? கெட்டவரா?

கலைஞானி சொன்ன பதிலையோ எங்க தலைவர் மேலெ கையைக் காட்டி சொல்லுற பதிலையோச் சொல்லக் கூடாது ஆமா

said...

//கலைஞானி சொன்ன பதிலையோ எங்க தலைவர் மேலெ கையைக் காட்டி சொல்லுற பதிலையோச் சொல்லக் கூடாது //
அப்படின்னா கிருஷ்ண பரமாத்மாவை துணைக்கு கூப்பிட்டுக்க வேண்டியதுதான்.

எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. (அட நான் பொன்ஸ் பதிவை பத்தியெல்லாம் சொல்லலையா!)

நான் என் கடமையைச் செய்கிறேன், பலனை எதிர் பார்த்தா செய்கிறேன்?

said...

ஐயோ...படிக்கும் போது நவரச உணர்ச்சிகளும் தோணுதுங்க.

// அரசியல்வாதிகளால் எழுதப்படும் பதிவுகளை 24% பேர் தொடர்ந்து படிக்கிறார்களாம். (நம்ம ஊர் கரை வேட்டிங்க யாராவது வலைப்பூவில் எழுதி தமிழைப் பாதுகாக்கறாங்களா?) //

ஏற்கனவே அரசியல் சண்டைகளும் மதச் சண்டைகளும் நாறிக்கிட்டு இருக்கு. அரசியல் ஆர்வலர்கள் இருக்கும் போதே இப்படீன்னா...அரசியல்வாதிகளும் வந்து தொலைஞ்சா என்னாகும்! இலவசப் பின்னூட்டம் தரும் வாக்குறுதிகளும்...தன்னால்தான் வலைப்பூக்களில் பின்னூட்டம் அதிகரித்தது...அடுத்தவர் வந்ததும் குறைந்து விட்டது என்ற வாதங்களும் பிரமாதமாக இருக்கும். அடுத்தவர் எத்தனை வலைப்பூ வைத்திருக்கிறார்....அதுல எத்தனை பினாமி பேர்ல இருக்கு...(இதெல்லாம் ஏற்கனவே நடக்குதாம்)..இதெல்லாம் வெளிய வரும். தேவையா கொத்சு.