Thursday, November 30, 2006

நியூசிலாந்தில் டீச்சர்கள் அட்டகாசம்!!

இது நியாயப் படி துளசி டீச்சர் போட வேண்டிய பதிவு. அவங்க கண்ணுல இந்த செய்தி எப்படி மிஸ் ஆச்சோ தெரியலை. அதனால கிடைச்சுது சான்ஸுன்னு நான் ஒரு பதிவு போட்டாச்சு. தலைப்புக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது சும்மா ஓரு கவர்ச்சிக்காக வைத்தது. அதனால் அதற்கும் இந்த பதிவுக்கும் தொடர்பு எதையும் தேட வேண்டாம்! :-D

விஷயம் என்னன்னா, நம்ம பசங்க குறுஞ்செய்திகள் (எஸ்.எம்.எஸ்.) அனுப்பும் போது வார்த்தைகளை குறுக்கி தட்டெழுதி அனுப்பறாங்க இல்லையா? அதாவது Text Message என்பதையே Txt Msg என்றோ, See You என்பதை CU என்றோ தட்டெழுதுகிறார்களே. இது போல குறுக்கப்பட்ட வார்த்தைகள் மூலமாக தகவல் பரிமாற்றம் செய்து கொள்வதற்கு Text Speak என்று பெயர்.

தற்பொழுது நியூசிலாந்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில், மாணவர்கள் தேர்வுகள் எழுதும் பொழுது இது போன்ற குறுக்கப்பட்ட வார்த்தைகளை உபயோகப் படுத்தலாம் என அங்குள்ள தேர்வாணையக் குழு ஒரு ஆலோசனை வழங்கியுள்ளது. வழக்கம் போலவே இதனை ஆதரித்தும் எதிர்த்தும் பல குரல்கள் எழுந்துள்ளன.

இது பற்றி சி.என்.என் வலைத்தளத்தில் வந்திருக்கும் செய்திக்கான சுட்டி இது. ஒரு முறை படித்து விடுங்கள். எனக்கு மிகவும் பிடித்தது, செய்தியின் கடைசியில் இது பற்றி, நம் சக வலைப்பதிவாளர்(!) பில் ஸ்டீவென்ஸ் சொல்லி இருக்கும் கமெண்டுகள்தான் - Internet blogger Phil Stevens was not amused by the announcement. "nzqa[New Zealand Qualifications Authority]: u mst b joking," Stevens wrote. "or r u smoking sumthg?"! :-D

எனக்கு இரண்டு கேள்விகள். வழக்கம் போல எல்லாரும் வந்து உங்க கருத்தைச் சொல்லுங்க பார்க்கலாம்.

  1. தேர்வாணையத்தின் இந்த நடவடிக்கையில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?
  2. தமிழில் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி உண்டா? அதில் இது போல குறுக்கி எழுதப்படும் வார்த்தைகள் உண்டா?

68 comments:

சேதுக்கரசி said...

//தமிழில் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி உண்டா?//

செல்லினம்?

இலவசக்கொத்தனார் said...

ஆஹா! வாங்க சேது. பொதுவா, மொத போணி நானே பண்ணிக்குவேன். இன்னிக்கு முந்திட்டீங்களே.

தமிழில் எஸ்.எம்.எஸ் அனுப்ப முடியுமான்னு கேட்ட, அதுக்கு அழகா ஒரு பேரைச் சொல்லிட்டுப் போயிட்டீங்களே! ஆனா இருக்கா இல்லையா? அதைச் சொல்லுங்க. முதல் கேள்விக்கு உங்க கருத்தைச் சொல்லுங்க! :)

சேதுக்கரசி said...

கேள்வி #2-க்கு பதில்:

http://www.tamilsms.com
http://www.murasu.com/mobile

செல்லினம், சிங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு தமிழ்க் குறுந்தகவல் சேவைன்னு நினைக்கிறேன். இதைத் தான் போன வருசம் வைரமுத்து அறிமுகப்படுத்தினார்னு நினைக்கிறேன். (நினைக்கிறேன் நினைக்கிறேன்னு சொல்லக் காரணம் என்னன்னா எனக்கு 100% உறுதியாத் தெரியாது :-))

நேற்று வரை மூன்று தமிழ்
இன்று முதல் நான்கு தமிழ்
இதோ கைத்தொலைபேசியில்
கணினித் தமிழ்!

இதுதான் வைரமுத்து அனுப்பின முதல் தமிழ்க் குறுந்தகவல் வரிகள்.

அன்புள்ள காதலி
இனி தமிழில் காதலி

அடுத்ததாக இப்படியும் ஒரு குறுந்தகவலை வைரமுத்து எழுதினாராம்.

இலவசக்கொத்தனார் said...

அதானா மேட்டர்? நம்ம ஊரில் வருவதற்கு முன்னாலேயே சிங்கையில் வந்து விட்டதாக்கும். ஒக்கே. 2அ) கேள்விக்கு பதில் சொல்லிட்டீங்க. இன்னும் 1 மற்றும் 2ஆ இருக்கு. சொல்லிட்டேன். :D

சேதுக்கரசி said...

கேள்வி 2ஆ-க்கு பதில்:

//அதில் இது போல குறுக்கி எழுதப்படும் வார்த்தைகள் உண்டா?//

தெரியல :)

கேள்வி #1-க்கு பதில்:

//தேர்வாணையத்தின் இந்த நடவடிக்கையில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?//

இல்லவே இல்லை. என் 10ம் வகுப்பு ஆங்கில ஆசிரியை, annotation எழுதறதுக்கு எப்படி வரைமுறைகள் தருவாங்க தெரியுமா.. சரியா 3/4 பக்கத்துக்கு வரணும், வார்த்தைகளை repitition பண்ணக்கூடாது, முதல் பத்தி context-ஐ சொல்லணும், 2வது பத்தி விளக்கம் தரணும், 3வது பத்தி summarize பண்ணணும்.. இப்படிப்பட்ட வாத்தியார்கள் கிட்டயெல்லாம் படிச்ச என்னால இதையெல்லாம் ஒத்துக்கமுடியல!

இலவசக்கொத்தனார் said...

அப்படி இப்படி கேள்விக்கு ஒண்ணு என்ற விகிதத்தில் உங்க கிட்ட இருந்து மூணு பின்னூட்டம் வாங்கியாச்சு. :D

உங்க கருத்துகளுக்கு நன்றி, மத்தவங்க என்ன சொல்லறாங்கன்னு பார்க்கலாம். என் கருத்துகள் கடைசியில்.

Unknown said...

மெல்லத் தமிழினி.....

இலவசக்கொத்தனார் said...

தம்பி தேவு,

என்ன சொல்ல வறீங்க? நீங்க பாட்டுக்கு நடுவில தமிழினி அப்படின்னு பிட்டு போட்டா அவரு கோவிச்சுக்க மாட்டாரா?!

:-D

Unknown said...

கேள்விக்கு வர்றேன்...தமிழில் குறுஞ்செய்தி வசதியினைப் பயன் படுத்தியது இல்லை என்றாலும் சில செல்பெசிகளில் அதற்கான வழிவகைகள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்..

மொழி என்பது நாம் இன்னொருவருடன் நம் எண்ணங்களைப் பகிர்ந்துக் கொள்ளவே என்னும் பட்சத்தில் மொழியின் வடிவம் சுருங்குவதும் விரிவதும் அவரவர் விருப்பமே என்பதே என் கருத்து

Unknown said...

ஆகா கோர்த்து விட்டு கொண்டையிலே தீ வச்சிருவிங்கப் போலிருக்கு நான் அவரைச் சொல்லல்ல தமிழ் பழமொழியைச் சொன்னேன் தலைவரே

நாமக்கல் சிபி said...

வாருங்கள் என்பதை வாரீர்!

நீங்கள் என்பதை நீர் என்றெல்லாம் சொல்லலாம்

இலவசக்கொத்தனார் said...

//மொழியின் வடிவம் சுருங்குவதும் விரிவதும் அவரவர் விருப்பமே என்பதே என் கருத்து//

இது பள்ளிகளில் அனுமதிக்கலாமா? அதுதானே கேள்வி. இப்படி அவுட் ஆப் சிலபஸ் எல்லாம் பதில் சொன்னா நான் என்ன செய்யறது?

துளசி கோபால் said...

இங்கே விசாரிச்சதில் ( டீச்சர்கள் & மாணவர்கள் கூட்டம்) குறுஞ்செய்திகள்
டயலாக்கை கதை, கட்டுரை எழுதும்போது மட்டும் பயன்படுத்தலாமாம்.
ஒரு கதையில் ரெண்டுபேர் சம்பாஷிக்கறதைச் சொல்லும்போது நீட்டி
முழக்காமல் இப்பப் பசங்க எப்படிப் பேசுதோ அதே போல எழுதலாம்.
அப்பதான் ஒரு ரியாலிட்டி வருமுன்னு நினைக்கிறாங்க போல.
எல்லாப் பாடத்துக்கும் இது பொருந்தாதாம்.

Unknown said...

துளசி டீச்சரே சொல்லிட்டாங்க கொத்ஸ் அப்புறம் என்ன அப்பீல்?

பள்ளிகளிலும் எண்ணங்கள் அவரவர் விரும்பும் மொழி தொனிகளில் பரிமாறிகொள்ளட்டுமே... சரியான புரிதல் இருக்கும் வரை அனுமதிக்கலாம்.

இலவசக்கொத்தனார் said...

தனிமடலில் நண்பர் ரவி எழுதியது

நாட்டுல என்னென்னவோ மாறுது. இயற்கையே இப்போ மாறிப் போச்சு. இது மாறினா என்னவாம்? நல்லபடியா இருந்தா சரி.

நாமக்கல் சிபி said...

//ஆகா கோர்த்து விட்டு கொண்டையிலே தீ வச்சிருவிங்கப் போலிருக்கு //

:))

அதானே!

துளசி கோபால் said...

மேல்விவரம் இங்கே

SP.VR. SUBBIAH said...

ஆத்தா' என்றார்கள்
(ஆத்தாள் = அகம் + ஆள் = அகத்தில் - வீட்டில் குடியிருக்கும் தாய் என்று பொருள் படும்)

பிறகு அம்மா" என்றார்கள்
அடுத்து மம்மி' என்றார்கள்

இப்பொது குழந்தைகள் முதல் கல்லூரிக் காளைகள் வரை மாம் என்கிறார்கள்

இனிமேல் சுருக்கி எம்'(M) என்று அழைப்பார்களோ என்னவோ

இதையெல்லாம் பரிணாம வளர்ச்சி அல்லது கலி முற்றி விட்டது என்று எடுத்துக்கொள்ளாலாம்

என்ன இப்ப்டியே எல்லாவற்றறையும் சுருக்கிகொண்டே போனால் பழைய தமிழ் அகராதிகளையெல்லாம் தூக்கிப் போட்டு விட்டுப் புதிதாக எழுத வேண்டியதிருக்கும்!

SP.VR.சுப்பையா

ரவி said...

அன்பின் கொத்தனார்,

எல்.ஜி நிறுவணத்தில் எங்களின் கடும் முயற்ச்சியின் பயனாக தமிழில் குறுஞ்செய்தி அனுப்பும் முறையை கைத்தொலைபேசியில் ஏற்றி மார்க்கெட்டுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பே அனுப்பிவிட்டோம்...

எல்.ஜி மொபைலில் இருந்து தமிழில் அனுப்பப்படும் குறுஞ்செய்தி நோக்கியா போனிலும் தெரியும், மோட்டரோலா போனிலும் தெரியும்...(நம்ம யுனிகோடு மாதிரி மேட்டர்..)

இந்த முயற்ச்சியில் நானும் பங்கெடுத்தேன் என்பதை பெருமையாக சொல்லிக்கொள்கிறேன்..

Anonymous said...

nice article..really enjoyed reading btw..I have posted on the same issue in english..Allowing SMS LINGO AT SCHOOL sorry for being boastfull but i did post this earlier.(21-nov)..hehe..
just kidding..
so do visit and share ur thoughts
Deepa

dubukudisciple said...

annachi!!!
1)answer:- Idhu englishku othu varum enna We are appdingartha V Rnu ezhuthalam enna englishla one word words niraya iruku for eg: U, V, R, B, C,S intha mathiri....
So if they want to introduce this in english language i think they can do and reduce the time of the exam..
2) answer: Tamil sms theriyathu.. Tamil bloge ippo thaan theriyuthu..tamila ezhutha mudiyala office computerla konjam tamil language work agathu adu nala thaan..
Tamila intha mathiri one lettered words niraya illa nee eppadi irukennu kekearthuku nirya ezhuthanam aduku konjam naal agumnu ninaikiren
pakalam..

Ippadi niraya arivu poorvamana kelvikala ethir pakaren

பொன்ஸ்~~Poorna said...

அடப் போங்கப்பா.. இப்போதைய ட்ரெண்ட் படி ஒரு வோட்டுப் பெட்டி போட்டிருக்கலாம்ல? :)

என் வோட்டு
1. கட்டுரைகளில் குறும் வடிவங்கள் அனுமதிக்கக் கூடாது
2. துளசி அக்கா சொல்வது போல் பேச்சு வழக்குகளில், கதை கட்டுரை போல, அதில் அனுமதிக்கலாம்.

இலவசக்கொத்தனார் said...

//எல்லாப் பாடத்துக்கும் இது பொருந்தாதாம்.//

நல்ல வேளை டீச்சர், இந்த வயசுல இன்னுமொரு புது மொழி கத்துக்கணுமோன்னு நினைச்சேன்.

(ஐயோ அடிக்காதீங்க! அடிக்காதீங்க! இந்த வயசுலன்னு நான் உங்களைச் சொல்லலை, என்னைத்தான் சொல்லிக்கிட்டேன். ) ;-)

இலவசக்கொத்தனார் said...

//துளசி டீச்சரே சொல்லிட்டாங்க கொத்ஸ் அப்புறம் என்ன அப்பீல்?//

அவங்க என்ன சொன்னாங்கன்னு இப்போ அவங்களை செட்டு சேர்த்துக்கற? அவங்க எல்லா பாடத்துக்கும் பொருந்தாதுன்னு சொல்லிட்டாங்க இல்ல.

இராம்/Raam said...

பிரசண்ட் சார்...

இலவசக்கொத்தனார் said...

//:))

அதானே!//

யோவ் சிபி, என்ன அதானே வேண்டி இருக்கு? கேள்விக்கு பதில் சொல்லாம என்ன நாராயண நாராயண வேலை வேண்டி கிடக்கு.

இலவசக்கொத்தனார் said...

//துளசி கோபால் said...

மேல்விவரம் இங்கே //

டீச்சர், மேல் விபரங்களுக்கு நன்றி. இதை உங்க ஊரில் எப்படி எடுத்துக்கறாங்க? ஒரு ஸ்பாட் ரிபோர்ட் குடுங்க.

இலவசக்கொத்தனார் said...

//
இதையெல்லாம் பரிணாம வளர்ச்சி அல்லது கலி முற்றி விட்டது என்று எடுத்துக்கொள்ளாலாம்
//

நல்லா சொன்னீங்க வாத்தியாரய்யா.

இப்போவே ஆங்கில அகராதிங்கள்ல இந்த மாதிரி குறுஞ்சொற்களுக்கு பொருள் தர ஆரம்பிச்சுட்டாங்க.

இலவசக்கொத்தனார் said...

//
இந்த முயற்ச்சியில் நானும் பங்கெடுத்தேன் என்பதை பெருமையாக சொல்லிக்கொள்கிறேன்..//

செந்தமிழ் நாடென்ற போதினிலே.....

ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு கேட்கவே. இப்பணி மேலும் மேலும் தொடரட்டும்.

அப்புறம் விக்கி பசங்க பதிவில் வேலை வாய்ப்பு சம்பந்தமா ஒரு கேள்வி வந்திருந்தது. அதுக்கு உங்க வலைப்பூ பக்கம் வரச்சொல்லி சொன்னேன். பார்த்தீங்களா? இல்லைன்னா, அங்க போயி முகப்பில் இருக்கும் பெரிய கேள்வி குறியை சொடுக்கி வரும் பதிவில் பாருங்க. :)

அப்புறம் இன்னும் ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கலாமா? தமிழில் இந்த 'ற்' என்ற எழுத்துக்குப் பின்னால் மெய் எழுத்து வரக்கூடாது. நிறையா பேரு இந்த தப்பு பண்ணறாங்க. முயற்சி எவ்வளவுதான் கஷ்டமா இருந்தாலும் முயற்சியாத்தான் இருக்கணும். முயற்ச்சி ஆக கூடாது.

இலவசக்கொத்தனார் said...

தீபா,
வருகைக்கு நன்றி.

//sorry for being boastfull but i did post this earlier.(21-nov)..//

பொதுவா ஆங்கில வலைப்பூக்கள் படிக்கிறது இல்லை. அதுனால எனக்கு நீங்க எழுதியது தெரிய வரவில்லை. நீங்கதான் சந்தேகம் இல்லாம முதல். ஆனா தமிழில் நாந்தானே! ;-)

அங்க வந்து நானும் கருத்து சொல்லிட்டேன். மீண்டும் நன்றி. அடுத்த முறை தமிழில் பின்னூட்டம் போடணும். என்ன?!

இலவசக்கொத்தனார் said...

//dubukudisciple said...

annachi!!!//

ஆஹா! டுபுக்கு மடம் ஆரம்பிக்கிற அளவு போயாச்சா! சரிதான், இனிமே அந்த ஆள் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் இருக்கணும் போல இருக்கே.

நீங்க சொல்வது உண்மைதான். தமிழில் அந்த மாதிரி இல்லை. ஆனா சுப்பையா வாத்தியார் சொன்னா மாதிரி ஆகிடப் போகுது!

அடுத்த முறை நீங்களும் தமிழில்தான் பின்னூட்டம் போடணும். சரியா. எழுத்து கூட்டிப் படிக்க எனக்கு எவ்வளவு நேரம் ஆகுது பாருங்க.

இலவசக்கொத்தனார் said...

செந்தழலாரே,

இப்படி நிறையா பேருக்கு தமிழில் குறுஞ்செய்தி அனுப்ப முடியும் அப்படிங்கறதே தெரியலையே.

நீங்க தமிழில் குறுஞ்செய்தி அனுப்புவது எப்படி? அப்படின்னு ஒரு பதிவு எழுதி விக்கி பசங்களுக்கு குடுங்களேன். உங்க நல்ல முயற்சியை நாலு பேரு கிட்ட எடுத்துச் சொன்னா மாதிரி இருக்கும்.

இலவசக்கொத்தனார் said...

//இப்போதைய ட்ரெண்ட் படி ஒரு வோட்டுப் பெட்டி போட்டிருக்கலாம்ல? :)//

பொன்ஸக்கா, அதெல்லாம் எப்படி செய்வது அப்படின்னு விக்கி பசங்க பதிவுல நீங்க சொல்லிக் குடுத்தா நாங்க செய்யாமலையா இருப்போம்? ;-)

இலவசக்கொத்தனார் said...

//ராம் said...

பிரசண்ட் சார்... //

யோவ் பாடம் நடத்த ஆரம்பிச்சு இவ்வளவு நேரம் ஆகுது, இப்போ என்ன வந்த் உள்ளேன் ஐயா?

கேள்வி எல்லாம் கேட்டு தேர்வே நடக்குது. சத்தம் போடாம உக்காந்து பதில் எழுதற வழியைப்பாரு.

VSK said...

//கேள்வி எல்லாம் கேட்டு தேர்வே நடக்குது. சத்தம் போடாம உக்காந்து பதில் எழுதற வழியைப்பாரு.//

super!
:))

இலவசக்கொத்தனார் said...

எஸ்.கே.

சூப்பர் எல்லாம் இருக்கட்டும். உங்க பதில்கள் எங்க?

Anonymous said...

ஆஹா!.. நான் படிக்கும் போதே இதை கொண்டு வந்து இருக்கலாம்.

ம்ம் காலம் கடந்து போச்சு.

இலவசக்கொத்தனார் said...

//ம்ம் காலம் கடந்து போச்சு.//

வாங்க அகில். இப்போ என்ன? நியூஸி போயி ஒரு கிளாஸில் சேர்ந்துடுங்க.

dubukudisciple said...

Annachi!!!
nambalala tamizhla ezhutha mudiyathu.. Antha facility barr panni irukanga namba officela so evalvo try panni parthen.. system admin kitte kenji parthuten onnume nadakalanga... enna panrathu.. neenga konjam help pannunga eppadi pannanumnu!!!...
subbaih solli irukarthu mummy maruvinatha ... amma illa.. nalla parunga.. so english la irukura facility tamizhla illa...
dubuku siroda blogla vera enna pathi ezhuthi irukeenga dhanx!!!
naan avar illa aval
he he he

மணியன் said...

பலவருடங்கள் முன்னால் என் ஆங்கில உபாத்தியாயரும் அரசியின் ஆங்கிலம் அமெரிக்கரின் ஆதிக்கத்தில் சிதைவுறுவதாக புலம்பிக் கொண்டிருப்பார். நல்லவேளை வலைப்பதிவுகள் அப்போதெல்லாம் இல்லை.

பழையன கழிதலும் புதியன புகுதலும் .. என்று தொல்காப்பியத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. வரிகள் நினைவிற்கு வரவில்லை.

இலவசக்கொத்தனார் said...

டுபுக்குவின் சிஷ்யையே (சிஷ்யை வேறா! ஹூம்.),

உங்களுக்கான பதில் எங்கள் விக்கிபசங்களின் புதிய பதிவின் பின்னூட்டங்களில் இருக்கிறது.

இணைய வசதி இருக்கிறது ஆனால் இகலப்பை இல்லை. தமிழில் எப்படி எழுதுவது? பார்க்க விக்கி பதிவுகள்!

நீங்க சொல்வது போல் தமிழ் குறுகாமல் இருந்தா சரிதான். :)

இலவசக்கொத்தனார் said...

மணியன் ஐயா,

வருகைக்கு நன்றி.

நான் அமெரிக்கா வந்த புதிதில் Color, Analyze என்றெல்லாம் எழுதும் பொழுது எனக்கு விசித்திரமாகத்தான் இருக்கும். இப்பொழுது பழகி விட்டது.

அது போல "Z" என்பதை Zed எனச் சொல்லாமல் Zee எனச் சொல்லி பழகியாகி விட்டது, இந்த முறை நான் ஜெர்மனி சென்ற பொழுது இசட் எனச் சொல்லமல், நான் சொன்னது அவர்களுக்குப் புரியாமல் ஒரே கூத்துதான்! :)

சேதுக்கரசி said...

கொட்டை எழுத்துல not to publish-னு போட்டாலும் இந்த வேலை தான் பண்ணுவீங்களா? :-D

Adiya said...

definitely language is a conduit to communicate things. but other than language has a lot of core meaning and it has its own chronological history. coming to syallbus i strongly feel this should be in books / schools atleast. Thats is only place we get to know the crux of language. further obfuscation of language is there from decades and routed to various new languages.

SMS is one such path, verancular lingo , culture collision, language over-lapping, script leavage, language over loading we can jargonize lot of thigns.

by all means i am not comfortable in using this kind of notation in schools and collega..

:) thanks for the info.

இலவசக்கொத்தனார் said...

சேது,

அதுதான் எழுதி இருந்தாரா? ஆங்கிலத்தில் எழுதியதால் கன்பியூஷன். (நான் ரிஜெக்ட் பண்ணறேன் பேர்வழின்னு பப்ளிஷ் பண்ணிட்டேன். சொன்னதுக்கு நன்றி.)

இலவசக்கொத்தனார் said...

ஆதியா (அல்லது அதியா வா?)

வருகைக்கு நன்றி.

Unknown said...

சுஜாதா கதை ஒண்ணு எழுதியிருந்தாரில்ல...? என் நினைவுலிருந்து முயற்சி செய்கிறேன்:

1. ல்லை.
2. சில 100ண்டு பின் தமி மாறு. தமி வாழ்!

கெ.பி.

dubukudisciple said...

அண்ணச்சி !!!
அம்பியோட அருளாள இன்னிக்கி நான் தமிழ்ல பின்னுட்டம் போடர அளவுக்கு வந்தச்சு... நன்றி அம்பி அவர்களே!! இனிமேல் நானும் தமிழ்ல பின்னுட்டம் போடுவேனே!!

இலவசக்கொத்தனார் said...

ஆஹா! டுபுக்குவின் சிஷ்யையே, அம்பி உதவியோட தமிழில் பட்டையைக் கிளப்ப தயாராகியாச்சா? வெரி குட் வெரி குட்.

பேசாம இப்படி உதவி பண்ணின அம்பிக்கு சிஷ்யை ஆகிடுங்க, உங்க குருநாதர் அட்ரஸையே காணுமே. :))

இராம்/Raam said...

//யோவ் பாடம் நடத்த ஆரம்பிச்சு இவ்வளவு நேரம் ஆகுது, இப்போ என்ன வந்த் உள்ளேன் ஐயா? //

ஹி ஹி அதாவது நான் எப்போயும் பள்ளிக்கூடத்துக்கு லேட்டாதான் போவேன்.. ஆனா ஒருநாள் கூட ஸ்கூலேயிருந்து லேட்டா வீட்டுக்கு போனதேயில்லை. அதே ஞாபகத்திலே இங்கேயும் வந்து ஒரு சின்ன அட்டெண்ஸ் போட்டேன்.

//கேள்வி எல்லாம் கேட்டு தேர்வே நடக்குது. சத்தம் போடாம உக்காந்து பதில் எழுதற வழியைப்பாரு. //

என்னாது கேள்வியா.... அதெல்லாம் ரொம்ப கஷ்டமுங்க.... நான் இப்போதைக்கு ஆப்செண்ட் ஆகிக்கிறேன். இல்லேன்னா பிடிச்சுவைச்சு உட்கார வைச்சிருவீங்க.... :)

இலவசக்கொத்தனார் said...

வாப்பா ராயலு, எப்பவாவது வந்தாலும் கரெக்ட்டா வந்து 50 அடிச்ச பாரு. அங்கதான்யா நீ நிக்கற. :))

G.Ragavan said...

ஐயா....இந்தப் பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு போல. சரியாப் பாக்காம விட்டுட்டேன்.

தமிழில குறுஞ்செய்தியா...நல்லதுதான். ஆனா இங்கிலீசு மாதிரி r u there? shal v meet 2maro?ன்னு எழுத முடியாதே?

Anonymous said...

தமிழ் போன்ற மொழிகளில் வார்த்தைகளைக் குறுக்கி எழுதும் சாத்தியம் இல்லை, ஏனென்றால், தமிழ் , எழுதிய படியே உச்சரிக்கப் படுகிறது..ஆனால் , ஆங்கிலத்தில் , "pronunciation" என்று ஒன்று உள்ளதால், நீண்ட வார்த்தைகளை , எழுத , அதே மாதிரி ,"pronunciation" உள்ள எழுத்துக்களை இணைத்து , குறுக்கி எழுதுகிறார்கள்..

itz gud 4 lazy ppl.

NONO said...

இந்த தமிழ் குறுஞ்செய்தி பரிமாற்றம் இலங்கையிலும் உண்டு ஆனால் இது உள்ளூர் பரிமாற்றத்துக்கு மட்டுமே, சர்வதேச பரிமாற்றந்துக்கு உகந்தது அல்ல...!
இப்போது T9 முறையிலும் தமிழிழ் உள்ளிடலாம். இது சர்வதேச பரிமாற்றத்துக்கு வழிவகுக்கும் என நினைக்கிறேன்.

http://www.tegic.com/news/press-view.asp?release_num=55254351

http://www.tegic.com/products/t9-lang-db.asp

http://www.microimage.com/press/MicroimageDirectmay2006.htm

இலவசக்கொத்தனார் said...

//இந்தப் பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு போல. சரியாப் பாக்காம விட்டுட்டேன்.//

ஒவ்வொரு முறை ஒரு பதிவு போடும் போதும் உங்களுக்கு தனி மடல் அனுப்பறேனே. அது வரதில்லையா? அல்லது வந்தவுடன் நேரா குப்பைத்தொட்டிக்குள்ளாற முத்துக்குளிக்கப் போகுதா? :))

தமிழில் குறுஞ்செய்தி கூட பக்கம் பக்கமாத்தான் எழுதணும் போல. :)

இலவசக்கொத்தனார் said...

//itz gud 4 lazy ppl.//

:))))

வாங்க ஜீவன், உங்க கருத்துதான் பல பேர் சொல்வது. சரியாத்தான் இருக்கு.

இலவசக்கொத்தனார் said...

நோநோ அவர்களே,

வருகைக்கும் மேலதிக விபரங்களுக்கும் சுட்டிகளுக்கும் நன்றி.

dubukudisciple said...

//ஆஹா! டுபுக்குவின் சிஷ்யையே, அம்பி உதவியோட தமிழில் பட்டையைக் கிளப்ப தயாராகியாச்சா? வெரி குட் வெரி குட்.

பேசாம இப்படி உதவி பண்ணின அம்பிக்கு சிஷ்யை ஆகிடுங்க, உங்க குருநாதர் அட்ரஸையே காணுமே. :)) //

இலவச அண்ணச்சி..
என்னோட குரு நாதர் வருவார் கூடிய சீக்கிரம் நல்ல ப்ளாகோட..கவலை படாதீங்க..எதோ சில காலம் ரெஸ்ட் எடுத்துட்டாரு என்னோட குரு நாதர் ... அதுக்காக நீங்க இப்படி பேசுறது நல்லா இல்ல சொல்லிட்டேன் ஆமாம்..

G.Ragavan said...

// இலவசக்கொத்தனார் said...
//இந்தப் பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு போல. சரியாப் பாக்காம விட்டுட்டேன்.//

ஒவ்வொரு முறை ஒரு பதிவு போடும் போதும் உங்களுக்கு தனி மடல் அனுப்பறேனே. அது வரதில்லையா? அல்லது வந்தவுடன் நேரா குப்பைத்தொட்டிக்குள்ளாற முத்துக்குளிக்கப் போகுதா? :)) //

ஐயா...இப்பிடிக் கோவிச்சுக்கிறப்படாது. மயிலார் பல சமயங்களில் நம்ம மெயிலாரை ஐஜாக்கீர்ராறோன்னு ஒரு ஐயம். ஹி ஹி. இனிமே ஒழுங்காப் பாக்குறோமய்யா. முத்துக்குளிக்கிறது மஞ்சக்குளிக்கிறது பத்தியெல்லாம் ஒங்களுக்கு எப்படித் தெரிஞ்சது? :-)

// தமிழில் குறுஞ்செய்தி கூட பக்கம் பக்கமாத்தான் எழுதணும் போல. :) //

அதுலயும் நம்மளப் போல ஆட்கள்னா கேக்கவே வேண்டாம்.

டிபிஆர்.ஜோசப் said...

ஒவ்வொரு முறை ஒரு பதிவு போடும் போதும் உங்களுக்கு தனி மடல் அனுப்பறேனே..//

செலக்டா சில பேருக்குத்தான் அனுப்புவீங்க போலருக்கு.. அப்படித்தானே:)

தமிழ் SMSல பன்மையில் எழுதாம இருந்தாலே நிறைய வார்த்தைக்ளைச் சுருக்கிவிடலாம்னு நினைக்கேன்.

வா,போ,இரு,பார்.. இந்த கலையில பள்ளிப் பருவத்திலிருப்பவர்களுக்கு நாம் ஈடாக முடியாது. என்னுடைய இளைய மகள் ச்சாட் செய்யும் போது நானும் அருகில் இருந்திருக்கிறேன்.சிறிது நேரத்திலேயே தலையைச் சுற்றிக்கொண்டு வரும்.

அதுபோல்தான் இருக்கும் அவர்களுடைய SMS பாஷையும்..

Anonymous said...

could y please write in English?

இலவசக்கொத்தனார் said...

//இலவச அண்ணச்சி..
என்னோட குரு நாதர் வருவார் கூடிய சீக்கிரம் நல்ல ப்ளாகோட..கவலை படாதீங்க..//

ஐயாம் தி வெயிட்டிங்.

//எதோ சில காலம் ரெஸ்ட் எடுத்துட்டாரு என்னோட குரு நாதர் ... அதுக்காக நீங்க இப்படி பேசுறது நல்லா இல்ல சொல்லிட்டேன் ஆமாம்..//

நல்லாத்தான் மயக்கி வெச்சி இருக்காருப்பா!!!

ஓம் ஸ்ரீ டுபுக்கானந்தாயே நமஹா!!

இலவசக்கொத்தனார் said...

//ஐயா...இப்பிடிக் கோவிச்சுக்கிறப்படாது. மயிலார் பல சமயங்களில் நம்ம மெயிலாரை ஐஜாக்கீர்ராறோன்னு ஒரு ஐயம். ஹி ஹி. இனிமே ஒழுங்காப் பாக்குறோமய்யா.//

அதாவது இது வரை சரியா பாக்கலை. பழி மயிலார் மேல. நடக்கட்டும். :-X

//முத்துக்குளிக்கிறது மஞ்சக்குளிக்கிறது பத்தியெல்லாம் ஒங்களுக்கு எப்படித் தெரிஞ்சது? :-)//

எல்லாம் உம்ம மாதிரி தூத்துக்குடி ஆளுங்களோட சேர்ந்துதான்! ;-)


// தமிழில் குறுஞ்செய்தி கூட பக்கம் பக்கமாத்தான் எழுதணும் போல. :) //

அதுலயும் நம்மளப் போல ஆட்கள்னா கேக்கவே வேண்டாம்.//

அதே அதே. :-D

இலவசக்கொத்தனார் said...

//செலக்டா சில பேருக்குத்தான் அனுப்புவீங்க போலருக்கு.. அப்படித்தானே:)//

ஐய்யய்யோ. டிபிஆர், அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை. உங்க மெயில் ஐடி குடுங்க. நான் உங்களையும் லிஸ்டில் சேர்த்துக்கறேன்.

யாரு வேணுமானாலும் ஒரு பின்னூட்டத்தின் மூலமா மெயில் ஐடி தரலாம். அந்த பின்னூட்டம் வெளியிடப்படாது.

இலவசம், விக்கி பசங்க, வெண்பா விளையாட்டு வலைப்பூக்களில் புதிய பதிவுகள் இடப்படும் பொழுது ஒரு மெயில் வரும். அம்புட்டுதான்.

//சிறிது நேரத்திலேயே தலையைச் சுற்றிக்கொண்டு வரும்.//

அட நீங்க உங்க பொண்ணு அனுப்புற சாட் மற்றும் குறுஞ்செய்திகளைப் பத்தி சொல்லறீங்க. எங்க வீட்டில் தங்கமணி சாதாரணமாகப் பேசினாலே தலை சுத்துதே. அதுக்கு என்ன பண்ண? :-D

dubukudisciple said...

அண்ணாச்சி!!!
தாங்க்ஸ்

ஓம் ஸ்ரி டுபுக்கானந்தாயே நமஹா!!!
இப்படி தினம் ஒரு 108 முறை சொல்லுங்க.. உங்க வாழ்க்கைல உள்ள தொல்லைகள் எல்லாம் போயிடும்!!!
உங்க நண்பர்கள் எல்லார்க்கும் சொல்லி எங்க குருநாதர் பெருமையை வளருங்க...

Anonymous said...

எல்லாரும் சொன்னதுதான். தமிழில் தட்டெழுதலாம். ஆனா, எப்படி சுருக்குவது.

இகொ நல் பதி எழ்தார்

இலவசக் கொத்தனார் நல்லப் பதிவு எழுதினார். மேல சொன்னது நல்லாவ இருக்கு?

நிலா said...

//தேர்வாணையத்தின் இந்த நடவடிக்கையில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?//
ஆம்

//தமிழில் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி உண்டா? //

ஆம்


(குறுஞ்செய்தி பற்றிய கேள்வியாதலால் பதிலும்... :-)))

Anonymous said...

நியுசிலாந்தில எங்கோட வேல பாக்கறவங்க எல்லாம் பொங்கி எழுந்துட்டாங்க. எழுத்துப்பிழைக்கு எல்லாம் மார்க் கொறச்சு அப்ப பெயில் பண்ணிட்டு இப்ப இது என்ன புது ருல்ன்னு.
ஸ்பெல் பீ போட்டியில நெறயா இந்தியர்கள இங்கயும் பாக்கலாம்.