Sunday, January 07, 2007

ஈழ நண்பர்களுக்கு ஒரு கேள்வி

முதலில் டிஸ்கி. (இது போடாமல் கேள்விகள் கேட்க முடியவில்லையே, என்ன செய்வது.)

உண்மையில் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில்தான் கேட்கிறேன். யாரையும் கேலி செய்ய வேண்டும் என்பதோ அல்லது புண்படுத்த வேண்டும் என்பதோ இப்பதிவின் நோக்கமல்ல.
டிஸ்கி முடிந்து விட்டது. இனி விஷயத்திற்குப் போகலாமா?

தமிழகத்தில் பேசப்படும் தமிழுக்கும் ஈழத்தின் பேசப்படும் தமிழுக்கும் சில வேறுபாடுகள் இருந்து வருவது நமக்குத் தெரிந்ததுதான். ஈழத் தமிழில் இன்று தமிழகத்தில் பாவிக்கப்படாத சொற்கள் பல இருக்கின்றன. நம் நண்பர்களின் பதிவுகளைப் படித்துப் படித்து அவைகளில் பல நமக்கு பழகியும் விட்டன. உதாரணமாக கதைக்கலாம் என்றால் பேசலாம் என்பது போல்.

சில சொற்கள் சற்றே உருமாறி இருந்தாலும் படிக்கும் பொழுது அவற்றின் பொருள் எளிதாக விளங்கி விடுகிறது. உதாரணமாக எண்டெல்லாம் (என்றெல்லாம்), இண்டைக்கு (இன்றைக்கு).

ஆனால் எனக்கு ஒரு வகையான மாற்றங்கள் மட்டும் ஏன் இப்படி மாறுகிறது என்பது புரிவதேயில்லை. அது ஆங்கிலத்தில் 'T' என்ற எழுத்து வரும் சொற்களை ஈழத் தமிழில் எழுதும் பொழுது நிகழும் மாற்றம்தான் அது. உதாரணத்திற்கு Toronto என்ற கனேடிய நகரின் பெயர் தமிழில் எழுதும் பொழுது 'ரொறன்ரோ' என எழுதுகிறார்கள். டொராண்டோ என எழுதினால் எளிதாகப் படிக்க முடிகிறதே. அதே போல் Beta 'பேற்றா' ஆனது. டிவி என்பது கூட 'றீவி' என ஆகிறது. நான் பார்த்த வரையில் கிட்டத்தட்ட எல்லா 'T'க்களும் இப்படி 'றீ'க்களாகவே எழுதப்படுகின்றன.

இனி கேள்விகள்

  1. இந்த மாற்றத்திற்குக் காரணம் என்ன?
  2. பேசும் பொழுது இவ்வார்த்தைகளை எப்படி உச்சரிக்கிறார்கள். நம்ம உதாரணம் டொராண்டோவாகவே இருக்கிறதா அல்லது ரொ றன்ரோ என்றே உச்சரிக்கவும் படுகின்றதா?
  3. எல்லா 'T'க்களும் இப்படி 'றீ'க்களாகவே எழுதப்படுகின்றனவா? அல்லது இவ்விதிக்கு எதேனும் மீறல்கள் இருக்கின்றனவா?
  4. 'T' என்ற எழுத்து மட்டும்தான் மாறுகிறதா அல்லது 'D' என்ற எழுத்தும் இப்படி மாறுகிறதா?
  5. 'T' தவிர வேறேனும் எழுத்துக்களும் இவ்வாறு மாறுகின்றனவா? (BBCயை றீபிசி எனப் படித்ததாக ஒரு ஞாபகம். இது சரியாக இருந்தால் இது இன்னமும் குழப்பமான ஒரு விஷயம்.)
இது எனக்கு மட்டும் உண்டான கேள்விகள் இல்லை என்பது சில நண்பர்களின் பதிவுகளில் வரும் பின்னூட்டங்கள் மூலம் அறிய முடிகிறது. ஈழ நண்பர்கள் தயவு செய்து விளக்கங்கள் தருவீர்களா? தாங்கள் இங்கு தரும் விளக்கங்கள் மூலம் எனக்கு மட்டுமல்லாது மேலும் பலருக்கு ஒரு புரிதல் ஏற்படுமென்பது திண்ணம்.

120 comments:

said...

இதை அப்படியே நைசா யாரும் விக்கி பசங்க கிட்ட கேட்கக் கூடாது சொல்லிட்டேன்!! :)))

said...

நீங்கள் எழுதிய பதிவில் தவறிருக்கிறது.

'T' ஐ ஈழத்தவர் யாரும் 'றீ' என்று எழுதுவதில்லை. ரீ என்றுதான் பாவிக்கப்படுகிறது; ரீவி, ரீ, ரின், ரொறண்டோ...
BBC ஐ யாரும் றீபிசி என்று எழுதியிருக்க மாட்டார்கள். மாறாக TBC ஐ ரீ.பி.சி என்று எழுதியிருப்பார்கள்.

அடிப்படை வேறுபாடு, தமிழை உச்சரிப்பது தானேயொழிய ஆங்கிலத்தை உச்சரிப்பதிலன்று. நீங்கள் உச்சரிக்கும் 'ர', நாங்கள் உச்சரிக்கும் 'ர' இரண்டுமே வித்தியாசம் என்பதுதான் அடிப்படை.
அதாவது அரசு, முரசு போன்ற சொற்கைளை நீங்கள் உச்சரிப்பதற்கும் நாங்கள் உச்சரிப்பதற்கும் இடையில் வேறுபாடுண்டு.
இந்தச் சிக்கல்கூட ஈழம் முழுவதுக்கும் பொதுவில்லாமல் யாழ்ப்பாணத்துக்குப் (வன்னிக்கும்) பொருத்துவதே சரியென்று நினைக்கிறேன்.
மற்றும்படி Toronto. TV, Tin போன்ற ஆங்கிலச் சொற்கள் இருதரப்பிலும் உச்சரிக்கப்படுவது ஒரேமாதிரித்தான். அதாவது டொரண்டோ என்று எழுதிவிட்டு நீங்கள் உச்சரிப்பதும், ரொறண்டோ என்று எழுதிவிட்டு நாங்கள் உச்சரிப்பதும் ஒரேமாதிரித்தான் இருக்கும். ஆனால் நாங்கள் எழுதியதை நீங்களோ நீங்கள் எழுதியதை நாங்களோ உச்சரித்தால் மாறுபடும். காட்டாக, டொறண்டோ என்று எழுதிவி்ட்டு நாங்கள் வாசித்தால் அதை Doronto என்று வாசிக்க முற்படுவோம். அதுபோல் உங்களுக்கு Roronto என்று வரும்.

கீழே மூன்று வித்தியாசமான ஒலிகளையும் அவை எம்மால் பலுக்கப்படும் முறையையும் தருகிறேன்.

Rin - றின்
Tin - ரின்
Din - டின்

எல்லாச் சந்தர்ப்பத்திலும் ஆங்கில உச்சரிப்பை அப்படியே கொண்டுவருவது முடியாதுதான்.

said...

எல்லாச் சந்தர்ப்பத்திலும் ஆங்கில உச்சரிப்பை அப்படியே கொண்டுவருவது முடியாதுதான்.

இவை தொடர்பாக நிறையத்தரம் வலைப்பதிவுகளில் பேசியாயிற்று. நிறைய தமிழக வலைப்பதிவாளர்கள் இப்படி பதிவுகள் போட்டாயிற்று.
முன்பொருமுறை இந்தச் சிக்கலையும் உள்ளடக்கி நான் எழுதிய பதிவு.
ஈழத்தமிழ் - தமிழகத்தமிழ்.

said...

இ.கொத்தனார்!
முதலில் உங்கள் டிஸ்கிக்கும், நேர்மையான கேள்விகளுக்கும் நன்றி.:) இந்த ரீ. டி, பிரச்சனைக்கான விளக்கம் முன்பும் யாருடைய பதிவிலோ பின்னூட்டத்திலோ அளிக்கப்பட்டிருந்ததாகவும் ஞாபகம்.

//இந்த மாற்றத்திற்குக் காரணம் என்ன?//
ஈழத்தமிழர்கள் T யை ரீ எனவும், R ஐ ற எனவும் உச்சரிக்கின்றார்கள். அதுபோல் O வை ஓ என்றே உச்சரிக்கின்றார்கள்.

//பேசும் பொழுது இவ்வார்த்தைகளை எப்படி உச்சரிக்கிறார்கள். நம்ம உதாரணம் டொராண்டோவாகவே இருக்கிறதா அல்லது ரொ றன்ரோ என்றே உச்சரிக்கவும் படுகின்றதா?//

ரொறன்ரோ என்றே உச்சரிக்கின்றார்கள்.

//எல்லா 'T'க்களும் இப்படி 'றீ'க்களாகவே எழுதப்படுகின்றனவா? அல்லது இவ்விதிக்கு எதேனும் மீறல்கள் இருக்கின்றனவா?//

T - ரி, Ri - றி, என்றுதான் உச்சரிக்கப்படுகிறது.

//'T' என்ற எழுத்து மட்டும்தான் மாறுகிறதா அல்லது 'D' என்ற எழுத்தும் இப்படி மாறுகிறதா?//

D - ட், Di - டி யாக உசச்சரிக்கப்படும்.

//'T' தவிர வேறேனும் எழுத்துக்களும் இவ்வாறு மாறுகின்றனவா? (BBCயை றீபிசி எனப் படித்ததாக ஒரு ஞாபகம். இது சரியாக இருந்தால் இது இன்னமும் குழப்பமான ஒரு விஷயம்//

BBC ஐ பீபீசி எனத்தான் உச்சரிப்போம். TBC என ஒரு தமிழ்வானொலி இலண்டனில் இருந்து ஒலிபரப்பாகிறது. அது குறித்த உரையாடல்கள், அல்லது பதிவுகளில் ரீபீசி என எழுதப்பட்டதை நீங்கள் வாசித்திருக்கக் கூடும்.

உங்கள் கேள்விகளுக்கு முடிந்தவரையில் பதிலளித்துள்ளேன். தவறிருப்பின் நண்பர்கள் வந்து சொல்வார்கள்.

நன்றி!

said...

வசந்தன்,

தங்கள் பதிலுக்கு நன்றி.

//'T' ஐ ஈழத்தவர் யாரும் 'றீ' என்று எழுதுவதில்லை.//

இது நான் பல முறை பதிவுலகில் கண்டதுதான். இப்பதிவை எழுதத் தூண்டுதலாக இருந்தது இந்தப் பதிவுதான் .

இதில் Beta என்பதைப் பேற்றா என பகீ எழுதி இருக்கிறார் பாருங்கள். நீங்கள் சொல்வதின் படி பேர்ரா என்றல்லவா இருக்க வேண்டும்? இன்னும் சில பதிவுகளிலும் 'ற' என்னும் எழுத்தைப் பாவித்துப் பார்த்துள்ளேன்.

மேலும் ஒரு கேள்வி. நீங்கள் 'ரொறண்டோ' என எழுதி இருக்கிறீர்கள். ஆனால் இந்த வார நட்சத்திரமோ 'ரொறன்ரோ' என எழுதி இருக்கிறார். எல்லா இடங்களிலும் T என்ற எழுத்திற்கு 'ற' வர வேண்டுமா அல்லது முதலில் வரும் Tக்கு மட்டும்தானா?

//இந்தச் சிக்கல்கூட ஈழம் முழுவதுக்கும் பொதுவில்லாமல் யாழ்ப்பாணத்துக்குப் (வன்னிக்கும்) பொருத்துவதே சரியென்று நினைக்கிறேன்.//

இது எனக்கு தெரியாத ஒன்று. தகவலுக்கு நன்றி. மற்ற இடங்களில் எழுதும் பொழுது தமிழகத்தில் எழுதுவது போலத்தான் எழுதுவார்களா?

said...

//முன்பொருமுறை இந்தச் சிக்கலையும் உள்ளடக்கி நான் எழுதிய பதிவு.
ஈழத்தமிழ் - தமிழகத்தமிழ். //

சுட்டிக்கு நன்றி. படித்துவிட்டு வருகிறேன்.

said...

மலைநாடான்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

எந்த விதமான தப்பான எண்ணமும் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் டிஸ்கி. தவறாக நினைக்க வேண்டாம்.

//ரொறன்ரோ என்றே உச்சரிக்கின்றார்கள்.//

Toronto என்றே உச்சரிக்கின்றனர் எனச் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். சரிதானே! :)

//TBC என ஒரு தமிழ்வானொலி இலண்டனில் இருந்து ஒலிபரப்பாகிறது. அது குறித்த உரையாடல்கள், அல்லது பதிவுகளில் ரீபீசி என எழுதப்பட்டதை நீங்கள் வாசித்திருக்கக் கூடும்.//

இருக்கலாம். அவ்வானொலி பற்றித் தெரியாததால், லண்டன் ரீபிசி என்றவுடன் BBC என நினைத்து விட்டேன். தகவலுக்கு நன்றி.

said...

இன்று வலைப்பதிவுகளில் குறிப்பிடத்தக்க பிழையான அக்கறையை அக்கரை என்று எழுதுபவர்கள் தமிழகத்தாராகவே இருப்பதும், மேலும் 'ற'கர, 'ர'கர குழப்பங்களைக்கொண்டு அதிகமாகப் பிழை விடுபவர்களும் (பொறுப்பு - பொருப்பு, நொருக்கு - நொறுக்கு போன்று இன்னும்பல) தமிழகத்தாராகவே இருப்பதற்கும் அவர்கள் இரண்டு எழுத்துக்களுக்கும் கிட்டத்தட்ட ஒரேமாதிரி உச்சரிப்பைக் கொடுப்பதே காரணமாக இருக்க முடியுமென்று நினைக்கிறேன்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

said...

இன்று பெரும்பாலான வலைப்பதிவர்கள் ஓரளவு உச்சரிப்பை வைத்தே எழுத முனைவதால் அதிகம் எழுத்துப் பிழைகள் வருகின்றது. இது உண்மைதான்.

மேலும் இன்று பலருக்கு 'ழ' மற்றும் 'ள' என்னும் எழுத்துக்களின் உச்சரிப்பு சரியாக இல்லாததால் இந்த எழுத்துக்கள் வரும் வார்த்தைகளிலும் அதிகம் தவறுகள் ஏற்படுவதையும் பார்க்கின்றேன்.

said...

//மேலும் 'ற'கர, 'ர'கர குழப்பங்களைக்கொண்டு அதிகமாகப் பிழை விடுபவர்களும் (பொறுப்பு - பொருப்பு, நொருக்கு - நொறுக்கு போன்று இன்னும்பல) தமிழகத்தாராகவே இருப்பதற்கும் அவர்கள் இரண்டு எழுத்துக்களுக்கும் கிட்டத்தட்ட ஒரேமாதிரி உச்சரிப்பைக் கொடுப்பதே காரணமாக இருக்க முடியுமென்று நினைக்கிறேன்.//

இக்கருத்துக்களுடன் நானும் உடன்படுகின்றேன். மேலும் சில தமிழக நண்பர்கள் 'முன்னாடி' என எழுதிவிட்டு, அதை 'மின்னாடி' என உச்சரிப்பதையும் கண்டிருக்கின்றேன்.

said...

வசந்தன், நீங்கள் தந்த உரல் மூலம் தங்கள் பதிவினைப் படித்தேன். அங்கு நான் இட்ட பின்னூட்டம்.

//வசந்தன், அருமையான தகவல்கள். இதை இன்னும் விரிவாக நீங்கள் எழுத வேண்டும் என்பதே என் ஆசை. //

said...

//மேலும் சில தமிழக நண்பர்கள் 'முன்னாடி' என எழுதிவிட்டு, அதை 'மின்னாடி' என உச்சரிப்பதையும் கண்டிருக்கின்றேன்.//

ஆமாம் மலைநாடான். இதனை நானும் கவனித்திருக்கிறேன். இது மட்டுமல்ல, மேலும் பல சொற்கள் இப்படி தவறுதலாகவே உச்சரிக்கப் படுகின்றன என்றே நினைக்கிறேன். தாங்கள் கவனித்தவற்றை பட்டியலிடுங்களேன்.

said...

http://mauran.blogspot.com/2005/08/blog-post_23.html

said...

கொத்தனார், இந்தப்பிரச்சினை சொல்லின் தொடக்கத்துக்கு மட்டும்தான்.
TV ஐ யாரும் றீவி என்று எழுதமாட்டார்கள்.

பகீயின் பதிவில் வருவது Beta.
இதில் வரும் t ஐ எப்படி உச்சரிக்கிறோமென்பதைப் பொறுத்து பீட்டா அல்லது பீற்றா என்று (பேற்றா என்பது வேறு சிக்கல்) வரும்.cut, cat என்பவற்றில் வரும் t இன் உச்சரிப்புக்குரிய வித்தியாசம்.
அதேபோல் பீற்றாவை Betra என்று உச்சரிப்பதில்லை.
தமிழகத்தில் 'ற்ற' என்று வந்தால் tra என்று உச்சரிப்பார்கள். குற்றம் - Kutram , முற்றம் - Mutram, நெற்றி- Netri, வெற்றி -Vetri.
ஆனால் நாங்கள் முறையே Kuttam, Muttam, Netti, Vetti தான். அதாவது மெய்யொழுத்தின் ஒலியோடு சேர்ந்து வல்லின உச்சரிப்பாகவே 'ற' வரும். (ஒலிப்பதிவொன்று செய்தால் சரியாக உச்சரித்துக் காட்டலாமென்று நினைக்கிறேன்)

எங்களில் பெரும்பாலானோர் எழுதுவதாக நினைத்துத்தான் நான் ரொறண்டோ என்று எழுதினேன். ஆனால் என் தெரிவு பொடிச்சி எழுதிய ரொறன்ரோ தான்.

said...

//நண்பர்கள் 'முன்னாடி' என எழுதிவிட்டு, அதை 'மின்னாடி' என உச்சரிப்பதையும் கண்டிருக்கின்றேன்.//

தங்க வேட்டையில் ரம்யா கிருஸ்ணன் இப்படித்தான் உச்சரிக்கிறவ.. அதுக்கு மின்னாடி சின்ன break

said...

இது சொல் ஒரு சொல்லில் வர வேண்டிய பதிவு இல்லையா? விக்கிபசங்களில் ஏன் வந்தது? :-)

நேற்று தான் மழை ஷ்ரேயா பதிவில் 'முதல் தரிப்பு' என்ற அவரின் பதிவின் தலைப்பைப் பார்த்துவிட்டு 'தரிப்பு' என்ற சொல்லை சொல் ஒரு சொல்லில் இடவேண்டும் என்று சொல்லியிருந்தேன்.

இந்தப் பதிவையும் இதில் வரும் பின்னூட்டங்களையும் சுட்டிகளில் இருக்கும் பதிவுகளையும் படித்தால் நிறைய அறிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் கொத்ஸ். இந்தப் பதிவிற்கு மிக்க நன்றி.

said...

ஓ. இது விக்கி பசங்களில் வரலையா? இலவசத்தில் தான் வந்திருக்கா? சரியா கவனிக்கலை கொத்ஸ். மன்னிக்கவும்.

said...

வசந்தனுக்கு மேலாக இங்கு நான் ஏதும் எழுத வேண்டும் என்பதில்லை. Beta என்பது பேற்றாவா இல்லை பீற்றாவா என்பது எனக்கும் சில சந்தேகம் உண்டு. நான் பணிபுரியும் சர்வதேச நிறுவனத்தில் இரு முறையையும் பயன்படுத்தும் ஆங்கிலேயர்கள் உள்ளார்கள். நானும் பேற்றாவையே பயன்படுத்துகின்றேன்.

பீட்டா என்று பயன்படுத்தும் எந்த தமிழரையும் நான் ஈழத்தில் கண்டதில்லை.

ஊரோடி பகீ

said...

இந்து எனக்கு நான்வது சுற்று. முதலில் வலைப்பதிவுகளில் வசந்தன், மயூரன் பின்னர் த.விக்கிபீடியாவில் ரவி மற்றும் பிற பயனர்கள், இப்பொழுது நீங்கள். குறைந்த பட்சம் இந்த உச்சரிப்பு வேறுபாட்டை நோக்கி ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டால் நன்றே.

த.விக்கிபீடியாவில் நீண்ட அலசல்கள் கிடைக்கும்.

தனிப்பட்ட முறையில்: (ஈழ உச்சரிப்பு)
ர - ta
ற - ra
ட - da

Toronto என்பதில் கூடிய சிக்கல் உண்டு. காரணம் அதை ஆங்கிலேயர்களே பல வேறு விதமாக உச்சரிப்பார்கள். எனவே அதனை எழுதும் பொழுது கனடாவில் எந்தப் பகுதியில் இருந்து ஒருவர் எழுதுகின்றார் என்பதிலும் தங்கியிருக்கும்.

said...

நற்கீரன்,

ஒரு சந்தேகம். நீங்கள் சொல்வது போல்

ர - ta
ற - ra
ட - da

என இருந்தால்,

பரி, பறி என்ற வார்த்தைகளின் உச்சரிப்பு என்ன ஆகும்?

said...

// Anonymous said...

http://mauran.blogspot.com/2005/08/blog-post_23.html

January 07, 2007 5:06 AM //

அனானி, சுட்டிக்கு நன்றி. அங்கு பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. அங்கு வலையேற்றப்பட்ட ஒலிப்பதிவு இப்பொழுது கிடைப்பது இல்லை. அதனை யாராவது இங்கு தரமுடியுமா?

said...

//கொத்தனார், இந்தப்பிரச்சினை சொல்லின் தொடக்கத்துக்கு மட்டும்தான்.
TV ஐ யாரும் றீவி என்று எழுதமாட்டார்கள்.//

ஆஹா ரொம்பவே குழப்பமா இருக்கே. துவக்கத்தில் வரும் 'T' மட்டும்தான் ரீ ஆகுமா? மற்ற இடங்களில் ரீ அல்லது றீ வருமா?

மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிட்டதே. (வேதாளம் என்று என் புரிதலைத்தான் சொன்னேன். :) )

said...

//தங்க வேட்டையில் ரம்யா கிருஸ்ணன் இப்படித்தான் உச்சரிக்கிறவ.. அதுக்கு மின்னாடி சின்ன break//

அவங்க இருபதைக் கூட எரவது எனச் சொல்லிக் கேட்டேன். :)

said...

//இது சொல் ஒரு சொல்லில் வர வேண்டிய பதிவு இல்லையா? விக்கிபசங்களில் ஏன் வந்தது? :-)//

விக்கி ஆரம்பித்த பின் மற்ற பதிவுகளை மறந்துவிட்டேன் என இடித்து காட்டுகிறீர்கள் போல இருக்கே... :))

//இந்தப் பதிவையும் இதில் வரும் பின்னூட்டங்களையும் சுட்டிகளில் இருக்கும் பதிவுகளையும் படித்தால் நிறைய அறிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் கொத்ஸ். இந்தப் பதிவிற்கு மிக்க நன்றி.//

ரொம்ப நாட்களாய் கேட்க வேண்டும் என இருந்தேன். இப்பொழுதுதான் சமயம் வந்தது.

said...

//சரியா கவனிக்கலை கொத்ஸ். மன்னிக்கவும்.//

அதான் நீங்க கேட்டதுக்கு வேற ஒரு பொருள் கற்பித்து சிரிச்சு வெச்சாச்சே. அப்புறம் என்ன மாப்பு, மன்னிப்புன்னுக்கிட்டு. :))

said...

//Beta என்பது பேற்றாவா இல்லை பீற்றாவா என்பது எனக்கும் சில சந்தேகம் உண்டு.//

பகீ, உங்கள் பதிவில் நாடோடி கேட்ட கேள்விகளால்தான் இந்த பதிவே. எனக்கு இருந்த சில ஐயங்களை அவரும் முன் வைத்ததால் ஒரு பதிவு போட்டு கேட்கலாமென முடிவு செய்தேன்.

இந்த பேற்றா பிற்றாவில் என்ன குழப்பம்? அதனைச் சொல்லுங்களேன். ஹிந்தியில் மகனைக் கூப்பிடுவது போல் பேட்டா என Betaவை உச்சரிக்கிறார்களா என்ன?

said...

//இந்து எனக்கு நான்வது சுற்று.// எனது திருத்தம்.


இது எனக்கு நான்காவது சுற்று.

பரி - pati, paty!
பறி - pari?

படி - padi, pady!

இதற்கு புரிந்துணர்வா, தரப்படுத்தலா நல்ல தீர்வு என்பதில் எனக்கு தெளிவில்லை. ஆனால் எழுத்து தமிழில் ஒற்றுமை இருக்கவேண்டும். இது ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்க்கும்பொழுதுதான் பெரிய பிரச்சினை ஆகின்றது.

said...

நற்கீரன்,

//பரி - pati, paty!
பறி - pari?

படி - padi, pady!//

பரி - இது குதிரை (Pari என்றுதான் உச்சரிக்கப்படுகிறது)
பறி - பறித்தல் (இதன் உச்சரிப்பும் Pariதான்)

இது போன்ற வித்தியாசங்களை எப்படி வெளிப்படுத்துவது? இன்னும் கொஞ்சம் விளக்குங்களேன்.

அந்த தமிழ் விக்கிபீடியா சுட்டியைத் தாருங்களேன்.

said...

http://ta.wikipedia.org/wiki/Wikipedia பேச்சு:நடைக் கையேடு (எழுத்துப்பெயர்ப்பு)

said...

இ.கொ,
உண்மையில் நானும் இது பற்றி ஒரு பதிவு போடவேணும் என்றிருந்தேன். நீங்கள் முந்தி விட்டீர்கள். நல்ல பதிவு.

வசந்தன் கூறியுள்ளது போல், ஈழத்தவர்கள் T ஐ ரி என்றே உச்சரிப்பார்கள். எடுத்துக்காட்டாக, தமிழகத்தவர்கள் டி.எம். செந்தரராஜன் என்பதை நாம் ரி.எம். செந்தரராஜன் என்றே எழுதுவது. ஒரு வேற்று இனத்தவரிடம் நீங்கள் சென்று டி.எம் என்றால் அவர் D.M என்று தான் நினைப்பார்.அடுத்தது நாம் எழுதுவது கிட்டத்தட்ட ஆங்கில உச்சரிப்புக்கு ஒப்பானது. குறிப்பாக Toronto வை ரொரன்ரோ என்று தான் ஆங்கிலத்திலும் உச்சரிப்பார்கள். டொரண்டோ என்று உச்சரிப்பதில்லை. அதே போல், T.V எனும் ஆங்கில உச்சரிப்புக்கு ரி.வி எனும் உச்சரிப்பே மிகவும் கிட்டத்தட்ட சரியானது என நினைக்கிறேன். ஒரு வெள்ளையரிடம் போய் நீங்கள் டி.வி என்றால் அவர் முழிப்பார். ஆனால் ரி.வி என்றால் புரிந்து கொள்வார்.

அதுசரி கொத்ஸ், நீங்கள் T ஐ D என்று எழுதினால் அப்ப D ஐ என்னெண்டு எழுதுவீர்கள்? குழப்பமாய் இருக்குதே.

இன்னொன்று தகவல் கொதஸ் [பதிவுக்குச் சம்பந்தம் இல்லாதது], தமிழகத்தவர்கள் ஆம் என்பதை நாம் ஓம் என்கிறோம்.

ஆம் = ஓம்
ஆமாம் = ஓமோம்
ஆமாங்க = ஓமுங்கோ
புரியுதா = விளங்குதா
சாயங்காலம் = பின்னேரம்
காலனி = குடியிருப்பு

said...

நற்கீரன்,

விக்கி சுட்டிக்கு நன்றி.

தெரிந்தோ தெரியாமலோ ஒரு பெரிய விஷயத்தில் மூக்கை நுழைத்து விட்டேன் போலத் தெரிகிறது.

இது பற்றி எவ்வளவு விவாதங்கள் நடந்து இருக்கிறது!! என்னைப் போல் இந்த தகவல்கள் தெரியாத பலருக்கு இது பற்றி அறிந்து கொள்ள இது ஒரு சந்தர்ப்பத்தைத் தந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

இது உங்களுக்கு நான்காவது சுற்றாக இருந்தாலும் அயராது வந்து தகவல்களைத் தந்ததிற்கு எனது நன்றிகள்.

said...

வெற்றி,

//அதே போல், T.V எனும் ஆங்கில உச்சரிப்புக்கு ரி.வி எனும் உச்சரிப்பே மிகவும் கிட்டத்தட்ட சரியானது என நினைக்கிறேன். //

உங்கள் கருத்துக்களை என்னால் முழுவதும் உடன்பட இயலவில்லை. நீங்கள் ரீ என்றால் T என்றும் டி என்றால் D என்றும் மனதில் இருத்திக் கொண்டதால் நீங்கள் சொல்வது உங்களுக்குச் சரியாகப் படுகிறது. இதனை நான் படிக்கும் பொழுது ரீவி என்பதை Reevi என்றும் டிவி என்பதை Teevi என்றும் படிக்கிறேன். இதில் எது ஆங்கில உச்சரிப்பினை ஒட்டி இருக்கிறது?

//நீங்கள் T ஐ D என்று எழுதினால் அப்ப D ஐ என்னெண்டு எழுதுவீர்கள்? //

குழப்பம்தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் Pa என்பதற்கும் Ba என்பதற்கும் தமிழில் பா என்ற ஒரே எழுத்துதானே. அது வரும் வார்த்தையை வைத்து அதன் உச்சரிப்பு மாறுகிறது அல்லவா? அதே போல் T,D என்ற இரண்டு உச்சரிப்புக்குமே நாங்கள் ட என்ற எழுத்தினை கொண்டு புழங்கி வருகிறோம்.

இப்பொழுது ஒன்று சொல்லுங்கள். யாழ் தமிழில் Pa, Ba என்ற இரு உச்சரிப்புகளை எப்படி வேறுபடுத்திக் காட்டுகிறீர்கள்?

said...

//ஆம் = ஓம்
ஆமாம் = ஓமோம்
ஆமாங்க = ஓமுங்கோ
புரியுதா = விளங்குதா
சாயங்காலம் = பின்னேரம்
காலனி = குடியிருப்பு//

இந்த மாதிரி 'ஆ'காரத்திற்கு 'ஓ'காரம் வழங்கி வருவதை பார்த்திருக்கிறேன். அம்முறையில் மலையாளிகள் உச்சரிப்புடன் உங்கள் உச்சரிப்பு ஒத்து போவதாகத் தோன்றுகிறது. அவர்களும் ஆட்டோவை ஓட்டோ எனவும் காலேஜை கோலேஜ் எனவும் சொல்வதை அறிந்திருப்பீர்கள்தானே.

விளங்குதல், குடியிருப்பு போன்றவை தமிழகத்தில் புழங்கும் சொற்களே.

பின்னேரம் என்ற சொல் வழக்கில் இல்லை என்றாலும் இரவின் கடைசிப் பகுதியை பின்னிரவென்றே நாங்கள் சொல்கிறோம். தமிழகத்தில் Afternoon எனப் பொருள் படும்படி பிற்பகல் என்ற சொல் புழக்கதில் இருப்பதே.

'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என ஔவையும் 'பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும்' என்ற வள்ளுவன் வாக்கையும் தாங்கள் அறிந்திருக்கலாம்.

இந்த பதிவின் மூலம் பல தகவல்களைத் தெரிந்து கொள்கிறேன். நன்றி.

said...

இலவசக் கொத்தனார்!
சந்தேகத்தைக் கேட்பதில் தவறில்லை.ஈழத்து நண்பர்கள் வசந்தன்;மலைநாடர்; நாடோடி பகீ;வெற்றி;நற்கீரன் மிக அருமையாக விளக்கிய பின் யான் கூற எதுவுமில்லை.BBCயை ஒரு நாளும் கூறியிருக்க மாட்டார்கள்.BBC தமிழோசை சாதாரண ஈழத் தமிழரில் வாழ்வுடனும் கூட கடந்த 40 வருடங்களாக ஒன்றியது. அது TBC (TAMIL BROADCASTING CORPORATION) உங்களுக்கு தெரிந்திருக்காத ஈழத் தமிழ்
வானொலி சேவை (மலை நாடர் குறிப்பிட்டுள்ளார்).
மேலும் எனக்கும் ஒரு சந்தேகம் நிவிர்த்திசெய்யவும். இந்தியா டுடே என்பது INDIA TODAY எனும் பத்திரிகைக்குச் சரியா? நான் அது இந்தியா ருடே!! என இருக்க வேண்டுமெனக் கருதுகிறேன்.
மற்றும் "துக்ளக்"; தமிழக வானொலி, தொலைக்காட்சிச் செய்திகளில் "தாற்காலிக " என எழுதுகிறார்கள்; சொல்லுகிறார்கள். இது சரியா?நான் "தற்காலிக" சரியான வடிவம் என நினைக்கிறேன்.
மற்றும் படி பல இடங்களில் ஏற்படும் சிக்கல்களை சந்தர்ப்பத்தைக் கொண்டு இது தான் ;என ஊகித்துக் கொள்கிறோம்.

அத்துடன் நம்ம எஸ்.எஸ்.சந்திரன் ஒரு பிரச்சாரக் கூட்டத்தில்; எங்களிடமும் ஜேகே 47;இருக்கு எனப் பேசியதாக "துக்ளக்" எழுதியது.அந்த ஏகே அவர் காதில் அப்படி விழுந்துவிட்டதோ?

யோகன் பாரிஸ்

said...

ஏதோ கும்மி பதிவாக்கும் என ஒரு ஐமிச்சத்தில்தான் வந்தேன்.:)பரவாயில்லை ஆரோக்கியமாகத்தான் பின்னூட்டங்கள் செல்கிறது.

//விளங்குதல், குடியிருப்பு போன்றவை தமிழகத்தில் புழங்கும் சொற்களே.//

தமிழகத்தவர்களுடன் கதைக்கும்போது புரிதல் என்ற ஒரு சொல்லைத்தான் நான் அடிக்கடி பாவிப்பேன்.அநேகருக்கு விளங்கவில்லை என்ற சொல் புரியாமலிருந்தது.

ஆனால் விளங்கவில்லை என்ற சொல் பல மாவட்டங்களில் நடைமுறையில் உள்ளது என்பது பின்னர்தான் தெரியவந்தது.கண்ணதாசன் கூட இளங்கிளியே இன்னும் விளங்கலையா என்று ஒரு பாடல் கூட எழுதியிருந்தார்.

நீஙகளும் அதை உறுதிப்படுத்தியுள்ளீர்கள்.

மற்றும்படி மலையாளிகள் பேசும் மோனை என்ற சொல்வழக்கம் திருநெல்வேலித்தமிழர்களும் பேசுவதாக
ஏதோ ஒரு வலைப்பக்கத்தில் படித்தேன்.

வேறு மற்றப் பிரச்சனைகள் வசந்தன் சொன்னதே எனது கருத்தும்.

இப்படியே இன்னும் கனக்க உதாரணம் எழுதலாம்...

முன்னர் ஒருமுறை ஈழ - தமிழக வலை அகராதி
ஒன்று ஆரம்பிக்கவேண்டும் என நினைத்தேன்.ஆனால் முடியவில்லை.யாராவது ஆரம்பித்தால் நன்று.

said...

தமிழா நீ பேசுவது தமிழா

said...

இ.கொத்தனார்.. ரொம்ப நாளாக ஒரு சந்தேகம்.. தமிழகத்தில் ரி மற்றும் றி இவற்றுக்கு இடையில் உச்சரிப்பு வித்தியாசம் உள்ளதா..?
கறுப்பு கருப்பு இந்த இரண்டையும் ஒரே மாதிரிதான் உச்சரிப்பார்களா..
எனது சந்தேகம் என்னவென்றால் ஈழத்தமிழர்களின் ரி என்ற உச்சரிப்பு தமிழகத்தில் றி என்ற உச்சரிப்பாகவே இருக்கிறது போலும். நாம் ரிவி என்னும் போது உச்சரிக்கின்ற ரி க்கான உச்சரிப்பு தமிழகத்தில் இல்லை.

ஈழத்திலும் இவற்றை ஆங்கிலப்படுத்தலில் சிக்கல்கள் உண்டு. உதாரணமாக ரவி என்பதை ஆங்கிலத்தில் ravi என்று தான் எழுதுவதும் உச்சரிப்பதும் வழமை. அதாவது ரவி என்று தமிழில் எழுதினாலும் அதனை ஆங்கிலத்தில் ravi என்று எழுதுவதோடல்லாமல் உச்சரிப்பும் றவி என்றே இருக்கிறது.
ஆனால் ஆங்கிலம் யாருக்கு சொந்தமோ அவர்களின் உச்சரிப்பிலிருந்து தமிழக ஆங்கில உச்சரிப்பு நிறைய தூரம் தள்ளித்தான் உள்ளது. ஆங்கிலத்தை தமிழில் இலகு படுத்தியதால் இது ஏற்பட்டிருக்கும்.
TV என்பதில் ஆங்கிலேயர் உச்சரிக்கும் t என்ற உச்சரிப்புக்கான எழுத்து தமிழக தமிழில் இல்லாத படியால் அதற்கு கிட்டவான டி யை அவர்கள் பாவிக்கிறார்கள் என நினைக்கிறேன்.

ஆனால் ஆங்கிலேயர் உச்சரிக்கும் T என்ற எழுத்தினை ஈழத்தமிழர்கள் ரி என்ற எழுத்தினூடாக உச்சரிப்பதால் அவர்கள் ரிவி என்கிறார்கள்.

அதாவது ஒரு ஆங்கிலேயர் TV ஐ எப்படி உச்சரிக்கிறாரோ அதே போல ஈழத்தமிழர்கள் உச்சரிக்கிறார்கள். அதற்கு அவர்கள் ரிவி என எழுதுகிறார்கள். இன்னும் ஒரு அதாவது.. ரிவி என எழுதினால் ஒரு ஈழத்தமிழர் TV ஐ ஆங்கிலேயர் எப்படி உச்சரிப்பரோ அப்படி உச்சரிப்பார்..


மீண்டும் எனது கேள்வி.. ரி க்கும் றி க்கும் ர வுக்கும் ற வுக்கும் தமிழகத்தில் உச்சரிப்பு வேறு பாடு உள்ளதா..

இல்லை இரண்டையும் நாம் ஒரே உச்சரிப்பில்தான் உச்சரிக்கிறோம் எனில் அதுவே இந்த சந்தேகங்களுக்கான விடை.
என்னைப் பொறுத்தவரை மொழியை அதன் சொந்தக்காரர் போல பேசுவது தான் சரி.
தமிழைத் தப்பாக பேசினால் கோபம் வருகிறதல்லவா..
ஒரு குரல்ப்பதிவு போட்டால் இன்னும் விளக்கம் தரலாம்

said...

இ.கொ,

/* நீங்கள் ரீ என்றால் T என்றும் டி என்றால் D என்றும் மனதில் இருத்திக் கொண்டதால் நீங்கள் சொல்வது உங்களுக்குச் சரியாகப் படுகிறது. */

உண்மை தான். தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்ற மாதிரி சின்ன வயதிலிருந்தே நாம் இப்படிப் புழங்கி வருவதால் இது எனக்குச் சரியாகப் படுகிறது. உங்களின் கருத்தோடு உடன்படுகிறேன்.

/* இதனை நான் படிக்கும் பொழுது ரீவி என்பதை Reevi என்றும் டிவி என்பதை Teevi என்றும் படிக்கிறேன். இதில் எது ஆங்கில உச்சரிப்பினை ஒட்டி இருக்கிறது? */

பொதுவாக ஈழத்தில்
t - ரி
d - டி
r - ற

என்ற வகையில் தான் உச்சரிக்கப்படும்.
நீங்கள் எடுத்துக்காட்டிய Reevi - றீவி என்றும் Teevi - ரீவி என்றும் சொல்வோம். அதேசமயம் இதற்குப் பல விதிவிலக்குகளும் உண்டு. ஆக இடத்திற்கு ஏற்ற மாதிரி சில இடங்களில்
மாற்றிப் புழங்குவோம். எடுத்துக்காட்டாக, ru = று, tu = ரு என்று உச்சரித்தாலும், இதே ru , Karunanithi என்ற சொல்லில் வரும் போது நாம் கறுணாநிதி என்று சொல்வதில்லை. கருணாநிதி என்றே சொல்கிறோம்.

/* இப்பொழுது ஒன்று சொல்லுங்கள். யாழ் தமிழில் Pa, Ba என்ற இரு உச்சரிப்புகளை எப்படி வேறுபடுத்திக் காட்டுகிறீர்கள்? */

இ.கொ, இப்பிடி எல்லாம் கேள்விகள் கேட்டு மடக்கினால் உங்கட பதிவுப் பக்கமே வரமாட்டேன் :))

நல்ல கேள்வி இ.கொ. ஆனால் இந்த
Pa, Ba சிக்கல் தமிழில் உள்ள சிக்கலாகவே நான் பார்க்கிறேன். அதாவது P, B, F போன்ற ஆங்கில எழுத்துக்களுக்கு ஒத்த உச்சரிப்புள்ள எழுத்துக்கள் தமிழில் இல்லையென்றே நான் நினைக்கிறேன். ஆக இந்த Pa, Ba சிக்கல் ஈழத்தமிழில் மட்டுமல்ல தமிழகத் தமிழிலும் உண்டென்றே கருதுகிறேன். எடுத்துக்காட்டாக buffalo , formula போன்ற சொற்களை எப்படி ஆங்கில உச்சரிப்பு வழுவாமல் தமிழில் எழுதுவது?

said...

இ.கொ,

/* இந்த மாதிரி 'ஆ'காரத்திற்கு 'ஓ'காரம் வழங்கி வருவதை பார்த்திருக்கிறேன். அம்முறையில் மலையாளிகள் உச்சரிப்புடன் உங்கள் உச்சரிப்பு ஒத்து போவதாகத் தோன்றுகிறது. அவர்களும் ஆட்டோவை ஓட்டோ எனவும் காலேஜை கோலேஜ் எனவும் சொல்வதை அறிந்திருப்பீர்கள்தானே. */

உண்மை. online எனும் சொல்லை தமிழகத்தவர்கள் ஆன்லைன் என்று எழுதுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் நாம் அச் சொல்லை ஒன்லைன் என்றே எழுதுகிறோம்.

இ.கொ, இன்னுமொரு சுவாரசியமன சங்கதி, ஈழத் தமிழர்களின் உணவு முறைக்கும் மலையாள[கேரள] உணவு முறைக்கும் மிகவும் ஒற்றுமை உள்ளது. அத்துடன் மலையாளத்தில் புழங்கப்படும் பல சொற்கள் இன்றும் யாழ்ப்பாணத்தில் புழங்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, பறைதல் எனும் சொல். பறைதல் = பேசுதல், கதைத்தல். இப் பறைதல் எனும் சொல் தமிழகத்தில் புழக்கத்தில் உண்டா தெரியாது. இதற்கு நான் அறிந்த காரணம், இன்றைய கேரளா அன்றைய சேர நாட்டின் பகுதியாக இருந்ததாம். பண்டைய காலத்தில் சேர, சோழ , பாண்டிய நாட்டில் இருந்து வந்தே தமிழர்கள் ஈழத்தில் குடியேறினார்கள் என்பது வரலாறு. ஆக சேர நாட்டில் இருந்து வந்தவர்களால் இச் சொல் ஈழத்திற்கு வந்ததாக சொல்கிறார்கள்.

said...

இடையில் சின்ன விளக்கம்.
இங்கு வெற்றி, மலைநாடான், யோகன் பாரீஸ் போன்றோர் ஈழத்தவரின் உச்சரிப்பு மட்டுமே சரியென்ற முன்தீர்மானத்தோடு கதைத்துக்கொண்டிருக்கிறார்கள். அது தவறு.

//இந்தியா டுடே என்பது INDIA TODAY எனும் பத்திரிகைக்குச் சரியா? நான் அது இந்தியா ருடே!! என இருக்க வேண்டுமெனக் கருதுகிறேன்.//
யோகன், ஈழத்தவருக்கு (யாழ்ப்பாணத்தாருக்கு) மட்டும்தான் அது ருடே எண்டிருக்கவேணும். தமிழகத்த்தாருக்கு டுடே என்பதே சரி. அவர்களுக்கு ருடே என்பது ruday / roday தான். அதுபோற்றான் ரொறன்ரோ உட்பட பிற சொற்களும். "நாங்கள் ரொறன்ரோ என்றே உச்சரிப்போம்" என்று பதில் கூறுவது கவுண்டமணி - செந்தில் வாழைப்பழ முசுப்பாத்தி போல்தான் முடியும். ஏனென்றால் ரொறன்ரோ என்பதை எப்படி உச்சரிப்பது என்பதில் தான் இருதரப்புமே வேறுபடுகின்றன.
வெள்ளையரிடம் போய் ரீவி என்றால் புரிந்துகொள்வார் என்று சொல்வது எப்படி? ரீவி என்று ஈழத்தவர் சொன்னால் மட்டும்தான் புரிந்துகொள்வார், தமிழகத்தார் சொன்னால் புரிந்துகொள்ள மாட்டார். தமிழகத்தார் டிவி என்று சொன்னால்தான் புரிந்துகொள்வார். ஏனென்றால் இருதரப்புமே சொல்வது TV ஐ.
மீண்டும் இந்தச் சிக்கலின் அடிப்படைக் கோட்டைத் தொட்டு ஒரே வசனத்தில் சொல்கிறேன். இது ஆங்கிலச் சொற்களைத் தமிழாக்கும்போதுதான் வந்த பிரச்சினையன்று; தமிழ் 'ர'கர, 'ற'கர உச்சரிப்பிலேயே இருதரப்புக்குமிடையில் வித்தியாசமுண்டு; அதுதான் அடிப்படை.
கொத்தனார், தொடக்கத்தில் வரும் 'ர' மட்டும்தான் இப்படி மாறுமென்று தடாலடியாக நான் சொல்லியிருக்கக் கூடாது. இது பழக்கத்தில் மட்டுமே கண்டுபிடிக்கப்பட வேண்டியவை. தொடக்கத்தில் வரும் 'ர' வை R உச்சரிப்பிலேயே சொல்லும் பல சொற்கள் எம்மிடமுள்ளன. T என்று உச்சரித்த பல சொற்களை R என்று உச்சரிக்கத் தொடங்கிவிட்டோம். ஆங்கிலச் சொற்கள் சிலவற்றை எழுத்தில் மட்டும் மாற்றியெழுதத் தொடங்கிவிட்டோம் (பெரும்பான்மையோடு இயல்பாகச் சேரல்)
சிலசொற்களை நாங்கள் எப்படி உச்சரிப்போம் என்று ஓர் ஒலிப்பதிவை விரைவில் தருகிறேன். அவ்வளவுதான் இது தொடர்பிற் செய்ய முடியும்.

said...

வசந்தன்,

/* இங்கு வெற்றி, மலைநாடான், யோகன் பாரீஸ் போன்றோர் ஈழத்தவரின் உச்சரிப்பு மட்டுமே சரியென்ற முன்தீர்மானத்தோடு கதைத்துக்கொண்டிருக்கிறார்கள். அது தவறு. */

வசந்தன். மன்னித்துக் கொள்ளுங்கள். நான் சொல்வதுதான் சரியென்று வாதிடவில்லை. என் அனுபவங்களைத் தான் சொல்கிறேன். இப் பிரச்சனை அவர் சரி இவர் பிழை என்று சொல்லக் கூடிய சிக்கல் இல்லை. நான் ஏற்கனவே பல முறைகள் சொன்னது போல் என் தமிழ்ப்புலமை ஈழத்தில் படித்த 6ம் வகுப்பு வரையான தமிழ்தான். எனவே நான் தெளிவாகச் சொல்லாமல் இருந்தால் தயவு செய்து மன்னித்துக் கொள்ளவும். குழப்பத்திற்கு மனம் வருந்துகிறேன்.

said...

கொத்தனார்,
DV, TV என்ற இரண்டையும் நீங்கள் டிவி என்றுதான் எழுதுவீர்கள்.
நாங்கள்

ரிவி - TV
டிவி - DV

என்று எழுதுவோம்.

said...

ஈழத்தமிழர்கள் எழுதுவதும் சிறிது வித்தியாசமாகத்தான் உள்ளது.
அவுஸ்திரேலியா என்று முதலில் படிக்க வித்தியாசமாகத்தான் இருந்தது. ஆஸ்திரேலியா என்றுதான் நம‌க்கு பழக்கம். ஆங்கில மாதங்கள் தமிழில் எழுதப்படும் போதும் இந்த வித்தியாசங்களைப்பார்க்கிறேன்.

said...

//அதனை ஆங்கிலத்தில் ravi என்று எழுதுவதோடல்லாமல் உச்சரிப்பும் றவி என்றே இருக்கிறது//

ஆகா...

கொத்ஸ் பதிவுக்கு நன்றி!
வரும் பின்னூட்டங்களில் இருந்தே பல தமிழ்ச் சொற்களை புழக்கத்துக்கு எடுத்தாளலாம்!

மதுரை, நெல்லை, சென்னை என்று தமிழ் வட்டார வழக்குப் பேச்சில் இருந்தாலும், எழுத்தில் பெரும்பாலும் ஒரே மாதிரி தான் எழுதுகிறார்கள்!
உச்சரிப்பின் பாற்பட்டது எழுத்தின் வடிவம் என்று கொள்வதால் இத்தனை எழுதும் முறைகள்!

ஈழத்து நண்பர்களைப் போல் நாமும் சில சமயம் எழுதுகிறோமே!
தற்காலிகம் = தாற்காலிகம்
நாராயணன் = நாறாயணன் (பல பழைய தமிழ் நூல்களில் இப்படி இருக்கும்)

வங்காளிகள் உச்சரிப்பும் எழுத்தும் கூட மிகவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது!

said...

இக்கேள்விக்கு ஈழ நண்பர்கள் பதிலுரைப்பதே முறையெனினும், என் ஈழ நண்பர்கள் சிலரிடம் நான் அறிந்த கருத்தினை இங்கு சொல்லுகிறேன்!

இதற்கு எல்லம் அடிப்படையாக இந்த "குற்றம்" எனும் சொல்லை எடுத்துக் கொள்வோம்.

அதில் வரும் 'ற்'ஐ எப்படி உச்சரிக்கிறோம்?

'ட்ர்' என்றுதானே!

அதேபோல, 'T' என்னும் ஆங்கில எழுத்து பல இடங்களில் இருவிதமாக உச்சரிக்கப் படுகிறது.

'டொரான்டோ' என்னும் சொல்லையே எடுத்துக் கொள்வோம்.

'[ற்]அல்லது[ட்ர்]டொரான்டோ' என்றுதான் சொல்கிறார்கள் கனேடியரும்.

இது புரிந்தால் மற்ற உச்சரிப்புகளும் புரியும் என நினைக்கிறேன்.

அதாவது, அழுத்திச் சொல்லும் 't'ஐ 'ற்'என்றும், மெலிதாகச் சொல்லும் 't'ஐ 'ர்' எனவும் இவர்கள் கேட்பதால், அப்படியே எழுதுகிறார்கள்.

அது அவர்களுக்குப் புரிகிறது.
அப்படியே விட்டுவிடலாமே!

TVஐ ரீவி என்பதும் இப்படியே!

ஏதோ நம்மாலான உபகாரம்.
வரட்டுமா,கொத்ஸ்!
:)

said...

நல்ல பதிவு கொத்ஸ். பல விசயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

//தமிழகத்தில் ரி மற்றும் றி இவற்றுக்கு இடையில் உச்சரிப்பு வித்தியாசம் உள்ளதா..?//
சயந்தன், ரி மற்றும் றி க்கு இடையில் உச்சரிப்பில் சின்ன வித்தியாசம் இருக்கிறது என்றே உணர்கிறேன். இடையின ரவை விட வல்லின ற, இன்னும் கொஞ்சம் வன்மையாய்ச் சொல்லப்படுகிறது என்றே நம்புகிறேன். வல்லின எழுத்துக்கள் பிறக்குமிடம், இடையின எழுத்துக்கள் பிறக்குமிடம் என்று இன்னும் ஆழமாக போனால், தெளிவாக வித்தியாசம் உணர முடியும்.

ஆனால், ர,ற, ன,ண, ல,ள,ழ க்களை ஒன்று போலவே பாவிப்பவர்களும் தமிழகத் தமிழரில் இருக்கிறார்கள். (பேசும்போதே எழுத்துப்பிழை :) ) அதனால் இவை ஒரே மாதிரி உச்சரிக்கப்படுவதாக உங்களுக்குத் தோன்றியிருக்கக் கூடும்.

said...

இது தொடர்பில் நான் ஒலிப்பதிவொன்று இட்டிருக்கிறேன்.
ஓரளவுக்கு விளக்கம் கிடைக்கலாம்.
உச்சரிப்பு மயக்கம் - ஒலிப்பதிவு

said...

இந்திய மக்களுடைய ஆங்கில உச்சரிப்பில்
கூடுதலாக "ர்" தொனி இருக்கிறதே ??

said...

//இங்கு வெற்றி, மலைநாடான், யோகன் பாரீஸ் போன்றோர் ஈழத்தவரின் உச்சரிப்பு மட்டுமே சரியென்ற முன்தீர்மானத்தோடு கதைத்துக்கொண்டிருக்கிறார்கள். அது தவறு.//


வசந்தன்!

இந்த உச்சரிப்பு, எழுதும்வகையெல்லாம், ஈழத்தவர்கள் செய்வதே சரியென்ற எண்ணமோ, வாதமோ, எப்போதும் என்னிடமிருந்ததில்லை. என்னுடைய பின்னூட்டங்களில் அப்படியான தொனிப்பு எங்கேயாவது தென்பட்டிருந்தால் அது தவறுதலாக இடம்பெற்றதெனவே கொள்க.

said...

அப்பாடா... பேக் டு பார்ம்!


அடிச்சேண்டா அம்பது!


பதிவுக்கு சம்பந்தமா ஒண்ணும் இப்போதைக்கு தோணலியே! அப்புறமா நூறு அடிக்கறச்சே வரேன்!

said...

மன்னிக்கணும். வேலைப்பளுவால கொஞ்சம் இங்க கவனிக்க முடியாம போயிடுச்சு. இப்ப எல்லார் கருத்தையும் படிச்சி பதில் சொல்லறேன்.

said...

யோகன் அண்ணா,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

//INDIA TODAY எனும் பத்திரிகைக்குச் சரியா? நான் அது இந்தியா ருடே!! என இருக்க வேண்டுமெனக் கருதுகிறேன்.//

இந்தியாவில் ருடே என்பது ruday என்றே உச்சரிக்கப் படுமாதலால் இந்தியத் தமிழில் இது டுடே என்றே பாவிக்கப்பட வேண்டும். 'ட்' என்ற எழுத்தை T என உச்சரிக்க வேண்டுமா அல்லது D என உச்சரிக்க வேண்டுமா என்பது நீங்கள் கூறிய படி சந்தர்ப்பத்தைக் கொண்டே ஊகித்துக் கொள்ளப் படுகிறது.

//அத்துடன் நம்ம எஸ்.எஸ்.சந்திரன் ஒரு பிரச்சாரக் கூட்டத்தில்; எங்களிடமும் ஜேகே 47;இருக்கு எனப் பேசியதாக "துக்ளக்" எழுதியது.அந்த ஏகே அவர் காதில் அப்படி விழுந்துவிட்டதோ?//

அவர் தலைவியை 'ஜெ' எனக் குறிப்பிடுகிறார்கள் அல்லவா, அதனால் அவர் சமயோசிதமாக ஜெ.கே. 47 என சொல்லி இருக்கலாம். மற்றபடி இதில் வேறெதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை.

//மற்றும் "துக்ளக்"; தமிழக வானொலி, தொலைக்காட்சிச் செய்திகளில் "தாற்காலிக " என எழுதுகிறார்கள்; சொல்லுகிறார்கள். இது சரியா?நான் "தற்காலிக" சரியான வடிவம் என நினைக்கிறேன்.//

கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கிறது. இது பற்றி மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் எனப் பார்க்கலாம்.

said...

தீவு,

//ஏதோ கும்மி பதிவாக்கும் என ஒரு ஐமிச்சத்தில்தான் வந்தேன்.:)பரவாயில்லை ஆரோக்கியமாகத்தான் பின்னூட்டங்கள் செல்கிறது.//

இதுவரை கடவுள் புண்ணியத்தில் தடம் பெயராமல் நன்றாகவே சென்று கொண்டிருக்கிறது!

//முன்னர் ஒருமுறை ஈழ - தமிழக வலை அகராதி
ஒன்று ஆரம்பிக்கவேண்டும் என நினைத்தேன்.ஆனால் முடியவில்லை.யாராவது ஆரம்பித்தால் நன்று.//

நல்ல முயற்சியாகத்தான் இருக்கும்.

said...

சின்னக்குட்டி,

உங்கள் பதிவினைப் படித்தேன். நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் தலைப்பு ஒரு பதிவில் அடங்கி விடக்கூடிய விதயம் இல்லை. மொழியியல் வல்லுநர்கள் இதனைப் பற்றி ஆராய்ச்சி செய்து கருத்துக்களை வெளியிட்டால் மிக சுவாரசியமாக இருக்கும். வட தமிழகம், தென் தமிழகம், கொங்குநாடு, ஈழத்தின் பல பகுதிகள் என பல இடங்களில் பாவிக்கப்படும் வட்டாரத் தமிழ் பற்றி ஒரு தொடர் எழுத முனையுங்களேன். ஒரு குழுமமாக இதனை செய்யலாமே.

said...

சயந்தன்,

வருகைக்கு நன்றி.

//தமிழகத்தில் ரி மற்றும் றி இவற்றுக்கு இடையில் உச்சரிப்பு வித்தியாசம் உள்ளதா..?//

பொதுவாக றி என்ற எழுத்துக்கு ரி என்ற எழுத்தை விட அழுத்தம் அதிகமாக இருக்கும். பேச்சு வழக்கில் இந்த வித்தியாசம் பல சொற்களில் தெரிவதில்லைதான்.

//நாம் ரிவி என்னும் போது உச்சரிக்கின்ற ரி க்கான உச்சரிப்பு தமிழகத்தில் இல்லை. //

அப்படிச் சொல்ல முடியாதென்றே நினைக்கிறேன். டிவி என எழுதினாலும் அது teevi என்றே உச்சரிக்கப்படுகிறது. D என்ற உச்சரிப்புக்கும் 'ட்' என்ற எழுத்தே பயன்படுவதால் சில சமயங்களில் குழப்பங்கள் நேரலாம். ஆனால் சந்தர்ப்பத்தை வைத்து பெரும்பாலும் சரியாகவே படிக்க முடிகிறது. தமிழில் P,B க்கான வித்தியாசத்தை உணருவது போலவும், ஆங்கிலத்தில் L என்ற எழுத்து ல மற்றும் ள என்ற உச்சரிப்பிற்கு உபயோகப்படுவது போல.

//ரிவி என எழுதினால் ஒரு ஈழத்தமிழர் TV ஐ ஆங்கிலேயர் எப்படி உச்சரிப்பரோ அப்படி உச்சரிப்பார்..//

மீண்டும் சொல்கிறேன். டிவி என எழுதினால் தமிழகத்தார் TV ஐ ஆங்கிலேயர் எப்படி உச்சரிப்பரோ அப்படித்தான் உச்சரிப்பார்.

said...

வெற்றி,

//இ.கொ, இப்பிடி எல்லாம் கேள்விகள் கேட்டு மடக்கினால் உங்கட பதிவுப் பக்கமே வரமாட்டேன் :))//

இப்படி ஒரு சின்ன கேள்விக்கே ஓடினால் எப்படி? :)))

//Pa, Ba சிக்கல் தமிழில் உள்ள சிக்கலாகவே நான் பார்க்கிறேன். //

தமிழகத்தில் இந்த Pa, Ba சிக்கல் போன்றே ta,da (சேர்த்து தடா எனப் படிக்காதீர்கள். அது வேறு சிக்கல்!) சிக்கலும் பார்க்கப்படுகிறது. சந்தர்ப்பத்தை கொண்டு டா என்னும் எழுத்து ta வாகவோ da வாகவோ உச்சரிக்கப்படுகிறது.

//அதாவது P, B, F போன்ற ஆங்கில எழுத்துக்களுக்கு ஒத்த உச்சரிப்புள்ள எழுத்துக்கள் தமிழில் இல்லையென்றே நான் நினைக்கிறேன். ஆக இந்த Pa, Ba சிக்கல் ஈழத்தமிழில் மட்டுமல்ல தமிழகத் தமிழிலும் உண்டென்றே கருதுகிறேன். //

ஆமாம். தமிழகத்தில் Pa, Ba உச்சரிப்புக்கு ப என்ற ஒரு எழுத்தே பாவிக்கப்படுகிறதோ, அது போலவே
Ta, Da என்ற உச்சரிப்புக்கு 'ட' என்ற ஒரு எழுத்துதான் பாவிக்கப்படுகிறது.

ஆங்கிலத்தை எடுத்துக் கொண்டோமானால் L என்ற ஒரு எழுத்துதானே வந்தால் வந்தாள் என்ற இருவித உச்சரிப்புக்கும் பாவிக்கப்படுகிறது. அது போலத்தான்.

said...

//இதற்கு நான் அறிந்த காரணம், இன்றைய கேரளா அன்றைய சேர நாட்டின் பகுதியாக இருந்ததாம். பண்டைய காலத்தில் சேர, சோழ , பாண்டிய நாட்டில் இருந்து வந்தே தமிழர்கள் ஈழத்தில் குடியேறினார்கள் என்பது வரலாறு.//

வெற்றி,

இது குறித்த ஆராய்ச்சி கட்டுரைகள் எதேனும் படித்திருந்தால் அது பற்றி எழுதுங்களேன்.

said...

வசந்தன்,

தங்கள் விளக்கத்தோடு நான் முழுவதும் ஒத்துப் போகிறேன். நன்றி.

//இங்கு வெற்றி, மலைநாடான், யோகன் பாரீஸ் போன்றோர் ஈழத்தவரின் உச்சரிப்பு மட்டுமே சரியென்ற முன்தீர்மானத்தோடு கதைத்துக்கொண்டிருக்கிறார்கள்.//

சரி தவறென்று அவர்கள் சொல்ல வரவில்லை என்றே நினைக்கிறேன். அவர்கள் சிறுவயது முதலே ர என்ற எழுத்தை ta என பாவித்து வந்திருப்பதால் தமிழகத்தில் எப்படி அதற்கு ட என்ற எழுத்தை பாவிக்கிறார்கள் என அவர்களுக்கு ஒரு விதமான தயக்கம் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

//"நாங்கள் ரொறன்ரோ என்றே உச்சரிப்போம்" என்று பதில் கூறுவது கவுண்டமணி - செந்தில் வாழைப்பழ முசுப்பாத்தி போல்தான் முடியும். ஏனென்றால் ரொறன்ரோ என்பதை எப்படி உச்சரிப்பது என்பதில் தான் இருதரப்புமே வேறுபடுகின்றன.//

அதைத்தான் நான் மீண்டும் ஆங்கிலத்தில் எழுதி புரிந்துகொண்டேன். (அது இருக்கட்டும், முசுப்பாத்தி என்றால் என்ன? நகைச்சுவைக்கு வேறு ஒரு சொல்லா?)

//சிலசொற்களை நாங்கள் எப்படி உச்சரிப்போம் என்று ஓர் ஒலிப்பதிவை விரைவில் தருகிறேன். அவ்வளவுதான் இது தொடர்பிற் செய்ய முடியும்.//

இவ்வளவு தூரம் வந்து உங்கள் கருத்துக்களை சொன்னதே பெரிய விதயம். ஏதோ தொழில் நுட்ப கோளாறால் தங்கள் ஒலிப்பதிவை என் கணினியில் கேட்க முடியவில்லை. நாளை வேறு ஒரு கணினியில் இருந்து கேட்டுவிட்டு பதில் கூறுகிறேன்.

said...

//நான் சொல்வதுதான் சரியென்று வாதிடவில்லை. என் அனுபவங்களைத் தான் சொல்கிறேன். //

வெற்றி, இங்கு யாரும் யாரையும் தவறெனச் சொல்ல வரவில்லை என எனக்கு புரிந்துதான் இருந்தது. தங்கள் விளக்கத்திற்கு நன்றி.

said...

//DV, TV என்ற இரண்டையும் நீங்கள் டிவி என்றுதான் எழுதுவீர்கள்.
நாங்கள்

ரிவி - TV
டிவி - DV

என்று எழுதுவோம்.//

வசந்தன் இது நன்றாகவே புரிந்துவிட்டது!

said...

//ஈழத்தமிழர்கள் எழுதுவதும் சிறிது வித்தியாசமாகத்தான் உள்ளது.
அவுஸ்திரேலியா என்று முதலில் படிக்க வித்தியாசமாகத்தான் இருந்தது. ஆஸ்திரேலியா என்றுதான் நம‌க்கு பழக்கம். ஆங்கில மாதங்கள் தமிழில் எழுதப்படும் போதும் இந்த வித்தியாசங்களைப்பார்க்கிறேன்.//

சின்ன அம்மிணி,

வருகைக்கு நன்றி. அவுஸ்திரேலியா என எழுதினாலும் புரிகிறதே. இந்த ரெஸ்ற், ரொறான்ரோ தான் சிறுது கடினமாய் இருந்தது. ஆனால் ர என்றால் ta என மனதிலிறுத்துனால் எளிதாகப் புரிகிறது.

ஐரோப்பாவில் சில நாடுகளில் J என்ற ஆங்கில எழுத்து Y என உச்சரிக்கப்படுவது போல. அதாவது John என எழுதினால் யான் என உச்சரிக்க வேண்டும். யோகன் அண்ணா, தங்கள் பெய்ர் கூட அது போலத்தானே!

said...

//மதுரை, நெல்லை, சென்னை என்று தமிழ் வட்டார வழக்குப் பேச்சில் இருந்தாலும், எழுத்தில் பெரும்பாலும் ஒரே மாதிரி தான் எழுதுகிறார்கள்!
உச்சரிப்பின் பாற்பட்டது எழுத்தின் வடிவம் என்று கொள்வதால் இத்தனை எழுதும் முறைகள்! //

கே.ஆர்.எஸ், வருகைக்கு நன்றி. பல இடங்களில் விதிமீறல் இருப்பதால்தான் பல குழப்பங்கள்!

said...

எஸ்.கே. ஐயா,

//அது அவர்களுக்குப் புரிகிறது.
அப்படியே விட்டுவிடலாமே!//

அப்படியே விடத்தான் வேண்டும். யாரும் யாரையும் மாறச் சொல்லவில்லை. அவர்கள் பாவிக்கும் முறை பற்றி நமக்கு புரிதல் வேண்டுமென்றுதான் இந்த பதிவே.

//ஏதோ நம்மாலான உபகாரம்.
வரட்டுமா,கொத்ஸ்!
:)//

நாராயண! நாராயண! :))

said...

//இது தொடர்பில் நான் ஒலிப்பதிவொன்று இட்டிருக்கிறேன்.
ஓரளவுக்கு விளக்கம் கிடைக்கலாம்.
உச்சரிப்பு மயக்கம் - ஒலிப்பதிவு//

வசந்தன்,
ஏதோ தொழில் நுட்ப கோளாறால் தங்கள் ஒலிப்பதிவை என் கணினியில் கேட்க முடியவில்லை. நாளை வேறு ஒரு கணினியில் இருந்து கேட்டுவிட்டு பதில் கூறுகிறேன்.

said...

//இந்திய மக்களுடைய ஆங்கில உச்சரிப்பில்
கூடுதலாக "ர்" தொனி இருக்கிறதே ??//

அனானி, கொஞ்சம் எடுத்துக்காட்டுகளோடு விளக்குங்களேன்.

said...

//இந்த உச்சரிப்பு, எழுதும்வகையெல்லாம், ஈழத்தவர்கள் செய்வதே சரியென்ற எண்ணமோ, வாதமோ, எப்போதும் என்னிடமிருந்ததில்லை.//

மலைநாடான், வெற்றிக்குச் சொன்னது போலவே, சரி தவறென்று நிர்ணயம் செய்வதற்காக இந்த பதிவு இடப்படவில்லை. ஒவ்வொருவரும் பாவிக்கும் முறைகள் பற்றி ஒரு புரிதலுக்காகவே. அதுவே தங்கள் கருத்தென்பது எனக்கு விளங்கிய ஒன்றே. வருத்தம் வேண்டாம்.

said...

//அப்பாடா... பேக் டு பார்ம்!
அடிச்சேண்டா அம்பது!//

ராம்ஸு, ரொம்ப நாளுக்கு அப்புறம் 50 அடிச்சிருக்கீரு ஐயா! நீர் கூட பார்முக்கு வந்தாச்சு. நம்ம சச்சின் எப்ப வருவாரோ பார்க்கலாம்!

//பதிவுக்கு சம்பந்தமா ஒண்ணும் இப்போதைக்கு தோணலியே! அப்புறமா நூறு அடிக்கறச்சே வரேன்!//

பதிவைப் படியுங்க, எவ்வளவு புதிய தகவல்கள் இருக்கு. எனக்கு ரொம்ப சுவாரசியமா இருந்ததுப்பா.

said...

பொன்ஸ்,

உங்களுக்கு பதில் சொல்ல விட்டுப் போச்சே.

//சயந்தன், ரி மற்றும் றி க்கு இடையில் உச்சரிப்பில் சின்ன வித்தியாசம் இருக்கிறது என்றே உணர்கிறேன். இடையின ரவை விட வல்லின ற, இன்னும் கொஞ்சம் வன்மையாய்ச் சொல்லப்படுகிறது என்றே நம்புகிறேன். வல்லின எழுத்துக்கள் பிறக்குமிடம், இடையின எழுத்துக்கள் பிறக்குமிடம் என்று இன்னும் ஆழமாக போனால், தெளிவாக வித்தியாசம் உணர முடியும்.

ஆனால், ர,ற, ன,ண, ல,ள,ழ க்களை ஒன்று போலவே பாவிப்பவர்களும் தமிழகத் தமிழரில் இருக்கிறார்கள். (பேசும்போதே எழுத்துப்பிழை :) ) அதனால் இவை ஒரே மாதிரி உச்சரிக்கப்படுவதாக உங்களுக்குத் தோன்றியிருக்கக் கூடும்.//

முழுவதும் உடன் படுகிறேன். :))

said...

இ.கொ,

/* முசுப்பாத்தி என்றால் என்ன? நகைச்சுவைக்கு வேறு ஒரு சொல்லா?)*/

ஓமோம்[ஆமாம்]. முசுப்பாத்தி என்றால் joke, humour, comedy, fun என்ற ஆங்கிலச் சொற்களுக்கு இணையான சொல். முசுப்பாத்தி, பகிடி போன்ற சொற்களுக்கு இணையான தமிழகச் சொல் தமாஷ் என நினைக்கிறேன். ஆனால் தமாஷ் தமிழ்ச் சொல்லா தெரியவில்லை. மலையாளத்திலும் தமாஷ் என்ற சொல்லைத் தான் புழங்குகிறார்கள் என என் மலையாள நண்பர் சொன்னார். இச் சொல்லைச் சொல் ஒரு சொல்லில் ஆராயுமாறு குமரனிடம் கேட்க வேணும்.

சரி முசுப்பாத்தி என்ற சொல்லின் முக்கிய கரு நகைச்சுவை தான். இச் சொல் பல இடங்களில் பல விதமாகப் பாவிக்கப்படும்.

அதுசரி, முசுப்பாத்தி என்ற சொல் தமிழகத்தில் புழக்கத்தில் இல்லையா? இச் சொல்லை வாரியார் சுவாமிகள் சில இடங்களில் புழங்கியிருப்பதைக் கேட்டிருக்கிறேனே?!

இ.கொ, இப்ப விளங்குதோ? இல்லையெண்டால் சொல்லுங்கோ. பேந்து வந்து விளங்கப்படுத்துறேன்.

said...

வெற்றி,

விளக்கத்திற்கு நன்றி. இது வரை நான் கேட்டிராத சொல் இது. அது பாவிக்கப்பட்டிருந்த விதம் வைத்துப் புரிந்து கொண்டேன். வாரியார் சுவாமிகள் இச்சொல்லைப் பயன் படுத்தியிருக்கிறார் என்பதும் எனக்குப் புதிய தகவலே!

இது பற்றி தமிழகத்தார் வேறு யாரேனும் கருத்து சொல்கிறார்களா எனப் பார்ப்போம்.

said...

//இதற்கு நான் அறிந்த காரணம், இன்றைய கேரளா அன்றைய சேர நாட்டின் பகுதியாக இருந்ததாம். //

4 நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை மலையாளத்திற்கு தனி எழுத்துக்கள் (script) கிடையாது. அது தமிழ் எழுத்துக்களைத்தான் பாவித்து வந்ததாக ஜெயமோகன் திண்ணையில் எழுதியிருந்ததாக படித்திருக்கின்றேன்.

மலையாளத்திற்கும் தமிழுக்கும் அவ்வளவு நெருங்கிய தொப்புள்கொடி உறவு.

said...

////இந்திய மக்களுடைய ஆங்கில உச்சரிப்பில்
கூடுதலாக "ர்" தொனி இருக்கிறதே ??//

அனானி, கொஞ்சம் எடுத்துக்காட்டுகளோடு விளக்குங்களேன்.//

அனானி & இலவசக்கொத்தனார்:

இந்தியர்களின் ஆங்கிலத்தில் R உச்சரிப்பு அதிகமாக இருப்பது உண்மைதான். அதற்குக் காரணம், ஆரம்பத்தில் இந்தியாவில் ஆங்கிலம் கற்பித்தவர்கள் ஸ்காட்டிஷ் பாதிரியார்கள் (Scottish Priests). ஸ்காட்டிஷ் மக்களின் ஆங்கில உச்சரிப்பில் Rக்கு நிறைய அழுத்தம் இருக்கும்.

-0-

வலைப்பதிவுகளுக்கு முன்பே, தமிழ் இணையம் என்ற ஒன்று ஆரம்பித்த காலத்திலிருந்தே இருக்கும் பிரச்சினை இது. தமிழ்வலைப்பதிவுகளிலும் 2003 வாக்கில் ஒரு சுற்று வந்த விதயமிது. ஆயினும் அவ்வப்போது இந்த விதயத்தை வைத்துக் குளிர்காய்பவர்கள்தாம் அதிகம். இதுவும் அம்மாதிரியான பதிவோ என்றொரு சந்தேகம் இருந்தது. பின்னூட்டங்கள் நல்லமுறையில் செல்வது சந்தோ்ஷமாகவிருக்கிறது.

-மதி

said...

சில இலங்கைச்சொற்களுக்கு வேற்றுமொழி மூலமுண்டெனப்படுகிறது

காவாலி - cavalier
சம்பல் - sambol (indonesian 'chilli paste')

முஸ்பாத்தி, முசுப்பாத்தி - (a)museparty?

said...

மதி,

வருகைக்கு நன்றி.

//அதற்குக் காரணம், ஆரம்பத்தில் இந்தியாவில் ஆங்கிலம் கற்பித்தவர்கள் ஸ்காட்டிஷ் பாதிரியார்கள் (Scottish Priests). ஸ்காட்டிஷ் மக்களின் ஆங்கில உச்சரிப்பில் Rக்கு நிறைய அழுத்தம் இருக்கும்.//

சுவையான செய்திதான். நீங்களும் சில எடுத்துக்காட்டுகள் தாருங்களேன். புரிதல் எளிதாக இருக்கும்.

//இதுவும் அம்மாதிரியான பதிவோ என்றொரு சந்தேகம் இருந்தது. பின்னூட்டங்கள் நல்லமுறையில் செல்வது சந்தோ்ஷமாகவிருக்கிறது.//

அவ்வளவு பெரிய டிஸ்கி போட்ட பின்னாலும் சந்தேகமா? :)

இந்த பதிவு மூலம் பல புதிய தகவல்கள் அறிந்து கொண்டேன். எனக்கும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.

said...

//காவாலி - cavalier
சம்பல் - sambol (indonesian 'chilli paste')

முஸ்பாத்தி, முசுப்பாத்தி - (a)museparty?//

நன்றி அனானி. இராமகி தமிழ்ச் சொற்களின் மூலம் ஆராய்வது போல் இது போன்ற ஈழத்தவர் பாவிக்கும் சொற்களின் மூலத்தைப் பற்றி யாரேனும் பதிவிட்டால் நன்றாக இருக்கும்.

said...

முசுப்பாத்தி பற்றி நம்ம வசந்தன் ஒரு பதிவே எழுதியிருக்கிறார். முசுப்பு என்றால் கோபம். ஆற்றி என்றால் தணிப்பது. இந்த வாறாக விளக்கம்.

இ.கொத்தனார்.. நீங்களும் டிவி என எழுதி விட்டு tv என உச்சரிப்பதாக சொல்கிறீர்கள். அப்படியானால் எல்லாம் சரி. உண்மையில் ரண்டு பகுதி தமிழுக்கும் இடையில் ஆங்கிலம் இருக்கிறது போலும். உதாரணத்திற்கு sorry.. நாம் சொறி என்கிறோம். நீங்கள் சாரி என்கிறீர்கள். இந்த இரண்டையும் எழுத்துக் கூட்டி வாசிக்கும் போது வரும் உச்சரிப்புகள் போல் அல்லாது ஆங்கில உச்சரிப்பு இடைநடுவில் உள்ளது.

உங்கடை சாரியை நாங்கள் வாசிக்கும் போது என்ன இவை saari எண்டுகினம் எண்டும் எங்கடை சொறியை நீங்கள் வாசிக்கும் போது என்னங்கடா இது.. இவங்க sori என்கிறாங்க எண்டும் ஆச்சரியப்படுகிறோம்.

உதாரணம் ஒன்று.
Doctor
நாம் தமிழில் டொக்ரர் எண்டுறம்.
நீங்கள் டாக்டர் என்கிறீர்கள்.
நான் அவதானித்த வரையில் அமெரிக்க ஆங்கில உச்சரிப்பில் doctor என்பது நெடிலில் ஆரம்பிக்கிறது. அதாவது டாக்டருக்க மிக கிட்டவாக. டொக்ரர் என குறிலில் அல்ல.அதே நேரம் டாக்டரும் அல்ல.. டோக்ர...

என்ன சிக்கல் எண்டால் தமிழ் சினிமாக்களில் தமிழில் ஆங்கிலத்தை எப்படி எழுதுகிறீர்களோ அப்படியே தானே உச்சரிக்கிறார்கள்.

கவுண்டமணி செந்தில் எல்லாம் சாaaரி என்று தான் சொல்கிறார்கள். சன்னில் கூட DV என்று தான் உச்சரிக்கிறார்கள்.

குழப்புறன்.. போல.. இதை எழுதி விளக்கேலாது..

said...

நல்லதொரு பதிவு இது.
//இன்னொன்று தகவல் கொதஸ் [பதிவுக்குச் சம்பந்தம் இல்லாதது], தமிழகத்தவர்கள் ஆம் என்பதை நாம் ஓம் என்கிறோம்.

ஆம் = ஓம்
ஆமாம் = ஓமோம்
ஆமாங்க = ஓமுங்கோ
புரியுதா = விளங்குதா
சாயங்காலம் = பின்னேரம்
காலனி = குடியிருப்பு//

இன்னும் பேச்சு வழ்க்கில் நிறைய இருக்கிகின்:
பைத்தியம்-விசர்
என்னங்க-இஞ்சருங்கோ
அப்புறம்-பின்ன, பிறகு, அப்ப
உட்காருங்க-இருங்கோ
சௌக்கியமா இருக்கீன்களா?-சுகமா இருக்கிறியளோ?
இப்படி நிறைய எழுதலாம்

said...

முசுப்பாத்தியென்பது நீங்கள் சொல்வது போல் நகைச்சுவையைக் குறிக்கும்.
ஆனால் மிகநல்ல தமிழ்ச்சொல். அதற்கு வேர் காட்டப்பட்டுள்ளது. (நகைச்சுவை தமிழா? இல்லையே?)
முசுப்பாத்தி என்ற சொல் பற்றி தனிப்பதிவு எழுதினேன்.
பொறுங்கள் சுட்டி தருகிறேன்.

said...

வசந்தன் பக்கம்: முசுப்பாத்தி பற்றி முசுப்பாத்தியாக...

said...

இ.கொ & Anonymous,

/* சில இலங்கைச்சொற்களுக்கு வேற்றுமொழி மூலமுண்டெனப்படுகிறது
காவாலி - cavalier
சம்பல் - sambol (indonesian 'chilli paste') */

காவாலி என்பது பழந் தமிழ்ச் சொல். இச் சொல் வேற்று மொழியில் இருந்து வந்தது என்பதில் எனக்கு உடன்பாடில்லை.
காவாலி என்றால் அறநெறி/ஒழுக்க நெறி தவறி வாழ்பவர்கள். அதாவாது தம்மை இப்படியான இழிசெயல்களில் இருந்து காவாதவர்கள்[காத்துக் கொள்ளாதவர்கள்] காவாலிகள் என அழைக்கப்படுவர். இன்றும் இச் சொல் ஈழத்தில் என் ஊரில் புழக்கத்தில் உண்டு. இச் சொல் இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னும் புழக்கத்தில் இருந்திருக்கிறது. அய்யன் வள்ளுவனும் திருக்குறளில் இச் சொல்லைப் புழங்கியிருக்கிறார் என்பதையும் இங்கே நினைவு கூற விரும்புகிறேன்.

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்


நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் காவாக்கால் என்பது காத்துக் கொள்ளாவிட்டால் அல்லது காக்காவிட்டால் எனும் பொருளில் தான் இக் குறளில் அய்யன் வள்ளுவர் புழங்குகிறார். ஆக இப்படி அறநெறியில் நின்று சினத்தைக் காவாதவர்கள் காவாலிகள் என்று அழைக்கப்படுவர்.

நான் முந்தி அம்மாவுடன் இருந்த காலத்தில், நண்பர்களுடன் அரட்டை அடித்துவிட்டு இரவு நேரங்களில் வீட்டிற்குப் பிந்தி வந்தால் அம்மா என்னை "காவாலியள் மாதிரி எங்கே சுத்திப் போட்டு வாறாய்" என்று திட்டுவார்கள்.

said...

//இழிசெயல்களில் இருந்து காவாதவர்கள்[காத்துக் கொள்ளாதவர்கள்] காவாலிகள் என அழைக்கப்படுவர்.//
வெற்றி, கலக்குறீங்களே.. சொல் ஒரு சொல்லில் நீங்களும் எழுதலாமே! :)

said...

//இ.கொத்தனார்.. நீங்களும் டிவி என எழுதி விட்டு tv என உச்சரிப்பதாக சொல்கிறீர்கள். அப்படியானால் எல்லாம் சரி. உண்மையில் ரண்டு பகுதி தமிழுக்கும் இடையில் ஆங்கிலம் இருக்கிறது போலும்.//

சயந்தன், அவ்வளவுதாங்க விஷயம். இப்போ எல்லாம் தெளிவா விளங்கிருச்சு இல்லையா. ஆங்கிலம் நடுவில இருக்கு. சில சமயங்களில் பாலமா, சில சமயங்களில் ஒரு சுவரா!

said...

//கவுண்டமணி செந்தில் எல்லாம் சாaaரி என்று தான் சொல்கிறார்கள். சன்னில் கூட DV என்று தான் உச்சரிக்கிறார்கள். //

இது ஒரு ஃபேஷனா போச்சுங்க. ஒருத்தர் தப்பா பேசினா திருத்தக் கூட பயமா இருக்கு. எவண்டா இவன் நம்மைத் திருத்த வந்துட்டான் பாருன்னு பார்க்கறாங்க. இல்லைன்னா அவனை நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன்னு சொல்லறாங்க. என்னவோ போங்க.

said...

//பைத்தியம்-விசர்
என்னங்க-இஞ்சருங்கோ
அப்புறம்-பின்ன, பிறகு, அப்ப
உட்காருங்க-இருங்கோ
சௌக்கியமா இருக்கீன்களா?-சுகமா இருக்கிறியளோ?//

செல்லி,

இதுல விசர், இஞ்சருங்கோ தவிர மற்றவை எல்லாம் தமிழகத்தில் புழங்குபவையே. முக்கியமாக தெற்குப் பகுதியில். விசர் பழந்தமிழில் பாவித்திருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.

said...

//வசந்தன் பக்கம்: முசுப்பாத்தி பற்றி முசுப்பாத்தியாக...//

வசந்தன், நல்ல பதிவு. சுட்டிக்கு நன்றி.

said...

வெற்றி,

//காவாக்கால்// - காவல் காக்காமல் என்பதின் குறுக்கமாகவே தோன்றுகிறது. காவாலி என்ற பதம் தமிழகத்தில் தற்போது பாவிக்கப்படுவதாகத் தெரியவில்லை.

said...

//வெற்றி, கலக்குறீங்களே.. சொல் ஒரு சொல்லில் நீங்களும் எழுதலாமே! :)//

ஆமாம் பொன்ஸ், இந்த பதிவு மூலம் பல நல்ல சொற்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. இங்கு அவற்றைத் தந்தவர்கள் இது போல் அடிக்கடி பல சொற்களை அறிமுகப் படுத்த வேண்டுமென்பதே என் வேண்டுகோள்.

said...

பொன்ஸ்,
/* வெற்றி, கலக்குறீங்களே..*/
நன்றி.
எல்லாம் உங்களினதும், இராகவன், குமரன் போன்றோர் பதிவுகளைப்
படிப்பதால் தான் இப்படி எழுத முடிகிறது என நினைக்கிறேன். பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்பார்கள் அல்லவா, அதுமாதிரித்தான். ஆக, எல்லாப் புகழும் உங்களுக்கும், குமரன், இராகவன் ஆகியோரையே சாரும்.

/*சொல் ஒரு சொல்லில் நீங்களும் எழுதலாமே! :) */

அது சரி :)) ஏன் சொல்லமாட்டீங்கள்!:)) ஏன் பொன்ஸ், நான் உங்களுக்கு என்ன கொடுமை செய்தனான்? நான் கல்லெறி படுவதையும் செருப்பால் அடி வாங்கிறதையும் பார்க்க உங்களுக்கு ஏன் இவ்வளவு ஆசை, huh?:))
கான மயில் ஆட கண்டிருந்த வான் கோழி ... என்ற மாதிரித் தான் முடியும்.

said...

கொத்தனார் ஐயா,

///
////இந்திய மக்களுடைய ஆங்கில உச்சரிப்பில்
கூடுதலாக "ர்" தொனி இருக்கிறதே ??//

அனானி, கொஞ்சம் எடுத்துக்காட்டுகளோடு விளக்குங்களேன்.//

அனானி & இலவசக்கொத்தனார்:

இந்தியர்களின் ஆங்கிலத்தில் R உச்சரிப்பு அதிகமாக இருப்பது உண்மைதான். அதற்குக் காரணம், ஆரம்பத்தில் இந்தியாவில் ஆங்கிலம் கற்பித்தவர்கள் ஸ்காட்டிஷ் பாதிரியார்கள் (Scottish Priests). ஸ்காட்டிஷ் மக்களின் ஆங்கில உச்சரிப்பில் Rக்கு நிறைய அழுத்தம் இருக்கும்.
///

//

அனானி, கொஞ்சம் எடுத்துக்காட்டுகளோடு விளக்குங்களேன்.//

தேவையான பதிவு !!!
உதாரணத்துக்கு,
That server is not working.

நாம சொலுவதென்றால் :

server :: செவர்
working :: வேக்கிங்

ஆனால் இந்திய நண்பரின் உச்சரிப்பு

server :: சர்வர்
working :: வர்க்கிங்

morning :: மோனிங் , மார்னிங்

நான் அவனுக்கு சொல்வது . உனக்கு "ர்" ல சரியான லவ்வுட.

மதி அவர்களின் விளக்கத்துக்கும் நன்றி

said...

//காவாலி என்ற பதம் தமிழகத்தில் தற்போது பாவிக்கப்படுவதாகத் தெரியவில்லை.//
இல்லை..எங்கள் குமரி மாவட்டத்தில் இது பரவலாக புழக்கத்தில் உள்ள வார்த்தை .வெட்டிப்பயல் ,பொறுக்கி என்பதற்கு பதில் காவாலி என்ற வார்த்தை உபயோகிக்கப்படுகிறது.

இது மட்டுமல்ல ..'குசினி' (சமையலறை) போன்ற ஈழத்தவர் உபயோகிக்கும் வார்த்தைகளும் எங்கள் ஊரில் புழக்கத்தில் உள்ளது .உணவுப்பழக்கத்தைப் பற்றி கேட்டவே வேண்டாம் .புட்டு ,பயிறு,பப்படம் (அப்பளம்) காம்பினேஷன் இங்கேயும் உண்டு .எல்லாம் சேர நாட்டு பாதிப்பு தான்.

said...

//கான மயில் ஆட கண்டிருந்த வான் கோழி ... என்ற மாதிரித் தான் முடியும்.//

வெற்றி, இப்படி எல்லாம் நினைக்காதீங்க. இன்றைக்கு வலையுலகில் சக்கை போடும் பலருக்கு முன்ன பின்ன எழுதிப் பழக்கமே கிடையாது. எல்லாம் மத்தவங்க முயற்சி பண்ணறாங்களே, நாமும் பண்ணிப் பார்க்கலாமேன்னுதான்.

அதனால நீங்க எழுதிக் குடுங்க. நல்லா வரும். அவங்களும் பார்த்து வெளியிடுவாங்க. வாழ்த்துக்கள்.

said...

திலகன்,

வருகைக்கு நன்றி. நீங்கள் சொன்ன உதாரணங்களைப் படித்த பின் நீங்கள் சொன்ன உச்சரிப்பு வித்தியாசங்கள் புரிகிறது. நன்றி.

said...

ஜோ,

வருகைக்கும் தகவலுக்கும் நன்றி. குமரி மாவட்ட பழக்கவழக்கங்கள் சேர நாட்டு பழக்க வழக்கங்களை ஒட்டி இருப்பது அறிந்ததே. ஈழத்தினரும் இது போல பல ஒற்றுமைகளைக் கொண்டு இருப்பது தெரிகிறது.

இது போன்று ஒரு குறிப்பிட்ட பகுதியில் புழங்கி வரும் சொற்களைப் பற்றி பதிவுகளிட்டால் நன்றாக இருக்குமே.

said...

வசந்தனின் முசுப்பாத்தி பதிவுக்கு நன்றி. ஐயம் அறத் திருத்திக்கொள்கிறேன்.

காவாலி என்பது காவாதார் என்பதிலேயிருந்து வந்ததென்பது உடன்படமுடியவில்லை. காவிச் செல்லாதார் எனும் அர்த்தத்திலே காவாதார் வருவதற்கும் காவாலி என்பதற்கும் உள்ள தொடர்பு பொருந்துவதாகத் தெரியவில்லை.

/காவாலி என்றால் அறநெறி/ஒழுக்க நெறி தவறி வாழ்பவர்கள். அதாவாது தம்மை இப்படியான இழிசெயல்களில் இருந்து காவாதவர்கள்[காத்துக் கொள்ளாதவர்கள்] காவாலிகள் என அழைக்கப்படுவர்./
இது பழந்தமிழிலே எங்கே சொல்லப்படுகிறது? முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னானதென்பதற்கு ஆதாரத்தினைத் தரமுடியுமா? வள்ளுவர் காக்காதவர்கள் என்று சொல்வதற்கும் இதற்கும் என்ன தொடர்பு? கொஞ்சம் விரித்துச் சொல்லுங்கள். புரிந்துகொள்ள உதவும். நன்றி.

இராம.கி அவர்களின் வேர்ச்சொற்கள் பற்றிய கருத்துகளிலே பல உடன்படக்கூடியனவெனினும், சிலவற்றிலே சொல் தமிழிலேயிருந்து வந்ததெனக் காட்டவே ஒலி சார்ந்த திரிபுகளாகக் காட்டப்படுகின்றன என்று எனக்குப் படுகிறது.

said...

அட ஆமாம்!, நல்ல சந்தேகந்தான். பின்னூட்டங்களை படிக்கல்ல.. :). திரும்பி வர்ரேன்....95

said...

ஆமாம்!, "பலுக்கப்படும்" அப்படின்னா?.

// எம்மால் பலுக்கப்படும் முறையையும் //

பேசறதா?, இல்ல பழக்கப்படும்ன்னு அர்த்தமா?

96

said...

//இது சொல் ஒரு சொல்லில் வர வேண்டிய பதிவு இல்லையா? விக்கிபசங்களில் ஏன் வந்தது?//

ஓ இதனாலதான் குமரன் சொல்-ஒரு-சொல் வலைப்பதிவில் ஏதும் எழுதாம விட்டுட்டாரா? :)

நாராயண, நாராயண

97

said...

//அடிச்சேண்டா அம்பது!

பதிவுக்கு சம்பந்தமா ஒண்ணும் இப்போதைக்கு தோணலியே! அப்புறமா நூறு அடிக்கறச்சே வரேன்! //

மருத்துவர் அண்ணனுக்கு ஒரு வணக்கம். நான் பாவம் விட்டுடுங்க, ஒருமுறை நான் நூறு அடிச்சுக்கறேனே!
:)

98?

said...

//என்னங்க-இஞ்சருங்கோ//

ஓ இதுதான் அந்த இஞ்சருங்கோ, இஞ்சருங்கோ பாட்டா?.. அப்போ எனக்கு இது என்ன மொழின்னு புரியாம இருந்தேன்

99 ?

said...

கிட்டத்தட்ட 15 மாதங்கள் கழித்து 100 அடிச்சிருக்கு இந்த பதிவு.

ராமநாதன், மன்னிச்சுக்கங்க!!!! :)

100?

said...

அடடா! பிளாக்கர் ஏதோ சதி பண்ணிடுத்தே!!!! என்னோட கடைசிப்பின்னூட்டம் என்ன ஆச்சுன்னு தெரியல்ல!!!

101 இதுதான்னு நினைக்கிறேன்.

said...

1 வருஷத்துக்கு முந்தின பதிவானாலும் 100, 100தானே....என்ன சொல்லறீங்க இ.கொ?

இப்ப திருப்தியா?

said...

இப்போதான் புரிஞ்சுது நீங்க ரீச்சர் அப்படிங்கறதோட காரணம்...:)

said...

//அட ஆமாம்!, நல்ல சந்தேகந்தான். பின்னூட்டங்களை படிக்கல்ல.. :). திரும்பி வர்ரேன்....95//

படியுங்க. நான் நிறையா தகவல்கள் தெரிஞ்சுக்கிட்ட பதிவு இது.

said...

//ஆமாம்!, "பலுக்கப்படும்" அப்படின்னா?.
பேசறதா?, இல்ல பழக்கப்படும்ன்னு அர்த்தமா?//

இல்லை. நாம ஆங்கிலத்தில் spell என்று சொல்லுவதற்கு ஈடாக பலுக்குதல் எனச் சொல்லறாங்க.

said...

//நாராயண, நாராயண//

இந்த கலகம் எல்லாம் ரொம்ப முன்னாடியே செஞ்சு இருக்கணும். இப்போதால் சொல் ஒரு சொல் கூடலிலேயே கூடியாச்சே!!

said...

//மருத்துவர் அண்ணனுக்கு ஒரு வணக்கம். நான் பாவம் விட்டுடுங்க, ஒருமுறை நான் நூறு அடிச்சுக்கறேனே!
:)//

நீங்க நூறு அடிச்சதுக்கு ஒண்ணும் சொல்ல மாட்டாரு. ஆனா அண்ணைன்னு கூப்பிட்டீங்க பாருங்க. அதுக்குத்தான் இருக்கு உங்களுக்குப் பொது மாத்து!!

ஆல் தி பெஸ்ட்!!

said...

//ஓ இதுதான் அந்த இஞ்சருங்கோ, இஞ்சருங்கோ பாட்டா?.. அப்போ எனக்கு இது என்ன மொழின்னு புரியாம இருந்தேன்//

இதெல்லாம் தெரியலைன்னா உடனே ஒரு பதிவு போட்டு கேட்க வேண்டாமா? என்ன பதிவரய்யா நீர்!! :))

said...

//கிட்டத்தட்ட 15 மாதங்கள் கழித்து 100 அடிச்சிருக்கு இந்த பதிவு. //

அதை விடுங்க. நான் உங்களை 100 அடிக்கச் சொன்ன பதிவில் சான்ஸ் போச்சுன்னு தெரிஞ்ச உடனே அங்க குடுத்த ஒரு சின்ன ஹிண்டை வெச்சுக்கிட்டு இங்க வந்து அங்க மிஸ் பண்ணின மாதிரி மிஸ் ஆகாம அடிச்சீங்க பாருங்க. அதான் சூப்பர்!!

இன்னும் மென்மேலும் பல 100களை (அதுவும் என் பதிவிலேயே!) அடிக்க வேண்டும் என வாழ்த்துக்கள்!! :))

said...

//அடடா! பிளாக்கர் ஏதோ சதி பண்ணிடுத்தே!!!! என்னோட கடைசிப்பின்னூட்டம் என்ன ஆச்சுன்னு தெரியல்ல!!!///

இது வரை வந்தது எல்லாம் ரிலீஸ் பண்ணியாச்சே!!

said...

//1 வருஷத்துக்கு முந்தின பதிவானாலும் 100, 100தானே....என்ன சொல்லறீங்க இ.கொ?//

அப் கோர்ஸ் 100 100தான்!!

//இப்ப திருப்தியா?//

என்னைப் பத்தி இன்னும் முழுசா உங்களுக்குத் தெரியலை. 100 என்பது ஒரு டார்கெட்தான். அது முடிஞ்சா அப்பாடான்னு இல்லாம அடுத்த டார்கெட்டை நோக்கி போயிக்கிட்டே இருக்கணும். அதான் நம்ம பாலிஸி.

said...

//இப்போதான் புரிஞ்சுது நீங்க ரீச்சர் அப்படிங்கறதோட காரணம்...:)//

:))

தொடர்ந்து நம்ம பதிவுகளை எல்லாம் படிச்சுக்கிட்டே வாங்க. இன்னும் பலதும் புரியும்!!

said...

அதாவது D என்றால் ட வாம்
அப்ப T க்கு ஏதாவது எழுத்து வேண்டும் என்று 19ஆம் நூற்றாண்டில் யாரோ ஒரு அறிவாளி ஆரம்பித்து வைத்தது இந்த குழப்பம்

D - ட
T - ற
R - ர

என்பது ஒரு அதி பயங்கர புத்திசாலியின் கண்டுபிடிப்பு

உதாரணமாக

TDTA School என்பதை
றி.டி.றி.ஏ என்று எழுதியுள்ளார்கள்

said...

அதாவது D என்றால் ட வாம்
அப்ப T க்கு ஏதாவது எழுத்து வேண்டும் என்று 19ஆம் நூற்றாண்டில் யாரோ ஒரு அறிவாளி ஆரம்பித்து வைத்தது இந்த குழப்பம்

D - ட
T - ற
R - ர

என்பது ஒரு அதி பயங்கர புத்திசாலியின் கண்டுபிடிப்பு

உதாரணமாக

TDTA School என்பதை
றி.டி.றி.ஏ என்று எழுதியுள்ளார்கள்

said...

எப்படி இங்கிலாந்து காரன் சாலையின் இடப்பக்கம் கார் ஓட்டினால் அமெரிக்க காரன் வீம்பிற்கு சாலையின் வலதுபக்கம் ஓட்டுவானோ

அதே போல்

தமிழக தமிழர்கள்

D - ட
T - ற
R - ர

என்று வைத்திருந்ததை

ஈழத்தமிழர்கள்

D - ட
T - ர
R - ற

என்று மாற்றி விட்டார்கள்

said...

எப்படி இங்கிலாந்து காரன் சாலையின் இடப்பக்கம் கார் ஓட்டினால் அமெரிக்க காரன் வீம்பிற்கு சாலையின் வலதுபக்கம் ஓட்டுவானோ

அதே போல்

தமிழக தமிழர்கள்

D - ட
T - ற
R - ர

என்று வைத்திருந்ததை

ஈழத்தமிழர்கள்

D - ட
T - ர
R - ற

என்று மாற்றி விட்டார்கள்

said...

இது சுத்த பேத்தல் என்பதை தெரிந்தும் சிலர் வலுக்கட்டாயமாக tension என்பதை ரென்சன் என்று எழுதுவது எரிச்சலளிக்கும் செயலே

--

அது சரி

T க்கு ற என்பதை எப்படி முடிவு செய்தார்கள் என்றால், சில நேரங்களில் T என்பது ற போல் ஒலிக்கும் உதாரணம்

Petrol - பெற்ரோல்
அவ்வளவு தான்

ஆனால் ரொறொன்ரோ என்பது ஹி ஹி ஹி !!!

said...

கானா பிரபா என்பதை kana pdaba என்றோ kana ptaba என்றோ எழுதாமல் kanapraba என்று எழுதிவி ட்டு

KTS Kannabitan TaviShankat என்றோ KDS Kannabidan daviShankad என்றோ எழுதாமல் KRS Kannabiran RaviShankar என்று எழுதிவிட்டு

torontoவை மட்டும் ரொறன்ரோ என்று எழுதுவது குழப்பத்தையே விளைவிக்கிறது

ராஜேஷ் என்ற பெயரை Tajesh என்றுஎழுதாமல் Rajesh என்று எழுதிவிட்டு,templateஐ மட்டும் டெம்ப்ளேட் என்று எழுதாமல் ரெம்ப்ளேட் என்று எழுதுவது சரியா

said...

தமிழ் சொற்களை ஆங்கிலத்தில் எழுதும் போது (அதாவது encoding) ஒரு விதியும்

ஆங்கில சொற்களை தமிழில் எழுதும் போது (அதாவது decoding) வேறு ஒரு விதியும்

கடைபிடிப்பது என்னைப்பொருத்தவரையில்

அபத்தம்
அநியாயம்

--

இது என் கருத்து

--

உங்களை பொருத்தவரையில் அது
பத்தம் !!
நியாயம்
என்று இருந்தால் அது உங்கள் கருத்து

உங்கள் கருத்தை நான் மதிக்கிறேன்
ஏற்றுக்கொள்ளவில்லை

said...

Very great post. I simply stumbled upon your blog and wished to say that
I've really enjoyed browsing your blog posts.
After all I will be subscribing for your feed and I
hope you write again soon!