Tuesday, February 27, 2007

சக்சஸ்! சக்சஸ்!

என்னடா இவன் பராசக்தியில் நடிகர் திலகம் சொன்ன வசனத்தை மீள்பதிவு செய்யறானேன்னு பாக்கறீங்களா! வேற ஒண்ணுமில்லை மக்கள்ஸ். நாம் நடத்திய சோதனை பெரும் வெற்றியைப் பெற்று விட்டது என்பதைச் சொல்லத்தான் இந்த பதிவு.

தமிழ்மணத்தில் பின்னூட்டங்கள் இற்றைப்படுத்துகையில் பின்னூட்டங்களின் உயரெல்லை முப்பதாக (இப்படி கரடுமுரடா வார்த்தைகளை எங்க இருந்து பிடிக்கறாங்கப்பா!) தீர்மானிக்கப் பட்டு அது சார்ந்த அறிவிப்பு வெளியானது அனைவரும் அறிந்ததே. அதனைத் தொடர்ந்து, அதற்கு முன் சில பிரச்சனைகளை சந்தித்தாதால், வார்ப்புருவில் மாற்றங்கள் தேவையில்லை என்பதனை நிரூபணம் செய்துகொள்ள நான் மேற்கொண்ட சோதனை பதிவு பற்றியும் அனேகர் அறிவீர்கள்.

அந்த பதிவு வெற்றிகரமாக தமிழ்மணத்தில் சேர்க்கப்பட்டு பின்னூட்டங்களும் திரட்டப்பட்டதால் வார்ப்புருவில் எந்த விதமான மாற்றங்களும் தேவையில்லை என்பது தெளிவாகிற்று. பதிவிட்ட பின் முகப்பில் வழக்கம் போல் வந்த பதிவு, பின்னூட்டங்கள் 30 (குமரனின் பேராதரவுடன்!) தாண்டியபின் நிர்வாகத்தினர் சொன்னது போல் காணாமலேயே போனது.

ஆனால் முகப்பில் வரவில்லை என்றாலும் தொடர்ந்து திரட்டப்படும் என நிர்வாகத்தினர் சொல்லி இருந்ததால் ஒரு வேளை "கடந்த 24 மணி நேரத்தில் மறுமொழியப்பட்ட இடுகைகள்" என்ற பகுதியிலாவது வருகிறதா என பார்த்தால் அங்கும் வரவில்லை. அதனால் தொடர்ந்து திரட்டப்படுவது என்பது பற்றி நிர்வாகத்தினரிடம் கேட்டுள்ளேன். அவர்கள் பதில் அளித்தவுடன் இங்கு இடுகிறேன்.

30க்கு பின்னால் என்ன? என்ற ஒரு குழப்பம் நம்மிடையே நீடிக்கும் (அட்லீஸ்ட் எனக்கு மட்டுமாவது இருக்குங்க) நிலையில், இந்த கேள்வியும் அதற்கான பதிலும் நமக்கு ஒரு தெளிவைத் தரும் என்பதற்காகவே இந்த பதிவு.

மற்றபடிஅனானி ஆட்டமில்லாமல், அடுத்தவரை வசை பாடாமல் வெறும் ஜாலிக்கு பின்னுட்ட விளையாட்டு நடந்தால், வழக்கம் போல பதிவுக்கு வரும் நண்பர்களும் வந்து கொண்டுதான் இருப்பதால் பின்னூட்ட விளையாட்டுக்கு உடனடி ஆபத்தில்லை என்பதும் நிச்சயமாகிறது.

இங்கு குறிப்பிட்டு இருந்த பதிவு தமிழ்மண நிர்வாகத்தினரால் நீக்கப்பட்டு விட்டது. இனி இங்கிருந்தால் விளம்பரம் தருவது போலாகும் என்பதால் நானும் அது பற்றிய குறிப்பினை எடுத்து விடுகிறேன். தமிழ்மணத்தின் தரம் காக்கும் நிர்வாகத்தினரின் இந்த செய்கைக்கு எனது நன்றி.

29 comments:

இலவசக்கொத்தனார் said...

வழக்கம் போல முதல் பின்னூட்டம் நம்மளே போட்டுக்க வேண்டியதுதானே!!

சின்னவன் said...

கொத்ஸ்
என்னய்யா நடக்குது இங்கே ? வலையுலகில் இது கொத்தனார் வாரமா ?
நடத்தும்! நடத்தும் !!

சேதுக்கரசி said...

//ஆனால் முகப்பில் வரவில்லை என்றாலும் தொடர்ந்து திரட்டப்படும் என நிர்வாகத்தினர் சொல்லி இருந்ததால் ஒரு வேளை "கடந்த 24 மணி நேரத்தில் மறுமொழியப்பட்ட இடுகைகள்" என்ற பகுதியிலாவது வருகிறதா என பார்த்தால் அங்கும் வரவில்லை//

அ.ஆ. படத்துல டாக்டர் ஊர்வசியை கிட்ட எஸ்.ஜே. சூர்யா, illusion பத்திப் பேசுவார். ஊர்வசி முழிப்பார். அதுக்கு எஸ்.ஜே. சூர்யா "இருக்கு ஆனா இல்ல" என்ற தத்துவத்தை விளக்குவார். அந்த நெனப்பு வருதுங்க. திரட்டப்படும் ஆனா திரட்டப்படல :-D

தமிழ்மண அறிவிப்பில் என் பரிந்துரை பார்த்தீங்களா? (பதிவே எழுதறதில்ல.. கெட்ட கேட்டுக்கு தமிழ்மண நிர்வாகத்துக்குப் பரிந்துரை வேற!! - மனசாட்சி) அது இம்ப்ளிமெண்ட் ஆகிட்டா more than half the battle won. உங்களைப் போன்ற பின்னூட்ட நாயகர்களுக்கும் தான்.. அதே சமயம் என்னைப் போன்ற அப்பாவி (ஹிஹி..) வாசகர்களுக்கும் தான்.

நமக்கு நாமே முதல் பின்னூட்டத் திட்டத்தைக் கொஞ்சம் மறுபரிசீலனை செய்யுங்க. எடுத்தவுடனே ஒண்ணு வேஸ்ட்.

இலவசக்கொத்தனார் said...

வாருமய்யா வாரும். உம்மை வார வைக்க, ச்சீ வர வைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டியதா இருக்கு பாரும். :))

சென்ஷி said...

ஹைய்யா..கொத்ஸ். என்னால
உங்க பின்னூட்டத்துல 3 வதும் அம்பேல்

சென்ஷி

மணிகண்டன் said...

//என்னால
உங்க பின்னூட்டத்துல 3 வதும் அம்பேல்//

என்னால இன்னொன்னும் அம்பேல் :)))

அபி அப்பா said...

கொத்ஸ்!! என்ன இப்டி ஆப்பு வச்சுட்டாங்க, நல்ல வேளை 135 அடிச்சு நானும் சரித்திரத்தில துண்ட போட்டு இடம் புடிச்சுட்டேன்.ஏதாவது செய்யுங்க ப்ளீஸ்!!!

Anonymous said...

ஆக்சுவலி நாங்க அதுக்குத்தான் மாறப்போறம் :))))

ஒரு வகுத்தெரிச்சல் புடிச்சவனால இப்பிடி ஆயிருச்சு. இருந்தாலும் முன்னாலியே சாதனை படைச்ச நீங்க கொலசாமியாட்டம் வெளாண்டுக்கிட்டே இருங்க..நாங்களும் அப்பப்போ ஆட்டத்துல கலந்துக்குவம்.

அந்தாளுக்கு யாராவது ரெண்டு பிண்ணூட்டம் போட்டிருந்தா இப்படியெல்லாம் ஆகி இருக்குமா ? ம்ம்ம்ம் பாருங்க...:)))))))

செந்தழல் ரவி

( இது நாந்தான், அக்மார்க் ISO முத்திரை வேற இருக்கு பாருங்க..எலிக்குட்டி சோதனைல தோல்வி அடைஞ்சா பிரசுரம் செய்யாம இருக்காதீங்க. நேத்து எங்காத்துல எலி வறுவல். ( ப்லாகர் பிரச்சினை சாமீ)

Anonymous said...

ஏய் எப்படியாவது கொத்தனாருக்கு மொக்கையா ஒரு முப்பது பின்னூட்டம் போட்டு இந்த பதிவை ஆட்டையில இருந்து எடுங்கப்பா, ஹி ஹி ஹி

அ.மு.க சார்பாக தழல்

மனதின் ஓசை said...

கொத்ஸ்,
பின்னுட்டம் 25அ தாண்டியதும் எல்லத்தையும் copy பன்னி பதிவுல paste பன்னிடுங்க.. எல்லா பின்னுட்டத்தையும் delete பன்னிட்டு புதுசா ஆரம்பிங்க :-)


work out ஆகலன்னா என்ன கேக்காதீங்க..வர்ட்டா?

சென்ஷி said...

கொத்ஸ், இன்னைக்கு ஆட்டைலேந்து எவ்ளோ சீக்கிரம் வெளில போறாருன்னு பாப்போமா :))

சென்ஷி

Anonymous said...

///கொத்ஸ்,
பின்னுட்டம் 25அ தாண்டியதும் எல்லத்தையும் copy பன்னி பதிவுல paste பன்னிடுங்க.. எல்லா பின்னுட்டத்தையும் delete பன்னிட்டு புதுசா ஆரம்பிங்க :-)//

அடப்பாவி மனதின் ஒசை, இப்படி ஒரு ஒர்க் அரவுண்டு கொடுத்து கவுத்திட்டியே படுபாவி.

செந்தழல் ரவி

Anonymous said...

///அடப்பாவி மனதின் ஒசை, இப்படி ஒரு ஒர்க் அரவுண்டு கொடுத்து கவுத்திட்டியே படுபாவி.//
if Tamilmanam uses its right not allowing feedback be manually collected in the posts that it aggregates, the post goes to air.
Three post goes into air makes the dust layers :)

Anonymous said...

இங்கு குறிப்பிட்டு இருந்த பதிவு தமிழ்மண நிர்வாகத்தினரால் நீக்கப்பட்டு விட்டது. இனி இங்கிருந்தால் விளம்பரம் தருவது போலாகும் என்பதால் நானும் அது பற்றிய குறிப்பினை எடுத்து விடுகிறேன். தமிழ்மணத்தின் தரம் காக்கும் நிர்வாகத்தினரின் இந்த செய்கைக்கு எனது நன்றி.

?????
ஏங்க இன்னிக்கு நீக்கப்பட்ட பதிவுகள்ன்னு போட்ருக்காங்கல்ல. அதுல உங்க பதிவு இடுகை ஒன்னையும் காணல்லயே. சந்தடி சாக்குல நீங்க வேறே பால் பேர்ல தன்னி ஊத்துறீங்களா?

இலவசக்கொத்தனார் said...

/இங்கு குறிப்பிட்டு இருந்த பதிவு தமிழ்மண நிர்வாகத்தினரால் நீக்கப்பட்டு விட்டது. இனி இங்கிருந்தால் விளம்பரம் தருவது போலாகும் என்பதால் நானும் அது பற்றிய குறிப்பினை எடுத்து விடுகிறேன். தமிழ்மணத்தின் தரம் காக்கும் நிர்வாகத்தினரின் இந்த செய்கைக்கு எனது நன்றி.

?????
ஏங்க இன்னிக்கு நீக்கப்பட்ட பதிவுகள்ன்னு போட்ருக்காங்கல்ல. அதுல உங்க பதிவு இடுகை ஒன்னையும் காணல்லயே. சந்தடி சாக்குல நீங்க வேறே பால் பேர்ல தன்னி ஊத்துறீங்களா?//

அண்ணா கன்பியூஸ்ட் அவர்களே, நீங்களும் குழம்பி மத்தவங்களையும் குழப்பிடாதீங்க.

நான் முதலில் இந்தப் பதிவை போடும் போது வேறு ஒரு பதிவின் சுட்டியைக் குடுத்து, அதற்கு பதிலும் சொல்லி இருந்தேன். நான் குறிப்பிட்டு இருந்த பதிவை தமிழ்மணத்திலேர்ந்து தூக்கிட்டாங்க.

அதுக்கு அப்புறமும் நான் அந்த பதிவிற்கு சுட்டி குடுத்தா நல்லா இருக்காதேன்னு நான் எழுதினதை அழிச்சுட்டேன். நம்ம பதிவை முதலில் படிச்சவங்க, முதலில் எழுதினதை ஏன் எடுத்துட்டேன்னு நினைக்ககூடாதேன்னு ஒரு டிஸ்கியும் போட்டேன். இதுதான் மேட்டர்.

தமிழ்மணம் தூக்குற அளவு நான் என்னிக்குமே தரங்கெட்டு எழுத மாட்டேன். கவலைவேண்டாம்.!!

Anonymous said...

kottanar don't allow confuses to post here. குட்டயிலே மீன்பிடிக்கிறர். we know what you meant

dubukudisciple said...

ilavasam!!
namba pere vara matengithu!!
appuram engatha comment vanthu adu 30a thaandi!!
idu ellam nadakira kariyama??

பொன்ஸ்~~Poorna said...

கொத்ஸ், அந்த கன்பியூஸ்ட் மேட்டரை நீங்க பின்னூட்டமா சொல்லிருக்கலாம்.. ஓ.. முப்பது ஆபத்து வேற இருக்கோ.. அடக் கஷ்டமே!! :)))

பாலராஜன்கீதா said...

போராட்டத்தின் அடுத்த கட்டமாக,
30 பின்னூட்டங்கள் வந்தபின், அதே பதிவை மீள் பதிவு - 1 என பதிப்போம். அதற்கு,
30 பின்னூட்டங்கள் வந்தபின், அதே பதிவை மீள் பதிவு - 2 என பதிப்போம். அதற்கு,
30 பின்னூட்டங்கள் வந்தபின், அதே பதிவை மீள் பதிவு - 3 என பதிப்போம். அதற்கு,
. . . .
. . . .
. . . .
. . . .
30 பின்னூட்டங்கள் வந்தபின், அதே பதிவை மீள் பதிவு - N என பதிப்போம். அதற்கு,
. . . .
. . .
. . ..
. . .

:-)))

சேதுக்கரசி said...

டுபுக்கு டிசைபிள்,

நீங்க முதல்ல தமிழ்மணத்துல மறுமொழி நிலவரம் தெரியச் செய்யுங்க. அதை செய்யாதவங்களை இந்தப் புதிய திட்டம் பாதிக்கவே வாய்ப்பில்ல ;-))) (இதுக்குப் பேர் தான் வஞ்சப்புகழ்ச்சியோ :-)) என்ன கொத்ஸ், நான் சொல்றது சரிதானே? :-D

சென்ஷி,

//கொத்ஸ், இன்னைக்கு ஆட்டைலேந்து எவ்ளோ சீக்கிரம் வெளில போறாருன்னு பாப்போமா :))//

பார்த்தீங்களா நிலமையே தலகீழா போச்சு இப்போ. முந்தியெல்லாம் கொத்ஸ் ஆட்டைல இன்னும் எத்தனை எத்தனை நாள் இருப்பார்னு பார்ப்போம். இப்போ கொத்ஸ் எத்தனை சீக்கிரம் அம்பேல்னு...? :-D

அப்புறம் இந்த கன்பியூசையும் ரொம்ப கன்பியூசையும் நம்பாதீங்க கொத்ஸ். இப்படி கன்பியூசிங் கமெண்ட் போட்டாவது உங்க பதிவுக்கு விறுவிறுன்னு 30+ ஆக்கப் பார்க்கறாங்கன்னு நினைக்கிறேன்.

ambi said...

//30க்கு பின்னால் என்ன? என்ற ஒரு குழப்பம் நம்மிடையே நீடிக்கும் //

எலே! நம்மூருல 30 க்கு அப்புறம் 31 தான் லே! இப்படி மானத்த வாங்கனுமா? :)

இலவசக்கொத்தனார் said...

//kottanar don't allow confuses to post here. குட்டயிலே மீன்பிடிக்கிறர். we know what you meant//

பிடிச்சா பிடிச்சுட்டுப் போகட்டுமே. 40 வரைதானே பிடிக்க முடியும். இல்லைன்னா பக்கத்து குளத்துக்கு இல்ல போகணும்! :))

இலவசக்கொத்தனார் said...

//ilavasam!!
namba pere vara matengithu!!
appuram engatha comment vanthu adu 30a thaandi!!
idu ellam nadakira kariyama??//

டுபுக்குவின் சிஷ்யையே, என்ன இப்படி திரும்பி ஆங்கிலத்துக்கு மாறிட்டீங்க. எங்களுக்கு எல்லாம் புரியக்கூடாதுன்னு நினைச்சீங்கன்னா நடக்காது. பக்கத்து வீட்டு பாலகன் உதவியோட படிச்சிட்டோமில்ல.

நடக்கற காரியமான்னு எல்லாம் கேட்கக்கூடாது. எல்லாம் நடக்கும், நல்லா நடக்கும். :)

இலவசக்கொத்தனார் said...

//கொத்ஸ், அந்த கன்பியூஸ்ட் மேட்டரை நீங்க பின்னூட்டமா சொல்லிருக்கலாம்.. ஓ.. முப்பது ஆபத்து வேற இருக்கோ.. அடக் கஷ்டமே!! :)))//

பதிவில் இருந்து எடுத்ததுனாலதான் அங்க சொன்னேன். அதான் சொல்லிட்டேனே, முதல் நாள் டென்ஷனுக்கு அப்புறம் வ.போ.வே. (வழக்கம் போல வேலை) ஆகியாச்சே. முப்பதோ நாப்பதோ பயப்படறதே இல்லையே. :))

இலவசக்கொத்தனார் said...

// பாலராஜன்கீதா said...

போராட்டத்தின் அடுத்த கட்டமாக,
30 பின்னூட்டங்கள் வந்தபின், அதே பதிவை மீள் பதிவு - 1 என பதிப்போம். அதற்கு,
30 பின்னூட்டங்கள் வந்தபின், அதே பதிவை மீள் பதிவு - 2 என பதிப்போம். //

இப்போ இதுக்கு எல்லாம் தேவையே இல்லாம போயிருச்சே பாலா. நம்ம மக்கள் முகப்பு மட்டும் இல்லாம கடந்த 24 மணி நேரத்தில் மறுமொழியப்பட்ட இடுகைகள் பகுதியையும் பாத்துருவாங்கன்னு ஒரு நம்பிக்கைதான்.

இலவசக்கொத்தனார் said...

//டுபுக்கு டிசைபிள்,

நீங்க முதல்ல தமிழ்மணத்துல மறுமொழி நிலவரம் தெரியச் செய்யுங்க. அதை செய்யாதவங்களை இந்தப் புதிய திட்டம் பாதிக்கவே வாய்ப்பில்ல ;-))) (இதுக்குப் பேர் தான் வஞ்சப்புகழ்ச்சியோ :-)) என்ன கொத்ஸ், நான் சொல்றது சரிதானே? :-D//

சேது, முதலில் அவங்களைத் தமிழில் எழுதச் சொல்லுங்க. அப்புறம்தான் மீதி எல்லாம்.

//பார்த்தீங்களா நிலமையே தலகீழா போச்சு இப்போ. முந்தியெல்லாம் கொத்ஸ் ஆட்டைல இன்னும் எத்தனை எத்தனை நாள் இருப்பார்னு பார்ப்போம். இப்போ கொத்ஸ் எத்தனை சீக்கிரம் அம்பேல்னு...? :-D//

அம்பேலாவது மசாலா பேலாவது. நான் தான் ஆட்டம் வழக்கம் போல் தொடரும் அப்படின்னு சொல்லியாச்சே. அது போக தமிழ்மணத்தில் வேற தெரியப்போகுது. அப்புறம் என்ன...

//இப்படி கன்பியூசிங் கமெண்ட் போட்டாவது உங்க பதிவுக்கு விறுவிறுன்னு 30+ ஆக்கப் பார்க்கறாங்கன்னு நினைக்கிறேன்.//

ஆக்கட்டுமே. "உலகம் யாவையும் தாமுள வாக்கலும்" அப்படின்னு அவனைச் சொல்லி இருக்காரு கம்பர். "பதிவுகள் யாவையும் பின்னூட்டம் போடுதலும், எண்ணிக்கை எப்பவும் நாற்பதாய் காட்டவும்" அப்படின்னு இவங்களைப் பாடிட்டா போகுது. இவங்களும் அலகிலா விளையாட்டுடையாராத்தான் இருப்பாங்க போல!

இலவசக்கொத்தனார் said...

//எலே! நம்மூருல 30 க்கு அப்புறம் 31 தான் லே! இப்படி மானத்த வாங்கனுமா? :)//

வாடே மாப்ள, உமக்கு இருக்கற கொஞ்ச நஞ்ச மானாத்தை நாமதான் வாங்கணுமா? வேற சோலியே இல்லையாவோய்?

29,30,31 அப்படின்னு வரிசையா எழுதினா 30 பின்னாடு 29 இருக்கா இல்லை 31 இருக்கா? யோசிக்காமலயால சொல்லுதேன்?

சேதுக்கரசி said...

//முதலில் அவங்களைத் தமிழில் எழுதச் சொல்லுங்க. அப்புறம்தான் மீதி எல்லாம்//

ஆமா.. இப்பல்லாம் தமிங்கிலத்தில் வர்ற பதிவு, பின்னூட்டம் எல்லாம் படிக்கிறதில்லைன்னு முடிவோட இருக்கேன்.. இருக்கிற ரெண்டு கண்ணு நாலு கண்ணு, ஆறு கண்ணாயிடாம பாத்துக்கணும்ல? :-D

இலவசக்கொத்தனார் said...

//ஆமா.. இப்பல்லாம் தமிங்கிலத்தில் வர்ற பதிவு, பின்னூட்டம் எல்லாம் படிக்கிறதில்லைன்னு முடிவோட இருக்கேன்..//

நல்ல முடிவுதாங்க. நானும் அந்த முடிவு எடுத்து ரொம்ப நாளாச்சு. அதை படிக்கிற அளவு பொறுமை இல்லை. அதனாலயே நம்ம அம்பி பதிவு எல்லாம் போன பின்னூட்டம் எல்லாம் படிக்கறதே இல்லை.

நம்ம பதிவுல யாராவது எழுதினா படிச்சாக வேண்டியதா இருக்கு. ஆனா மறக்காம தமிழில் எழுதுங்கன்னு சொல்லிடறது.

//இருக்கிற ரெண்டு கண்ணு நாலு கண்ணு, ஆறு கண்ணாயிடாம பாத்துக்கணும்ல? :-D//

அதே அதே!!:)