Monday, June 11, 2007

இது ஒரு விளம்பரப் பதிவு!!!

ரொம்ப நாள் ஆச்சு. பதிவு போட டயமே இல்லை. தமிழ்மணம் பக்கம் கூட ரொம்ப தலை காட்டலைன்னா பார்த்துக்குங்களேன். இருந்தாலும் கை பரபரங்குதே. என்ன செய்யலாமுன்னு யோசிச்ச போதுதான் ரொம்ப நாளா போட வெச்சிருந்த இந்த விளம்பரப் பதிவு மேட்டர் ஞாபகத்துக்கு வந்தது. மக்கள்ஸ், இது வேற யாருக்கும் தர விளம்பரம் இல்லைங்க. விளம்பரங்கள் பற்றிய பதிவு.

கண்ணில் பட்ட, மெயிலில் வந்த நல்ல விளம்பரங்களைச் சேகரிக்கும் வழக்கம் இருந்தது. அதில் இருந்து சில உங்கள் பார்வைக்கு. இந்த விளம்பரங்களைப் பலர் பார்த்திருக்கக் கூடும். ஆனால் பார்த்திராத சிலருக்காக இந்தப் பதிவு சமர்ப்பணம். (என்னது, நட்சத்திர வாரம் முடிஞ்சாச்சு, இனிமே சமர்ப்பணம் எல்லாம் வேண்டாமா? சரி சரி!). வழக்கம் போல படங்களைச் சொடுக்கினா பெரிய அளவில் பார்க்கலாம்.

நியூயார்க் நகரின் தரையடி ரயில் பாதைகளில் உண்டாகும் சூடு, இப்படி புகையாய் அதற்கென வைத்திருக்கும் 'ஜன்னல்கள்' வழியாக வெளிவரும். குறிப்பாக குளிர்காலங்களில். அதனை அழகாக பயன்படுத்து 'பால்ஜர்ஸ்' காபி நிறுவனம் செய்திருக்கும் விளம்பரம் இது. மிக அருமையான சிந்தனை. அந்த புகை வெளிவரும் இடங்களில் அழகாக ஒரு காப்பிக் கோப்பையின் ஸ்டிக்கரை ஒட்டிச் செய்த இந்த விளம்பரத்தில் இருக்கும் வாசகம் - "'Hey, City That Never Sleeps. Wake up."

அடுத்தது நம்ம ஊர் மேட்டர். ஒரு பேரங்காடியின் நுழைவு வாயிலில் ஒரு டியோடரண்ட் நிறுவனம் செய்த விளம்பரம் இது. மனிதர்களின் நிஜ உருவங்களைப் போன்ற ஸ்டிக்கர்களை தானியங்கிக் கதவுகளின் மீது ஒட்டிவிட்டனர். ஒருவர் கடைக்குள் வரும் பொழுது கதவுகள் விலகுவது அம்மாந்தர்கள் விலகுவது போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி இருந்தார்கள். 'People move away when you have body odour' என்ற விளம்பரத்தை நுழைந்தவுடன் கண்ணில் படுமாறு வேறு வைத்துவிட்டனர்.

மலேசியாவில் எடுத்த படம் இது. மின்சார பெட்டி ஒன்றில் ஒரு ஸ்டிக்கரை ஒட்டி அதிலிருக்கும் அபாயம் என்ற வாசகத்தை அழகாக எடுத்தாண்டு இருக்கிறார்கள். டியூராசெல் பேட்டரிகள் கொண்டு இம்மின்சாதனம் இயங்குவது போலவும். அப்பேட்டரிகளின் சக்தியால் கவனம் தேவை என்பது போலவும் செய்த அருமையான விளம்பரம்.

இது மீண்டும் நம்ம் ஊரில் எடுத்தது. Eatalica என்ற நிறுவனத்தினர், தாங்கள் அறிமுகப் படுத்தும் பர்கரைப் பற்றிய விளம்பர பலகைக்களுக்குக் கீழாக ஈரத் தரை ஜாக்கிரதை என்ற பலகையை வைத்து விட்டு அதன் கீழ் 'Oogling at the burger may involuntarily cause drooling which may in turn lead to a wet floor. Issued for your safety by the management of Eatalica restaurant' என எழுதி இருக்கிறார்கள்.

மீண்டும் மலேசியா. M-Tech Plasma HID Lights என்ற பல்புகளுக்கான விளம்பரம் இது. சாதாரண பல்புகளை விட 300% அதிக வெளிச்சம் கொண்டவைகளாம் இந்த பல்புகள். கார் நிறுத்துமிடங்களிலும் கார் ரிப்பேர் செய்யும் இடங்களிலும் இந்த பல்புகளால் ஏற்பட்ட கருகிய தோற்றங்கள் போன்ற ஸ்டிக்கர்கள் மூலம் தம் பல்புகளின் திறனை அழகாகச் சொல்லி இருக்கின்றனர்.



கனடா நாட்டில் புகை எதிர்ப்பு தினத்தன்று நிறுவப்பட்ட விளம்பரம் இது. புகை பிடிக்காதீர்கள் என்பதனை வலுவாகச் சொல்லும் இந்த விளம்பரத்தில் இருக்கும் வாசகம் - 'Death from car accidents: 370, Death from smoking-related causes: 6,027, Quit now before it kills you.'





நியூயார்க் நகரில் ஒரு உடற்பயிற்சி நிலையத்தார் செய்த குறும்பான விளம்பரம் இது. தரையடி ரயிலில் நிற்பவர்கள் அனைவரும் வெயிட்டுகள் தூக்கி உடற்பயிற்சி செய்வது போல் அமைத்து விட்டார்கள்.







அடுத்ததும் உடற்பயிற்சிதான். ஹாங்காங் நகரில் ஒரு யோகா பயிற்சிப் பள்ளியின் விளம்பரம் இது. பானங்கள் அருந்தப் பயன்படும் ஸ்ட்ராக்களின் வளையக்கூடிய பாகத்தில் ஒரு பெண் வளைந்து யோகா செய்வது போல் அழகாகச் செய்துவிட்டார்கள். இந்த விளம்பரத்துக்குப் பின் அவ்விடத்தில் சேர்ந்தவர்கள் பலராம்.





சுவிட்ஸர்லாந்தில் ஒரு தரையடி ரயில் நிலையத்தின் நுழைவாயிலில் வைத்த அழகான விளம்பரம் இது. அந்நிலையத்தின் உள் செல்பவர்களும், வெளி வருபவர்களும் இக்காரின் உள்ளே செல்வது போலவும் வெளியே வருவது போன்றதுமான அமைப்பு, அக்கார் அதிகம் பேர் அமர்ந்து கொள்ளும் வசதியுடையது எனச் சொல்வது போல் அமைத்து இருக்கிறார்கள்.

கடைசியாக ஜப்பான் நாட்டில் ஒரு பேரங்கடியில் தங்கள் உடையில் வாடிக்கையாளர்கள் எப்படி இருப்பார்கள் எனக் காட்டும் படியாக பெரிய கண்ணாடிகளைக் கொண்டு இப்படி ஒரு ஏற்பாட்டினைச் செய்து இருக்கிறார்கள். தங்களுக்கு அந்த உடைகள் நன்றாகப் பொருந்துவதைப் பார்த்த வாடிக்கையாளர்கள் அதிகம் வாங்கினராம்.





டிஸ்கி: இன்று துளசி டீச்சர், பல படங்கள் கொண்ட இந்தப் பதிவைப் போட்டதுக்கும், பல படங்கள் கொண்ட இந்தப் பதிவை நான் போட்டதுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. இது ஒரு விளம்பரப் பதிவு மட்டுமே!!

35 comments:

இலவசக்கொத்தனார் said...

விளம்பரப் பதிவுன்னு சொல்லிக்கிட்டு வேற யாருக்கும் விளம்பரம் தராமல் தனக்கு மட்டும் விளம்பரமாப் போட்டுக்கறாருன்னு யாரும் சொல்லிட்டக் கூடாதேன்னுதான் டீச்சருக்கு ஒரு இலவச விளம்பரம். ஓக்கேதானே? :))

Chinna Ammini said...

விளம்பரத்துறையில இது மாதிரி வித்யாசமா யோசிக்கறவங்களுக்கு நிறைய க்ரியேடிவிடி இருக்கும்னு நினைக்கறேன். woodwards Gripe water விளம்பரத்தயே நானேல்லாம் ரொம்ப ரசிச்ச காலம் உண்டு. இப்ப நெனச்சுப்பாத்தா எனக்கே சிரிப்பா இருக்கு. இப்பொ எவ்வளவோ விளம்பரத்துறை முன்னேறி இருக்கு.

ILA (a) இளா said...

உண்மைய சொல்லனும்னா இந்தப்படங்களை ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே பார்த்து இருந்தேன். ஆனாலும் உங்க விளக்கமும் மசாலாவை அரைச்ச விதமும் சூப்பர். அங்க நிக்கிறார் கொத்தனாரு சோடாவோட.

இப்படி டீச்சருக்கு ஒரு விளம்பரம் தேவையா?

உண்மைத்தமிழன் said...

புரிஞ்சு போச்சு கொத்ஸ் அவர்களே.. 'விண்மங்கை'யுடன் எழுத்தில் மோதலா? எது செஞ்சாலும் சொல்லிட்டுச் செய்யுங்க சாமி.. நாங்க யார் பக்கம் சேர்றதுன்னு முடிவு பண்ண வேண்டாமா..? சரி.. எப்படியோ எங்களுக்கு கலர், கலரா போட்டோவும், மேட்டரும் கிடைச்சா சரி..

தருமி said...

அங்க ஒரு பின்னூட்டம் போட்டுட்டேன். இங்க ஒண்ணும் போடுறதாக ஐடியா இல்லை.

வர்ட்டா ..

நாகை சிவா said...

விளம்பரங்களை குறித்த பதிவோ...

இதில் இருக்கும் பல படங்களை ஏற்கனவே பார்த்து இருக்கேன்...
இவர்களின் கிரியேட்டிவிட்டி பார்த்து சில சமயம் ஆச்சரியப்பட்டும் இருக்கேன்....

ரூம் போட்டு யோசிப்பாங்களோனு....

நீங்க போட்டதில் நமக்கு பிடிச்சது காபியும், பாடி ஸ்பிரேவும் தான்

வடுவூர் குமார் said...

அந்த காப்பி விளம்பரம் மேல் சொடுக்கி பெரிதாக பார்க்கலாம் என்று சொடுக்கி பார்க்கும் போது மூக்கின் அருகில் காபி வாசனை. (நிஜமாக)
பி.குறிப்பு: நான் காபியே குடிப்பதில்லை.
மீதி சில படங்களை ஏற்கனவே பார்த்துவிட்டேன்.
டீச்சரை பார்த்து காப்பி இல்லை என்று சொல்லிவிட்டீர்கள்...விட்டு விடுகிறோம்.

துளசி கோபால் said...

விளம்பரங்கள் அருமை.

ஆமா.........இந்தக் காலத்தில் பூக்கடைக்கு(ம்) விளம்பரம் வேண்டித்தான் இருக்கு. மார்கெட்டிங்
செய்யத் தெரிஞ்சா மண்ணைக்கூட வித்துறலாம்:-)

ஓசி விளம்பரம் கொடுத்ததுக்கு நன்றி:-)

Anonymous said...

nice ones :)

Anonymous said...

விளம்பரத்தை விளம்பரப்படுத்தியமைக்கு நன்றி. :)

இலவசக்கொத்தனார் said...

//விளம்பரத்துறையில இது மாதிரி வித்யாசமா யோசிக்கறவங்களுக்கு நிறைய க்ரியேடிவிடி இருக்கும்னு நினைக்கறேன். //

வாங்க சின்ன அம்மிணி,

ஒரு வேளை நிறையா க்ரியேட்டிவிட்டி இருக்கிறவங்கதான் விளம்பரத்துறையில் வெற்றி பெற்று இருக்காங்களோ? :))

//woodwards Gripe water விளம்பரத்தயே நானேல்லாம் ரொம்ப ரசிச்ச காலம் உண்டு. இப்ப நெனச்சுப்பாத்தா எனக்கே சிரிப்பா இருக்கு.//

அதுவும் ஒரு நல்ல எபக்ட்டிவ்வான விளம்பரம்தாங்க.

//இப்பொ எவ்வளவோ விளம்பரத்துறை முன்னேறி இருக்கு.//

டெக்னாலஜி முன்னேறி இருக்கு சரிதான். ஆனா எல்லா காலத்திலேயும் சில நல்ல விளம்பரமும் அதிகம் ஒண்ணும் சொல்லிக்க இல்லாத விளம்பரங்களும்தான் இருக்கு. அந்த சதவிகிதம் மாறின மாதிரி தெரியலை.

இலவசக்கொத்தனார் said...

//உண்மைய சொல்லனும்னா இந்தப்படங்களை ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே பார்த்து இருந்தேன். //

வாங்க இளா, அதான் நானே சொல்லியாச்சே - "இந்த விளம்பரங்களைப் பலர் பார்த்திருக்கக் கூடும்." அதாவது பார்த்திருப்பது பலரும் பார்க்காதவர் சிலரும். அந்த சிலருக்காகவே இந்தப் பதிவுன்னு.

//ஆனாலும் உங்க விளக்கமும் மசாலாவை அரைச்ச விதமும் சூப்பர். அங்க நிக்கிறார் கொத்தனாரு சோடாவோட.//

ஹிஹி. கால் வலிக்குது. கொஞ்சம் உக்காந்துக்கவா? :))

//இப்படி டீச்சருக்கு ஒரு விளம்பரம் தேவையா? //

அட விஷயம் புரியாம இருக்கீங்களே. அவங்க பதிவுக்கு எம்புட்டு பேரு வருவாங்க. அவங்க எல்லாம் கீழ நம்ம சுட்டியைப் பார்த்து...இதெல்லாம் தலைவரே வருக வருக அப்படின்னு போஸ்டர் அடிச்சிட்டு நம்ம போட்டோவை போட்டுக்கிற டெக்னிக்தாம்பா!!

இலவசக்கொத்தனார் said...

//புரிஞ்சு போச்சு கொத்ஸ் அவர்களே..//

வாங்க உண்மைத்தமிழன் (ஒரிஜினல்தானே? உங்களைப் பார்த்தாலே பயமா இருக்கு சாமி.)

//'விண்மங்கை'யுடன் எழுத்தில் மோதலா? எது செஞ்சாலும் சொல்லிட்டுச் செய்யுங்க சாமி.. //
மோதலா? என்ன அக்குறும்பு இது? அவங்க எங்க? நான் எங்க? நானெல்லாம் மாதாமகி வழி நடக்கும் மாணாக்கன் ஐயா!!

//நாங்க யார் பக்கம் சேர்றதுன்னு முடிவு பண்ண வேண்டாமா..?//

நானு, டீச்சர், எல்லாம் இருக்கும் பரபரப்பு இல்லாத பக்கம் வந்திடுங்க. :))

// சரி.. எப்படியோ எங்களுக்கு கலர், கலரா போட்டோவும், மேட்டரும் கிடைச்சா சரி..//
அதானே, கடைசியில் கலர் ரீவி, கலர் போட்டோ அப்படின்னு எதாவது குடுத்தா உடனே வந்து ஓட்டு போடுங்க. என்ன பொழப்புடா சாமி நம்மளுது..:))

இலவசக்கொத்தனார் said...

//அங்க ஒரு பின்னூட்டம் போட்டுட்டேன். இங்க ஒண்ணும் போடுறதாக ஐடியா இல்லை.//

ஏன்? ஏன்? ஏன்? - ஆச்சி ஸ்டைலில் கேட்டுக்கோங்க.

//வர்ட்டா ..//

வாங்க.

இலவசக்கொத்தனார் said...

//விளம்பரங்களை குறித்த பதிவோ...//

வாங்க புலி. இப்படி ஒரு சந்தேகமோ? :))

//இதில் இருக்கும் பல படங்களை ஏற்கனவே பார்த்து இருக்கேன்...
இவர்களின் கிரியேட்டிவிட்டி பார்த்து சில சமயம் ஆச்சரியப்பட்டும் இருக்கேன்....//

அதான் நானும் சேமிச்சு வெச்சுருந்தேன். Save for a rainy day அப்படின்னு சொல்லுவது மாதிரி. ஆணி புடிங்கல்ஸ் அதிகமா இருக்கும் இந்த வேளையில் இவர்களை ரிலீஸ் பண்ணியாச்சு. :))

//ரூம் போட்டு யோசிப்பாங்களோனு....//

அப்படித்தான் நினைக்கேன். நீ என்ன நினைக்க?

//நீங்க போட்டதில் நமக்கு பிடிச்சது காபியும், பாடி ஸ்பிரேவும் தான்//
அதான் அது ரெண்டும் முதலில் வந்திடுச்சு. அந்த மினி கூப்பர் கார் விளம்பரம் கூட சூப்பர் ஐடியா.

இலவசக்கொத்தனார் said...

//அந்த காப்பி விளம்பரம் மேல் சொடுக்கி பெரிதாக பார்க்கலாம் என்று சொடுக்கி பார்க்கும் போது மூக்கின் அருகில் காபி வாசனை. (நிஜமாக)பி.குறிப்பு: நான் காபியே குடிப்பதில்லை.//

வாங்க குமார். பக்கத்து சீட் காரர் காபி குடிச்சு இருப்பாரு பாருங்க. இந்த மாதிரி வாசனை வர கம்பியூட்டரை தயார் பண்ணிட்டாங்க. தெரியும்தானே? :))

//மீதி சில படங்களை ஏற்கனவே பார்த்துவிட்டேன்.
டீச்சரை பார்த்து காப்பி இல்லை என்று சொல்லிவிட்டீர்கள்...விட்டு விடுகிறோம்.//

அட போட்டி இல்லைன்னு சொன்னேன். காப்பி இல்லைன்னா சொன்னேன்? :))

Imitation is the best form of flattery. :))

இலவசக்கொத்தனார் said...

//விளம்பரங்கள் அருமை.//

ஆமாங்க டீச்சர்.

//ஆமா.........இந்தக் காலத்தில் பூக்கடைக்கு(ம்) விளம்பரம் வேண்டித்தான் இருக்கு. மார்கெட்டிங்
செய்யத் தெரிஞ்சா மண்ணைக்கூட வித்துறலாம்:-)//

நீங்க சொல்லறது உண்மைதான். ஐரிஷ் / ஸ்காட்டிஷ்காரங்களுக்கு அவங்க ஊர் மேல ரொம்ப பாசமாம். அதனால இங்க அவங்க ஊர் மண்ணை பாக்கெட்டில் அடைச்சு விக்கறாங்க. நீங்க சொன்னது சரிதான் டீச்சர்!! :))

//ஓசி விளம்பரம் கொடுத்ததுக்கு நன்றி:-)//

ஹிஹி. இருக்கட்டும் இருக்கட்டும். நான் இளா கிட்ட சொன்னதை மட்டும் படிக்காம சாய்ஸில் விட்டுடுங்க. :))

இலவசக்கொத்தனார் said...

//Dubukku said...

nice ones :)//

டாங்ஸ் பீட்டர்!! :)))

இலவசக்கொத்தனார் said...

//விளம்பரத்தை விளம்பரப்படுத்தியமைக்கு நன்றி. :)//

நன்றி ரவி.

G.Ragavan said...

விளம்பரங்கள் எல்லாமே அருமையா இருக்கு. முந்தியே பாத்ததுதான். ஆனாலும் திரும்பவும் பாக்க நல்லாத்தான் இருக்கு.

நீங்க ஒரு விளம்பரப்பிரியர்னு இப்ப எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சே! என்ன செய்யப் போறீங்க?

கதிரவன் said...

கொத்ஸ்,
நான் இந்தப் படங்களை இப்போத்தான் முதல் தடவையா பார்க்கிறேன்.ம்..எப்டி எல்லாம் யோசிக்கறாங்க !? உங்க விளக்கங்களுக்கும் நன்றி !!

VSK said...

அபாரமான படங்களுக்கு அற்புதமான விளக்கங்கள்!

யாரோ சொன்னது போல "வித் கொத்ஸ் டச்"!

இலவசக்கொத்தனார் said...

//விளம்பரங்கள் எல்லாமே அருமையா இருக்கு. முந்தியே பாத்ததுதான். ஆனாலும் திரும்பவும் பாக்க நல்லாத்தான் இருக்கு.//

நீங்களும் பார்த்ததுதானா? சரிதான். எல்லாரும் பார்த்ததையே மறுபடி போட்டுட்டேன் போல.

//நீங்க ஒரு விளம்பரப்பிரியர்னு இப்ப எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சே! என்ன செய்யப் போறீங்க?//

தெரிஞ்சு போச்சுல்ல. இனி வெட்கமில்லாம விளம்பரம் செஞ்சுக்க வேண்டியதுதான்.

இலவசக்கொத்தனார் said...

//கொத்ஸ்,
நான் இந்தப் படங்களை இப்போத்தான் முதல் தடவையா பார்க்கிறேன்.ம்..எப்டி எல்லாம் யோசிக்கறாங்க !? உங்க விளக்கங்களுக்கும் நன்றி !!//

அப்பாடா! நீங்க ஒருத்தராவது இது பார்த்தது இல்லைன்னு சொன்னீங்களே!! இந்த பதிவே உங்களுக்காகன்னு சொல்லிடட்டுமா? :))

இலவசக்கொத்தனார் said...

//அபாரமான படங்களுக்கு அற்புதமான விளக்கங்கள்!

யாரோ சொன்னது போல "வித் கொத்ஸ் டச்"!//

ரொம்ப 'டச்' பண்ணிட்டீங்களே எஸ்.கே.!! :)))

இலவசக்கொத்தனார் said...

// Ads: Different Advertisements //

இணைப்புக்கு நன்றி பாபா!! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அந்த புகை வெளிவரும் இடங்களில் அழகாக ஒரு காப்பிக் கோப்பையின் ஸ்டிக்கரை ஒட்டிச் செய்த இந்த விளம்பரத்தில்//

கொத்ஸ், இதை நியுயார்க்கில் நேராப் பாத்தீங்களா? சென்ட்ரல் பார்க் அருகே இன்னும் ஒன்னு ரெண்டு இருக்கு!

படத்தில் விட நேரே எபெக்ட் இன்னும் அருமை.
ஏதோ கொள்ளிவாய் பிசாசு காப்பி குடிப்பது போல் சூப்பரா இருந்தது! :-)

வல்லிசிம்ஹன் said...

விளம்பரம் இலவசமா,
இலவசமா விளம்பரமா.:-)))

எப்படியோ ...
எல்லாமே நல்லா இருக்கிறதால
எது ஈடு இணியில்லாத விளம்பரம்னு சொல்ல முடியலை.
காப்பி வாசனைக் கம்பியூட்டரா.அது எங்க கிடைக்கும்..?

ஹார்லிக்ஸின் சுசித்ராவின் குடும்பம்
போர்ன்விடா ஆட்,
லைஃப்பாய் எவ்விடமோ,
வஜ்ரதந்தி
இதெல்லாம் மறக்கக்கூடிய விளம்பரங்களா.:-)
(thamizhil type seythaal smileys pooda mudiyaatha kaNini ithu:-)))

rv said...

deoவும் மினி கூப்பரும் டாப்....

அப்புறம் tube/metro ரயிலுக்கு பேரு தரையடியா... தலையிடி மாதிரி இருக்கு? உம்ம சொந்த தமிழ் வளர்ப்பா?

வந்தது வந்தாச்சு... நமக்கு நாமே இல்லாவிட்டால் எப்படி..

விளம்பரங்கள் பத்திய பழைய பதிவு

இலவசக்கொத்தனார் said...

// இலவசம்: இது ஒரு விளம்பரப் பதிவு!!//

சுட்டிக்கு நன்றி இம்சை!

இலவசக்கொத்தனார் said...

//கொத்ஸ், இதை நியுயார்க்கில் நேராப் பாத்தீங்களா? சென்ட்ரல் பார்க் அருகே இன்னும் ஒன்னு ரெண்டு இருக்கு!//

இன்னும் இருக்கா? நம்ம மக்கள்ஸ் கிட்ட சொல்ல வேண்டியதுதான்.

//ஏதோ கொள்ளிவாய் பிசாசு காப்பி குடிப்பது போல் சூப்பரா இருந்தது! :-)//

இது என்னது? வெறும் காப்பி கப்தானே இருந்தது கொள்ளிவாய்ப் பிசாசு எங்க இருந்து வந்தது? :)

இலவசக்கொத்தனார் said...

//விளம்பரம் இலவசமா,
இலவசமா விளம்பரமா.:-)))//

விளம்பரம் இலவசம்.
இலவசமே விளம்பரம்தான் (நன்றி ஜிரா) :))

//காப்பி வாசனைக் கம்பியூட்டரா.அது எங்க கிடைக்கும்..?//

எதோ அட்டாச்மெண்டாம். மறு பக்கத்தில் கொடுக்கப்படும் ரசாயனக் காம்பினேஷன் இங்க இருக்கிற அட்டாச்மெண்டில் அதே காம்பினேஷனை உருவாக்கி தேவையான வாசனை தருமாம். இன்னும் எல்லா வாசனைகளும் வரலை. இன்னும் ஆராய்ச்சி கூடத்தில் தான் இருக்கு.

//ஹார்லிக்ஸின் சுசித்ராவின் குடும்பம்
போர்ன்விடா ஆட்,
லைஃப்பாய் எவ்விடமோ,
வஜ்ரதந்தி
இதெல்லாம் மறக்கக்கூடிய விளம்பரங்களா.:-)//

நம்ம ராமநாதன் குடுத்து இருக்கிற சுட்டியில் பாருங்க. நீங்க கேட்ட ஐட்டம் எல்லாம் இருக்கு.

//(thamizhil type seythaal smileys pooda mudiyaatha kaNini ithu:-)))//

அப்படி எல்லாம் ஆகக்கூடாதே. உங்களுக்கு கீதாம்மாவுக்கு எல்லாம் என்ன பிரச்சனைன்னே புரியலையே...

இலவசக்கொத்தனார் said...

//deoவும் மினி கூப்பரும் டாப்....//

கூடவே காப்பியும். அந்த புகை வர ஜன்னல்கள் எல்லாம் ஒரு முறை பார்த்தாதான் அந்த எபெக்க்ட் புரியும்.

//அப்புறம் tube/metro ரயிலுக்கு பேரு தரையடியா... தலையிடி மாதிரி இருக்கு? உம்ம சொந்த தமிழ் வளர்ப்பா?//

மத்தவங்க என்ன சொல்லி இருக்காங்கன்னு பார்க்கலை. நம்மளே ஒரு தலையிடியை, ச்சீ, தரையடியைப் போட்டாச்சு!! இதெல்லாம் கரெக்ட்டா புடிப்பீரே:))

//வந்தது வந்தாச்சு... நமக்கு நாமே இல்லாவிட்டால் எப்படி..//

நடத்தும். உமக்கு இல்லாம யாருக்கு!!

முரளிகண்ணன் said...

உங்க விளக்கம் அருமை

காட்டாறு said...

ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்கீங்க... வாங்க....

என்ன அண்ணாச்சி இப்பிடி விளம்பரத்தை காமிச்சி, விளம்பரம் பண்ணிகிட்டீங்களாக்கும். ;-)

இதிலே டீச்சருக்கு விளம்பரம் ஓசில கொடுத்து நல்ல பெயர் எடுத்த மாணாக்கரே.... வாழுக...வளருக க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்