Saturday, March 24, 2007

விலங்குகள் உரிமை என்றால் என்ன?

சமீபகாலமா நான் ஊடகங்களில் படித்து வரும் ஒரு விஷயம்தான் இந்த விலங்குகள் உரிமை (Animal Rights). இது பற்றி பல கட்டுரைகள், பதிவுகள், அப்பதிவுகளுக்கான எதிர்மறை கருத்துகள் என படித்து வருகிறேன். ஆனால் என்னால் இது பற்றி சரியாக புரிந்து கொள்ளவே முடியவில்லை. படிக்கும் பொழுது எது சரி எது சரியில்லை என்ற முடிவுக்கே வர முடியாத நிலமைதான். சரி, எல்லாக் கருத்தையும் மொத்தமா ஒரே இடத்தில் படிக்கலாமே என்றுதான் இந்த இடுகை. இதை எழுதத் தூண்டியது சமீபத்தில் படித்த இரு விஷயங்கள்.

முதலாவது இந்தத் தெரு நாய்கள் பற்றிய விபரம். பெங்களூர், கொடைக்கானல், கோவை, மணிப்பூர் எனப் பல இடங்களிலும் நாய்கள் கடித்ததால் பலர் இறந்த செய்திகள் வந்திருக்கிறது. இதன் காரணமாக தெரு நாய்களை கொன்றுவிட வேண்டும் எனச் சொல்லும் மக்கள் ஒரு பக்கம். தெரு நாய்களை கொல்வது தவறு. இந்த பிரச்சனைக்கு வேறுவிதங்களில்தான் முடிவு காண வேண்டும் எனச் சொல்லும் அணி மறுபுறம். மனேகா காந்தி, அமலா என பிரபலங்கள் பலர் இருக்கும் பக்கம் இது. நாய்களைக் கொல்வதே நல்லது என்ற கருத்தை முன் வைக்கும் சமீபத்திய பதிவு ஒன்று இங்கே. மற்ற அணியினரின் பதிவு எதுவும் சிக்கவில்லை. யாரேனும் சுட்டி கிடைத்தால் தாங்களேன்.

இது இப்படி இருக்க, சமீபத்தில் படித்த இந்த செய்தியைப் பாருங்கள். ஜெர்மனியில் பெர்லின் நகரில் உள்ள மிருகக்காட்சி சாலையில் உள்ள பனிக்கரடி ஒன்று கடந்த டிஸம்பரில் இரு குட்டிகளை ஈன்றது. ஆனால் என்ன காரணமோ அந்த தாய்க்கரடி இந்த குட்டிகளைப் பேணாமல் விட்டு விட்டது. அதனால் ஒரு குட்டி இறந்தும் விட்டது. அந்த மிருகக்காட்சி சாலையின் காப்பாளர்கள், மற்றொரு குட்டியை எடுத்து, அதற்கு க்நட் எனப் பெயரிட்டு, பாலூட்டிச் சீராட்டி வளர்க்கத் தொடங்கி இருக்கின்றனர். இது ஒரு பெரிய பிரச்சனையைக் கிளப்பி விட்டு இருக்கிறது.

விலங்குரிமை ஆர்வாளர்கள் இவர்கள் செய்தது தவறு என்றும் ஒரு காட்டு விலங்கை இந்த மாதிரி ஊட்டி வளர்ப்பது தவறென்றும் இந்தக் கரடியைக் கொன்றுவிட வேண்டும் எனவும் குரலெழுப்புகின்றனர். தாய்க்கரடியினால் கைவிடப்பட்ட குட்டி இறந்து போவதுதான் இயற்கை நியதி. அதில் மனிதனின் தலையிடல் கூடாது . அப்படி மனிதரால் வளர்க்கப்படும் குட்டியால் இயற்கையில் தாக்குப் பிடிக்க முடியாது என்று சொல்கிறார்கள். முன்பு இத்தாலியில் இம்மாதிரி வளர்த்து விடப் பட்ட கரடி ஒன்று தென் ஜெர்மனி பக்கம் வந்ததால் பீதியுற்ற மக்களால் சுட்டுக் கொல்லப்பட்டதை சுட்டிக் காண்பிக்கின்றனர்கள் இவர்கள்.

ஆனால் இதனை மறுக்கின்றனர் இந்த குட்டியை வளர்ப்பவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும். "இந்த மாற்றுக் கருத்துக்களைக் கேட்டால் எனக்கு கோபம்தான் வருகிறது. அவர்கள் சொல்லுவதற்கு எந்த விதமான முக்கியவத்துமும் குடுக்க முடியாது" என்று சொல்கிறார் அந்த மிருகக் காட்சி சாலையின் வைத்தியர். பனிக்கரடிகள் இயற்கையிலேயே தனியாக வாழும் மிருகங்கள்தான் அதனால் இங்கு இது தனியாக வளர்வதில் எந்தத் தவறும் இல்லை. பனிக்கரடிகள் அருகி வரும் இந்த நேரத்தில் இந்த கரடியைக் கொண்டு மற்ற கரடிகளை கருத்தரிக்க வைக்கலாம் என்பது இவர்கள் வாதம்.

எனக்கு ஒண்ணும் புரியலைங்க. அவ்வளவு பிரச்சனைகளும் உயிர்ச்சேதமும் நடக்கக் காரணமாக இருக்கும் நாய்களைக் கொல்லக் கூடாதென்பதும் மிருகவள ஆதரவாளர்கள். நன்றாக இருக்கும் இந்த குட்டியைக் கொல்வதுதான் சரி என வாதாடுபவர்களும் இவர்கள்தான். நான் சொன்னா மாதிரி தனித்தனியாப் பார்த்தா எல்லாருமே சரின்னுதான் தோணுது. ஆனா எதை எடுப்பது எதை விடுப்பதுன்னு தெரியலையே. மக்கள்ஸ் நீங்க வந்து உங்க கருத்தைச் சொல்லுங்கப்பா.

க்நட் செய்திக்கும் படங்களுக்கும் நன்றி - msnbc.com

நாய்க்கடி பட உதவி அபிஅப்பா

77 comments:

said...

போன விவாத மேடைப் பதிவில நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாம எங்கயோ போயிருச்சு, இந்த தடவையாவது கேட்ட விஷயத்தைப் பத்திப் பேசுங்கப்பா! :)

said...

சரிப்பா:)

said...

நல்ல காமடிபதிவு! கலக்கல்:))) என்னால தாங்கவே முடியலை:)) கொத்ஸ் எப்படியும் காமடிதான் இருக்கும். இது சும்மா உள்ளேன் ஐயா தான், படித்து விட்டு வர்ரேன்:)

said...

நல்ல காமடிபதிவு! கலக்கல்:))) என்னால தாங்கவே முடியலை:)) கொத்ஸ் எப்படியும் காமடிதான் இருக்கும். இது சும்மா உள்ளேன் ஐயா தான், படித்து விட்டு வர்ரேன்:)

said...

ஒரு வேளை மிருகங்களும் இந்த மாதிரி பேசிக்கொள்ளுமோ என்னவோ!!!
நாம் இருந்த இடங்களை இந்த மனிதர்கள் ஆக்கிரமித்துக்கொண்டு நம்மளை Zoo வில் அடைத்துவிட்ட மனிதர்களை என்ன செய்யலாம், என்று.
எனக்கென்னவோ,முடிந்தவரை காப்பாற்றுவது தான் சரி என்று தோனுகிறது.
தெருவில் நடமாடுவதை பிடித்து வேறு வகையில் பேணவேண்டும்.
கடைசியாக,மக்களாகிய எங்களுக்கு ஏதேனும் உரிமை இருக்கா???

said...

தெருநாய் என்ற ஒரு வகை பிராணி இருப்பதே மக்களுக்கு ஆபத்து.ஆனால் அதற்காக அவற்றை கொடூரமாக கொல்லக்கூடாது.ஊர் ஓரமாக நாய்பண்ணை மாதிரி வைத்து நாய்களை அங்கே கொண்டு போய்விடலாம்.குக செய்துவிட்டால் அவை பண்னையில் குட்டிபோடாது.விலங்கு ஆர்வலர்களும் இதற்கு நிதிதருவார்கள்

said...

நம்ம வீட்டுலே வாயைத் திறக்காமலேயே எங்களை ஆட்டி
வைக்கிற கோபாலகிருஷ்ணனைப் பத்தி மனித உரிமைக்கழகத்தில்
மனுக் கொடுக்கலாமுன்னு இருக்கோம்.

அனிமல்ஸ்க்கும் இந்த உலகத்தில் வச்சிக்க ரைட்ஸ் இருக்கு.

த மோஸ்ட் டேஞ்சரஸ் க்ரீச்சர் மனுஷந்தானே?

உலகமே தனக்கு மட்டுமுன்னு நினைக்கிறதை மனுஷன் மாத்திக்கணும்.

said...

ஸ்கூலுக்கு போன சின்ன பையனை 300 இடத்துல கடித்து குதறிய தெரு நாயை கொஞ்சவா முடியும்?

said...

போன பின்னூட்டத்தில் ஒரு பிழை திருத்தம் ப்ளீஸ்.

'வச்சிக்க' ன்றது 'வசிக்க'ன்னு இருக்கணும்.

said...

நிச்சையம் தெரு நாய்களை கொல்லக்கூடாது. அவைகளுக்கும் சேர்துதான் இந்த பூமி. தவறு ஏன் நடந்தது என்று ஆராய்ந்து அதை மாற்ற முயற்சிக்க வேண்டுமே தவிற அந்த உயிரையே கொல்லக் கூடாது.

said...

இந்த செய்தி புதுசாக இருக்கிறது. தாயால் கைவிடப்பட்ட குட்டியை கொல்லத்தான் வேண்டும் என்பது எந்த வகையில் அறிவியல் பூர்வமானது என்று தெரியவில்லை.

இதில் கொடுமை இதற்கு முன்மாதிரி சம்பவங்கள் வேறு இருக்கின்றன. அதிலும் இந்த பனிகரடி இனம் ஒரு அரிய, அழிந்து கொண்டிருக்கும் உயிரினம் வேறு.

என்னோட பொதுபுத்தி (commonsense) இந்த குட்டியை காப்பாற்றி வளர்ப்பதே சரியான சேவை என்று கூறுகிறது. அதற்கு மாறாக அந்த குட்டியை கொல்ல வேண்டும் என்னும் கருத்தை புரிந்து கொள்ள முடியவுமில்லை. புரிந்து கொள்ள விருப்பமுமில்லை.

said...

தோழர்களுக்கு: இந்த அபி அப்பா என்ற பெயரில் பதிவிடும் பெயரிலியின் உள்நோக்கம் உங்களுக்கு இப்ப தெரிஞ்சிருக்கும். இதுவரை தெரியவில்லையென்றால் இந்த பதிவில் அவரிட்ட பின்னூட்டங்களை மீண்டும் ஒருமுறை பாருங்கள்.

பதிவ படிக்கறதுக்கு முன்னாடி போட்ட பின்னூட்டங்கள்-ல ஏகப்பட்ட சிரிப்பான்கள். அள்ளி தெளிச்சிருக்கிறார் நம்ம அருமை அண்ணன். ஆனா, பதிவ படிச்சிட்டு போட்ட பின்னூட்டத்தில ஒரு சிரிப்பான கூடக் காணோம்.

இதுல உள்ள அரசியல் உங்களுக்கு புரியலயா? நகைச்சுவை மன்னர் இ.கொ.வின் பதிவ படிச்சதினால தன்னோட நகைச்சுவை உணர்வை தான் இழந்துட்டதா நடிச்சு எல்லாரையும் நம்ப வைக்க பார்க்கிறார். அவர் முகமூடி கிழிச்சு தொங்குது பாருங்க. அவருடைய விகாரமான மன வேற்றுமைகள் வெளியில் வந்திடுச்சு பாருங்க.

said...

மிருகங்களுக்கும் நம்மைப்போல பூமியுல வசிக்க உரிமை இருக்குதானே

said...

வெச்சுக்கறவங்க வெச்சுக்கட்டும்; கொல்றவங்க கொல்லட்டும்.

எல்லாத்துக்கும் எல்லாருக்கும் உரிமை இருக்கு!

என்னைக் கடிக்க வந்தா, தேவையின்னா கொல்லவும் தயங்க மாட்டேன்.

அதே சமயம் பெர்லின்ல எதுவோ பேசிக்கறாங்களா, சரி விடு ஜூட்!
:))

said...

மேட்டரு தெரியல, ஆனா இந்த கரடி குட்டிய டிவியில் பார்த்தேன். கொள்ள அழகு, இத போய் கொல்வதா? சே....சே.....

said...

//போன விவாத மேடைப் பதிவில நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாம எங்கயோ போயிருச்சு, இந்த தடவையாவது கேட்ட விஷயத்தைப் பத்திப் பேசுங்கப்பா! :) //

சரி, இது இருக்கட்டும். விலங்குகளில் நீங்கள் சாப்பிடும் பன்றி, மாடு, ஆடு, கோழி, முயல், மான் போன்றவைகள் வராது.

அந்த விலங்குகளின் உரிமை என்ன ஆச்சு. அதை கேட்பார் இல்லையா????

said...

//தெருநாய் என்ற ஒரு வகை பிராணி இருப்பதே மக்களுக்கு ஆபத்து.ஆனால் அதற்காக அவற்றை கொடூரமாக கொல்லக்கூடாது.ஊர் ஓரமாக நாய்பண்ணை மாதிரி வைத்து நாய்களை அங்கே கொண்டு போய்விடலாம்.குக செய்துவிட்டால் அவை பண்னையில் குட்டிபோடாது.விலங்கு ஆர்வலர்களும் இதற்கு நிதிதருவார்கள் //

ரீப்பிட்டு.... மனிதர்களை விட நாய்கள் எவ்வளவா மேல்

said...
This comment has been removed by the author.
said...

அய்யோ ஸ்ரீதர் என்னய எதுக்கு கிழிச்சு தொங்கவிட்டீங்க, நான் பாவமில்லயா:-))

said...

//சத்தியமா முடியாது, கொஞ்சம் போது நம்மளையும் கடிச்சு வச்சுடுமே அது!!!!//

புலி! இங்க நான் கிழிஞ்சு கிடக்கேன். உமக்கு நக்கல் கேக்குதா?:-))

said...

//அவ்வளவு பிரச்சனைகளும் உயிர்ச்சேதமும் நடக்கக் காரணமாக இருக்கும் நாய்களைக் கொல்லக் கூடாதென்பதும் மிருகவள ஆதரவாளர்கள். நன்றாக இருக்கும் இந்த குட்டியைக் கொல்வதுதான் சரி என வாதாடுபவர்களும் இவர்கள்தான்.//

ஒரு வேளை ஏதை சொன்னாலும் எதிர்ப்பது என்ற முடிவுடன் இருப்பார்களா என்னவோ!

எனக்கு பம்மல் கே சம்பந்தம் படத்தில் வர ஒரு சீன் தான் ஞாபகத்துக்கு வருது

பாம்பை கொடுமைப்படுத்துறாங்க அப்படினு ஒரு அமைப்பு வருது, கடைசியில் அவங்களே அந்த பாம்பை மிதித்து கொன்னுடுவாங்க

பாம்பு உரிமையாளிடம் பாம்புக்கு இன்சூர் பண்ணி இருக்கானு கேட்பாங்க, இன்னிக்கு என் சோறே போச்சு, இதுல இன்சூர் எங்க னு கேட்பார். செம டைமிங்க....

இது இவங்களுக்கும் பொருந்துமோ!!!!

said...

சரி சரி.... ஏதா இருந்தாலும் உங்க பிரச்சனைய நாய், கரடியோட வச்சுக்கோங்க.... அதை தாண்டி மேல வரக் கூடாது சொல்லிட்டேன்....

கொல வெறியில் சுத்துறாங்கப்பா!!!

said...

இலவசக் கொத்தனார்!
மிருக ஆர்வலர்கள்; அதாவது தெரு நாய்க்குக் கருணை காட்ட குளிரூட்டிய காரில் வருபவர்கள்; சொல்லும் மிருக உரிமை என்பது; உங்கள் பிள்ளையை தெருநாய் கடித்துக் கொல்லும்; நீங்கள் அந்த
நாய்க்கு இறைச்சி போட்டு;முடிந்தால் பாலும் வார்த்து அனுப்பிவிட்டு; உங்க பிள்ளையின் காரியங்களைப்
பார்க்க வேண்டும்.
ஏனேனில் நாம் வாளால் மகவரிந்தூட்டியோர் வம்சங்கள்.. செத்தது ;யாரோபிள்ளை ;இவங்க கருணைமழை பொழிவாங்க!!வெளி நாட்டான் காசில்.
காலத்தைக் கடத்தாமல் நஞ்சு ;வைத்துக் கொல்லுங்க!! அல்லது இந்த ஆர்வலர்கள் ஆளுக்கு 20 நாயை
அவங்க வீட்டில் வளர்ப்பதையிட்டு எந்த ஆட்சேபனையும் இல்லை.
இவை எல்லாம் விவாதத்துக்கு அருகதையற்ற கருணைகள்!!!

said...

//அய்யோ ஸ்ரீதர் என்னய எதுக்கு கிழிச்சு தொங்கவிட்டீங்க, நான் பாவமில்லயா:-))
//
விவாதக் களம்னா யாரையாவது பிடிச்சு சும்மா வாங்கு வாங்கு-னு வாங்க வேணாமா...
அந்த பின்னூட்டம் ஒரு டெம்ப்ளேட் மாதிரி. யாரு வேணா யார வேணா திட்டலாம். நீங்க தப்பே செய்யாட்டினாலும் கூட திட்டலாம்.

ஓவரா தமிழ்மணத்துல மேய்ஞ்சா இப்படித்தான் யாரையாவது பிடிச்சு திட்ட பரபரன்னு வருது :-))

(தவறாக எடுத்து கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்)

said...

இது ஒரு 15 வருடங்களுக்கு முன் நான் பஸ் ஸ்டாப்பில் கண்ட காட்சி. பஸ் ஸ்டாப்பில் ரெண்டு கசாப்பு கடை இருக்கு. அங்கே மாமிச துண்டங்கல சாப்பிட நெறய தெரு நாய்ங்க வரும். ஒரு நாள் நாய் புடிக்கரவங்க வந்து எல்லாரும் பாக்க பாக்க நாய்கள புடிச்சு ஊசி போட்டு கொன்னுட்டாங்க. கண்ணு முன்னாடி நாய்ங்க சாகறத பாத்துட்டு மனசே சரியில்ல. இதுல ஒரு விஷயம் என்னன்னா இப்படி நாய்கள சாகடிக்கறதப்பத்தி பேசறவங்க யாரும் பொது இடத்துல கசாப்பு கடயில பிராணிகள் கொல்லப்பட்டு உரிச்சு தொங்க விடப்படறதப்பத்தி பேச மாட்டேங்கறாங்க.

said...

பெங்களூர்ல நான் பல நாள் வேலை முடிஞ்சி இராத்திரி 1 மணி 2 மணிக்கெல்லாம் வீட்டுக்கு நடந்து போவேன்...

சில சமயம் சுத்தி நின்னு 5-6 நாய் குரைக்கும். அது பல்லு எல்லாம் பார்த்தா ஓநாய் மாதிரி இருக்கும்.

இன்னையோட செத்தடா பாலாஜினு நினைச்சிக்கிட்டே நடப்பேன். ரொம்ப கொடுமையான விஷயம்.

//ஆனால் அதற்காக அவற்றை கொடூரமாக கொல்லக்கூடாது.ஊர் ஓரமாக நாய்பண்ணை மாதிரி வைத்து நாய்களை அங்கே கொண்டு போய்விடலாம்.குக செய்துவிட்டால் அவை பண்னையில் குட்டிபோடாது.விலங்கு ஆர்வலர்களும் இதற்கு நிதிதருவார்கள்//

இது மாதிரி ஏதாவது பண்ணலாம். ஆனா அதுக்கெல்லாம் கவர்ண்மெண்ட்ல காசு இருக்குமானு தெரியல. அதனால தாராளமா கொல்லலாம்...

said...

நாய் பொழப்புன்னு சொல்லுவாங்களே தலைவரே அதுக்கும் இந்தப் பதிவுக்கும் எதுன்னா சம்பந்தம் இருக்குதா?

said...

//நல்ல காமடிபதிவு! கலக்கல்:))) என்னால தாங்கவே முடியலை:)) கொத்ஸ் எப்படியும் காமடிதான் இருக்கும். இது சும்மா உள்ளேன் ஐயா தான், படித்து விட்டு வர்ரேன்:)//

அபி அப்பா, நானும் காமெடியோட நிறுத்திக்கலாமுன்னு பார்த்தேன். நேத்து என்னடான்னா வாத்தியார் ஐயா அவருக்குப் பிடிச்ச பதிவுகளில் நம்ம பேரை சேர்த்துட்டார், இன்னைக்கு அதே வேலையை வெட்டிப்பயல் செஞ்சுட்டார். அதுனால் நமக்கு பொறுப்புணர்வு அதிகமா போயி இப்படி
நான்-காமெடி பதிவெல்லாம் போட வேண்டியதாப் போச்சு!!

said...

//
நாகை சிவா said...

சரி, இது இருக்கட்டும். விலங்குகளில் நீங்கள் சாப்பிடும் பன்றி, மாடு, ஆடு, கோழி, முயல், மான் போன்றவைகள் வராது.

அந்த விலங்குகளின் உரிமை என்ன ஆச்சு. அதை கேட்பார் இல்லையா????

///


ரீப்பீட்டுடுடு

( இ கொ டார்கெட்டுக்கு வேட்டா..????::))

said...

//நேத்து என்னடான்னா வாத்தியார் ஐயா அவருக்குப் பிடிச்ச பதிவுகளில் நம்ம பேரை சேர்த்துட்டார், இன்னைக்கு அதே வேலையை வெட்டிப்பயல் செஞ்சுட்டார்.//

ஆஹா! இதான் மேட்டரா?

ஆனாலும் ரொம்ப சீரியஸ் ஆயிட்டீங்கண்ணே :((

said...

உள்ளேன் ஐயா :)

said...

tnநாய்கள் பாதுகாக்க இப்ப நிறைய என்.ஜி.ஓ இருக்குதுங்க இந்தியாவுல. இவங்கல்லாம் அறிவியல் பூர்வமாவும் வேலை செய்றாங்க - வெறும் "விலங்குகள் பாவம் - அன்பே சிவம்" சின்டிமென்டு போட்டு புழப்பு நடத்தமுடியாது ரொம்ப நாள். ஃபன்டிங் வேணும்னா அறிவியல் பூர்வமா ப்ரோபோஸல் எழுதெனும் இந்த என்.ஜி.ஓ எல்லாம்.

நாய காப்பாத்திறதை மறந்திட்டு நம்மள மட்டும் காப்பாத்த நினைச்சு அந்த சுயநலத்தில முழுமையா முங்கி, அறிவு பூர்வமா யோசிச்சாலும் நாய கொல்ல வேண்டாம் என்று தோன்றும்!!! நாய்களுக்கு "டெரிட்டரி" உண்டு. அதனோடு ஏரியாவுல இன்னொரு நாயை வர விடாது. ஒரு நாய கொன்னீங்கன்னா, இன்னொரு நாய் அந்த ஏரியாவுக்கு வந்து சீக்கிரமே உலவ ஆரம்பிக்கும். இது இயற்கை. நிறைய தெருநாய்களை கொன்னா மிச்ச இருக்க நாய்க்கு உணவு தட்டுப்பாடு இருக்காது, செழிப்பாய் சந்தோஷமாய் பல குட்டி போட்டு பெரு வாழ்வு வாழும். இதை அறிவியல்ல "சிஸ்டம் டயனமிக்ஸ்"னு சொல்வாங்க.

இதனால நம்மை முழுமையாக பாதுகாக்க, நாய்கள் குட்டி போடா வண்ணம் செய்து, கொல்லாமல் விடுகிறார்கள் "என்.ஜி.ஓ"க்கள். இது எவ்வகை மிருக உரிமைன்னு எனக்கு தெரியல !!! கொல்றதில்லை. இதனால உங்க ஏரியாவுக்கு புது நாய் ஏதும் நுழையாது. ராபிஸ் போன்ற நோய்கள் வராமலும் ஊசி போடுறாங்க. காலப் போக்கில் நாய்களின் எண்ணிக்கை கட்டுக்குள் இருக்கும்.

இவ்வாறு நாயை கொல்லாமல் நம்மை காக்கும் வழிகள் உள்ளதாக அறிவியல் கூறுகிறது.

அய்யோ நான் விலங்கு உரிமை பத்தி பேசலைங்க. எங்க வீட்டு பக்கத்தில என்.ஜி.ஓக்கள் என்ன செய்றாங்க, எதுக்கு செய்றாங்கன்னு தெரிஞ்சதை உங்க கிட்ட சொல்றேன். சரியாத்தான் இருக்க மாதிரி இருக்கு இந்த லாஜிக். நீங்க என்ன நினைக்கிறீங்க?

said...

//பெங்களூர்ல நான் பல நாள் வேலை முடிஞ்சி இராத்திரி 1 மணி 2 மணிக்கெல்லாம் வீட்டுக்கு நடந்து போவேன்...

சில சமயம் சுத்தி நின்னு 5-6 நாய் குரைக்கும். அது பல்லு எல்லாம் பார்த்தா ஓநாய் மாதிரி இருக்கும். //

இதேமாதிரி தான் எனக்கும்...

எங்க ஏரியாவிலே நிறையா நாய்க இருக்கும், அதுவும் டூவிலரிலே போகும் போது பின்னாடியே ஓடிவந்து கலவரம் வேற உண்டாக்க செய்யுதுக,

இப்போ சமிபத்திலே இங்கே நடந்த சம்பவத்தை நினைச்சு பார்க்கிற்ப்போ அதுகளை எல்லாத்தையும் கொண்டு எங்கயாவது விடனுமின்னு தான் இருக்கு..... ஏன்னா செத்தது சின்னப்பையன், அந்த படத்தை நீயூஸ் பேப்பரிலே பார்த்துட்டு அப்போ அப்பிடியொரு சோகம் சூழ்ந்துக்கிருச்சு...:(

said...

//இந்த தடவையாவது கேட்ட விஷயத்தைப் பத்திப் பேசுங்கப்பா! :) //

ரெண்டு குரூப் ரெண்டு விதமா பேசுறது விசனமா, குழப்பமா இருக்குங்றீங்க. இல்லியா? அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. இந்த மாதிரி activist குரூப்கள் அப்பப்போ ஏதாவது ஒண்ணை கையில் எடுத்துக்கிட்டு இந்த மாதிரி சிலம்பம் ஆடலைன்னா அவங்கள மத்தவங்க மறந்திருவாங்கல்லா.. அதுக்காகத்தானிப்படி. நீங்க ரொம்ப சீரியஸா எடுத்துக்கிட்டா அவங்க என்ன பண்ணுவாங்க பாவம் ..! பம்மல்.க.சம்பந்தத்தில சொல்றது மாதிரி - இதையெல்லாம் ரசிக்கணும்;காரணம் கேக்கப் படாது. புரிஞ்சுதா..?

said...

/“The greatness of a nation and its moral progress can be judged by the way its animals are treated”/

இதை சொன்னது யார் தெரியுமா?.
நம் தேசத்தின் தந்தை மஹாத்மா காந்தி.

மிருகங்களை மதிக்காமல் இருக்கும் நாடு மனிததன்மையை இழந்துவிடும்.

said...

//எனக்கென்னவோ,முடிந்தவரை காப்பாற்றுவது தான் சரி என்று தோனுகிறது.//

இந்த முடிந்த வ்ரை எங்க போயி முடியும் குமார்? அப்போ இந்தக் கரடிக்குட்டியை ஏன் கொல்லணும்? ஒண்ணும் புரியலை.

said...

பனிக்கரடி குட்டிய ஏன் கொல்லணும்?
இதைப் பத்தி பாரதிராஜா "கருத்தம்மா"ன்னு ஒரு படம் எடுத்தாரு! சம்பந்தமே இல்லாம பேசுறேன்றீங்களா? கூண்டிலடைக்கப்பட்டு, சங்கிலியால் கட்டப்பட்டு, இன விருத்திக்காக, தாய்மையாக்கப்படும்போது, இவ்வுலகம் தனக்கு உகந்ததாய் இல்லை என்று அறிந்து பனிக்கரடி அதன் குட்டிகளை கவனிப்பதில்லை. வீட்டுல நாய் வளர்க்கிறவங்களுக்கு இது தெரியும்! கரடியும், விலங்கு உரிமையாளர்களும் செய்வது மிருக உலக ப்ரோ-சாய்ஸ்! குறிப்பா அந்த குட்டிய உயிரோட வைக்கிறதன் நோக்கமே இன விருத்தி தான்னு சொன்னா என்ன கொடுமை சரவணான்றாங்க! அந்த கரடியின் முகத்தை பாருங்க. கருத்தம்மாவை நினைச்சிக்கோங்க! சரியா தவறா தெரியல.
பாரதிராஜா மதுரக்காரரு. அவரு ஊரு பக்கம் என்ன நடக்குதுன்னு அவரு சொன்னா புரிஞ்சது, அங்க ஏன் நடக்குது, எதுக்கு நடக்குதுன்னு. அதே மாதிரி விலங்கின் இயல்பை அறிந்தவர்கள் சொல்லும்போது நாம புரிஞ்சிக்கிறோம்.

நடுவுல நாலு பேரு தின்ன சோறு செறிக்கிறதுக்கு உடம்ப அசைக்காம வாய மட்டும் அசைச்சு குத்தம் குறை சொல்லி சிரிச்சு பேசுவாங்க, பிரச்சனைக்கு மும்முரமா தீர்வு தேடி முயற்சி செய்றவங்களை! நேரடியாக கொடுமையான அனுபவங்கள் சந்திச்சவங்க உணர்வு பூர்வமா பேசி, அவசரப்படுவாங்க! இது இரண்டும் "பொது வாழ்வில்" சகஜம்! சரி தவறு தெரியலங்க.

said...

ஹீ ஹீ ... ரொம்ப பேசியே கொன்னுட்டேன் ... மாப்பு மன்னிப்பு! :) ...
நல்ல விவாதக்களம். பேசிப் பார்க்க யோசித்துப் பார்க்க, நல்லா இருந்தது! நன்றி கொத்ஸ்!

said...

ஹாய் கொத்ஸ், பதிவு காமெடியாகவும் , அபி அப்பா மற்றும் புலிப் பாண்டி போடும் பின்னூடங்கள் விவாதக் களம் போன்றும் உள்ளது( ஸ்ரீதர் , சிரிப்பான் எதுவும் போடவில்லை),

அன்புடன்...
சரவணன்.

said...

தெரு நாய்களுக்கு கு.க பண்றதுதான் சிறந்த வழி.
காலப்போக்கில் ப்ரச்சன கொறஞ்சுடும்.

இல்லன்னா, 'சீசன்' ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி, ஒரு லாரில எல்லாத்தையும் புடிச்சு போட்டு, ( நம்ம ஜெ.மேடம் யானைகளுக்கு செஞ்ச மாதிரி ) எங்கயாவது ரெக்ரியேஷன் க்ளப்புல கொண்டு விடலாம் :)

said...

//பொறுப்புணர்வு அதிகமா போயி இப்படி
நான்-காமெடி பதிவெல்லாம் போட வேண்டியதாப் போச்சு!!//

நான் காமெடி.......... நான் - காமெடி?

உயரெல்லை தாண்டியாச்சு:-)

said...

//தெருநாய் என்ற ஒரு வகை பிராணி இருப்பதே மக்களுக்கு ஆபத்து.ஆனால் அதற்காக அவற்றை கொடூரமாக கொல்லக்கூடாது.ஊர் ஓரமாக நாய்பண்ணை மாதிரி வைத்து நாய்களை அங்கே கொண்டு போய்விடலாம்.குக செய்துவிட்டால் அவை பண்னையில் குட்டிபோடாது.விலங்கு ஆர்வலர்களும் இதற்கு நிதிதருவார்கள//

பசியால் வாடும் மனிதர்கள் இத்தனை பேர் இருக்க நாய்களுக்குத் தனிவீடு தேவையா அப்படின்னு குரல் வருமே. அதுக்கு என்ன பண்ண? :)

said...

//த மோஸ்ட் டேஞ்சரஸ் க்ரீச்சர் மனுஷந்தானே?

உலகமே தனக்கு மட்டுமுன்னு நினைக்கிறதை மனுஷன் மாத்திக்கணும்.//

டீச்சர், என்னென்னமோ சொல்லறீங்க. கேட்ட கேள்விக்கு மட்டும் பதிலைக் காணுமே? :)

said...

//ஸ்கூலுக்கு போன சின்ன பையனை 300 இடத்துல கடித்து குதறிய தெரு நாயை கொஞ்சவா முடியும்?//

கொஞ்ச முடியாது. கொல்லணுமா? வேண்டாம் அப்படின்னு சொல்லறவங்க, அந்த கரடிக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?

said...

//'வச்சிக்க' ன்றது 'வசிக்க'ன்னு இருக்கணும்.//

ஆனா கோபாலகிருஷ்ணனைக் கேட்ட உங்க ரெண்டு பேரையும் போனாப் போகுதுன்னு வெச்சுக்கிட்டு இருக்கறதா சொல்லறாரே!

said...

//தவறு ஏன் நடந்தது என்று ஆராய்ந்து அதை மாற்ற முயற்சிக்க வேண்டுமே தவிற அந்த உயிரையே கொல்லக் கூடாது.//

இவ்வளவு அழுத்தம் திருத்தமா தெருநாய்களுக்கு குரல் குடுத்த இராஜராஜன் அவர்களே, அந்த கரடி என்ன பாவம் செய்தது?

said...

//இந்த செய்தி புதுசாக இருக்கிறது. தாயால் கைவிடப்பட்ட குட்டியை கொல்லத்தான் வேண்டும் என்பது எந்த வகையில் அறிவியல் பூர்வமானது என்று தெரியவில்லை.//

எனக்கும் தெரியவில்லை. புரியவில்லை. கரடியைக் காப்பாத்த வேண்டும் எனச் சொல்லும் நீங்கள் நாய் விஷயத்தில் என்ன சொல்லப் போகிறீர்கள்?

said...

//தோழர்களுக்கு://

யோவ் என்ன இது? டெம்பிளேட் பின்னூட்டம் எல்லாம்? இது 'அந்த' மாதிரி பதிவு இல்லையா.

பாரு அபி அப்பா எம்புட்டு டென்சனாகிட்டாரு!

said...

//மிருகங்களுக்கும் நம்மைப்போல பூமியுல வசிக்க உரிமை இருக்குதானே//

இருக்கு. ஆனா அந்த மிருகங்கள் வெறி புடிச்சு நம்மளை இங்க இருந்து அனுப்பப் பார்த்தா என்ன செய்யணும்?

சொல்லுங்க அனானி சொல்லுங்க.

said...

//அதே சமயம் பெர்லின்ல எதுவோ பேசிக்கறாங்களா, சரி விடு ஜூட்!//

ஆமாம் எஸ்.கே. ஓண்ணுமே புரியலை. என்னதான் நடக்கும் நடக்கட்டுமேன்னு பாட்டு பாடினா நான் கொல்லக் கூடாது கட்சியோன்னு நினைச்சுடுவாங்களோன்னு பயமா இருக்கு! :)))

said...

//மேட்டரு தெரியல, ஆனா இந்த கரடி குட்டிய டிவியில் பார்த்தேன். கொள்ள அழகு, இத போய் கொல்வதா? சே....சே.....//

ரொம்ப அழகு, இல்லையா புலி. ஆனா பாருங்க அதைக் கொல்லணுமுன்னு அம்புட்டு ஆர்ப்பாட்டம். என்னவோ போங்க.

said...

//அந்த விலங்குகளின் உரிமை என்ன ஆச்சு. அதை கேட்பார் இல்லையா????//

நல்ல கேளுப்பா. அதுக்கு என்ன பதில் சொல்லறாங்கன்னு பார்க்கலாம்.

said...

//ரீப்பிட்டு.... மனிதர்களை விட நாய்கள் எவ்வளவா மேல்//

புலின்னு பேர் வெச்சுக்கிட்டு இந்த மாதிரி எல்லாம் சொன்ன நீர் ரெண்டு வகையையும் டேஸ்ட் பார்த்து இருப்பீங்கன்னு சொல்லிடப் போறாங்க. :))

said...

//This post has been removed by the author.//

அப்படி என்னத்த சொன்ன புலி, டிலீட் பண்ணற அளவுக்கு?

said...

//அய்யோ ஸ்ரீதர் என்னய எதுக்கு கிழிச்சு தொங்கவிட்டீங்க, நான் பாவமில்லயா:-))//

நீர் என்ன தெரு நாயாய்யா உம்ம பாதுக்காப்புக்கு ஏஸி கார் ஆளுங்க எல்லாம் வரதுக்கு? :))

said...

//ஒரு வேளை ஏதை சொன்னாலும் எதிர்ப்பது என்ற முடிவுடன் இருப்பார்களா என்னவோ!//

எல்லாம் ஒரு பரபரப்புக்குத்தான் போல. ஒண்ணுமே புரியலை போங்க.

said...

//சரி சரி.... ஏதா இருந்தாலும் உங்க பிரச்சனைய நாய், கரடியோட வச்சுக்கோங்க.... அதை தாண்டி மேல வரக் கூடாது சொல்லிட்டேன்....

கொல வெறியில் சுத்துறாங்கப்பா!!!//

உமக்கில்லாத பாதுகாப்பா? நீரே பயந்தா எப்படி?

said...

//அவங்க வீட்டில் வளர்ப்பதையிட்டு எந்த ஆட்சேபனையும் இல்லை.
இவை எல்லாம் விவாதத்துக்கு அருகதையற்ற கருணைகள்!!!//

யோகன் அண்ணா, தெருநாய் விஷயத்தில் உங்க கருத்து நல்லாவே புரியுது. ஆனா கரடி மேட்டரில் அவ்வளவு க்ளியராத் தெரியலையே. அதையும் போட்டுத் தள்ள வேண்டியதுதானா?

said...

//ஓவரா தமிழ்மணத்துல மேய்ஞ்சா இப்படித்தான் யாரையாவது பிடிச்சு திட்ட பரபரன்னு வருது :-)) //

பார்த்து மேன். இன்னிக்கு அபி அப்பா. அவருக்கு அபி கிட்டயும் தங்கமணி கிட்டயும் இப்படி சம்பந்தமில்லாம வாங்கிக் கட்டிக்கிட்டு பழக்கம். இதே வேற யாராவது இருந்தா பொலி போட்டுடப் போறாங்க.

said...

//இதுல ஒரு விஷயம் என்னன்னா இப்படி நாய்கள சாகடிக்கறதப்பத்தி பேசறவங்க யாரும் பொது இடத்துல கசாப்பு கடயில பிராணிகள் கொல்லப்பட்டு உரிச்சு தொங்க விடப்படறதப்பத்தி பேச மாட்டேங்கறாங்க.//

சின்ன அம்மிணி,

அந்த கசாப்புக் கடை பெரும்பாலும் அனுமதி இல்லாததா இருக்கும். இப்போ சொல்லுங்க. யாரு மேல தப்பு? அந்த கசாப்பு கடை காரங்களா? அவங்களை அனுமதிக்கும் அரசாங்கமா? அங்கு வாங்கும் மக்களா? அல்லது அந்த நாயைக் கொல்லும் ஊழியர்களா?

said...

//சில சமயம் சுத்தி நின்னு 5-6 நாய் குரைக்கும். அது பல்லு எல்லாம் பார்த்தா ஓநாய் மாதிரி இருக்கும்.

இன்னையோட செத்தடா பாலாஜினு நினைச்சிக்கிட்டே நடப்பேன். ரொம்ப கொடுமையான விஷயம்.///

வெட்டி, இது எனக்கும் நடந்திருக்கு. அதுவும் எம்.ஜி. ரோட் பக்கமே!

//இது மாதிரி ஏதாவது பண்ணலாம். ஆனா அதுக்கெல்லாம் கவர்ண்மெண்ட்ல காசு இருக்குமானு தெரியல. அதனால தாராளமா கொல்லலாம்...//

அப்போ கரடி? அதுவும் அப்பீட்தானா?

said...

//நாய் பொழப்புன்னு சொல்லுவாங்களே தலைவரே அதுக்கும் இந்தப் பதிவுக்கும் எதுன்னா சம்பந்தம் இருக்குதா?//

அதான் தெரியுமே. அவ்வளவு ஆணி புடுங்கறதுக்கு நடுவில பதிவு போட வேற ஓண்ணும் தோண மாட்டேங்குதே!!

said...

//ரீப்பீட்டுடுடு

( இ கொ டார்கெட்டுக்கு வேட்டா..????::))//

என்ன இருந்தாலும் நம்ம பதிவுல பின்னூட்டதுக்கு நோ சொல்லவே மாட்டேன்னு தெரியும்தானே! சில பின்னூட்டங்களை மட்டும் கொஞ்சம் லேட்டா வெளியிடுவேன். ;-)

அதே மாதிரி உயரெல்லை தாண்டினாத்தான் பதில். எப்படி!!

said...

//ஆஹா! இதான் மேட்டரா?

ஆனாலும் ரொம்ப சீரியஸ் ஆயிட்டீங்கண்ணே :((//

அப்படியா. கொஞ்சம் காமெடிக்குள்ள இறங்கிட்டாப் போகுது.

said...

//உள்ளேன் ஐயா :)//

வாங்க இராம். ரொம்ப நாள் முன்னாடி வெண்பா பதிவில் இதோ வரேன்னு சொல்லிட்டுப் போனீங்க. இப்போ எப்படி வசதி?

said...

//அய்யோ நான் விலங்கு உரிமை பத்தி பேசலைங்க. எங்க வீட்டு பக்கத்தில என்.ஜி.ஓக்கள் என்ன செய்றாங்க, எதுக்கு செய்றாங்கன்னு தெரிஞ்சதை உங்க கிட்ட சொல்றேன். சரியாத்தான் இருக்க மாதிரி இருக்கு இந்த லாஜிக். நீங்க என்ன நினைக்கிறீங்க?//

ரொம்ப அருமையான பின்னூட்டம். தெரியாத தகவல் எல்லாம் சொல்லி இருக்கீங்க. புரிய வேற புரியுது! ;-)

ஆனா ஒரு பக்க விபரங்கள் மட்டும் சொல்லிட்டீங்க போல! அதான் அடுத்தது போட்டுட்டீங்களே. அதையும் படிக்கலாம். :)

said...

//ஏன்னா செத்தது சின்னப்பையன், அந்த படத்தை நீயூஸ் பேப்பரிலே பார்த்துட்டு அப்போ அப்பிடியொரு சோகம் சூழ்ந்துக்கிருச்சு...:(//

அந்த சின்னப்பையன் பொண்ணு எல்லாம் என்ன பாவம் பண்ணினாங்க? நாம எல்லாரும் ஆற அமர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வர வரைக்கும் இப்படி அநியாய பலிகள் நடந்துக்கிட்டேதான் இருக்குமா?

said...

//பம்மல்.க.சம்பந்தத்தில சொல்றது மாதிரி - இதையெல்லாம் ரசிக்கணும்;காரணம் கேக்கப் படாது. புரிஞ்சுதா..?//

அன்பே சிவம், அவ்வை சண்முகி, இப்போ பம்மல்.கே. என்ன இது கமல் பட ஸ்பெஷல் மாதிரி இருக்கு. :))

அப்போ இதெல்லாம் அனுபவிக்கணும் ஆராயக்கூடாதுன்னு சொல்லறீங்க. சரி. அப்படியே சொல்லறேன்.

said...

//மிருகங்களை மதிக்காமல் இருக்கும் நாடு மனிததன்மையை இழந்துவிடும்.//

ஏன் சிவாண்ணா, அவரு அப்படிச் சொன்ன போது at the cost of human lives அப்படின்னு சேர்த்துச் சொன்னாரா? இப்படி உயிர் பலி நடக்குதே. அதுக்கு என்ன செய்ய?

said...

//பனிக்கரடி குட்டிய ஏன் கொல்லணும்?
இதைப் பத்தி பாரதிராஜா "கருத்தம்மா"ன்னு ஒரு படம் எடுத்தாரு! //

மதுராக்கா. மதுராக்கா, இப்பத்தானே புரியற மாதிரி இருக்குன்னு சொன்னேன். இப்படிக் கவுத்துட்டீங்களே. கமல் படம் பத்திப் பேசும் போது கருத்தம்மா எங்க வந்தா?

உண்மையை சொல்லறேன். எனக்கு நீங்க சொல்ல வரது புரியலை. மிருகங்களை அடைச்சு வைக்கக்கூடாது என்பது சரிதான். ஆனால் இன்று மிருகக் காட்சி சாலை என்பது இருப்பது. அதில் இந்த பனிக்கரடி இருந்தால் என்ன?

நீங்க சொல்லறது எனக்குப் புரியலைங்க.

said...

//ஹீ ஹீ ... ரொம்ப பேசியே கொன்னுட்டேன் ... மாப்பு மன்னிப்பு! :) ...
நல்ல விவாதக்களம். பேசிப் பார்க்க யோசித்துப் பார்க்க, நல்லா இருந்தது! நன்றி கொத்ஸ்!//

நன்றி மதுராக்கா. தெரியாத விஷயங்கள் எல்லாம் சொன்னீங்க, இதுல எதுக்கு நடுவில மாப்பு எல்லாம். நல்லா வந்து சொல்ல வேண்டியதைச் சொல்லுங்க.

said...

//ஹாய் கொத்ஸ், பதிவு காமெடியாகவும் , அபி அப்பா மற்றும் புலிப் பாண்டி போடும் பின்னூடங்கள் விவாதக் களம் போன்றும் உள்ளது( ஸ்ரீதர் , சிரிப்பான் எதுவும் போடவில்லை),
//

இந்தப் பதிவு உமக்குக் காமெடியா இருக்கா? சரா, உம்ம நக்கலுக்கு ஒரு அளவே இல்லாம போயிக்கிட்டு இருக்கு.

said...

//தெரு நாய்களுக்கு கு.க பண்றதுதான் சிறந்த வழி.
காலப்போக்கில் ப்ரச்சன கொறஞ்சுடும்.//

அதாவது கொல்லக்கூடாதுன்னு சொல்லறீங்க. அதைச் சொன்ன நீங்க ஏன் கரடியைப் பத்தி ஒண்ணும் சொல்லலை?

said...

//நான் காமெடி.......... நான் - காமெடி?//

நான் காமெடின்னு நினைக்கறது நான் -காமெடியாகுது. நான் -காமெடின்னு நினைச்சா நான் காமெடின்னு சொல்லறாங்க. நான் காமெடியா? நான் - காமெடியா?

//உயரெல்லை தாண்டியாச்சு:-)//
யூ டூ டீச்சர்? :))

said...

கடைசியில் அனேகம் பேர் வந்து நாய்களைக் கொல்லக் கூடாதுன்னு சொன்னா மாதிரித்தான் தெரியுது. அதில் பல பேர் கரடியைச் சாய்ஸில் விட்டுட்டாங்க. அது ஏனோ தெரியலை.

said...

//மிருக ஆர்வலர்கள்; அதாவது தெரு நாய்க்குக் கருணை காட்ட குளிரூட்டிய காரில் வருபவர்கள்; //

அவர்கள் வீட்டுப் பிள்ளையை நாய் கடித்தால் உடனே அந்த நாயைக் கொல்லச் சொல்வார்கள்.

என்னைப் பொறுத்த வரையில் வெறி பிடித்த நாய்களை கொல்வதில் தவறேதும் இல்லை.
veri pidiththa naayai kolvadhil thavarillai.

said...

நன்றி இரவி அவர்களே. கரடியை என்னெ செய்ய வேண்டும்? கொல்லாமல் வளர்க்க வேண்டும் என்பதுதானே உங்கள் கருத்து?