Sunday, April 15, 2007

தமிழ்மணத்தில் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?

வரும் ஏப்ரல் 28ஆம் தேதி நியூ ஜெர்ஸியில் வலைப்பதிவர் சந்திப்பு ஒன்றை வசந்த விழாவாக கொண்டாட இருப்பது பற்றிச் சொல்லி இருந்தோம். இந்த சமயத்தில் பேச இருக்கும் தலைப்புகளில் ஒன்றாக "தமிழ்மண சேவைகளில் நாம் விரும்பும் மாற்றங்கள்" என்ற ஒரு தலைப்பையும் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.

இந்த சமயத்தில் அங்கு வந்து பங்கேற்கும் பதிவர்கள் மட்டுமல்லாது, மற்றவர்களின் கருத்துக்களும் விருப்பங்களும் கேட்டு அதனையும் குறித்து விவாதித்து, அனைத்து கருத்துக்களையும் தொகுத்து தமிழ்மண நிர்வாகத்தினரின் பார்வைக்கு அனுப்பலாம் என திட்டமிட்டு இருக்கிறோம். இதற்காக உங்கள் கருத்துக்களை அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறோம்.

தமிழ்மணத்தின் தற்போதைய சேவைகளில் நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் என்ன?

தமிழ்மணத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் மேலதிக சேவைகள் என்னென்ன?


இவை தொடர்பாக உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுமாறு அழைக்கிறோம். ஆக்கபூர்வமான கோரிக்கைகளையும் யோசனைகளையும் தமிழ்மண நிர்வாகத்தினர் கட்டாயம் பரிசீலிப்பார்கள் என நம்புகிறோம். அவற்றை பயனர்கள் என்ற முறையில் அவர்களுக்குத் தெரியப்படுத்துவது நம் கடமை எனவும் நம்புகிறோம். ஆகையால் உங்கள் கருத்துக்களை பின்னூட்டமாக பதிவு செய்யுங்கள் என கேட்டுக் கொள்கிறோம்.

டிஸ்கி : பூங்கா மற்றும் தமிழ்மண நட்சத்திர தேர்வுகள் முறையே பூங்கா ஆசிரியக் குழு மற்றும் தமிழ்மண நிர்வாகிகளின் தனிப்பட்ட தேர்வுகள் என்பதால் அதில் கருத்து கூற வேண்டாம் என்பது எங்கள் எண்ணம். அதனால் திரட்டி என்ற வகையில் தமிழ்மணத்தில் நாம் எதிர்பார்க்கும் மாற்றங்களை மட்டுமே பற்றி பேசினால் பொருத்தம் என நினைக்கிறோம்.

31 comments:

இலவசக்கொத்தனார் said...

முடிந்த வரை அனானியாக வருபவர்கள் தங்கள் கருத்துக்களுடன் பெயரும் தந்தால், எந்தெந்த மாற்றங்களை யார் யார் தந்தார்கள் என அறிந்து கொள்வது எளிதாக இருக்கும். நன்றி.

துளசி கோபால் said...

கொஞ்சம் யோசிச்சுச் சொல்றேனே.........

வடுவூர் குமார் said...

திரட்டி என்று சொல்லிவிட்டதால்,பல விஷயங்கள் அடிபட்டு போகிறது.
வரும் பதிவுகளை மட்டுப்படுத்த வேண்டும்,இது தமிழ்மணத்தில் வரும் பதிவுகளின் மூலம் அதன் பெயர் தண்மையை மேம்படுத்தும்.
பல எழுதுபவர்களின் கைகளில் தான் இருக்கிறது என்றாலும்,பலர் வந்து போகும் இடம் என்பதால் "திரட்டி" நிர்வகிப்பவர்கள் பதிவுகளை மட்டுப்படுத்தவேண்டும்.இது நான் நினைப்பது.
ஆமாம் நான் தான் இங்கு இல்லையே,கருத்து சொல்லலாமா?
:-))

SurveySan said...

யோசிச்சு பெறவு சொல்றேன்.
இப்போதைக்கு, சில பாயிண்ட்டு இங்கண இருக்கு - Click

Thiru said...

இப்போது வரும் பெரும்பாலான பதிவுகளை பார்க்கும் போது,
தமிழ்மணத்தில் சாதிச்சண்டை/மதச்சண்டை என்று ஒரு பிரிவு ஏற்படுத்த வேண்டும் என்று தோன்றுகிறது.

கால்கரி சிவா said...

நான் கேட்க போகும் கேள்விகளை தைரியமாக விவாதிப்பீர்களா?

Anonymous said...

நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்படுபவர்

* குறைந்தபட்சம் 10 பதிவுகளுக்கு மேல் போட்டிருக்க வேண்டும் ( அப்படி பார்த்தால் இந்த வார நட்சத்திரம் நாக் அவுட்)

* நட்சத்திரம் என்பவர் தமிழ்மணத்தில் குறைந்தபட்சம் 2 மாதங்களுக்கு முன் இணைத்திருத்தல் வேண்டும்.

* 40 பின்னூட்ட உயர் எல்லையை நீக்கவேணும்.

* மறுமொழி மட்டுறுத்தல் கட்டாயமில்லை என்று அறிவிக்க வேண்டும்.

சூர்யா
பெங்களூர்

Anonymous said...

சாதி/சமய சண்டை மைதானம் அமைத்தாலே தமிழ்மணம் சுத்தமாகிவிடும்...

Anonymous said...

* கூகிள் வசதியாகிய Flag as Inappropriate பற்றிய அவேர்னஸ் க்ரியேட் செய்து, தமிழ்மண முக்கோணம் போடவேண்டும் என்றால் Flag செய்த பிறகு தான் செய்ய வேண்டும் என்றோ அல்லது Flag செய்யச்சொல்லியோ வாசகர்களை வலியுறுத்த வேண்டும். உதாரணமாக அனைவரும் அறிந்த போலிப்பதிவாகிய டோண்டு பதிவுக்கு 100 பேர் Flag செய்தால் கண்டிப்பாக Adult Content என்றோ, நீக்குவது பற்றியோ கூகிள் சிந்திக்கும்.

சூர்யா.
பெங்களூர்.

(இதை வெளியிடுவதும் வெளியிடாததும் உங்கள் விருப்பம்)

முகமூடி said...

நீங்க ஆலோசனைன்னு ஒண்ணு கேக்கறீங்களேன்னு எனக்கு தோணுறத சொல்றேன்... முதல்ல இந்த மாதிரி உங்ககிட்ட கேட்கப்படாதப்போ அட்வைஸ் பண்ணாதீங்க... இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திதான் ரணகளமாயிருக்கு இன்னிக்கி நிலைமை. தமிழ்மணத்தை ஒரு திரட்டி என்ற நிலைமைக்கு மேல பாக்கிறத நிறுத்துங்க.. போன வருசமே "பயனர்கள் என்ற முறையில்" பாசமெல்லாம் ஏகப்பட்டது பொங்கி வழிஞ்சி ஏகப்பட்ட வாதம் பிரதிவாதம் கபம் மூட்டுவலி எல்லாம் நடந்து, அப்ப கூகிளோட ஒப்பிட்டு சொன்னத இங்கயும் காப்பி பேஸ்ட் பண்ணலாம்னா அத தேட இப்போதைக்கு மூடு இல்ல...

இப்ப லேட்டஸ்ட் ட்ரெண்டுக்கு வருவோம். தினமும் youtubeல் சில பல வீடியோக்களை பார்க்கிறேன். நான் அப்லோட் செய்த சில வீடியோக்களும் வந்திருக்கின்றன.. அதுபோலவே flickrம். இரண்டுமே sharing site. அதன் பயனாளிகள் நாம். அதற்கு நாம் ஆலோசனைகளோ அல்லது நன்றி நன்றி நன்றி எல்லாம் சொல்கிறோமா.. அப்புறம் எதற்கு தமிழ்மணத்துக்கு மட்டும். இணையத்தில் இருக்கும் ஏகப்பட்ட பயனர் பரிமாறும் சைட்டுகளை போலவே இதையும் பாவித்தால் நமக்கு ப்ரச்னை ஏதும் இல்லை. அதை விடுத்து ஒரு பெர்சனல் டச்சை போட்டு நாமாகவே ஒட்டிக்கொண்டால் அப்புறம் ப்ரச்னைதான். பரீட்சைக்கு படிக்கும் பக்கத்து வீட்டு பையனுக்கு அவன் கேட்கிறானோ இல்லியோ நாமாகவே வலிய யோசனை சொல்வானேன், அப்புறம் அவன் வயசு அப்படி இப்பல்லாம் முந்தி மாதிரி நம்மள மதிக்கிறது இல்ல என்று வருந்துவானேன்.

ஆகவே உங்கள் கூட்டத்தில், தமிழ்மணத்தையும் தேன்கூட்டையும் இன்னபிற திரட்டிகளையும் மற்றெல்லா பயனர் வெப்சைட்டுகளை போலவே பத்தோடு பதினொன்றாக பாவிக்கும் மனம் வாய்க்க என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசியுங்கள்... தமிழ்மணத்தை லாஜிக் இல்லாமல் கேள்வி கேட்பவர்கள் அதை நிறுத்த வேண்டியது ஏன் என்று ஆலோசியுங்கள். அதே சமயம் தமிழ்மணத்தை விமர்சனம் செய்தால் "அடப்பாவி உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்கிறாயே நீ உருப்படுவியா" என்றெல்லாம் காமெடி கோபப்படுபவர்கள் அவர்களின் மனசாந்திக்கு மருத்து போடுவது எப்படி என்று ஆலோசித்து அதையும் வெளியிடுங்கள். முக்கியமாக தமிழ்மணம்தான் என்னை எழுத வைத்தது தூண்டியது என்றெல்லாம் நம்புபவர்களின் mental block ஐ திறப்பது எப்படி என்றும் ஆலோசியுங்கள்... முக்கியமாக தமிழ் வலைப்பதிவுகள் படிப்பதை படிப்படியாக குறைத்து மொத்தமாக நிறுத்துவது எப்படி என்று ஆலோசித்து சொன்னீர்கள் என்றால் என்போன்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும் :))

// நான் கேட்க போகும் கேள்விகளை தைரியமாக விவாதிப்பீர்களா? //

கால்கரி, இது என்ன வெறும் விவாதம்தானே.. விவாதிப்பதற்கே தைரியம் வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டதா நிலைமை... அல்லா ரட்சிப்பாராக (ஒரு மதச்சார்பின்மைதான்.. பிறப்பால் பை டீபால்டாக இந்துவாக முத்திரை குத்தப்பட்டவன் இசுலாமிய கடவுள் கிறித்துவ போதனையில் வரும் வார்த்தையை போட்டு வேண்டியதாக இருக்கட்டுமே)

அதுசரி ஆடியோ ரிகார்டிங் (open/secret), போட்டா கிராப்பி (flash/secret), விடியோகிராப்பி (handycam/spycam) எல்லாம் உண்டா... இல்லை, வெறும் போண்டா டீயுடன் நடக்கும் கற்கால மீட்டிங்கா?

Balamurali said...

வணக்கம்!
தமிழமணத்தில்
ப்ளாக்கை இணைக்க விருப்பமாயிருக்கிறேன்
அதற்கான வழிமுறைகள்
தமிழ் மணத்தில் தேடிப்பார்த்தும்
தெரியவில்லை.
தயவு செய்து விளக்க இயலுமா?

ஜோ/Joe said...

//பலர் வந்து போகும் இடம் என்பதால் "திரட்டி" நிர்வகிப்பவர்கள் பதிவுகளை மட்டுப்படுத்தவேண்டும்.//
வடுவூர் குமார் ஐயா!
நீங்கள் லினக்ஸ் பற்றி பதிவுகள் போடுமளவுக்கு தொழில் நுட்பம் தெரிந்தவர் .இங்கே 'மட்டுப்படுத்த வேண்டும்' என்றால் என்ன ? பதிவர்களை தேர்ந்தெடுத்து அனுமதிக்க வேண்டுமா ?அல்லது பதிவுகளை தேர்ந்தெடுத்து அனுமதிக்க வேண்டுமா ? பதிவுகளை தேர்ந்தெடுத்து அனுமதிக்க வேண்டுமென்றால் பதிவை உள்ளிடும் போதே தமிழ்மணம் அதன் தரத்தை எப்படி கண்டறிய முடியும் ஐயா! அல்லது ஒவ்வொரு பதிவையும் படித்து பார்த்து தான் தமிழ்மணத்தில் அனுமதிக்க வேண்டுமென்பது தான் உங்கள் கருத்தா ? இல்லை வெளிவந்த பின் ஆட்சேபிக்கத்தக்க வகையில் இருந்தால் நீக்க வேண்டும் என்றால் ,அதற்குத் தான் புகார் செய்ய வசதி இருக்கிறதே ஐயா..

அதுவுமில்லை .ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு வார்த்தையையும் வாசித்து மட்டுப்படுத்த வேண்டுமென்றால் இதை விட சிறு பிள்ளைத்தனம் உண்டா ? உங்கள் பதிவை தமிழ்மணத்தார் சென்று மாற்றி அமைக்க உங்கள் கடவுச்சொல்லை தமிழ்மணத்துக்கு கொடுப்பீர்களா என்ன ? அப்படியே நீங்கள் தேன்கூட்டிலும் இருந்தால் அங்கேயும் கொடுப்பீர்களா ? அப்போது யார் எதை மட்டுறுத்தியது என்று எப்படி ஐயா தெரியும் ?

ஐயா! தமிழ்மணம் ஓரு திரட்டி ஐயா திரட்டி..ஐயகோ!

நாமக்கல் சிபி said...

//தமிழ்மணத்தில் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?" //

சண்டை சச்சரவுகளில்லாத நிம்மதியான போக்கு!

அப்பாவி வாசகனாக,
நாமக்கல் சிபி.

Anonymous said...

//அதற்குத் தான் புகார் செய்ய வசதி இருக்கிறதே ஐயா..//

நானும்தான் புகார் செஞ்சு இருக்கேன். என்ன ஆச்சு? அந்த பதிவும் பதிவரும் நல்ல முழுசா தமிழ்மணத்தில் வந்துக் கிட்டு தானே இருக்காங்க? இது மாதிரி விஷயங்களில் கொஞ்சம் ட்ரான்ஸ்பரன்ஸி வேணும்.

ஜோ/Joe said...

//நானும்தான் புகார் செஞ்சு இருக்கேன். என்ன ஆச்சு? அந்த பதிவும் பதிவரும் நல்ல முழுசா தமிழ்மணத்தில் வந்துக் கிட்டு தானே இருக்காங்க?//
அதாவது நீங்க புகார் செஞ்சிட்டா அதை நீக்கியாகணும் .இல்லைண்ணா உங்களுக்கு பிடிக்காது .அப்படிப்பார்த்தா நான் கூட இலவசக்கொத்தனாரின் இந்த பதிவை பற்றி புகார் சொல்லலாம் .அதை ஏற்றுக்கொள்ளுவதும் இல்லாதததும் தமிழ்மண நிர்வாகத்தின் உரிமை .நான் சொல்லும் காரணங்கள் தமிழ்மணத்திலிருந்து பதிவுகளை நீக்குவதற்கு அவர்கள் வைத்துக் கொள்ளும் வரையறைகளுக்கு பொருந்தி வந்தால் அவர்கள் நீக்குவார்கள் .இல்லையென்றால் எனது கருத்துக்கு அவர்கள் ஒத்து வர வில்லையென்றால் எந்தையாவது சொல்ல வேண்டியது.

//இது மாதிரி விஷயங்களில் கொஞ்சம் ட்ரான்ஸ்பரன்ஸி வேணும்.//

ஐயா! இது மாதிரி theory பூச்சாண்டி காட்டுவதை விடுத்து practical முறையில் என்ன மாதிரி ட்ரான்ஸ்பரன்ஸி வேண்டுமென்று சொல்லுங்கள்.

Anonymous said...

//தமிழ்மணத்தை ஒரு திரட்டி என்ற நிலைமைக்கு மேல பாக்கிறத நிறுத்துங்க.. //

//இணையத்தில் இருக்கும் ஏகப்பட்ட பயனர் பரிமாறும் சைட்டுகளை போலவே இதையும் பாவித்தால் நமக்கு ப்ரச்னை ஏதும் இல்லை. அதை விடுத்து ஒரு பெர்சனல் டச்சை போட்டு நாமாகவே ஒட்டிக்கொண்டால் அப்புறம் ப்ரச்னைதான். பரீட்சைக்கு படிக்கும் பக்கத்து வீட்டு பையனுக்கு அவன் கேட்கிறானோ இல்லியோ நாமாகவே வலிய யோசனை சொல்வானேன், அப்புறம் அவன் வயசு அப்படி இப்பல்லாம் முந்தி மாதிரி நம்மள மதிக்கிறது இல்ல என்று வருந்துவானேன்.

ஆகவே உங்கள் கூட்டத்தில், தமிழ்மணத்தையும் தேன்கூட்டையும் இன்னபிற திரட்டிகளையும் மற்றெல்லா பயனர் வெப்சைட்டுகளை போலவே பத்தோடு பதினொன்றாக பாவிக்கும் மனம் வாய்க்க என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசியுங்கள்...//

//முக்கியமாக தமிழ்மணம்தான் என்னை எழுத வைத்தது தூண்டியது என்றெல்லாம் நம்புபவர்களின் mental block ஐ திறப்பது எப்படி என்றும் ஆலோசியுங்கள்...//

உண்மை!

வல்லிசிம்ஹன் said...

ஆலோசனை சொல்லும் அளவிற்கு
இணைய அனுபவம் போதாது.

இன்னும் இனிமையாக இருக்கலாம் என்பதுதான் விருப்பம்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நாமக்கல் சிபி said...
சண்டை சச்சரவுகளில்லாத நிம்மதியான போக்கு!
அப்பாவி வாசகனாக,
நாமக்கல் சிபி.//

ரிப்பீட்டே!
அப்படி சண்டை சச்சரவு வேண்டும் - அதன் வாயிலாக தீர்வுகள் வேண்டும் என்றால், அதற்கு என்று தனி மைதானம்...அல்லது குறைந்த பட்சம் தனி அறை!

முகப்பிலேயே சண்டை என்று இல்லாமல், ரிசப்ஷன் வைத்து வரவேற்று விட்டு,
பின்னர் அது அதற்குத் தனி மைதானம் என்றால், multiplex சினிமா போல், ஒரு நல்ல சூழல் நிலவும்!

VSK said...

நடக்கபோற இந்தக் கூட்டத்தை என்னமோ நார்வே சமாதான முயற்சிக்கு ஈடா நினக்கறீங்கன்னு எண்ணுகிறேன் கொத்ஸ்!

முகமூடி சொன்னது அத்தனையும் வரிக்கு வரி உண்மை.

கொஞ்சம் கீழே இறங்கி வாங்க!

முகமூடியாரின் கடைசிக் கேள்விக்கான் பதிலை நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
:))

Anonymous said...

சிலர் தமிழக ஈழ உறவில் விரும்பத்தகாத நெருக்கடிகளை உருவாக்கக்கூடிய கட்டுரைகளையும் ஒலிப்பதிவுகளையும் வெளியிடுகின்றார்கள். சில பொறுப்பற்ற‌ ஈழப் பதிவாளர்கள் ஆரம்பிக்க அதற்கு காட்டமான பதிலை தமிழகப் பதிவாளர்கள்
வெளியிடுவதும் வேதனை தருகின்றது. இது தொடபான ஆக்கங்களை முற்றாகத் தடை செய்யவேண்டும்.

ஒரு ஈழத் தமிழன்.

வெற்றி said...

இ.கொ,
சண்டையும் சச்சரவும் புலவர்களின் [தமிழர்களின்] பரம்பரைச் சொத்து. அதை மாற்ற யாராலும் முடியாது.:))
[வசன உபயம் : திருவிளையாடல்]

என்னைப் பொறுத்த வரையில் இரவிசங்கர் கண்ணபிரானின் கருத்துத் தான் எனதும்.

/* அப்படி சண்டை சச்சரவு வேண்டும் - அதன் வாயிலாக தீர்வுகள் வேண்டும் என்றால், அதற்கு என்று தனி மைதானம்...அல்லது குறைந்த பட்சம் தனி அறை! */

இக்[மேலே] கருத்தை உங்கள் ஒன்றுகூடலில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மிக்க நன்றி.

Anonymous said...

Categorization of Blogs.

Chat with Star of the week .

Ravi
NJ

சுந்தரவடிவேல் said...

Productive job! Thank you!
When it comes to Thamizmanam, the attitude of some people is totally different. They dont approach Thamizmanam as yet another 'youtube/google/thenkoodu'. I am not asking or going to say why their mind works so. But what I can say is that there is going to be thousands more of truth-loving, faithful, sincere-to themselves, sincere-to-their lives Tamil bloggers who will be writing relentlessly against corrupted establishments, including religious and nationalistic ones. The so called 'main-stream' media nurtured ideals would find it hard to see this blogdom induced changes. Lets hope they will cope up with it as we move on!

Anonymous said...

கைக்கு எட்டக்கூடியளவில் ஒரு ஆராய்ச்சி மணி கட்டினால் என்ன?

புள்ளிராஜா

Anonymous said...

நியூஜெர்சியில் எங்கு நடக்கிறது என்று தெரிவிக்க இயலுமா

Santhosh said...

கொத்ஸ்,
நம்ம கண்ணபிரான் சொல்லி இருக்குற மாதிரி ஒரு தனி பக்கம் போட்டு அடுத்த சாதியை மதத்தை பத்தி தப்பா பேசுறவன், தன்னோட சாதி/மதம் தான் பெரியது அப்படின்னு ஜல்லி அடிக்கிறவனை எல்லாம் தள்ளி விட்டா நல்லா இருக்கும் எப்ப பாத்தாலும் ஒரு நாலு ஜந்து டிக்கெட்டுங்க என்னோட மதம் தான் பெரியது சின்னது அப்படின்னு இந்த பக்கம் வரவே கடியா இருக்குங்க.

Boston Bala said...

ஜெர்சி சந்திப்பில் பிறரைக் கேட்க விரும்பும் கேள்விகள்:

1. நீங்கள் ஏன் வலையில் பதிகிறீர்கள்? எதற்காக நேரம் செலவழித்து பிறர் பதிவுகளில் பதில் போடுகிறீர்கள்?

2. உங்கள் பதிவினால் என்ன பயன்? யாருக்கு எப்படி உபயோகம் என்று தெரியுமா? எவருக்கும் லாபமில்லை என்னும் டிஸ்க்ளெய்மர் கொடுத்தால், என்றாவது உருப்படியாக்கும் எண்ணம் உண்டா என்று அறிய விருப்பம்?

3. ஒரு பதிவுக்கு எத்தனை நேரம் செலவழித்து இடுகிறீர்கள்? பதிவுகள் எவ்வாறு உருக்கொள்கிறது?

4. திரட்டிகளில் வெளியாகுவதால் பதிவுகளில் மனத்தடை (inhibitions) ஏற்படுகிறதா? எந்த வகை எண்ணங்கள், எழுத்துருவாக்கம் காணமல் இப்படி மறையும் அபாயம் உள்ளது? கொந்தி (mask) அணிவது இதற்கு வெளிப்படையான தளத்தை உருவாக்குமா?

5. நண்பர்கள் மனம் புண்படுமே என்று உங்கள் இடுகைகளை சுயதணிக்கை செய்ததுண்டா?

6. இவருடன் ஒத்துப் போனால் இமேஜ் பரிபாலனம் செய்ய முடியாதே என்று ஈகோவுக்குக் கட்டுப்பட்டு, பதிவுகளின் சுதந்திரம் தடைப்படுகிறதா?

7. பதிவுகளில் கதை/கவிதை மட்டுமே இட்டு வருவது, புகழ்பெற்ற பாடல்களான சங்க இலக்கியம்/குறளுக்கு பொருள் கொடுப்பது போன்றவை தேவையா? ஏன்?

8. குறிப்பெடுத்து, பலரோடு பகிர்வதின் நோக்கமாக எதைச் சொல்வீர்கள்? இத்தனை பேரைக் கொண்டு இயக்கமாக, சமூக சக்தியாக மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

9. லாஜிக் இல்லாத வாதங்கள்; அரைகுறையாகச் சொல்லும் ஓட்டைத் தகவல்; ட்விஸ்ட் ஆட்டம் போடும் சரித்திரம்; - கண்டால் பொங்கியெழுந்து கண்டிப்பீர்களா? பின்னூட்டமாகவா, பதிவாகவா?

10. #4-இன் உப-கேள்வி: பதிவைப் பாராட்டும்போது முகமிலியாக 'நன்றி' சொல்வது சரியா? விமர்சித்தால் 'ப்ராண்ட் நேம்' அவசியமா? கொந்தி கொண்டு மாற்றுக் கருத்தை முன்வைத்தால், உரியவாறு சென்றடைந்து, திரட்டி நிர்வாகிகளின் நற்பெயரையும் அடைய முடியுமா?

Anonymous said...

யார் என்ன சொன்னாலும் தமிழ்மணம் திருந்தப் போவதில்லை. இது சத்தியம். இங்கே குப்பைகளை யார் கொட்டினாலும் தமிழ்மணம் கண்டுகொள்வதில்லை. வீணாக நேரத்தை செலவுசெய்து பதிவுபோடுவதில் பயன் வரவே வராது.

யோசிப்பவர் said...

கொத்ஸ்,

நீங்கள் கேட்டு விட்டதால், ஏதோ எனக்குத் தெரிந்ததை சொல்கிறேன்

தமிழ் வலைப்பதிவர்கள் சிலர்(பலர்) ஆங்கிலப் பதிவும் வைத்திருக்கின்றனர். ஆனால் அவற்றை மற்ற தமிழ் பதிவர்களுக்கு அறிமுகப்படுத்த, அந்த வலைப்பதிவரின் தமிழ்ப்பதிவில் ஒரு சுட்டி கொடுக்கலாம் அல்லது ஒரு பதிவு போடலாம். ஆனால், அதில்(ஆங்கில்ப் பதிவில்) புதுப் பதிவுகள் இடும்பொழுது, அவை தமிழ் திரட்டிகளால் திரட்டப் படுவதில்லை என்பதால், நிறைய தமிழ்வலைப்பதிவு வாசகர்களின் கவனத்துக்கு அவை வருவதில்லை. அதனால் தமிழில் ஏற்கெனவே வலைப்பதிவு வைத்திருக்கும் வலைப்பதிவரின் ஆங்கிலப் பதிவுகளையும், தமிழ்மணம் திரட்டியில் இணைத்துக் கொண்டு அந்தப் பதிவுகளையும் தமிழ்மணம் திரட்டினால், ஆங்கிலப் பதிவு வைத்திருப்பவர்களுக்கும், அதன் தமிழ் வாசகர்களுக்கும் மிக உதவியாக இருக்கும்.


இதை தமிழ்மணம் கொஞ்சம் கவனத்தில் எடுத்து கொண்டால் நல்லது!!!

ஆதி said...

ஆதிசேஷனை தூக்கியபோது பிராமணீயம் எங்கே சென்றது?
நானும் எழுத வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் எழுதும் நிலைக்கு ஆளாக்கி விட்டார்கள். பிராமணீயம் எழுத வேண்டாம் என்று தடுக்க யாரும் இல்லை. இது நமது சொந்த வலைப்பதிவு. நமக்குப் பிடித்ததை எல்லாம் எழுதுகிறோம். முஸ்லிமைக் கண்டபடி வாய்க்கு வந்தபடி திட்ட பார்ப்பனர்கள் எல்லாம் நமது வலைப்பதிவைப் பயன்படுத்துகிறோம்.

சொந்த பெயரில் ஒரு பதிவும் போலியாக ஒரு பெயரிலும் நமது கருத்துக்களை மக்கள் முன் வைக்கிறோம். அதனைக் கேள்வி கேட்க தமிழ்மணத்துக்கு உரிமை இல்லை. நமதுபதிவோ அல்லது பின்னூட்டமோ ஆபாசமாக இருக்கும்போது அல்லது வரையறைகளை மீறும்போது மட்டுமே தமிழ்மணம் நம் பதிவுகளை தூக்குகிறது. எனவே அவர்கள் ஆரிய திராவிட பேதம் பார்ப்பது இல்லை.

நான் எனது பதிவினில் முஸ்லிமை எதிர்ப்பேன், அல்லது தாக்குவேன். அது எனது தனிப்பட்ட உரிமை. அதேபோல தமிழ்மணம் நிர்வாகிகள் தங்களுக்குப் பிடித்த பதிவுகளை சேமிக்க பூங்கா என்ற இதழை நடத்துகின்றனர். அங்கே சென்று பார்ப்பனீயம் மட்டுமே போட வேண்டும் அல்லது சமகிருதம்தான் போட வேண்டும் என்று சொல்வது சரியாக எனக்கு படவில்லை. அதேபோல நமது ஒவ்வொருத்தரின் பதிவுக்கும் தமிழ்மணமும் அதன் நிர்வாகிகளும் வந்து திராவிடர்களை ஆதரித்துதான் பதிவுகள் போட வேண்டும் என்று சொன்னால் நாம் கேட்போமா? கண்டிப்பாக கேட்க மாட்டோம்.

எனவே இந்த விஷயத்தில் தமிழ்மணம் சொல்வது சரியாகப் படுகிறது எனக்கு. எனவே எனது தார்மீக ஆதரவை தமிழ்மணத்துக்கு நான் அளிக்கிறேன். இதனால் என்மேல் கோபம் கொண்டு நேசகுமார், திருமலைராஜன், ஜயராமன், டோண்டு, முகமூடி எல்லேராம், கால்கரி சிவா, வஜ்ரா சங்கர். ம்யூஸ், அரவிந்தன், ஜடாயு, இட்லிவடை, அன்புடன் பாலா போன்றவர்கள் என்னை ஆபாசமாக சித்தரித்தாலும் கவலைப்பட போவதில்லை. எனது ஆதரவு என்றும் தமிழ்மணத்துக்கு உண்டு.

ஜெய்ஹிந்த்!!!

சென்ஷி said...

யப்பா ஆதிசேஷன்..

எல்லா பதிவுலயும் இதையே சொல்லிக்கிட்டிருக்கியே.. மேட்டர கூட பாக்க மாட்டியா.. வெறும் தலைப்ப பாத்துட்டு இப்படி காப்பி, பேஸ்ட் பண்றது நல்லாயில்ல..

உன்னை தடை பண்ணனது தப்பேயில்லன்னு இப்ப தோணுது..

பி.கு.. இதுக்கு நான் ஸ்மைலிய தனியா போடறேன் :)))

சென்ஷி