வாழ்த்துக்கள் உலகப் பெண்ணினமே!
இப்போ நம்ம சொல்ல வந்த ஸ்பெஷல் மேட்டர். தமிழ் வலையுலகின் மூத்த பதிவாளர்களில் ஒருவரும், எங்கள் கிளாஸ் டீச்சரும், பின்னூட்ட நாயகியும், நம்ம விக்கி பசங்களில் ஒருவருமான துளசி டீச்சர் அவர்கள் இன்னைக்கு அவங்களோட 500ஆவது பதிவு போட்டு இருக்காங்க! ஸ்பெல்லிங் மிஸ்டேக் எல்லாம் இல்லைங்க. உண்மையிலேயே 500ஆவது பதிவு! அது மட்டுமில்லை இதுல அவங்க வலைப்பூவான துளசிதளம் இல்லாமல், விக்கியில் எழுதிய பிரியாணிப் பதிவு உட்பட மற்ற இடங்களில் எழுதிய பதிவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை.
இன்னைக்கு 50க்கு 100க்கும் விழா எடுக்கிற இந்த நேரத்தில் இந்த மாபெரும் சாதனையை அவங்க பதிவின் கடைசியில் ஒரே ஒரு வரியா போட்டு இருக்கும் தன்னடக்கத்தை என்னவென்று சொல்வது. ஒரு லெவலுக்கு மேல Numbers do not matter என்பது சரிதான் போல இருக்கிறது. வரலாறு, சமையற் குறிப்பு, கதைகள், மொக்கைப் பதிவு என எல்லாவற்றையும் ஒரு கை பார்த்து, எந்த விதமான சண்டை சச்சரவிலும் பங்கு கொள்ளாமல் அனைவரும் தன் மீது பெரு மரியாதை கொள்ளுமாறு இருக்கும் துளசி டீச்சரை மனதார வாழ்த்துவோம். இதே போல் தொடர்ந்து எழுதி விரைவில் ஆயிரம் பதிவு தந்த அபூர்வ துளசி என்ற பட்டம் பெற எங்கள் வாழ்த்துக்கள் டீச்சர். படிக்கும் நீங்களும் பின்னூட்டத்தில் உங்க மரியாதையை செலுத்திடுங்க!
அடுத்தது நம்ம உஷாக்கா போட்ட பெண் பதிவர்கள் டாப் என்ற பதிவு! பெண் வலைப்பதிவர்கள் பத்தி உஷாக்கா எழுதின இந்த பதிவில் கொஞ்சம் ஓவராகவே அவங்க நல்லவங்க அப்படின்னு எழுதி இருந்தாங்க. அதிலிருந்து
அதை நம்ம பாணியில் நான் கொஞ்சம் கலாய்க்கப் போயி அந்த சமயத்தில் நம்ம இட்லிவடையார் போட்டு இருக்கும் எந்த பெண் பதிவர் டாப் என்ற பதிவையும் அதிலுள்ள பின்னூட்டங்களையும் பத்தி இப்படிப் பேசப் போக
கும்மி அடித்தல், அனாவசிய சச்சரவுகள், அனானி ஆட்டங்கள், வேண்டாத அரசியல் (பாலிடிக்ஸ்), பதிவில் இருக்கும் ஒற்றைச் சொல்லைப் பிடித்துக் கொண்டு ஜல்லி அடிப்பது இவை எல்லாம் பெண் வலைப்பதிவர்களிடம் அறவே இல்லை.
எனக்கு இன்னும் ஒரு சந்தேகம் உஷாக்கா, நீங்க இந்த ஒற்றுமை பத்தி எல்லாம் எழுதினதுனால உங்க கிட்ட கேட்கறேன். நம்ம இட்லி வடை இந்த பதிவு ஒண்ணு போட்டு இருக்காரு. அதுல பாருங்க வந்து இருக்கற எதிர்ப்பில் பெண்கள் எதிர்ப்புதான் அதிகம் இருக்கு. நமக்கு பிடிச்ச 5 பேரை சொல்லச் சொன்னா எதுக்குங்க இவ்வளவு எதிர்ப்பு? கொஞ்சம் விளக்குங்களேன்.நம்ம பிரேமலதாக்கா கன்னாப்பின்னான்னு டென்ஷனாகிட்டாங்க. அவங்க நம்ம கருத்துக்களை ஆணாத்திக்க கருத்துகள் என்ற ரீதியில் சொல்லப் போக, நானும் பதிலுக்கு வாயாட, கூட நம்ம தம்பி நாகை சிவா வந்து அவர் பங்குக்கு பிட்டைப் போட விவாதம் நல்லா களை கட்டுற நேரத்தில் உஷாக்கா தூங்கப் போயிட்டாங்க. போட்ட பின்னூட்டம் எல்லாம் தேங்கிப் போச்சு! அந்த பதிவில் 40 பின்னூட்டங்களுக்கு மேல போனதுனால இது ஒரு ஸ்பெஷல் விளம்பரம். எல்லாரும் இந்த ஆரோக்கியமான விவாதத்தில் பங்கெடுத்துக்கிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க மக்கள்ஸ்.
பரபரப்பான அந்த விவாதத்தில் இருந்து சில பகுதிகள்
இப்படி கோபம் உண்டுபண்ணிவிட்டுட்டுப் போற ஆணின் "ஸ்பெஷல்", மற்றும் "புத்திசாலித்தனமான" ஸ்பெஷல் குணங்களைக் கொண்ட இலவசம் மற்றும் சாத்தான்(குளத்தான்) இன்னும் வரபோகும் மற்றும்பல "the great"களும் நீடூழி வாழ்க என வாழ்த்துகிறோம்.
எல்லா சராசரி மனிதர்கள் கிட்ட இருக்கற குணங்கள் எதுவுமே பெண் பதிவர்கள் இடையே இல்லை அப்படின்னு உஷாக்கா சொன்னாங்க பாருங்க. அதுதான் கொஞ்சம் இடிச்சுது.
அதாவது போட்டி மனப்பான்மை ஆண்களுக்கே உரியதுன்னு சொல்ல வறீங்களா பிரேமலதாக்கா? நீங்களே இதை திரும்பி படிக்கும் போது உங்களுக்கு சிரிப்பு வரல?
இலவசம்,சாத்தான்(குளத்தான்), நீங்க ரெண்டுபேரும் MCP கிடையாதுன்னுதான் நினைக்கிறேன். ஆனா, சிலசமயம் "நல்லா இருங்க"ன்னு மட்டும் வாழ்த்திட்டுப் போற psychology தெரிஞ்சிருக்கணும்.
நார்மலா இருக்குறவங்க எல்லாரும், ஆம்பிள்ளையானாலும் சரி, பெண்பிள்ளையானாலும் சரி, சில நேரங்களில் சில இடங்களில், கும்மி, பாலிடிக்ஸ், வம்பு தும்பு எல்லாம் செய்யத்தான் செய்வாங்க. அதெல்லாம் இல்லை. அது ஆண்கள் மட்டுமே செய்வாங்க. பெண்கள் செய்ய மாட்டாங்கன்னு உஷாக்கா சொன்னதும், இப்போ நீங்க அதையே உங்க கன்க்ளூஷனா சொல்வதும்தான், முரணா இருக்கு. அதைச் சொல்ல வந்த எனக்கு நீங்க குடுத்த புத்திசாலி பட்டம் நல்லாவே இருக்கு.