இந்த வருஷ ஆரம்பமே தொடர் விளையாட்டுக்களா இருக்கு. முதலில் நம்ம பாபா வந்து போன வருஷம் எடுத்த படங்களில் உங்களுக்குப் பிடிச்ச படம் எது அப்படின்னு சொல்லுங்க அப்படின்னு
கூப்பிட்டாரு. அவரு கிட்ட டிமிக்கி குடுத்துடலாம் அப்படின்னு பார்த்தா பின்னாடியே நம்ம
வெங்கட்டும் வந்து படத்தைப் போடய்யான்னு மிரட்டிட்டுப் போயிட்டாரு. வெங்கட் எடுத்த படத்தைப் பார்த்தால் நமக்கு அவ்வளவு பிரமிப்பா இருக்கு. இப்படி எல்லாம் படம் எடுக்கிற பார்ட்டி வந்து நம்மளைக் கூப்பிடறாரே அப்படின்னு ஒரு யோசனை. அப்புறம் கமல் ரஜினி படத்துக்கே வடிவேலு தேவையா இருக்கே. அந்த மாதிரி இவங்க எல்லாம் விளையாடுற இடத்தில் நம்மளை ஊறுகாயா தொட்டுக்கறாங்க போல அப்படின்னு மனசைத் தேத்திக்கிட்டு துணிஞ்சு பதிவைப் போடலாமுன்னு முடிவு பண்ணிட்டேன்.
அப்புறமா நம்ம கிட்ட இருக்கும் படங்களை எல்லாம் பார்த்தா இப்படி பொதுவில் போடற மாதிரி எதுவும் பெருசா இல்லை. முதலில் நம்ம எடுக்கும் முக்கால்வாசி படங்களில் நம்ம குடும்பத்தார் பல்லைக் காமிச்சுக்கிட்டு இருக்காங்க. அவங்க இருக்கும் படத்தைப் போடும் அளவு நம்ம தமிழ் வலைப்பதிவுலகம் மேல நம்பிக்கை வரலை. அதனால அவை அனைத்தும் காலி. மீதி இருக்கும் கொஞ்சமே கொஞ்சம் படங்களில் சிலவற்றை ஏற்கனவே பல பதிவுகளில் போட்டாச்சு. அதனால போடாத படங்கள் அப்படின்னு பார்த்தா ரொம்பவே கொஞ்சம்தான் தேறுது. அதில் எனக்குப் பிடிச்சது இந்த படம்தான்.

இந்தப் படத்தை எடுத்தது நியூயார்க் நகரில் உள்ள ப்ராக்ன்ஸ்
மிருகக்காட்சி சாலையில் எடுத்தது. நாங்கள் சென்ற வேனிற்கால விடுமுறை நேரத்தில் வண்ணத்துப் பூச்சிகளின் சிறப்புக் கண்காட்சி ஒண்ணு வெச்சு இருந்தாங்க. ஒரு பெரிய கூடாரத்தின் உள்ளே விதவிதமான வண்ணத்துப் பூச்சிகள். நம் தோள் மேலே வந்து உட்காருது, காது அருகே படபடவென சிறகடிச்சுக்கிட்டுப் போகுது, சிறிதும் பெரிதுமாய், வண்ண வண்ணமாய் ஒரே பட்டாம்பூச்சிக் கொண்டாட்டம்தான். என் மகனைப் போலவே ஒரு இடத்தில் நிலைகொள்ளாத இந்த வண்ணத்துப்பூச்சிகளை படமெடுப்பது ஒரு சவாலாகவே இருந்தது. அங்கு சுட்டுத் தள்ளியவற்றில் எனக்குப் பிடித்தது இந்தப் படம்தான். இதில் பிற்தயாரிப்பு எதுவும் செய்யவில்லை.
அப்புறம் ஒத்த போட்டோ போட்டா வாஸ்து படி பதிவுக்கு ஆகாதாமே. அதுனால போன வருஷம் எடுத்த படங்களில் பிடித்தது இவை கூட. இது பத்தி முன்னமே
இந்தப் பதிவில் சொல்லியாச்சு. படங்களில் விசேஷம் என்னன்னா சுமார் 300 அடி உயரத்தில் அந்தரத்தில் ஊஞ்சலாடிக்கிட்டு இருக்கும் போது எடுத்த படங்கள். இவ்வளவு நல்லா வரும் அப்படின்னு எதிர்பார்க்கவே இல்லை.

அப்புறம் கடைசியா இந்த விளையாட்டு விளையாட இன்னும் பலரைக் கூப்பிடணுமாம். அதுல பாபா நாலு பேரை கூப்பிட்டு இருக்காரு. ஆனா அப்புறமா வந்த வெங்கட்டாகட்டும், அவர் கூப்பிட்டு வந்த
சீவிஆர் ஆகட்டும் தலைக்கு மூணு பேரைத்தான் கூப்பிட்டு இருக்காங்க. அதிலேயும் இந்த சீவீஆர் நான் நினைச்ச ரெண்டு பேரை கூப்பிட்டுட்டாரு. அதனால நானும் மூணு பேரோட நிறுத்திக்கறேன். இவங்க எல்லாருமே படம் போட்டு பட்டையைக் கிளப்பறவங்கதான். அதுனால நல்ல பதிவா வரும் அப்படின்னு நம்பறேன். வந்து படத்தைப் போடுங்க அப்படின்னு நான் கூப்பிடும் மூவர்
- வைத்தியர் இராமநாதன்
- தல கைப்புள்ள
- மாதாமகி துளசி ரீச்சர் (அப்பாடா, நானும் 33% ஒதுக்கீடு குடுத்துட்டேன்!)
டிஸ்கி: அடுத்த பதிவும் ஒரு தொடர் பதிவுதாங்க. அதுக்கு வெயிட்டீஸ்!