Thursday, November 29, 2007

கலைஞரே, உம்ம வேலையைப் பார்த்துக்கிட்டு போம்!

நார்மலா, நம்ம பதிவுலகில் சில டாபிக்குகள் எல்லாம் உடனே பல பேர் பதிவு போடற மேட்டராத் தெரியும். அது போலவே அந்தந்த சீசனில் நிறையா பேரு அந்த தலைப்பில், அந்த விஷயத்தைப் பத்தி பதிவு போடுவாங்க. இந்த தலைப்பா இருந்தா அதுக்குப் பதிவு போட ஒரு குழு, அந்தத் தலைப்பா இருந்தா அதுக்கு வேற ஒரு கும்பல் என எழுதப்படாத விதிகளும் உண்டு. இதில் ஆதரவுப் பதிவுகள், எதிர்ப்புப் பதிவுகள் எல்லாம் வரும்.

இன்னைக்கு அந்த மாதிரி ஒரு பரபரப்பான நாளா இருக்கும் அப்படின்னு எதிர்பார்த்தேன். அப்படி எதுவும் இல்லாததால நானே இந்தப் பதிவைப் போடறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.

இப்போ ஒரு முறை தலைப்பைப் படிச்சுக்குங்க. உடனே பிளட் பிரஷர் எல்லாம் ஏறி என் மூதாதையர் பத்தியும் என் பனியனுக்குள் நெளிவது பத்தியும் பேசத் தயாராகும் முன்னரே சொல்லிடறேன். இது நான் சொன்னது இல்லை. இதைச் சொன்னது மலேசியாவின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான நஸ்ரி அசீஸ் என்பவர்.

மலேசியாவில் சில கோரிக்கைகளை முன் வைத்து ஹிந்திராப் என்ற அமைப்பின் மூலம் ஒரு போராட்டம் நடைபெற்றது. இந்த கோரிக்கைகள் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. இந்த பதிவும் அது பத்தி இல்லை. ஆனால் போலீஸர் கண்ணீர் புகை குண்டுகள் வீசிக் இக்கூட்டத்தினரைக் கலைத்தது பற்றியும், கிட்டத்தட்ட 250 பேரை கைது செய்தததையும் தமிழக முதல்வர், இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதி தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த இந்தக் கூட்டதினரை நடத்திய விதம் குறித்த தம் வருத்தத்தைத் தெரிவித்து அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த மலேசிய அமைச்சர் அசீஸ் 'Tamil Nadu Chief Minister M Karunanidhi should "lay off" ' எனச் சொல்லி இருக்கிறார். கிட்டத்தட்ட உங்க வேலையைப் பார்த்துக்கிட்டுப் போங்க எனப் பொருள்படும்படி பேசி இருப்பது மிகவும் மரியாதை குறைவாகவே கருத வேண்டியிருக்கிறது. இது மலேசியா. அவரது இடம் தமிழகம். அங்கே இருக்கும் பிரச்சனைகளை அவர் கவனித்தால் போதும் எனப் பொருள்படும் படியாகப் பேசி இருப்பதாக செய்திகள் சொல்கின்றன.

தமிழர்களைப் பற்றி கவலைப்பட தமிழகத்தின் முதல்வருக்குத் தகுதி கிடையாதா? ஒரு மூத்த அரசியல்வாதியை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநிலத்தின் முதல்வரை இப்படித் தரகுறைவாக விமர்சித்திருப்பதற்கு நாம் அனைவரும் நம் கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும். இது குறித்து மலேசியாவில் இருக்கும் பதிவர்களோ, தமிழகத்தில் இருக்கும் பதிவர்களோ பதிவிட்டிருப்பதாகத் தெரியவில்லை. மற்ற விஷயங்களுக்கு கொந்தளித்து எழுபவர்கள் இதற்குச் சும்மா இருப்பதன் பின்புலம் புரியவில்லை. மீண்டும் சொல்கிறேன் மலேசிய அமைச்சரின் பேச்சு கண்டிக்கப் பட வேண்டியது. இதற்காக இந்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்போராட்டம் குறித்து அமெரிக்கா வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் எந்த நாட்டு குடிமக்களும் தம் அமைதியான முறையில் தம் கருத்துக்களை வெளியிடும் உரிமை இருப்பதாக கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்பு ஒரு முறை வெளிநாட்டு வாழ் இந்தியர்களைப் பற்றி நான் எழுதிய பொழுது, வேறு ஒரு நாட்டின் குடிமக்களாக மாறிவிட்ட பின் அவர்கள் இந்தியர்கள் இல்லை என கருத்துத் தெரிவித்தவர்கள், இன்று மலேயா வாழ் தமிழர்களுக்காக கலைஞர் குரல் கொடுத்ததைத் தவறென்று சொல்வார்களா எனத் தெரியவில்லை.

45 comments:

said...

வழக்கம் போல நானே முதலில் பின்னூட்டிக்கறேன். இன்னிக்கும் எம்புட்டு அடி வாங்கணுமோ...

said...

என்னங்க கொத்ஸ் இப்பிடி சொல்லிட்டீஙக யாரும் பதிவு போடலன்னு? ஏற்கனவே போட்டுட்டேன் இங்கே

http://thanjavuraan.blogspot.com/2007/11/blog-post_26.html

. என்ன பன்றது? அசினுக்கு சுளுக்கு, ரஜினிக்கு குஞ்சு வலின்னு பதிவு போட்டா, எல்லாரும் பாப்பாங்க. இதெல்லாம் படிச்சு சூடு சொரணை ஏதாவது வந்துடிச்சின்னா? (மனதின் வலியின்பால் எழுதிய மொழிகளுக்கு மன்னிக்கவும்)

said...

வாங்க தஞ்சாவூரான். நீங்க தடியடி பத்தி எழுதி இருக்கீங்க. இப்போ நான் படிச்சுட்டேன்.

ஆனா கலைஞரைப் பத்திப் பேசினதுக்குத்தான் யாரும் பதிவு போடலையேன்னு சொன்னேன்.

அப்புறம் இப்போ இவ்வளவு உணர்ச்சி வசப்படறீங்களே, அவங்களுக்கு ஒரு கஷ்டம் அப்படின்னு மனசு வலிக்குதுன்னு சொல்லறீங்க; ஆனா அன்னிக்கு அவங்க சாதனைக்கு நாம சந்தோஷப்பட்டா மட்டும் தப்புன்னு சொன்ன ஞாபகம். அதான் ஏன்னு புரியலை!

said...

மலேசிய அமைச்சர் சொன்னது கண்டிக்கத்தகுந்தது அல்ல. 'உண்மையிலேயே' நெஞ்சார கவலைபடுகிறாரா என்பது வேறு விஷயம் என்றாலும் தமிழர்களை பற்றி கவலைப்பட தமிழகத்தின் முதல்வருக்கு தகுதி உண்டு. ஆனால் மலேசியர்களை பற்றி கவலைப்பட?

மலேசியாவில் மலேசிய வாழ் தமிழர்கள் - இவர்கள் மலேசிய குடிமகன்கள் என்பது முக்கியம் - தாங்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதை கண்டித்து 'தடையை மீறி' ஊர்வலம் சென்றதர்காக போலீஸ் தடியடி கண்ணீர்புகை வகையறாக்களை கொண்டு அடக்கியிருக்கிறது. அவர்களின் போராட்டத்தில் உள்ள நியாயம், அதை மலேசிய அரசு நசுக்க எடுத்த அநியாய முயற்சிள் எல்லாம் தனி விவாதத்துக்குறியது. இங்கு நாம் பேசுவது 'தமிழினத்தலைவர்' என்ற சுயபிரகடணத்தோடு மலேசியாவை கண்டிக்க இந்தியாவை வலியுறுத்தும் கருணாநிதி பற்றியது.

சமீபத்தில் சென்னையில் 'தடையை மீறி' ஊர்வலம் செல்ல முயற்சித்ததற்காக வைகோ, நெடுமாறன் உட்பட்ட "தமிழர்களை" தமிழக முதல்வர் சிறையிலடைத்த விதம் பற்றி தம் வருத்தத்தை கருணாநிதி கடிதமாக எழுதுவாரா? இதுபோன்று எத்தனையோ முறை கூட்டத்தை கலைக்க தமிழக அரசின் காவல்துறை தடியடி பிரயோகமும், கண்ணீர் புகைகுண்டும் வீசியிருக்கிறதே அதற்கெல்லாம் யார் யாருக்கு கடிதம் எழுதுவது?

நிறைய கடிதங்களை போலவே இக்கடிதமும் ஒரு அடையாள விஷயம் மட்டுமே, இதனால் பத்து பைசாவுக்கு பிரயோசனம் இருக்காது என்பதை உணர்ந்தே கருணாநிதி எழுதியிருப்பார். பொதுவாக யாரும் அவர் கடிதங்களை பொருட்படுத்துவதில்லை. இது தெரியாது மலேசிய அமைச்சர் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். அவ்ளோதான் மேட்டர்.

said...

இதுதான் உண்மையாவே திட்டமிட்ட வெளிநாட்டுச் சதிங்கிறது. அம்மா எவ்ளோ குடுத்தாங்களோ அந்த மினிஸ்டருக்கு? வேற என்ன டெண்டர் மேட்டர் உள்ளே இருக்கோ? அது தெரியாம தஞ்சாவூரான் காலை உடுறாரு.

இது ரஷ்யாவுல குடியேறி உரிமம் பெற்று ரஷ்யர்களாக வாழ்பவர்களுக்கு தெரிந்து என்ன ஆகப்போகிறது. அவுங்களுக்கு தமிழ் தெரியும். யார் எங்கே என்ன பேசினா என்னா சொல்லுங்க.

said...

//கூட்டதினரை நடத்திய விதம் குறித்த தம் வருத்தத்தைத் தெரிவித்து அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்//

//கிட்டத்தட்ட உங்க வேலையைப் பார்த்துக்கிட்டுப் போங்க எனப் பொருள்படும்படி பேசி இருப்பது மிகவும் மரியாதை குறைவாகவே கருத வேண்டியிருக்கிறது//

அனுமதி பெற்ற பின் தான் போராட்டம் நடந்ததா, இல்லை கலைஞர் அது போன்ற போராட்டங்களை இங்கு அனுமதித்தாரா என்பதெல்லாம் வேறு விடயம்!

ஆனால் ஒரு நாட்டில் நடக்கும் அரசியல் நிகழ்வைப் பற்றி, இன்றைய உலகில் யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம்!
கலைஞர் மலேசிய அரசைத் தாக்கிப் பேசியதாகத் தெரியவில்லை!

அப்படி இருக்க, உன் வேலையைப் பார்த்துக்கிட்டு போ என்று மலேசிய அமைச்சர் பேசியது தவறே! கண்டனங்கள்!

said...

தமிழக முதல்வரின் கடிதம் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரியவில்லை.(பிற்காலத்தில் நான் கடிதம் எழுதினேன் என்று சொல்லிக்கொள்ள வாய்ப்பாக அமையும்) இவரது ஆட்சிதானே மத்தியில் நடக்கிறது. கடிதத்துடன், தொலைபேசியில் பேசி அவசரத்தை தெரிவிக்க வேண்டியதுதானே. தனது பேரனுக்கு பதவி வாங்கும் போது இருந்த அவசரம் மற்ற விஷயத்தில் தெரியவில்லையே. என்? கடமைக்கு கடிதமா?

மலசிய அமைச்சருக்கு இந்தியர்களை பற்றிய புரிந்துணர்வு எப்படி உள்ளது என்பதை அவருடைய பேச்சு சொல்கிறது. மிகவும் கண்டிக்கத்தக்கது.

நட்புடன்,
ஜோதிபாரதி.
http://jothibharathi.blogspot.com

said...

கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுவிட்டார் போலும்.
இந்த போராட்டத்தை டிவியில் பார்த்தேன்,மலேசிய கொடி வைத்திருந்தவர்கள் மேலேயே தண்ணீர் பாச்சி,கண்ணீர் குண்டு போட்டு.. வித்தியாசமாக இருந்தது.

said...

கொத்ஸ்,

நீங்க ஏதோ பழைய புண்ணுக்கு மருந்து தேடுறீங்க போல..

ஒரு நாட்டு விவகாரகத்தில தலையிடலாமின்னா, காஷ்மீர் விவகாரத்தில, நாம மத்தவங்களை அனுமதிக்கனும்..

மு.க கருத்து கடிதம் எழுதுவதற்கு முழு உரிமையிருக்கு. அவர் எழுதியிருப்பது, இந்திய பிரதமருக்கு.. மலேசிய மந்திரிகள் மந்திரித்து விட்டாமாதிரி பேசுவது புதிது அல்ல.

என்ன காரணத்துக்கு நீங்க பதிவு எழுதினீங்களோ தெரியலை..

ஆனா, அந்த மந்திரியயைக் கண்டிச்சுன்னு, என் தார்மீக ஆதரவு உண்டு.

என் கண்ணுல ஏதோ கோளாறு, வர வர எல்லாருமே, சோ, சு.சாமி மாதிரியே தெரியுறாங்க

said...

http://idlyvadai.blogspot.com/2007/11/blog-post_3760.html

ஏம்பா, இந்த விஷயத்தில் இட்லி வடை எழுதினா எல்லாம் ஒத்துக்க மாட்டீங்களோ?

said...

போராட்டத்தை நடத்திவரும் மலேசியவாழ் இந்திய வம்ச மக்களுக்கு என்ன செய்வது என்பதுதான் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு எங்கள் இனத்தலைவரை இழிவு படுத்த்துவது எப்படி என்று கிளம்பி சர்ச்சையை உருவாக்குவது பிரச்னையைத் திசைதிருப்பி அரசியல்வாதிகளின் ஆதாயத்திற்குத்தான் வழி வகுக்கும்.
இதற்கு கண்டனம் நடத்தி பெரிய ஆதரவு திரட்டி, அதன் விளைவாக மலேசிய அரசியல்வாதி தமிழக முதல்வரிடம்
மன்னிப்பு கோரினால் நாமெல்லாம் வெற்றி பெற்றதாக
பெருமிதப்பட்டுக் கொண்டு அங்கே மலேசியாவில் இந்தியர்களின் போராட்டம் எதற்கு என்று கேட்டறியக் கூட மறந்துவிடுவோம்.

said...

ப்ரியா விடுங்கய்யா

said...

நான் ஏதாவது சொல்லி, என் அம்மாவின் பதிவிரததனத்தை எவனாவது சொல்லி எங்கம்மா 70 வயசிலும் செருப்பை தண்ணில நனச்சிகிட்டு வந்து அவனை அடிக்க !!! ஏம்ப்பா நான் பின்னூட்டம் போட மாட்டேன்!!!

said...

நானெல்லாம் இப்ப முழு தகுதி பிலாக்கர் ஆயிட்டன்ல!!

said...

உங்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன்.

said...

நானெல்லாம் இப்ப முழு தகுதி பிலாக்கர் ஆயிட்டன்ல//

நட்டு அப்பா, நீங்க எங்க தேறப்போறீங்க? என்னமோ உங்கம்மாவை சந்திக்கு இழுப்பவர்கள் பெயரும், முகவரியும் தந்தாப் போல
பேசுறீரூ :-)

said...

//ஆனா கலைஞரைப் பத்திப் பேசினதுக்குத்தான் யாரும் பதிவு போடலையேன்னு சொன்னேன்.

அப்புறம் இப்போ இவ்வளவு உணர்ச்சி வசப்படறீங்களே, அவங்களுக்கு ஒரு கஷ்டம் அப்படின்னு மனசு வலிக்குதுன்னு சொல்லறீங்க; ஆனா அன்னிக்கு அவங்க சாதனைக்கு நாம சந்தோஷப்பட்டா மட்டும் தப்புன்னு சொன்ன ஞாபகம். அதான் ஏன்னு புரியலை!//

திரு.கருணாநிதி மற்றுமில்லை, எல்லா தமிழகத் தலைவர்களும், இந்தியத் தலைவர்களும் ஒன்று சேர்ந்து கண்டனத்தை த் தெரிவிக்கவேண்டும். அதே சமயம், சின்ன பிள்ளைத் தனமா பேசுற மலேசிய அமைச்சர்கள் கொஞ்சம் பொறுப்போடு பேசவேண்டும்.

கொத்ஸய்யா, உங்க முந்தைய பதிவோட இத ஒப்பிடக் கூடாது. இந்திய வம்சாவழியினர் சாதனை செய்தால், பாராட்ட வேண்டும்தான். இல்லன்னு சொல்லலே. அதுக்காக, ஓவரா தூக்கி வச்சுகிட்டு ஆடக் கூடாது என்பதுதான் என் கருத்து. தமிழ்நாட்டுல, ஏன் இந்தியாவுல சாதன செஞ்ச ஒருத்தன்/ஒருத்தி (இந்தியக் குடிமகனா இருக்கட்டும் இல்ல, திருவண்ணாமலையில மரம் வச்சுகிட்டு இருக்கிற அமெரிக்கனா இருக்கட்டும்) சாதாரணமா போய் அமெரிக்க அதிபரையோ, அட ஒரு சாதாரண மேயரையோ சந்திக்க முடியுமா? அமெரிக்காவுல உள்ள மீடியாக்கள் அட்லீஸ்ட், ஒரு 10 செகண்ட் ஒதுக்குவானுங்களா?

ஓவர் கவரேஜ் கொடுக்கவேணாம்னுதான் சொல்றேன். அதே சமயம், என்னதான் இந்தியக் குடியுரிமையை பல்வேறு காரணங்களுக்காக விட்டுக் கொடுத்தாலும், அவர்களுக்கு என்று ஒரு இடர் வரும்போது, மனது கலங்கத்தான் செய்யும். அது, இனம், நாடு, மொழி சார்ந்த பாசம்!

said...

//இதுதான் உண்மையாவே திட்டமிட்ட வெளிநாட்டுச் சதிங்கிறது. அம்மா எவ்ளோ குடுத்தாங்களோ அந்த மினிஸ்டருக்கு? வேற என்ன டெண்டர் மேட்டர் உள்ளே இருக்கோ? அது தெரியாம தஞ்சாவூரான் காலை உடுறாரு.//

ஓ... கத இப்பிடி வேற போவுதா? எனக்கு 10% வரலங்ற விசயத்த உங்ககிட்டேயும் சொல்லிட்டனா, இளா?

சரி, நான் ஒன்னும் டார்கெட் இல்லயே இந்தப் பதிவுக்கு? :)

said...

சரி, நான் ஒன்னும் டார்கெட் இல்லயே இந்தப் பதிவுக்கு? :)
**

appa yaaru thaan target..sollungalen..thelvia

said...

இது எல்லாம் இருக்கட்டும்!

நீங்க குஷ்புக்கு ஆதரவா? இல்லை எதிர்ப்பா?

அதை சொல்லுங்க முதல?

said...

உலகத் தமிழர் தலைவராக கலைஞர் ஆகிவிடுவதைப் பொறுக்காமல்தான் மலேசிய அரசாங்கம் இப்படி லாவணி பாடுகிறதோ என்ற ஐயம் எழும்பாமல் இல்லை. அவர்கள் சட்டைக்குள் என்னவெல்லாம் நெளியுதோ?

மேலும் சில கேள்விகள்:

1. அமெரிக்காவும் கலைஞரும் ஒரே பக்கத்தில் நிற்கிறார்களே, இடதுசாரிகள் என்ன முடிவெடுப்பார்கள்?

2. மலேசிய சிங்கை பதிவர்களிடமிருந்து இன்னும் ஒரு விரிவான பதிவையும் காணோமே?

3. ராஜ் பட்டேலிடம் நுண்ணரசியலைக் கண்டவர்கள் பதில் என்ன?

said...

கடிதம் எழுதுவது புதுசா என்ன நம் முதல்வருக்கு.

கடிதம் எழுதியதில் ஏதும் தவறு இல்லை என்பது தான் என் கருத்து. அதே போல் மலேசிய அமைச்சர் எங்கள் நாட்டு விவகாரத்தில் தலையீட வேண்டாம் என்று சொன்னது அவர் பார்வையில் அது சரியே. என்ன கொஞ்சம் நாகரீகமான வார்த்தையில் சொல்லி இருக்கலாம்.

said...

ஐயப்பன் பத்தின பதிவுக்குப் பின்னூட்ட்டமே வரலையே?? ஹிஹிஹி, வேறே மாதிரிக் கேட்டிருக்கேன் பாருங்க! அதான் இதுக்கு பதில், வர்ட்ட்டாஆஆஆ??????

said...

அதென்ன புதுசா நிக்நேம் எல்லாம் கேட்டிருக்கீங்க, இனிமேல் தான் ஒண்ணைத் தேடணும் நான்!!!! :D

said...

எரியிற வீட்டிலே பிடுங்குன வரைக்கும் உங்களுக்கு லாபம்..

பினாத்துங்க...பினாத்துங்க...

//*பினாத்தல் சுரேஷ் said...
உலகத் தமிழர் தலைவராக கலைஞர் ஆகிவிடுவதைப் பொறுக்காமல்தான் மலேசிய அரசாங்கம் இப்படி லாவணி பாடுகிறதோ என்ற ஐயம் எழும்பாமல் இல்லை. அவர்கள் சட்டைக்குள்
என்னவெல்லாம் நெளியுதோ?*//

யார், யார் எப்ப எப்ப பதிவு போடனுமின்னு ஏதாவது கோட் ஆப் பதிவுலகம் இருக்குன்னு தெரியாமப் போச்சே..இல்லை..நீங்க பதிவேடு வச்சிருக்கீங்களோ என்னமோ..

நெளியுதான்னு கேட்டுறுவாங்களோ என்று, குற்ற உணர்வு ஆட்டுதோ..பாரமா இருந்தா எறிஞ்சுறுங்களேன் அதை..

ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதுச்சாம்..இது நல்லா இல்லை..

கருணாநிதிக்கு அவமாணமின்னூ, இவனுங்க மூதுகை சொறிஞ்சாங்களாம்

நேர்ல பார்த்தா தான் தெரியும் நூல்..ஆனால், இப்போ எல்லாம், எழுத்திலே தெரியுதாம்.


//*2. மலேசிய சிங்கை பதிவர்களிடமிருந்து இன்னும் ஒரு விரிவான பதிவையும் காணோமே?*//


//*என் கண்ணுல ஏதோ கோளாறு, வர வர எல்லாருமே, சோ, சு.சாமி மாதிரியே தெரியுறாங்க*//

ரீப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்

said...

இவரு கடிதம் எழுதிட்டா முடிஞ்சுதா? (அது என்னய்யா இன்னும் கடிதமே எழுதறீங்க. ஒரு இமெயிலோ குறுந்தகவலோ தட்டிவிடலாமே).

சிங்-க கனிமொழி அரசியல் க்ராஜுவேஷனுக்கு வரவைக்கிற அளவுக்கு கீர்த்தி இருக்கு. ஆனா மக்கள் பிரச்சனைனு வந்துட்டுதுன்னா உடனே நான் கடிதம் போட்டேன், போஸ்டல் டிபார்ட்மெண்ட் சதி செஞ்சு கடிதத்த தொலைச்சிட்டாங்கனு அழுது புலம்பவேண்டியது. கேக்குறவன் கேனப்பயலா இருந்தா..

ஆமா அமெரிக்கா என்னாவோ அறிக்க விட்டிருக்கே.. அதுக்கு ஏன்பா இந்த "பிக் பிரதர்" அகம்பாவம்? சும்மா பொத்திகிட்டு இருக்கச் சொல்லி நம்ம கம்மூனிஸ்டுங்கோ/வலையுலக செ குவாருங்கோ அறிக்கை விடக்காணோமே? போர் முரசு கொட்ட இன்னும் காலம் வர்லியா?

அப்புறம் மலேசியாவுல நடக்குறது முசுலீம்-இந்து பிரச்சனைனா இலங்கைல நடக்குறது இந்து-புத்தம் பிரச்சனையா இல்லியானு ஆராச்சும் செகூலாரிஸ்டுங்கோ ஆராய்ச்சி பண்ணிச் சொல்லுங்கப்பா.

said...

உள்ளேன் (ஏதோ என்னால முடிஞ்சது)

said...

//*என் கண்ணுல ஏதோ கோளாறு, வர வர எல்லாருமே, சோ, சு.சாமி மாதிரியே தெரியுறாங்க//

அதென்னமோ உண்மைதான் TBCD. அப்பால எல்லாத்தையும் பாத்துக்கலாம், முதல்ல முத்திரை குத்திரலாம்னு தோணுதோன்னுதான் தோணுது.

//யார், யார் எப்ப எப்ப பதிவு போடனுமின்னு ஏதாவது கோட் ஆப் பதிவுலகம் இருக்குன்னு தெரியாமப் போச்சே..// அப்படி ஒரு கோடும் இல்லை சாமி.. துக்கம் வந்தா போடக்கூடாதுன்னுதான் கோட் இருக்கா மாதிரி தெரியுது!

//நெளியுதான்னு கேட்டுறுவாங்களோ என்று, குற்ற உணர்வு ஆட்டுதோ..பாரமா இருந்தா எறிஞ்சுறுங்களேன் அதை..//

இருக்குதான்றதே முதல்ல ஒரு அசம்ஷன்.. அது குற்ற உணர்வாங்கறது இன்னொரு அசம்ப்ஷன்.. இந்தக்கோட்டையில மூணாவதா பாரமா இருக்குதான்னு கட்டறீங்க பாருங்க கோட்டை... அங்க நிக்கறீங்க நீங்க!

//ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதுச்சாம்..இது நல்லா இல்லை..
\கருணாநிதிக்கு அவமாணமின்னூ, இவனுங்க மூதுகை சொறிஞ்சாங்களாம்

நேர்ல பார்த்தா தான் தெரியும் நூல்..ஆனால், இப்போ எல்லாம், எழுத்திலே தெரியுதாம்.
//

:-) என்ன சொல்ல வரீங்கன்னு குன்சா மட்டும் புரியுது.. சிரிப்பு மட்டும்தான் வருது..

எல்லாத்துக்கும் காலம் பதில் சொல்லும்னு காத்திருக்காம சொந்தமா கொஞ்சமாச்சும் யோசிங்க
, ஊகிச்சே யார் ஆடு, ஓநாய்னு கெஸ்வர்க் எல்லாம் பண்ணா தமாசாத்தேன் முடியும்!

said...

எங்கப்பா தமிழன் தமிழன்னு சொல்லுறவங்க ஒருத்தனையும் கானோமின்னு இளக்காரம், ஒரு முத்திரை..அது விழுந்துட்டா, அப்பறம், மிச்சம் மீதி எல்லாம்..தானா வரும்.

//*பினாத்தல் சுரேஷ் said...

அதென்னமோ உண்மைதான் TBCD. அப்பால எல்லாத்தையும் பாத்துக்கலாம், முதல்ல முத்திரை குத்திரலாம்னு தோணுதோன்னுதான் தோணுது.
*//

இது பார்வைக் கோளாறு..

//*அப்படி ஒரு கோடும் இல்லை சாமி.. துக்கம் வந்தா போடக்கூடாதுன்னுதான் கோட் இருக்கா மாதிரி தெரியுது!*//

நெளிவதைப் பற்றி பேசியதாலே, பேசப்பட்டது. அதை பேசாதிருந்தால், இது வராமலே போயிருக்கும். அதை எடுத்துக் கொடுக்கிறீங்க பாருங்க..அங்க தான் நீங்க உக்கார்ந்துட்டீங்க.

//*இருக்குதான்றதே முதல்ல ஒரு அசம்ஷன்.. அது குற்ற உணர்வாங்கறது இன்னொரு அசம்ப்ஷன்.. இந்தக்கோட்டையில மூணாவதா பாரமா இருக்குதான்னு கட்டறீங்க பாருங்க கோட்டை... அங்க நிக்கறீங்க நீங்க!*//


இதுல உள்குத்துயிருக்கிற மாதிரி தெரியுது. புரியல்ல. தயவு செய்து விளக்கவும்.

//*எல்லாத்துக்கும் காலம் பதில் சொல்லும்னு காத்திருக்காம சொந்தமா கொஞ்சமாச்சும் யோசிங்க*////

ஆடு நனையுறப்போ, சப்புக்கொட்டிக்கிட்டே அழுகிறது, ஆடுவா இருக்க முடியும்...லாஜிக் இடிக்கிதே..ரொம்ப யோசிச்சி பினாத்துவீங்க..சீ சீ..எழுதறவங்க..சொல்லுங்களேன்.

//*ஊகிச்சே யார் ஆடு, ஓநாய்னு கெஸ்வர்க் எல்லாம் பண்ணா தமாசாத்தேன் முடியும்!*//


நிற்க..இந்த மறைமுக பேச்சு எனக்கு பிடிபடல...

தமிழர்கள் ஒடுக்கப்பட்டால், அதற்கு என் கண்டங்கள். தமிழர்களுக்கு என் தார்மீக ஆதரவு. நீங்க எந்த நிலை என்று தெளிவு படுத்த இயலுமா.

இது நான் எழுதியிருக்கும் பதிவு..

TBCD பார்வை : "மலேசிய விவகாரமும், தமிழர்களின் பலவீனமும் !"- உன்மை என்ன...?

said...

மலேசியாவுல அடி வாங்கினா மட்டும் கட்தாசி எழ்துற கலீஞரூ ஏன்பா தெக்குல தெனமும் உசுர உடுறாங்களே அவுங்களுக்காக எயுதல? எயுத வேணாம், பொடா எதுக்கு? இல்ல இன்னாத்துக்கின்னேன்

said...

மலேசியாவுல போராட்டம் பண்ணினவங்க எல்லாம் அந்த நாட்டு பிரஜைகள்தானே? இந்திய/த.நா பிரஜைகளா?.. இல்லையே. அந்த நாட்டுக்குள்ள நடக்கிற பிரச்சினைக்கு இவர் மட்டும் ஏன் குரல் குடுக்கனும்? ஓட்டு வாங்கவா? இவருக்கு இது தேவை இல்லாத மேட்டர். சரி மலேசியாவுல வாழும் இந்தியா வம்சா வழியினருக்காக குரல் குடுத்திருக்காருன்னு சொன்னா.. அந்த அமைச்சர் பேசினதுல என்ன தப்பு? அந்த பிரஜைகளே மதத்தை அடியா வெச்சிதான் போராட்டமே பண்ணி இருக்காங்க.. இவ்ளொ குழப்பத்திலேயும்.. இவர் குரல் குடுக்க அவரு வேலை பாருன்னு சொல்ல என்ன நடந்துச்சு..நாம அடிச்சிகிட்டதுதானே? வாழ்க தமிழர் ஒற்றுமை..இந்திய பிரஜைகளின் ஒற்றுமை..

said...

இளா,

கேட்பது சுலபம். தார்மீக ஆதரவு வேண்டி விரைவில், அக்குழு உறுப்பினர்கள்,விரைவில் இந்தியா வருகை தருவார்கள். அவர்கள் அனைத்து தமிழ் அரசியல் தலைவர்களையும் சந்திப்பார்கள்.

திக்கின்றி இருக்கும் அவர்களுக்கு, நல்ல வழிகாட்டியாக நம்மவர்கள் இருக்க முடியுமானால், அவர்களுக்கு மகிழ்ச்சி.

கலைஞர் கடிதம் எழுதியதில் அரசியல் என்றால், இருந்துட்டுப் போகட்டும். என்ன காரணத்துக்காவேண்டியும் இருக்கட்டும். அவரின் ஆதரவு, அனைத்துலக ஆதரவு இப்போது அவர்களுக்கு தேவை. உலகின் கவனம் வேண்டி நடத்தப்பட்ட போராட்டம். அதை பெற்றியிருக்கிறது.

இன்னும் அவர்கள் மலேசியர்களாக நடத்தப்படவில்லை என்று நீங்கள் அறிவீர்களா.

எவனோ, உங்களை/மற்றவர்களையோ, எதுக்கோ கும்மியதற்கு இப்போது, புண்ணுக்கு புனுகு தடவுவது போல் தெரிகிறது.

கலைஞர் ஏன், தெற்கே நடப்பது பற்றி பேச வில்லை என்றால், அது தனிப்பதிவுல பேசலாம். இல்லை அது பற்றி நிறையவே பேசப்பட்டியிருக்கிறது. திசை திருப்பி என்ன சாதிக்கப் போகின்றீர்கள்.

மகிழ்ச்சியிலே பங்கெடுத்துக்காதவர்கள் கூட துக்கத்திலே, இனைவார்கள். அது தமிழர் பண்பாடு. தமிழர்களுக்கு அது இயல்பானது.


என் பதிவு படியுங்க..அப்பறம், மதம் பத்தி பேசலாம்.

//*ILA(a)இளா said...
மலேசியாவுல அடி வாங்கினா மட்டும் கட்தாசி எழ்துற கலீஞரூ ஏன்பா தெக்குல தெனமும் உசுர உடுறாங்களே அவுங்களுக்காக எயுதல? எயுத வேணாம், பொடா எதுக்கு? இல்ல இன்னாத்துக்கின்னேன்

November 30, 2007 4:16 PM


ILA(a)இளா said...
மலேசியாவுல போராட்டம் பண்ணினவங்க எல்லாம் அந்த நாட்டு பிரஜைகள்தானே? இந்திய/த.நா பிரஜைகளா?.. இல்லையே. அந்த நாட்டுக்குள்ள நடக்கிற பிரச்சினைக்கு இவர் மட்டும் ஏன் குரல் குடுக்கனும்? ஓட்டு வாங்கவா? இவருக்கு இது தேவை இல்லாத மேட்டர். சரி மலேசியாவுல வாழும் இந்தியா வம்சா வழியினருக்காக குரல் குடுத்திருக்காருன்னு சொன்னா.. அந்த அமைச்சர் பேசினதுல என்ன தப்பு? அந்த பிரஜைகளே மதத்தை அடியா வெச்சிதான் போராட்டமே பண்ணி இருக்காங்க.. இவ்ளொ குழப்பத்திலேயும்.. இவர் குரல் குடுக்க அவரு வேலை பாருன்னு சொல்ல என்ன நடந்துச்சு..நாம அடிச்சிகிட்டதுதானே? வாழ்க தமிழர் ஒற்றுமை..இந்திய பிரஜைகளின் ஒற்றுமை..*//

said...

TBCD..



நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான். ஜாதி/மதம் இழுக்காம அரசியல் பண்ணினாதான் சாதிக்க முடியும். அது கலைஞரால் மட்டுமே முடியும். காரணம் மத்திய அரசின் குடுமி தலைவர் கையில். கலைஞரை வேலைய பார்த்துட்டு போன்னு சொன்னா நம்மாள என்ன பண்ண முடியும்? ஏன்னா இது அவுங்க நாட்டு பிரச்சினை. நேரு தெளிவா எழுதி கையெழுத்து போட்டு/வாங்கி இருக்காரு. அதாவது தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பில(9வது படிச்சதா ஞாபகம். அதாவது அடுத்தவர் நாட்டின் உள்நாட்டு அரசியலில் அயல் நாடு தலையிடக்கூடாதுன்னு).
கடைசியா ஒன்னு சொல்றேன்.. அதுவும் உங்க வார்த்தையில கடுமை தெரியறதால(நான் பதிவுல எல்லாம் சண்டை போடுற ஆள் இல்லை).
தமிழருக்கு நாம் தான் ஆதரவு தரனும், நாமே தரலைன்னா வேற யாரு தருவாங்க.

//புண்ணுக்கு புனுகு தடவுவது போல் தெரிகிறது// அது எனக்கு தேவை இல்லாத வேலை..


வேணுமின்னா ஒன்னு சொல்லட்டுங்களா? என்ன நடக்குமின்னு.. ஒன்னும் நடக்காது. 3 வாரம் பேசுவாங்க.. அப்புறம் வேற டாபிக் வந்துரும். அவுங்களுக்கும் நமக்கும். :)

said...

நண்பரே,

//மகிழ்ச்சியிலே பங்கெடுத்துக்காதவர்கள் கூட துக்கத்திலே, இனைவார்கள். அது தமிழர் பண்பாடு. தமிழர்களுக்கு அது இயல்பானது//.

துக்கத்துல தான் பங்கெடுத்துக்குவாங்க. ஆனா துக்கம்னா கொஞ்சம் பொணம் விழணும்; கொஞ்சம் பெண்களுக்காவது ஏதாவது ஆகணும். மத்தபடி பேண்ட் சட்டையோட ஊர்வலம் போய் தடியடி வாங்கறதெல்லாம் சினிமா ஷூட்டிங் மாதிரி தான் தமிழர்களுக்கு.

said...

பிரச்சனையயை கிளப்பிவிட்டுட்டு அமைதியா இருக்காரே கொத்ஸ்..ரொம்ப விவரமங்க

இளா, நீங்க இலங்கையயையும், கலைஞருக்கு தேவையில்லத வேலை என்று சொன்னதால், பழைய புண் என்று சொன்னேன். கடுமையா..இதுவா....சிரிப்பூ தான் வருது..


//*(நான் பதிவுல எல்லாம் சண்டை போடுற ஆள் இல்லை).*//

வேற எங்க போடுறீங்க எங்களால வரமுடியாட்டியும்,சிவிஆர், சர்வேசன் போன்றோரை வைத்து, படம் எடுக்கச் சொல்லி பார்ப்போம்ல...

//*தமிழருக்கு நாம் தான் ஆதரவு தரனும், நாமே தரலைன்னா வேற யாரு தருவாங்க. *//

இது கலக்கல்...ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்

//*வேணுமின்னா ஒன்னு சொல்லட்டுங்களா? என்ன நடக்குமின்னு.. ஒன்னும் நடக்காது. 3 வாரம் பேசுவாங்க.. அப்புறம் வேற டாபிக் வந்துரும். அவுங்களுக்கும் நமக்கும். :)*//

பிரச்சனை தீர்ந்துவிடாதே..மலேசியத் தமிழர்கள் போராடித் தான் ஆகனும். புலி வாலைப் பிடித்தாகிவிட்டாது..

நமக்கு பிரச்சனைகள் ஏதோ தீனி போல சொல்லுறீங்க..சரி தான் ஒரு வகையிலே..உடன்படுகிறேன்.

//*RATHNESH said...
நண்பரே,

துக்கத்துல தான் பங்கெடுத்துக்குவாங்க. ஆனா துக்கம்னா கொஞ்சம் பொணம் விழணும்; கொஞ்சம் பெண்களுக்காவது ஏதாவது ஆகணும். மத்தபடி பேண்ட் சட்டையோட ஊர்வலம் போய் தடியடி வாங்கறதெல்லாம் சினிமா ஷூட்டிங் மாதிரி தான் தமிழர்களுக்கு.*//

நாசூக்காக நமக்கு சுரணை கம்மியாகிடுச்சுன்னு சொல்லுறீங்க..
:(((

said...

TBCD,
/இதுல உள்குத்துயிருக்கிற மாதிரி தெரியுது. புரியல்ல. தயவு செய்து விளக்கவும்./

பெரிய உள்குத்து எல்லாம் ஒண்ணும் இல்ல சார்.. உங்களோட முதல் அசம்ப்ஷன் -- பாரமா இருந்தா தூக்கிப் போட்டுடுங்கன்னு சொன்னீங்களே -- இருக்கு, பாரமா இருக்கு, நெளியுதுன்னு உங்க கிட்டே வந்து சொன்னேனா நான்?

//ஆடு நனையுறப்போ, சப்புக்கொட்டிக்கிட்டே அழுகிறது, ஆடுவா இருக்க முடியும்...லாஜிக் இடிக்கிதே..ரொம்ப யோசிச்சி பினாத்துவீங்க..சீ சீ..எழுதறவங்க..சொல்லுங்களேன்.//

இது சூப்பர் லாஜிக் சார். அழறவங்கள்லே யாரு ஆடு யாரு ஓநாய்னு எப்படி முடிவு பண்ணுவீங்க? ராமநாதன் ஒரு போஸ்ட் போட்டார் - ரிஸர்வேஷன் டாக்டர்கிட்டே போவீங்களான்னு.. அதில ஒரு கேள்வி கேட்டிருந்தாரு, ரிஸர்வேஷன் டாக்டர்னு எப்படி முடிவு பண்ணுவீங்கன்னு -- அந்தக் கேள்விதான் ஞாபகம் வருது. எப்படி அழறது ஓநாய்தான்னு முடிவு பண்றீங்க? எதாச்சும் கோட், கைட்லைன்ஸ் வச்சிருக்கீங்களா?

//தமிழர்கள் ஒடுக்கப்பட்டால், அதற்கு என் கண்டங்கள். தமிழர்களுக்கு என் தார்மீக ஆதரவு. நீங்க எந்த நிலை என்று தெளிவு படுத்த இயலுமா. //

நான் எந்த நிலைன்னு கேக்கணும்னு இப்பவாவது தோன்றிதற்கு நன்றி. மேலே மேலே கெஸ்வர்க் செய்து, இவன் அழறான் பாரு.. ஓநாய்தான், இவனுக்கு பாரமா இருக்குன்னு எல்லாம் கோட்டை கட்டாம..

இரண்டுபக்கமும் ஓரளவேனும் நியாயம் இல்லாமல் ஒரு போராட்டமும் கிடையாது. இந்தப் போராட்டத்தின் நியாயங்களை எனக்குத் தெரிந்த அளவில் சீர்தூக்கிப் பார்க்கும்போது, நானும் போராடும் இந்திய / தமிழ் வம்சாவளியினர் கட்சிதான்.

தமிழர்கள் என்று அவர்களே ஐடெண்டிபை செய்துகொள்ள விரும்பாமல், ஹிந்துக்கள் என்று போராடுவதாக செய்தி. அவர்களுக்கு இப்படிப்போராடுவதில் வசதிகளும் அரசியலும் இருக்கலாம்.

அதே நேரத்தில் ஹிந்துக்கள் என்றால் ஆதரிப்பதில் பிரச்சினைகள் வரக்கூடும் என்று தமிழர்பிரச்சினை என்று வசதியாகப் பெயர்சூட்டிக்கொண்டுஉடனடியாக தமிழர் குலத் தலைவன் வேஷங்கட்டப் புறப்படும் அரசியல்வாதிகளை நையாண்டி செய்வதிலும் எந்தத் தப்பும் இல்லை என்பதும் என் கட்சிதான்.

என்ன செய்ய, if you are not with us, you are against us என்ற பாடம் எனக்கு இன்னும் சரியான அளவில் ஏறவில்லை

தமிழர் பிரச்சினைக்காக போராடுபவரைக் கிண்டல் செய்பவன் பாரமாக முதுகில் அரித்துக்கொண்டிருப்பவன் மட்டும்தான் என்ற அவசர லாஜிக்குகளும் எனக்குப் புரிவதில்லை.

said...

அதர் ஆப்ஷனில் வந்திருக்கும் பினாத்தல் சுரேஷும், ஒரிஜினல் என்று எண்ணி பதில் அளிக்கிறேன்.

பி.சு,

இங்க ஏன் ராஜா, நெளியுதோன்னு எடுத்துக் கொடுக்கிற....

இதை என்ன காரணத்துக்காக சொன்னீங்க..

நீங்க நடுநிலையா..

அய்யகோ..நடுநிலை பொங்கி வழிகிறதே..

///உலகத் தமிழர் தலைவராக கலைஞர் ஆகிவிடுவதைப் பொறுக்காமல்தான் மலேசிய அரசாங்கம் இப்படி லாவணி பாடுகிறதோ என்ற ஐயம் எழும்பாமல் இல்லை. அவர்கள் சட்டைக்குள் என்னவெல்லாம் நெளியுதோ?///


இது நெளியுதுன்னு என்னை/எங்களை/அவங்களைச் சொன்னியே..இப்ப என்ன பண்ணுறேயின்னு தொனிக்கும் உங்கள் முதல் வரிக்கு சொல்லப்பட்ட வரிகள் அவை..எனவே உங்களுக்கு நெளியலையின்னா விட்டுடலாம்..

//*இது சூப்பர் லாஜிக் சார். அழறவங்கள்லே யாரு ஆடு யாரு ஓநாய்னு எப்படி முடிவு பண்ணுவீங்க? *//

ஹி..ஹி..அது தெரியாதா, ஒநாய், அழுதா வேற மாதிரி கேட்கும்..
அழுகும் போது...

திரவிடர்கள் ஓநாய்களை இனம் காண பழகிவிட்டார்கள்..

//*ராமநாதன் ஒரு போஸ்ட் போட்டார் - ரிஸர்வேஷன் டாக்டர்கிட்டே போவீங்களான்னு.. அதில ஒரு கேள்வி கேட்டிருந்தாரு, ரிஸர்வேஷன் டாக்டர்னு எப்படி முடிவு பண்ணுவீங்கன்னு -- அந்தக் கேள்விதான் ஞாபகம் வருது. எப்படி அழறது ஓநாய்தான்னு முடிவு பண்றீங்க? எதாச்சும் கோட், கைட்லைன்ஸ் வச்சிருக்கீங்களா?*//

ஏன் பிரிக்கனும், மருத்துவத்துறையின் பரிட்சையிலே, தேறி வருகிறவன் தகுதியான மருத்துவன் தான். அப்படி தான் பாட திட்டங்கள் இருக்கு.

ரிசர்வேஷன்ல் படிக்கிறவன் எல்லாம் மட்டமின்னு நீங்க நினைச்சா.. :((

//*நான் எந்த நிலைன்னு கேக்கணும்னு இப்பவாவது தோன்றிதற்கு நன்றி. மேலே மேலே கெஸ்வர்க் செய்து, இவன் அழறான் பாரு.. ஓநாய்தான், இவனுக்கு பாரமா இருக்குன்னு எல்லாம் கோட்டை கட்டாம..*//

மாறி மாறி கத்தவும் ,ஓநாய்கள் பழகிடுச்சோன்னு ஒரு ஐயம் தான்.

//*இரண்டுபக்கமும் ஓரளவேனும் நியாயம் இல்லாமல் ஒரு போராட்டமும் கிடையாது. இந்தப் போராட்டத்தின் நியாயங்களை எனக்குத் தெரிந்த அளவில் சீர்தூக்கிப் பார்க்கும்போது, நானும் போராடும் இந்திய / தமிழ் வம்சாவளியினர் கட்சிதான்.*//

நன்றி..

//*தமிழர்கள் என்று அவர்களே ஐடெண்டிபை செய்துகொள்ள விரும்பாமல், ஹிந்துக்கள் என்று போராடுவதாக செய்தி. அவர்களுக்கு இப்படிப்போராடுவதில் வசதிகளும் அரசியலும் இருக்கலாம்.*//

இது பற்றி எனது பதிவைப் பார்க்கவும்.

(.அப்பறம்..நீங்களும், அனுமானிக்கிறிங்க..இருக்கலாமின்னு..அதை நான் கண்டுக்கலை..ஏன்னா. நாம் இன்னும் அம்புட்டு வளரல..)

//*அதே நேரத்தில் ஹிந்துக்கள் என்றால் ஆதரிப்பதில் பிரச்சினைகள் வரக்கூடும் என்று தமிழர்பிரச்சினை என்று வசதியாகப் பெயர்சூட்டிக்கொண்டுஉடனடியாக தமிழர் குலத் தலைவன் வேஷங்கட்டப் புறப்படும் அரசியல்வாதிகளை நையாண்டி செய்வதிலும் எந்தத் தப்பும் இல்லை என்பதும் என் கட்சிதான்.*//

வேஷ்ங்கட்டி என்று எப்படி கண்டுப்பிடிக்கின்றீர்கள்..எனக்கு ஓநாய்களை அடையாளம் காணவும் அது உதவுமே...

//*என்ன செய்ய, if you are not with us, you are against us என்ற பாடம் எனக்கு இன்னும் சரியான அளவில் ஏறவில்லை*//

அப்படியா..அமீரகத்தில் இருந்து, அமெரிக்காவிற்கு போங்க..

//*தமிழர் பிரச்சினைக்காக போராடுபவரைக் கிண்டல் செய்பவன் பாரமாக முதுகில் அரித்துக்கொண்டிருப்பவன் மட்டும்தான் என்ற அவசர லாஜிக்குகளும் எனக்குப் புரிவதில்லை.*//

நூல் நெளிகிறது என்று சொன்னதற்கு வருத்தப்பட்டவர்கள், வருந்துபவ்ர்கள், கிடைத்த முதல் சந்தர்பத்தில், அதை சொல்லிக் காட்ட துடிப்பவர்கள் என்று நீங்கள் சொல்ல முடியும்மா..

எனக்கென்னமோ, அது நான் சொன்ன கூட்டமாத் தான் இருக்க முடியுமின்னு தோனுது..

நீங்க என்ன சொல்லுறீங்க..வேற கும்பலும் இருக்கா..

said...

//ஜாதி/மதம் இழுக்காம அரசியல் பண்ணினாதான் சாதிக்க முடியும். அது கலைஞரால் மட்டுமே முடியும்.//

:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))]

said...

கோலாரில் கொத்தடிமையாக கஷ்டப்படும் தமிழனின் துன்பத்தை கேட்க நாதியில்லை,இவர் கோலாலம்பூருக்கு போய்விட்டார்.

பேசாமல் மானாட மயிலாட பர்த்துக் கொண்டிருப்பதை விட்டு.....

said...

TBCD,
//இங்க ஏன் ராஜா, நெளியுதோன்னு எடுத்துக் கொடுக்கிற....

இதை என்ன காரணத்துக்காக சொன்னீங்க..

நீங்க நடுநிலையா..

அய்யகோ..நடுநிலை பொங்கி வழிகிறதே..//

நடுநிலை என்பது என்ன, எப்படிப் பொங்கி வழியும் என்பதை

//திரவிடர்கள் ஓநாய்களை இனம் காண பழகிவிட்டார்கள்..//

என்று, இனம் கண்டுவிட்டதாகசொல்வதும்,

//ரிசர்வேஷன்ல் படிக்கிறவன் எல்லாம் மட்டமின்னு நீங்க நினைச்சா.. :((//

என்று பதிவையோ, அதன் கருத்தையோ, அதில் உள்ளே இருக்கும் என் பின்னூட்டத்தையோ பார்க்காமலே (படிச்சுப் பாருங்க ராசா, எவ்வளவு டயமெட்ரிகலி ஆப்போசிட்டா முன்முடிவு எடுத்திருக்கோம்னு தெரியும்!)யோசித்து தீர்மானித்து முடித்துவிடும்.

உங்களிடம் வழக்காடி முடிவெடுக்கும் தேவை தற்போது எனக்கு இருப்பதாக நான் கருதாததால்,
நன்றி வணக்கம், மீண்டும் வேறிடத்தில் சந்திப்போம்.

said...

//எல்லாத்துக்கும் "காலம்" பதில் சொல்லும்னு காத்திருக்காம சொந்தமா கொஞ்சமாச்சும் யோசிங்க
, ஊகிச்சே யார் ஆடு, ஓநாய்னு கெஸ்வர்க் எல்லாம் பண்ணா தமாசாத்தேன் முடியும்!///

குட் உள்குத்து பெனாத்தலாரே...சக முதுகு சொறிதல்களை சிங்கிள் வேர்டுல அடிச்சீங்க.

said...

நல்ல பதிவு.

பல புதிய தகவல்களை அறிந்துகொண்டேன்.

அதற்கு மிக்க நன்றி.

said...

//நல்ல பதிவு.
பல புதிய தகவல்களை அறிந்துகொண்டேன்.
அதற்கு மிக்க நன்றி.//

மருத்துவர் பின்னூட்டத்தப் பாருங்க, ரொம்ப generic-ஆ இல்ல? ;-)

said...

எந்த ஒரு அரசும் போராட்டம் என்று வந்தால் அது கட்டுக்கடங்காமல் போவதற்குள் அடக்குவதற்கு முயற்சி செய்யத்தான் செய்யும். மலேசிய அரசும் இதைத்தான் செய்தது. ஆனால் செய்த விதம்தான் சரி இல்லை.

மலேசிய அமைச்சரின் பேச்சி வன்மையாகக் கண்டிக்கப் பட வேண்டிய ஒன்று. பதவியைத் தக்க வைத்துக் கொள்ள இப்படி எல்லாம் பேச வேண்டியதாக இருக்கிறது. எல்லாம் அரசியல்தான்.

அரசியலில் இதெல்லாம் ஜகஜமப்பா!

said...

தரக்குறைவான, ஆனால் தமிழில் தற்போது மிக இயல்பாக வழங்கும் Blogger மொழியில் சொன்னால், "ஓட்டை வாயா! உன் ஓட்டை வாயை மூடிக்கொள்" என்று மலேஷிய அமைச்சர் சொன்னதை மலேஷிய முஸ்லிம் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளதாகச் செய்திகள் சொல்லுகின்றன.
தமிழர்கள் என்பதற்குப் பதிலாக "இந்தியர்கள்" என்று தமிழினத்தலைவர் குறிப்பிட்டிருந்தால் நிலைமை வேறுவிதமாக மாறியிருக்கலாம்.