செய்தி 1 கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் அப்படின்னு சொன்னதை ரொம்பவே அக்கறையா எடுத்துக்கிட்டாங்க பிரிட்டனில் எஸ்ஸெக்ஸ் என்ற ஊரில் வாழும் காரியா தம்பதியினர். இவங்க இந்தியாவில் இருந்து இந்த ஊருக்கு வந்த பொழுது அருகில் கோவில் இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டாங்களாம். அதனால தன் வீட்டில் இருக்கும் அறை ஒன்றையே கோவிலா மாத்திட்டாங்களாம். மாத்தினது மட்டுமில்லாம, தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் அப்படின்னு யாரு வேணா இந்தக் கோயிலுக்கு வரலாம் அப்படின்னு சொல்லிட்டாங்களாம். இது வரை அப்படி வந்தவங்க எண்ணிக்கை எவ்வளவு பேர் தெரியுமா? அதிகமில்லை 50,000 பேர்தானாம்!! இதில் வந்தவங்களுக்கு இவங்க குடிக்க தேநீர் போட்டுக் குடுக்கறாங்களாம். இவங்க உடல்நிலை கொஞ்சம் சரியில்லாமல் போகும் வரை வந்தவங்களுக்கு சாப்பாடே உண்டாம். பல நாடுகளில் இருந்து பக்தர்கள் வந்து வழிபடும் இந்தக் கோவிலுக்கு வயசு 29 வருடங்கள்! மேலதிக தகவல்கள்
இங்கே!
29 வருஷமா வாழ்ந்தும் 50000 தான் ஹிட் ரேட்டாமே! இந்தக்கோயிலுக்கு வந்தவங்க, ஏறினவங்க, வழிபட்டவங்க மார்க்கெட்டிங் சரியாகப் பண்ணல போல!செய்தி 2 இந்தச் செய்தி டோக்கியோ நகரத்தில் இருந்து. இங்கு வசிக்கும் ஒருவர் தன் வீட்டில் உணவுப் பொருட்கள் காணாமல் போவது குறித்துக் கவலை கொண்டாராம். அதற்காக ஒரு புகைப்படக் கருவி ஒன்றினை அமைத்து அதன் படங்கள் தனது செல்பேசியில் வருமாறு அமைத்தாராம். அதில் எதோ நடமாட்டம் தெரியவே காவலர்களைக் கூட்டிக் கொண்டு தன் வீட்டிற்கு விரைந்திருக்கிறார். எல்லாக் கதவுகளும் மூடப் பட்டிருந்த வீட்டில் எங்கு தேடியும் யாரையும் காணவில்லை. கடைசியாக சாமான்கள் வைக்கும் அறையில் (எங்கள் ஊரில் குச்சில், பாவுள் என இரண்டு அறைகள் உண்டு!) ஒரு மேல்தட்டில் மூதாட்டி ஒருவர் பதுங்கி இருந்ததைக் கண்டுபிடித்தனராம். அந்த வீட்டின் உரிமையாளர் ஒரு நாள் வீட்டைப் பூட்டாமல் சென்ற பொழுது உள்ளே நுழைந்தவர் அங்கு சாப்பிட்டு, தூங்கி எழுந்து, குளித்து, வசித்து வந்திருக்கிறார். இப்படி அவர் அங்கு இருந்தது ஒரு வருடத்திற்கும் மேலாகவாம். மேலதிகத் தகவல்கள்
இங்கே!
இப்படிதான் ஒரு கதை சொல்லுவாங்க, டெல்லி சவுத் ப்ளாக்குல ஒரு புலி உள்ளே நுழைஞ்சு பல வருஷமா குமாஸ்தாங்களை அடிச்சு சாப்பிட்டுக் கிட்டிருந்ததாம், யாரும் கண்டே பிடிக்கலையாம்.. ஒரு நாள் டீ கொடுக்கற ஆளை அடிச்சு சாப்பிட்டுச்சாம், உடனே மாட்டிக்கிச்சாம்!செய்தி 3நான் நினைத்த நேரத்தில் நினைத்தது நடக்க வேண்டும் என்று பல வருடங்கள் தவம் இருந்த ஒரு அசுரன் வரம் கேட்பதை நாம் அம்புலிமாமா கதைகளில் கேட்டு இருக்கிறோம். இது உண்மையில் சாத்தியம் என்றால் எனக்குக் கீழ்பாக்கத்திற்கு பயணச்சீட்டு வாங்கி அனுப்புவதில் முனைப்பாக இருப்பீர்கள். ஆனால் இது இன்று சாத்தியமாகிவிட்டது என்பதுதான் உண்மை. புதரகத்தில் (வேற எங்க!) நடத்தப்பட்ட ஒரு பரிசோதனை ஒன்றில் குரங்குகளின் மூளையில் ஒரு கருவியைப் பொருத்தி அவை தமது சிந்தனையின் மூலமாக ஒரு செயற்கைக் கையை நகரச் செய்து உணவினைப் பெற்றுக் கொள்கின்றனவாம். உடல் செயலிழந்த நிலையில் இருப்பவர்களுக்கு தமது எண்ணங்களின் மூலமாக தமக்குத் தேவையானவற்றை நிறைவேற்றிக் கொள்ளச் செய்வதற்கு இது முதல் படியாம்.
இந்தச் செய்தியைப் படியுங்கள் அங்கு இருக்கும் நகர்படத்தைக் கட்டாயம் பாருங்கள்.
அதாவது, டெல்லியில இருக்கற செயற்கைக் கைய வச்சு சென்னைலே இருக்கற ஆளைக் கண்ட்ரோல் பண்ணி கர்நாடகா எலெக்சன்லே ஜெயிக்க முயற்சிக்கறது போல! அது சரி குரங்குக்காவது இது வொர்க் அவுட் ஆகுதே!செய்தி 4 நம்ம பசங்க நிறையா பேரு கண்ணுல தண்ணி வர வைக்கப் போகும் செய்தி இது. எகிப்து நாட்டில் கெய்ரோ நகரின் மிகப் பிரபலமான விடுதி கிராண்ட் ஹையாட் என அழைக்கப்படும்
இவ்விடுதி. இவ்விடுதியின் சொந்தக்காரரான அப்துல் அசீஸ் அல் ப்ராஹீம் என்பவர் மது அருந்துவது இஸ்லாமிய மத கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதால் இனி இவ்விடுதியில் மது பரிமாறப்படமாட்டாது என உத்தரவு போட்டு உள்ளார். அது மட்டுமில்லாது அங்கு இருந்து அனைத்து மதுபுட்டிகளையும் கழிவறையில் கொட்டச் சொல்லி விட்டார். அதனைச் செய்து முடிக்க ஒரு நாளுக்கும் மேல் ஆனதாம்!
எகிப்து இஸ்லாமிய நாடு என்பதால் இது சரி என்று ஒரு சாரரும் சர்வதேச விடுதிகள் நடத்தும் பொழுது அதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் இருப்பது தவறு, ஒரு விமானத்தில் செல்லும் பொழுது எப்படி ஒரு இஸ்லாமியருக்கு ஹலால் உணவு வழங்கப்படுகிறதோ அது போல் மேலை நாட்டவருக்கு அவருக்குத் தேவையானதைத் தருவது தவறில்லையே என மற்றொரு சாரரும் வாதிட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த முடிவை எடுத்தவர் சௌதி மன்னரின் உறவினர் என்பதால் சௌதி அரசு எப்படி அவர்களது முடிவுகளை எகிப்து நாட்டில் திணிக்கப் பார்க்கின்றனர் என்று வேறு ஒரு கோணம். எது எப்படி இருந்தாலும் கீழே கொட்டாமல் நம்ம பசங்களுக்கு அனுப்பி இருக்கலாம். இது பற்றிய பிபிசி செய்திக்குறிப்பு
இது.
இந்தத் தண்ணியால அங்க பிரச்சனை, அந்தத் தண்ணியால இங்க பிரச்சனை. அரசியலில் இதெல்லாம் தண்ணி பட்ட பாடுப்பா!செய்தி 5இரவின் மௌனத்தைக் கலைக்கும் துப்பாக்கிகளின் சத்தங்கள், அதனைத் தொடரும் அபாய சங்கின் ஒலி, இவைகளினூடே பெருத்த மூச்சுடன் ஓடும் மனிதர்களின் காலடி ஓசை. அந்த அமாவாசை இருளை அடித்து விரட்டி வி்டும்படியான தேடொளி. அதில் மாட்டிக் கொண்டவர்களின் கைகளில் விலங்கு மாட்டி அழைத்துச் செல்கிறது புதரக எல்லை ரோந்துப் படை. ஆனால் இது நடக்கும் இடத்தில் இருந்து புதரக எல்லை 400 மைல்கள் தொலைவு!
ஆம். வேலை வாய்ப்பும் நல்ல வாழ்க்கையையும் தேடி புதரகத்தினுள் உயிரைப் பணயம் வைத்து அத்துமீறி நுழைபவர்களில் மெக்ஸிகோ நாட்டினர்தான் அதிகம். அப்படி செய்வதற்கு முடியாதவர்கள் அதனை அனுபவிக்கவென்றே ஒரு பொழுதுபோக்குப் பூங்காவினைக் கட்டியுள்ளனராம். அங்கு நடக்கும் கூத்துதான் இது. மேலும் படிக்க இதோ
சுட்டி.
இதெல்லாம் பூங்காவுல நடக்குற விளையாட்டா? இங்க எல்லாம் பூங்கா நடத்துறதையே விளையாட்டாச் செய்யறாங்க. பாவம் பிபி ஸ்ரீநிவாஸ்.செய்தி 6சுவிஸ் கைக்கடிகாரத் தயாரிப்பாளர்களான ரோமெய்ன் ஜெரோம் என்ற நிறுவனத்தார் புதிதாக அறிமுகப்படுத்தி இருக்கும் கைக்கடிகாரத்தின் பெயர் "Day & Night". மூன்று லட்சம் டாலர்கள் ($300,000) விலை பெறும் இந்த கடிகாரத்தின் சுவாரசியமே இதில் நேரம் பார்க்க முடியாது என்பதுதான்! பூமியின் புவியீர்ப்பினைக் கொண்டு பகலா இரவா என்று மட்டுமே தெரிவிக்குமாம். இந்நிறுவனத்தாரின் மற்றுமொரு தயாரிப்பு, மூழ்கிப் போன டைட்டானிக் கப்பலில் இருந்து எடுக்கப் பட்ட எஃகில் செய்யப்பட்ட கடிகாரங்கள். நல்லா ஊரை ஏமாத்தறாங்கப்பா. எதுக்கும்
இதை ஒரு முறை படிச்சுக்குங்க.
ஆமாமாம், நம்ம ஊர்லே கூட ஒரு சோப்பு வித்தாங்க, சுத்தமான கங்கை நீர்லே தயாரிக்கப்பட்டதுன்னு.. மார்க்கெட்டிங் உலகத்துல இதெல்லாம் சாதாரணமப்பா!டிஸ்கி 1: புதசெவி என்றால் புன்னகை தரும் செய்திகளும் விவகாரங்களும் என்பது என் புரிதல். அதான் அங்க இங்க தேடிப் பிடிச்ச சில விஷயங்களை உங்களோட பகிர்ந்துக் கிட்டேன்.
புதசெவி - புதரகம் தயவு செய்து விலகவும் னு கம்யூனிஸ்டுகளும் போட்டுக்கொள்ளலாம், புண்ணாக்கு, தயவு செய்து விட்டுறுன்னு கொத்தனாரை நிறுத்தச் சொல்லலாம் - இதெல்லாம் விட்டுட்டு இந்த அவியலுக்குப் போயி டிஸ்கி!டிஸ்கி 2: நம்ம பெனாத்தலாரின் பூர்வீக கிராமம் விண்ணமங்கலத்தைச் சேர்ந்த ஜெயகணேஷ் என்பவர் குடிமுறை அரசுப் பணிக்கான தேர்வெழுதி (அதாங்க தமிழ்ல சிவில் சர்வீஸ் எக்ஸாம் என்று நாம் சொல்வது) அதன் தரவரிசையில் 156ஆக வந்து சாதனை படைத்துள்ளார். பல முறை தோல்வியுற்றாலும் விடா முயற்சியால் இந்த வெற்றியை பெற்ற அவருக்கு நம் வாழ்த்துகள். பொறியியல் படித்து பல வேலைகள் செய்துள்ள இவர் ஒரு சமயத்தில் ஒரு திரையரங்கின் கணினித் துறையில் வேலை செய்யும் பொழுது அங்குள்ள சிற்றுண்டிச்சாலையில் உணவும் பரிமாறியுள்ளாராம். ஆனால் இவரைப் பற்றிய செய்திக்குறிப்பிற்கு ரீடிப் தளம் தந்துள்ள தலைப்பு - "
The waiter who will be an IAS officer". எதற்காக இப்படி ஒரு பரபரப்புத் தலைப்பு? புதசெவி. பரபரப்புத் தலைப்பு வைப்பது என்ன தமிழ் வலைப்பூக்களின் தனி உரிமையா? எல்லாம் ஹிட் ரேட் ஏத்தத்தாம்பா -the Engineer who made an IAS Officer னு போட்டிருந்தா கொத்தனாராச்சும் போயி பாத்திருப்பாரா? வலையுலகில் இதெல்லாம் சகஜமப்பா.