Showing posts with label Rebus. Show all posts
Showing posts with label Rebus. Show all posts

Saturday, June 02, 2007

விடை தருவேன் நானே!!

விடுகதையா இந்த வாழ்க்கை என்ற கேள்வியோடு ஆரம்பித்த புதிர் விளையாட்டுக்கு இன்று விடை தருவேன் நானே என முடிவுரை! ரொம்ப நாள் கழித்து நான் போட்ட புதிர். வழக்கமாக வருபவர்கள் வருவார்களா? புதிதாக யாரேனும் வருவார்களா? புதிர் பதிவுகளுக்கு ஆதரவு இருக்குமா? என என்னை நானே பல கேள்விகள் கேட்டுக்கொண்டுதான் பதிவையே போட்டேன். எந்த விதமான மசாலாவு சேர்க்காமல் வீட்டுச் சமையல் போல் இருந்தால் அதற்கு உணவகங்களில் மதிப்பிருக்குமா என்ற பயம்தான்.

ஆனால் பாருங்கள் என்ன ஒரு ரெஸ்பான்ஸ். (இதற்கு எதிர்வினை என்பதைத் தவிர்த்து வேறு சொல்லே இல்லையா? அது ஒரு நெகடிவ் பீலிங்கை தருதே.) நான் உண்மையைச் சொல்லறேன். எதிர் பார்க்கவே இல்லை. அதிலும் நான் கஷ்டம் என நினைத்த கேள்விகளை சடாரென்று சிலர் கண்டுபிடித்தது, நான் உண்மையில் எல்லோரும் கஷ்டப்படுவார்கள் எனக் கணித்த குறிப்பில் அனேகமாக எல்லாரும் மாட்டியதிலும் ஆச்சரியம்தான்.

சரி முதலில் விடைகளைப் பார்த்துவிடலாம்.

அமடல்வா - ஆசையில் ஓர் கடிதம்
முதல் குறிப்பு. மிகவும் எளிதானது. அவா என்றால் ஆசை. மடல் என்றால் கடிதம். அவாவிற்குள் ஒரு மடல் இருப்பதால் ஆசையில் ஓர் கடிதம். (இலக்கணப்படி ஆசையில் ஒரு கடிதம்தானே வரவேண்டும்? அந்த படம் பேரு அதுதான். அதனால நானும் அதை அப்படியே கேட்டேன்.)

சகத்வன்திரம் - ஆயிரத்தில் ஒருவன்
சகத்திரம் என்றால் ஆயிரம். வடமொழியில் சகஸ்ரம் என்றால் ஆயிரம்தானே? இங்கிருந்து அங்க போச்சா அங்க இருந்து இங்க வந்ததான்னு தெரியாது. ஆனா ஆக மொத்தம் சகத்திரம் என்றால் ஆயிரம். ஆயிரத்திற்குள் ஒரு வன் இருப்பதால் ஆயிரத்தில் ஒருவன். மற்ற எல்லாவற்றையும் போட்ட பாலா இதற்கு கடைசி வரை கஷ்டப்பட்டதுதான் ஆச்சரியம்.

நெஞ்கல்யாணிசு - நெஞ்சில் ஓர் ராகம்
இது முதல் குறிப்பைப் போன்றதுதான். கல்யாணி என்று ஒரு ராகம் இருக்கிறதல்லவா? கல்யாணி என்றவுடம் பியர் ஞாபகத்துக்கு வந்து ஜில் ஜில் என எழுதியவர்கள் அனைவரும் என் பேரைச் சொல்லி நல்ல பியரா வாங்கிச் சாப்பிடுங்கள்.

விவரி - பச்சை விளக்கு
விவரித்தல் என்றால் விளக்குதல் என்றுதானே பெயர்? அந்த சிலேடையை வைத்துப் போட்ட குறிப்பு இது. பச்சைக் கலரில் எழுதப்பட்ட விளக்கு - பச்சை விளக்கு.

ஓவியலூசு - படகோட்டி
இது நெல்லை மாவட்டக்காரங்களுக்கு ரொம்ப எளிதாக இருந்து இருக்கும். (இல்லையா டுபுக்கு!) ஏனென்றால் இதில் முக்கியமான குறிப்பு அந்த வட்டார வழக்கில் இருக்கிறது. ஆனால் ரொம்பவே புழக்கத்தில் உள்ள சொல்தானே! ஓவியம் என்றால் படம். ஓவிய என்றால் பட. கோட்டி என்றால் பயித்தியம், லூசுதானே. ஆகவே பட கோட்டி.

சிரிப்ஏழைபு - ஏழையின் சிரிப்பில்
இது ரொம்ப நேரான விடைங்க. ஏழை in சிரிப்பில். சரிதானே ஜிரா.

தி ( போன வருடம் வந்த பிரகாஷ்ராஜ் படம்) - திருவிளையாடல் ஆரம்பம்
திருவிளையாடல் 'தி'யில்தானே ஆரம்பிக்கிறது!! இது கொஞ்சம் கடினமான குறிப்புதான். ஆனா போட்டவங்களைக் கேட்டுப் பாருங்க. அப்படி ஒண்ணும் புரியவே இல்லாத மாதிரி குறிப்பு எல்லாம் இல்லை. தனுஷ் படம் என்றால் நேராக பதில் வந்திருக்கும். அவ்வளவு எளிதான குறிப்பாகத் தர வேண்டாமே என்றுதான் இன்னும் பல படங்களில் நடித்து இருக்கும் பிரகாஷ்ராஜ் பெயரைப் போட்டது.

என்னால் முடியும் தம்பி (கமல் படம் இல்லை!) - உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன்
இருப்பதிலேயே இதுதாங்க கடினமான குறிப்பு. அதே மாதிரி பாலாவைத் தவிர வேறு யாருமே இதனைப் போடவில்லை. பாலா, Hats of to you!! கமல் படம் இல்லைன்னு சொல்லியாச்சு. ஆனாலும் கமல் படம்தான் அதிகம் விடையாக வந்தது. கமல் படம் பேரு என்னங்க? உன்னால் முடியும் தம்பி. இங்க என்ன சொல்லி இருக்கேன்? என்னால் முடியும் தம்பி. ஆக மொத்தம் 'உன்' இடத்தில் நான் 'என்'னைத் தந்திருக்கிறேன். எனவே உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன். சரியா? :)) இதில் தம்பி என்ற வார்த்தையைக் கொண்டு பரதன், இலக்குவன், ஸ்டாலின் எனப் பல தம்பிகள் வந்தார்கள்.

ஆ - உயிரெழுத்து
நேரான குறிப்புதான். அது ஏன் ஆ? ஏன் அ, இ, ஈ என எதையும் குறிப்பிடவில்லை? பெரிதாய் காரணம் ஒன்றும் கிடையாது. ஆவும் ஒரு உயிர்தானே? :)) இந்த சிலேடையும் அ.ஆவை வைத்து குழப்பலாம் என்ற ஒரு எண்ணமும்தான். அப்படிக் குழம்பியவர்களும் உண்டுதானே!

ஆலஜானிவாக்கர்யம் - குடியிருந்த கோயில்
நம்ம பசங்க எல்லாம் சரியாக விடை தந்த குறிப்பு இது! எளிதான குறிப்புதான். ஆலயம் என்றால் கோயில். இங்கு அதில் என்ன இருக்கிறது? ஜானிவாக்கர் என்ற குடி. ஆகவே குடியிருந்த கோயில்.

வேல் வினை - வேலுண்டு வினையில்லை
இருப்பதிலேயே எளிதான குறிப்பு இதுதான். வேல் இருக்கு வினை இல்லை. முதலில் நான் வெறும் வேல் என குறிப்பு தரலாம் என இருந்தேன். அப்படிச் செய்து இருந்தால் எத்தனை பேர் சரியாகப் போட்டு இருப்பார்களோ தெரியவில்லை. ஆனால் எல்லா குறிப்பையும் அதி கடினமாக ஆக்க வேண்டாமே என்றுதான் அந்த வினையையும் சேர்த்தது.

மீண்டும் மீண்டும் - மறுபடியும்
இதுவும் நேரான குறிப்பு. மீண்டும் என்றாலே மறுபடியும்தானே, எதற்கு இரு முறை தந்தது? மீண்டும் மீண்டும் என்ற சொல் வந்தால் அதுவே மறுபடியும் வருகிறது அல்லவா? :))

அட்சி இரதன் - கண்ணும் கண்ணும்
பழைய தமிழ் சொற்கள் இரண்டினைத் தந்து இருக்கிறேன். இரு சொற்களுமே கண் என்ற பொருள் கொண்டவை. மீன் போன்ற அட்சியைக் கொண்டவள் மீனாட்சி அல்லவா? இதைப் பத்தி டீச்சர் பதிவில் கொஞ்சம் வேறு மாதிரி பிரதீப் சொன்னதை ஞாபகமாக குறிப்பிட்டு இருந்தார் கதிரவன். இரதன் என்றாலும் கண்தான். ஆகவே கண்ணும் கண்ணும். இதுதான் விடை. அட்சியும் இரதனும் எனச் சொல்லி இருக்கலாம் எனச் சொல்லி இருந்தார் ஒருவர். ஆமாம், செய்து இருக்கலாம் தான்.

உயர்ளம்ந்த - உயர்ந்த உள்ளம்.
உயர்ந்த என்ற சொல்லின் உள் ளம் இருக்கிறது. ஆகவே உயர்ந்த உள்ளம். இதில் இல்லாத குழப்பங்களை எல்லாம் இருப்பதாக நினைத்துக் கொண்டு கஷ்டப்பட்டனர் சிலர்.

என்விதிகை - சட்டம் என் கையில்
போன குறிப்பு மாதிரிதான். விதி என்றால் சட்டம், அது என் கையில் உள்ளது. ஆகவே சட்டம் என் கையில்.

சஹானா ஆதி ரூபகம் - ராக தாளங்கள்
சஹானா ஒரு ராகம். ஆதி தாளம், ரூபக தாளம். இவை எல்லாத்தையும் ஒண்ணா எடுத்துப் போட்டா ராக தாளங்கள். அதாவது ஒரு இராகம் ப்ளஸ் அட்லீஸ்ட் இரண்டு தாளங்கள். வந்திருச்சா?

அஜீத் அடானா - ஒருதலை ராகம்
இது நம்மாளுங்க எல்லாரும் போடுவாங்கன்னு எதிர் பார்த்தேன். சிலவங்க மிஸ் பண்ணினது ஆச்சரியம்தான். 'தல' அஜீத். ஒரு தல. ஒருவரே தல! அடானா என்பது ஒரு ராகம். ஆக இது ஒரு தல ராகம் = ஒரு தலை ராகம்.

காததோழன்லி - நண்பனின் காதலி
நண்பன் in காதலி!! இதுக்கு மேல என்னத்தைச் சொல்ல?

இந்தியா - நம் நாடு
என்னங்க இதை போய் சிலவங்க மிஸ் பண்ணி இருக்கீங்க!! இந்திய நாடு நம் நாடு!!

இள இள இள (வேர்ட் ஆர்ட் - சர்க்கிள்) - இளவட்டம்
'இள' என்ற சொல்லால் ஆன வட்டம் ஆகவே இளவட்டம். இளமை ஊஞ்சல் ஆடுகிறது என சிலர் சொல்லி இருந்தார்கள். ஆனால் நான் எதிர்பார்த்த பதில் இளவட்டம்தான்.







வெற்றி பெற்றவர்கள்

இந்த போட்டியில் 20 குறிப்புகளையும் சரியாகச் சொன்ன ஒரே ஆள் நம்ம பாலராஜன் கீதா அவர்கள்தான். அவரை வெற்றியாளராக அறிவிப்பதில் எனக்கு பெரு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் பாலா. உங்களுக்கு இந்த போட்டியில் வெற்றி பெற்றதிற்காக ஒரு புதிர் புத்தகம் பரிசாகத் தரலாம் என இருக்கிறேன். நல்ல ரீபஸ் புத்தகமே தேடுகிறேன். அது கிடைக்கவில்லை என்றால் வேறு புதிர்கள் கொண்ட புத்தம் ஒன்றை அனுப்பி வைக்கிறேன்.

பல முறை நான் தொடர்ந்து தவறான விடை என்றாலும் மனம் தளராமல் மீண்டும் மீண்டும் (அதாவது, மறுபடியும்!) வந்து தொடர்ந்து முயன்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். மிக முக்கியமாக கோகிலவாணி கார்த்திகேயன் அவர்கள்.

கலந்து கொண்ட அனைவரின் மதிப்பெண்களை அறிந்து கொள்ள இங்கே சுட்டுங்கள்.

அனைவரும் இப்புதிர்களை ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். கலந்து கொண்ட அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

Wednesday, May 30, 2007

விடுகதையா இந்த வாழ்க்கை?!!

போன பதிவில் கமலைப் பத்தி சொல்லிட்டு அப்படியே விட்டுட்டா ரஜினி ரசிகர்கள் சும்மா விட்டுடுவாங்களா? அதான் ரஜினி பட பாட்டு ஒண்ணைத் தலைப்பா வெச்சாச்சு. விடுகதை அப்படின்னு சொன்ன உடனே சிவாஜி ரிலீஸ் டேட் பத்திதான் பதிவுன்னு தப்புக் கணக்குப் போடக் கூடாது. அதெல்லாம் பத்திப் பேச நான் என்ன கடவுளா என்ன? சரி போகட்டும்.

இந்தப் பதிவு வந்து ரீபஸ் என்ற புதிர் பற்றி. நான் வலையுலகில் வந்த புதுசுல எழுத மேட்டர் இல்லாம போட ஆரம்பிச்ச விஷயம் இது. நட்சத்திர வாரத்தில் கட்டாயம் போடணும் அப்படின்னு ஏகப்பட்ட பிரஷர். அதனால நம்ம ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்கி மீண்டும் ரீபஸ் பதிவு. அப்போ எல்லாம் நம்ம பக்கம் வராதவங்களுக்காக ரீபஸ் பற்றி ஒரு சிறு விளக்கம்.

ஒரு வார்த்தையையோ அல்லது ஒரு சொற்றொடரையோ பிரித்து, ஒவ்வொரு பகுதியையும் வேறொரு வார்த்தையாலோ அல்லது ஒரு படத்தாலோ குறிப்பிடுவதே ரீபஸ் புதிராகும். ரீபஸ் என்றால் லத்தீனில் பொருட்களின் மூலம் என்று அர்த்தமாம். பொருளாலும் (meaning) பொருட்களாலும் (things) ஒரு சொல்லையோ சொற்றொடரையோ குறிப்பிடுவதுதான் ரீபஸ். இதற்கு மேலும் ரீபஸ் பற்றி படிக்கவும் சில எடுத்துக்காட்டுகளைப் பார்க்கவும் இங்க போயிட்டு வாங்க.

ரீபஸ் அப்படின்னா என்னான்னு தெரிஞ்சுக்கிட்டீங்களா? இப்போ இந்த வாரத்து புதிர்கள். வழக்கம் போல விடைகள் எல்லாம் தமிழ்த் திரைப்படப் பெயர்கள்தான். அதுவும் இங்க இருந்து எடுக்கப்பட்ட பெயர்கள்தான். விடைகளை நீங்க பின்னூட்டமா போடுங்க. பின்னூட்டங்கள் உடனடியாக வெளியிடப்படாது. விடைகள் சரியா தவறா என்பது மட்டும் சொல்லப் படும்.

போன தடவை எல்லாம் ரொம்ப எளிதாக இருப்பதாக கலந்து கொண்டவர்கள் சொன்னதால் இந்த முறை புதிர்கள் கொஞ்சம் கடினமானவைதான். புதிதாகத் தெரிந்து கொள்ளலாம் என, சில புழக்கத்தில் இல்லாத சொற்களையும் இங்கு தந்துள்ளேன். சொல் ஒரு சொல் நண்பர்கள் மன்னிப்பார்களாக. ஆட்டத்தை ஆரம்பிப்போமா?

இனி புதிர்கள்
  1. அமடல்வா
  2. சகத்வன்திரம்
  3. நெஞ்கல்யாணிசு
  4. விவரி
  5. ஓவியலூசு
  6. சிரிப்ஏழைபு
  7. தி ( போன வருடம் வந்த பிரகாஷ்ராஜ் படம்)
  8. என்னால் முடியும் தம்பி (கமல் படம் இல்லை!)
  9. ஆலஜானிவாக்கர்யம்
  10. வேல் வினை
  11. மீண்டும் மீண்டும்
  12. அட்சி இரதன்
  13. உயர்ளம்ந்த
  14. என்விதிகை
  15. சஹானா ஆதி ரூபகம்
  16. அஜீத் அடானா
  17. காததோழன்லி
  18. இந்தியா

பழைய புதிர்ப் பதிவுகளைப் பார்க்க விரும்புவோர்க்காக அந்த சுட்டிகள்.

  1. புதிர்ப் பதிவு 1
  2. புதிர்ப் பதிவு 2
  3. புதிர்ப் பதிவு 3
  4. புதிர்ப் பதிவு 4

Friday, February 24, 2006

புதிரா? புனிதமா? - விடைகள்

புதிரா? புனிதமா? - இதை பட்டிமன்ற தலைப்பா வெச்சிருந்தா சாலமன் பாப்பய்யா (ஓ! இப்போ இவரை பத்தி பேசக்கூடாதோ) கூட தேவையே இல்லாம புதிரே அப்படின்னு ஏகோபித்த முடிவா இருந்திருக்கும். இப்படி அமோக வரவேற்பைக் கொடுத்த மக்களுக்கு நம் நன்றி. சும்மா 200 பின்னூட்டங்களுக்கு மேல் போட்டுத்தள்ளிய நண்பர்களுக்கு நன்றியோ நன்றி. இவ்வளவுக்கும் தொடர்ந்து புதிர்களை விடுவிக்க முயன்றதென்னவோ பத்து பேர்கள் கூட இல்லை. சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஜெயஸ்ரீ, கோ.இராகவன், சதீஷ், மதுமிதா, பெனாத்தல் சுரேஷ், கௌசிகன், பாலராஜன்கீதா - அவ்வளவுதான். அடிக்கடி வரும் பெரியவர் ஹரிஹரன்ஸ், சின்னவன், கைப்புள்ள, தியாக், சீமாச்சு போன்றவர்களைக் காணவே காணோம். என்ன விஷயமோ தெரியவில்லை.

இந்த விடைகளைப் போடாமல் சரியா தவறா என்று மட்டும் சொல்வது அனைவரையும் எல்லா புதிர்களையும் ஆர்வத்தோட போட வச்சுது. அதனால் இனி வரும் புதிர் பதிவுகளிலேயும் இந்த டெக்னிக் தொடரும். என்ன எனக்கு கொஞ்சம் வேலை ஜாஸ்தி. நம்ம பொதுஜனத்திற்காக இது கூடவா செய்ய மாட்டோம்.:)

ரீபஸ் போட்டு போரடிக்கிற மாதிரி ஒரு எண்ணம். அடுத்தது வேற மாதிரி புதிர் போடலாமா இல்லை புதிர்களை விட்டு விலகி வேற எதாவது போடலாமான்னு ஒரு யோசனை. நீங்க என்ன சொல்லறீங்க? உங்க ஐடியாவை சொல்லுங்க.

விடைகளைப் பார்ப்போமா


1. பில் கேட்ஸ், மெலிண்டா கேட்ஸ் - பணக்கார குடும்பம்
2. பராத்திரிகல் - பகலில் ஒரு இரவு
3. கள்ளா - திருட்டுப்பயலே
4. சிஅருணாச்சலம்தம்பரம் - சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி
5 .உனக்கு பா எனக்கு க - பாகப்பிரிவினை
6. மும்பை எக்ஸ்பிரஸ்ஸில் போகும்போது - இரயில் பயணங்களில்
7. எவரெஸ்ட், கன்சன்ஜங்கா, கே-2, லோட்சே, மக்காலு, சோ ஓயு, தவுளகிரி - ஏழுமலை
8. ரோஜா, செம்பருத்தி, வெள்ளை ரோஜா, சிகப்பு ரோஜாக்கள் - வண்ண வண்ண பூக்கள்
9. ஆகாயம் - நீல வானம்
10. சீதா இராமன் / இராதா கிருஷ்ணன் - ஜோடி / ஜோடிப் பொருத்தம்
11. மநீனம் - இதயத்தில் நீ
12. செல்பொன்னிவன் - மணிபிரவாளம் - பொன்னியின் செல்வன்

அப்புறம் அந்தக் கடைசி குறிப்பு

ஆவோ - இந்திரா

சில கருத்துகள்

  • முதல் குறிப்பிற்கு ஒரு வீடு இரு வாசல் அப்படின்னு நிறைய பேர் சொன்னாங்க. கேட்ஸ் என்றால் வாசல்கள்தானேன்னு விளக்கம் வேற. ஆனா படம் பேரு ஒரு வீடு இரு வாசல்கள் இல்லையே. அதனால இந்த பதிலை ஒத்துக்கொள்ளவில்லை.
  • திருட்டுப்பயலே ரிலீஸ் ஆகாததுனால ரொம்ப பேருக்கு தெரியலை. அந்த படம் ப்ரொடியூசர் நம்மளை தனியா கவனிக்கணும். கடைசியா பச்சோந்திதான் விடையை அவுட் பண்ணிட்டாரு.
  • பாகபிரிவினை குறிப்புதான் பெஸ்ட் அப்படின்னு அதிகம் பேர் சொன்னாங்க.
  • ஏழுமலை. இந்த குறிப்பை ஏழாவதாக வைத்ததும், உலகின் ஏழு உயரமான சிகரங்களை வரிசை படுத்தியதும் நான் செய்த சிறு நகாசு வேலைகள். உன்னிப்பாக இதையும் பார்த்து கண்டு பிடித்து விட்டார்கள் நம் மக்கள். அவர்களுக்கு ஒரு சபாஷ்.
  • அதே போல் எட்டாவது குறிப்பில் உள்ள மலர்கள் எல்லாமே வேறு திரைப்பட பெயர்கள். இதையும் கௌசிகன் கண்டுகொண்டார்.
  • பத்தாவது குறிப்பில் ஒரு பெண் பெயரும், ஒரு ஆண் பெயரும் கலந்து, வருவதும் ஒரு ஆணின் பெயராக கொடுத்ததில் பலபேர் வழி தவறிவிட்டனர்.

Friday, February 17, 2006

புதிரா? புனிதமா?

ரீபஸ் போடவேண்டாம் வேறு எதாவது எழுதுவோம் என்று நினைத்து எழுத உட்கார்ந்தேன். எல்லோரும் பக்தி சம்பந்தப்பட்டு எதாவது எழுதுகிறார்களே, நாமும் அதைப்போல செய்தாலென்ன என்று ஒரு நினைப்பு. அதெல்லாம் நமக்கு வருமா? அல்லது நமக்கு தெரிந்த புதிரையே போட்டுவிடலாமா என்று ஒரு தயக்கம். அதுதான் புதிரா? புனிதமா?

கடைசியில் இன்னுமொரு முறை புதிரே போட்டுவிடலாம் என முடிவு செய்ததால், மீண்டும் ஒரு புதிர் பதிவு. விதிமுறைகள் முந்தய பதிவிலிருந்து.

//என்னுடைய பகல் வேளையில் புதிரைப் போட்டால் கைபுள்ள கோபிக்கிறார். அவருக்காக என்னுடைய இரவுப் பொழுதில் போட்டால் சின்னவன் கோபிக்கிறார். இந்த குட்டிப் பசங்க தொந்தரவு தாங்க முடியலைங்க. ஆகையால் இன்னுமொரு விதிமுறை மாற்றம். உங்களிடமிருந்து வரும் பின்னூட்டங்கள் உடனடியாக பதிவு செய்யப்படமாட்டா. அதனைப் படித்து உங்கள் விடைகள் சரியா தவறா என்று நானிடும் பின்னூட்டங்கள் மட்டுமே உடனடியாக வரும். இதன் மூலம் சற்றே நேரம் கழித்து வருபவர்களும் விடைகளைத் தெரிந்து கொள்ளாமல் விடைகளை கண்டுபிடிக்க முயற்சி செய்ய ஏதுவாகும். ஓரளவு விடைகள் வந்தவுடன் அனைத்து பின்னூட்டங்களும் பதிவு செய்யப்படும். அவைகள் வரப்பெற்ற முறையிலே வெளியாகும் என்பதால் முதலில் போட்டவரின் பின்னூட்டமே முதலில் வரும். கவலை வேண்டாம்.

முக்கியம். இவ்விதி மாற்றம், பதில்களைக் கொண்ட பின்னூட்டங்களுக்கு மாத்திரமே பொருந்தும். கேலியாகவும், கிண்டலாகவும், வம்படிக்கும் நோக்கிலும் அளிக்கப்படும் பின்னூட்டங்கள் உடனடியாக வெளியிடப்படும். ஆகவே இவைகளை தனி பின்னூட்டங்களாக போடுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். (குமரன், வைத்தியர் - அதிக பின்னூட்டங்களுக்கு மேலும் ஒரு விதி!)

இந்த மட்டுறுத்தல் போடத்தான் வேண்டியிருக்கிறது, அதை சரியாக உபயோகப்படுத்திக் கொள்வோமே. சரி, புதிருக்குப் போவோமா?//

1. பில் கேட்ஸ், மெலிண்டா கேட்ஸ்
2. பராத்திரிகல்
3. கள்ளா
4. சிஅருணாச்சலம்தம்பரம்
5 .உனக்கு பா எனக்கு க
6. மும்பை எக்ஸ்பிரஸ்ஸில் போகும்போது
7. எவரெஸ்ட், கன்சன்ஜங்கா, கே-2, லோட்சே, மக்காலு, சோ ஓயு, தவுளகிரி
8. ரோஜா, செம்பருத்தி, வெள்ளை ரோஜா, சிகப்பு ரோஜாக்கள்
9. ஆகாயம்
10. சீதா இராமன் / இராதா கிருஷ்ணன்
11. மநீனம்
12. செல்பொன்னிவன் - மணிபிரவாளம்

அதெல்லாம் போட்டவங்க, இதை முயன்று பாருங்க. இது செம கடி. போட்ட பின் அடிக்கெல்லாம் கூடாது.

ஆவோ

Tuesday, February 14, 2006

ஏனிந்த சோதனை?

என்னடா இவன் வந்து பத்து பதிவு கூட போடலை அதுக்குள்ள ஒரு பதிவுக்கு 350+ பின்னூட்டம், இன்னுமொரு பதிவு 150+ பின்னூட்டம் வாங்கி ஓடுது. என்னடா இதுன்னு யார் யார் வயிறு எரிஞ்சாங்களோ தெரியல. அல்லது பிளாக்கரிலேயே இந்த அளவு பின்னூட்டம் வந்தது இல்லை. அதனால நம்ம பதிவு ஒரு Stress Testஆ போயி, அதுல பிளாக்கர் பெயில்லாச்சான்னு தெரியலை. :)

ஆனா நல்லா போயிகிட்டிருந்த பதிவுக்கு வந்ததய்யா சோதனை. திடீரென பின்னூட்டங்கள் தமிழ்மணத்தில் வெளிவருவது நின்று போயிற்று. பின்னர் இந்த பதிவிற்கு இருந்த தனிப்பக்கம் இயங்காமல் போயிற்று. இதனால் நம்மிடமிருந்த வெளியிடப்படாத பின்னூட்டங்கள் காணாமல் போயின.

நண்பர்கள் என்னென்னவோ செய்து பார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை. பதிவை எடுத்துவிட்டு பல முறை மீள்பதிவுகள் போட வேண்டியதாயிற்று. இரண்டு நாட்கள் தண்ணி காட்டிவிட்டு இன்றுதான் ஒரு நிலமைக்கு வந்திருக்கிறது.

இதானால் அசௌகரியத்திற்கு ஆளான அனைவருக்கும் எனது வருத்தங்கள். இது எனது கட்டுப்பாட்டை மீறிய ஒரு விஷயம். ஒன்றுமே செய்ய முடியவில்லை. இனி இது போல் நடக்காமலிருக்க வேண்டிக்கொள்வோம்.

ஜெயஸ்ரீ, சதீஷ், மீட்டிங்கை கட் அடித்து வந்த தியாக், கைப்பு எல்லாம் நல்ல சூப்பரா பதில் போட்டுக்கிட்டு இருந்த நேரம் இந்த மாதிரி ஆகி போச்சு. அவங்க போட்ட எல்லா பின்னூட்டத்தையும் போட முடியாம போச்சு. மன்னிச்சுக்குங்க.

ஞான்ஸு, ஒருத்தரு சொன்னா மாதிரி 'அரிசி மாவால கோலம் கோலம் போடலாம், ஆனா கோல மாவால அரிசி போட முடியுமா?' அந்த மாதிரி கொத்தனாரால வீடு கட்டலாம் ஆனா பிளாக்கர் கட்ட முடியுமா? 'தண்ணில கப்பல் போனா ஜாலி, கப்பல்ல தண்ணி போனா காலி' அது மாதிரி பிளாக்கருல நாம ஆடினா ஜாலி ஆனா நம்ம பிளாக்கரே ஆடினா காலி. இதெல்லாம் நல்லா புரிஞ்சுகிட்டேன்.

ஹரிஹரன்ஸ், நீங்கள் சொன்னது "இதோ இன்றிருக்கிறோம், நாளை மறைவோமென்றியற்கையின் நியதியை எடுத்துக்காட்டுகிறதோ, இந்த பின்னோட்டத்தின் கதி?". அது சரிதான். நாம் யாவரும் நிலையில்லை என்று சொல்ல விரும்பிய ஆண்டவனின் திருவிளையாடல்தான் இது என்று நினைக்கத் தோன்றுகிறது. (ரொம்ப பக்திப் பதிவுகள் படிக்கிற எஃபெக்ட்டா?)

அடுத்த பதிவு ரீபஸ்கள் இல்லைன்னு சொல்லியிருந்தேன். ஆனா போன ஆட்டம் ஒரு திருப்தியை தரல. அதனால மீண்டும் ரீபஸ் வந்தா ஆச்சரியப்படாதீங்க. போன தடவை விடைகளைப் போடாமல் சரியா தவறா என்று மட்டுமே போட்ட விதம் ஓக்கேவா? உங்க கருத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்.

இப்போ போன பதிவு புதிர்களோட விடைகள். எதாவது சந்தேகம் இருந்தாலோ அல்லது உங்க கருத்தையோ ஒரு பின்னூட்டமா தட்டி விடுங்க.

உலேரியி - உயிரிலே கலந்தது
ரோஜா தாமரை - இரு மலர்கள்
விளக்கு - பச்சை விளக்கு
மகோவில்னம - நெஞ்சில் ஓர் ஆலயம்
நியாயம் அன்பு - நீதிக்குப் பின் பாசம்
ம - முதல் மரியாதை (ரொம்ப கஷ்டப்பட்டுட்டீங்களே)டாக்டர் - நான் வாழவைப்பேன் (இதுக்கும்தான்)மதுரை பொன் - பாண்டி நாட்டு தங்கம்
பிராமி ந் தாதி - வண்ணத் தமிழ் பாட்டு (செந்தமிழ்ப்பாட்டு இல்லைங்க)
ஏழ்மை - வறுமையின் நிறம் சிகப்பு
பருத்தி - செம்பருத்தி
ஒற்றை சிங்கம் - தனிக் காட்டு ராஜா
ரெண்டு டஜன் காரட் - சொக்கத் தங்கம்
போர்ட்டர் - சுமைதாங்கி / தூக்குத்தூக்கி
ரெட் ரோஸ், வொயிட் ரோஸ், டேபிள் ரோஸ் - த்ரீ ரோஸஸ்

Monday, February 13, 2006

11. ஆதியும் நானும்

ப்ளாக்கர் செய்த குழப்பத்தினால், பழைய பதிவும் பின்னூட்டங்களும் காணாமல் போய்விட்டன. அதனால் இந்த மீள்பதிவு. பொறுத்தருள்க.
___________________________________________________________________
ஒரு புதிரைப் போட்டு, கொஞ்சம் பின்னூட்டம் வாங்கி, பின் வைத்தியரோட ஒரு விளையாட்டு விளையாடி நிறையா பின்னூட்டம் வாங்கி, பின் சின்னவன், ஹரிஹரன்ஸ் என்று எல்லாரும் புதிர் போட்டு, முக்கி முனகி 200 பின்னூட்டத்தை தாண்டி, அப்புறம் ரொம்ப ஸ்பீடா 350-ஐ தாண்டி போயிட்டு இருக்கு நம்ம முந்தய பதிவு. 50 பின்னூட்டம் கூட தாண்டியிராத நமக்கு 350+ பின்னூட்டம் வரை போனது ஆச்சரியமாகவே இருக்கு, ரொம்ப சந்தோஷமாகவும் இருக்கு. பின்னூட்டங்கள் போட்ட அனைவருக்கும் நம்ம நன்னி. பின்னூட்ட குலகுரு வைத்தியருக்கு ஒரு ஸ்பெஷல் நன்னி. விலாவாரியான நன்றி கூறலுக்கு பதிவு் பக்கம் போய் பாருங்க.

கொஞ்சம் விட்டு பிடிக்கலாம் என்று பார்த்தால், எப்போங்க அடுத்த பதிவுன்னு ஒரே தொந்தரவு. (தொந்தரவு பண்ணிய ரெண்டு மூணு பேருக்கு ரொம்ப நன்றி :) ). அதனால சூட்டோட சூடா அடுத்த பதிவு. இம்முறையும் ரீபஸ்கள்தான். இம்முறையும் திரைப்பட பெயர்கள்தான். மறுபடியும் சினிமாவா என்று கேட்பவர்களே - 'மறுபடியும்' சினிமாதானே! :). அதுதாங்க ஈசியா எல்லோரும் கண்டுபிடிக்கறாங்க. நமக்கும் போடரது சுளுவா இருக்கு. ஆனா அடுத்த பதிவு ரீபஸாக இருக்காது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்(ல்)கிறேன்.

வெள்ளியன்று இப்பதிவை போடுவதாக சொல்லியிருந்தேன். அதற்குள் வைத்தியரிடமிருந்து ஒரு மடல். வெள்ளியன்று வேண்டாமென்று. என்னவென்றால், நமது பதிவிற்கு வருகை தரும் பலருக்கும் அலுவலகத்தில்தான் இணைய வசதி இருக்கிறதென்றும், அதனால் வெள்ளி இரவு வெளியிட்டால் அதிகமானவர்களால் பார்க்க இயலாது போய்விடும். அதனால் பதிவை ஞாயிறு இரவிற்கு மாற்றும்படி உத்தரவு. மேலும் வாரக்கடைசியில் வீட்டு வேலைகள் அதிகம் இருக்கும். இணையத்தின் பக்கம் வரும் நண்பர்கள் எண்ணிக்கை குறைவு என்றும் ஒரு கருத்து. பின்னூட்டத்திலகம் அவர் கூறுவதை மறுக்க முடியுமா? (குமரன், அதிக பின்னூட்டம் வேண்டுமென்றால், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பதிவிடுவதை தவிர்க்கவும். நம் விதிகளில் சேர்த்துக் கொள்ளுங்கள்.)

ஆகவே இரு நாள் தாமதம். பல கோடி செலவில் வரும் ஆதியே ஒரு நாள் பிந்தி வரும் போது நம் பதிவு இரண்டு நாட்கள் பிந்தி வந்தால் பரவாயில்லையே. (அப்பாடா, தமிழ் படம் போல் சுற்றி வளைத்து தலைப்புக்கு தொடர்ப்பு கொடுத்தாயிற்று.)

என்னுடைய பகல் வேளையில் புதிரைப் போட்டால் கைபுள்ள கோபிக்கிறார். அவருக்காக என்னுடைய இரவுப் பொழுதில் போட்டால் சின்னவன் கோபிக்கிறார். இந்த குட்டிப் பசங்க தொந்தரவு தாங்க முடியலைங்க. ஆகையால் இன்னுமொரு விதிமுறை மாற்றம். உங்களிடமிருந்து வரும் பின்னூட்டங்கள் உடனடியாக பதிவு செய்யப்படமாட்டா. அதனைப் படித்து உங்கள் விடைகள் சரியா தவறா என்று நானிடும் பின்னூட்டங்கள் மட்டுமே உடனடியாக வரும். இதன் மூலம் சற்றே நேரம் கழித்து வருபவர்களும் விடைகளைத் தெரிந்து கொள்ளாமல் விடைகளை கண்டுபிடிக்க முயற்சி செய்ய ஏதுவாகும். ஓரளவு விடைகள் வந்தவுடன் அனைத்து பின்னூட்டங்களும் பதிவு செய்யப்படும். அவைகள் வரப்பெற்ற முறையிலே வெளியாகும் என்பதால் முதலில் போட்டவரின் பின்னூட்டமே முதலில் வரும். கவலை வேண்டாம். தயவு செய்து விடைகளில் புதிருக்கான எண்ணை குறிப்பிடவும்.

முக்கியம். இவ்விதி மாற்றம், பதில்களைக் கொண்ட பின்னூட்டங்களுக்கு மாத்திரமே பொருந்தும். கேலியாகவும், கிண்டலாகவும், வம்படிக்கும் நோக்கிலும் அளிக்கப்படும் பின்னூட்டங்கள் உடனடியாக வெளியிடப்படும். ஆகவே இவைகளை தனி பின்னூட்டங்களாக போடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். (குமரன், வைத்தியர் - அதிக பின்னூட்டங்களுக்கு மேலும் ஒரு விதி!)

இந்த மட்டுறுத்தல் போடத்தான் வேண்டியிருக்கிறது, அதை சரியாக உபயோகப்படுத்திக் கொள்வோமே. சரி, புதிருக்குப் போவோமா?
முந்தைய பதிவில் கடைசியாக பெரியவர் போட்ட புதிர் இன்னும் விடுவிக்க படவில்லை. அதையும் பாருங்கள். அப்படியே அவர் புதிதாகத் தொடங்கியிருக்கும் பதிவையும் பாருங்கள். (அவரின் உதவிக்கு ஒரு சிறிய கைம்மாறு இந்த விளம்பரம்.)

இனி புதிர்கள்...

1. உலேரியி
2. ரோஜா தாமரை
3. விளக்கு
4. மகோவில்னம
5. நியாயம் அன்பு
6. ம
7. டாக்டர்
8. மதுரை பொன்
9. பிராமி ந் தாதி
10. ஏழ்மை
11. பருத்தி
12. ஒற்றை சிங்கம்
13. ரெண்டு டஜன் காரட்
14. போர்ட்டர்
15. ரெட் ரோஸ், வொயிட் ரோஸ், டேபிள் ரோஸ்
___________________________________________________________________
பழைய பின்னூட்டங்கள்.

posted by இலவசக்கொத்தனார் at 6:47 PM on Feb 12 2006

இலவசக்கொத்தனார் said... வழக்கம் போல் முதல் பின்னூட்டம் நானே.
10:06 PM

இலவசக்கொத்தனார் said... ஜெயஸ்ரீ,
3. சரியான விடை
10:11 PM

இலவசக்கொத்தனார் said... ஜெயஸ்ரீ,4. நெருங்கிட்டீங்க. ஆனா இது இல்லை10, 11, 15 - சரியான விடைகள்
10:15 PM

இலவசக்கொத்தனார் said... ஜெயஸ்ரீ,
13, 14 - சரியான விடைகள். 14க்கு இன்னுமொரு விடை கூட இருக்கே. அதையும் முயலுங்களேன்.
10:20 PM

இலவசக்கொத்தனார் said... 2, 12 - சரியான விடைகள்.
ரொம்ப ஈசியாப் போச்சோ?
10:23 PM

இலவசக்கொத்தனார் said... 1. சரிதான்.
கலக்கறீங்க. த.தா.ன்னா சும்மாவா. :)
10:29 PM

ஹரிஹரன்ஸ் said... ஏம்மா ஜெயஸ்ரீ, கொத்தனார் புதிரை மட்டும்தான் விடுவிப்பீர்களோ? என் புதிர்கள் என்ன பாவங்கள் பண்ணிட்றோ?
10:30 PM

இலவசக்கொத்தனார் said... ஜெயஸ்ரீ, இதுவரைக்கும் நீங்க போட்டு முடிச்சது
1,2,3,10,11,12,13,14,15
போடவேண்டியது
4,5,6,7,8,9
நடத்துங்க.
10:32 PM

இலவசக்கொத்தனார் said... ஜெயஸ்ரீ,
9 - சரியான விடை.
ஆனாலும் நீங்க சூப்பருங்க.
10:34 PM

இலவசக்கொத்தனார் said... வாங்க சீமாச்சு
3. சரி4. ஜெயஸ்ரீக்கு சொன்னதே10. சரி11. சரி12. சரி6. மிக நல்ல முயற்சி. தனிமைன்னு சொல்லி இருக்கீங்க. அப்போ புதிர் மை என்றுதானே இருக்க வேண்டும். ஆனால் இது ம அல்லவோ.
தனிமைன்னு ஒரு படம் இருக்காங்க?
10:39 PM

இலவசக்கொத்தனார் said... மன்னிக்க வேண்டும் சீமாச்சு
உங்கள் விடையில் 12 என்றது 13-ம் கேள்விக்கு என்று நினைக்கிறேன். ஆனாலும் அது தவறான விடை.
10:44 PM

இலவசக்கொத்தனார் said... ஜெயஸ்ரீ,
5,8 - சரியான விடை.
ஹரிஹரன்ஸ் உங்களை ஏதோ கேட்கிறாரே. பதில் இல்லையா?
10:47 PM

Jayashree said... பெரியவரே,
அந்த பதிவில் பின்னூட்டங்கள் நீ......ண்டுகொன்டே போனதால் நடுவில் பதில் வந்து விட்டது என்று நினைத்தேன். அய்யா மன்னிக்க ...
10:52 PM

இலவசக்கொத்தனார் said... இராம்ஸூ, குருவே, நீங்கதானா. தூங்காம என்ன பண்ணறீங்க.
1,2,3,10,11, 15 - சரி4,12,14 - வேற பதில் குடுங்க.
10:55 PM

Jayashree said... 7. கலைஞன்
10:56 PM

இராமநாதன் said... 14. கூலி
11:00 PM

Jayashree said... )))
11:00 PM

இலவசக்கொத்தனார் said... ஜெயஸ்ரீ,7 தப்புங்க
இங்கு தப்பென்பது அடியை குறிக்கவில்லை. தவறுகள் திருத்திக்கொள்ள சந்தர்ப்பம் தரப்படும். :)
11:01 PM

இலவசக்கொத்தனார் said... ராம்ஸ்,
14. கூலின்னு போட்டு இருக்கீங்க. நீங்க போட்டது சரியாத்தான் இருக்கு. நான் நினைத்தது வேற.
11:02 PM

இலவசக்கொத்தனார் said... என்ன ஜெயஸ்ரீ,
ஏன் சிரிப்பு? சொல்லிட்டு சிரியுங்க. வர பின்னூட்டதிலே தத்தளிக்கறேன்.
11:08 PM

இலவசக்கொத்தனார் said... ஜெயஸ்ரீ,
4. சரியா பிடிச்சுட்டீங்களே. சபாஷ்.
11:08 PM

இலவசக்கொத்தனார் said... ஜெயஸ்ரீ,இதுவரைக்கும் நீங்க போட்டு முடிச்சது
1,2,3,4,5,8,9,10,11,12,13,14,15
போடவேண்டியது
6,7
ரெண்டுதானே. சீக்கிரம் போட்டு முடிச்சி பட்டத்தை வெல்லுங்க.
11:30 PM

இலவசக்கொத்தனார் said... மதுமிதா அக்கா,
மன்னிக்கவும். சற்று கண்ணயர்ந்து விட்டேன். இதோ உங்கள் விடைகளுக்கு பதில்.
1, 2, 3, 10, 11, - சரி.
மற்றும் ஒரு விடை சரியானது, ஆனால் தவறான கேள்விக்கு அதை அளித்துள்ளீர்கள்.
12 - ஐயோ.ஐயோ. இப்படி பண்ணறீங்களே. விடை படப் பெயருங்க. கொஞ்சம் யோசிங்கா.
14 - இராம்ஸுக்கு அளித்த பதிலை பார்க்கவும்.
மற்றவை தவறு. ட்ரை அகேன். :)
2:30 AM

இலவசக்கொத்தனார் said... அக்கா,இப்போ போட்டீங்களே, இது சரி. ஏன்னு புரிஞ்சுதுதானே. இப்போ மத்தது எல்லாம் போடுங்க.
2:44 AM

இலவசக்கொத்தனார் said... இரண்டு அனானி பதில்கள். ஒன்றி்ல் தியாக் என்ற பெயர். இரண்டும் அவர்தானா என்று தெரியவில்லை. எனவே தனித்தனி பதில்கள்.
முதலில் பெயரிலி அனானிக்கு,3,10,11,14 - நான்குமே சரி.14 - மற்றுமொரு விடை இருக்கிறதே. அதையும் சொல்லுங்களேன்.
2:54 AM

இலவசக்கொத்தனார் said... இப்போ தியாக்-கின் பதில்.
12. சரியான விடை
2:57 AM

இலவசக்கொத்தனார் said... சதீஷ்,நீங்க போட்ட அரை டஜன் விடைகள் அனைத்தும் சரியே.
1,2,3,10,11,15.
மற்றவைகளையும் முயலுங்களேன்.
2:59 AM

இலவசக்கொத்தனார் said... சதீஷ்,13. சரியான விடைதான்.
2:59 AM

இலவசக்கொத்தனார் said... சதீஷ்,12. சரியான விடை.
பார்ம்முக்கு வந்துட்டீங்க போல இருக்கே. அடியுங்க. அடியுங்க. சூப்பர்.
3:01 AM

இலவசக்கொத்தனார் said... சதீஷ்,7. தப்புங்க.
3:02 AM

Satheesh said... 7. Vasool Raja MBBS
3:03 AM

Satheesh said... 8. House Full (??)
7. Ramadoss (??)
3:19 AM

இலவசக்கொத்தனார் said... சதீஷ்
7, 8 இரண்டுமே சரியில்லையே. ஆனாலும் 8 எப்படிங்க ஹவுஸ் புல்? புரியலையே...
3:22 AM

இலவசக்கொத்தனார் said... சதீஷ்,4. இதுவும் சரி இல்லைங்ககொஞ்சம் வேற மாதிரி ட்ரை பண்ணுங்க.
3:24 AM

Satheesh said... 8. Mathurai Thangam (theatre) - Housefull movie was taken here (i think)
3:28 AM

இலவசக்கொத்தனார் said... அப்படியா சதீஷ். இது நமக்கு தெரியாது. இருக்கலாம். வித்தியாசமான முயற்சி. பாராட்டுக்கள். ஆமா விடை இவ்வளவு straight forward (தமிழில் என்ன?) இல்லை.
3:28 AM

இலவசக்கொத்தனார் said... தியாக்1. நீங்க சொன்னா மாதிரி படம் இருக்கா? கிட்டத்தட்ட வந்துட்டீங்க. இன்னும் கொஞ்ச யோசிங்க.
2,13 - சரி
14 - ஆமாம் இன்னுமொரு விடை இருக்கு. ட்ரை பண்ணுங்க.
3:33 AM

Satheesh said... 14. Coulie or Thozhilali
3:35 AM

இலவசக்கொத்தனார் said... சதீஷ்,திட்டாதீங்க. 14 - இன்னும் சரி இல்லைங்க.
3:38 AM

Anonymous said... 15. Niram maradha pookkal??
THYAG
3:39 AM

இலவசக்கொத்தனார் said... தியாக்15. இல்லை. இது ரொம்ப சுலபம். மண்டையை உடைச்சுக்காதீங்க.
3:39 AM

இலவசக்கொத்தனார் said... தியாக்,8. இன்னுமொரு முறை அனுப்பறீங்களா? கொஞ்சம் spellcheck பண்ணுங்க. சரியா, தவறான்னு தெரியலை.
இணையத்துல கிரிக்கட் வர்ணனை பாக்கறதுனால தூங்கலை. அதான் உடனுக்குடன் பதில். :)
3:42 AM

இலவசக்கொத்தனார் said... தியாக்,15. நான் சொல்லலை. நீங்கதானே சொல்லி இருக்கீங்க. :Dசரியான விடை.
சிலது சுலபமாவும் இருக்கணும். இல்லைன்னா இண்ட்ரஸ்ட் போயிடும் இல்லையா. அதுக்காகத்தான்.
3:44 AM

இலவசக்கொத்தனார் said... முயற்சியில் சிறிதும் மனம் தளராத சதீஷ் அவர்களே,
8. கரெக்ட்தான். :)
3:50 AM

இலவசக்கொத்தனார் said... தியாக்,
நீங்க சொல்லற மாதிரி படம் இல்லைங்க. ஆனா கான்செப்ட் அதுதான். யோ..சிங்க.
3:51 AM

Anonymous said... thanks. Got to go for a meet :-(((((
will try again later
Anyway other are difficult ;-)ESCAPEEEEEEEEEEEEEEE
thanks againTHYAG
3:56 AM

இலவசக்கொத்தனார் said... தியாக்,
ஐயாம் தி எஸ்கேப் எல்லாம் பண்ண முடியாது. மீட்டிங் முடிச்சிட்டு வாங்க. காத்திருப்பேன்.
கஷ்டமெல்லாம் இல்லைங்க. கொஞ்சம் வித்தியாசமா யோசிங்க. அவ்வளவுதான்.
3:57 AM

Anonymous said... before going.....
8 potta SATHISH ....... DOWN DOWN :-))))))))

THYAG
3:59 AM

இலவசக்கொத்தனார் said... சதீஷ்,அப்படி போடுங்க. 4. சரி
1,2,3,8,10,11,12,13,15 - இதெல்லாம் நீங்க போட்டது.
4:00 AM

இலவசக்கொத்தனார் said... ஏங்க தியாக்,
உங்களுக்கு சதீஷ தெரியுந்தானே. இல்லைன்னா கோச்சுக்க போறாரு. :D
சதீஷ், நீங்க வேணா தியாக்கை திட்டுங்க. அதையும் போடறேன். (அட, பின்னூட்டத்திற்கு புது விதி. கொஞ்சம் யோசிச்சா, இது புதுசு இல்லையே.):(
4:04 AM

Satheesh said... 7. Kan kanda theivam!
4:24 AM

Satheesh said... 14. Ulaipaali (or) Panja Kalyani
4:24 AM

இலவசக்கொத்தனார் said... சதீஷ்,7. ரொம்ப யோசிக்கறீங்க. ஆனா நீங்க கொடுத்த பதிலுக்கு காரணம் என்னன்னு யோசிங்க. அதுதான் விடை. :)
4:28 AM

இலவசக்கொத்தனார் said... மது அக்கா,
ஆனாலும் உங்களுக்கு ஆசை.
1,2,3 - சரி4,5,6,7 - சரியான விடை இன்னும் வரலை8 - மதுரை பொன். என்ன விடை போட்டு இருக்கீங்க. அவிங்க அருவா எடுத்து சுத்தற பயலுக. போட்டுறப்போறாய்ங்க.பாத்து. 9 -தப்பு10,11,12,13 - சரி14-தப்பு15 - சரி
ஆக மொத்தம் நீங்க இன்னும் 7 போடணும். அக்காங்.
4:32 AM

இலவசக்கொத்தனார் said... இதப்பாருடா. மீட்டிங்ன்னு போன தியாக் அப்படியே ரிடர்ன்.
மீட்டிங்ல என்ன சாப்பிட கொடுத்தாங்களோ தெரியலையே. 1,8 ரெண்டுமே சரி. இப்போ சதீஷை திட்ட மாட்டீங்களே.
2,3,10,11,12,13,14,15 - இதுதானே நீங்க இதுவரை சரியா போட்டது?
4:36 AM

Anonymous said... Ayyayyooooo,
I don't know Mr.Sathish.
a big SORRY to sathish - I did not mean it -- ORU THADAVAI VENA THITTIKUNGA Mr.SATHISH:-))))))))))
4:38 AM

இலவசக்கொத்தனார் said... ஆமாய்யா. இப்படி மாத்தி மாத்தி திட்டிக்கோங்க. நமக்கு நிறையா பின்னூட்டம் வந்தா மதிரி கணக்கு காட்டறேன். ஆனா என்னை மட்டும் திட்டிராதீங்க. நான் ரொம்ப கோவக்காரன். ஆமா. சொல்லிப்புட்டேன். :)
4:39 AM

இலவசக்கொத்தனார் said... தியாகு,
சரியா பிடிச்சீங்களே.
14. இரண்டாவது விடையையும் கண்டுபிடித்து சொன்ன உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் 'ஓ'.
4:50 AM

இலவசக்கொத்தனார் said... யப்பா 50-வது பின்னூட்டம்ன்னு குதிக்காதீங்க. விடைகளை தாங்கி வந்தவைகளை கணக்கில் எடுத்தால் எங்கயோ. ஆனால் 100 நெருங்கும்போது சொல்லறேன். யாருக்கு 100வது பின்னூட்டம்ன்னு பாக்கலாம்.
4:53 AM

Satheesh said... 6. Meyyuluththu
5:05 AM

Agent 8860336 ஞான்ஸ் said... 12. ஒற்றைச் சிங்கம் = முகமூடி
7. டாக்டர் = ராம்ஸ் (ரஷ்யா)
5:08 AM

இலவசக்கொத்தனார் said... சதீஷ்,6. மஇது உயிர்மெய் இல்லையா? இதுதான் இந்தப்பதிவிலேயே மிகக் கடுமையான புதிர் என்று நினைக்கிறேன். you need to think out of the box.
5:08 AM

இலவசக்கொத்தனார் said... ஞான்ஸ்,
வாங்க, வாங்க.
ரொம்ப சீரியஸா போகுதேன்னு பாத்தேன். அப்பாடா. அருமையான பதில்கள்.
12. ஒற்றைச் சிங்கம் = முகமூடிபேசவே பயம்மா இருக்கே. அடிதடி நடக்கும். No comments. :)
7. டாக்டர் = ராம்ஸ் (ரஷ்யா)அவரு அப்படித்தான் சொல்லிக்கிட்டு திரியராரு. எனக்கென்னமோ சந்தேகமாவே இருக்கு. ;)
நீங்க என்ன சொல்லாறீங்க?
5:14 AM

இலவசக்கொத்தனார் said... மக்களே,இது 96-ம் பின்னூட்டம்.அப்புறம் ஆரும் சொல்லலைன்னு சொல்லப்படாது.
5:16 AM

Satheesh said... 9. varna jaalam
5:19 AM

Satheesh said... 9.paalaivanathil pattam poochi or pattam poochi or vannathu poochi
5:21 AM

இலவசக்கொத்தனார் said... சதீஷ்,வர்ண ஜாலம் - தவறான விடை.
5:21 AM

Satheesh said... 6. Aaru maname Aaru
5:21 AM

இலவசக்கொத்தனார் said... சதீஷ்,எப்படி? ஆறு மனமே ஆறு? பிடிபட மாட்டேங்குதே....
ஆகா 100! :)
5:23 AM

Satheesh said... Nooru aachaa illaya?
5:24 AM

Satheesh said... Ethukkum innum onnu!!
5:24 AM

இலவசக்கொத்தனார் said... நீங்க ஜஸ்டுல மிஸ். 99, 101 ரெண்டுமே உங்களுது. :)
இது 102.
5:24 AM

இலவசக்கொத்தனார் said... எதோ சில பழைய பின்னூட்டங்கள் இப்பொழுதுதான் வருகின்றன. அதனால் 50 / 100 அடித்த கணக்கெல்லாம் ஆட்ட முடிவில்தான் அறிவிக்கப்படும்.
ஆனால் 100 தாண்டிவிட்டது. இது உண்மை.
5:47 AM

இலவசக்கொத்தனார் said... சதீஷ்,//9.paalaivanathil pattam poochi or pattam poochi or vannathu poochi//
இதுவும் தவறான விடை. உங்க விடைகள் எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டேன்னில்ல?
5:49 AM

Satheesh said... 6. Aaru (maava 90 degree clockwise thiruppunaa varum)- out of the box ok vaa?
5:58 AM

இலவசக்கொத்தனார் said... அப்பு, சதீஸு
out of the box think பண்ண சொன்னா out of the world think பண்ணறயே.
யப்பா....நடத்து..
6:00 AM

கைப்புள்ள said... நீங்க என் டண்டணக்கா ... டணக்கு ... டணக்கு பதிவுல கடைசியா போட்ட பின்னூட்டம், பின்னூட்ட வளர்ப்பு கலைக்கு இன்னொரு லெஸ்ஸன் போலிருக்கே. திட்டற மாதிரி, அதட்டற மாதிரி நம்ம பதிவுக்கு இழுக்கற இந்த டெக்னிக் சூப்பருப்பா!
7:09 AM

இலவசக்கொத்தனார் said... இதெல்லாமே நம்ம வாத்தியார் சொல்லிக்குடுத்ததுதான். பழைய பதிவுல இருக்கு பாருங்க.
7:16 AM

Anonymous said... 6. Magalir mattum
THYAG
7:24 AM

இலவசக்கொத்தனார் said... தியாக்,
காதலர் தின ஞாபகமா? சரியில்லவே.
7:31 AM

இலவசக்கொத்தனார் said... கைப்பு கைப்புதான்.
4 தப்பு14. இன்னுமொரு விடை இருக்கே15. நான் நினச்சது வேற1,2,3,5,10,11,12,13 - சரிதாம்வே
7:33 AM

கைப்புள்ள said... 14.கூலிக்காரன்
7:46 AM

இலவசக்கொத்தனார் said... கூலிக்காரன், உழைப்பாளி, தொழிலாளி எல்லாம் சொல்லிட்டாங்க. ஆனா நான் கேக்கற இரண்டு பதிலும் இது இல்லை.
7:49 AM

இலவசக்கொத்தனார் said... என்ன எல்லாரும் கிரிக்கெட் பாக்க போயிட்டீங்களா? யாரையும் கொஞ்ச நேரமாக் காணுமே.
8:37 AM

இலவசக்கொத்தனார் said... இது என்னமோ தமிழ்மணத்திலே புதுப்பிக்கப் பட மாட்டேங்குதே. :(
9:24 AM

கைப்புள்ள said... ஓய் கொத்தனார்,உம்ம பாணியிலே ஒரு பதிவு போடறேன். உமக்கு அட்வான்சா சொல்லிட்டேன் ஆமா! நல்ல புள்ளயா நாளைக்கு வந்துரும் வீட்டுப் பக்கம்.வர்ட்டா?
9:36 AM

இலவசக்கொத்தனார் said... கட்டாயம் வரேன். நானில்லாமலா?
9:37 AM

Anonymous said... 7. Kalaingan ?
Do not know how to spell (kamal movie)
THYAG
9:39 AM

கைப்புள்ள said... புதிர் போட இந்த பின்னூட்ட வெளயாட்டும் நல்லா இருக்குய்யா! பின்னூட்டத்துக்குப் பின்னூட்டம்...புதுசா வர்றவங்களுக்கும் ஆர்வமா இருக்கும். ஆனா என்ன ஒன்னு...ஒங்களுக்குத் தான் பெண்டு கழண்டிருக்கும். என்ன நான் சொல்றது?
9:41 AM

இலவசக்கொத்தனார் said... இல்லை தியாக்.
இன்னும் ட்ரை பண்ணுங்க.
9:43 AM

இலவசக்கொத்தனார் said... ஆமா கைப்பு. நேத்து நைட்டு தூங்கவே இல்லை. கிரிக்கெட் மாட்சை வேற பாத்துக்கிட்டு இருந்தேன். ஆனா நல்லா பொழுது போச்சு.
9:46 AM

இலவசக்கொத்தனார் said... கைப்பு,நீங்க தூக்கிப்போட்டது சரிதான். :)
9:57 AM

இராமநாதன் said... யோவ் கொத்தனார்,அதுக்குள்ள ரெண்டாவது செஞ்சுரிக்கு அடிபோடுறீரா.. ஒரு ரேஞ்சாத்தான் போய்கிட்டிருக்கீரு!
10:04 AM

இலவசக்கொத்தனார் said... வைத்தியரே,முன்ன சொன்னா மாதிரி இரண்டாவது செஞ்சுரி வந்தாச்சு. இப்போ இரண்டாவது டபுள் செஞ்சுரிதான் இலக்கு. :)
10:04 AM

Anonymous said... ஆட்டம் எவ்வளவு தூரத்தில் இருக்கு? யாராவது எல்லா விடையையும் சொன்னாங்களா?
11:02 AM

இலவசக்கொத்தனார் said... நல்லா போயிட்டு இருக்கு அனானி. தங்கத்தாரகை ஜெயஸ்ரீ இன்னும் ரெண்டு மீதம் வச்சு இருக்காங்க. அவங்கதான் அவ்வளவு கிட்ட.
11:05 AM

Sunday, January 29, 2006

போலி டோண்டுவும் மறுமொழி மட்டுறுத்தலும்

எல்லோரும் எழுதிட்டாங்க. நான் என்ன புதுசா எழுதப்போறேன். இந்த மாதிரி எதாவது பேர் வச்சா நிறைய பேர் வருவாங்களே. அதான். சரி நம்ம வேலையைப் போய் பார்ப்போமா.

என்ன தமிழ்மணத்திலே இருக்கணும் அதனால இனி மறுமொழிகள் மட்டுறுத்தப்படும். இதனால் நான் உறங்கும் சமயத்தில் இடப்படும் மறுமொழிகள் பதிவில் வர தாமதம் ஆகலாம். இனி word verification தேவையில்லை, அதை இலவசமாகவே எடுத்துவிட்டேன். ஆகையால் உங்கள் ஆதரவை வழக்கம்போல் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் சில ரீபஸ்கள். காட்டுங்கள் உங்கள் கைவண்ணத்தை. விடைகள் இன்னும் சில நாட்களில்.

1) உலஇளைஞன்கம்
2) ரோஜா ரோஜா ரோஜா
3) பாலமஞ்சரி, ஊர்மிகா, சைந்தவி, பூஷாவளி
4) முருகன் அல்லது விநாயகன்
5) ராஎன்சா
6) கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், ஆயில்யம்
7) பசபிக் ஹைக்கு, அட்லாண்டிக் வெண்பா, இந்து மாக்கடல் கலிப்பா, அரபிக்கடல் ஆசிரியப்பா
8) ஹௌரா எக்ஸ்பிரஸ்
9) கோகிலா கோகிலா
10) சோழ, சேர, பாண்டியர்
11) எம்.குமரன், s/o மஹாலட்சுமி, 7ஜி, ரெயின்போ காலனி, சென்னை-67
12) ராமன், கல்யாண ராமன், தசரத ராமன், கோதண்ட ராமன், சீதா ராமன், கௌசல்ய ராமன்

ஒரு க்ளூ. விடைகள் அனைத்துமே திரைப்பட பெயர்கள்.

Saturday, January 21, 2006

தாய்க்குப் பின் தாரம் - சில எண்ணங்கள்

சத்தியமா இதை எதிர்பார்க்கலைங்க. நாலு நாளா பதிவே போடலையே. ஒரு பதிவைப் போட்டு விட்டு தூங்கப்போகலாம். காலையில் ஒரு நாலு பின்னூட்டங்கள் வந்திருக்கும். அதற்கு பதிலைப் போட்டுவிட்டு விடைகளை பதிவு செய்யலாம் என நினைத்து பதிவை தட்டிவிட்டேன். ஆனால் போன டெஸ்டை பார்க்க முடியாத குறை தீர்ந்து போச்சுங்க. ராகுல் டிராவிட்டும், செவாக்கும் விளாசியது போல் விளாசிவிட்டார்கள், ஜெயஸ்ரீயும் சின்னவனும். ஒரு பின்னூட்டத்தை படிச்சி பதில் எழுதறத்துக்குள்ள மேலும் மூணு பின்னூட்டம் போட்டாங்க. தலைப்பில் கொடுத்த ரீபஸ்ஸை 'இன்னா மேன், இவ்வளவு ஈசியா கொடுத்து எங்கள இன்ஸல்ட் பண்ணற'ன்னு சொல்லி சின்னவன் அடிச்சார் பாருங்க ஒரு சிக்ஸர். அது சூப்பர்.

இவரு பொறுமையா பாலை பார்த்து சாத்தினாருன்னா அந்தம்மா ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர் அடிக்காத குறை. போட்டு அடி பின்னிட்டாங்க.மணியன் வந்து கடைசி பாலில் ஒரு சிக்ஸர், நம்ம தோணி மாதிரி. இதுக்கப்புறம் தூக்கமாவது ஓண்ணாவது. சிவராத்திரிதான். ரொம்ப தாங்ஸுங்கோ.

இதுலே ஒரு காமெடி. நான் இந்த பதிவை இட்டபின் தமிழ்மணம் சென்று பார்த்தால், முதல் பக்கத்தில் கடைசி பதிவாக, ஏற்கனவே இருந்த பதிவுகளின் கீழ், இப்பதிவு சேர்க்கப்பட்டிருந்தது. அடுத்த பதிவு வந்ததும், இப்பதிவை முதல் பக்கத்திலிருந்து காணவில்லை. இதைவிட பழைய பதிவுகளெல்லாம் இன்னும் இருக்கின்றன. நான் மட்டும் என்ன பாவம் செய்தேனோ. அந்த காசி விஸ்வநாதருக்கே வெளிச்சம். ஆனாலும் தொடர்ந்து பின்னூட்டங்கள் வந்த வண்ணமே இருந்ததால், 'சமீபத்தில் மறுமொழியப்பட்ட இடுகைகள்' பகுதியில் இருந்துகொண்டே இருந்தது. இதனால் மேலும் பலர் வந்து பார்த்தனர். பாத்தீங்களா பின்னூட்டத்தின் மகிமையை. இட்ட அனைவருக்கும் நன்றி. மற்றவர்களை இனி இடுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

ஒரு நாலு நாள் பதிவே போடலை. பணி நிமித்தம் வெளியூர் சென்றுவிட்டேன். இது போன்ற சிறு இடைவெளிகள் வரும். அதற்கு வருந்துகிறேன். இதற்குள் ஒருவர், என்ன சார் புதிரே போடக்காணுமே என்று மடலெழுதிவிட்டார். உங்களுக்கு ஒரு தனி வருந்துகிறேன். இந்த கொத்தனார் வெறும் புதிர் போடத்தான் லாயக்கு என்று ஒரு முத்திரை குத்தி வேறென்ன எழுதினாலும் படிக்காமல் போய்விடப் போகிறீர்கள். அது மாதிரியெல்லாம் பண்ணாதீங்க.

இன்னுமொரு தனிமடலில் ரீபஸுக்கும் குறுக்கெழுத்து புதிரின் குறிப்புகளுக்கும் என்ன வித்தியாசம் ஒரு நண்பர் என்று கேட்டிருந்தார். சற்று நேரத்திலே சின்னவனும் இதையொட்டியே ஒரு பதிவும் போட்டுவிட்டார். என்ன வித்தியாசம் என்று சரியாக சொல்ல தெரியவில்லை. க்ரிப்டிக் குறிப்புகள் பொதுவாக இரு பாகங்களைக்கொண்டதாக இருக்கும்.

ஒரு பகுதி விடையின் நேரடி அர்த்தமாகவும், மற்றொன்று வேறொரு வழியில் அவ்விடையை அடைவதாகவும் இருக்கும். இதில் சில வார்த்தைகளை வெட்டியோ, ஒட்டியோ, கலைத்தோ விடையை கண்டுபிடிக்க வேண்டியது வரும். இப்பகுதி ரீபஸாகவும் இருக்கலாம். ரீபஸ் பொதுவாக வார்த்தைகள் வரும் முறை மாறக்கூடாது. உதாரணமாக, நம் பதிவின் தலைப்பை எடுத்துக்கொண்டால் அம்மா, கொடு ஓல்டு மாங்க் என்பதுதான் தாய்க்குப் பின் தாரம் என்று வரும். இதை அம்மா, ஓல்டு மாங்க் கொடு என்று மாற்றக்கூடாது. இது என் கருத்து. சரியா என்பதை நிபுணர்கள் கூறினால் தெரிந்து கொள்ளலாம்.

இம்முறை மேல் என்ற பதத்தையும் உள் என்ற பதத்தையும் ஒட்டியே பல புதிர்கள் வந்துவிட்டன. அடுத்த முறை இதுபோல் அமையாது பார்த்துக் கொள்கிறேன். கலந்து கொண்ட அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது நன்றி. பிரத்தியேக குறிப்பீடு பெற்ற நட்சத்திரங்களுக்கு மீண்டும் ஒரு 'ஓ'!

ஒவ்வொரு பதிவிற்கும் வந்து பின்னூட்டமிடும் G Raghavanனை இம்முறை காணவில்லை. I missed you Raghavan.

Friday, January 20, 2006

அம்மா, கொடு ஓல்டு மாங்க்

எவன்ன, மல்மல், வர்ளம்வர், குமழைடை, மனமத்தாப்பூசு .....என்னாடா இது மீண்டும் கருட புராணம் படிக்க ஆரம்பிச்சுட்டானேன்னு பாக்கறீங்களா? இதுவும் அது இல்ல. இந்த பதிவிலேயும் ஒரு புதிர் விளையாட்டைத்தான் பார்க்க போறோம். இந்த மாதிரி புதிருக்கு பெயர் ரீ-பஸ்.

உடனே அந்த ஸ-பஸ்ஸுக்கும் க-பஸ்ஸுக்கும் நடுவிலே வருமே, அந்த ரீ-பஸ்தானே அப்படின்னு கலாய்க்ககூடாது. இதன் ஆங்கில பெயர்தான் Rebus. தமிழ்க்குடிதாங்கிகளெல்லாம் அப்படியே ஒரு ஓரமாய் போய் இதற்கு 'மீண்டும் பேருந்து'-ன்னு பெயர் வைக்க வேண்டும்ன்னு கொரல் குடுங்க. ஆனா பாவம் மரத்தையெல்லாம் வெட்டாதீங்க. சரி, இப்போ விஷயத்திற்கு வருவோம்.

ஒரு வார்த்தையையோ அல்லது ஒரு சொற்றொடரையோ பிரித்து, ஒவ்வொரு பகுதியையும் வேறொரு வார்த்தையாலோ அல்லது ஒரு படத்தாலோ குறிப்பிடுவதே ரீபஸ் புதிராகும். ரீபஸ் என்றால் லத்தீனில் பொருட்களின் மூலம் என்று அர்த்தமாம். பொருளாலும் (meaning) பொருட்களாலும் (things) ஒரு சொல்லையோ சொற்றொடரையோ குறிப்பிடுவதுதான் ரீபஸ். சில எடுத்துக்காட்டுகளைப் பார்த்தால் இவை எளிதில் விளங்கும். முதலில் ஆங்கிலத்தில்.



இவைகளின் விடைகள் முறையே - BACK DOOR, CROSS ROADS, SHUT UP AND SIT DOWN, SAILING OVER SEVEN SEAS, WHAT GOES UP MUST COME DOWN. புரிந்ததுதானே. இப்பொழுது தமிழில்.

1) வெட்டுதுண்டுதுண்டு
2) ர்பா
3)
பெண்
-------
மை
4) கோடுகோடு
5) மதராஸ், பாண்டிச்சேரி, பாண்டிச்சேரி

என்ன எல்லாத்தையும் கண்டுபிடிச்சீங்களா? ரொம்ப ஈசியாத்தானே இருந்தது. தெரியாதவங்களுக்கு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா சொல்லறேன். அட, அதாங்க விடை. வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு, திரும்பிப் பார், அடிமைப் பெண், இரு கோடுகள்,மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி (மணிப்பிரவாள ரீபஸ்). என்ன செய்யறது. சினிமா பெயரா போட்டாதான் பின்னூட்டம் போடறீங்க.

இப்போ இந்த பதிவின் முதலில் இருக்கும் ஐந்து புதிர்களின் விடைகளை கண்டுபிடியுங்கள். கூடவே இவைகளையும்.

ஆணை
-----
தாய்

பூனை
----
சுவர்

அழகர்
------
குதிரை

ணகி

மங்கை
-------------
அலர்

ரஜினி : "பொய்,பொய்,பொய்,பொய்,பொய்,பொய்,பொய்,பொய்,பொய்,பொய்"

வெள்ளம்
-----------------
தலை

இதெல்லாம் சரி. இந்த பதிவிற்கும் இதன் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம்? அதுவும் ஒரு ரீபஸ்தான். கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு பிரத்தியேக குறிப்பீடு (Special Mention) உண்டு. அட, அது இலவசமாத்தாங்க.

விடைகளை சில நாட்களுக்கு பின் தனிப்பதிவாக வெளியிடுகிறேன். இதெல்லாம் வெறும் சொற்களாலான ரீபஸ்கள். படங்கள், நிறங்கள் என்று புகுந்து விளையாடலாம். இடையில் உங்களுக்கு தோன்றும் ரீபஸ்களை பின்னூட்டத்தில் இடுங்களேன்.

இந்த பதிவிற்கு உதவிய இந்த பதிவிற்கு உதவிய ஹரிஹரன்ஸ் அவர்களுக்கு எனது நன்றி. அவர்களுக்கு எனது நன்றி.