Tuesday, January 22, 2008

பெஸ்ட்டு கண்ணா பெஸ்ட்டு!! (பாகம் 1)

2008ஆம் ஆண்டு என அழைப்பதை விட தொடர் விளையாட்டு ஆண்டு அப்படின்னே சொல்லிடலாம் போல இருக்கு. அம்புட்டு விளையாட்டு விளையாட வைக்கிறாங்க. புடிச்ச படம் என்ன, போடற மொக்கை என்ன அப்படின்னு எல்லா விளையாட்டும் விளையாடியாச்சு. அடுத்து வரிசையில் நிற்பது பிடிச்ச பதிவாம். போன வருஷம் போட்ட பதிவிலேயே பிடிச்ச பதிவு எதுன்னு சுட்டி குடுக்கணுமாம். சர்வேசன் ஆரம்பிச்சு வெச்ச இந்த விளையாட்டுக்கு நம்மளைக் கூப்பிட்டது ஒருத்தர் இல்லை, மூணு பேரு. அவங்க நம்ம நாச்சியார் வல்லிம்மா, வெட்டி பாலாஜி, வாத்தியார் இளவஞ்சி.

இந்த விளையாட்டை சுயதம்பட்டம் அப்படின்னு சிலர் சொல்லிக்கிறாங்க, எந்தக் கண்ணு நல்ல கண்ணு அப்படின்னு கேட்கறாங்க இன்னும் சிலர். இதையெல்லாம் பார்த்தா எழுதணுமா வேண்டாமான்னு ஒரே ரென்சனா இருக்கு. அப்புறம்தான் போன வருசம் போட்ட ஆப்புரேசல் ஞாபகத்துக்கு வந்தது. (அது ஞாபகத்துக்கு வந்தது அது வாங்கின 382 பின்னூட்டங்களுக்காக அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.) போன தடவை மாட்டுனது ஜிரா. இந்த முறை மாட்டப் போவது வேற ரெண்டு பேரு. ரெண்டு பேருமே பதிவெல்லாம் எழுதாத நல்லவங்க. ஆனா நிறையாப் படிக்கிறவங்க. அவங்களையே போன வருஷம் எழுதின பதிவுகளில் எது நல்லா இருக்குன்னு சொல்லிட்டு அப்படியே ஒரு ஆப்புரேசலும் பண்ணச் சொல்லிடலாமுன்னு ஐடியா.

இந்த நினைப்பு வந்ததும் முதலில் மாட்டினவர் நம்ம ஸ்ரீதர் வெங்கட் அவர்கள்தான். இவரோட பின்னூட்டங்களின் மூலமாவே அனேகமா எல்லாருக்கும் இவரைத் தெரிஞ்சு இருக்கும். தவறாம நம்ம பதிவுக்கு வந்து உள்ளேன் ஐயா (அதுக்கு மேலேயும்) சொல்லும் இவரைத்தான் முதலில் ஆப்புரேசலுக்கு அழைக்கிறேன். இனி ஸ்ரீதர்.

2007-ல் எழுதப்பட்ட பதிவுகளில் பிடித்தது எது என்று சொல்ல சொன்னால் கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கிறது. பல சமயம் பதிவுகளில் செலவழித்த நேரத்தை விட பின்னூட்ட விளையாட்டில்தானே அதிக நேரம் செலவிட்டிருப்போம். இதற்காக உக்காந்து (இனிமேதான் :-)) படிக்கணுமான்னு கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. ஆனாலும் சுவாரசியமான வேலைதான் :-)

2007 புத்தாண்டு தினத்தன்று ஒரு புதிய செய்தியோடு வந்து நம்மை (மருதக்காரய்ங்களை) 'காலர தூக்கி விட்டுக்குங்க' என்று மகிழ்வித்ததினாலோ என்னவோ, தமிழ்மண நட்சத்திரமாகவும் ஜொலித்தார். அந்த பதிவிற்கும் பின்னர் வேறோரு சமயத்தில் எழுதப்பட்ட இந்த பதிவுக்கும் எதுவும் தொடர்பிருக்கா என்பதை உங்கள் புரிதலுக்கே விட்டுவிடுகின்றேன்.

இவருடைய எல்லா பதிவுகளிலும் அநேகமாக ஒரு பின்னூட்டமாவது போட்டிருப்பேன் ஒரே ஒரு பதிவை தவிர. இதைப் போல இன்னொரு இ.கொ. பதிவிருந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

சரி நம்மை கவர்ந்த பதிவுகள் சில -

லிவிங் ஸ்மைல் வித்யாவின் பதிவிற்கான எதிரிவினை. பலதரப்பட்ட கருத்துகளுடன் நடத்தப்பட்ட விவாதம். இந்த பதிவில் பேசப்பட்ட அந்த தொலைக்காட்சி தொடரில் பிறகு சில வரவேற்கத்தக்க மாறுதல்களும் நடந்தேறின. "lets agree to disagree" என்ற முறையில் விவாதம் முடிந்து போனது.

முரண்பட்ட செய்திகளை சேர்த்து எழுதிய விலங்குகள் உரிமை ஒரு 'கண் திறப்பான்' (eye opener) என்று சொல்லலாம். ஒரே நோக்கதிற்கு வெவ்வேறு செயல்வடிவங்கள் காணக் கிடைக்கின்றன.

நான் எப்பேர்ப்பட்ட கிறுக்கு அப்படின்னு கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் (அ) சுயதம்பட்டம். இதில் நானும் ஒரு துணை வாக்குமூலம் கொடுத்திருந்தேன்.

இந்த பதிவை படித்தவுடன் நான் சொன்னது - "Beauty is in the Beholder's eyes அப்படின்னு சொல்லுவாங்க. உங்க பார்வையும் அழகாவே இருக்கு."

ஜொள்ளுபாண்டியோட நோட்டீஸ் வச்சு ஒரு கைப்பு கலக்கல். அருமையான அங்கதம். வடிவேல் ஏதாவது படத்தில் காமெடி டிராக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். அதே போல் சர்வைவல் ஆப் பிட்நெஸ் பதிவும். உடல் இளைக்க இந்த பதிவை சில முறை படிக்கலாம். விழுந்து விழுந்து சிரித்தால் கொஞ்சம் கொழுப்பு குறையலாம்.

நட்சத்திர வாரத்தில் குயி.. குயி.. குயிஜு என்று கூவிக்கொண்டு 9 தலைப்புகளில் நடத்திய போட்டி நிறைய பேரை கவர்ந்தது. பங்கேற்பாளர்கள் எல்லோருடைய விடையையும் தொகுத்து அதற்கு பதிலளித்து, மேலும் சில க்ளூக்கள் தந்து என்று நிறைய நேரத்தையும், தேடலையும் கொண்ட முயற்சி. மிகப் பெரும் வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். நிறைய பதிவர்கள் கலந்து கொண்டார்கள்.

சக பதிவர்களை கொண்டு புதுமையான பட்டிமன்றம் நடத்தியது மிகவும் அருமையாக இருந்தது. தலைப்பும், தீர்ப்பும் பட்டிமன்றத்து இலக்கணப்படி இருந்தாலும், விவாதங்களும் பின்னூட்டங்களும் நகைச்சுவைக்கு கியாரண்டி.

இதைத் தவிர அவருடைய வெண்பா பதிவுகள், வ.வா.சங்க ஆப்புரேசல் போன்ற பல பதிவுகளும் பெருவாரியான வாசகர்களை கவர்ந்தவையே.சமையல் குறிப்பு, பயண்க் கட்டுரை, செய்தித் தொகுப்புகள், தமிழ்மணத்திற்கு ஆலோசனை(?!), எடிஸனில் வரலாறு காணாத வலைப்பதிவர் மாநாடு, 'நச்'னு ஒரு கதை என்று இன்னும் பல பதிவுகள் மிகவும் பாப்புலர்தான்.

எல்லாவற்றையும் விட பெரிதும் கவர்ந்தது அவருடைய ரீபஸ் புதிர் போட்டிதான். பலரையும் கிறுக்கு பிடிக்க வைத்த போட்டி. கிட்டதட்ட 250 விதவிதமான பதில்களை தொகுத்து பங்கேற்பாளர்களை உற்சாகப்படுத்தி ப்ரபொஷனலாக நடத்தப் பட்ட போட்டி. அந்த போட்டியில் சில புதிர்கள் யாராலுமே பதிலளிக்க முடியாமல் போனது, (பாலராஜன் கீதாவை தவிர).

ஆக மொத்தம் போன வருடப் பதிவுகளிலேயே எனக்கு பிடித்தது - விடுகதையா இந்த வாழ்க்கை என்ற பதிவுதான்!

இப்போ இ.கொ.விற்கு சில கேள்விகள் -
  1. அப்புறம் கே.ஆர்.எஸ் உங்களை பலூனில கூட்டிகிட்டு போனாரா?
  2. அவுஸ்திரேலியா போறதுக்கு டீச்சர்கிட்ட டிக்கட் எடுத்திட்டாங்களா?
  3. ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஜொள்ளு மட்டும்தான் விட்டுட்டிருந்தீங்களா?
  4. அடுத்த புதிர் போட்டி எப்போ?
  5. புதிர்கள் போடுவதற்காக தனி வலைப்பக்கம் தொடங்கலாமே? வேணும்னா சொல்லுங்க ஒரு prototype பண்ணிடுவோம்.
  6. போட்டோ போட்டாச்சு, கதை எழுதியாச்சு. அடுத்து கவிதைதானே?
  7. டிஸ்கி போடாம உங்களால பதிவு எழுத முடியுமா?

என்னங்க, படிச்சீங்களா? ஒரு அப்ரேய்சல் செய்யச் சொன்னா எம்புட்டு கேள்வி கேட்கறாரு பாருங்க. இவர் இப்படின்னா அடுத்து நான் கேட்டவரு இன்னும் சுவாரசியம். அவர் யாரு, அவர் என்ன சொன்னாருன்னு அடுத்த பதிவில் பார்ப்போமா? (சும்மாவா பாகம் 1 அப்படின்னு தலைப்பு வெச்சிருக்கு. இனிமே யாரும் தொடர் விளையாட்டுக்குக் கூப்பிடக்கூடாதுன்னு செஞ்சிட மாட்டோம்!)

55 comments:

said...

உங்க கேள்விக்கு பதில் சொல்லுவேன். ஆனா எங்க சொல்லுவேன், எப்போ சொல்லுவேன்னு எனக்கே தெரியாது. வர்ட்டா!!

said...

அட்டெண்டன்ஸுக்கு மட்டும் இருந்த ப்ராக்ஸி இப்ப பதிவுவரை வந்திருக்கு.
நல்லா இல்லே ஆமாம்.... சொல்லிட்டேன்:-))))


கொத்ஸ்,
நானும் இன்னும் எ.பி.ப. போடலைப்பா. யாராவது ஆள் கைவசம் இருக்கா?

அதிகம் இல்லை. வெறும் 156 தான்.
அனுப்பிவையுங்க உதவிக்கரத்தை.

said...

ரீச்சர்,

//அட்டெண்டன்ஸுக்கு மட்டும் இருந்த ப்ராக்ஸி இப்ப பதிவுவரை வந்திருக்கு.
நல்லா இல்லே ஆமாம்.... சொல்லிட்டேன்:-))))//

இது என்ன முதல் தடவையா? தலைவர் கமலே கிரேஸி மோகனை அவர் சார்பில் பரிட்சை எழுத வைக்கலையா? (வசூல்ராஜா எம்பிபிஎஸ்). நாம வெறும் பதிவுக்குத்தானே.

//கொத்ஸ்,
நானும் இன்னும் எ.பி.ப. போடலைப்பா. யாராவது ஆள் கைவசம் இருக்கா?//

முதலில் நான் கேட்ட எ.பி.ப(டம்). போடுங்க. அப்புறம் இதைப் பார்க்கலாம். ஆமா!!

//அதிகம் இல்லை. வெறும் 156 தான்.
அனுப்பிவையுங்க உதவிக்கரத்தை.//

50 வரலாறு, 50 ஊர் சுத்தினது, இந்த ரேஞ்சில் தானே இருக்கப் போகுது. ஈசியா செஞ்சுறலாம். நம்மளை மாதிரி வெரைட்டி இருந்தாத்தான் பிரச்சனை அப்படின்னு ஸ்ரீதர் சொல்லறாரு! :))

said...

இவர் பதிவை விட்டுத்தள்ளுங்கள், இவர் பின்னூட்டத்தில் எத்தனை பூனைக்குட்டிகள் துள்ளிக் குதித்து விளையாடுகின்றன பார்த்தீர்களா?
சாம்பிளுக்கு 2 மட்டும்:
1. இவரு கமலாம், ஸ்ரீதர் க்ரேஸியாம்.. என்னா தெனாவட்டு?
2. இவர் பதிவு வெரைட்டியாம், துளசி அக்கா பதிவு ஒரே மாதிரியாம்-- ஈஸியா செஞ்சுறலாமாம்!
3. அதை நேராச் சொல்லத் துணிவு இல்லாமல் ஸ்ரீதர் மேல் பழி போடுவாராம்!
மக்களே அணி திரள்வோம் கொத்தனாரின் நுண்ணரசியலை எதிர்த்து.

said...

//நல்லா இல்லே ஆமாம்....//

நானும் சொன்னேன். அதெல்லாம் நாம எழுதினா நல்லா இருக்காதுன்னு. கேட்டாத்தானே...

ப்ராக்ஸி எல்லாம் இல்லை. இந்த Beja Fry படத்துல வர்ற மாதிரி சும்மா போயிட்டிருக்கவன கூப்பிட்டு வந்து எழுத சொல்லி அப்பாலிக்கா ரவுசு பண்றது.

நாங்க எல்லாம் பிள்ளபூச்சிங்கப்பூ. ஏதோ பாத்து செய்யுங்க.

ஆமாம், இன்னும் பேமண்ட் ஒய் டிலே மேன்?

said...

வாய்யா வா!!

//இவர் பதிவை விட்டுத்தள்ளுங்கள்,//

ஏன் எங்க பதிவெல்லாம் படிக்கக் கூடாதோ? உம்ம பதிவுதான் உயர்ந்தது, படிக்க உகந்தது என்ற உங்க ஆதிக்க மனப்பான்மையை கண்டு வெகுண்டு நிற்கிறது தமிழ்மணமே.

//சாம்பிளுக்கு 2 மட்டும்://

ரெண்டு மட்டும் எனச் சொல்லி மூன்று கொடுத்து ஓசியில் கிடைத்தால் பினாயிலும் குடிப்பான் (பெனாத்தலும் படிப்பான்!) தமிழன் என எள்ளி நகையாடும் உம் நுண்ணரசியல் எங்களுக்குத் தெரியாமல் போகவில்லை!

//இவரு கமலாம், ஸ்ரீதர் க்ரேஸியாம்.. என்னா தெனாவட்டு?//

என்னய்யா தப்பு? நான் காப்பி அடித்துப் பதிவு போடுகிறேன் அதான் கமல். அவரு சிரிக்க சிரிக்கப் பின்னூட்டம் போடுறாரு, அதான் க்ரேஸி மோகன். இதில் உமக்கு ரோல் இல்லை என்ற வயத்தெரிச்சல்தானே இந்த சத்தம்?

//இவர் பதிவு வெரைட்டியாம், துளசி அக்கா பதிவு ஒரே மாதிரியாம்-- ஈஸியா செஞ்சுறலாமாம்!//

அடப்பாவி, இப்படி எல்லாம் இல்லாத பிரச்சனைக்கு குரல் குடுத்து மகளிர் உரிமைக்குப் பாடுபட்டு வைப்பாலஜி எழுதின பாவத்தைத் தீர்த்துக்க பார்க்கறீரா? அதெல்லாம் நடக்காது.

நான் என்ன சொல்ல வந்தேன் என ரீச்சருக்குப் புரியாதா? நான் எல்லாம் எந்த சப்ஜெக்ட்டா இருந்தாலும் ஒரு பதிவுக்கு மேல எழுத மேட்டர் கிடையாது. (நுனிப்புல் மேயறவன் அப்படின்னு சொல்லி இருப்பேன், ஆனா அது வேற பிரச்சனையா வரும் என தெரியும். அதான் சொல்லலை!) ஆனா ரீச்சர் அப்படி இல்லை. தொடரா எழுதி ஆழமான தகவல்கள் தரவங்கன்னு சொல்லறேன். இது அவங்களுக்குப் புரியும், அவங்களுக்குப் புரிஞ்சாப் போதும்.

//அதை நேராச் சொல்லத் துணிவு இல்லாமல் ஸ்ரீதர் மேல் பழி போடுவாராம்!//

After you anything else is easy என்ற அவரின் கருத்தைச் சொன்னதுக்கு இப்படி ஒரு திரித்தலா? அது மட்டுமின்றி நம் பதிவுகள் போலல்லாமல் ரீச்சரின் எல்லாப் பதிவுமே சூப்பர். இதைச் சொல்வது கடினமா என்ன?

//மக்களே அணி திரள்வோம் கொத்தனாரின் நுண்ணரசியலை எதிர்த்து.//

தமிழ்மணமே சிரிக்கிறது, ராமேஸ்வரம் கோயிலில் பசு மாடு இறந்து போனதற்கெல்லாம் என்னை எதிர்த்து அரசியல் செய்ய நினைக்கும் உம்மைப் பார்த்து.

said...

//ஸ்ரீதர் மேல் பழி போடுவாராம்!//

அல்ரெடி ஆரம்பிச்சிசாச்சா?

பெனாத்தலாரே, இதெல்லாம் பூனைகுட்டி இல்லங்க... டினோசர் குட்டி :-((

//கொத்தனாரின் நுண்ணரசியலை//

இது ஏதோ "அடுக்குத் தொடர்" மாதிரியில்ல இருக்கு? :-))

"கொத்தனாரிசம்" - இது சிக்கனமா இருக்கு.

said...

இன்னும் பதிவ படிக்கல........பின்னூட்டத்தை பார்த்து இந்த பின்னூட்டம்...... "ஆரம்பிச்சாச்சா உங்க கொட்டத்த"?? ராமனாதன் கிட்ட இருந்து ஒரு சத்தத்தையும் காணோமே ஆஸ்ட்ரேலியன் ஓபென்ல மூழ்கிட்டாரோ??

said...

//அவங்க நம்ம நாச்சியார் வல்லிம்மா, வெட்டி பாலாஜி, வாத்தியார் இளவஞ்சி//

மத்தவங்க எல்லாருக்கும் "ஆர்" விகுதி போட்டு மதிப்பளித்த கொத்தனார்...
வெட்டிக்கு மட்டும் வெட்டியார் என்று விகுதி போடாததைக் கண்டித்து, சங்கத்துச் சிங்கங்கள் மாபெரும் தன்மான எழுச்சிப் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளதாக சற்று முன் வந்த தகவல்கள் கூறுகின்றன! :-)

said...

நம்ம ஓட்டு
சர்வைவல் ஆப் ஃபிட்னஸ் மற்றும் ஜொள்ளுப்பாண்டி நோட்டீஸ்!

ஒட்டு சொல்லியாச்சி! வேட்டு சொல்லலாமா தல? :-)

//அப்புறம் கே.ஆர்.எஸ் உங்களை பலூனில கூட்டிகிட்டு போனாரா?//

நான் தான் Green Baby! ஐ மீன் பச்ச புள்ள! என்னையத் தான் கொத்தனாரு பத்திரமா அழைச்சிக்கிட்டுப் போகணும்! என்ன கொடுமை ராகவன், இப்படி எல்லாம் கேள்வி கேக்குறாங்க அப்புரைசல்-ல! :-)

said...

//ஆமாம், இன்னும் பேமண்ட் ஒய் டிலே மேன்?//

சரிதான், அப்போ இன்னும் நல்லாவே எழுதி இருக்கலாமோ???? :P

said...

\\அவுஸ்திரேலியா போறதுக்கு டீச்சர்கிட்ட டிக்கட் எடுத்திட்டாங்களா?
\\ என்னது? டீச்சர் எங்க கிட்ட எல்லாம் சொல்லாம கொள்ளாம எப்ப அவுஸ்திரேலியா போனாங்க

said...

//இவர் பதிவு வெரைட்டியாம், துளசி அக்கா பதிவு ஒரே மாதிரியாம்-- ஈஸியா செஞ்சுறலாமாம்!//

அதானே...சுரேஷ்...
பட்டிமன்றத்துலே அக்கா தம்பியை மோதவிட்டதுமில்லாம இப்படி ஒரு நுண் அரசியல் செய்த கொத்தனாரிஸம்
கவனத்துக்குக் கொண்டு வந்ததுக்கு ....

வந்ததுக்கு?

நான் என்னான்னு சொல்லுவேன்?:-)

said...

சிரிப்பான் குறைவா இருந்தால் இதிலிருந்து எடுத்துக்கவும்.

;-))))))))))))))))))))))))))))))))))

said...

\அடுத்த புதிர் போட்டி எப்போ?\\

தல

இதுக்கு சீக்கிரம் பதில் சொல்லுங்கள் ;))

said...

ஏயய்யா!

சின்னப்பசங்க நாங்க ஏதோ தொடர்வெளாட்டு நடத்துனா நீங்க இங்க பாகம்-1 ன்னு எல்லாம் போட்டு ஒலிம்பிக் நடத்திக்கிட்டு இருக்கீக... :)

நடத்துங்கப்பேய்.... பதிவை படிச்சுட்டுட்தான் பின்னூட்டம் போட்டேன்ன்னு சொல்லிகறேன்...

said...

பின்னூட்டங்களைப் படிச்சாச்சு.இதுவே நல்ல பதிவா இருக்கும் போல இருக்கே.:)

said...

எனக்குப் பிடித்தது உங்க உப்புமாப் பதிவும், கொத்துப் பரோட்டாப் பதிவும் தான்.
அப்புறம் சர்வைவல் ஃஃப் ஃபிட்னஸ்!!

said...

//என்னை எதிர்த்து அரசியல் செய்ய நினைக்கும் உம்மைப் பார்த்து.//

//உம்ம பதிவுதான் உயர்ந்தது, படிக்க உகந்தது என்ற உங்க ஆதிக்க மனப்பான்மையை//

ரெண்டையும் ஒண்ணா பாத்தாலே தமிழக அரசியல் வாடை அடிக்குதே! இதுல ராமேஸ்வரம் பசுமாடு ரெபரன்ஸ் வேற! இதுல உள்ள பூனைக்குட்டிகளை தனியா எண்ண முடியாத அளவுக்கு இருக்கு! பொதுமக்கள் எல்லாத்தையும் (இன்க்ளூடிங்- பெனாயில் குடிக்கிறது பெனாத்தல் படிக்கறது என ஒப்புமைப்படுத்திய உங்கள் தனிமனிதக் கீறல்) பாத்துக்கிட்டுதான் இருக்காங்க!

அக்கா,

//பட்டிமன்றத்துலே அக்கா தம்பியை மோதவிட்டதுமில்லாம இப்படி ஒரு நுண் அரசியல் செய்த கொத்தனாரிஸம்
கவனத்துக்குக் கொண்டு வந்ததுக்கு ....//

இப்பவாவது புரிஞ்சுகிட்டீங்களே! நல்லது.. பெட்டர் லேட் தன் நெவர்!

said...

Sridhar Narayanan,
நடாத்துங்க... சொல்லியே ஆகணும்னா.. அப்புறம் என்ன செய்யறது? :)))))))))))

said...

இராதா,
//ராமனாதன் கிட்ட இருந்து ஒரு சத்தத்தையும் காணோமே ஆஸ்ட்ரேலியன் ஓபென்ல மூழ்கிட்டாரோ??//

உம்ம ஜோக்கர் மேட்ச் பாத்தீங்களா???? டேவிட் பெர்ரர நாறடிச்சு அனுப்பிட்டாரு.. கடசி செட்டுல தான் கொஞ்சம் ஆட்டம் கண்டுருச்சு...

said...

அப்புறம் நம்ம FeDeX vs Blake பாத்தீங்க இல்ல??????

said...

இதெல்லாம் செல்லாது... உங்களுக்கு பிடிச்ச பதிவை நீங்க சொல்லனும்...

said...

//இதெல்லாம் செல்லாது... உங்களுக்கு பிடிச்ச பதிவை நீங்க சொல்லனும்...
//

பாலாஜி,

இப்படி யாராவது சொல்ல மாட்டாங்களான்னு அவரே காத்திட்டிருக்கார். பாருங்க இதை சாக்கா வச்சு இன்னொரு பதிவு போடலாமே :-)

said...

//அல்ரெடி ஆரம்பிச்சிசாச்சா?

பெனாத்தலாரே, இதெல்லாம் பூனைகுட்டி இல்லங்க... டினோசர் குட்டி :-((//

ஸ்ரீதர், ரொம்ப ரென்சனாவாதீங்க. உங்க பதிலைப் பார்த்தா ஆகலை போலத்தான் தெரியுது. டினோசர் குட்டி எனச் சொல்வதின் மூலம் இல்லாத ஒன்றைப் போய் பெரிதாகச் செய்கிறார் பெனாத்தல் என அழகாக சொல்லி இருக்கும் விதம் சூப்பர்.

//இது ஏதோ "அடுக்குத் தொடர்" மாதிரியில்ல இருக்கு? :-))//

அடுக்குத் தொடர் அப்படின்னா பிரிச்சா பொருள் தருமே. இது இரட்டைக்கிளவி மாதிரி இல்ல இருக்கு! :)

//"கொத்தனாரிசம்" - இது சிக்கனமா இருக்கு.//

கொத்தனாரிசம் - இந்த தலைப்பில் ஒரு பதிவு எழுதித் தருவீங்களா?

said...

இதுதான் அய்யா ஞான செருக்கு. இலவசம் இனி வரிசையாய் எளுதியதில் பிடித்ததை போட போகிறார்.

said...

//இன்னும் பதிவ படிக்கல........பின்னூட்டத்தை பார்த்து இந்த பின்னூட்டம்...... //

ராதாக்கா - இது என்ன புதுசா? நடாத்துங்க :)

// ராமனாதன் கிட்ட இருந்து ஒரு சத்தத்தையும் காணோமே ஆஸ்ட்ரேலியன் ஓபென்ல மூழ்கிட்டாரோ??//

அவரு என்னமோ ஒரு மெதப்பாவே இருக்காரு. என்னான்னே தெரியலை. அவரு வருவாரு. அவரையே கேளுங்க.

said...

//மத்தவங்க எல்லாருக்கும் "ஆர்" விகுதி போட்டு மதிப்பளித்த கொத்தனார்...
வெட்டிக்கு மட்டும் வெட்டியார் என்று விகுதி போடாததைக் கண்டித்து, சங்கத்துச் சிங்கங்கள் மாபெரும் தன்மான எழுச்சிப் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளதாக சற்று முன் வந்த தகவல்கள் கூறுகின்றன! :-)//

வெட்டி யார் என திரித்துப் பேசுவார்கள் நம் எதிரிகள் என்ற நல்லெண்ணத்தில் நான் செய்ததை இப்படித் தவறாகப் பார்க்கிறீர்களே என நினைக்கையில் என் மனம் மௌனமாய் அழுகிறது!!

said...

//நான் தான் Green Baby! ஐ மீன் பச்ச புள்ள! என்னையத் தான் கொத்தனாரு பத்திரமா அழைச்சிக்கிட்டுப் போகணும்!//

இது பத்தின உண்மைகள் தனியாக வெளிவரும்!

//என்ன கொடுமை ராகவன், இப்படி எல்லாம் கேள்வி கேக்குறாங்க அப்புரைசல்-ல! :-)//

ரிப்பீட்டே....

said...

//சரிதான், அப்போ இன்னும் நல்லாவே எழுதி இருக்கலாமோ???? :P//

அப்படிச் சொல்லுங்க கீதாம்மா!!

said...

//என்னது? டீச்சர் எங்க கிட்ட எல்லாம் சொல்லாம கொள்ளாம எப்ப அவுஸ்திரேலியா போனாங்க//

என்ன சின்ன அம்மிணி, அவங்க அவுஸ்திரேலியா போனதை உங்க கிட்ட சொல்லலையா? பெரிய தொடர் பதிவே போட்டாங்களே!! :))

said...

//வந்ததுக்கு?

நான் என்னான்னு சொல்லுவேன்?:-)//

நான் போட்ட பதிலையும் படிச்சு கருத்து சொல்லுங்க!

said...

//சிரிப்பான் குறைவா இருந்தால் இதிலிருந்து எடுத்துக்கவும்.//

நாம எல்லாம் இருக்கும் இடத்தில் சிரிப்புக்கு குறைவா அப்படின்னு பதில் சொன்னா பினாத்தல் வந்து உங்களை நான் இளிச்சவாயின்னு சொல்லறேன்னு வத்தி வைப்பாரு. என்னாத்த சொல்ல!!

said...

//இதுக்கு சீக்கிரம் பதில் சொல்லுங்கள் ;))//

அந்த கேள்விதாங்க அடுத்த புதிரே!! :))

said...

//சின்னப்பசங்க நாங்க ஏதோ தொடர்வெளாட்டு நடத்துனா நீங்க இங்க பாகம்-1 ன்னு எல்லாம் போட்டு ஒலிம்பிக் நடத்திக்கிட்டு இருக்கீக... :)//

ஆஹா!! ரொம்ப பெரிசா போச்சுன்னா அப்புறம் ஸ்டிராய்ட் பிராப்பளம் அப்படின்னு சொல்லுவீங்க போல இருக்கே!! சாக்கிரதையாவே இருந்துக்கறேன்.

//நடத்துங்கப்பேய்.... பதிவை படிச்சுட்டுட்தான் பின்னூட்டம் போட்டேன்ன்னு சொல்லிகறேன்...//

நானும் நம்பிட்டேன்னு சொல்லிக்கிறேன்!

said...

//பின்னூட்டங்களைப் படிச்சாச்சு.இதுவே நல்ல பதிவா இருக்கும் போல இருக்கே.:)//

வல்லிம்மா இதுவே வா இல்லை இதுவுமா? சரியாச் சொல்லுங்க! :))

said...

//எனக்குப் பிடித்தது உங்க உப்புமாப் பதிவும், கொத்துப் பரோட்டாப் பதிவும் தான்.
அப்புறம் சர்வைவல் ஃஃப் ஃபிட்னஸ்!!//

ஆக மொத்தம் சாப்பாடு, அதனால் ஏற்படும் உபாதைகள். தெளிவாத்தான் இருக்கீங்க! :)

said...

//ரெண்டையும் ஒண்ணா பாத்தாலே தமிழக அரசியல் வாடை அடிக்குதே! இதுல ராமேஸ்வரம் பசுமாடு ரெபரன்ஸ் வேற!//

அதாவது நம்ம தமிழ்மணத்தில் சிலவங்களுக்கு என்ன படிச்சாலும் ஒரே ஒரு கோணம்தான் தெரியும். அது மாதிரி உமக்கு இப்போ தமிழக அரசியல் மோகம் போல. இந்த கண்ணாடியைக் கழட்டிட்டுப் படியுங்க. அப்போ எல்லாம் சாதாரணமாத் தெரியும். :)

//பொதுமக்கள் எல்லாத்தையும் (இன்க்ளூடிங்- பெனாயில் குடிக்கிறது பெனாத்தல் படிக்கறது என ஒப்புமைப்படுத்திய உங்கள் தனிமனிதக் கீறல்) பாத்துக்கிட்டுதான் இருக்காங்க!//

பாத்துக்கிட்டுதானே இருக்காங்க. நிறுத்தவா சொல்லறாங்க? இதுலேர்ந்து என்ன தெரியுது? :)

//இப்பவாவது புரிஞ்சுகிட்டீங்களே! நல்லது.. பெட்டர் லேட் தன் நெவர்!//

அவங்க திரும்பி வந்து என் பதிலைப் படிச்ச பின் என்ன சொல்லறாங்கன்னு பார்க்கலாம்.

said...

//நடாத்துங்க... சொல்லியே ஆகணும்னா.. அப்புறம் என்ன செய்யறது? :)))))))))))//

ஹிஹி. டாக்குடரே, நீர் சும்மாச் சொல்லக்கூடாதய்யா, ரொம்ப சுட்டிதான்!! :))

said...

//உம்ம ஜோக்கர் மேட்ச் பாத்தீங்களா???? டேவிட் பெர்ரர நாறடிச்சு அனுப்பிட்டாரு.. கடசி செட்டுல தான் கொஞ்சம் ஆட்டம் கண்டுருச்சு...//

இவங்க எல்லாம் இந்தியாவா அவுஸ்திரேலியாவா?

said...

எப்படியோ கொடுத்த அசைமென்ட்டை முடிச்ச உங்க பொறுப்புணர்ச்சி என்னை சிலிர்க்க வைக்கிறது தலீவா..

said...
This comment has been removed by a blog administrator.
said...

//அப்புறம் நம்ம FeDeX vs Blake பாத்தீங்க இல்ல??????//

முதல் கம்பெனி தெரியும் பெரிய லெவல் ப்ரொபஷனல் கூரியர்ஸ். அடுத்த கம்பெனி என்ன தெரியலையே...

said...

//இதெல்லாம் செல்லாது... உங்களுக்கு பிடிச்ச பதிவை நீங்க சொல்லனும்...//

நாமே சொன்னா சுயசொறிதலாமேன்னு சொன்னா, உடனே அடுத்தவங்களைக் கூப்பிட்டு சொறியச் சொல்லறீங்களான்னு கேப்ப. அதனால உம்ம பின்னூட்டத்தை சாய்ஸில் விடறேன்.

said...

//பாலாஜி,

இப்படி யாராவது சொல்ல மாட்டாங்களான்னு அவரே காத்திட்டிருக்கார். பாருங்க இதை சாக்கா வச்சு இன்னொரு பதிவு போடலாமே :-)//

அட இது நல்ல ஐடியாவா இருக்கே!!

said...

//இதுதான் அய்யா ஞான செருக்கு. இலவசம் இனி வரிசையாய் எளுதியதில் பிடித்ததை போட போகிறார்.//

ஸ்ரீதர் சொல்லிட்டாரு, இப்போ உஷாக்காவும் சொல்லிட்டாங்க. ரசிகர்களின் ஆர்வத்தைக் காரணம் காட்டி ஒரு தொடர் தொடங்கலாம் போல இருக்கே!!

said...

//எப்படியோ கொடுத்த அசைமென்ட்டை முடிச்ச உங்க பொறுப்புணர்ச்சி என்னை சிலிர்க்க வைக்கிறது தலீவா..//

உனக்குத் தெரியாதா? இந்த கொத்தனார் வாக்குக் குடுத்தா தவற மாட்டான். (இதையே பதிவுக் கயமைத்தனம் அப்படின்னும் சொல்லுவாங்க.)

said...

//உங்க + டுபுக்கு எழுத்துக்கள் என்னை ஈர்ப்பதில் கடுகளவிலும் சங்தேகம் இல்லை (ஒரே மாவட்டமாக இருப்பதின்னாலவோ என்னவோ ?!, இதில் எந்த நுண்ணரசியலும் இல்லை).//

அரசு, தொடர்ந்து தரும் ஆதரவுக்கு நன்றி.

ஒரே மாவட்டம் மட்டும் இல்லைங்க. பக்கத்துப் பக்கத்து ஊர், இன்னும் சரியாச் சொல்லணுமுன்னா ஆத்துக்கு இந்தப் பக்கம் அந்தப் பக்கம். அது மட்டுமில்லை, ஒரே பள்ளி! அவரு அங்க நமக்கு ஜூனியர், ஆனா வலையுலகில் அவருக்கு நான் ஜூனியர். அவர் எழுதினதைப் பார்த்துதான் இந்தப் பூனையும் சூடு போட்டுக்கொண்டது! :))

said...

அரசு, உங்க மின்னஞ்சல் இருந்ததால உங்க பின்னூட்டத்தை அழிச்சுட்டேன்.

அதில் அந்தப் பகுதியை எடுத்திட்டு மிகுதி இங்கே!

கொத்ஸ்,

இரண்டாம் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள்.

அப்ப அப்ப படித்தாலும், உங்கள் பதிவுகளை புதிர்ப் போட்டிக்களுப் பின்னால் ரெகுலராக படிக்கிறேன். உங்க + டுபுக்கு எழுத்துக்கள் என்னை ஈர்ப்பதில் கடுகளவிலும் சங்தேகம் இல்லை (ஒரே மாவட்டமாக இருப்பதின்னாலவோ என்னவோ ?!, இதில் எந்த நுண்ணரசியலும் இல்லை).நன்றி.

-அரசு

said...

கொத்தனாரே ராமனாதன் என்ன கேட்ட கேள்விக்கெல்லம் நீங்க பதில் சொன்னா எப்படி?....சரி உங்க பதிவ படிச்சிட்டேன்....க்விஸ் பதிவுதான் நம்ம சாய்ஸ்......ஆனாலும்
//எந்தக் கண்ணு நல்ல கண்ணு அப்படின்னு கேட்கறாங்க இன்னும் சிலர்.// இப்படியெல்லாம் மெய்சிலிர்க்க வைக்ககூடாது......:):)

over to Ramanathan
நான் ஒரு மாட்ச் கூட இன்னும் லைவா பாக்கலீங்க ராமனதன். எல்லாம் அர்த்த ராத்ரில வருது......எனிவே எங்க் ஜோகெர் விளையாடரத பார்த்து என் கண்ணே பட்ரும் போல இருக்கு...பெடெரெர் Vஸ் ஜோகெர் நிச்சயம் 5 செட்டெரா இருக்கும்.....இந்த தடவை லேடிஸ்லயும் ஆனாவும் எல்லேனாவும் தூள் கிளப்பராங்க........!!Serbians rule..!! Ramanthan watch out for Andy Murray!!!
சாரிங்க கொத்ஸ் இதெதான் உஷாக்கா பண்ணகூடாதுன்னு சொல்ராங்க..கேக்க மாட்டோமே.:):)

said...

//இதெதான் உஷாக்கா பண்ணகூடாதுன்னு சொல்ராங்க..கேக்க மாட்டோமே.:):)//

அதெப்படி ஒரு பொண்ணு சொல்லி இன்னொரு பொண்ணு கேட்கறது?!! நீங்க ஆடுங்க ராதாக்கா!!

said...

//இராமநாதன் said...
Sridhar Narayanan,
நடாத்துங்க... சொல்லியே ஆகணும்னா.. அப்புறம் என்ன செய்யறது? :)))))))))))
//

டாக்டர், என்ன சொல்ல வர்றீங்க? 'நடாத்துங்க'ன்னா என்ன? 'நட்டாத்துல விட்டுட்டாங்க'ன்னு சொல்றீங்களா? :-))

said...

//டினோசர் குட்டி எனச் சொல்வதின் மூலம் இல்லாத ஒன்றைப் போய் பெரிதாகச் செய்கிறார் பெனாத்தல் என அழகாக சொல்லி இருக்கும் விதம் சூப்பர்.//

எப்படி தல? எப்படி இதெல்லாம்... அவ்வ்வ்வ்வ்

//இரட்டைக்கிளவி மாதிரி இல்ல இருக்கு! //

நான் பாத்த வரைக்கும் அவ்வளவு வயசானவங்க யாரும் இங்க வரலையே. நீங்க ஏதோ இரட்டை கிளவியை பாத்தேங்கறீங்க... யாருங்க அவங்க?

இதுவும் நுண்ணரசியலோ? தனியா ரூம் போட்டு இதெல்லாம் படிச்சாத்தான் புரியுமோ?

//வெட்டி யார் என திரித்துப் பேசுவார்கள் நம் எதிரிகள் //

அப்ப இளவஞ்சி வாத்தி யார்? வல்லிம்மா நாச்சியார் யார்? கொத்தனார் 'நார் நார்' இப்படி திரிச்சு பேசலாமா?

//சரிதான், அப்போ இன்னும் நல்லாவே எழுதி இருக்கலாமோ???? :P//

கீதாம்மா, அட நீங்க வேற. சட்டியில இருந்தாத்தானே அகப்பையில வர்றதுக்கு.

நான் சொன்னது என்னோட எழுத்தை. நீங்க வேற ஏதாவதை நினைச்சிக்க போறீங்க :-))

//அதெப்படி ஒரு பொண்ணு சொல்லி இன்னொரு பொண்ணு கேட்கறது//

இங்க என்னமோ ஈயம் பொசுங்குற வாசம் அடிக்குதே.

அடுத்த பாகம் எப்ப ரிலீஸ்?

said...

கால காட்டுங்க...எப்படீங்க இதெல்லாம்....ஸ்ரீதர் நீங்க தெய்வம்...இந்த பதிவுக்காக இவரோட பதிவுகளை எல்லாம் திரும்ப படிச்சு...சின்சியர் சிகாமணியா அலசல் பண்ணியிருக்கீங்களே...

கொத்ஸ் - இதெல்லாம் ரெம்ம்ம்ம்ம்ப்ப ஓவர் சொல்லிட்டேன் ஆமா...

said...

அரசு - ஆஹா உங்க அன்புக்கு ரொம்ப நன்றி. கொத்ஸ் சொன்ன மாதிரி (தெரியாத்தனமா) அவருக்கு ஸ்கூல் ஜூனியர். டெய்லி என்ன போட்டு மிரட்டு மிரட்டுன்னு மிரட்டறார்...